இஸ்ரேலின் நியாயம்

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

”பாலஸ்தீனத்தை கைவிடலாமா?” என்ற தி இந்து தலையங்கம் இவ்வாறு கூறுகிறது.

பாலஸ்தீன விடுதலைக்காக ஒரு காலத்தில் உரக்கக் குரல்கொடுத்த இந்தியா, நடுநிலைமையிலிருந்தும் அணி சாராத தன்மையிலிருந்தும் விலகுவது நியாயமில்லை. உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுப்பதும், அப்பாவிகளுக்கு ஆதரவாகக் களமிறங்குவதும் வெறும் சர்வதேச அரசியல் மட்டுமல்ல, தர்மமும்கூட. ”

ஆங்கில தி இந்து வில் வெளியான தலையங்கம் இவ்வாறு கூறுகிறது

However deplorable some of Hamas’ warfare techniques may be, there is a counter-view that in the overcrowded, narrow environs of the Gaza strip the Palestinian militant group has no operational option but to enmesh with the people.

(ஆங்கில தலையங்கத்திலிருந்துதான் தமிழ் தலையங்கம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்று கருதுகிறேன். இருந்தாலும், தமிழ் தலையங்கம் ஆங்கில தலையங்கத்தில் இருக்கும் ஒரு சில இஸ்ரேல் சார்பு விஷயங்களையும் நீக்கி பாலஸ்தீன கொடி பிடிப்பதை பார்க்கலாம். நீங்களே இவ்விரண்டு தலையங்களையும் படித்து ஆறு வித்தியாசங்களுக்கு மேல் கண்டுபிடியுங்கள்)

மற்றொரு ஒரு பக்கச் சாய்வான செய்தியை புதியதலைமுறை தொலைக்காட்சி செய்தியில் பார்க்கலாம்.

 

“சமீபத்தில் 1947இல்” என்று இணையத்தில் டோண்டு ராகவன் எழுதிக்கொண்டிருந்தார். இஸ்ரேலுக்கு ஆதரவாக தமிழில் எழுதிய ஒரே ஒருவர் இவர்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். யாரோ ஒரு சிலர் இஸ்ரேல் தரப்பு நியாயத்தை எழுதியிருக்கலாம். மற்றபடிக்கு, தமிழ்நாட்டில் பத்திரிக்கை, தொலைக்காட்சி எல்லாவற்றிலும் நிரம்பியிருப்பது இஸ்ரேல் எதிர்ப்பும், பாலஸ்தீன ஆதரவுமே.

பாலஸ்தீன மக்கள் பாவப்பட்டவர்களாக பார்த்து, பணக்கார நம்பியாரிடம் அடிவாங்கும் ஏழை எம்ஜியாராக கற்பனை செய்துகொண்டு பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக வரிந்துகட்டிக்கொண்டு பேசும் பலரில் ஒரு சதவீதத்தில் மூணே அரைக்கால் வீதத்தில் சுமார் 100 பேர்கள் தேறி, இஸ்ரேல் கன்ஸுலேட்டின் முன்னால் போராட்டம் பண்ணுவார்கள். தமிழ்நாட்டில் வஹாபி இயக்கங்களை சேர்ந்த ஓரிரண்டு கட்சிகளைச் சேர்ந்த தமிழர்கள், அமெரிக்க தூதரகத்தின் முன்னால் ஆயிரக்கணக்கில் கூடி கல்லெறிவார்கள். அப்படி எறிந்தால், அதற்கு இந்த அறிவுஜீவி பத்திரிக்கையாளர்கள் அதற்கான நியாயங்களை எழுதுவார்கள். உடல் சிதைந்த குழந்தைகள், முதியவர்கள் பெண்கள் என்று படங்களை வெளியிட்டு பச்சாத்தாபம் தேடுவார்கள். இரண்டு பக்கத்திலிருந்து ஊடக திரிப்புகளும், செய்தி போரும் நடந்தாலும், இடதுசாரிகள் துணையினாலும், இஸ்லாமியர்களது ஆதரவாலும், இஸ்லாமிய நாடுகளை பகைத்துகொள்ள விரும்பாமையாலும், பாலஸ்தீன செய்தி போரே வெற்றி பெற்றுள்ளது என்பதை அறியலாம். அந்த ஊடக தகிடுதித்தங்களை விட்டுவிட்டு இந்த இஸ்ரேலிய பாலஸ்தீன பிரச்னையின் சமீபத்திய வெடிப்பு ஏன் என்று புரிந்துகொள்ள முயலலாம். அதற்கு முன்னால், வரலாறு முக்கியம்.

##

இஸ்ரேலிய நாடு டேவிட், சாலமன் போன்றவர்கள் கையில் இருந்த காலத்தில் முழு இஸ்ரேலுமே யூதர்களாக இல்லை.

இதுதான் டேவிட் சாலமனின் இஸ்ரேலிய அரசு. இதில் பிலிஸ்தியா என்று கூறப்பட்டுள்ள இடத்தை கவனியுங்கள்.

david-Kingdom_of_Israel

ஆனால், சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னால், ரோமர்கள் முதலாவது யூதப்போரை நிகழ்த்தும்போது (இயேசுவின் காலம்) மிகக்குறைந்த அளவில் இருந்த சமாரியர்களையும், அங்கு வந்து தங்கிய கிரேக்கர்கள், சிரியர்களை தவிர மற்ற அனைவரும் ஜெருசலமை புனிதமாக கருதிய யூதர்களே.

லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்ட அந்த போரின் முடிவில், மிகுந்திருந்த லட்சக்கணக்கான யூதர்களை அடிமைகளாக்கி விற்றது. யூதர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திகொள்பவர்களை கடுமையாக தண்டித்தது. அங்கிருந்து தப்பிய யூதர்களும், இந்தியாவை தவிர மற்ற எல்லா இடங்களிலும் கொடுமைக்குள்ளானார்கள். அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டார்கள். விவசாயம் செய்வது அவர்களுக்கு தடை செய்யப்பட்ட ஒன்று. அதாவது நிலம் வாங்க முடியாது. வட்டி கொடுத்து வாங்குவது, சாராயம் காய்ச்சுவது போன்ற விளிம்பு நிலை வேலைகள் இஸ்லாமிய நாடுகலிலும் கிறிஸ்துவ நாடுகளிலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. யூதர்களுக்கு எதிரான ஒரு கருத்துருவாக்கம் இன்றளவுக்கும் கிறிஸ்துவ முஸ்லீம் அவற்றின் ஆதரவாக இருக்கும் இடதுசாரிகளிடம் பார்க்கலாம்.

அந்த பேரழிவு ஆறாத வடுவாக யூதர்களிடம் இன்றும் இருக்கிறது. அங்கிருந்து அனைத்து யூதர்களும் சிதறடிக்கப்பட்டார்கள். யூத அடையாளமே அந்த நிலத்தில் இருக்கக்கூடாது என்று எடுத்துகொண்ட ரோமானியர்கள், இஸ்ரேல் என்று அவர்கள் அழைத்த நிலத்தை, பாலஸ்தீனம் என்று பெயர் மாற்றம் செய்தார்கள். இன்று காஸா என்று அழைக்கப்படும் நிலம் மட்டுமே ஒரு காலத்தில் பாலஸ்தீனம் என்று அழைக்கப்பட்டது. பிலிஸ்தியர்கள் என்ற பெயரில் இவர்கள் பழைய ஏற்பாடு பைபிளில் குறிப்பிடப்படுகிறார்கள். இடத்தின் பெயர் மட்டுமே பாலஸ்தீனம்.

மீண்டும் யூதர்கள் கிளர்ந்து எழுந்தார்கள் பொதுவருடம் 132த்தில் பார் கோக்பா என்பவரால் இரண்டாவது யூத சுதந்திர போர் துவக்கப்பட்டது. அதுவும் பெரும் தோல்வியில் முடிந்தது. நான்காவது நூற்றாண்டில் அங்கு கிரேக்கர்களும் ரோமானியர்களும் நுழைந்து குடியேறினார்கள். சமாரியர்கள் மிகச்சிறிய சிறுபான்மையினராக குறுகினார்கள்.

பொதுவருடம் 635இல் இந்த பகுதி முழுவது இஸ்லாமிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. அதன் பின்னால் சுமார் 1300 வருடங்களில் பெரும்பாலும் இஸ்லாமியரே ஆட்சி புரிந்திருக்கின்றனர். மிகக்குறுகிய காலம் ஜெருசலம் சிலுவைப்போர் வீரர்களிடம் இருந்திருக்கிறது.

இங்கே ஆட்சியை பிடித்த உம்மயாத், அப்பாஸித் வம்சங்கள் மதமாற்றத்தை ஊக்குவித்தாலும், கட்டாய மதமாற்றத்தை அதிகம் ஊக்குவிக்கவில்லை. அதே நேரத்தில் இஸ்ரேலில் தங்களது அரபு மக்களை குடியேற்றுவதிலும், இஸ்ரேலை முழுக்க இஸ்லாமிய மயமாக்குவதிலும் அரபு மொழி மயமாக்குவதிலும் தீவிரமாக ஈடுபட்டார்கள். (2)

ஒரு சில அரசர்கள் சிறுபான்மை சமாரியர்களை கூட விட்டுவைக்கவில்லை. இப்னு பிராசா என்பவரால் இந்த சமாரியர்களும் முஸ்லீம்களாக மதமாற்றம் செய்விக்கப்பட்டார்கள். (1) இந்த வரலாற்றினால், இஸ்ரேலிலிருந்து யூதர்கள் வெளியேறிகொண்டே இருந்தார்கள். ஐரோப்பா, இந்தியா போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்தார்கள்.

இன்றைய பாலஸ்தீனர்களை அந்த நிலத்தின் பழங்குடி மக்கள் என்று வர்ணிப்பது ஒரு நகைச்சுவை. இந்த பாலஸ்தீனர்கள் பெரும்பான்மை கடந்த 500 ஆண்டுகளில் இஸ்லாமிய கிறிஸ்துவ ஆட்சிகாலத்தில் அங்கு வந்தேறியவர்கள்தாம். அந்த இடத்தை கைப்பற்ற கிறிஸ்துவர்களும் அரபிகளும் சிலுவைப்போர்கள் புரிந்திருக்கிறார்கள். அரபு தேசங்களிலிருந்து அங்கு போர் புரிய வந்து வெற்றி கொண்டவர்கள் அங்கே தங்கினார்கள். ஒட்டோமான் ஆட்சியின் போது கிறிஸ்துவத்திலிருந்து இஸ்லாமிய மதமாற்றம் ஊக்குவிக்கப்பட்டது. துருக்கியிலிருந்தும் எகிப்திலிருந்தும் மக்கள் அங்கு குடியேற்றப்பட்டனர்.

பொதுவருடம் 1551இல் இஸ்ரேல் ஒட்டோமான் துருக்கி அரசு இஸ்ரேலை கைப்பற்றியது. ஒட்டோமான் அரசாங்கம் இஸ்ரேலுக்குள் துருக்கியினரும் எகிப்து அரபுகளும் வர ஏற்பாடு செய்தது.

ஆக, இதே 2000 வருட காலத்தில், இஸ்லாமிய அரசாங்கங்கள் கொடுத்த பாதுகாப்பினால், எகிப்திலிருந்தும், பஹ்ரேனிலிருந்தும், துருக்கியிலிருந்தும், அரபு தேசங்களிலிருந்தும் இங்கே முஸ்லீம்கள் வந்து ஆக்கிரமித்துகொண்டே இருந்திருக்கிறார்கள்.(4)

இங்கிருந்து சென்று கிறிஸ்துவ நாடுகளில் தஞ்சம் புகுந்த யூதர்களும் கடுமையான எதிர்ப்பையும் வெறுப்பையுமே சந்தித்தார்கள். முக்கியமாக. ருஷ்யர்களும் கிழக்கு ஐரோப்பியர்களும் யூதர்களை கடுமையாக வெறுத்தார்கள். அதற்கு காரணம், அவர்கள் விளிம்பு நிலை வேலைகளை செய்ய வைக்கப்பட்டதும், விவிலியத்தின் யூத வெறுப்பு பிரச்சாரமுமே என்றால் மிகையாகாது. (வட்டி கொடுப்பதும் வாங்குவதும் கிறிஸ்துவர்களுக்கு தடை செய்யப்பட்ட விஷயம். ஆனால், ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு வங்கி, வட்டி ஆகியவை இன்றியமையாதவை. ) விளிம்புநிலை வேலைகளைத்தான் அவர்கள் செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அந்த வேலைகள் செய்ததாலேயே அவர்கள் பொதுமக்களால் வெறுப்புக்குள்ளாக்கப்பட்டார்கள். கிறிஸ்துவம் யூத மதத்திலிருந்து தோன்றியிருந்தாலும், கிறிஸ்துவ மதத்தில் நிறுவனப்பட்ட யூத வெறுப்பு மிகவும் ஆழமானது, பலத்த விளைவுகளை உருவாக்கியது. யூதர்களை தனியாக அடைத்து சேரிகள் உருவாக்கியதிலிருந்து, அவர்கள் நாஸி வதை முகாம்களில் விஷவாயு செலுத்தி கொல்லப்பட்டதுவரை கிறிஸ்துவம் யூதர்கள் மீது நடத்திய வன்படுகொலை சொல்லும் தரமன்று.

http://en.wikipedia.org/wiki/Antisemitism_in_the_New_Testament

http://en.wikipedia.org/wiki/Religious_antisemitism

மேற்கண்ட இணைப்புகளில், மிகவும் குறைந்த அளவுக்கு அவர்கள் மீதான கிறிஸ்துவ வெறுப்பின் மத அடிப்படையும், அதன் விளைவுகளும், போப்புகள் அது சம்பந்தமாக வெளியிட்ட அறிக்கைகளின் குறிப்புகளும் இருக்கின்றன.

1881இல் ரஷிய அரசர் கொல்லப்பட்டார். ரஷிய ஆளும் வர்க்கம் உடனே இந்த பழியை யூதர்கள் மீது போட்டது. யூதர்களுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட்டன. அவர்களை அழித்தொழிக்க கும்பல்கள் கிளம்பின. இதனால், கிழக்கு ஐரோப்பா, ரஷியாவிலிருந்து சுமார் 3.5 மில்லியன் யூதர்கள் வெளியேறினார்கள். இதில் 2 மில்லியன் யூதர்கள் அமெரிக்காவுக்கு சென்றார்கள். வெறும் 25000 பேர்களே ஒட்டோமான் ஆண்ட பாலஸ்தீனத்துக்கு சென்றார்கள்.
(இது முதல் ஆலியா என்று அழைக்கப்படுகிறது)

1917இல் பாலஸ்தீனத்தை இங்கிலாந்து கைப்பற்றியது. 1922இல் லீக் ஆஃப் நேஷன்ஸ் (முன்னால் ஐ.நா) பாலஸ்தீனம் மீது இங்கிலாந்தின் ஆளுமையை உறுதி செய்தது.

ஜெர்மனியில் நாஸிஸத்தின் எழுச்சி, மேலும் அதிகமாக யூதர்களை இஸ்ரேலுக்கு துரத்தியது. ஏறத்தாழ 1 மில்லியன் யூதர்கள் இஸ்ரேலுக்கு இந்த காலத்தில் வந்தார்கள். இந்த சமயத்தில் இஸ்ரேலில் யூதர்களின் எண்ணிக்கை 33 சதவீதமாக இருந்தது. இங்கு வந்த யூதர்கள் ஏராளமான வேலை வாய்ப்புக்களை உருவாக்கியதால், அதில் பயன்பெற்றுகொள்ள சுமார் 50000 அரபுகள் இஸ்ரேலுக்குள் வந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் உலகப்போரின் முடிவில், பாலஸ்தீன பகுதியிலிருந்து தான் விலகிகொள்வதாகவும், யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் சுமுகமான ஒரு முடிவை தன்னால் எட்ட முடியவில்லை என்றும் இங்கிலாந்து கூறியது.

யூத தோரா எதிர்பார்க்கும் மெஸியாவை நம்பாமல், தாங்களே முயன்று, ஒரு யூத நாட்டை ஏற்படுத்தி அங்கு சென்று தங்கமுடியும் என்ற நம்பிக்கையுடன் தோற்றுவிக்கப்பட்ட இயக்கமே ஜயனிஸம். இதனை தோற்றுவித்தவர்கள், சேர்ந்தவர்கள், தலைவர்கள் ஆகியோரில் பெரும்பான்மையினர் கம்யூனிஸ்டுகள். மத ஆர்வமற்றவர்கள். பலர் நாத்திகர்கள். இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜயனிஸ்டுகள், யூதர்களுக்கென்று ஒரு நாட்டை, அவர்கள் சுயாதீனத்துடன் வாழ புராதன வீடான இஸ்ரேலில் அமைக்க வேண்டும் என்று முனைந்தார்கள். யூத மத கொள்கையின்படி, கடவுளின் அருள் படைத்த மெஸியா ஒருவர் (அல்லது இருவர்.ஒருவர் ராணுவ தலைமை, மற்றவர் ஆன்மீக தலைமை) இஸ்ரேலிய நாட்டை அமைப்பார்கள். (அன்றைய) ரோமர்களை தோற்கடிப்பார்கள். அதன் பின்னால், உலக நாடுகள் இஸ்ரேலுக்கு தலைவணங்கும். இது பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படும் தோராவிலும், புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படும் இயேசு கிறிஸ்து கதையிலும் காணலாம்.

டேவிட் பென் குரியன் தலைமை ஏற்ற யூத அமைப்பு (Jewish Agency) பன்னாட்டு அரசியல் தலைவர்களிடம் பேசி, நடையாய் நடந்து தங்களுக்கென்ற ஒரு நாட்டை பெற்றார்கள். இஸ்ரேல் அன்று இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இங்கிலாந்து அப்படி ஒரு யூத நிலத்தை உருவாக்க ஒப்புகொண்டது. அது பெல்பார் அறிவிப்பு என்று அழைக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை முன்னாள் இஸ்ரேலை, அன்னாள் பாலஸ்தீனத்தை இரண்டாக பிரித்தது. (பிரித்த படத்தை காண்க)

UN_Partition_Plan_For_Palestine_1947
இந்த படத்திலிருந்தே இரண்டு நாடுகளுமே சீரான தொடர்ந்த தெளிவான எல்லைக்கோடுகள் இல்லாமல் ஒருவரை ஒருவர் தாக்கும் அமைப்புடனேயே இருப்பதை காணலாம். (இந்தியாவை உடைத்து பாகிஸ்தானை இந்தியாவின் இரண்டு பக்கமும் வைத்ததை நினைவு கூருங்கள்.)

வளமையான மூன்று பகுதிகள் பாலஸ்தீன பகுதிகளாக அறிவிக்கப்படுகின்றன. பாலைவனமான பகுதிகள் இஸ்ரேல் என்று அறிவிக்கப்படுகின்றன. (வளமையான சிந்து பகுதியும், கங்கை டெல்டா பகுதியான வங்காளமும் பாகிஸ்தானாக அறிவிக்கப்பட்டன என்பதையும் நினைவு கூருங்கள். நியாயமாக பார்த்தால், சிந்து நதிக்கு இந்தப்பக்கம் இருந்த பஞ்சாப் இந்துக்கள் அதிகம் கொண்டது. சிந்து நதிக்கு இந்தப் பக்கம் இருந்த சிந்து மாகாண பகுதி அதிக இந்துக்களை கொண்டது. சிந்து நதியே எல்லைக்கோடாக ஆக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் பிரிவினையின் போது முழு சிந்து மாகாணமுமே பாகிஸ்தானாக அறிவிக்கப்பட்டது. அது பின்னர் ஒரு நேரத்தில் எழுதப்பட வேண்டியது.)

பாலஸ்தீனர்களுக்கு சுதந்திரமான ஒரு நாடும், இஸ்ரேலியர்களுக்கு சுதந்திரமான ஒரு நாடும், ஜெருசலம் தனி நகரமாகவும் பிரிக்கப்படும் என்று ஐ.நா முடிவெடுத்தது.

இதனை யூதர்கள் ஒப்புகொண்டார்கள். பாலஸ்தீனர்கள் சார்பாக அரபு லீகும், அரபு ஹயர் கமிட்டி என்பதும் நிராகரித்தன. டிசம்பர் 1947இல் அரபு லீக் யூதர்களை தாக்க அறைகூவல் விடுத்தது. ஏராளமான யூதர்கள் தாக்கப்பட்டார்கள். உள்நாட்டு போர் துவங்கியது. பாலஸ்தீனர்களது அரபு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. சுமார் 250000 பாலஸ்தீன அரபுகள் வெளியேறினர்.

14 மே 1948இல் டேவிட் பென் குரியன், ஐநா கொடுத்த எல்லைக்கோடுகளோடு, சுதந்திர இஸ்ரேல் நாட்டை பிரகடனம் செய்தார்.

அடுத்த நாள், எகிப்து, சிரியா, ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகள் இந்த புது நாட்டின் மீது போர் தொடுத்தன. இது 1948- அரபு இஸ்ரேலிய போர் என்று அழைக்கப்படுகிறது. சவுதி அரேபியா தன் படைகளை எகிப்து கீழ் பணியாற்ற அனுப்பி வைத்தது.

இதுதான் இஸ்ரேலும் அதன் அருகாமை அரபு நாடுகளும், முஸ்லீம் நாடுகளும்.

israelarab

ஒரு வருட போருக்கு பின்னால், போர் நிறுத்த ஒப்பந்தம் உருவானது. ஜோர்டான் மேற்குக்கரை என்று சொல்லப்படும் west bank ஐ தன்னுடன் இணைத்துகொண்டது. எகிப்து காஸா பகுதியை தனக்கென எடுத்து தன்னுடன் இணைத்துகொண்டது. இந்த போரினால், சுமார் 7 லட்சம் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிலிருந்து ஓடினார்கள், அல்லது துரத்தப்பட்டார்கள் என்று மதிப்பிடப்படுகிறது.
http://en.wikipedia.org/wiki/Green_Line_(Israel)

இந்த போரின் முடிவில் இஸ்ரேலின் எல்லைகள் விரிவாக்க அங்கீகரித்தன ஜோர்டனும் எகிப்தும்.

150px-Israel_green_lines

மேற்குக்கரையை ஜோர்டன் எடுத்துகொண்டது. கீழே காஸா பகுதியை எகிப்து தன்னுடன் இணைத்துகொண்டது.

 

ஆறுநாள் போர்.
http://en.wikipedia.org/wiki/Six-Day_War

இஸ்ரேல் தோற்றத்தின் முதற்கொண்டு இஸ்ரேலுக்கும், அருகாமையிலிருந்த அரபு நாடுகளுக்கும் ஜோர்டான் ஆற்றின் நீரை எப்படி பகிர்ந்துகொள்வது என்ற பிரச்னை இருந்தது. இஸ்ரேலுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட போகக்கூடாது என்று சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் முனைந்தன. இஸ்ரேல் தனக்கு அந்த ஆற்று நீர் வேண்டும் என்று பல முயற்சிகள் எடுத்தது. அரபு தேசியவாதிகளான நாஸர் போன்றோர்கள் இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருக்ககூடாது என்று முனைந்தார்கள். அருகாமையில் உள்ள எந்த நாடுமே இஸ்ரேலை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்கவில்லை. செங்கடலில் இஸ்ரேல் கப்பல்கள் வரக்கூடாது என்று எகிப்திய படைகள் தடுத்தன. 1966இலிருந்தே எகிப்திய படைகளும் இஸ்ரேலிய படைகளும் எல்லையில் மோதிக்கொண்டே இருந்தன. மே 1967இல் அரபு நாடுகள் தங்களது படைகளை இஸ்ரேலுக்கு எதிராக ஒருங்கிணைக்க துவங்கின. இதனை கண்ட இஸ்ரேல், அவர்கள் தாக்குமுன்னர் தாம் தாக்க வேண்டுமென்று அதிரடியாக 5 ஜூன் 1967இல் சிரியா, எகிப்து, ஜோர்டன், ஈராக் ஆகிய நாடுகளை ஒரே நேரத்தில் தாக்கியது. ஆறு நாள் நடந்த போரில், சினாய் தீபகற்பம், மேற்குக்கரை, காஸா, கோலன் உச்சிகள் ஆகியவற்றை கைப்பற்றியது. எதிரி நாடுகள் படுதோல்வி அடைந்தன. கிரீன் லைன் என்று அழைக்கப்பட்ட முன்னால் எல்லைக்கோடு இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ எல்லையாகவும், இந்த ஆறு நாள் போரில் கைப்பற்றப்பட்ட பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் என்றும் அறிவிக்கப்பட்டன.

Six_Day_War_Territories

இதுதான் ஆறு நாள் போர் முடிவில் இஸ்ரேலின் அதிகாரத்தின் கீழ் உள்ள பகுதிகள்.

இதுதான்போரின் முடிவில் இஸ்ரேலின் எல்லைகள். இதில் மேற்குக்கரை, கோலன் உச்சிகள், சினாய் தீபகற்பம், காஸா அனைத்துமே இஸ்ரேல் வெற்றிகொண்ட பகுதிகளாக இருப்பதை கவனியுங்கள்.

##

பாலஸ்தீனத்திலிருந்து வெளியேறி மத்திய கிழக்கில் பரந்து கிடந்த மாணவர்களால் 1959இல் துவக்கப்பட்ட வன்முறை அமைப்பு ஃபாடா. அதன் தலைவராக இருந்த யாசர் அராஃபத்தை பலரும் அறிந்திருப்பார்கள்.

PLO பிஎல் ஓ என்ற அமைப்பு 1964இல் அரபு லீகால் கெய்ரோ, எகிப்தில் தோற்றுவிக்கப்பட்டது. இதன் ஆரம்பமே, வன்முறை மூலம் பாலஸ்தீனத்துக்கு இஸ்ரேலியர்களிடமிருந்து விடுதலை பெற்றுத்தருவதை உறுதி செய்தது. இது அரபிய தேசியத்தை அடிப்படையாக கொண்டது (இஸ்லாம் அல்ல). அரபியர்கள் அனைவரும் ஒரே நாட்டின் கீழ் ஒரே தலைமையின் கீழ் வாழவேண்டும் என்ற நோக்கத்தை கொண்ட அரபு தேசிய வாதத்தின் ஊற்றுக்கண்ணாக இருந்தவர்கள் மார்க்ஸியர்கள். இதில் முக்கியமானவர் ஜார்ஜ் ஹபாஷ். (பாலஸ்தீனத்தை சேர்ந்தவர். பிறப்பால் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவர்) இன்றும் கூட ஃபடா தன்னை மதச்சார்பற்றதாகவும், அரபு தேசியவாதத்துடனும் சோசலிசத்துடனும் பிணைத்துகொள்கிறது. 1967இல் ஆறு நாள் போரின் முடிவில், ஃபாடா பிஎல் ஓவுடன் இணைந்தது. யாசர் அராபத் பி எல் ஓவின் தலைவரானார்.

ஆறு நாள் போருக்கு பிறகு பி எல் ஓ ஒரு பயங்கரவாத இயக்கமாக தன்னை அடையாளப்படுத்திகொண்டது. இஸ்ரேலின் சாதாரண குடிமக்களை தாக்குவதையும், இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை கொல்வதையும், இஸ்ரேலிய விமானத்தை கடத்துவதையும் முழு நேர வேலையாக எடுத்துகொண்டது.

1973இல் யூதர்கள் யோம் கிப்பூர் விரதம் அனுசரித்துகொண்டிருந்தபோது, எகிப்தும், சிரியாவும் ஒருங்கிணைந்து இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதலை தொடுத்தன. எகிப்து சினாய் தீபகற்பத்தை ஆக்கிரமிக்க முயன்றது. சிரியா கோலன் உச்சிகளை கைப்பற்ற முனைந்தது. இஸ்ரேல் தன்னை தற்காத்துகொண்டாலும், பெருத்த உயிர் இழப்புகளை தாங்கவேண்டி வந்தது. இதனால் பிரதமர் கோல்டா மேயர் பதவி துறந்தார்.

1978இல் கேம்ப் டேவிட் அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா முன்னின்று ஏற்படுத்த, இஸ்ரேல் பிரதமர் மெனக்கம் பெகினும் எகிப்து தலைவர் அன்வர் சதாத்தும் கை குலுக்கினார்கள். 1979இல் இஸ்ரேல் எகிப்து அமைதிக்காக, தான் வெற்றிபெற்ற  சினாய் தீபகற்பத்தை எகிப்துக்கு விட்டுக்கொடுத்தது இஸ்ரேல். அதுவரை அங்கே உருவாகியிருந்த  இஸ்ரேலிய குடியிருப்புகளை (Israeli settlements) வலுக்கட்டாயமாக நீக்கி அவர்களை இஸ்ரேலுக்குள் அழைத்துகொண்டது.

(இஸ்ரேலிய குடியிருப்புகள் காஸா பகுதியிலும், மேற்குக்கரை பகுதியிலும் அதுவரை இருந்த இஸ்ரேலிய அரசுகள் உதவியுடன் கட்டப்பட்டு வந்திருக்கின்றன. 2005இல் தானாக முன்வந்து  அந்த குடியிருப்புகளை நீக்க முனைந்தது. இது சுயமான போர்தவிர்ப்பு திட்டம்  unilateral_disengagement_plan.  பாலஸ்தீனம் அமைதிவழியை தேர்ந்தெடுக்காமல், தானாக நாடு பிரகடன கோரிக்கையை 2011இல்  ஐநாவில் வைத்தபோது, அதற்கு எதிர்ப்பாக, மேலும் இஸ்ரேலிய குடியிருப்புகளை மேற்குக்கரையிலும் காஸாவிலும் கட்டுவோம் என்று அறிவித்தது)

மார்ச் 1978இல் பி எல் ஓ பயங்கரவாதிகள் இஸ்ரேலிய குடிமக்கள் 47 பேரை கொன்றார்கள். அதற்கு பதிலடியாக தெற்கு லெபனாலில் பி எல் ஓக்களுக்கு இருந்த முகாம்களை அழிக்க தெற்கு லெபனானை கைப்பற்றியது இஸ்ரேல்.

oslo-agreement1992இல் யிட்சக் ராபினும், யாசர் அராபத்தும் ஓஸ்லோ ஒப்பந்தத்தை ஒப்புகொண்டார்கள். மேற்குக்கரை, காஸா இரண்டையும் சுயாதீனம் கொண்ட நிலங்களாக பி எல் ஓவிடம் கொடுப்பதாக ஒப்புகொண்டது. அதற்கு பதிலாக பி எல் ஓ, இஸ்ரேலுக்கு அங்கீகாரம் வழங்கியது. பி எல் ஓவுடன் அமைதிக்காக, நிலங்களை கொடுக்க இஸ்ரேல் ஒப்புகொண்டது. இதே போல சிரியாவிடம் நிரந்தர அமைதி கிடைத்தால் கோலன் உச்சிகளை கொடுப்பதாகவும் யிட்சக் ராபின் கூறியிருக்கிறார். ஜோர்டனும் இஸ்ரேலை அங்கீகரித்தது. ஆனால், பி எல் ஓவின் தொடர்ந்த தற்கொலைப்படை தாக்குதல்களால், இந்த ஒப்பந்தங்களுக்கான ஆதரவு இஸ்ரேலிய பொதுமக்களிடம் குறைய ஆரம்பித்தது. இந்த அமைதி ஒப்பந்தங்கள் இஸ்ரேலிய மக்களிடம் கோபத்தையும் ஏற்படுத்தின. 1995இல் யிட்சக் ராபின் இந்த ஒப்பந்தங்களை எதிர்த்த இஸ்ரேலியரால் சுட்ட்டுக்கொல்லப்பட்டார்.

பிறகு பிரதமரான யஹூத் பராக், தெற்கு லெபனானிலிருந்து இஸ்ரேலிய படைகளை திரும்ப பெற்றார். அமைதிக்காக, யாசர் அராபத்துடன் 2000 கேம்ப் டேவிட் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். சுதந்திர பாலஸ்தீன நாட்டுக்கான வரையறையை யாசர் அராபத்திடம் அளித்தார். அந்த வரையறையை யாசர் அராபத் நிராகரித்தார்.

ஏரியல் ஷரோன் பிரதமராக ஆனதும், காஸா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய போர்வீரர்களை திரும்ப பெற்றார். மேற்குக்கரையை சுற்றிலும் சுவரெழுப்பினார். இது இரண்டும் யாசர் அராபத் ஆரம்பித்த இரண்டாவது இண்டிபாடாவை தோல்வியுறச்செய்தது.

செப்டம்பர் 2007இல் சிரியாவின் அணு உலையை தாக்கி அழித்தது.
**
யாசர் அராபத்தின் மறைவுக்கு பிறகு மஹ்மூது அப்பாஸ் பி எல் ஓ, ஃபாடா இரண்டுக்கும் தலைவரானார். இவர் யாசர் அராபத்த்தை விட மிதவாதியாகவும் அறியப்படுகிறார்.

abbas

 

அரசியல் இஸ்லாமை அடிப்படையாக கொண்ட முஸ்லீம் பிரதர்ஹூட் அமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும் சவுதி பணம், வளைகுடா வஹாபி ஆதரவு என்ற அடிப்படையில் தோன்றி, எகிப்து போன்ற நாடுகளில் வலுப்பெற்றது.

yassinமுஜமா அல் இஸ்லாமியா என்ற இஸ்லாமிய சேவை அமைப்பை நடத்திவந்த ஷேக் அஹ்மது யாஸின் காஸா பகுதியில் முஸ்லீம் பிரதர்ஹூட் அமைப்பின் பிரதேச கிளையை நடத்திவந்தார். இவரது சேவைஅமைப்புக்கு இஸ்ரேல் அரசாங்கமே 1979 வரைக்கும் சேவை அமைப்பாக அங்கீகாரமும், காஸா பகுதி மக்களுக்கு உதவ இவர்களுக்கு பண உதவியும் அளித்திருக்கிறது. இந்த அமைப்பு காஸா பகுதியில் மசூதிகளை கட்டவும், பள்ளிக்கூடங்களை கட்டவும், நூலகங்களை அமைக்கவும் இஸ்ரேல் உதவியிருக்கிறது. யாஸினுக்கு மருத்துவ உதவிக்காக இவரை இஸ்ரேலுக்கு அழைத்து சென்று மருத்துவ உதவியும் செய்திருக்கிறது.

இந்த அமைப்பில் பாலஸ்தீனர்கள் பெருவாரியாக சேர்ந்துவந்தார்கள். 1984இல் யாசீன் தனது மசூதிகளில் ஆயுதங்களை பதுக்குவதாக இஸ்ரேல் அறிந்து அந்த மசூதிகளை ரெய்டு செய்து ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றியது. இந்த ஆயுதங்கள் அனைத்தும், இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தப்படாது, ஃபாடாவுக்கு எதிராக உபயோகப்படுத்தத்தான் என்று யாசீன் உறுதி கொடுத்ததும், யாசீனை விடுதலை செய்தது.

1987இல் சில பாலஸ்தீனர்கள் சாலைவிபத்தில் இறந்ததை காரணமாக வைத்து முதலாவது இண்டிபாடா தோன்றும்போது, யாசீனும் மற்ற சிலரும் இணைந்து ஹமாஸை உருவாக்கினார்கள். 1989இல் இஸ்ரேலிய ராணுவவீரர்களை கடத்தி சென்று கொன்றார்கள். உடனே யாசீனை கைது செய்து சிறையிலடைத்தது இஸ்ரேல். 400 ஹமாஸ் இயக்கத்தினரை நாடு கடத்தி தெற்கு லெபனானுக்கு அனுப்பியது.

ஹமாஸ் முழுக்க முழுக்க தன்னை இஸ்லாமிய அமைப்பாக அடையாளப்படுத்திகொள்கிறது.

1993இல் ஓஸ்லோ ஒப்பந்தம் பாலஸ்தீன சுயாட்சியை நிறுவியதை ஹமாஸ் தீவிரமாக எதிர்த்தது. 1997இல் ஜோர்டனிலிருந்து இரண்டு மொஸாத் ஏஜெண்டுகளை விடுவிப்பதற்காக இவரை பதிலுக்கு விடுவித்தது. விடுதலை ஆன நேரம் முதற்கொண்டு இஸ்ரேலின் மீது தொடர்ந்து வன்முறை தாக்குதல்களை நடத்தவேண்டும் என்று ஹமாஸுக்கு ஆணை அளித்துகொண்டே இருந்தார். 2003இல் இவரது வீட்டின் மீது ராக்கெட்டுகளை இஸ்ரேல் அனுப்பி கொல்லமுயன்றது. 2004இல் இவர் மீது ஹெலிகாப்டர் ராக்கெட் குண்டுகளை வீசியதில் இவர் கொல்லப்பட்டார்.

2006இல் நடந்த பாலஸ்தீன தேர்தலில் 132 இடங்களில் 76ஐ கைப்பற்றியதன் மூலம் பாலஸ்தீன அரசியலில் படாவுக்கு இருந்த முக்கிய இடத்தை ஹமாஸ் எடுத்துகொண்டது. பெப்ருவரி 2006இல் 10 வருட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலுடன் செய்துகொள்ள தயார் என்றும், அதற்கு பதிலாக பாலஸ்தீன மேற்குக்கரை, காஸா, கிழக்கு ஜெருசலம் முழுவதிலிருந்து இஸ்ரேல் விலகிக்கொள்ள வேண்டும் என்றும் கூறியது. தேர்தலுக்கு பின்னால், அமெரிக்கா, ருஷ்யா, ஐரோப்பிய ஐக்கியம், ஐநா ஆகியவை, ஹமாஸ் முழுக்க முழுக்க வன்முறையை நிராகரிக்கவேண்டும் என்றும், இஸ்ரேலை முழுமையாக அங்கீகரிக்கவேண்டுமென்றும், முந்தைய பாலஸ்தீன அரசுகள் செய்த ஒப்பந்தங்களை மதிக்கவேண்டும் என்றும் கோரின. அதனை ஹமாஸ் நிராகரித்தது. இதனால், பாலஸ்தீன பகுதிகளுக்கு உதவி செய்வதை நிறுத்துவதாக இந்த நான்கும் அறிவித்தன.

மார்ச் 20, 2006இல் படாவுக்கும் ஹமாஸுக்கும் இடையே வன்முறை வெடித்தது. ஹமாஸ் காஸா பகுதியிலிருந்து கஸாம் ராக்கெட்டுகளை இஸ்ரேலுக்குள் அனுப்பி தாக்க ஆரம்பித்தது.
பெப்ருவரி 2006இல் சவுதி அரேபியா ஹமாசுக்கும், படாவுக்கும் இடையே அமைதியை உருவாக்க முனைந்தது. மார்ச் 2007இல் ஹமாசும் படாவும் இணைந்த ஐக்கிய அரசு மஹ்மூது அப்பாஸ் தலைமையில் பொறுப்பேற்றது. ஆனால், படாவுக்கும் ஹமாசுக்கும் இடையே நடந்த காஸா போரில், படா போர்வீரர்கள் ஹமாஸால் கொன்று குவிக்கப்பட்டனர். சுமார் 600 பாலஸ்தீனர்கள் இந்த போரில் இறந்தார்கள். இருபுறமும் சித்திரவதையும், போர்குற்றங்களும் நிகழ்த்தப்பட்டன என்று மனித உரிமைக்கழகம் கூறியது.

ஜூன் 2008இல் ஹமாசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற போர் நிறுத்ததை எகிப்து கொண்டுவந்தது. இஸ்ரேலின் மீது ராக்கெட்டுகளை அனுப்புவதை ஹமாஸ் நிறுத்துவதற்கு ஈடாக, கப்பல் போக்குவரத்தை காஸா பகுதிக்கு அனுமதிக்க இஸ்ரேல் ஒப்புகொண்டது. டிசம்பர் 19இல் 50 ராக்கெட்டுகளை இஸ்ரேலுக்குள் ஹமாஸ் அனுப்பி போர் நிறுத்ததை உடைத்தது. டிசம்பர் 27இல் பதில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், வான்வெளி தாக்குதல்கள் மூலம் ஹமாஸ் ராணுவ தளங்களை தாக்கியது. ஆனால் 280 பேரும், 600க்கு மேற்பட்டோரும் காயமடைந்தார்கள்.

2011இல் சிரியா உள்நாட்டு போர் துவங்கியதும், அதுவரை சிரிய அரசாங்க உதவியுடன் இருந்த ஹமாஸ், சிரிய அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியது. (சிரியாவை ஆள்வது அலவாயிட்டுகள் எனப்படும் ஷியா பிரிவினர். சிரியாவில் பெரும்பான்மை சுன்னி பிரிவை சேர்ந்தவர்கள். ஹமாஸ் எனப்படும் இந்த முஸ்லீம் பிரதர்ஹூட் கிளை சுன்னி வஹாபி பிரிவை சேர்ந்தது) 2012இல் பகிரங்கமாக, சிரிய அரசாங்கத்தை எதிர்க்கும், சுன்னி பிரிவினருக்கு ஆதரவளித்தது. இதனால், சிரிய அரசாங்கம் ஹமாஸ் அதிகாரிகளையும் இயக்கத்தினரையும் டமாஸ்கஸிலிருந்து வெளியேற்றியது.

2014இல் மீண்டும் ஹமாஸும் படாவும் இணைந்து தேசிய ஐக்கிய அரசை உருவாக்க முனைந்தார்கள். ஹமாஸ் இணைந்திருக்கும் பாலஸ்தீன தேசிய ஐக்கிய அரசுக்கு தான் எதிரி என்று இஸ்ரேல் ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஏனெனில் மெஹ்முது அப்பாஸ் இஸ்ரேலுக்கு அங்கீகாரம் தர ஒப்புகொண்டவர். ஆனால் ஹமாஸ் இஸ்ரேலுக்கு ஒருபோதும் அங்கீகாரம் தரமுடியாது என்றும், அதன் அழிவே தன் நோக்கம் என்றும் அறிவித்த இயக்கம்.

ஹமாஸுக்கு இருந்த சிரிய ஆதரவும், ஈரானிய ஆதரவும் இப்போது இல்லை. 2013இல் எகிப்தில் ஆட்சி செய்து வந்த தோழமை முஸ்லீம் பிரதர்ஹூட் ஆட்சி ராணுவ அதிரடியால் நீக்கப்பட்டது. ஆகவே எகிப்தின் ஆதரவும் இல்லை. காஸா எல்லையில் தோண்டப்பட்ட சுரங்கங்கள் மூலம் ஹமாஸ் ஆயுதங்களை கடத்தி வந்துகொண்டிருந்தது. அவை அனைத்தையும் எகிப்திய ராணுவ அரசாங்கம் மூடிவிட்டது. அதனால்தான் வேறுவழியின்றி படாவுடன் ஐக்கிய தேசிய அரசை உருவாக்க ஒப்புகொண்டது.

ஜூன் 12, 2014இல் மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கடத்தப்பட்டார்கள். இஸ்ரேல் அரசு ஹமாஸை குற்றம் சாட்டியது. 30 ஜூன் 2014இல் கொல்லப்பட்ட இவர்களது சடலம் கிடைத்தது.

இந்த இளைஞர்களை கடத்தியவர்கள் பெரிய ஹீரோக்கள் எனவும், இது இஸ்ரேலுக்கு பலத்த அடி என்றும் ஹமாஸ் பேசியது.

இஸ்ரேலியர்களிடம் இது கோவத்தை உண்டுபண்ணியது. பாலஸ்தீன அரபுகளை பல இடங்களில் தாக்க ஆரம்பித்தார்கள். ஜூலை 2ஆம் தேதி ஒரு பாலஸ்தீன சிறுவன் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டான். அவன் உயிரோடு எரிக்கப்பட்டான் என்று இஸ்ரேல் அரசாங்கம் நடத்திய போஸ்ட் மார்ட்டம் தெரிவித்தது. பாலஸ்தீன பிரதமர் நேடன்யாஹூ குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் அனைவரும் சட்டத்தை மதித்து நடக்கவேண்டும் என்றும் எச்சரிக்கைவிடுத்தார்.

கடத்தப்பட்ட இஸ்ரேலிய இளைஞர்களை கண்டுபிடிக்க, மேற்குக்கரையில் இருந்த ஹமாஸ் உறுப்பினர்கள் சுமார் 200 பேரை கைது செய்தது. மேற்குக்கரையில் தன்னை ஒழித்துக்கட்ட இஸ்ரேலின் முயற்சி இது என்று ஹமாஸ் கருதியது. இதற்கு பதிலடியாக காஸா பகுதியிலிருந்து ராக்கெட்டுகளை இஸ்ரேலுக்குள் அனுப்பி தாக்க துவங்கியது.

இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோது கூட, தன்னுடைய ராக்கெட்டுகளை வேறொரு பெயர் கொண்ட இன்னொரு அமைப்புக்கு கொடுத்து அதன் மூலம் இஸ்ரேலை தாக்கிவந்திருக்கிறது. கேட்டால், அந்த அமைப்புக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று கூறிவிடும்.

ஆகவே இந்த சூழ்நிலையில் மீண்டும் ராக்கெட்டுகள் மூலம் இஸ்ரேலை தாக்குவதன் மூலம் இஸ்ரேலின் பதிலடி தாக்குதலை நிச்சயம் பெறலாம். அது மிகப்பெரிய மனித பேரிடரை காஸா பகுதியில் உருவாக்கும். அதன் மூலம் மீண்டும் அரபு நாடுகள், மற்றும் மனித நேய ஆர்வலர்களின் ஆதரவை பெறலாம் என்பதே அதன் கணக்கு.

அதனால்தான் ஹமாஸ் இஸ்ரேலிய சிறுவர்களை கடத்தி கொன்றது.

எதிர்பார்த்தது போலவே இஸ்ரேல் பதிலடியாக தனது ராக்கெட்டுகளை காஸா பகுதிக்குள் அனுப்பி பாலஸ்தீன ஹமாஸ் ராணுவ தளங்களையும் ராக்கெட் விடும் இடங்களையும் தாக்க முனைந்தது. இதுவரை 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இதனால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஹமாஸ் ராக்கெட்டுகளால், ஒரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டிருக்கிறார்.
http://en.wikipedia.org/wiki/Operation_Protective_Edge

இந்த போர் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

என் கருத்து.

பாலஸ்தீனம், இஸ்ரேல் என்ற இரு நாடுகள் இருப்பதை நவீன இஸ்ரேல் தான் தோன்றிய 1947இலிருந்து  அங்கீகரித்தே வந்திருக்கிறது என்பதை அறியலாம்.

ஆனால், ஓஸ்லோ ஒப்பந்தம் வரைக்கும், பாலஸ்தீன அரபுகளோ, அல்லது மற்ற அரபு தேசங்களோ இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருக்கக்கூடாது என்பதில் தீவிரமாகவே கருத்துகொண்டிருக்கின்றன. ஓஸ்லோ ஒப்பந்தத்தில் யாசர் அராபத் இஸ்ரேலை அங்கீகரித்ததால் கோபம் கொண்டு, மற்ற அரபு நாடுகள், முக்கியமாக சவுதி அரேபியா, பணம் உதவி செய்து ஹமாஸை வளர்த்துவிட காரணம்.

இஸ்ரேல் இருப்பதால் யூதர்கள் வெறுக்கப்படவில்லை. யூதர்கள் இருப்பதாலேயே இஸ்ரேல் வெறுக்கப்படுகிறது. யூதர்கள் மீதான வெறுப்பு என்பது பைபிளின் புதிய ஏற்பாட்டில் மிதமாகவும், குரானில் தீவிரமாகவும் இருக்கிறது. இந்த மத அடிப்படையே, யூதர்கள் மீதான கிறிஸ்துவர்களின் வெறுப்புக்கும், முஸ்லீம்களின் வெறுப்புக்கும் காரணம். தமிழ்நாட்டு முஸ்லீம்களுக்கும் யூதர்களுக்கும் என்ன தொடர்பு? இஸ்லாம் யூதர்கள் மீது வெறுப்பினை போதிப்பதாலேயே யூதர்களுக்கு ஒரு சம்பந்தமும் இல்லாத இந்தோனேஷியர்களும், மலேசியர்களும், இந்திய முஸ்லீம்களும், பாகிஸ்தானிய முஸ்லீம்களும் பங்களாதேஷ் முஸ்லீம்களும் யூதர்கள் மீது வெறுப்பினை கக்குகிறார்கள்.
இந்த முன்னாள் முஸ்லீம் கிண்டல் செய்வது போல, இஸ்லாமின் அடித்தளத்தில் இருக்கும் இந்த வெறுப்பு, முஸ்லீமாக உணருபவர், உண்மையை பார்க்கமுடியாமல் செய்துவிடுகிறது.

நிலத்துக்கான சண்டையும் இல்லை இது. இஸ்ரேல் எவ்வாறு முழுக்க முழுக்க அரபு நிலங்களால் சூழப்பட்டிருப்பதையும், இஸ்ரேலின் நிலம் எவ்வளவு சிறியது என்பதையும் இந்த படத்தில் பார்க்கலாம். இதனை கிளிக் செய்து பெரியதாகவே பாருங்கள்.

arab-israeli-conflict-6

ஆனால் வெற்றி கொண்ட நிலங்களை திருப்பி கொடுப்பதன் மூலம் அமைதியை பெற்று விடலாம் என்று இஸ்ரேல் மடத்தனமாக நினைக்கிறது. சினாய் தீபகற்பத்தையும், காஸா, மேற்குக்கரை போன்ற நிலங்களையும், தெற்கு லெபனானையும் திருப்ப கொடுத்தும், அதற்கு அமைதி கிட்டவில்லை என்பதுதான் உண்மை. இதுவரை அரபுகள் வெற்றி கொண்ட நிலங்களை தாங்களாக எப்போதுதான் திருப்ப கொடுத்திருக்கிறார்கள்? அமைதிக்காகவோ, அல்லது நட்புறவுக்காகவோ அரபுகள் தாங்கள் வெற்றி கொண்ட நிலங்களை தாங்களாக திருப்ப கொடுத்த வரலாறு இருக்கிறதா?

மேலே இருக்கும் வரைபடத்தில் கரும் பச்சையில் இருக்கும் நாடுகளே இஸ்ரேலுடன் போர் புரிந்த அரபு நாடுகள். இளம் பச்சையில் இருக்கும் அனைத்தும் அரபு நாடுகள்தாம்.  இதில் சவுதி அரேபியா, ஈராக், யேமன், ஓமன் தவிர மற்ற எல்லா அரபு நாடுகளும் அரபியர்கள் ஆக்கிரமித்த நாடுகள்தானே? எகிப்தில் ஆண்ட கருப்பினத்தவர்கள் துரத்தப்பட்டு இன்று எகிப்து அரபு தேசமாக கருதப்படுகிறது. லிபியா, சூடான்,  துனிசியா, மொராக்கோ, மௌரிட்டானியா ஆகிய நாடுகளில் பெரும்பான்மையும் ஆளும் வர்க்கமும் அரபுகள்தானே? அங்கிருக்கும் கருப்பினத்தவர் அடிமைகளாகத்தானே இருக்கிறார்கள்? மௌரிட்டானியாவில் இன்னமும் அரபுகளின் கீழ் அடிமைகளாக இருக்கும் கருப்பினத்தவர்கள், தங்கள் அடிப்படை உரிமைகள் கூட இழந்து, சொந்த நாட்டிலேயே அடிமைகளாகத்தானே வாழ்கிறார்கள்? அந்த அடிமை முறையை இன்னமும் ஒழிக்க முடியவில்லையே? இந்த அரபுகள் தாங்கள் ஆக்கிரமித்திருக்கும் இந்த கருப்பின நாடுகளிலிருந்து வெளியேறி, அந்த நிலங்களை கருப்பினத்தவர்களிடம் மனமுவந்து கொடுத்துவிடுவார்களா? குறைந்தது, அந்த நாடுகளில் அடிமைகளாகவும் இரண்டாம் தர குடிமக்களாகவும் உள்ள கருப்பின மக்களுக்கு சம உரிமை தருவார்களா?

இந்த இணைப்புகளையும் பார்த்துகொள்ளுங்கள்

http://en.wikipedia.org/wiki/Slavery_in_Mauritania

http://en.wikipedia.org/wiki/Slavery_in_Libya

http://histclo.com/act/work/slave/cou/me/egypt/sce-khe.html

http://en.wikipedia.org/wiki/Arab_slave_trade

 

பாலஸ்தீன மக்கள் அந்த நிலத்தின் பழங்குடி மக்களும் இல்லை. இஸ்ரேலியர்கள் 5000 வருடங்களுக்கு முன்னால் இந்த நிலத்துக்கு வந்தபோது அவர்கள் அங்கிருந்த மற்றவர்களுடன் போர் புரிந்தது அவர்களே தங்கள் பைபிளில் எழுதி வைத்ததுதான். ஆனால், 2000 வருடங்களுக்கு முன்னால், அந்த நிலம் முழுவதுமே ஏறத்தாழ யூத மயமாகத்தான் இருந்தது. அதற்கு பின்னால் இஸ்லாமிய ஆட்சிகளின் போது வந்தேறியவர்களே பெரும்பான்மை அரபுகள். அது அரபு நிலமும் அல்ல. இஸ்ரேல் எப்போதுமே அரபு நிலம் அல்ல. 2000 வருடத்துக்கு முந்தைய ஆவணங்களில் எதிலும் பாலஸ்தீனமோ இஸ்ரேலோ அரபு நிலமாக குறிக்கப்பட்டதே கிடையாது.

அந்த நிலத்துக்கு யாரேனும் ஒருவர் சொந்தம் கொண்டாட முடியுமென்றால் அது இஸ்ரேலியராகத்தான் இருக்க முடியும். அரபுகள் அல்ல.

இஸ்ரேலுக்கு எதிராக வன்முறையை துறப்பதும், இரண்டு நாடுகளாக இஸ்ரேலும் பாலஸ்தீனமும் வாழ்வதும் மட்டுமே ஒரு நிரந்தர தீர்வாக இருக்கமுடியும். ஆனால், அரபு நாடுகளோ, அல்லது அரபு மக்களோ, அரபு பெருந்தனக்காரர்களோ, இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்று பி எல் ஓ, ஹமாஸ் என்று வன்முறை இயக்கங்களை தோற்றுவித்துகொண்டே இருந்தால், அந்த பிரச்னைக்கு முடிவேதும் இராது. போர் வேண்டாம், அமைதி வேண்டும் என்பதற்காக, ஒரு பயங்கரவாத இயக்கத்திடம் சரணடைவது ஒரு தீர்வும் அல்ல. அந்த பயங்கரவாத இயக்கத்தின் ஒரே குறிக்கோள், இஸ்ரேலின் அழிவும், யூதர்களின் இனப்படுகொலையுமாக இருக்கும்போது, அந்த குறிகோளை பெயரளவுக்கு கூட நீக்கமுடியாது என்ற நிலைப்பாட்டை எடுக்கும்போது, இப்படிப்பட்டவர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை செய்து மடத்தனமே அன்றி வேறல்ல.

ஜெர்மனியும் ஐரோப்பாவும் யூதர்களை படுகொலை செய்ததற்கு அங்கேயே ஒரு நாடு போட்டு கொடுத்திருக்கலாமே? ஏன் பாலஸ்தீனர்களது இடத்தை பிடுங்கி யூதர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று பேசுபவர்களும் இருக்கிறார்கள். ஜெர்மனியும் ஐரோப்பாவும் மட்டுமே யூதர்களை படுகொலை செய்யவில்லை. பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்களை துரத்தியதில் ரோமானியர்களுக்கு எவ்வளவு பங்கிருந்ததோ, அதே விட அதிகமாக அங்கு 1300 ஆண்டுகள் ஆட்சி செய்த அரபுகளுக்கும் இருக்கிறது. ஆனால் இதற்கு முன்னோடியாக உமரின் ஒப்பந்தம், முஸ்லீமல்லாதவர்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கி, அவர்களுக்கு பல உரிமைகளை ரத்து செய்கிறது. திம்மி என்ற பெயரில் அவர்கள் உயிருடன் இருக்க அனுமதிக்கிறது.

http://www.fordham.edu/halsall/source/pact-umar.asp

(இதன் அடிப்படையில்தான் தாலிபான், இந்துக்களையும் சீக்கியர்களையும் மஞ்சள் கயிறு கட்டிகொள்ள வேண்டும் என்று ஆப்கானிஸ்தானில் ஆணையிட்டிருந்தார்கள்)

இதற்கு ஒப்புகொண்டு பல யூதர்கள் பாக்தாதிலும், இஸ்ரேலிலும் வாழ்ந்திருக்கிறார்கள். பாக்தாதில் பத்தாம் நூற்றாண்டில் சுமார் 50000 யூதர்கள் இருந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த திம்மி அடிப்படையில் பல முஸ்லீம் நாடுகளில் இரண்டாம் தர குடிமக்களாக ஜிஸியா என்ற வரி கொடுத்துகொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். ஆகையால் இஸ்ரேல், அரபு மேலாதிக்கத்தில் இருந்தாலும், அங்கு தொடர்ந்து யூதர்கள் வாழ்ந்தே வந்திருக்கிறார்கள்.

இஸ்ரேல்/பாலஸ்தீன பிரிவினைக்கு பின்னர்தான் யூதர்கள் மீது பாலஸ்தீனர்கள் தாக்க ஆரம்பித்தார்கள் என்பதும் கட்டுக்கதை.  1928இலேயே பாலஸ்தீனர்கள் கும்பல் கும்பலாக சென்று யூத படுகொலைகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

http://www.camera.org/index.asp?x_context=2&x_outlet=118&x_article=1691 


இந்திய முஸ்லீம்களும் இந்திய முஸ்லீம்களின் தலைவர்களும், இந்திய முஸ்லீம்களின் ஓட்டுக்களை பெற விழையும் இந்திய கட்சிகளின் தலைவர்களும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் பெரிய கூக்குரல் இடுவார்கள். முஸ்லீம்களின் மரணம் என்பதை முன்னிருத்தி பச்சாத்தாபம் தேடுவார்கள்.

இவ்வாறு கூக்குரலிட்ட எவருக்கும், சிரியாவில் 150000 சுன்னி முஸ்லீம்கள் சியா முஸ்லீம்களால் படுகொலை செய்யப்பட்டது கண்ணில் படாது. டார்பரில் கருப்பின முஸ்லீம்கள் அரபு முஸ்லீம்களால் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டது கண்ணில் படாது. ஈராக்கின் சதாம் உசேன், குருது இன மக்கள் மீது நடத்திய வேதியல் குண்டுகள் மூலம் கொல்லப்பட்ட லட்சக்கணக்கானோர் கண்ணில்படாது. அல்குவேதா ஷியா பிரிவினர் மீது நடத்திக்கொண்டிருக்கும் இனப்பப்டுகொலை கண்ணில் படாது. பலுச்சிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுமழை பொழிந்து ஆயிரக்கணக்கில் முஸ்லீம்களை கொல்வது கண்ணில் படாது. தெற்கு சூடானில் கருப்பின முஸ்லீம்கள் மீது அரபு முஸ்லீம்கள் நடத்திய இனப்படுகொலை கண்ணில் படாது. நைஜீரியாவில் இஸ்லாமிய போகோ ஹராம் அமைப்பு ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்களை கொல்வதும், பள்ளிச் சிறுமிகளை கடத்திச் சென்று பாலுறவு அடிமைகளாக்க முனைவதும் கண்ணில் படாது. புதியதாக சிரியாவிலும், ஈராக்கிலும் உருவாகியிருக்கும் காலிபேட் அங்கிருக்கும் கிறிஸ்துவர்களையும் ஷியா பிரிவினரையும் கொன்றொழிப்பதும், மசூதிகளை இடிபப்தும் கண்ணில் படாது. ஹமாஸ் இஸ்ரேலுக்குள் அனுப்பும் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் கூட கண்ணில் படாது. ஆனால், பதிலுக்கு இஸ்ரேல் அனுப்பும் ராக்கெட்டுகளில் இறப்பவர்கள் மட்டுமே கண்ணில் படும்.

ஏன் அவை கண்ணில் படவில்லை என்பதற்கும், ஏன் இஸ்ரேலின் தாக்குதல் மட்டுமே கண்ணில் படுகிறது என்பதற்கும், அது மட்டுமே முஸ்லீம்களால் முக்கியமாக பார்க்கப்படுகிறது என்பதற்கும் சில காரணங்கள் உள்ளன. அவற்றை புரிந்துகொள்வது நமக்கு அவசியம்.

முதலாவது யூத எதிர்ப்பு என்பதும் யூத வெறுப்பு என்பதும், இஸ்லாமில் கோட்பாட்டளவில் ஆழமானது. குரானின் வரிகள் யூத எதிர்ப்பை பறை சாற்றுகின்றன. அதனால், யூதர்களுடன் யுத்தம் என்பது முன்னரே அறிவிக்கப்பட்ட ஒன்று. அது குரானை நியாயப்படுத்துகிறது. குரான் இந்த போரை முன்னறிவித்ததாக முஸ்லீம்களால் பேசப்பட்டு அவர்களது மதம் சரியானது என்று அவர்களாலேயே நியாயப்படுத்தப்படும்.

http://en.wikipedia.org/wiki/Islam_and_antisemitism

இரண்டாவது, இஸ்ரேலுடன் போர் என்பதும் யூதர்களுடன் போர் என்பதும், முஸ்லீம்களை ஒருங்கிணைக்கும் ஒரு வழி. யூதர்களுடன் முஸ்லீம்கள் போர் புரிவது என்பது எல்லா முஸ்லீம்களுக்கும் விடப்படும் ஒரு அறைகூவல். யூதர்கள் முஸ்லீம்களை கொல்கிறார்கள் என்ற ஒரே வரியில், அனைத்து முஸ்லீம்களையும் தங்கள் பின்னால் நிற்க வைக்க முடியும். ஆனால், சிரியாவில் ஷியாக்களால் கொல்லப்படும் சுன்னி முஸ்லீம்களை பற்றி பேசினால், அது முஸ்லீம்களிடையே ஒற்றுமை இன்மையையே காட்டும். அது மேலும் முஸ்லீம்களை பிளவு படுத்தும். ஆப்பிரிக்காவில் அரபு முஸ்லீம்களால் கொல்லப்படும் கருப்பின முஸ்லீம்களை பற்றி பேசினால், இவர்கள் பேசும் சமத்துவ இஸ்லாமில் கருப்பின முஸ்லீம்களின் நிலை வெளியே சந்தி சிரிக்கும். அப்போது, இவர்களது பிரச்சாரம் என்ன ஆவது? அல்குவேதாவும், தாலிபானும், புதியதாக உருவாகியிருக்கும் காலிபேட்டும் சியா பிரிவினரை கொல்கிறார்கள் என்று பேசுவார்களா இவர்கள்? அல்லது அதற்காக வருத்தப்படுவார்களா? இந்த போராட்டம் செய்யும் முஸ்லீம் கட்சிகள் உண்மையிலேயே சுன்னி வஹாபி பிரிவை சேர்ந்தவர்கள்தாம். ஆகையால், கொள்கையடிப்படையில் ஷியாக்களை முஸ்லீம்கள் அல்ல என்று கருதுபவர்கள். இப்படி இருக்கையில், இவர்கள் தாலிபானை எதிர்த்தும், அல்குவேதாவை எதிர்த்தும், காலிபேட்டை எதிர்த்தும் போராட்டமா நடத்தப்போகிறார்கள்?

மூன்றாவது, இஸ்ரேல் முஸ்லீம்களை தாக்குகிறது என்பதை வைத்து யூதர்களை வில்லன்களாகவும், முஸ்லீம்களை அப்பாவிகளாகவும், அடி வாங்குபவர்களாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும் காட்டலாம். இதன் மூலம், இந்த இஸ்லாமிய இயக்கங்கள் நடத்திய பயங்கரவாத செயல்களை அனைத்தையும் ஊற்றி மூட வழி கண்டுபிடித்தாய்விட்டது. தமிழ்நாட்டின் அல் உம்மா அமைப்பால், கோயம்புத்தூரில் 1998இல் நடந்த குண்டுவெடிப்புகளில் 58 குழந்தைகள், முதியோர், பெண்கள் இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்தார்கள். இதுவரை எத்தனை முறை அந்த குண்டுவெடிப்புகளை கண்டித்து தமிழ்நாட்டில் இவர்கள் ஊர்வலம் நடத்தியிருக்கிறார்கள்? பாலஸ்தீனத்தில் இறந்த 200 பேருக்காக ஊர்வலம் போகும் இடதுசாரிகளும், முஸ்லீம் இயக்கங்களும் ஒரு தடவையாவது தமிழ்நாட்டில் கொல்லப்பட்ட அப்பாவிகளுக்காகவாவது, அல்லது அந்த வன்முறையை கண்டிக்கவாவது ஊர்வலம் போயிருக்கிறார்களா? இந்து அமைப்புகள் ஊர்வலம் போனால், தமிழ்நாட்டு அரசுகள் உடனடியாக அவற்றை தடை செய்துவிடும். ஆகையால், இந்து இயக்கங்கள் ஊர்வலம் போயிருக்கிறார்களா என்று கேட்க வேண்டாம்.(7) இன்றைக்கு எத்தனை எத்தனையோ பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டதை படம்பிடித்து போட்டு பச்சாத்தாபம் தேடும் ஊடகங்கள் ஒரு முறை கூட கோயம்புத்தூரில் கொல்லப்பட்ட நிலையில் கிடந்த மக்களை காட்டவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு படம் போடுவதை கோயம்புத்தூரின் குடும்பத்தினர்களே எதிர்த்திருப்பார்கள் என்பதும் உண்மை.

முஸ்லீம்களை அப்பாவிகளாகவும் அடிவாங்குபவர்களாகவும் இஸ்ரேலியரை குழந்தைகள் என்று கூட பார்க்காமல் கொல்லுபவர்களாகவும் காட்ட முனைவது இந்த ஊடக பிரச்சாரத்தில் எல்லை மீறுவது சாதாரணமாக செய்திகளையும் சமூக வலைத்தளங்களையும் பார்ப்பவர்கள் அனைவருக்கும் தெரிகிறது.

சிரியாவில் கொல்லப்பட்ட முஸ்லீம் குழந்தைகளை, இஸ்ரேலால் கொல்லப்பட்டவர்களாக காட்டுவதும், காலிபேட் அட்டூழியம் செய்து படம் வெளியிடுவதை இஸ்ரேல் செய்ததாக படம் வெளியிடுவதும் சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கிறது.

உதாரணங்கள்.

syria

இது 2 ஜூலை அன்று வெளிவந்த படம்

அதே படம் 10 ஜூலை அன்று இஸ்ரேல் கொன்ற பாலஸ்தீன சிறுவனாக மாறுகிறது

palestin

இது ஒரு உதாரணம் மட்டுமே. இது போன்று இரு புறங்களிலும் ஊடகப்போர் நிகழ்த்தப்படுகிறது.

ஆனால் இதில் முக்கியமாக ஈடுபடுவது ஹமாஸ்தான். அதுவும் குழந்தைகள் பெண்கள் இறப்பதை வைத்து அனுதாபம் தேடுவதையும், பெண்களையும் குழந்தைகளையும் மனிதக்கேடயங்களாக பயன்படுத்துவதையும் அது அங்கீகரிப்பது மட்டுமல்ல, அதனை ஒரு ஸ்ட்ராடஜியாகவே வைக்கிறது.

குழந்தைகளை சேர்த்து வைத்துகொண்டு அங்கிருந்து ராக்கெட்டுகளை அனுப்பும் ஹமாஸ்

ஹமாஸ் பேச்சாளர் பெண்களையும் குழந்தைகளையும் சாவுக்கு அழைக்கும் பேச்சு

இன்னொன்று..மனிதக்கேடயங்களாக சிறுவர்களையும் குழந்தைகளையும் பயன்படுத்திகொள்கிறோம் என்ற ஒப்புதல் வாக்குமூலம்.

காஸாவுக்குள் ஏன் ராக்கெட்டுகளை கொண்டுவருகிறார்கள்? ஏன் இவர்கள் படையாக சென்று இஸ்ரேலிய போர்வீரர்களுடன் போரிடக்கூடாது? யார் இவர்களுக்கு இஸ்ரேலின் மறுமுனை அளவுக்கு தாக்கும் ராக்கெட்டுகளை கொடுக்கிறார்கள்? இங்கிருந்து ராக்கெட்டுகளை விட்டு இஸ்ரேலில் எத்தனை பேரை அழித்திட முடியும்? அதுவும் இரும்பு கோட்டை (iron dome) என்ற பாதுகாப்பு வளையத்தை இஸ்ரேல் வைத்துகொண்டிருக்கும்போது இந்த ராக்கெட்டுகளின் பயன் என்ன? அப்படி இஸ்ரேலை தாக்குவதன் மூலம், இஸ்ரேலை பதிலடி அடிக்க வைத்து, அதன் மூலம் குழந்தைகளை சாகவைத்து பச்சாத்தாபம் தேடும் முயற்சியா? என்று ஒரு கேள்வியும் கேட்காமல் தி இந்து போன்ற இடதுசாரி பத்திரிக்கைகள் காஸாவிலிருந்து ராக்கெட்டுகளை விடுவதை நியாயப்படுத்துவது எதனால்?

புதிய தலைமுறை செய்தியை திரும்ப படியுங்கள். அதில் எங்கேனும் காஸா பகுதியிலிருந்து ராக்கெட்டுகளை ஹமாஸ் தான் முதலில் இஸ்ரேலுக்கு அனுப்பி தாக்குவதை ஆரம்பித்தது என்ற உண்மை இருக்கிறதா? அல்லது ஹமாஸ் ராக்கெட்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்புகிறது என்பதாவது இருக்கிறதா? அந்த செய்தியில் இஸ்ரேல் தாக்குவதும் ஹமாஸ் சமாதானத்துக்கு விழைவதும்தானே இருக்கிறது? ஏன் இப்படி ஒரு பக்கச்சார்பான செய்திகள்?

##

இந்த பின்னணியில் காங்கிரஸ் கட்சி, இந்த விஷயத்தை கையில் எடுத்துகொண்டு, பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் செய்து, முஸ்லீம்களின் ஆதரவை பெற முனைகிறது. தமிழ்நாட்டில் தமுமுக போன்ற கட்சிகள் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்களை அறிவிக்கின்றன. இவை அனைத்துமே மிகவும், cynical manipulation of the tragedy.

”1947இல் ஐநா கொடுத்த திட்டத்தை பாலஸ்தீனர்கள் ஏற்றுகொள்ளாதது மிகப்பெரிய தவறு. அப்போது ஏற்றுக் கொண்டிருந்தால், பாலஸ்தீனம் அன்றிலிருந்து ஒரு சுதந்திரமான தனிநாடாக இருந்திருக்கும்” என்று மஹ்மூத் அப்பாஸ் சில வருடங்களுக்கு முன்னால் கூறினார். நான் அப்படி கருதவில்லை. பாலஸ்தீனர்கள் ஏற்றுகொண்டிருந்து தனிநாடாக அமைத்திருந்தாலும், அது இஸ்ரேலுடன் சமாதானமாக சென்றிருக்காது. காரணம், இஸ்லாமில் இருக்கும் யூத வெறுப்பு அடிப்படை. அன்று அவர்கள் இஸ்ரேலை ஏற்றுகொள்ளாததற்கும், இன்றும் அந்த புண்ணை அவர்கள் நோண்டி நோண்டி மேலும் புண்ணாக்கிக்கொண்டிருப்பதற்கும் ஒரே ஒரு காரணம்தான். அது இஸ்லாமிய பின்னணி. ஹமாஸ் தலைவர் சமீபத்தில் சொன்னது போல, இஸ்ரேலை அழிப்பது மட்டுமே நோக்கமல்ல, ஒவ்வொரு யூதரும் கடுமையான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவதையே முஸ்லீம் தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடைசி யூதரும் கொல்லப்படுவதையே அவர்களது மதம் அவர்களுக்கு ஆணையிடுகிறது.

வாழ்நாளில் ஒரு முறைகூட ஒரு யூதரை இந்த பாகிஸ்தானி முஸ்லீம் பார்த்திருந்திருக்க மாட்டார். ஆனால், இவர் ஏன் யூதர்கள் அனைவரையும் கொல்ல வேண்டும் என்று கோருகிறார்? இதேதான் தமிழ்நாட்டு முஸ்லீம்களும், இந்தோனேஷிய முஸ்லீம்களும், மலேசிய முஸ்லீம்களும் பேசுவார்கள். இவ்வாறு பேசிய வீடியோக்களை நிறைய யூட்யூபில் பார்க்கலாம். 1400 ஆண்டுகளுக்கு முன்னால் யூதர்களுக்கும் அரபியர்களுக்கும் இருந்த ஒரு பகைமை,  நிறுவனப்படுத்தப்பட்டு, மத ரீதியான அங்கீகாரத்துடன், அந்த மதத்தை தேர்வு செய்பவர்கள் அனைவர் தலையிலும் ஏறி உட்கார்ந்துகொள்கிறது.

கிறிஸ்துவ மதமும், கிறிஸ்துவ மக்களும் பெருமளவு யூத வெறுப்பை விட்டுவிட்டு வந்துவிட்டார்கள். அது போல, ஒரு காலம் முஸ்லீம்களுக்கும் வரலாம். ஆனால், அது இன்றைக்கோ நாளைக்கோ வந்துவிடும் என்று நம்பும் அளவுக்கு நான் முட்டாளல்ல. ஆனால், இஸ்ரேலிய மக்களுக்கு வாழும் உரிமை இருக்கிறது, அவர்களுக்கு ஒரு சுதந்திர சுயாதீனமான ஆட்சியை தக்க வைத்துகொள்ள உரிமை இருக்கிறது என்று அரபு நாடுகளும், இஸ்லாமியரும் ஒப்புகொள்ளும் வரைக்கும் அந்த காலம் வராது. அந்த காலம் வரும் வரைக்கும், அந்த இடத்துக்கு அமைதியும் வராது.

 

(1)M. Levy-Rubin, “New evidence relating to the process of Islamization in Palestine in the Early Muslim Period – The Case of Samaria”, in: Journal of the Economic and Social History of the Orient, 43 (3), p. 257-276, 2000, Springer
(2)Michael Haag (2012) The Tragedy of the Templars: The Rise and Fall of the Crusader States. Profile Books Ltd. ISBN 978 1 84668 450 0 [3]
(3) http://en.wikipedia.org/wiki/Demographics_of_Palestine
7)http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/police-prevent-bid-to-pay-homage-to-blast-victims/article1456866.ece

Series Navigation
author

சின்னக்கருப்பன்

Similar Posts

26 Comments

  1. Avatar
    சான்றோன் says:

    கிறிஸ்துவ மதமும், கிறிஸ்துவ மக்களும் பெருமளவு யூத வெறுப்பை விட்டுவிட்டு வந்துவிட்டார்கள். அது போல, ஒரு காலம் முஸ்லீம்களுக்கும் வரலாம். ஆனால், அது இன்றைக்கோ நாளைக்கோ வந்துவிடும் என்று நம்பும் அளவுக்கு நான் முட்டாளல்ல. ஆனால், இஸ்ரேலிய //மக்களுக்கு வாழும் உரிமை இருக்கிறது, அவர்களுக்கு ஒரு சுதந்திர சுயாதீனமான ஆட்சியை தக்க வைத்துகொள்ள உரிமை இருக்கிறது என்று அரபு நாடுகளும், இஸ்லாமியரும் ஒப்புகொள்ளும் வரைக்கும் அந்த காலம் வராது. அந்த காலம் வரும் வரைக்கும், அந்த இடத்துக்கு அமைதியும் வராது.//

    யதார்த்தமான உண்மை….. ஆனால் இஸ்லாமியர்கள் இதை ஏற்கவும் போவதில்லை….அவ்வப்போது இஸ்ரேலிடம் நன்றாக வாங்கிக்கட்டிகொள்வதும் நிற்கப்போவதில்லை…….

  2. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    1947ல் பாலஸ்தீனம் இஸ்ரேல் மற்றும் பால்ஸ்தீனம் என இரண்டாகப் பிளக்கப்பட்டது.

    1967 ல் ஆறு நாள் யுத்தத்தில் தம்மாத்தூண்டு இஸ்ரேல் முழு பாலஸ்தீனத்தையும் முழுங்கியது போதாது என்று சிரியா, லெபனான், எகிப்து போன்ற அனைத்து பக்கத்து தேசத்துப் பகுதிகளான கோலன் குன்றுகள், சினாய் மருவனம் (எகிப்து) மற்றும் லெபனானைச் சார்ந்த பகுதிகளைக் கபளீகரம் செய்தது.

    வெட்டி வாய்ச்சவடாலே இஸ்லாமியரை அன்றும் கழுத்தறுத்தது. இன்றும் கழுத்தறுக்கிறது. அன்றும் ஷியா சுன்னி தகறாறு. இன்றும் ஷியா சுன்னி தகறாறு.

    Exodus, Exodus Revisited – by Leon Uris and O Jerusalem — Dominique lapierre Novels —– Must read Novels depicting what happened when between Jews and Moslems in the so called promised Land.

    Classical War of Civilisations is what is happening around the world.

  3. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    அன்புள்ள சின்னக்கருப்பன்,

    வருடங்களாகின்றன உங்களது எழுத்தைப்படித்து. தொடர்ந்து எழுத வேண்டிக்கொள்கிறேன் உங்களது ‘இந்த வாரம் இப்படி’-யை தொடரலாமே !

  4. Avatar
    photo says:

    எத்தனை ஆண்டுகால உண்மை வரலாற்றை அழகாக சிறப்பாக கூறிவிட்டீர்கள்!

  5. Avatar
    ஒரு அரிசோனன் says:

    அருமையான கட்டுரை. நல்ல விளக்கம். ஹமாஸை வைத்துப் பொம்மலாட்டம் ஆடுவதை அரபு நாடுகள் தவிர்த்தாலே, இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் அமைதி நிலவ ஆரம்பிக்கும்.

  6. Avatar
    ஒரு அரிசோனன் says:

    உயர்திரு சின்னக்கருப்பன் அவர்களே,

    அருமையான கட்டுரை. மிகவும் நன்றாக விளக்கம் தந்திருக்கிறீர்கள். அரபு நாடுகள் ஹமாஸ் அமைப்பை வைத்து பொம்மலாட்டம் ஆடுவதை நிறுத்தினாலே போதும், பாலஸ்தீனத்திலும், இஸ்ரேலிலும் அமைதி நிலவத் துவங்கி விடும்.

    இன்னும் ஒன்று. The Hindu நாளிதழ் தனது பெயரை Anti-Hindu என்று மாற்றிக்கொண்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

  7. Avatar
    Venkat Swaminathan says:

    அன்புள்ள சின்ன கருப்பன்,

    எப்படி நன்றி சொல்வது? இவ்வளவு நீண்ட சரித்திரத்தையும், பின் புலத்தையும் சிரமமெடுத்து இங்கு தந்ததற்கு. பெருமளவு, இந்த சரித்திரம் எனக்குத் தெரியாதது. இன்று நாம் என்னவோ நினைத்திருந்த நரேந்திர மோதியின் அரசு இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்திருக்கிறது. காரணம் என்ன? எண்ணையா,எல்லா செக்யூலரிஸ்டுகளுக்கும் உள்ளே வளரும் பயம், நைச்சிய நட்பு, முதுகெலும்பு இன்மை, 1200 வருடங்களாக, முகம்மது கஜனி காலத்திருந்து படிந்து விட்ட கறையின் ஆழ்ந்த பதிவா? எது? மோதி அரசு ஒன்றும் ஏதும் புதிய அத்தியாயத்தை இந்திர சரித்திரத்தில் எழுதப் போவதில்லை என்று தான் தோன்றுகிறது. எல்லா விஷயங்களிலும் காங்கிரஸ் செய்ததையே, அவர்கள் தயங்கித் தயங்கி வாளாவிருந்த விஷ்யங்களிலும் கூட மௌனமாக இன்னும் அதிகப்படியாகவே செய்கிறது. நமது national character-ஏ இதுதானோ என்னவோ?

  8. Avatar
    சின்னக்கருப்பன் says:

    கருத்துக்களுக்கு மிக்க நன்றி. திரு. வெங்கட் சாமிநாதனின் பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
    நட்புடன்

  9. Avatar
    சான்றோன் says:

    இஸ்ரேல் விவகாரத்தில் ஐ. சபையில் இந்தியா எடுத்த நிலைப்பாடு குறித்து பலரும் வருத்தப்படுகின்றனர்….

    இந்தியா இந்த நிலைப்பாடு எடுத்தத‌ற்கு இரண்டு முக்கிய காரணங்கள்….

    முதலாவதாக , இஸ்ரேல் இதுவரை ஐ. நா சபையில் இந்தியாவை பகிரங்கமாக ஆதரித்தது இல்லை…

    இந்தியாவின் நீண்டகால ரஷ்ய நட்பின் காரண‌மாக , [ அது சரியா , தவறா என்பது வேறு விஷயம் ] அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ள‌து….இன்று வரை பாகிஸ்தானை போஷிப்பது அமெரிக்காதான் என்பது நினைவிருக்கட்டும்… ஆக இஸ்ரேல் , பாகிஸ்தான் இரண்டுமே அமெரிக்காவின் நட்பு நாடுகள்…[ இது எப்படி சாத்தியம் என்று நினைக்கலாம்…அதுதான் அமெரிக்கா ] தன்னைச்சுற்றியுள்ள எதிரிகளான அரபு நாடுகளை எதிர்கொள்ள இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் நட்பு மிக அவசியம்…..ஆக அமெரிக்காவை மீறி இந்தியாவை ஆதரிக்க இஸ்ரேல் தயாராக‌ இல்லை…..

    இரண்டாவதாக , ஐ. நாவின் இந்த தீர்மானம் இஸ்ரேலை மட்டும் குறி வைப்பதில்லை….. காசாவில் நடை பெறும் சர்வதேச சட்ட மீறல்கள் குறித்த விசாரணைதான்….அப்படி ஒரு விசாரனை நடந்தால் அது இஸ்ரேலுக்கு சாதகமாகத்தான் அமையும்….காரணம் ஹமாசின் சட்ட மீறல்கள் உலகப்பிரசித்தம்….

    இதன் காரணமாகவே இஸ்ரேல் இந்த தீர்மானத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள‌வில்லை…..

  10. Avatar
    I I M Ganapati Raman says:

    கட்டுரைக்கு முன்னுரை எழுதியது தவறு. இடது சாரிகள், தி ஹிந்து பத்திரிக்கை, இசுலாமியர்கள் இசுரேலை எதிர்க்கிறார்கள். நான் இசுரேலை ஆதரிக்கப்போகிறேன் என்று சொல்லாமல் சொல்லி கட்டுரை ஒரு பக்கச்சார்புடையது என்று போட்டுக்கொடுத்துவிட, வலது சாரி விரும்பிகள் வந்து ஓஹோ என்று புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். Justice should not only be done; but seems to have been done என்பார்கள். அதைப்போல, கட்டுரைகளும் இருக்க வேண்டும். சொல்லவரும் கருத்துக்களை காயதல் உவத்தல் இன்றி எழுதினால், மாறுகருத்துடையோரும் சிந்தித்து தன்னிலைபாடுகளை மாற்ற ஹேதுவாகும். சின்ன கருப்பனுக்கு பக்குவம் போதவில்லை.

    வட்டிக்கு கொடுத்து வயிற்றை வளர்ப்பது உலகம் முழுக்க பொதுமக்களிடம் இழிவாகப்பார்க்கப்படுமொரு தொழில். ஈட்டிக்காரனைக்கண்டால் ஓடுவார்கள் இல்லையா? இந்த வட்டி வித்தையையே உலகுக்குக் கற்றுக்கொடுத்தவர்கள் இந்து யூதர்கள். பாங்க் என்ற சொல்லே பெஞ்ச் என்ற ஆங்கிலச்சொல்லின் திரிபு. பெஞ்ச் என்ற சொல் அதே பொருளில் யூதச்சொல்லிலிருந்து வந்தது. பஜார்களில் பெஞ்சில் அமர்ந்து வட்டிக்கொடுத்து வியாபாரம் பண்ணினார்கள் யூதர்கள். எனவே இன்றைய பாங்க் சிஸ்டம் அவர்களீடமிருந்து வந்தது.

    ஈவு இரக்கமில்லாமல்தான் இவ்வேலையை செய்ய முடியும். போலீசு உத்தியோகம் போல. எனவே யூதர்கள் வெறுக்கப்பட்டார்கள். பணத்தைதவிர வேறெதையும் சீண்டாத இரக்கமற்றவர்கள் என்றும் வியாபார நினைப்பைத்தவிர வேறெதுவும் அவர்களுக்கு கிடையாதென்றும் பிர்பலமானார்கள். சினகாக்கைக் கூட விட்டுவைக்கவில்லை. அங்கும் பெஞ்சு போட்டு வட்டிக்குக் கொடுத்தார்கள் என்றும் இயேசு சாட்டையடி கொடுத்து அவர்களை விரட்டினார்கள் என்றும் விவிலியம் சொல்கிறது. அவர்கள் இக்குணத்தை வெறுத்து, பரலோகத்தில் பணக்காரன் நுழைய முடியாது என்றார். இவையெல்லாம் யூதர்களை அவரைக்கொல்ல திட்டமிட வைத்தது. அத்திட்டத்தை உரோமானிய அரசனின் உதவியோடு நிறைவேற்றினார்கள்.. முஹமதுவும் இவர்களின் இத்தீயப்பழக்கத்தைப்பார்த்து கொதித்தார். குரானின், வட்டிக்குக் கொடுப்பதே பாவமென்று சொல்லிவிட்டார். Shakespeare, in his play Merchant of Venice, makes the Jew Shylock a hate figure for possessing a heart without an iota of mercy. The sonnet extolling virtues of the quality of mercy is written as lesson for all Jews

    இன்று யூதர்கள் பல நாடுகளில் பல மக்களோடு இணைந்து வாழலாம். அதற்குக் காரணம் அம்மக்களின் குணங்களை தம‌தாக்கி தம் குணத்தை இறக்கிக்கொண்டதனால். இசுரேல் நாட்டில் அப்படியன்று. எனவே யூதர்களால் அரபிகளிடம் சேர்ந்து வாழமுடியவில்லை. என்றுமே முடியாது. யூதர்களின் குணம் மற்றவர்களைவிட தாம் உயர்ந்தவர்கள் என்ற நினைப்பினாலும் இப்படி பணமே பிரதானம் என்பதனாலும் பிறமக்களோடு அவர்கள் இணைந்து வாழமுடியாது.

    இசுரேல் ஹமாசையோ அரபிக்களையோ போட்டுத்தாக்கி இப்போது வெற்றி காணலாம். ஆனால் போர் வெற்றிகள் என்றுமே நிரந்தரமானவையல்ல. கிருத்துவ நாடுகள் இசுரேலுக்குத் துணையாக இருபப்தால், எப்படி இலங்கைக்கு இந்தியா துணை செய்து புலிகள் அழிக்கப்பட்டார்களோ, அப்படி இசுரேல் அரபிக்களை வெல்கிறது. ஆனால் நிரந்தரமான வெற்றி எனப்து எங்குமே போரில் கிடையாது. ஒரு நாள், அரபிக்கள் கை ஓங்கிவிட்டால் நிலைமை என்னவாகும்?

    சண்டையில் எவருக்குமே வெற்றி கிடையாது. அனைவருக்குமே தோல்விதான் என்றார் கவுதமர். (In a war, no one is a victor. Every one is finally defeated) அதைப் புரிந்த்யு கொண்டால் இசுரேலுக்கும் அரபியருக்கும் நல்லது. இல்லையென்றால் இசுரேல் அழிந்துவிடும் எண்ணிக்கை குறைவால். அரபிக்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் பேரழிவுக்குப்பிறகும் இருப்பார்கள்.

  11. Avatar
    ஷாலி says:

    //இஸ்ரேலிய மக்களுக்கு வாழும் உரிமை இருக்கிறது, அவர்களுக்கு ஒரு சுதந்திர சுயாதீனமான ஆட்சியை தக்க வைத்துகொள்ள உரிமை இருக்கிறது என்று அரபு நாடுகளும், இஸ்லாமியரும் ஒப்புகொள்ளும் வரைக்கும் அந்த காலம் வராது. அந்த காலம் வரும் வரைக்கும், அந்த இடத்துக்கு அமைதியும் வராது.//

    அயலில் உள்ள அரபு நாடுகள் எல்லாம், நிரந்தரமான எதிரி நாடுகள் என்பது போல இஸ்ரேல் நடந்து கொள்கிறது. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக, இந்த அரபு நாடுகள் முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்கு முன்வந்தன. 1981 ம் ஆண்டு, சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் பஹத் ஒரு சமாதான திட்டத்தை முன்மொழிந்தார். அந்த திட்டத்தின் பிரகாரம், அனைத்து அரபு நாடுகளும் இஸ்ரேலை அங்கீகரிக்கும். அதற்குப் பதிலாக, இஸ்ரேல் பாலஸ்தீன பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டு, 1967 ம் ஆண்டிருந்த எல்லைக்கு திரும்பிச் செல்ல வேண்டும். 2002 ம் ஆண்டு, அரபு லீக் இன்னொரு சமாதான திட்டத்தைக் கொண்டு வந்தது. 1967 எல்லைக் கோட்டின் படி, இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரண்டு நாடுகளை அங்கீகரிப்பது. பாலஸ்தீன அகதிகளுக்கும் ஒரு நல்ல முடிவு. இஸ்ரேலுடனான உறவுகளை சுமுகமாக்கவும் அரபு லீக் முன்வந்தது. அரபு லீக்கில் அங்கம் வகிக்கும் அனைத்து 22 நாடுகளும் அந்த திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்தன. இஸ்லாமிய கூட்டமைப்பான OIC யில் உள்ள 57 நாடுகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. ஈரானும் அதில் ஒன்று.பெரியண்ணன் அமெரிக்கா ஆதரவு இருக்கும்வரை இஸ்ரேல் சமாதானத்திற்கு வரவே வராது.கார்பரேட் கம்பெனிகள் எல்லாம் யூதர்கள் கையில்.ஆகவே அமெரிக்கா யூதர்கள் பையில்.

  12. Avatar
    சின்னக்கருப்பன் says:

    அன்புள்ள I I M Ganapati Raman,
    உங்கள் கருத்துக்கு நன்றி.
    வட்டி கொடுப்பதும், வங்கி வேலையும் யூதர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை. அது தவறான கருத்து. எல்லா சமூகங்களிலும், கடன் கொடுப்பதும் வட்டி வாங்குவதும் இருந்திருக்கிறது. இன்னமும் இருக்கிறது. தோரா, கடன் தருவதை ஊக்குவிக்கிறது ஆனால் வட்டி வாங்குவதை கடுமையாக தடை செய்கிறது. எஸக்கியல் புத்தகத்தில் வட்டி வாங்குவதை மிகவும் கடுமையாகவே எதிர்ப்பதை காணலாம். யூத-ரோமானிய போர் வரைக்கும் யூதர்கள் வட்டி வாங்கும் தொழிலில் இல்லவே இல்லை. இயேசு துரத்துவது பணமாற்று செய்பவர்களை. money exchange. சாலமன் கட்டிய கோவிலுக்கு பல தேசங்களிலிருந்தும் மக்கள் வந்தார்கள். ஆனால், இஸ்ரேலில் அப்போது புழக்கத்திலிருந்த பணத்துக்கு மாற்றி ஜெருசலமில் செலவு செய்யவேண்டும் அல்லவா? அந்த பணமாற்றுக்காரர்கள் கோவிலை சுற்றி இருந்தார்கள். அவர்களைத்தான் இயேசு துரத்துவதாக கதை.
    யூத-ரோமானிய போருக்கு பின்னரே வட்டி வாங்கும் வேலை போன்ற விளிம்பு நிலைக்கு அவர்கள் துரத்தப்படுகிறார்கள். அதனால், யூத குருமார்கள், புத்தகத்தையும் வைத்துகொள்ளவேண்டும், அதே நேரத்தில் ஏதாவது ஒரு பிழைப்பையும் செய்யவேண்டும் என்கிற படியால், தோராவை மறு வாசிப்புக்கு உட்படுத்தி, அந்த கட்டளைகள், ஒரு யூதர் மற்றொரு யூதருக்கு வட்டி வாங்கி கடன் கொடுக்கக்கூடாது என்பதைத்தான் சொல்லுகிறது என்று மறு வியாக்கியானம் செய்துகொண்டார்கள். ஷைலாக் குணச்சித்திரம், ஷேக்ஸ்பியரால் கூட அடையாள அரசியலை தாண்டி வரமுடியவில்லை என்பதன் சான்று. இஸ்ரேலியர்களுக்கு வேறு வழி இல்லை. ஏனெனில் சுற்றுப்புறம் அனைத்தும் அரபிய தேசங்கள்தான் இருக்கும். ஆகவே அவற்றோடு சமாதானம் வேண்டித்தான் ஆகவேண்டும். ஆனால், யூத நாட்டை முழுவதும் அழித்துவிட முடியும் என்று கருதும் அரபியர்களுக்கு அப்படி ஒரு சூழ்நிலை இல்லை. நீங்கள் சொல்வது போல, தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரியின் இரண்டு கண்ணையும் குத்திவிட முடியும் என்று நம்புகிறார்கள்.

    1. Avatar
      SS RAJU says:

      பலவற்றை நன்கு ஆராய்ந்த பிறகே எழுதியிருக்கிறீர்கள் என்பது இந்த பதிலில் புரிகிறது ..இது எவ்வளவு உண்மை என்பது சரித்திரம் படித்தவர்களுக்கு தெரியும் ..மற்றுள்ளவர்களுக்கு காலம் போக போக தெரியும் ..இரண்டாயிரம் வருஷம் அலைந்து திரியவிட்ட அவர்கள் தெய்வம் கூட்டி சேர்ப்பேன் என்றபடி சேர்த்துவிட்டார் …இது பைபிள் வசனம் …இனி தெய்வம் அவர்களை கைவிடாதவரை உலகமே சேர்ந்தாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது..நல் நடத்தையை அவர்கள் பின்பற்ற வேண்டும் …இஸ்லாம் யூதனுக்கு மட்டும் எதிரல்ல..மற்ற மதங்கள் அனைத்துக்குமே எதிரி ..முஸ்லிம்களோடு பழகுகிறவர்களுக்கு ,குரானை படித்தவர்களுக்கு இது நன்றாக புரியும்

  13. Avatar
    சின்னக்கருப்பன் says:

    அன்புள்ள ஷாலி,
    பிரச்னை பாலஸ்தீனர்கள் தங்களது சந்ததிகளுடன் மீண்டும் இஸ்ரேலுக்கு குடிபுக அனுமதிக்க வேண்டும் என்று கேட்பதுதான் இந்த சமாதான பிரேரணைகள் எதுவும் வெற்றி பெறாததற்கு காரணம்.
    அன்று இஸ்ரேலிலிருந்து வெளியேறிய பாலஸ்தீனர்கள் சுமார் 5 லட்சம் பேர். இன்று அவர்கள் 50 லட்சமாக இருக்கிறார்கள். இன்று இஸ்ரேலின் மக்கள் தொகை 80 லட்சம் பேர் அதிலும், 25 சதவீதத்தினர் அரபுகள். மீதமுள்ளவர்களே யூதர்கள். இந்த ஐம்பதுலட்சம் பேர் திரும்பி வர அனுமதித்தால், இஸ்ரேல் யூத நாடாக இருக்காது. மற்றோரு அரபு இஸ்லாமிய நாடாகத்தான் இருக்கும். அதனால், அது வேண்டாம் என்று கூறுகிறார்கள். அரபு நாடுகளிலிருந்து 1948இலிருந்து 1967 வரைக்கும் சுமார் 10 லட்சம் யூதர்கள் அரபு நாடுகளிலிருந்து துரத்தப்பட்டு இஸ்ரேல் வந்திருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் அரபு நாடுகளுக்கு போவேன், அங்கு இடம் கொடு என்று கேட்கவில்லை. அவர்களது சொத்துக்களும் இடங்களும் அங்கங்கு இருந்த அரபுகளால் கைப்பற்றப்பட்டுவிட்டன. இங்கு நடந்திருப்பது ஒரு மக்கள் தொகை பறிமாற்றம். இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்தது போன்று. ஆனால், இந்தியாவுக்குள் வந்த இந்துக்கள் அகதி முகாம்களில் இல்லை. அதே போல பாகிஸ்தானுக்கு சென்ற முஸ்லீம்களும் அகதி முகாம்களில் இல்லை. ஆனால், பாலஸ்தீன பிரச்னையை ஊதி பெரிதாக்கி பிரச்னை பண்ணவேண்டும் என்பதற்காகவே இந்த பாலஸ்தீனர்கள் ஜோர்டானிலும் சிரியாவிலும் எகிப்திலும் மேற்குகரையிலும்காஸாவிலும் அகதி முகாம்களிலேயே வைக்கப்பட்டிருக்கிறார்கள். அப்போதுதானே இரக்கத்தை சம்பாதிக்க முடியும்?

    அது கிடக்கட்டும். பங்களாதேஷ் போரின்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு உறுதுணையாக இருந்து பங்களாதேஷ் மக்களை, முக்கியமாக பாகிஸ்தான் இந்துக்களை கொல்ல துணை நின்றவர்கள், 1947இல் பிகாரிலிருந்து அன்றைய பாகிஸ்தானாக இருந்த கிழக்கு பாகிஸ்தானக இருந்த இன்றைய பங்களாதேஷுக்கு சென்றவர்கள். பங்களாதேஷ் உருவானதும், தனக்கு பங்களாதேஷ் குடியுரிமை வேண்டாம், பாகிஸ்தான் குடியுரிமை தான் வேண்டும் என்று கோரி பங்களாதேஷ் குடியுரிமையை நிராகரித்தவர்கள்.
    அவர்களை இன்றும் பாகிஸ்தான் தனது குடிமக்களாக அங்கீகரிக்க மறுக்கிறது. அவர்களுக்காக சென்று நீங்கள் வாதாடலாமே? எண்ணிக்கை கூட அவ்வளவு அதிகமில்லை. சுமார் 10 லட்சம்தான். இவர்கள் இந்துக்கள், இவர்கள் வந்தால் பாகிஸ்தானின் முஸ்லீம் தேச அடையாளம் மாறிவிடும் என்றும் சொல்வதற்கில்லை. இவர்களும் முஸ்லீம்கள்தான்.

  14. Avatar
    ஷாலி says:

    கி.பி. 70 ம் ஆண்டுக்கு முன்னர் யூதர்களின் தாயக பூமி, ரோமர்களின் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது, . ஜெருசலேமில் யூதர்களின் மிகப் பெரிய கோவில் சேதமடைந்த பின்னர், முழு யூத மக்களையும் ரோமர்கள் நாடுகடத்தியதாக இதுவரை நம்பப்பட்டு வருகின்றது. அதனால் தான் யூதர்கள் மத்திய ஆசியா, ஐரோப்பா எங்கும் புகலிடம் தேடியதாக, இன்றுவரை அவர்கள் வேற்று இனத்துடன் கலக்காமல் தனித்துவம் பேணியதாக, யூதர்கள் மட்டுமல்ல பிறரும் நம்புகின்றனர். ஆனால் ரோமர்கள் ஒரு போதும் எந்த ஒரு தேச மக்களையும் ஒட்டு மொத்தமாக நாடுகடத்தியதாக வரலாறு இல்லை. ரோமர்கள் பல இனத்தவரை அடிமைகளாக்கியிருக்கிறார்கள். அப்போது கூட குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறுதொகையினர் அடிமைகளா அடிமைகளாக்கியிருக்கிறார்கள். அப்போது கூட குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறுதொகையினர் அடிமைகளாக ரோமாபுரி செல்ல, பெரும்பான்மை மக்கள் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

    இதிலிருந்து ஒன்று தெளிவாகின்றது. யூத மக்கள் எங்கேயும் புலம்பெயராமல் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆகவே இன்றுள்ள பாலஸ்தீன அரேபியர்கள் தான் உண்மையான யூதர்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அவர்கள் பிற்காலத்தில் இஸ்லாமியராகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறியிருக்கலாம். முதலாவது இஸ்ரேலிய பிரதமர் பென் கூரியன் உட்பட பல சியோனிச தலைவர்களுக்கு இந்த உண்மை தெரிந்தே இருந்தது. ஆனால் அதனை வெளியே சொன்னால், அவர்களது சியோனிச அரசியல் அத்திவாரமே அப்போது ஆட்டம் கண்டிருக்கும்.

    1. Avatar
      சின்னக்கருப்பன் says:

      அன்புள்ள ஷாலி,
      ரோமர்கள் தங்களுக்கு எதிராக போர் புரிந்த யூதர்களையும் அவர்களது குடும்பங்களையும் அடிமைகளாக்கி விற்றார்கள். நாடு கடத்தினார்கள். யூதர்கள் முழுமையாகவும் இஸ்ரேலிலிருந்து நீங்கப்பெறவில்லை. யூதர்கள் பலத்த அடக்குமுறைக்கு கீழாகவும் பல நூற்றாண்டுகளாக இஸ்ரேலில் வாழ்ந்தே வந்திருக்கிறார்கள். இஸ்ரேல் தனி நாடாக ஆவதற்கு முன்னாலேயே இஸ்ரேலில் பல லட்சக்கணக்கான யூதர்கள் வாழ்ந்தே வந்திருக்கிறார்கள். ஜெருசலத்தில் யூதர்கள் பிரிவு, கிரிஸ்துவர்கள் பிரிவு முஸ்லீம்கள் பிரிவு என்று மூன்று பகுதிகள் எப்பொதுமே இருந்து வந்திருக்கின்றன. சில இடங்களில் யூதர்கள் கட்டாய மதமாற்றத்துக்கு சில நேரங்களில் உட்பட்டாலும் அவர்கள் நிலைமை இறுக்கம் தளர்ந்தபோது மீண்டும் யூதர்களாக ஆகியிருக்கிறார்கள். இன்றுள்ள பாலஸ்தீன அரபியர்கள் முன்னாள் யூதர்கள் அல்லர். அதுதான் என்று எந்த ஆராய்ச்சியாளரும் இதுவரை சொல்லவில்லை. ஆனால் பாலஸ்தீனர்கள் தங்களை யூதர்களாக இருந்தவர்கள் என்றும் கூறிகொள்ளவில்லை. சொல்லப்போனால், அவர்கள் தங்களை எகிப்திலிருந்து வந்தவர்களாகவும் அரபியாவிலிருந்து வந்தவர்களாகவும்தான் கூறிக்கொள்கிறார்கள்.
      ஹமாஸ் மந்திரியே சொல்வதை கேளுங்கள்.
      www . youtube.com/watch?v=Oo4yiUHs1HE

      Many Arabs identify their origins by their family names. Here are some of the most common family names among the “Palestinians”:

      “Masri” = from Egypt-Hamas member of Parliament, Mushir al-Masri (the word “masri” littelery means “the egyptian” in arabic !).
      “Khamis”= Bahrain “Salem Hanna Khamis” “al-Faruqi”= Mosul, Iraq
      “al-Araj” = Morocco, a member of the Saadi Dynasty “Hussein al-Araj”
      “al Lubnani” = the Lebanese
      “al-Mughrabi” = the Moroccan (Maghreb” – meaning “West” in Arabic, and usually referring to North Africa or specifically to Morocco)
      “al-Djazair” = the Algerian
      “al-Yamani” = the Yemeni “Issam Al Yamani”
      “al-Afghani” = the Afghan
      “al-Hindi” = the Indian “Amin al-Hindi”
      “Iraqi” = from Iraq.
      “halabi” = from Aleppo, Syria
      “El Baghdadi” = from Baghdad Iraq.
      “Tarabulsi”= Tarabulus-Tripoli, Lebanon.
      “Hourani” = Houran Syria.
      “al-Husayni” = Saudi Arabia.
      “Saudi” = Saudi Arabia.
      “Metzarwah”= Egypt.
      “Barda—wil” = “Salah Bardawil” HAMAS legislator in Gaza; Egypt, Bardawil Lake area.
      “Nashashibi” = Syria.
      “Bushnak” = Bosnia
      “zoabi”= from Iraq: “Haneen Zoabi”.
      “Turki” = Turkey “Daud Turki”
      “al-Kurd” = Kurdistan.
      “Haddadins” = YEMEN descended from Ghassanid Christian Arabs.
      “Arab Abu-Kishk” = Egypt.(Bedouins)
      “Arab al shakirat” = Egypt (Bedouins)
      “Arab al zabidat” = Egypt (Bedouins)
      “Arab al aramsha” = Egypt (Bedouins)
      “Abu Sitta” = In Arabic’ Abu means father and sitta means six. Translated it actually means father of six. (The Abu Sitta family primarily received this name because around the year 1700, a well known knight of the large Al-Tarabeen tribe always had six slaves (i.e. fedawyah, bodyguards), 3 on each side, with him. They were with him wherever he went, day or night. Hence the name “ABU SITTA.” = Egypt (Bedouins) “Salman Abu Sitta “.)

      Even Yasser Arafat, the most famous “Palestinian” and leader of the P.L.O terrorist organization, was not native to Judea. He called himself a “Palestinian refugee” but spoke Arabic with an Egyptian accent. He was born in 1929 Cairo, Egypt. He served in the Egyptian army, studied in the University of Cairo, and lived in Cairo until 1956! His full name was Mohammed Abdel Rahman Abdel Raouf Arafat al-Qudwa al-Husseini. “Al-Qudwa” tribe origin?

      Yasser Arafat also proudly stated in his authorized biography that, “If there is any such thing as a Palestinian people, it is I, Yasser Arafat, who created them.”

  15. Avatar
    ஷாலி says:

    இஸ்ரேல், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை, காசா பகுதிகளை “விவாதிக்கப்பட வேண்டிய பகுதிகள்” எனக் கூறுகின்றது. செவ்வியந்தியரின் நிலங்களுக்களை பறித்தெடுத்த ஐரோப்பியர்கள் இன்று அமெரிக்காவுக்கு சொந்தம் கொண்டா டுகின்றனர். அதே போல, களவாடப்பட்ட பாலஸ்தீன நிலங்களில் அத்துமீறிக் குடியேறியவர்கள், அந்த நிலங்கள் தமது என உரிமை கொண்டாடுகின்றனர். “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எமது மூதாதையர் இந்த மண்ணில் வாழ்ந்தார்கள். இது எமக்கு ஆண்டவரால் அருளப்பட்ட பூமி.” என்று பைபிளில் இருந்து மேற்கோள் காட்டுகின்றனர். பாலஸ்தீனர்கள் தமது ஆரஞ்சு பழத் தோட்டங்களை, விவசாய நிலங்களை யூத குடியேற்றக்காரரிடம் பறி கொடுத்தனர். இன்று தமது சொந்த நிலத்திலேயே கூலியாட்களாக வேலை செய்யும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    ஆனால் ஐ.நா.சபையோ, அல்லது அமெரிக்காவோ, யாராயினும் பாலஸ்தீனியரின் மண் மீதான உரிமையை மீட்டுத் தரவில்லை.
    இஸ்ரேல் என்ற தாயகக் கோட்பாட்டின் நியாயவாத அடிப்படை என்ன? பைபிளை தவிர வேறு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இன்றைய விஞ்ஞான உலகில் ஒரு மத நூலை ஆதாரமாக காட்டி யாரையும் நம்பவைக்க முடியாது. சரித்திரபூர்வ ஆதாரங்கள் தேவை.

    பைபிளில் எழுதியிருப்பதெல்லாம் உண்மை என்று நம்பும் இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், அவற்றை நிரூபிக்கும் நோக்கில், சரித்திர ஆசிரியர்களையும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும், மொழியியல் அறிஞர்களையும் பணியில் அமர்த்தினர். இஸ்ரேல் உருவாகி அறுபது ஆண்டுகளாகியும், இந்த ஆராய்ச்சியாளரால் பைபிளில் உள்ளபடி “புலம்பெயர்ந்து வாழும் யூத மக்களின் தாயகம் இஸ்ரேல்” என்னும் கருத்தை இன்று வரை நிரூபிக்க முடியவில்லை.

    மேலும் பைபிளில் எழுதப்பட்டுள்ள கதைகள் உண்மையில் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிள்ளையார் பிடிக்கப் போய், அது குரங்காக மாறிய கதையாக, தாம் காலங்காலமாக கட்டி வளர்த்த நம்பிக்கை தகருவ வதை காணப் பொறுக்காத இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர்.

    1980 ம் ஆண்டு இடம்பெற்ற நிலநடுக்கம் சியோனிச கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தியது. அதுவரை அறியாத பழங்கால இடிபாடுகளை வெளிப்படுத்தியது, அந்த நிலநடுக்கம். ஆனால் அந்த கண்டுபிடிப்புகள் எதுவும் யூத கதைகளை உண்மையென்று நிரூபிக்காததால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அதிலிருந்து தான் இஸ்ரேலின், அல்லது யூத வரலாற்றை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் போக்கு ஆரம்பமாகியது. பைபிளில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான கதைகள் உண்மையாக இருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது.

  16. Avatar
    சின்னக்கருப்பன் says:

    நான் யூத புராணக்கதைகளை நம்புவதில்லை. யூத-ரோமானிய போர் ஆரம்பம் முதற்கொண்டு அனைத்துமே சரித்திர ஆவணங்கள். ஜோஸபஸ் எழுதிய யூத-ரோமானிய போர் பற்றிய ஆவணங்களும், மற்ற ரோம சரித்திர் ஆசிரியர்களும் எழுதிய ஆவணங்களும் இன்னமும் காணக்கிடக்கின்றன. அந்த நாள் இஸ்ரேல் முழுக்க இருந்தது யூதர்கள் என்பதை உறுதி செய்கின்றன.

  17. Avatar
    ஷாலி says:

    திரு.சின்னக்கருப்பன் அவர்கள், பாலஸ்தீன அரபுகள் வெளியில் இருந்து வந்தவர்கள் உள்ளூர் வாசி ஒருவரும் இல்லை என்று நிரூபிப்பதாக நினைத்து,ஒரு பெரிய அரபு லிஸ்ட்டை போட்டு படிப்பவர்களை மிரட்டி விட்டார்.

    சின்னக்கருப்பன் ஸார்! நீங்க இவ்வளவு சிரமப் பட வேண்டிய
    தில்லையே! பேசாமல் ஜுதேய ஒரிஜினல் யூதர்கள் பெயரை எழுதி ஜோலியை முடிச்சியிருக்கலாம்.பரவாயில்லை.உங்க அசல்? யூத லிஸ்ட்டை நான் போடுகிறேன்.

    இன்று இஸ்ரேலில் உள்ள பெரும்பான்மை யூதர்கள் Ashkenazim குழுவைச் சேர்ந்தவர்கள்.இவர்கள் பூர்வீகம் ஜெர்மனி,மத்திய ஐரோப்பா.

    அடுத்ததாக உள்ள யூதர்கள் Sephardim பிரிவைச் சேர்ந்தவர்கள்.இவர்களின் பூர்வீகம் ஸ்பெயின,போர்ச்சுக்கல்.

    அடுத்த பிரிவு Mizrahim பிரிவைச் சேர்ந்தவர்கள்.வந்தது மத்திய கிழக்கு,ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து.

    Georgian Jew,Mountain Jew காக்காசிய மலைபிரதேசங்களிளிருந்து வந்தவர்கள்.Bene Israel,Bnei menashe , Cochin யூதர்கள் இந்தியாவிலிருந்து போனவர்கள்.

    Bene Ephrain யூதர்கள் கிரீஸ் நாட்டிலிருந்தும்,Teimanim யூதர்கள் ஏமன்,ஓமான் நாடுகளிலிருந்தும்,Beta Israel யூதர்கள் எத்தியோபியா நாட்டிலிருந்தும்,Bukharan Jews மத்திய ஆசியா பகுதியிலிருந்தும்,
    Kaifeng Jews சீனாவிலிருந்தும் வந்து குடியேறிய யூதர்கள்.

    கல் தோன்றி மண் தோன்றா மூத்த குடி அசல் ஜூதேயா யூதர்கள் பெயரை சி.க. ஸார் தான் சொல்லவேண்டும்!

    சில வருடங்களுக்கு முன்பு அறிவியல் ரீதியாகவே காதில் பூசுற்றும் வேலை நடந்தது.அதாவது அனைத்து இன யூதர்களின் DNA ஜீன்கள் பூர்வகுடி யூதர்களின் ஜீன்களோடு ஒத்திருப்பதாக அறிவித்தனர்.ஆனால் கடந்த ஆண்டு அதே யூத இனத்தை சேர்ந்த Jenome ஆராச்சியாளர் Eran Elhaik தனது ஆய்வின் மூலம் இது அப்பட்டமான பொய் என்று மறுத்தார்.
    Scientists usually don’t call each other “liars” and “frauds.”
    But that’s how Johns Hopkins University post-doctoral researcher Eran Elhaik describes a group of widely respected geneticists, including Harry Ostrer, professor of pathology and genetics at Yeshiva University’s Albert Einstein College of Medicine and author of the 2012 book “Legacy: A Genetic History of the Jewish People.”

    In “The Missing Link of Jewish European Ancestry: Contrasting the Rhineland and the Khazarian Hypotheses,” published in December in the online journal Genome Biology and Evolution, Elhaik says he has proved that Ashkenazi Jews’ roots lie in the Caucasus — a region at the border of Europe and Asia that lies between the Black and Caspian seas — not in the Middle East. They are descendants, he argues, of the Khazars, a Turkic people who lived in one of the largest medieval states in Eurasia and then migrated to Eastern Europe in the 12th and 13th centuries. Ashkenazi genes, Elhaik added, are far more heterogeneous than Ostrer and other proponents of the Rhineland Hypothesis believe. Elhaik did find a Middle Eastern genetic marker in DNA from Jews, but, he says, it could be from Iran, not ancient Judea.

  18. Avatar
    paanidyan says:

    now all arab countries support Israel. good to read the article:
    tamil.oneindia.in/news/international/arab-leaders-viewing-hamas-as-worse-than-israel-stay-silen-207384.html

  19. Avatar
    பாப்பா says:

    உண்மையிலேயே வரலாற்றைத் திரிப்பதற்கு மிகுந்த நுட்பம் வேண்டும். அந்த நுட்பத்துடன் சின்னக் கருப்பன் இந்த ஆக்கத்தை எழுதியுள்ளார். அரபுகள் வென்றெடுத்த நிலங்களில் அந்த ஊர்வாசிகளாகவே அவர்கள் மாறிப்போயினர் என்பதுதான் உண்மை. காலனி ஆதிக்க நாடுகள் செய்தது போன்று அங்கிருந்து கொள்ளையடித்துக் கொண்டுவந்து அரபு தேசத்தை வளப்படுத்தவில்லை. ஒரு யூதனிடம் கை குலுக்கினால் உன் விரல்களை எண்ணிப் பார்த்துக்கொள் என்ற வழக்குச் சொல் ஏன் வந்தது? அந்தளவுக்கு அவர்கள் சுரண்டல் பேர்வழிகள் என்பதால்தானே. நான் ஏன் முழுமையாக யூதர்களை அழித்தொழிக்கவில்லை என்றால், எனக்குப் பின்னால் வரும் சமுதாயம் நான் செய்தது சரிதான் என்பதை கண்கூடாகக் காண வேண்டும் என்பதாலேயே யூதர்களில் சிலரை விட்டுச்செல்கிறேன் என்று சொன்னதன் அர்த்தம் இன்றைக்குப் புரிகிறது. இஸ்ரேலின் போர்க்குற்றங்களுக்கு ஐ.நா.வும் மனித உரிமை ஆணையங்களும் பல அறிக்கைகளைச் சாட்சியாக வைத்திருக்க சின்னக்கருப்பன் மட்டும் ஐயோ பாவம் இஸ்ரேல் என்று பார்ப்பது இளிச்சவாயன் காதில் பூச்சுத்தும் வேலை. கொஞ்சமாவது மனசுல ஈரத்தை வைத்துக்கொண்டு எழுதுங்கள் சின்னக்கருப்பன். வாழ்த்துக்கள்.

  20. Avatar
    Nilam says:

    வரலாற்றை இதைவிட திரித்து கூற முடியாது. உண்மை தெரியாத அல்லது அதை மறைக்க முயலும் இப்படியான அரைவேக்காடு எழுத்தாளர்கள் மறைமுக சிலிப்பர் செல்ஸ்கள். இலங்கையில் நடந்த போரில் ராணுவத்தின் பக்கமுள்ள (இலங்கை மக்கள் பக்கமுள்ள) நியாத்தையும் எழுதுங்கள் பயங்கர ராதிகளுக்கு சார்பின்றி..

Leave a Reply to சின்னக்கருப்பன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *