உயில்

This entry is part 12 of 30 in the series 28 ஜூலை 2013

ரா.கணேஷ்.

 

 

என் வாழ்வின்

முற்றுப்புள்ளி

என் பின்னே

வந்து

சம்மணமிடும் போது…

 

என் சுவாசம்

எனை விடுத்து

விதவை

ஆகும் போது…

 

மரணமென்னும்

வேடன்

என் வேர்களை

அறுக்கும் போது…

 

உறவுகளே

உங்கள் கூட்டில்

எனை

அடைகாத்தவர்களே !

 

ஒப்பா¡¢யிட்டோ

ஓலமிட்டோ

கதா¢யோ

அழுதுவிடாதீர்கள்

என்

கடமையை

நான்

பூர்த்தி செய்யவில்லை

என்றாகி விடும்

 

உங்கள்

பாதையில்

கைகோர்க்க

இனி

நானில்லை

 

உங்கள்

கனவுகளில்

வெறும்

கனவாய்

நான்

 

வெடித்து சிதறிய

பலூன் காற்றாய்

வாங்க மறந்த

சில்லரை காசாய்

நான்

ஆகியிருப்பேன் !

அவ்வளவே

 

எனக்காக

என்னுள்

கவிழ்ந்து கிடந்த

ரகசியங்களை

என்னுடன்

சேர்த்து தீயிடுங்கள்

 

அதில்

 

அழகாய் சில

இருக்கலாம்

இருந்திருந்தால்..

கவிதையாய் கொட்டியிருப்பேன்

 

அபூர்வமாய் சில

இருக்கலாம்

இருந்திருந்தால்…

கையோடு கொண்டிருப்பேன்

 

அசிங்கமாய் சில

இருக்கலாம்

இருந்திருந்தால்…

கண்டிப்பாக இருக்கும்

என்னுடன்

சேர்த்து தீயிடுங்கள்

 

பின் என்ன ?

 

நான் யார்

எதற்காக வந்தேன்

எங்கு வந்தேன்

எங்கு செல்கிறேன்

என் வாழ்வின்

அர்த்தம்தான்

என்ன ?

யாருக்குத் தொ¢யும் ?

எனக்கு மட்டும் தானோ ?

 

அன்று…

இந்த

கேள்விகள் தான்

மிஞ்சும்

 

இக்கேள்விகளை

நம்

வீட்டு சுவர்களில்

ஆணியடித்து

மாட்டி

வையுங்கள் !

 

– ரா.கணேஷ்.

 

Series Navigationடௌரி தராத கௌரி …கல்யாணம்.! – 12மருத்துவக் கட்டுரை இருதய தமனி நோய்
author

ரா.கணேஷ்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Chellappa Yagyaswamy says:

    “என் சுவாசம் என்னை விடுத்து விதவை ஆகும் போது” என்ற வரிகளை மிகவும் ரசித்தேன்.

  2. Avatar
    தேமொழி says:

    வாழ்வையும் மரணத்தையும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் நல்லதொரு மனப்பானமையை ‘உயில்’ கவிதை வெளிபடுத்துகிறது. மீண்டும் மீண்டும் படித்து ரசித்த கவிதை. நன்றி.

    அன்புடன்
    ….. தேமொழி

Leave a Reply to Chellappa Yagyaswamy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *