கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -58)

This entry is part 28 of 42 in the series 29 ஜனவரி 2012

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

ஏகாந்த வாழ்வு

ஏகாந்த நிலையில் நான்

தாமதிக் கிறேன் !

ஏகாந்த மாய் நான் மட்டும்

என் படகினில் !

எங்கும் இருள் மயம்

எந்தத் தளமும் தெரிய வில்லை !

திரண்ட முகில் மூட்டம்

நீருக்கு மேலிருக்க

முயல்கிறேன் !

ஆயினும்

ஆழத்தில் ஏற்கனவே

வாழ்கிறேன்

அடிக்கடல் விளிம்புக்குள் !

++++++++++++

அழுகை வருகுது !

அழுகை வருகுது எனக்கு !

மொழியும் கண்ணீர் துளிகள்

அழுகையின் வரவை !

சென்ற வசந்த காலத்தில்

செப்பினார் அவர் :

பசுமைப் புத்துணர்வு

பலவீன உணர்ச்சி

எல்லா இரவுகளிலும்

எந்த இரவு

உன் நினைவுக்கு வருகுது ?

என்ன மொழிந்தேன்

என்றே எந்தன் நினைவில்

இல்லை !

+++++++++++++

நண்பனே கேள் !

நண்பா !

நமது நெருக்கம் இதுதான் :

எங்கெல்லாம்

உன்தடம் படுமோ

அங்கு அதன் அழுத்தத்தில்

அறிவாய் நீ

என் இருக்கையை !

எப்படி உன் நேசம் ?

உன் உலகு தெரியுது

ஆனால்

உன்னைக் காணவில்லை !

+++++++++++

தூக்கமில்லை !

நான் உன்னோ டுள்ள போது

உறங்காமல்

நாம் விழித்திருப்போம்

இரவு பூராவும் !

இங்கு நீ

இல்லாது போனால்

எனக்கு இல்லை உறக்கம் !

இறைவனை வழிபடு

இந்தத் தூங்காப் பிறவிகளுக்கு

அவரிடை இருக்கும்

வேறுபாட் டுக்கும் !

+++++++++++++

இறக்கும் போது !

நான் இறந்து போனால்

பாடையில்

கிடத்து உடலை !

முத்தமிட விழையலாம் நீ

மூடிய இதழ்களை !

சிதையத் துவங்கும் உடல்

மிரளாதே

என் விழிகள் திடீரெனத்

திறந்தால் !

**************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Open Secret – Versions of Rumi By John Moyne, & Coleman Barks (1984)

4. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (Janauary 25, 2012)

Series Navigationபள்ளி மணியோசைஇப்படியும்… பேசலாம்…..!
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *