உரையாடல்.”-

This entry is part 14 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

மீன் சுவாசம் போல்
உள்ளிருந்து வெடிக்கும்
ஒற்றைப் புள்ளியில்தான்
துவங்குகிறது
ஒவ்வொரு உரையாடலும்.

குளக்கரையின் எல்லைவரை
வட்டமிட்டுத் திரும்புகிறது.,
ஆரோகணத்தோடு.

மேலே பெய்யும் மழையோ
முள்க்ரீடம் பதித்து
அவரோகணம் செய்கிறது
குளத்தின் மேல்.

தத்தளிகிறது குளம்
ஊசியாய்க் குத்தும்
அபஸ்வரத்தின் குணங்களோடு.

ஒளிய முடியாமல்
தவிக்கும் குளம்
மீன்களைத் துரத்துகிறது.

ஒளியும் மீன்களாய்
உள்ளோடிப் போகிறது
உரையாடலும்.

Series Navigationசிப்பியின் ரேகைகள்புதிய தலைமைச் செயலகம் மருத்துவமணை ஆகிறது
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

4 Comments

  1. Avatar
    கவியன்பன் கலாம் says:

    திண்ணையில் நிரந்தரமாய்த் தெரிவுசெய்தாய் இடத்தினையே
    விண்ணிலுள்ள ஒளிர்மீனாய் விரிந்துவரும் கடலலையாய்
    கண்ணிலுள்ள கவின்மணியாய் கவிதைகளின் கருப்பொருளாய்
    பெண்ணினத்தின் பெருபேறாய் பரிணாம வளர்ச்சியன்றோ

    “கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்) அபுதபி(இருப்பிடம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *