எகிப்து : சிதைந்த கனவுகள் – திரைப்படம்

This entry is part 24 of 31 in the series 16 செப்டம்பர் 2012

சுப்ரபாரதிமணியன்

கிறிஸ்துவ உலகத்தோடு பிரஞ்சு புரட்சியைச் சேர்த்துப் பார்க்கிற நோக்கிலேயே முஸ்லீம் உலகத்தோடு சமீப கிளர்ச்சியை பார்க்கலாம் என்கிறார் “காஞ்சா இலையா” இரோப்பிய கிறிஸ்துவம். அரசபரம்பரை, நிலப்பிரபுத்துவ அமைப்பால் பல நூற்றாண்டுகளாக இறுகிப் போய் கிடந்தது. இஸ்லாமிய குடியுரிமை அமைப்புகள் அவர்களின் சொந்த நடைமுறைகளாலேயே உருவானவை என்கிறார். எகிப்தின் கிளர்ச்சி சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு அஹிம்சை போராட்டமாகவே ஓரளவு வடிவெடுத்து புரட்டஸ்டண்ட் உட்பிரிவுகளால் பிளவுண்டது. ஜரோப்பாவில் புரட்டஸ்டன்ட் சமூகமே பல்வேறு எழுச்சிகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. அதே சமயம் கத்தோலிக்க சமூகம் ஆளும் அதிகார வர்க்கத்தோடு ஒத்திசைவானதாகவே இருந்து வந்திருக்கிறது.

எகிப்தின் வளம் சூயஸ் கால்வாயின் கப்பல் போக்குவரத்தாலும், சுற்றுலாத் துறையாலும் செழுமையாக்கப்பட்டிருக்கிறது. வரலாற்றில் ரோம சாம்ராஜ்யம் என்ற ஏகப்பிரதேசத்திற்கும் தானிய ஏற்றுமதி செய்து வந்த நாடு கடந்த 30 ஆண்டுகளாக நாட்டின் வளத்தைக் கொள்ளையடித்து சுகபோக வாழ்கையை வாழ்ந்து வந்த அதிபர் ஹேஸ்னி முபாரக்  பிப்ரவரி கிளர்ச்சி  மூலம் தூக்கி எறியப்பட்டிருக்கிறார். இந்தக் கிளர்ச்சிக்கு அடித்தளமாய் சமூக வலைத்தளங்களும், வீடியோ வலைத்தளங்களும் பயன்பட்டிருக்கின்றன.  தொலைத் தொடர்பு புரட்சி வெற்றிகரமாக “ ஒரு வகை புரட்சியை”  தீவிட்டு எறிந்து  வெற்றிபெறச் செய்திருக்கிறது. பல வலைத்த்யளங்களியும், அல் ஜ ஸீரா போன்ற  தொலைக்காட்சி வரிசைகளையும் முபாரக் கைது செய்து சிறையிலடைத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் வெளிநாட்டில் வசிக்கும் எகிப்தியர்களால் கிளர்ச்சி நடவடிக்கைகள் கொழுந்து விட்டெறிந்தன. முபாரக் ஆட்சிவிலகும் தீர்மானம் கிளர்ச்சியின் வெற்றிவடிவமாகக் கணிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆதிக்கம் தோற்று வருவதன் எதிரொலியாக இது கருதப்படுகிறது.

 

எகிப்தியர்களுக்கு 1952 புரட்சிக்கு முன்பான வாழ்க்கையை நினைத்துப் பார்த்துக் கொள்வது என்பது உவப்பானதாக இருப்பதை “ ஹெலியோ போலிஸ்” என்ற படத்தின் ஒரு பாத்திரம் சொல்கிறது. அதற்குப் பிறகான வாழ்க்கையின் கனவுகளும், சிதைவுகளும் அவர்களை தொந்தரவுபடுத்தவே செல்கின்றன. இப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் பேச்சிலும், நடவடிக்கைகளிலும் தென்படும் சோர்வு இதிலிருந்து மீள வேண்டியதான அவர்களின் ஆசையை சொல்லிக் கொண்டிருக்கிறது. கெய்ரோவின் நகர வீதிகளும் மனிதர்களும் ஒரு நாளில் கொள்ளும் தினசரி வாழ்க்கையின் ஒரு பக்கத்தை இது காட்டுகிறது. அதுவும் மேல்தட்டு மனிதர்களின் வாழ்கையைக் காட்டுவதாக இது அமைந்திருக்கிறது. அவ்வகையான எட்டு மனிதர்கள் இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள். புது அபார்ட்மெண்ட்டை பார்க்கக் கிளம்பும் ஒரு திருமணமாகாத தம்பதியர் வாகன நெரிசலில் மாட்டி தவித்துப் போகிறார்கள். அவன் ஒரு காட்சியில் சொல்கிறான்: “ டிராபிக் ஜாம் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது. உன்னைப் பார்க்க வந்து இரண்டு மணி நேரமெல்லாம் காத்திருக்கிறேன். அப்போது நேரம் என்பது ஒன்றுமில்லை. இப்போது நேரம் ஏன் கொல்கிறது?”.   அபார்ட்மெண்ட் வாங்கலாம், பிரிட்ஜ் வாங்கலாம் நன்றாக இருப்போம் என்ற நம்பிக்கையில் திரிகிறார்கள். பிரிட்ஜ் அவர்களின் திட்டமிடலில் இல்லாதது அவர்களை வெவ்வேறு கடைகளுக்குத் துரத்துகிறது. ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டிருப்பதாகச் சொல்லும் இளைஞன் தெருக்களில் அலைந்து பழைய புராதனக் கட்டிடங்களை படம் பிடிக்கிறவனாக இருக்கிறான். டிராபிக் கான்ஸ்டபிலால் படம் பிரிக்கப்படுகிறது. சிறுபான்மை  இனமக்கள் தொகை குறைந்து வருவது பற்றி ஆராய்ச்சி செய்வதாக ஒரு வயதான பெண்ணிடம் சொல்லும் அவன் வீடியோ படம் பிடிப்பது அவளுக்குப் பிடிக்காமல் போய் விடுகிறது. நகர வீதிகளில் அலைந்து திரிந்து பலவற்றைரைப் படம் பிடிக்கிறான். ஹீக்கா புகைக்கும் கணிணி படித்த இளைஞன் அவனைச் சீண்டுவதை  விளையாட்டாக எடுத்துக் கொள்கிறான். அவன் வீட்டிற்குத் திரும்பியபின் அவளிடமிருந்து பிரிந்த காதலி வேறொருவனை திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்தி அனுப்புவது அவனுக்குச் சோர்வு தருகிறது. விடியலை  எதிர்பார்த்திருப்பவன் போல அலைகழிக்கிறான். தெருவில் போகும் பால்காரர்களை வேடிக்கை பார்த்தபடி பொழுதைக் கழிக்கிறான். பாதுகாப்புப் பணியில் வேடிக்கை பார்த்தபடி பொழுதைக் கழிக்கிறான். பாதுகாப்புப் பணியில் வேலை செய்பவன் ஓரத்தில் இருக்கும் கூண்டிற்குள் அடைபட்டுக் கிடக்கிறவனாக இருக்கிறான். தெருவில் திரியும் நாய் அவனுக்கு நட்பாகிறது. கையிலிருக்கும் உண்வை அதற்குத் தருகிறான். இரவுநேர தூக்கம் அவனின்  வேலையைச் சிரமப்படுத்துகிறது. திருமணமாகாத விடுதி வரவேற்புப் பெண்ணிற்கு பாரீசிற்கு செல்வது கனவாக இருக்கிறது. வெளிநாட்டுத் தம்பதிகள் விடுதிக்கு வருவதும் அவர்கள் முத்தமிட்டுக் கொள்வதும் சிரமப்படுத்துகிறது. வெளிநாட்டுச் செல்கிற கனவுகளில் மிதந்து கொண்டிருக்கிறான்.அவளின் சிநேகிதியுடன் குடிக்குமிடத்திற்குச் செல்கிறவளுக்கு ஆண்களின் மிகையான சிரிப்பும் பாதிக்கவே செய்கிறது. அவளின் அறையில் இருக்கும் பாரிஸ் ஈபில் டவர் போஸ்டர் கிழிந்து அவளைத் துன்புறுத்திகிறது.  அவளின் கனவுகள் சிதைந்து கொண்டிருப்பதை நினைக்கிறாள். ஒரு மருத்துவர் ஒரு நாயுடன் தெருவில் அலைந்து  கொண்டிருக்கிறார். வெளிநாடு செல்வதற்கான விசா விசாரணையில் அவனின் வங்கிக் கணக்கில் பணம் குறைவாக இருப்பது கூட்டி காட்டப்பட்டு துரத்தப்படுகிறான். அம்மாவுடன் சண்டை போட்டுக் கொள்வது அவனுக்குச் சோர்வையேத் தருகிறது.

இந்த மருத்துவரைப் போல் வாழ்க்கையில் அலைகழிப்பிற்கு உள்ளாகும் ஒரு மருத்துவரை “ தி மெஸேஐஸ் பிரம் சீ” பட்த்தில் பார்க்க முடிகிறது.

பருத்துவப்படிப்பைப் படித்திருந்தாலும் திக்குவாய்குறை அந்த இளைஞரை சமூகத்தில் ஒட்டச் செய்வதில்லை. அலக்சாண்டிரியாவுக்கு திரும்பி சாதாரண மீனவனாக வாழ்க்கையை ஓட்டுகிறான். மீன்பிடிப்பது அதனால் வரும் வருமானத்தில் வாழ்க்கையைக் கழிப்பதில் திடமாக இருக்கிறான். மதுச்சாலைக்குப் போகிறவன் பல சமயங்களில் நிலை தெரியாமல் குடித்துவிட்டு கிடக்கிறான். வீட்டிற்கு வந்து சேர்வதே பெரும் பாடாக இருக்கிறது. வீதியில் ஒரு வீட்டிலிருந்து கேட்கும் இசை அவனை எப்போதும் ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. இரவுகளில் தனித்திருந்தும், மழையில் நனைந்தும் அந்த இசையைக் கேட்கின்றான். அப்படி காத்திருந்து வீதியில் அலைகிற ஒருநாளில்தான் நோராவைச் சந்திக்கிறான். அவளின் அழகு அவனைத்  திக்குமுக்காட வைக்கிறது. அவளுக்கு இருக்கும் வேறு தொடர்புகள் பற்ரியும் அறிந்து கொள்கிறான். அதிலும் குறிப்பாக வயதான ஒருவருடன் இருக்கும் தொடர்பு அவனை எரிச்சலாக்குகிறது. அவள் இருக்கும் வீட்டை காலி செய்யச் சொல்லும் வீட்டுக்காரன் நோராவுடனான் தொடர்பைக் காட்டிப் பழிக்கிறான். தூண்டில் போட்டி மீன் பிடிகிற அவனும், கடலில் குண்டுகளை வீசி செத்து மிதக்கும் வீட்டுக்காரனும் முரண்படுகிறார்கள். நோராவுடன்  உயிர் பிழைக்க தப்பி ஓட வேண்டியிருக்கிறது. கடலில் குண்டுகள் விசி மீன்கள் மிதக்கும் பகுதியில் அவன் அழகான நோராவுடன் படகில் தப்பியோடுகிறான். பட்த்தின் பல காட்சிகளில் தென்படும் பாட்டிலும், கடலின் அலைகளால் அலைகழியும் அதன் இயக்கமும் மருத்துவ இளைஞனின் மனமாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.

———————-

சுப்ரபாரதிமணியன்,8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602

Series Navigationதுண்டிப்புபருத்தி நகரம் : திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்பு
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *