கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (வீட்டுக்கு வரும் விருந்தாளிகள்) (கவிதை -50)

This entry is part 31 of 45 in the series 2 அக்டோபர் 2011


ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

இந்த மானிடம் விருந்தோம்பும் !
ஒவ்வோர் காலை உதயமும்
ஒரு புது வருகைதான் !
உவப்பு, மன இழப்பு, தாழ்ச்சி
விழிப்பு யாவும் வரும்
எதிர்பாரா விருந்தாளிகள் போல் !
எல்லா ரையும் வரவேற்று
உபசரிப்பாய் !
கூட்ட மாய் துயரங்கள் வந்துன்
வீட்டைத் தகர்க்கினும்,
ஆசனங்களைக் காலி செய்யினும்
மதிப்புடன் நடத்து
அனைத்து விருந்தி னரையும் !
வீட்டுக்கு வரும் விருந்தினர்
அளிக்கலாம்
புதிய தோர் வெளிச்சம் !

இருண்ட கொடுமை நினைவுகள்
வெட்கும் குறைப்பாடு
மனக் காழ்ப்பு நேர்ந்தாலும்
அனைத் தையும்
வரவேற்பாய் புன்னகை யோடு
வாசலில் !
அனுமதி அளிப்பாய் அவற்றை
உள்ளே நுழைய !
நன்றி யோடு நடந்திடு
எது வந்தாலும் சரி !
ஏனெனில்
அப்பாலிருந்து
அவை வருவதின் காரணம்
ஒப்புரவு செய்ய !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 28, 2011)

Series Navigationவெளி ரங்கராஜனின் கட்டுரைகள் ‘ நாடகம் நிகழ்வு அழகியல்’ – ஒரு கண்ணோட்டம்.நினைவு நதிக்கரையில் – 1
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *