சிற்றிதழ் அறிமுகம் ‘ பயணம் ‘

This entry is part 7 of 42 in the series 29 ஜனவரி 2012

விருதுநகர் அருகிலிருக்கும், மல்லாங்கிணறு என்கிற கிராமத்திலிருந்து, பல ஆண்டுகளாக வருகிறது இந்த இதழ். இலக்கியம் எங்கோ இருப்பவர்களையெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு இந்த இதழ் ஒரு சாட்சி. சிற்றிதழ்கள் தனிமனித முயற்சியிலேயே வெளிவருகின்றன. அதனால் விளம்பரம் எதுவும் வரக்கூடாது என்பதில் இன்னமும் பல இதழ்கள் பிடிவாதமாக இருக்கின்றன. அவர்களுக்கு விளம்பரங்கள் கிடைக்கவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
நமது கையில் இப்போது இருக்கும் இதழ், 86வது இதழ். இதன் ஆசிரியர் சுந்தர்ராஜ். அவரே ஒரு அச்சகமும் வைத்திருக்கிறார். அதனால் இதழ் வெளியிடுவது சுலபமாகி விடுகிறது. அச்சகத்தில் கொடுத்து, அச்சிட்டு வாங்கும் அவஸ்தைகளைப் பற்றி ஒரு புத்தகமே போடலாம். அதெல்லாம் இவருக்கு இல்லை. சிற்றிதழ் மரபை மீறி பின்னட்டையின் இருபக்கமும் சில விளம்பரங்களைப் போடுகிறார்.
44 பக்கத்துக்கு கனமாக இருக்கிறது இதழ். மற்ற சிற்றிதழ்கள் போல காலம் கடந்தெல்லாம் வருவதில்லை. ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்திலேயே வந்து விடும். அட்டையைத் தாண்டிய முதல் பக்கத்திலேயே, ஆலோசகர் குழு என்று நான்கைந்து பெயர்கள் இருக்கின்றன. ஆனாலும் மல்லாங்கிணறு கிராமத்தில் உட்கார்ந்து கொண்டு தனியாகத்தான் செயல்படுகிறார். மின்னஞ்சல் கூட இல்லை. ஆலோசகர் குழுவில் இருக்கும் யாரும், அவர்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து உதவ மாட்டார்கள் என்பது அவரே சொன்ன செய்தி.
ஒரு தலையங்கம், சில கட்டுரைகள், நிறைய கவிதைகள், கொஞ்சம் இலக்கியத்தமிழ் சார்ந்த படைப்புகள், நூல் விமர்சனங்கள், கடிதப்பகுதி, ஒரு சிறுகதை என்று பயணிக் கிறது பயணம்.
ஜெயமோகன் எழுதிய ‘ யானை டாக்டர் ‘ சிறுகதையைப் பற்றிய தேவராஜ் விட்டலனின் ‘ வாசிப்பை நேசிப்போம் ‘ பக்கம் நன்றாக இருக்கிறது. மாபலி ஜோப்சனின் ‘ இடியாப்போம் ‘ சிறுகதை சகிக்கவில்லை.
பா.உஷாராணியின் ‘ மரம் வைத்த வீடுகள் ‘ கவிதை நூலுக்கு மதிப்புரை எழுதிய மீ.க.சுந்தர் திறம்படவே செய்திருக்கிறார். அதிகமாக வார்த்தை சொல்லாடல்களுக்கு இடம் அளிக்காமல், உஷாவின் கவிதைகளாலேயே நூலை அறிமுகம் செய்திருப்பது நல்ல முயற்சி.
இதழ் முகவரி: பயணம் மாத இதழ், மேலத்துலுக்கங்குளம், மல்லாங்கிணர் வழி, விருதுநகர் – 626 109. செல் பேசி : 936 312 5082.
0

Series Navigationசிம்ம சொப்பனம் – பிடல் காஸ்ட்ரோஆவின அடிமைகள்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *