குகப்பிரியானந்தா – சித்த வித்தியானந்தா..

This entry is part 5 of 26 in the series 22 செப்டம்பர் 2013

DSC09812

ஆண்டு, அனுபவித்து ஓய்ந்து போனவர்கள் சந்நியாசம் வாங்கிக்கொண்டு அமைதியாக ஹரே, ராமா, சிவ… சிவா.. என்று உட்கார்ந்தால் நிம்மதி தேடி ஆண்டவனின் பாதத்தில் சரணடைந்திருக்கிறார்கள் என்று ஏற்றுக்கொள்ளலாம்.  விவேகானந்தரின் குருவான, 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமகிருஷ்ணபரமஹம்சர்  சிறு வயதிலேயே ஆன்மீக விசயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தவர் மற்றும் பல அற்புத சக்திகளைக் கொண்டவர். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்ததோடு  அதனை  வலியுறுத்தியவர். குருவை மிஞ்சிய சீடனாக விவேகானந்தரும் இளமை முதலே காசியில் இருக்கும் கைலாயநாதரின் தவக்கோலத்தை சிலையுருவில் விரும்பி வழிபட்டதால் தானும் துறவியாக வேண்டும் என்பதில் நாட்டம் அதிகமானது. தியானத்தில் அதிக ஈடுபாடு கொண்டு தன் ஆன்ம சக்தியையும் பெருக்கிக் கொண்டிருக்கிறார். பாம்பு ஊர்வது கூட அறியாமல் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி முத்தெடுத்தவர். இந்த ஆத்ம ஞானம் பலருக்கும் வழிகாட்டியாக, ஆசைக் கடலில் அகப்பட்டு அல்லற்பட இருந்தோரை  மீட்டு இறைவழியில் செலுத்தி நித்திய இன்பம் காணச்செய்தது.

 

இதெல்லாம் இருக்க, இன்றும் இளம் வயதிலேயே துறவறம் வாங்குவதென்பது,, குடும்பத்தையும், உலகியல் இன்பங்களையும் விட்டு ஒரு குறுகிய எல்லைக்குள் தங்கள் வாழ்க்கையை முடக்கிப்போடுவதாக தோற்றம் ஏற்படுத்துகிறது. வெகு சமீபத்தில் அப்படி ஒருவரைச் சந்தித்தபோது என்னுள் எழுந்த பல கேள்விக்கணைகளுக்கு  பொறுமையாக அவர் பதில் சொன்னவிதம் ஏதோ இருப்பதை உணர்த்தத்தான் செய்தது. மீனாட்சி இன்று குகப்பிரியானந்தாவாகி, விரைவிலேயே , இன்னும் ஓராண்டுகால படிப்பு முடிந்தவுடன்,  பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டதன் அச்சாரமாக  சித்த வித்தியானந்தா  என்ற பட்டத்தையும் வெல்லப்போகும் இவருக்கு இந்த எண்ணம் தோன்றியது தன் 13 வயதில் என்கிறார். சுவாமி தயானந்த சரசுவதி அவர்களின் ஆசிரமத்தில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இவரைச் சந்தித்தபோது, வணங்கி ஒதுங்கி நிற்க வேண்டியவர் என்பதில்லாமல், ஒரு தோழமை உணர்வே ஏற்பட்டது. ஒரு சிறு வியாபாரியின் மகளாக, வேலூரில் பிறந்து வளர்ந்த இவருக்கு, துறவறம் என்பது என்ன என்று தெரிந்துகொள்ளும் தேடல் ஆரம்பித்திருக்கிறது. வேலூரில் அடிக்கடி வாரியார் சுவாமிகளின் சமயச் சொற்பொழிவு நடைபெறும் காலம் அது. மாலை நேரங்களில் இது போன்று எங்கு சமய சொற்பொழிவுகள் நடந்தாலும் தவறாது கலந்து கொள்வது வழக்கமாகியிருக்கிறது. பள்ளியிறுதி வகுப்பு முடித்தவுடன் இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து துறவறத்தில் ஈடுபடும் எண்ணம் தோன்றியிருக்கிறது. துறவறத்திற்கான மிகவும் இள வயது என்பதால் ஒரு வருடம் குழந்தைகள் பள்ளியில் சேவை செய்துகொண்டு பயிற்சி எடுத்தபின்பு மடத்தில் சேரலாம் என்றிருக்கிறார்கள். ஒரு வருடம் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டு சில அடிப்படைப் பயிற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார். அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் சேலம் சாரதா கல்லூரி மடத்தில் சென்று தன்னை இணைத்துக்கொண்டு பி.ஏ. வகுப்பில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் முடிப்பதற்குள் பிரம்மச்சரியத்திற்கான அடிப்படை பயிற்சிகள் அனைத்தும் முடித்து, பகவத்கீதை, வேதாந்தம் என ஓரளவிற்கு தேர்ச்சியும் பெற்றிருக்கிறார். சேர்ந்த புதிதில் ஒரே வண்ண மஞ்சள் நிற சேலை மட்டுமே உடுத்த வேண்டும். அதன் பிறகு 10 ஆண்டுகள்  சைதன்யா என்கிற வெள்ளை சேலையில் சிகப்பு கரை  வைத்த  சேலை உடுத்த வேண்டியிருந்தது.  பின் 2000ம் ஆண்டில்  தன்னுடைய 35 வது வயதில் பிரம்மச்சரிய தீட்சை எடுத்த பின்பு காவி உடை வழங்கப்பெற்றிருக்கிறார். புருச சுத்தம் நாராயண சுத்தம், பிரம்ம சுத்தம்,  தேவாரம் திருவாசகம், இராமலிங்க அடிகளார், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்ற அனைத்திலும் தேர்ந்த ஞானம் கொண்டிருக்கிறார் அம்மையார்.

 

அன்றாடம், விடியற்காலை 4. 30 மணி முதல்  5.30 வரை பிரார்த்தனை செய்து, 5.30 முதல் 6.30 வரை பூ பறித்தல், பின் 7.30 மணி வரை உடற்பயிற்சி யோகா என அனைத்தும் முடித்து, 7.30 மணி முதல் 8 மணி வரை  சுவாமி சித்பவானந்தா அவர்களின் விளக்க உரைகளுடன் மந்திர உச்சாடணைகளை  முடித்து காலை 8 மணிக்கு காலை உணவு, அதன் பின் 9 மணிக்குள் அவரவர் பணியிடங்களுக்குச் செல்ல வேண்டும். 12.30 முதல் 2 வரை ஓய்வு பிறகு மீண்டும் மதியப் பணிக்குத் திரும்ப வேண்டும். மாலை 5 முதல் 6.30 வரை பிரார்த்தனை 7 மணி முதல் 7.30 வரை  மடத்திற்குள் இருக்கும் பணிகள்,. 8 மணி  வரை தியானம். அதற்குப் பிறகு இரவு உணவு, பின் ராமகிருஷ்ணர் உபதேசம், ஏனைய மகான்கள் வாழ்க்கை முறைமைகள் பற்றிய உபதேசம். 9.30 வரை நடக்கும் . பிறகு 10 மணிக்கு உறக்கம். அடுத்த நாள் இதே வழமையாக நின்று, நிதானிக்க, யோசிக்க நேரமில்லாத இடைவிடாத இறைப்பணி.  கைக்குத்தல் அரிசி, மசலா பொருட்கள் தவிர்த்த கட்டுப்பாடான உணவு. குறிப்பிட்ட காலங்களுக்கொரு முறை   பணியிடம் மாற்றம்.  இதுவரை 11 பணியிடங்கள் மாறியிருக்கிறார்.

 

தற்போது ஆணைக்கட்டியில் உள்ள தயானந்த சரசுவதி ஆசிரமத்தில்  இருக்கிறார்.  இங்கு முழுவதும் தத்துவார்த்த வகுப்புகளுக்குத்தான் முதலிடம் என்கிறார்.  தன்னுடைய மதம் சார்ந்த கொள்கையை அறிந்து கொள்ள வேண்டியே ஒருவர்  வேதம் படிக்க வேண்டியது  அவசியமாகிறது.  சங்கர பாஷ்யம் என்ற மூல நூலிலிருந்து கீதை விரிவுரைகள், பதவுரைகள்  தயானந்த சுவாமிஜி பாரம்பரியத்தோட சொல்லிக்கொடுப்பதற்கு. ஈடு இணை இல்லை என்கிறார். வெளிநாட்டவர் 50 க்கும் மேற்பட்டவர் வந்து நமது வேதமும், கலாச்சாரமும் கற்று கொள்கின்றனர் என்பவர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இங்கு வந்து வேதம், சமஸ்கிருதம் மற்றும் நம் கலாச்சாரம்  பற்றி படிக்க வருபவர்களுக்குத் தேவையான உதவியை அவர்களுடைய அரசாங்கம் வழங்குகிறதாம். ஆனால் நம் நாட்டில் அது போன்ற உதவியோ, அல்லது கிருத்துவ மதம் மற்றும் இசுலாமிய மதத்தில் புனித யாத்திரை செல்வதற்கு உதவுவது போல நம் இந்து மதத்தில் புனித யாத்திரை செல்வதற்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை என்ற வருத்தமும் இருக்கிறது. இந்திய பொருளாதாரமே அதற்கு எந்த விதத்திலும் சாதகமாக  இல்லை என்கிறார். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வந்தும்  சந்நியாசம் வாங்குகிறார்களாம். அதற்கு அவர்கள்   முதலில் சட்டப்படி விவாகரத்து வாங்கினால்தான் செல்லுபடியாகும் என்ற ஆச்சரியமான தகவலும் கொடுக்கிறார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருவரும் விவாகரத்து பெற்ற பின்பே சந்நியாசம் பெறுவதற்கு அவர்கள் தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்.

 

இத்துனை சிரமப்பட்டு பெறும் சந்நியாசத்தினால் மக்களுக்கு என்ன பயன் என்பதே நமது சந்தேகம். இதை அவரிடமே நான் கேட்டபோது, அவருடைய தெளிவான பதில், “வேதாந்தம் என்பது  அடுத்தவருக்கு சொல்லித்தருவதற்காக  படிப்பது அல்ல. பணிந்தும் கேட்டும் பணிவிடை செய்தும் வந்து கேட்போருக்குச் சொல்லிக் கொடுத்தால் போதும்.. உன்னதமான  வேத பாடத்தை அப்படி எளிதாகப் பெற  முடியாது. அதற்கான தகுதியுடையவர்கள் மட்டுமே அதனை உணர்ந்து கற்க முடியும் ” என்பதே எங்கள் குருவின் வாக்கு என்கிறார்.

 

‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்றால் இப்படி இத்துனை வேதப்பாடம் அனைத்தும் கற்பதோடு நின்று அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லாமல் போகிறதே, என்று கேட்டபோது,

 

பிரேமானந்தா,  நித்தியானந்தா, சங்கர் பாபா, கல்கி போன்ற விஷப்பூடுகளின் வளர்ச்சி உண்மையில் நல்லனவற்றை பகுத்தாய்ந்தறியும்  சக்தியை பாழாக்குகிறது. அதனால் மக்களிடையே நம்பிக்கை குறைந்து வருவதால் எங்களாலும் எளிதாகச் சென்று மக்களுக்கு தொண்டாற்ற முடியாமல் போகிறது. குறிப்பாக வட நாடு மற்றும் ஆந்திரா போன்ற இடங்களில் இருப்பதைக்காட்டிலும், தமிழ்நாட்டில் அதன் பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது, என்கிறார். தங்கள் குருவின் வாக்குப்படி,  ‘காடு முழுவதும் முட்கள் நிறைந்திருக்கும் போது அதனைச்  சுத்தம் செய்ய ஒருவருக்கு ஒரு பிறவி போதாது. அதனால் செருப்பு போட்டுக்கொண்டு கடந்து செல்வதே புத்திசாலித்தனம். அறியாமை மட்டுமே இன்றைய  இத்தகைய நிலைக்கு பெரும் காரணமாக இருக்கிறது.  அந்த அறியாமை முதலில் விலக வேண்டும். அதற்கு தெளிவான சிந்தனை வேண்டும். நம்மைச் சுற்றி தெய்வீக அலை பரவ வேண்டும். சந்நியாசிகளைச் சுற்றி இருக்கும் அந்த தெய்வீக அலை பல மாற்றங்களை ஏற்படுத்தவல்லது என்று இவர் சொல்வதை முழுமையாக ஏற்க மனம் ஆதாரத்தைத் தேடுகிறது! கர்ம யோகமோ, பக்தி யோகமோ அல்லது ஞான மார்க்கமோ, எதுவாயினும் அவரவர் தர்மப்படி வாழ  வேண்டும் என்பதே கீதை. காட்டும் பாதை. எடுத்துக்கொண்ட வாழ்க்கையை  முறைப்படி வாழ வேண்டும்.

 

இறுதியாக  சித்து வேலை என்று அம்மையார் வர்ணித்த விசயங்கள் பற்றி மீண்டும் கேட்டபோது, லிங்கம், திருநீறு போன்றவைகள் வரவழைக்கும் வித்தகம்  பார்ப்பதற்கு ஆச்சரியம் அளிப்பதாகவும், நம்பிக்கைக்கு உரியதாகவும் தென்படலாம்.  ஆனால் அது தெய்வ சக்தியின் உச்ச நிலையை அடைவதற்கு பெருந்தடையாக இருக்கக்கூடியது. அதாவது, முள்ளுச் செடியைச் சாப்பிடும் ஓட்டகம்  தன் இரத்தத்தின் சுவைதான் அது என்ற உணர்வே இல்லாமல் அதை இரசித்து  ருசித்து, மேலும், மேலும் உண்ணுகிறது. அது போலத்தான் இந்த சித்து விளையாட்டும், தன் சக்தியை தானே சுவைத்து மேற்கொண்டு உன்னத நிலைக்குச் செல்வதற்கு தடையேற்பட தானே காரணமாகிவிடுகிறார்கள். ஆனால் பொது நலம் கருதி, தன் சுயநலம் தவிர்த்து, சித்து மூலம் மானுட சேவையில் சிறந்து விளங்குவதும் ஒரு வகையில் பாராட்டுக்குரியதோ என்று கேட்டபொழுது, இப்படி எண்ணுவது முழுமையான அறியாமை என்கிறார். இந்த அறியாமை இருளைத்தான் போக்க வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம் என்கிறார். சந்நியாசம் பெறுபவர்கள் இந்த ஆன்ம பலத்தைத்தான் முதலில் பெற வேண்டியுள்ளது. மக்கள் எங்களை ஏற்கும் பக்குவம் வரும்போது நாங்களும் வெளியில் வந்து சேவை செய்யக் காத்திருக்கிறோம். ஆனால் அதற்கான சூழல் தற்போது இல்லை. போலிகள் ஏற்படுத்துகிற தீய அலைகளின் தாக்கம் முற்றிலும் மறைய வேண்டும் என்கிறார்.

 

“நம் இந்திய நாட்டின் முதுகெலும்பாக இருப்பது  ஆன்மீகம் . இதனாலேயே  தான் நம் இந்தியா சீரும், சிறப்புமாக வாழுகிறது. அந்த சக்தி என்றென்றும் நம் நாட்டை வாழவைக்கும் என்பதில் ஐயமில்லை. எவரும் வந்து வாழ வைக்க வேண்டிய நிலையில் நம் இந்தியாவும், நம்முடைய இந்து மதமும் இல்லை. இதனை வெளிநாட்டவர் புரிந்து கொண்டுள்ள அளவிற்கு நம் நாட்டவர் உணரவில்லை என்பதுதான் வேதனை. அவர்கள் நம் நாட்டிற்கு வந்து, மூன்று மாதங்களுக்கு மேல் வாழத் தகுதியில்லாவிட்டாலும், திரும்பத் திரும்ப சிரமப்பட்டு விசாவை புதுப்பித்துக்கொண்டு, தங்கியிருந்து நம் வேதங்களையும், கலாச்சாரங்களையும், பாரம்பரியங்களையும், பணிவுடன் கற்றுக் கொள்வதோடு தங்கள் நாட்டிலும் சென்று நம் கலாச்சாரத்தின் பெருமையை பரவச் செய்கிறார்கள் என்பதே நாங்கள் காணும் உண்மை நிலை. ஆனால், 5000 – 10,000 ஆண்டுகள் பழமையான  நம் பாரம்பரியத் தத்துவங்களை முழுமையாகப் படித்துணர்ந்து, அதனை ஆத்மார்த்தமாக, தவறின்றி  சொல்ல சரியான ஆளில்லை என்பதுதான் இன்றைய நிலை. அதுதான் அறியாமை எனும் கழிவுகள் நிறைந்த பாத்திரமாக மாறி இருக்கிறது. தப்பைச் சொல்லி புரிஞ்சிக்கிட்டிருக்காங்க.. காலிப் பாத்திரமாக இருக்கும்போது நல்லவைகளை நிரப்ப எளிதாக இருக்கும். ஆனால் இன்று அல்லவைகளை வெளியேற்றவே பல காலம் வேண்டும் போல் உள்ளது. பகவானின் அருளால் அது நடக்கும் வரை காத்திருக்க வேண்டும்” என்கிறார்.

 

ஆரம்பத்தில் தோழமை உணர்வு மட்டுமே உந்தித்தள்ள அதன் போக்கிலேயே அமைந்த காரசாரமான விவாதங்கள், இறுதியில் பல மாற்றங்கள் ஏற்படுத்தியது. ஒரு வேளை இதைத்தான் தெய்வீக அலை என்கிறாரோ என்று எண்ணத்தோன்றியது. நல்ல சுத்தமான எண்ணங்கள்தானே தெய்வீக அலை என்பது? என் பாத்திரத்தை காலியாக்கிக்கொண்டு, காலில் விழுந்து ஆசி பெற்று திரும்பினேன்.

—————-

Series Navigationமருத்துவக் கட்டுரை இளம்பிள்ளை வாதம்சேவை
author

பவள சங்கரி

Similar Posts

19 Comments

  1. Avatar
    murali says:

    பிரேமானந்தா, நித்தியானந்தா, சங்கர் பாபா, கல்கி,jeyandrar போன்ற விஷப்பூடுகளின்-“They provide all source of happiness to their followers,in all sought of means, why you are commenting badly about them”. Happiness is the main source to elevate body and soul to an eternal subconscious state which leads the spirit to a divine state”.

  2. Avatar
    murali says:

    மக்கள் எங்களை ஏற்கும் பக்குவம் வரும்போது நாங்களும் வெளியில் வந்து சேவை செய்யக் காத்திருக்கிறோம்.

    “yes you are right,our public hospitals and diseased and poor people needs help and attention”. I haven’t seen a HINDU MONK/MISSIONARIES touching pampering and helping the needy and diseased (exemption is christian monks/missionaries).

    “WE NEED YOUR SERVICE RIGHT NOW DIVINE PEOPLE – COME OUT RENDER YOUR SERVICE TO HUMANITY OR AT LEAST TO ANIMALS”

  3. Avatar
    பவள சங்கரி says:

    தீய சக்திகளை ஒதுக்கி நல்ல சக்திகளை மக்கள் உணரும் காலம் விரைவில் வரும், அப்போது நல்ல சக்திகளின் பலாபலன் மக்களை வந்து சேரும் என்ற நம்பிக்கை அம்மையாரின் அழுத்தமான வார்த்தைகளில் ஆணித்தரமாக வெளிப்பட்டது. அந்த இனிய தருணத்திற்காக, நல்லதொரு மாற்றத்திற்காக காத்திருக்க வேண்டும்.

    அன்புடன்
    பவள சங்கரி

  4. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பு சஹோதரி பவளசங்கரி,

    பூஜ்ய குஹப்ரியானந்தா அவர்கள் பற்றியதான வ்யாசத்திற்கு வாழ்த்துக்கள்.

    \ அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்ததோடு அதனை வலியுறுத்தியவர். \

    உயர்ந்த ஹைந்தவ சிந்தனை. பாரதீய சிந்தனை. இந்த சிந்தனையின் ஒரு துளி இதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஆப்ரஹாமிய பாலைவன சிந்தனையில் விழுந்தால் உலகத்தில் அமைதி நிரந்தரமாக நிலவும்.

  5. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ எவரும் வந்து வாழ வைக்க வேண்டிய நிலையில் நம் இந்தியாவும், நம்முடைய இந்து மதமும் இல்லை.\

    என் புரிதலின் படி ஒரு அபிப்ராய பேதம், அம்மணி.

    சைவம், வைஷ்ணவம், சாக்தம், பௌத்த, ஜைன, சீக்கிய மற்றும் எண்ணிறந்த நாட்டார் வழிபாடுகள் போன்றவை அடக்கிய தொகுப்பு ஹிந்து மதம்.

    தர்மத்தை அடிப்படியாகக் கொண்ட வாழ்க்கை எல்லாவற்றுக்கும் பொது. ச்ரமண சமயங்களில் ப்ராக்ருதமாக மருவி தர்மம் தம்மம் எனப்படுகிறது.

    தர்மம் என்ற சம்ஸ்க்ருத பதத்திற்கு தாரயதி இதி தர்ம: எனவும் த்ரியதே இதி தர்ம: எனவும் விளக்கங்கள் சான்றோர்களால் சொல்லக்கேட்டிருக்கிறேன். அதாவது எது தாங்குகிறதோ மற்றும் எது தாங்கப்படுகிறதோ அது தர்மம். That which sustains as well as sustained.

    எவரும் வந்து வாழ வைக்க வேண்டிய நிலையில் நம் ஹிந்து மதம் இல்லை என்பது உலகத்தில் ஜீவாதாரமாக இருப்பது தர்மம் என்றளவில் சரி.

    ஆயினும் தாங்கப்படுகிறது என்றளவில் நம் கடமைகள் சுட்டப்படுகிறது. தர்மத்தின் படி ஒழுகி தர்மத்தைக் காக்க வேண்டும்.

    தர்மோ ரக்ஷதி ரக்ஷித: – தம்மைக் காப்பவரை தர்மம் காக்கும்.

    என்பதை சுட்ட விரும்புகிறேன்.

    \ தீய சக்திகளை ஒதுக்கி நல்ல சக்திகளை மக்கள் உணரும் காலம் விரைவில் வரும், அப்போது நல்ல சக்திகளின் பலாபலன் மக்களை வந்து சேரும் என்ற நம்பிக்கை அம்மையாரின் அழுத்தமான வார்த்தைகளில் ஆணித்தரமாக வெளிப்பட்டது. அந்த இனிய தருணத்திற்காக, நல்லதொரு மாற்றத்திற்காக காத்திருக்க வேண்டும். \

    இந்த வாசகத்தில் நற்சக்திகளிடம் அபிலாஷிக்கப்படும் – தொக்கி நிற்கின்ற — இடைவிடாப்பணி அதையே சுட்டுகிறது.

  6. Avatar
    ஷாலி says:

    க்ருஷ்ணகுமார் says:
    October 2, 2013 at 9:44 am
     //உயர்ந்த ஹைந்தவ சிந்தனை. பாரதீய சிந்தனை. இந்த சிந்தனையின் ஒரு துளி இதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஆப்ரஹாமிய பாலைவன சிந்தனையில் விழுந்தால் உலகத்தில் அமைதி நிரந்தரமாக நிலவும்.//

    ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாத்தை கழுவி ஊத்தாவிட்டால் குடிக்கிற கஞ்சி இவருக்கு செரிக்காது. அன்று ஹிந்துஸ்தானத்தில் அறுபத்தினாலு தேசங்களும் ஒன்னோடு ஒன்னு அடித்துக்கொண்டு ஒற்றுமையில்லாமல் சிதறிக் கிடந்தார்கள். மங்கோல் வழி மொகலாயனும், ஆங்கிலேயனும் உள்ளே பூந்து ஒன்றாக்கி அமைதிப்படுத்தினார்கள்.இவர்கள் வந்ததால் எண்ணூறு வருடம் போரில்லாமல் மக்கள் அமைதியாக வாழ்ந்தனர்.இவர்கள் வராதிருந்தால் அறுபத்தினாலு தேச ராஜாக்களும் சண்டையிட்டே ஜனத்தொகையை குறைத்திருப்பார்கள். க்ருஷ்ணாஜி! பிரஸ்ஸரை ஏற உடாதிங்க! உடம்பை பாத்துக்கங்க.சுவரை வைத்துத் தான் சித்திரம்.

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      // ஆங்கிலேயனும் உள்ளே பூந்து ஒன்றாக்கி அமைதிப்படுத்தினார்கள்.இவர்கள் வந்ததால் எண்ணூறு வருடம் போரில்லாமல் மக்கள் அமைதியாக வாழ்ந்தனர்.இவர்கள் வராதிருந்தால் அறுபத்தினாலு தேச ராஜாக்களும் சண்டையிட்டே ஜனத்தொகையை குறைத்திருப்பார்கள். //

      இது, இது சூஊஊஊஊப்பர். இப்படித்தான் நடு நடுவில ஜோக் அடிச்சி சீரியஸ்னஸை குறைக்கணும்.

    2. Avatar
      paandiyan says:

      Thinnai editor is OK to publish the above contents but wants to block the genuine comments.
      //க்ருஷ்ணாஜி! பிரஸ்ஸரை ஏற உடாதிங்க! உடம்பை பாத்துக்கங்க.சுவரை வைத்துத் தான் சித்திரம்.

      //
      these type of comments Ok to publish!!!

  7. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஷாலி,

    Cool! இங்கு என்னால் பேசப்பட்டது கோட்பாடு – சிந்தனை.

    நீங்கள் பேசும் விஷயம் உங்களது கற்பனையான யூகங்கள்.

    உங்களுக்கு ஆப்ரஹாமியத்தின் மாற்றுமத சகிப்பின்மை கோட்பாடுகளை Shield செய்ய Red herring tactics வழக்கமாகக் கையாளும் விஷயம் தானே.

    We can exchange thoughts surely if you could say something relevant. good night.

  8. Avatar
    ஷாலி says:

    சகோதரி.பவள சங்கரி அவர்களே!
    திருமணத்திற்கு முன்னர் பிரமச்சாரியம், திருமணமானதும் கிரகஸ்தன், ஐம்பது வயதில் மனைவியுடன் புனிதத் தளங்களுக்கு செல்லும் வானபிரஸ்தான், இறுதியாக எல்லாவற்றையும் துறந்த நிலையை அடைந்த சந்நியாசி போன்ற நான்கு நிலைகளில், முதல் மூன்றில் பெண்கள் இருப்பினும் நான்காவதான சந்நியாசம் என்பது ஆண்களுக்கு மட்டும்தான். இது தான் வேத கலாச்சாரம். பெண்கள் துறவு நிலைக்கு ஏற்றவர்கள் அல்ல, வாழ்வில் எந்த ஒரு காலகட்டத்திலும் அவர்கள் தங்கள் பெற்றோர்கள், கணவர், சகோதரர்கள் அல்லது தங்களது வயது வந்த மகன்களுடனோ மாத்திரமே இருக்க வேண்டும். தனியான வாழ்வு அவர்களுக்கு வேத கலாசாரம் தரவில்லை. சந்நியாசம் அவர்களுக்கு இல்லை. முக்கியமாக கலி யுகத்தில் ஆண்களாயினும் சந்நியாசம் என்பதே தவிர்க்கப் படவேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. பருவடைந்த இளம்பெண் ஒரு போதும் திருமணம் முடிக்காமல் இருக்கலாகாது என்பதே வேதங்களின் அறிவுரை.

    எந்த ஹிந்து வேத கலாச்சாரத்தின்படி இவர்கள் துறவுத்தனத்தை பேணுகிறார்கள்? யாரும் எதுவும் செய்யலாம்.எந்த வேத ஆதாரமும் தேவையில்லை.ஆளாளுக்கு காவிகட்டி ஞானஉபதேசம் அருள் வாக்கை அள்ளித் தெளிக்கலாம்.இதுதான் நம் புண்ணிய பாரதத்தின் இந்து ஞானதரிசனம்!

  9. Avatar
    புனைப்பெய்ரில் says:

    இவருக்கு ( ப.ச ) இந்த பெண்மணி மகானாக தெரிவது போல், நித்தி, சங்கர் பாபா, கல்கி போன்றோர் மிகப் பெரும்பான்மையினருக்கு தெரிந்திருக்கலாம். ஏன் இந்த எகத்தாளமாய் பிறர் பற்றிய தாக்குதல்? அதுவும் போக, “உலகியல் இன்பங்களையும் விட்டு ” என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த போட்டோவிலேயே செழிப்பு இருக்கிறது. அப்படியே பணிவிடை சேவை செய்ய வேண்டுமென்றால், எத்தனையோ வழிகள் இருக்கின்றன… படித்து பிரம்மச்சாரியாக ஆக வேண்டும் என்பதல்ல…

  10. Avatar
    இராமசாமி says:

    தற்கால ஒளவையாருக்கு எனது வணக்கங்கள்.

  11. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஷாலி,

    \ முதல் மூன்றில் பெண்கள் இருப்பினும் நான்காவதான சந்நியாசம் என்பது ஆண்களுக்கு மட்டும்தான். இது தான் வேத கலாச்சாரம். பெண்கள் துறவு நிலைக்கு ஏற்றவர்கள் அல்ல, \

    ஒரு விஷயத்தை தவறு என்று சொல்வதை நான் ஆக்ஷேபிக்க மாட்டேன்…… அது ஆதாரம் சார்ந்து என்றால்…..One should be doubly sure before charging someone or finding fault with someone.

    நீங்கள் Challenge செய்வது ஸ்ரீ ராமக்ருஷ்ண மடத்தின் ஒரு முறைமையை. இதை Challenge செய்வதற்கு முன் அதற்கான proper homework செய்வது அவசியம். ஸ்ரீ ராமக்ருஷ்ண மடத்தினர் பெண்களுக்கோ ஆண்களுக்கோ ப்ரம்மசாரி தீக்ஷை அளிப்பது அல்லது சன்யாச தீக்ஷை அளிப்பது இத்யாதி விஷயங்களுக்கு க்ரமங்கள் இருக்கின்றன. நியதி நியமங்கள் க்ரியைகள் இருக்கின்றன. நீங்கள் ந்யாயமாக ஆக்ஷேபம் தெரிவிக்க விழைந்திருந்தால் …….

    ஸ்ரீ ராமக்ருஷ்ண மடத்து ப்ரக்ரியைகள் யாவை என விஜாரித்திருக்க வேண்டும்…… அவற்றை வாசித்து விஜாரித்து அறிந்திருக்க வேண்டும்……அவை ஏன் பிழையானவை என்று சொல்ல…..அதற்கு மாற்றாக எது சரி என்று சொல்ல வேண்டும்….. எது சரி என்று சொல்வது மட்டும் போதாது……எந்த க்ரந்தத்தின் படி நீங்கள் சொல்வது சரி அல்லது தவறு என்று நிர்த்தாரணம் செய்ய வேண்டும்.

    நீங்கள் இப்படி எல்லாம் Homework செய்த பிறகே இந்த தளத்து வாசகர்களை enlighten செய்திருப்பீர்கள் என நம்புகிறேன். ஆகவே நீங்கள் முத்து முத்தாக உதிர்த்த மேற்கண்ட வாசகங்களுக்கு கீழ்க்கண்ட வ்யாக்யானாதிகள் அளிக்கவும்.

    1) ஸ்ரீ ராமக்ருஷ்ண மடத்து ப்ரக்ரியைகளைப் பற்றி நீங்கள் வாசித்து அறிந்தது என்ன
    2) அவை *வேத கலாசாரப்படி* பிழையானவை என நிர்த்தாரணம் செய்ய நீங்கள் ஆச்ரயித்த க்ரந்தம் யாது? அதன் அத்யாயம் என்ன? ச்லோகானுக்ரமணிகை என்ன? ச்லோகம் யாது? அதன் பதவுரை ஆங்க்லம் அல்லது தமிழில்

  12. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஷாலி அவர்கள் ஹிந்து ஞான தர்சனத்தை கரைத்துக் குடித்து ஒரு பெரிய இயக்கத்தின் முறைமைகளையே கேழ்விக்கு ஆளாக்கியிருக்கிறார். அவரளவுக்கு சிறியேனுக்கு வாசிப்பறிவோ வினயாதி பூஷணாதிகளோ இல்லை. சாஸ்த்ர ஞானமும் இல்லை. பின்னும் நான் கேட்டறிந்தபடிக்கு பகிர வேண்டிய சில விஷயங்கள்.

    முதலில் ஹிந்து மதம் என்பது நான் முன்னமே சொல்லிய படி சைவ, வைஷ்ணவ, சாக்த, பௌத்த, ஜைன, சீக்கிய, எண்ணிறந்த நாட்டார் வழிபாடுகளின் தொகுப்பு. ஹைந்தவ தர்சனங்களில் – பலவற்றுக்கிடையே – ஒற்றுமைகளும் உண்டு வேற்றுமைகளும் உண்டு.

    சன்யாசம் என்பது யார் வாங்க வேண்டும் என்பதெல்லாம் அடுத்த படி. சன்யாசம் என்ற விஷயத்தையே நிந்திக்கும் வைதிக தர்சனங்களும் உண்டு. யாவஜ்ஜீவம் அக்னிஹோத்ரம் குர்யாத் – உயிருள்ள வரை அக்னிஹோத்ரம் – என்ற க்ரியை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடுள்ள பூர்வமீமாம்ச தர்சனப்படி – எது வரை க்ரியை செய்யும் சக்தி (கேட்டல், பார்த்தல், கை கால்கள் வேலை செய்யும் தகுதி உள்ளமை) இருக்கிறதோ — அதுவரை சன்யாசம் ஏற்றல் என்பதே நிஷேதமான கார்யம்.

    ப்ரம்மசர்யம், க்ரஹஸ்தம், வானப்ரஸ்தம், சன்யாசம் – இவை நாலு ஆச்ரமங்கள். ஆனால் ஒரொரு ஆச்ரமத்தையும் முழுமையாகத் தாண்டியபின் தான் சன்யாசமா? அல்லது ப்ரம்மசர்யத்திலிருந்து சன்யாசம் என்ற ஆச்ரமத்துக்குச் செல்லலாமா — இது ஸ்ம்ருத்யாதி க்ரந்தங்கள் சார்ந்து விசாரிக்கப்பட வேண்டிய விஷயம். அபிப்ராய பேதங்கள் விவித சம்ப்ரதாயங்கள் சார்ந்து உண்டு.

    சன்யாசம் என்றவுடன் — அதன் அடையாளங்கள் – காஷாயம் – தண்டம் – இத்யாதியெல்லாம் நினைவுக்கு வரும்.. இப்படி அடையாளத்துடன் இருப்பவர்கள் தான் சன்யாசிகளா? ஆம்…இல்லை…இரண்டும் சொல்லலாம். மோக்ஷகாமனாய் முறைப்படி சன்யாசம் வாங்குபவர்கள் – சர்வ கர்ம பரித்யாக சன்யாசம் வாங்கியிருந்தாலும் — சில சன்யாச ஆச்ரம நியமங்களை – ஒழுகுதல் என்பது சாஸ்த்ரங்களால் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் தன்னை உணர்ந்த – மறந்த நிலையில் இருக்கும் ஞானிகள் – க்ருஷ்ணசைதன்ய மஹாப்ரபு, சேஷாத்ரி ஸ்வாமிகள், ரமண மகரிஷி அவருடைய சிஷ்யரான முருகனார் – இவர்கள் போன்றோர் — எல்லாம் துறந்த என்ற நிலையில் இருப்பினும் — ஆச்ரம அடையாளங்களுக்கு முழுமையாக உட்பட்டு இருந்ததில்லை. ஆயினும் சாஸ்த்ரமறிந்த பெரியோர் இவர்கள் நிலையுணர்ந்து….அதை அதிக்ரமமாக நிஷேதித்ததுமில்லை.

    ஆக சன்யாசம் என்பது ஒரு நிலை. எல்லாக் கர்மங்களையும் துறந்த நிலை. அந்த நிலையில் அடையாளங்களுடனும் ஒருவர் இருக்கலாம் அவையின்றியும் இருக்க வாய்ப்புண்டு. பெண்களுக்கான சன்யாசம். மனிதனாகப் பிறந்த எவரும் ப்ரம்ம ஞானத்தை அடைய முடியும். அடையவேண்டும் என்று பாஷ்யாதிகள் சொல்லுகின்றன. ஆண்கள் பெண்கள் உட்பட. மைத்ரேயி கார்கி போன்ற பெண்மணிகள் தர்மவ்யாதன் என்ற கசாப்பு வ்யாபரி உட்பட பாஷ்யாதிகளில் ஞானிகளாகச் சொல்லப்படுகின்றனர். ஆக பெண்களும் சன்யாசம் என்ற நிலையில் இருப்பது சாத்யமே.

    வேதத்தை ஆச்ரயமாகக் கொண்ட எல்லா சம்ப்ரதாயத்திலும் இதை எல்லாரும் ஏற்கிறார்களா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எல்லா சம்ப்ரதாயங்களுக்கும் அலகீடுகள் ஒரே மாதிரி இல்லை என்பதன் புரிதல் இருந்தால் இது புரியும். சன்யாசிகள் வைத்திருக்கும் தண்டத்தில் கூட ஏக தண்டம் த்ரிதண்டம் என வித்யாசங்களும் உண்டு. அவை அந்தந்த சம்ப்ரதாயம் சார்ந்து அதனதன் தர்ம க்ரந்தங்கள் சார்ந்த விஷயங்கள். எந்த சம்ப்ரதாயத்திற்கு எந்த க்ரந்தங்கள் ஆதாரமோ அதன் அதன் படி விதிகள் நிஷேதங்கள் அமைகின்றன. சில சம்ப்ரதாயங்களில் பெண்களுக்கு துறவறம் உண்டு. சிலவற்றில் இல்லை.

    பௌத்தத்தில் ப்ராரம்பத்தில் பெண்களும் பிக்ஷுணிகளாக இருந்தனர். மஹாயானத்தைச் சார்ந்த– இவர்களில் – சில பிக்ஷுணிகளின் க்ரந்தங்கள்– இன்றளவும் கிடைக்கின்றன. ஆனால் இன்றைக்கு வஜ்ரயான பௌத்த சம்ப்ரதாயத்தில் பெண் பிக்ஷுணிகள் இல்லை. தேராவாதத்திலும் இல்லை என்றே அறிகிறேன். மற்றைய பௌத்த சம்ப்ரதாயத்தில் உண்டா தெரியவில்லை.

    ஜைன சம்ப்ரதாயத்தில் க்ரமப்படி இன்றளவும் பெண்கள் சன்யாசம் ஏற்பது புழக்கத்தில் இருக்கிறது.

    இவையெல்லாம் கோட்பாடு சார்ந்த விஷயங்கள். நான் பெரும்பாலும் கேட்டறிந்தவை. இதில் பிழையானவற்றை விஷயமறிந்தவர்கள் ஆதாரங்கள் சார்ந்து மறுத்தால் அவசியம் சிறியேனுடைய பிழைகளைத் திருத்திக் கொள்வேன்.

  13. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ம்…..சஹோதரி ஸ்ரீமதி பவளசங்கரி அவர்கள் பூஜ்ய சித்தவித்யானந்தா அவர்களைப் பற்றி இந்த வ்யாசத்தில் ப்ரஸ்தாபித்துள்ளார். அக்காலத்தில் துறவேற்ற காரைக்காலம்மையார் எனக்கு நினைவுக்கு வருகிறார். அம்மணி, மங்கையர்க்கரசியாரும் துறவறம் எற்றாரோ? விளக்கவும். இன்றைக்கு என் மனதில் ப்ரகாசமாக பெண்மணிகளில் துறவறம் என்றதும் நினைவுக்கு வருவது பலருடைய ஹ்ருதய சிம்ஹாசனஹ்தில் வீற்றிருக்கும் பூஜ்ய மாதா ஸ்ரீ அம்ருதானந்தமயீ அம்மை அவர்கள். இன்னமும் பல நூறு ஆயிரம் பேர் இருக்கலாம். உடன் நினைவுக்கு வருபவர் பூஜ்ய மாதா அவர்களே.

  14. Avatar
    ஷாலி says:

    க்ருஷ்ணாஜி! என்ன எழுதுகிறீர்கள்? ஸ்வாமீ! நான் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் நீங்கள் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்கிறீர்கள். பெண் துறவறத்திற்கு வேத கால ஹிந்து மதத்தில் ஆதாரம் இல்லை என்பது என் கருத்து.இதை நீங்கள் மறுத்தால்,வேறு ஒன்னும் செய்யத் தேவையில்லை.ரிக்,யஜுர்,சாம,அதர்வண வேதத்திலிருந்தோ,அல்லது மனுஸ்மிருதி இருந்தோ ஒரு ஸ்லோகத்தை எடுத்துப்போட்டு ஆதாரம் காட்ட வேண்டும்.அதை விடுத்து நீண்ட எழுத்து கதா காலட்சேபம் பண்ணக்கூடாது. வேதகால ஆதாரம் கேட்டால், நமது கஷ்டகால கலிகால ஆரிய சமாஜம்,பிரம்ம சமாஜம், ஸ்ரீ இராமகிருஷ்ண மடம்,காரைக்கால் அம்மையார்,பிரம்மகுமாரிகள்,ஆனந்தமாயீ என்று இன்றைய கார்பரேட் காவிகளை அடுக்குவது சரியா? நான் கேட்ட கேள்வியையே திருப்பி பதிலாக எனக்குத் தருவது சரியில்லைஜி. சரி…சரி..உங்கள் நிலைமை புரிகிறது.நான் உதவி செய்கிறேன். “இந்து மதமானது ஆபிரஹாமிய மதங்களைப்போல் இறுக்கமான கட்டுக்குள் உள்ளதல்ல, அது காலதேச வர்த்தமானங்களுக்குத் தகுந்தார்ப்போல் வளைந்து நெகிழும் தன்மை உடையது. வேத காலத்திலிருந்த உடன்கட்டை என்னும் சதி,பால்ய விவாஹம்,விதவா விவாகம்,தேவதாசி போன்றவைகளை, இக்காலத்திற்கு தகுந்தாற்போல் தடுத்து ஒழித்தது. வேத காலத்தில் பெண் துறவறம் இல்லை.இன்றைய இருபதாம் நூற்றாண்டில் பெண் விடுதலை,சமத்துவம் பேசப்படுவதால் ஆணுக்கு சமமாக பெண்களும் துறவறம் பேண இந்துமதம் இன்று வாய்ப்பளிக்கிறது.” என்ன ஸ்வாமீ! நான் சரியாக சொல்லிட்டேனா

  15. Avatar
    suvanappiriyan says:

    துறவறம் என்பது இந்து மதத்திலும் இரு மாறுபட்ட கருத்துகளில் வேதங்களில் வந்துள்ளது. கிறித்தவத்திலும் துறவறம் சொல்லப்பட வில்லை. பிற் காலத்தில் உண்டானது. இஸ்லாம் துறவறத்தை கண்டிக்கிறது. அந்த காலத்தில் இது போல் துறவறம் போக முயற்சித்தவர்களை முகமது நபி கண்டித்துள்ளார். குறிப்பிட்ட காலத்துக்கு மேல் அவனால் துறவறத்தை கடைபிடிக்க முடியாமல் பல தவறுகளில் வீழ்ந்து விடுவதை தினமும் நாம் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். எனவே இந்த காலத்திலும் குடும்பத்தை துறந்து, சந்நியாசம் செல்வது சரிதானா என்பதை சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.

  16. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஷாலி,

    \ பெண் துறவறத்திற்கு வேத கால ஹிந்து மதத்தில் ஆதாரம் இல்லை என்பது என் கருத்து.\

    உங்கள் கருத்துக்கு ஆதாரம் – ஆதாரம் – ஆதாரம் என்று ஏதேனும் உண்டோ என்று தான் அடியேன் கேட்டுள்ளேன். ஆதாரமே இல்லாது வெறும் வெறுப்பின்பாற்பட்டு உருவான கருத்து உங்களது என்பதை உங்கள் உத்தரம் ப்ரதிபலிக்கிறது.ஆதாரமே இல்லாது கருத்துக்களை அடித்து விடுவது ஒன்றும் உங்களுக்குப் புதிதல்லவே. அல்லது கூகுள குருகண்டாலை மேய்ந்து ஏதாவது ஒரு உரலைக் காண்பித்தால் முடிந்தது. அட்லீஸ்ட் அப்படியாவது ஏதாவது செய்திருக்கலாமே. ஸ்ரீ ராமக்ருஷ்ண மடத்தின் செயல்முறைகள் தவறு என்று அடித்து விடும் ஷாலி அவர்களிடமிருந்து அந்த மடத்தின் செயல்முறைகள் (சன்யாசம் சம்பந்தித்து) இன்னது என்று ஒரு வாசகம் கூட இல்லை. எதைத் தவறு என்று சொல்கிறோமோ அதைப்பற்றி அரிச்சுவடி கூட அறியாது இப்படித்தான் தெரியாத விஷயங்களைப் பற்றி எல்லாம் தெரிந்தது போல அடித்துவிட வேண்டும் என்பது உங்கள் நிலைப்பாடு போலும்.

    \ ஸ்வாமீ! நான் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்\

    ம்… வழி எங்கே கேட்டுள்ளீர்கள். பட்டுக்கோட்டைக்குப் போகும் வழி டில்லியிலிருந்து வடக்கே என்று அடித்துச் சொல்லிவிட்டு என்ற பாணியில் அடித்துச் சொல்வது போல் சொல்லிவிட்டு….வழி கேட்டதாகச் சொல்வது பொய்யல்லவா…..

    தேவரீர் *வேத கலாசாரம்* இது தான் சொல்ல வருகிறது என்று அடித்துச் சொல்லியுள்ளீர்கள். இது தான் சரி என்று அடித்துச் சொல்பவர்களுக்கு அடிப்படை அரிச்சுவடி பற்றிக்கூட ஒரு வார்த்தை எழுத முடியாமையை என்னென்று சொல்வது.

    இது தான் சரி என்று அடித்துச்சொல்பவர் ஆதாரம் பற்றி மூச்சுக் கூட விடமாட்டாராம். எனக்குத் தெரிந்தவரை தெரிந்தது என்று பகிர்ந்த நான் ஷாலி அவர்கள் போனபோக்கில் அடித்த விட்ட கருத்துக்கு அதற்கு ஆதாரமாக அல்லது மறுப்பாக ஆதாரம் காண்பிக்க வேண்டுமாம்.

    அன்பர் ஷாலி, மைத்ரேயி, கார்கி போன்றவர்கள் பெண்களே இல்லை என்று நீங்கள் சொல்லுவீர்கள். அப்புறம் அதற்கு என்னை ஆதாரம் அளிக்கச் சொல்வீர்கள். அப்படித்தானே.

    என்னே விதண்டா வாதம். பொலிக பொலிக.

  17. Avatar
    ஷாலி says:

    மஹாசயர் க்ருஷ்ணாஜி ரொம்ப கோபமாக இருக்கிறாற்போல் தெரிகிறது.இல்லையென்றால் Red herring,Argumentum,adhominem-போன்ற Fallacies மற்றும் வித விதமான Fallacies க்கு வந்திருக்க மாட்டார்.ஐயா, எனக்குத்தான் ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தின் அரிச்சுவடி தெரியவில்லை.உண்மைதான்.எல்லாம் தெரிந்த மஹா சயர் எடுத்து வெளக்கினால் வாசகர்கள் அனைவரும் அறிவதற்கு அது நல்ல வாய்ப்பாகுமே! போகட்டும்.நம்ம பொருளுக்கு வருவோம்.
    • //அன்பர் ஷாலி, மைத்ரேயி, கார்கி போன்றவர்கள் பெண்களே இல்லை என்று நீங்கள் சொல்லுவீர்கள். அப்புறம் அதற்கு என்னை ஆதாரம் அளிக்கச் சொல்வீர்கள். அப்படித்தானே.
    என்னே விதண்டா வாதம். பொலிக பொலிக.//
    க்ருஷ்ணாஜி! மைத்ரேயி,கார்கி,ஆணாகட்டும் அல்லது பெண்ணாகட்டும் ஆனால் அவர்கள் துறவிகள் இல்லை.அக் காலத்தில் வேத விளக்கம் அறிந்த பெண்மணிகள் இவர்கள்.யாஞ்யவல்கியர் முனிவரின் மனைவி ரிஷி பத்தினிதான் மைத்ரேயி,இவரது அண்ணன் மகள்தான் கார்கி.இருவரும் வேத ஞானம் நிறைந்த பெண்மணிகள்.அன்று ரிஷிகளும்,முனிவர்களும் கிரகஸ் தவர்களாக ரிஷிபத்தினிகளுடன் தபஸ் வாழ்க்கையை ஒழுகியவர்கள்.ஆண் ரிஷிகளுக்கே துறவறத்தை வேதம் விதிக்க வில்லை என்னும்போது பெண் துறவறம் எப்படி வரும்? ரிக் வேத சம்ஹிதையில் 26 பெண் ரிஷிகள் (ரிஷிகாக்கள்) அருளிய சூக்தகங்கள் உள்ளன.இவர்கள் பிரம்மவாதினி என்று அழைக்கப்பட்ட ரிஷிபத்தினிகள்.
    பிரம்மஞான தத்துவத்தை (Brahma jnana) கார்கி- பிரமச்சாரிய இளவயதிலும், சூடால- கிரகஸ்தர் நிலையிலும்,மைத்திரி- வனப்பிரஷ்தா நிலையிலும்,சுலபாயோஜினி- இறுதிக்கால சந்நியாசினி நிலையிலும் ஞானத்தை அறிந்தனர்.
    வேத காலத்தில் பெண்கள் எவரும் இளமையில் துறவியாகவில்லை.காரணம் வேதம் சொல்கிறது, தகப்பனானவன் தன் பெண் பிள்ளையை எட்டு வயதிற்குள் கன்னிகாதானம் என்னும் திருமணம் செய்து கொடுத்திடவேண்டும். என்று மனு சாஸ்த்திரம் கூறுகிறது.
    மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா
    பிதா பிபதி கோனிதம……
    வாழ்க்கையின் ரகசியத்தை சொல்லித்தந்த வேதங்களே கூட காமத்தை கட்டுப்படுத்த சொல்லவில்லை.
    வேதங்களின் தலையாயது எனும் ரிக் வேதம் 10 வது மண்டலத்தில் 129 வது சூக்தம் 4வது மந்திரம், “காமம் தான் உலகில் முதலில் பிறந்தது.காமம்தான் மனசுக்கு முதல் வித்து.அந்த மனசை வைத்து ரிஷிகள் தவத்தின் மூலம் இருக்கலுக்கும் இல்லாமல் இருத்தலுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தினர்.”
    அதர்வண வேதத்தின் 9 வது காண்டம் 2வது சூக்தம் 19-21வது மந்திரம் “உலகத்தில் முதலில் தோன்றிய காமம்சக்தி வாய்ந்தது.கடவுளோ,முன்னோர்களோ,மனிதர்களோ,அதற்க்கு நிகர் கிடையாது. ஓ காமமே! எல்லையற்ற பேரழகு கொண்டவன் நீ!….எல்லா உயிர்களிலும் நீ நிறைந்திருக்கின்றாய்…..சூரியன்,சந்திரன்,காற்று,அக்னி, ஆகிய எல்லா தேவர்களையும் விட நீ மேலானவன்.எப்போதுமே நீ மேலானவன்.” என்று காமத்தை வணங்குகின்றன அந்த ஸ்லோகங்கள்.
    சிற்றின்பத்தை நல்ல முறையில் அடைவது மூலமே பேரின்பத்தை அடைய முடியும் என்பதே வேதம் கூறுவது.துறவறம் மூலம் அல்ல குறிப்பாக பெண்கள்.

Leave a Reply to பவள சங்கரி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *