கூட்டறிக்கை: சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

author
11
0 minutes, 24 seconds Read
This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

 

 

2014 ஜனவரி 3-4ம் தேதிகளில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத் துறையும் பெண்கள் சந்திப்பும் (சென்னை) இணைந்து நடந்திய பெண்ணிய உரையாடல்கள் அரங்கு நிகழ்ந்தேறியது. இருநாட்களும் காலை 9 மணி – மாலை 4 மணிவரை வரையறுக்கப்பட்ட பங்கேற்பாளர்களிற்காக நிகழ்ந்த அந்த அரங்கு, இருநாட்களும் மாலை 5 மணி – 6.30 மணிவரை அனைவருக்குமான பொது அரங்காக அமைக்கப்பட்டிருந்தது. பொது அரங்குக்கான அழைப்புகள் இணையங்களில் வெளியிடப்பட்டிருந்தன. அனைவரையும் அழைக்கிறோம் என அழைப்பிதழில் குறிப்புமிருந்தது.

3ம் தேதி மாலை 5 மணிக்கு பொது அரங்கு ஊடறு இணையத்தள ஆசிரியர் ரஞ்சி (சுவிஸ்) தலைமையில் நடந்தது. அப்போது அரங்கினுள் ‘வெள்ளை வேன் கதைகள்’ ஆவணப்படத்தின் இயக்குனர் லீனா மணிமேகலையும் ஒளிப்பதிவாளர் அரவிந்தும் படத்தொகுப்பாளர் தங்கராஜும், ஊடறு இணையத்தள ஆசிரியர் ‘வெள்ளை வேன் கதைகள்’ குறித்தும் இயக்குனர் குறித்தும் ஊடறு இணையத்தளத்தில் அவதூறுகளை வெளியிட்டிருக்கிறார் என்றும் ஊடறு அந்த அவதூறுகளைத் திரும்பப்பெறவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். ஓர் எதிர்ப்புத் தட்டியை இயக்குநர் வைத்துக்கொண்டு தரையில் உட்கார்ந்திருக்க மற்றைய இருவரும் துண்டறிக்கையை அரங்கில் விநியோகித்துள்ளனர். துண்டறிக்கை விநியோகிக்கப்படுவது பேராசிரியர் வீ. அரசுவால் தடுக்கப்பட்டது. ஆட்களை வைத்து கலாட்டா செய்கிறாயா எனவும் வீ. அரசு கேட்டுள்ளார். விவாதத்தின் பின்பு வீ. அரசுவே துண்டுப் பிரசுரங்களைப் பெற்று விநியோகித்துள்ளார். எனினும் வெள்ளை வேன் படக் குழுவினர் ஊடறு ஆசிரியரை நோக்கி எழுப்பிய கேள்விக்கு எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை. மாறாக அ. மங்கை, தனிநபர்களுக்கிடையேயான பிரச்சினை இது என்று சொல்லியுள்ளார். பொது இணையத்தில் பிரசுரிக்கப்பட்ட அவதூறு அறிக்கை தனிநபர் பிரச்சினை ஆகாது என படக்குழுவினர் பதிலளித்தனர். நீதி கிடைக்காததால் நாளைய அரங்கிலும் வந்து எனது கோரிக்கையை வைப்பேன் என லீனா மணிமேகலை சொல்லியிருக்கிறார்.

அன்றிரவே பேராசிரியர் வீ. அரசு தொலைபேசியில் லீனா மணிமேகலையை அழைத்து “நாளை அரங்கத்திற்கு வந்தால், செய்ய வேண்டியதை செய்வேன்” என எச்சரித்துள்ளார். அதை உடனேயே லீனா மணிமேகலை முகப்புத்தகத்தில் பதிவும் செய்துள்ளார். எனவே மறுநாள் நடந்தேறிய வன்முறை நன்கு திட்டமிடப்பட்ட வன்முறையே என எங்களால் ஊகிக்க முடிகிறது.

மறுநாள் மாலை நிகழ்ந்த பொது அரங்கில் எழுத்தாளர் பாமா அவர்கள் உரையாற்ற வந்தபோது இடையீடு செய்த லீனா மணிமேகலை தன்னுடைய நேற்றைய கோரிக்கை இந்த அரங்கால் நிராகரிக்கப்பட்டதால் அதைக் குறித்துப் பேசுவதற்கு ஐந்து நிமிடங்களைத் தனக்கு வழங்குமாறு கேட்டிருக்கிறார். அரங்கிற்குத் தலைமை வகித்துக்கொண்டிருந்த எழுத்தாளர் புதிய மாதவி அவர்களும் அரங்கு நிறைவுற்றதும் பேசுவதற்கு நேரம் தருவதாகச் சொல்லியுள்ளார். அப்போது இடையே புகுந்து ‘மைக்’கைக் கைப்பற்றிக் கொண்ட வீ.அரசு, இது விளம்பரத்திற்கான உத்தி என்றும் உன்னதமான படைப்பாளிகளின் அரங்கில் லீனா மணிமேகலை தகராறு செய்கிறார் என்றும் சொல்லியுள்ளார். நான் உன்னதமற்ற படைப்பாளி என்றாலும் எனது கோரிக்கைக்குப் பதில் வேண்டும் என லீனா மணிமேகலை சொல்லியுள்ளார். அப்போது வீ. அரசு அரங்கிலிருந்த தனது மாணவர்களிடம் “இவள தூக்கி வெளியில போடுங்கடா” எனக் கட்டளையிட்டுள்ளார். தொடர்ந்து மாணவர்கள் லீனா மணிமேகலையையும் அவரது தோழர்களையும் உடல்ரீதியான வன்முறை உபயாகித்து அரங்கிலிருந்து வெளியேற்றியுள்ளார்கள். அங்கே புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த ஒருவர்        வீ. அரசுவால் அடிக்கப்பட்டு அவரது காமெராவும் அரசுவால் பிடுங்கப்பட்டது. எடுக்கப்பட்ட புகைப்படங்களை அழித்ததற்குப் பின்பாக காமெரா திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. அரங்குக்கு வெளியே வந்த வீ.அரசு “இது உங்களது இடம் நீங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம்” என மாணவர்களை மீண்டும் தூண்டிவிட அரங்குக்கு வெளியே இருந்த லீனா மணிமேகலையும் அவரது தோழர்களும் பல்கலைக் கழக வளாகத்திலிருந்தே மாணவர்களால் வன்முறையாக வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

பொது இலக்கிய அரங்கொன்றில் ஒருவரோ ஒரு குழுவோ இடையீடு செய்து தங்களது கோரிக்கையை வைப்பதையோ பேசுவதற்கு ஐந்து நிமிடங்கள் கேட்பதையோ ஜனநாய நெறிமுறைகளுக்கு எதிரான செயலாகவோ பொறுப்பற்ற கலாட்டாவாகவோ நாங்கள் கருதவில்லை. இத்தகைய இடையீடுகள் நமது இலக்கிய அரங்குகளிற்கு மிகப் பழக்கமானவையே. எழுப்பப்படும் கேள்விகளிற்கும் கண்டனங்களிற்கும் இடமளித்தும் பதிலளித்தும் தகுதியான இலக்கிய அரங்குகள் ஜனநாயக விழுமியங்களைப் பேணியுள்ளன. தவிரவும் அரங்கில் வீற்றிருந்த அ.மங்கை, சுகிர்தராணி , ரஞ்சி போன்ற ஆளுமைகள் இத்தகைய இடையீடுகளையும் கண்டனக்குரல்களையும் இலக்கிய அரங்குகளில் ஏற்கனவே எழுப்பியவர்களே. இத்தகைய ஜனநாயக மரபும் கருத்துச் சுதந்திரமும் பேராசிரியர் வீ.அரசு அவர்களால் உதாசீனம் செய்யப்பட்டிருக்கிறது. இலக்கிய அரங்குகளில் கருத்துகளிற்கு வன்முறையால் பதிலளிக்கும் மரபை அவர் தொடக்கிவைத்துள்ளார். அவரது மாணவர்களை வன்முறை அடியாட்களாக அவர் உருமாற்றியிருக்கிறார். இந்த வன்முறை நிகழ்ந்தேறியபோது அரங்கிலிருந்த முக்கியமான பெண்ணிய ஆளுமைகள் மவுனமாக இருந்து வன்முறைக்குத் துணைபோனது மிகவும் வருத்தத்திற்குரியது.

வன்முறையைத் தூண்டி நடத்திவைத்த பேராசிரியர் வீ.அரசுவையும், மவுனமாக இருந்து வன்முறைக்குத் துணைநின்றவர்களையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். நடந்தவற்றுக்குப் பொறுப்பேற்று பகிரங்க வருத்தம் தெரிவிக்க வேண்டுமென பேராசிரியர் வீ. அரசு அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம். “நீ சொல்லும் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை எனினும் அதைச் சொல்வதற்கான உனது உரிமையைக் காப்பாற்ற எனது உயிரைக் கொடுத்தும் போராடுவேன்” என்ற வால்டேரின் சொற்களை அவர் முன்னே வைக்கிறோம்.

 

 

 
தோழமையுடன்

 

முனைவர்.கே.ஏ.குணசேகரன்

ரமேஷ் பிரேதன் – கவிஞர்

ரேசல் வால்டேர் – மாநிலத்துணை செயலாளர் – விடுதலை சிறுத்தைகள் கட்சி

லஷ்மி மணிவண்ணன் – கவிஞர், சிலேட் ஆசிரியர்

லிவிங் ஸ்மைல் வித்யா – கவிஞர், நாடகவியலாளர்

ஓவியர் விஸ்வம்

ஓவியர் இளங்கோவன்

ஹரிக்கிருஷ்ணன் – எழுத்தாளர், மணல்வீடு ஆசிரியர்

கருணாகரன் – கவிஞர் (இலங்கை)

யவனிகா ஸ்ரீராம் – கவிஞர்

யாழன் ஆதி – கவிஞர்

ரியாஸ் குரானா – கவிஞர் (இலங்கை)

ஹெச் பீர் முகம்மது – எழுத்தாளர்

வெளி ரங்கராஜன் – நாடகவியலாளர்

அபிலாஷ் சந்திரன் – எழுத்தாளர்

இந்திரா காந்தி அலங்காரம் – எழுத்தாளர்

சாகிப்கிரான் – கவிஞர், தக்கை ஆசிரியர்

இளங்கோ கிருஷ்ணன் – கவிஞர்

லக்ஷ்மி சரவணக்குமார் – எழுத்தாளர்

ஓவியர் மணிவண்ணன்

வேல்குமார் – ஆய்வாளர்

அகநாழிகை பொன்வாசுதேவன் – எழுத்தாளர் – பதிப்பாளர்

மீரான் மைதீன் – எழுத்தாளர்

ரிஷான் ஷெரீஃப் – கவிஞர் (இலங்கை)

பழ. றிச்சர்ட் – அரசியற் செயற்பாட்டாளர் (இலங்கை)

புதுவிசை பெரியசாமி – கவிஞர்

பாலசுப்ரணியன் பொன்ராஜ் – எழுத்தாளர்

தங்கராஜ் – படத்தொகுப்பாளர்

மதியழகன் சுப்பையா – கவிஞர், திரைப்பட இயக்குநர்

ரஃபீக் இஸ்மாயில் – திரைப்பட இணை இயக்குநர்

அருண் தமிழ் ஸ்டூடியோ

ஓவியர் சீனிவாசன்

ஜெயச்சந்திரன் ஹஸ்மி – ஆவணப்பட இயக்குநர்

சுபா தேசிகன் – பத்திரிகையாளர்

ரேவதி – வெள்ளை மொழி

சுஜாதா – செயற்பாட்டாளர்

கார்த்திக் முத்துவளி – புகைப்படக் கலைஞர்

கவின் – கவிஞர்

சி.ஜெரால்டு – இயக்குநர்

ஜோஷுவா ஐசக் – இணைய செயற்பாட்டாளர் – விடுதலை சிறுத்தைகள் கட்சி

மகிழ்நன் – பத்திரிகையாளர்

ஜயசந்திரன் ஹஸ்மி – குறும்பட இயக்குநர்

நிரோஜன் – குறும்பட இயக்குநர் (இலங்கை)

கோபி ஷங்கர் – சிருஷ்டி மாணவர் இயக்கம்

ஜான் மார்ஷல் – சிருஷ்டி மாணவர் இயக்கம்

தினகரன் ரத்னசபாபதி – செயற்பாட்டாளர்

இளங்கோ ரகுபதி – தொலைக்காட்சி இயக்குநர்

முஷ்டாக் அஹமத் – வழக்கறிஞர்

செந்தூரன் ஈஸ்வரநாதன் – பத்திரிகையாளர்

பிரஸாந்தி சேகரம் – எழுத்தாளர்

நிலவுமொழி செந்தாமரை – வழக்கறிஞர்

அருண் பகத் – குறும்பட இயக்குநர்

லூசிஃபர் ஜெ வயலட்- எழுத்தாளர்

அரவிந்த் யுவராஜ் – பத்திரிகையாளர்

ஆர்த்தி – பத்திரிகையாளர்

இளவேனில் அ பள்ளிப்பட்டி – பதிப்பாளர்

ஒவியர் கார்த்திக் மேகா

இளவேனில் – பத்திரிகையாளர்

சுந்தரலிங்கம் கண்ணன் – மீடியா

சு.பாரதி – பத்திரிகையாளர்

கார்த்திக் ஆனந்த் – துணை இயக்குநர்

ஷீலா சக்திவேல் – பத்திரிகையாளர்

கார்கி மனோகரன் – கவிஞர்

கார்த்திகேயன் – பத்திரிகையாளர்

ப்ரீத்தி – பத்திரிகையாளர்

புதிய பரிதி – பத்திரிகையாளர்

ஸ்ரீநிதி வாசுதேவன் – மாணவர்

அன்றில் யாழினி – பள்ளி ஆசிரியர்

அருந்ததி – கவிஞர், திரைப்பட இயக்குநர் (ஃபிரான்ஸ்)

உமா ஷனிகா – செயற்பாட்டாளர் (ஜெர்மனி)

ராகவன் – செயற்பாட்டாளர் (லண்டன்)

சத்தியசீலன் நடேசன் – செயற்பாட்டாளர் (சுவிஸ்)

தர்மினி – கவிஞர்  (ஃபிரான்ஸ் )

சயந்தன் கதிர் – எழுத்தாளர் (ஸ்விஸ்)

தேவா – எழுத்தாளர் (ஜெர்மனி)

விஜி – செயற்பாட்டாளர் (ஃபிரான்ஸ்)

எம்.ஆர்.ஸ்டாலின் – செயற்பாட்டாளர்(ஃபிரான்ஸ்)

ஜீவமுரளி-எழுத்தாளர்(ஜெர்மனி )

விஜயன் – நாடகவியலாளர் (ஸ்விஸ்)

தனுஜா – செயற்பாட்டாளர்(ஸ்விஸ்)

தமயந்தி- கவிஞர் (நோர்வே)

பானுபாரதி – கவிஞர் (நோர்வே)

ஷோபாசக்தி – எழுத்தாளர் (ஃபிரான்ஸ்)

பத்மநாதன் நல்லையா – செயற்பாட்டாளர் (நார்வே)

ம.நவீன் – வல்லினம் ஆசிரியர் (மலேசியா)

மணிமொழி- வல்லினம் (மலேசியா)

சிவா பெரியண்ணன்ழி- வல்லினம் (மலேசியா)

கே.பாலமுருகன்- கவிஞர் (மலேசியா)

ஹரி ராஜலட்சுமி – எழுத்தாளர் (லண்டன்)

ஃபதீக் அசீரீரி- கவிஞர்(லண்டன்)

ராக்கி ராகவ் – ஆய்வு மாணவர் (லண்டன்)

 

 

 

 

 

 

 

 

Series Navigationதாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்கமலா இந்திரஜித் கதைகள்நோ செண்டிமெண்ட்ஸ் மம்மி!முப்பது ஆண்டுகளாகப் பேசவில்லைமருமகளின் மர்மம் – 12நவீன அரபு இலக்கியம் : எச்.பீர்முகமது நூல் அறிமுகம்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 42
author

Similar Posts

11 Comments

  1. Avatar
    IIM Ganapathi Raman says:

    இஃது ஒரு தரப்பு வாதம். இன்னொரு தரப்பு வாதமும் இங்கு எடுத்துவைக்கப்பட்டால் நமக்கும் எங்கே தவறு என ஓரளவுக்கு கணிக்கமுடியும்.

    புதிய மாதவி எதிர்தரப்புக்காரர். அவர் தன் தரப்பு வாதங்களை எடுத்துவைப்பார் என நம்புகிறேன்.

  2. Avatar
    ஷாலி says:

    லீனா மணிமேகலையின் அவை நடத்தையைப்பற்றி புதிய மாதவி தன் கருத்தை கடந்த பதிவில் தெரிவித்துவிட்டார்.

    //இப்போது தனது குறுக்கீட்டைக் குறித்துத் திரித்துச் செய்திகளை லீனா வெளியிட்டு வருகிறார். அவர் செய்த வன்முறை (உடல், சொல், செயல் ரீதியாக) பற்றிய பதிவே இல்லாமல் தன்னை ஒரு அப்பாவியாகக் காட்டிக்கொள்வதும் அவதூறுகளை அள்ளி வீசுவதும் அப்பட்டமான கயமை. அந்த இரு நாள் கலந்துரையாடல் நிகழ்வே அவரது ‘வெள்ளை வான் கதைகள்’ குறித்துத்தான் என்பது போலவும் அந்த சூழ்ச்சியை முறியடிக்கவே தான் அறப்போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் பதிந்து வருவது நகைப்புக்குரியது. தான் எடுத்த படம் குறித்த மோதலை மட்டும் மையப்படுத்தும் அவரது செயலுக்கும் அதைக் குறித்த வலைப்பதிவுகளில் எந்தவித சிந்தனையும் இன்றி பலரும் தத்தம் தீர்ப்புகளை வழங்கி மகிழும் நிலைமையையும்கண்டு தமிழகத்தில் நிலவும் அரசியல் உணர்வு பற்றி மனம் நோவது தவிர, வேறு வழி இல்லை.//

  3. Avatar
    புனைப்பெயரில் says:

    இது கும்பலின் கோளாறு. வெள்ளை வேன் குறித்து அந்த இணைய தளத்தில் எழுதப்படிருந்தால் அதை புறந்தள்ளலாம் அல்லது மறுப்புக்கருத்துத் தரலாம். ஆனால், இப்படி மூன்றாந்தரமாக ரவுடித்தனமாக ஒரு அரங்கினுள் நடக்கும் பிறிதொரு நிகழ்ச்சியில் சலம்பல் செய்வது கீழ்மையான மனநிலையே. பத்ரி சேஷாத்ரி, வெங்கட்சா, சு.சாமி, சோ, டாக்டர் ஜான்சன், மாலன், ஜெயமோகன், போன்றோர் அவை என்றால் இப்படி நாகரீகமற்றமுறையில் இருந்திருக்குமா என்றும் தோன்றுகிறது. லீ.மணிமேகலை தன்னை பெண்ணிய (!) பிரதிநிதியாக கொஞ்சகாலம் காட்டினார். உலகமெங்கும் பல அவைகள் உண்டு. அவற்றிற்கும் யாராவது வேண்டும் எனும் நிர்பந்தத்த்தில் இவர் மாதிரி சிலர் இடம் பிடித்து தம்மை முன்னிறுத்திகிறார்கள். அதுவும் போக வெள்ளை வேனைப் பற்றி அந்த ஊர்க்காரனை விட அயலானுக்கு என்ன தெரியும். கையில் கேமிரா வசதி இருப்பதால் மட்டும் எல்லா விஷய்த்தில் கருத்துச் சொல்ல கிளம்புகிறார்கள் என்பதே உண்மை. கையெழுத்து போட்டிருப்போர் பலரும் சண்டை பிடிப்பதையே 24 அவர் வேலையாக கொண்டோர். தமிழக சமூகம் முச்சந்தியில் கும்பலாய சண்டையிடும் சமூகமாகியதே உண்மை.

  4. Avatar
    வில்லவன்கோதை says:

    சம்பந்தப்பட்ட படைப்பாளியின் ஒருசில எழுத்துகளை சமீபத்தில் படிக்கநேர்ந்தது.மன விகாரங்களை பரப்பும் இவர் பின்னால் இத்தனைபேர் நிற்பது வியப்பளிக்கிறது.
    வில்லவன்கோதை

  5. Avatar
    புனைப்பெயரில் says:

    சம்பந்தப்பட்ட படைப்பாளியின் –> யாரைச் சொல்கிறீர்கள்? லீனாவையா..? ரஞ்சியையா..? தெளிவாக சொல்லலாமே…

  6. Avatar
    IIM Ganapathi Raman says:

    வழமையான பின்னூட்டங்கள். Disappointing.

    லீ மணிமேகலைத் தன்னைப் பெண்ணின் பிரதிநிதியாகக் காட்டிக்கொள்ளலாம். புதிய மாதவியும் கவிஞர் சல்மாவும்தான் காட்டிக்கொள்கிறார்கள். அவரவர் விருப்பம். இவர்தான் பிரதிநிதி; அவரன்று என்பதைவிட பித்துக்குளித்தனமெதுவில்லை. பெண்களின் பிரதிநிதியாக ஆண் கூட இருக்கலாம். பாரதியார் அப்படித்தான் நினைத்து எழதினார்.

    புதிய மாதவி தன் தரப்பை மட்டுமே எடுத்துச்சொல்லி,அரசுவின் அடாவடிச்செயல்களை மறைத்துவிட்டார்.

    நான் பார்க்கவில்லை. இங்கு எழுதிய மடலில் அரசுவின் அடாவடிச்செயல்கள் உண்மையானால் அதைவிட பெரும் தலைகுனிவு தமிழைத்தாய்மொழியாகப்போற்றுவாழும் மாந்தருக்கில்லை. எப்படி?

    சென்னைப்பலகலைக்கழகம் உலகப்புகழ் வாய்ந்தது. அதன் தமிழ்த்துறை மாபெரும் தமிழறிஞர்கள் தலைமையேற்று தமிழுக்கு அணி செய்தவொன்று. அத்தமிழ்த்துறையில் இன்றைய தலைவர்தான் இவர். இவரின் பேச்சுக்கள், செயல்கள் எல்லாம் இம்மடலில் காட்டப்பட்டிருக்கின்றன. அவை உண்மையாயின் அது லீனா மணிமேகலை செய்தததைவிட கொடுமையானது. ஒரு தமிழ்ப்பேராசிரியர் சென்னைப்பலகலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவரின் செயலகளா அவை?

    மடலும் ஒரு தரப்பே. புதிய மாதவியும் பேரா அரசுவும் வந்து சொன்னாலும் காணொலி இருந்தால் மட்டுமே நம்புவேன். எனக்குத் தெரியும் எப்படி நீதிமன்றத்தில் இருசாராரும் தங்கள்தங்கள் கட்சியே புனிதம என நிரூபிப்பார்கள். அதைகேட்டு உடனே நம்ப நீதிபதி என்ன மாங்கா மடையரா?:

    Better to discard these people and their problem. Let them chase their giant egos as in a muscial chair contest! But I would remind the Prof of the Tamil and HOD of Madras University Tamil Dept that he ought to keep the dignity of the Chair he is occupying, and the Tamil language intact if the allegations against him are true indeed!

  7. Avatar
    latha ramakrishnan says:

    வணக்கம்,
    பொதுவாக பல நாட்கள் கடுமையாகப் பாடுபட்டு ஒரு கருத்தரங்கம் அல்லது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும்போது திடீரென்று சிலர் அதைத் தங்கள் எதிர்ப்புப்போராட்டத்திற்கான களமாக்கிக்கொண்டுவிடுவது வழக்கமாக நடந்துவருவதுதான் இது ஏற்புடையதல்ல. அதே சமயம் வெள்ளை வேன் படம் தொடர்பாக லீனா மணிமேகலை மீது வைக்கப்பட்ட புகார் கடுமையானது. அதாவது, அவர் பேட்டி கொடுத்த பெண் போராளிகளின் அடையாளத்தை வெளிப்படுத்திவிட்டார் என்பதாக. இது குறித்து ஷோபா சக்தி விரிவாக எழுதியிருந்த கடிதம் ஊடறு இணைய இதழில் வெளியாகியது என்றாலும் தாங்கள் வெளியிட்ட சந்தியா இஸ்மாயில் என்பவரின் கடிதம் ஆதாரபூர்வமானது என்ற உறுதியையோ அப்படியில்லாத பட்சத்தில் அந்தக் கடிதத்தை வெளியிட்டதற்கான வருத்தத்தையோ ஊடறு இணைய இதழ் வெளியிடவில்லை. குறைந்தபட்சம், வெள்ளை வேன் படம் குறித்த அந்தக் கடிதத்தை எழுதியதாகத் தரப்பட்ட பெயருக்குரிய சந்தியா இஸ்மாயில் என்று உண்மையில் யாருமில்லை என்று சோபா சக்தி சொல்லியிருந்ததை மறுக்கும் விதமாக ஏதேனும் ஆதாரத்தையாவது வெளியிட்டிருக்கலாம். அதுவும் இல்லை. எனவே ஊடறு இணைய ஆசிரியர் வருகையின் போது தன் மீது சுமத்தப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுக்கான தன்னுடைய எதிர்ப்பைக் காட்ட, லீனா முற்பட்டிருக்கலாம். அதற்காக அவர்மீது வன்முறையைப் பிரயோகித்து பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றியது எந்த வகையில் நியாயம்? லீனா மீது இந்த வன்முறை பிரயோகிக்கப்பட்டதா இல்லையா என்ற கேள்விக்கு பதிலளிப்பதைத் தவிர்த்துவிட்டு தமிழகத்தில் நிலவும் அரசியல் உணர்வு குறித்து மனம் நோவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஒட்டுமொத்தமாக தமிழக மக்களையும் எழுத்தாளர்களையும் பழிப்பதாய் எழுத்தாளர் புதிய மாதவி கருத்துரைத்திருப்பது முறையல்ல.

    திரு.வில்லவன் கோதை லீனா மணிமேகலையின் ஒருசில எழுத்துகளைப்படித்து அவர் மனவிகாரங்களைப் பரப்புவதாகக் கருத்துரைத்திருப்பதும் தேவையற்றது. லீனா எழுதும் ஒரு சில விஷயங்கள் வாசிப்போருக்குப் பிடிக்காமலிருக்கலாம். ஆனால், அவர் நுட்பமான கவிஞர். எனவே, ஒரு பெண் இப்படி எழுதலாமா, கவிதை இப்படி எழுதப்படலாமா என்ற ரீதியில் மீண்டும் மிக ஆரம்பத்திலிருந்து போதிக்க யாரும் முற்படாமலி ருப்பது மேல்.

    நன்றி

    லதா ராமகிருஷ்ணன்

    1. Avatar
      வில்லவன்கோதை says:

      திருமதி லதா ராமகிருஷ்ணனுக்கு ,
      ஒரு படைப்பு படைக்கப்பட்டு விடுகிறபோதே அது விருந்துக்கும் விமர்சனத்துக்கும் உரியதாகிறது.மூடி வைத்திருக்கும் படைப்புகளை எவரும் சீண்டப்போவதில்லை.
      படைப்பாளியின் பின்புலத்தைப்பற்றி நான் என்றுமே பேசுவதில்லை.தேடிப்படிக்கவில்லை.படிக்கநேர்ந்த எழுத்துக்களை விமர்சிக்கிறேன்.அது அவரின் ஆரம்பகால ( கவிதைகளுமல்ல ) எழுத்துகளுமல்ல.
      மொழிமீதும் ஒரு நாகரீக சமூகத்தின் மீதும் அக்கரை மிக்கவர்கள் இந்த தாக்குதலை இந்த்தலைமுறை எப்படி சமரசம் செய்து கொள்கிறது என்பதுதான் சிந்தனை.

  8. Avatar
    புனைப்பெயரில் says:

    ஆனால், அவர் நுட்பமான கவிஞர்.–> கொஞ்சம் உதாரணங்களுடன் விளக்கலாமே…. மேலுன் யாரும் இங்கு, “ ஒரு பெண் இப்படி எழுதலாமா,..” என்று சொல்லவில்லை. அவர் பெண்ணாகட்டும் ஆணாகட்டும் அல்லது இடைப்பட்டிருக்கட்டும் விஷயம் பிஹேவியர் சம்பந்தப்பட்டது. அள்ளித் தெளித்த அவசர கோலமாய் மிக முக்கிய விஷயங்களை அலங்கோலமாய் ஆக்குவது பற்றியதே…

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      // பிஹேவியர் சம்பந்தப்பட்டது. //

      அதைப்பற்றி கட்டுரை விலாவரியாகக் கதைத்துவிட்ட பின், அரைத்த மாவை அரைப்பரோ? லதா இராமகிருஸ்ணனின் ஃபோகஸ் இன்னொன்று. அதைக் கட்டுரையிடம் இணைத்துப் படிக்கவும்: தெளிவான கோலம் கிட்டும். அல்லது கூட்டத்தில் நடந்தேறிய அலங்கோலம் தெரியவரும்!

      என் ஃபோகஸ் தமிழ்ப்பேராசிரியரின் alleged அவை நாகரிகம் பற்றியது Downright despicable, if true !.
      Latha Ramakrishnan focuses that also.

  9. Avatar
    ஷாலி says:

    “ஈழமண்ணில் எரியும் நெருப்பாய்
    தமிழீழப் பெண்கள்”
    – வழக்கறிஞர் பாண்டிமா தேவி இயக்கிய இந்த ஆவணப்படம் யுத்தம் தின்ற பெண்களைப் பற்றிப் பேசுகிறது. யுத்தம் நடந்த கணங்களிலும், யுத்தம் உச்சத்துக்குப் போன நாட்களிலும் களத்தில் பெண்கள் சந்தித்தவை மட்டுமே அல்ல; யுத்த ஓய்வுக்குப் பின்னான காலத்தில் தமிழ்ப் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளை ஆவணப்படம் விவரிக்கிறது. லீனா மணிமேகலையின் “வெள்ளை வேன்கள்” படமும் இதையே பேசுகிறது. முந்திய ஆவணப் படம் சொல்லாத எதையும் லீனாவின் ஆவணப் படம் எடுத்து வைத்து விடவில்லை என நான் கருதுகிறேன்.
    பாதிக்கப் பட்ட பெண்களின் வாக்குமூலம் ஆவணமாக்கப் பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு பெண்ணின் முகமும் காட்டப்படவில்லை. நாடுகடந்த தமிழீழ அரசின் தோழமை மையம் சார்பில் பேராசிரியர் சரசுவதி மேற்பார்வையில், வழக்கறிஞர் பாண்டிமாதேவி இயக்கிய இப்படம், பாதிக்கப்பட்ட பெண்களின் முகங்களைக் காட்டாது, குரலை வெளிப்படுத்தி ஊடக அறத்தை நிலைநாட்டியுள்ளது. அந்தப் பெண்களின் பெயர்களும் வசிப்பிடமும் கூட குறிப்பிடப் படவில்லை. ஆனால் லீனா மணிமேகலை இயக்கிய படத்தில் இந்த ஊடக அறம் ஏன் தொலைந்தது? நோக்கம் என்ன? இவருடைய ஆவணப் படத்துக்கு முகம் காட்டிய பெண்கள் இன்று இராணுவத்தினரின், புலனாய்வுப் பிரிவினரின் நெருக்குதலுக்கு ஆளாகித் தவிக்கிறார்கள். இதைத்தான் “ஊடறு வலைத்தளம்” கேள்விக்குள்ளாக்கியிருந்தது. தன்னுடைய தவறை ஒப்புக் கொள்ள மனமற்ற இவர் தமிழிலக்கியத் துறை அரங்கில் இரு நாள் நிகழ்வுகளிலும் வன்முறையைப் பயன்படுத்தினார். இந்த லட்சணத்தில் மார்ச்சில் நடைபெறவிருக்கும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் தனது ஆவணப் படத்தை திரையிட பெரு முயற்சி செய்து கொண்டிருக்கிறாராம்.
    எந்த ஒரு செயலானலும் தன்னை முன்னிறுத்துவதே குறிக்கோளாகக் கொள்வார் அல்லது தன்னை முன்னிறுத்துவதற்காக ஒவ்வொரு காரியத்தையும் செய்வார்; அறம் பேணுதல் என்னும் கொள்கைக்கு சிறிதும் இடமில்லை என்பதை ஈழத்தமிழர் தோழமைக் குரல் அமைப்பின் இவரது நடவடிக்கைகளும், பின் தொடரும் செயல்பாடுகளும் உணர்த்துகின்றன.
    – பா.செயப்பிரகாசம்

Leave a Reply to latha ramakrishnan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *