உவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினக் கவிதை- நவ : 23.

author
0 minutes, 0 seconds Read
This entry is part 5 of 19 in the series 20 நவம்பர் 2016

ப.கண்ணன்சேகர்

suradha

பாவேந்தர் பாராட்டும் பாநயக் கவிஞர்
பூவேந்தும் பொன்மண புலமையில் இளைஞர்
மரபுவழி கவிதைகள் மலர்த்திய தென்றல்
மாறாத தனித்தமிழில் மயங்கிய கொண்டல்
கல்லாடன் புனைப்பெயரில் கனித்தமிழ் விரதா..
சொல்லாடல் எழுத்தாலே சுடரொளிக்கும் சுரதா
உள்ளமது வெண்மையில் உயர்ந்திடும் பாலகம்
இல்லமது எந்நாளும் ஏடுநிறை நூலகம்
தேன்மழை துறைமுகம் சிரிப்பின்நிழல் எனும்பேரு
தீட்டினார் காவியங்கள் செதமிழில் பலநூறு
ஆடிஅடங்கும் வாழ்க்கையடா அரங்கினிலே நாளும்
அன்றுமுதல் திரையினில் அழியாதக் கோலம்
பெரியார் கலைவாணர் பாராட்டைப் பெற்றவர்
பெரும்புகழ் நாமக்கல்லார் பன்பாட்டைக் கற்றவர்
அண்ணாவும் கலைஞரும் அரவணைத்த தமிழன்
ஆர்த்தெழும் தமிழாற்றல் அணிவகுக்கும் அமுதன்
பொன்மனச் செம்மலும் போற்றிய திராவிடம்
புத்தொளி தமிழுக்கு பொன்னான நல்மகுடம்
படகுக் கவியரங்கம் பறக்கும்விமானக் கவியரங்கம்
படைத்தவரைப் பார்த்து வியந்தது இப்புவியரங்கம்
உலகதமிழ் மாநாட்டை உவகையுடன் நடத்தினார்
உலகத்தமிழ் மக்களின் உள்ளத்தில் நிறைந்தவர்
பாவேந்தர் நட்புறவில் பெருமைகண்ட சுப்புரத்தினம்
பாரினில் தமிழ்வேந்தன் சனனமே இத்தினம்.

-ப.கண்ணன்சேகர், திமிரி.
வேலூர் மாவட்டம்
பேச 9894976159.ks-may-27

Series Navigationஇரைந்து கிடக்கும் பாதைகள்பெருநிலா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *