சுஜாதாவின் வெள்ளி விழா முன்னுரையும், சுப்ரபாரதிமணியனின் கொஞ்சம் கவிதைகளும்

This entry is part 11 of 31 in the series 10 பெப்ருவரி 2013

சாமக் கோடாங்கி ரவி

——————————————-

   சுஜாதா அவர்கள் சுப்ரபாரதிமணியனின்  “அப்பா” என்ற  முதல் தொகுப்பிற்கு முன்னுரை எழுதும் போது  ( 1987 )

” சுப்ரபாரதிமணியனிடம் கவிஞர்தான் அதிகம் ஆக்கிரமித்துள்ளார்.” என்று குறிப்பிட்டிருந்தார்.  அவரின் ஒரிஜனல் வரிகள்:

   ” சுப்ரபாரதிமணியனின் தமிழ் நடையில் ஒரு கவிஞனின் பலங்களும் பலவீனங்களும் உள்ளன. மெலிதான தீற்றல் போன்ற எண்ணங்களை சொல்ல முடிவது நிறை. கணிசமான  சதவிகிதத்தில் அரக்கனோ குழந்தையோ மென்மையோ நம்முள் உறைந்து போயிருப்பதை நாம் எப்போது முதல்  முதலாக உணர ஆரம்பித்தோம் என்பது ஆச்சரியமான  விசயம்- இது முழுவதும் உங்களுக்கு முதல் படிப்பில் புரிந்தால் நீங்களும் கவிஞர். ஏனெனில் கவிஞர்கள் செல்லம்மாவை எனக்கு நினைவிருக்கிறது என்று சொல்ல மாட்டார்கள். சுப்ரபாரதிமணியன் சொல்வது போல் “ புராதன ஓவியம் போல் செல்லம்மா நினைவுக்குரிய விசயமாக எனக்குள் இன்னும் இருக்கிறாள் என்றுதான் சொல்வார்கள்,”

            சுப்ரபாரதிமணியன் ஆரம்பத்தில் கவிதைகள் மூலம்தான் படைப்புலகில் நுழைந்தவர். பிற்கு சிறுகதைகள், நாவல்கள் என்று முப்பதற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டு விட்டார். இப்போது அவரின் கவிதைத் தொகுதி வெளிவந்திருக்கிறது ( 2011 ). இதில் அவரின் ஆரம்பகாலக்கவிதைகள் இருக்கின்றனவா  என்று தெரியவில்லை. கவிதைகள் வெளியான இதழ்கள் விபரம், ஆண்டுகள் பற்றினக் குறிப்புகள் இடம்பெறவில்லை. சமூகம், வறுமை, தொழிலாளர் பிரச்சினைகள் என்று பொதுவுடமை சார்ந்து கவிதைகள் ஆரம்பத்தில் எழுதியிருக்கிறார். கோவை வானம்பாடிகளின் தாக்கம் இருந்தது  என்று சொல்வதற்கில்லை. ( வானம்பாடிகளுக்குப் பின் புதுக்கவிதை என்று கவிதை அறிமுக நூல் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். 1982)  இத்தொகுப்பில் உள்ள கவிதைகளைப் படிக்கிற போது தேர்ச்சியான கவிதைகளில் அவர் அடைக்கலம் ஆகியிருக்கிறார் என்பது தெரிகிறது. அவரின் முதல் கவிதைத் தொகுப்பு.8 நாவல்கள், 15 சிறுகதைத்தொகுப்புகள் என்று 35 க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்ட்டிருப்பவர் முதல் கவிதைத் தொகுப்பாகவும் இதைக் கொண்டு வந்து விட்டார்.

    ஒரு படிப்பாளியின் மொத்தப் படைப்புகளில் வெவ்வேறு தளத்தில் கதை, நாவல் என்று இயங்குகிறபோது அவரை கவிதையிலும் அந்த மையங்களைத் தவிர்த்து வேறு விசயங்களை  காண இயல்வது அபூர்வம் என்றே தோன்றுகிறது.சுப்ரபாரதிமணீயனின் படைப்புகளில் காணப்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள், இடம் பெயர்ந்து வந்த  தொழிலாளர்களின் பிரச்சினைகள், சாதாரண பொதுமக்களின் பொதுபுத்தி சார்நத விசயங்களை கவிதைகளிலும் காணமுடிகிறது.

                            3                                அவற்றை உரைநடையிலிருந்து கவிதை நிலைக்கு கொண்டு செல்வது குறிப்பிட த்தக்க அனுபவங்களே என்று தீர்க்கமாய் சொல்லமுடியும்.

இதைத்தவிர பெண்களுடனான உரையாடல் என்பது ஒரு பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது.இது புதிதாக இருக்கிறது. பெண்களுடனான நட்பிற்கு ஏக்கம் தெரிகிறது.இரக்கம் தென்படுகிறது. பெண் குறித்த கசப்புணர்வும், தற்கொலை முயற்சிகளும் தென்படுகிறது. விதவை பெண் போன்றோரின் பார்வையிலிருந்து எழுதப்பட்ட கவிதைகளும் உள்ளன. கசப்பில் மிதப்பவளாக பெண் இருக்கிறாள்.

   வெவ்வேறு ஊர்கள், பயணங்கள், நாட்குறிப்புகளும் கவிதை அனுபவங்களாகியிருகின்றன. சிடுக்கில்லாத எதிர்கவிதை மொழி.

அப்பா தொகுப்பு வெளிவந்த பிறகு பல சமயங்களில் சுப்ரபாரதிமணியனை நல்ல உரைநடையாளராக சிலாகித்தும் சுஜாதா சில  இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.சுஜாதா குமுதம் ஆசிரியராக இருந்த  போது ஏர் இண்டியா குமுதம் இலக்கியப் போட்டியில் அவருக்கு பரிசளித்து  இங்கிலாந்து, அய்ரோப்பியா நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சுஜாதா எவ்வளவோ எழுதியிருக்கிறார். சுஜாதா கவிதையையும் விட்டு வைக்கவில்லை. ஒரு கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார் என்பது ஞாபகம் வருகிறது. கவிதை மொழிபெயர்ப்பு, சங்ககால கவிதைகளை மொழிபெயர்த்தது, திருக்குறள் பொழிப்புரை, என்று கவிதைத் தளத்திலும் சுஜாதா இயங்கியிருப்பது ஞாபகம் வருகிறது. கவிதை உணர்வுகளுக்குள் அகப்படாத எழுத்தாளன் அபூர்வம், கவிதை உணர்வே உரைநடையின் உந்துதல் என்று சொல்லலாம்.

 

                                 4                                   இக்கட்டுரையின் முதல் பாராவில் குறிப்பிட்டிருக்கும் சுஜாதாவின் நீண்ட 16 பக்க ஒரிஜனல் முன்னுரையின் முதல் பாரா இப்படி அமைந்துள்ளது.            “  சில வயசான எழுத்தாளர்கள் நான் எழுதினதுக்கு பிற்பாடு நல்ல கதைகள் நின்றுவிட்டன.  தமிழ்ச் சிறுகதை உலகம் எப்படித்தான் பிழைக்கப்போகிறதோ என்று கவலைப்பட்டுக் கொண்டு பல்செட்டைக் கழற்றி வைக்கிறார்கள். சில ஜாம்பவான்களும் சாம்ராட்டுகளும் நான் எழுதுவதுதான் இலக்கியம் மற்றதெல்லாம் ஊதுவத்தி வியாபாரம் என்கிறார்கள். இந்த வகை அதீத அபிப்பிராயங்கள் எல்லாம் எந்த இலக்கியச் சூழ்நிலையிலும் ஒரு காசு பெறாது. இவைகளுக்குக் காரணங்கள் ஒரு புறம் பொறாமை. மற்றொரு புறம் இயலாமை. இவைகளையெல்லாம் நீக்கி விட்டு ஆரோக்கியமாக இன்றைய தமிழ்ச் சிறுகதை உலகைப் பார்த்தால்  நம்பிக்கை பிறக்கக் கூடிய  தரமான பல கதைகள் இன்றைய கால்கட்டத்தில் எழுதப்படுகின்றன. இளைஞர்கள் தத்தம்  புதிய புதிய கவலைகளையும் புதிய மன ஓட்டங்களையும் செதுக்கி வைத்தாற்போல வார்த்தைகளில் அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வகையில் தமிழில் வருசத்துக்கு நாம் முன் சொன்ன கிழச்சிங்கங்களின் கவலையை மதிக்காது பத்து பன்னிரண்டு நல்ல கதைகள்  தேறுகின்றன.”

 

      இந்த முன்னுரை வெள்ளிவிழாவைக் கடந்து விட்டது. சுஜாதாவின் சிறுகதைபற்றிய அபிப்பிராயங்களை  கவிதைக்கும் பொருத்திப் பார்க்கலாம். சில சிங்கங்களின் கவலையை மதிக்காது  தமிழில் நல்ல  கவிதைத்தொகுப்புகள்  வருசந்தோறும் பத்து பன்னிரண்டாவது தேறும். நிச்சயமாய்..சுப்ரபாரதிமணீயனின் இத்தொகுப்பும் இவ்வருடத்தில் அதில் ஒன்று.

                            5.                                                           (இந்த  சுஜாதாவின் முன்னுரை ஜாக்கிரதையாக  அணுகப்படவேண்டிய ஒன்று.  அவரின் பிராமண துவேசத்தை இதிலும் சுலபமாக அடையாளம் காணலாம். பிராமணரல்லாத எழுத்தாளர்களின் படைப்புகளின் ஜீவனான உணவு பழக்கங்கள், கலாச்சாரம் சார்ந்த விசயங்களை புறங்கையால் தள்ளுகிறார். உதாரணம் ஒவ்வொரு ராஜகுமாரிகளுக்குள்ளும் சிறுகதை பற்றிய அணுகுமுறை )

 

( மந்திரச் சிமிழ்., சுப்ரபாரதிமணியனின் கவிதைகள், காவ்யா பதிப்பகம் வெளியீடு, சென்னை ரூ 100/  )

 

விமர்சனம்: சாமக் கோடாங்கி ரவி

 

Series Navigationவால்ட் விட்மன் வசன கவிதை -10 என்னைப் பற்றிய பாடல் -3 (Song of Myself)வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 44
author

சாமக்கோடாங்கி ரவி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *