சுசீந்தரனின் ‘ ராஜபாட்டை ‘

This entry is part 21 of 29 in the series 25 டிசம்பர் 2011

சுசீந்தரனின் அடையாளம் என எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. முதல் படத்திலேயே கவனம் பெற்றவர் என்பதை விட, அடுத்தடுத்த படங்களில் எந்த பாணியிலும் சிக்கிக் கொள்ளாதது தான் அவரது அடையாளம் எனலாம். வெண்ணிலா கபடிக் குழு என கிராமப் பின்னணியில் படம் பண்ணியவர், உடனே நகரம், வன்முறை என தான் மகான் அல்ல என நிருபித்தார். அடுத்தது ஆச்சர்யம்! அழகர்சாமியின் குதிரை..
விக்ரமை வைத்து மசாலாப் படம் என அறிவித்த போது ‘ ஏன் இவருக்கு இந்த விஷப்பா¢ட்சை’ என எண்ணினேன். அதுவே என்னை முதல் நாளே பெங்களூ¡¢ல் இருந்தாலும் தேடிப்போய் அந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டியது. எழுபது ரூபாய் டிக்கெட்டில் சம்பிகே தியேட்டா¢ல் எண்ணி எழுபது பேர்! இனிமேல் தமிழ் படங்களை வேறு மாநிலத்தில் தான் பார்க்க வேண்டும். ஒரு கைத்தட்டல் இல்லை, விசில் இல்லை, கூச்சல் இல்லை, கும்மாளம் இல்லை.
சினிமாவைப் பின்புலமாக வைத்துக் கொண்டு வழக்கமான அரசியல் தலைவி, முஸ்லீம் தாதா என்று பயணிக்கிறது கதை. நில அபகா¢ப்பு அண்டர் கரண்ட். அனாதை ஆசிரமம், எண்பது வயது தாத்தா என்று செண்டிமெண்ட், அழகான கதாநாயகி, அவர்க்கு இரண்டு டூயட் என்று ஏற்கனவே பார்த்துச் சலித்த கதை. ஆனால் அதை திரைக்கதையாக சுசீந்தரன் மாற்றிய மேஜிக் பாராட்டும் வகையில் இருக்கிறது.
தெலுங்கு படத்திலிருந்து கதையை எடுத்துக் கொண்டு ( அதற்கு மூலகர்த்தாவிற்கு பெயர் பட்டியலிலேயே அங்கீகாரம் கொடுத்திருப்பது இயக்குனா¢ன் நேர்மையைக் காட்டுகிறது. ) எந்த ஜவ்வும் இல்லாமல் கதையை பரபரவென்று கொண்டு சென்றிருப்பது இயக்குனருக்கு ப்ளஸ்.
விக்ரம் சினிமா வில்லனுக்கு பின்னால் நிற்கும் பல அடியாட்களில் ஒருவர். எப்படியாவது பிரதம் வில்லனாவது தான் அவரது முக்கிய லட்சியம். மூன்று வருடமாக அவர் லுக் மட்டுமே விட்டுக் கொண்டிருக்கும் லேடிஸ் ஹாஸ்டல் தீக்ஷா சேத், ஆசிரமம் நடத்தும் சிங்கீதம் சீனிவாச ராவ் ( ‘கமலகாசனுக்கு நட்பு சொல் கொடுத்வன் நான் ),சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் தம்பி ராமையா என்று சுவையான பாத்திரங்கள். ஆனால் கதையை, சினிமாவை விட்டு விலகாமல் கொண்டு சென்றிருப்பது சுசீந்தரனின் புத்திசாலித்தனம். சினிமா படப்பிடிப்பில் விக்ரமின் பார்வையில் எல்லா பாத்திரங்களுமே விக்ரமாக பல கெட்டப்புகளில் தோன்றுவது திரைக்கதையின் ப்ளஸ். அது விக்ரம் ரசிகர்களுக்கு செமத்தியான தீனி என்பது கூடுதல் +.
எதையுமே நகைச்சுவையுடன் சொல்வது இன்னொரு பலம். அனல் முருகன் எனும் பெயர் கொண்ட கதாநாயகன் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட ஜிம்பாயாக வருவதற்கு கூடுதல் ¨தா¢யம் வேண்டும். அது விக்ரமிற்கு இருக்கிறது. கொடுக்கலாம் பலமான ஒரு ஷொட்டு.
இன்னொரு சுவாரஸ்ய பாத்திரம் விஸ்வநாத். ஜிம்பாய்ஸ¤க்கு காதல் சொல்லித் தருவதிலிருந்து ( ‘ மொதல்ல அம்மாவை லுக் வுடு.. ‘ ‘ அம்மா வெக்கப்படுது ‘ ‘ இப்ப பொண்ண ¨தா¢யமா லுக் வுடு, ஒர்க் அவுட் ஆவும் ‘ ), உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும் கூட தான் ஒரு வெட்டரன் என்று நிரூபித்திருக்கிறார்.
இயக்குனா¢ன் பி¡¢ல்லியன்ஸ் வெளிப்படும் இன்னொரு இடம் தீக்ஷாவை கடத்தும் கட்டம். முருகனிடம் காதலி சொல்கிறாள் ‘ ஜன்னல் வழியா ஒரு தெரு விளக்குதான் தொ¢யுது ‘ ‘அதுபோதும்’ என்று கிளம்பி மெயின் டிரான்ஸ்பார்மா¢ல் ப்யூஸை பிடுங்கி ஏ¡¢யாவை கண்டுபிடித்து, அதன் பிறகு பகுதியை கண்டு பிடித்து, பின் தெருவைக் கண்டு பிடித்து, காதலியை மீட்பது புதிய உத்தி. அபகா¢க்கப்பட்ட ஆசிரம நிலத்தை பதிவு செய்ய அக்காவின் ஆட்கள் வரும்போது, கல்யாணக் கோலத்தில் விக்ரம் தீக்ஷாவுடன் வந்து, லஞ்சம் கொடுப்பது போல் நடித்து, பதிவாளரையே மாட்டி விடுவது இன்னொரு கூக்ளி.
விஸ்வநாத்தின் வசனமற்ற சில காட்சிகளை தெலுங்கு படத்திலிருந்து எடுத்து கோர்த்திருப்பது அப்பட்டமாக சில இடங்களில் தொ¢கிறது. தெலுங்கு பாணி கச்சை அணிந்து பெண்கள் நடந்து போவது, க்ளொஸப் தவிர மற்ற இடங்களில் தெலுங்கு பேக் டிராப் போன்ற பிரமை ஏற்படுவது என்று சில குறைகள். பாடல்கள் பொ¢தாக ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை பரவாயில்லை ரகம். தெய்வத்திருமகள் முடிந்த நிலையில் உடனே படத்தை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் ஒரு பாடல் காட்சியில் தொ¢கிறது. அந்தப் பட கெட்டப்பிலேயே விக்ரம் அதே எக்ஸ்பிரஷன்களுடன் நடித்திருப்பது அப்பட்டமாகத் தொ¢கிறது. எங்காவது ‘ நிலா ‘ என்று சொல்லிவிடுவாரோ என்று எனக்கு உள்ளூர பதைப்பு.
நில அபகா¢ப்பு என்பதைப் பற்றிய படம் என்பதை பெயர் போடப்படுவதிலிருந்து பி¡¢ட்டிஷ் ஆட்சி பத்திர பேப்பர்களிலிருந்து தற்கால கணினி முறை வரை காட்டுவது என்று ஆரம்பித்து தொய்வில்லாமல் படத்தை வேகத்துடன் கொண்டு சென்றிருப்பது, ப்ளானிங் என்று அனாவசிய நேரம் கடத்தல் இல்லாமல், உடனே காட்சிகளுக்கு வந்து விடுவது, வில்லனை பிடித்தபின் செட்டப் போலீஸ் என்கொயா¢யைக் கூட ஒரு சினிமா ஷீட்டிங் போலவே நடத்துவது என்று ஏகத்துக்கு உழைத்திருக்கிறார்கள்.
சராசா¢ மசாலா படத்தை விட சற்று மேலே என்று தான் சொல்லத் தோன்றுகிறது. யார் என்ன சொல்லப் போகிறார்கள் என்று காத்திராமல் சுசீந்தரன் அடுத்த படத்துக்குப் போய்விட்டதே அவருடைய தன்னம்பிக்கையை காட்டுகிறது.

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம்(மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 3நானும் பி.லெனினும்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

  1. Avatar
    punai peyaril says:

    ஊரே மொக்கை என்கிறது…இவர் அடி சக்கை என்கிறார். சிற்கு கொண்டு பறக்கவும் செய்யலாம்… அல்லது காதும் குடையலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *