உள்ளொளி விளக்கு !

This entry is part 12 of 13 in the series 13 மே 2018

 

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++

 

வாசலைத் தாண்டி வெளியே றாது

காசினியில் நடப்பதை அறிவேன் !

பலகணி வழியே எட்டிப் பாராது,

வானுலகு நடப்பு எனக்குத் தெரியும் !

எத்தனை தொலைவுக் கப்பால் போயினும்

கற்றுக் கொள்வது ஒருவன் சொற்பமே !

கற்றுக் கொள்வது ஒருவன் சொற்பமே !

 

கதவுக்கு வெளியே போகாது, நீ

காசினி நடப்பை அறிய முடியும் !

சாளரம் வழி நீ எட்டிப் பாராது,  

வானத்து நடப்பை அறிய முடியும் !

வரம்பு தாண்டி ஒருவன் போயினும்

அறிவது என்னமோ சிறிது தான் !

அறிவது என்னமோ சிறிது தான் !

 

பயண மின்றிப் போகுமிடம் வந்துசேர் !

பார்த்து விடு நீ யாவும் நோக்கா மலே !

பார்த்து விடு நீ யாவும் நோக்கா மலே !

 

+++++++++

Series Navigationகே. ஜி. அமரதாஸ நினைவுகள்உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 5 -ஃபையர் (நெருப்பு)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *