சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.

This entry is part 2 of 11 in the series 25 ஜூலை 2021

 



Posted on July 22, 2021

The New Shepard Rocket Lifts off the Launching Site near Van Horn, Texas, USA

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng [Nuclear], Canada

From left: Mark Bezos, Jeff Bezos, Oliver Daemen, Wally Funk

From left: Mark Bezos, Jeff Bezos, Oliver Daemen, Ms Wally Funk

2021 ஜூலை 20 ஆம் தேதி அமெரிக்கக் கோடீஸ்வரக் கோமான், அமேஸான் தொழில் அதிபர் : ஜெஃப்ரி பெஸாஸ் [Jeffry Bezos] முதன்முதல் தன்னுடன் மூன்று பொது நபரைச், சுய இயங்கு ராக்கெட் விண்சிமிழில் ஏற்றிக் கொண்டு, விண்வெளியில் 62 மைல் [100 கி.மீ] உயரம் ஏறி, பூஜிய ஈர்ப்பு [Zero Gravity] மிதப்பு நிலை உணர்ந்து, பாதுகாப்பாக மீண்டு, பூமியில் வந்திறங்கினர். விண்வெளிச்சிமிழ், பூமியைச் சுற்றாது, உயரத்தை எட்டியதும் இறங்க ஆரம்பித்தது. அப்போது பளு தூக்கிய ராக்கெட் பிரிந்து, தானாக முன்குறித்த இடத்தில் செங்குத்தாகக் கீழே இறங்கியது. முன்பு இவ்வாறு இறங்கிய இந்த ராக்கெட், இப்போது மூன்றாம் தடவை மீண்டும் பயன்படுகிறது.

https://twitter.com/i/status/1417466228680048650

 

விண்வெளி விமானிகள் விண்சிமிழில் நுழைகிறார்Jeff Bezos Blue Origin Launch: Amazon Boss Lifts Off to Space on New Shepard SpacecraftThe New Shepard Rocket Reaches The Zero Gravity Limit 62 miles (100 km) [The Karman Line]

The New Shepard booster performed an autonomous landing, the third consecutive landing for this booster.

ஜெஃரி பெஸாஸ் பயணத் தலைவர், வயது : 57 , சகோதரர் மார்க் பெஸாஸ் வயது :52 முன்னாள் நாசா விண்வெளி விமானி மிஸ் வாலி ஃபன்க் வயது : 82, வாலிபன் ஆலிவர் தேமன் வயது : 18. அந்த மூவரையும் தன்னுடன் சேர்த்து விண்சிமிழில் ஏற்றிக் கொண்டு, வான் ஹார்ன், டெக்ஸஸ் பாலைவனத்தில் [Van Horn, TX, USA] ஜூலை 20 ஆம் தேதி புதிய சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட், காலை 9 : 11 மணிக்கு ஏவப் பட்டது. எந்த சிக்கலும் நேராமல், ராக்கெட் செங்குத்தாக ஏறி, 250,000 அடி [75 km ] உயரத்தில் விண்சிமிழ் பிரிந்து, [கார்மன் எல்லை ] [Karman Line Zero Gravity Limit] 62 மைல் [100 கி.மீ.], பூஜிய ஈர்ப்பு [Zero Gravity] அரங்கில் சில நிமிடங்கள் உடல் மிதப்பு நிலையை விமானிகள் உணர்ந்தனர். பிறகு சுய இயங்கு ராக்கெட் தானாகக் குறிப்பிட்ட வட்டத்துள் கீழே இறங்கியது. விண்சிமிழ் பூமியைச் சுற்றுப் பாதையில் சுற்றாமல் புவிக்குப் பாராசூட் குடைகள் மூலம் மீண்டது. ராக்கெட் இறங்கிய தளத்துக்கு இரண்டு மைல் தூரத்தில் விண்சிமிழ் தானாக பாதுகாப்பாக நான்கு விமானிகளை இறக்கியது. வியக்கத் தக்க இந்த விண்வெளிக் காட்சி அனைத்தும் சுமார் 10 நிமிடங்கள்தான் நீடித்தன.

https://twitter.com/i/status/1417210316694462466

முதன்முதல் அப்பொல்லோ 11 ராக்கெட் 1969 ஜூலையில் நிலவை நோக்கிச் சென்று, நீல் ஆர்ம்ஸ்டிராங் சந்திரனில் கால் வைத்த நினைவு நாளில், ஜெஃரி பெஸாஸ் குழுவினர் நால்வர் 2021 ஜூலை 20 இல் பூஜிய ஈர்ப்பு விண்வெளி எல்லைக்குப் பயணம் செய்து பாதுகாப்பாக மீண்டார்.

 

https://www.bbc.com/news/science-environment-57849364?fbclid=IwAR3V508bGGdjPSqnjQxJI-4qAnSdbycy1SgZ3XldLCdmb-cF4G_Pc8BJ00M

 

 

Jeff Bezos Launches to Space Aboard Blue Origin RocketThe New Shepard and crew capsule’s flight trajectory.
Source: Blue Origin/YouTube

 

Oliver Daeman,Wally Funk, Jeff Bezos, Mark Bezos

Capsule, Jeff Bezos, Shepherd Rocket

Jeff Bezos Coming out of Capsule

 

Jeff Bezos and Richard Branson – Space Sight-Seeing Pioneers

 

தகவல்:

  1. Jeff Bezos launches to space aboard New Shepard rocket ship – BBC News
  2. Jeff Bezos Launches to Space Aboard Blue Origin Rocket (interestingengineering.com)
  3. Jeff Bezos Launches to Space Aboard Blue Origin Rocket (interestingengineering.com)
  4. Amazon’s Jeff Bezos makes history with all-civilian suborbital flight (nbcnews.com)
  5. Jeff Bezos reaches edge of space, returns safely on Blue Origin’s New Shepard rocket – The Washington Post
  6. Watching Jeff Bezos Go to Space Was More Depressing Than Inspiring (yahoo.com)
  7. ttps://ca.finance.yahoo.com/news/watching-jeff-bezos-space-more-160034618.html

S. Jayabarathans@gmail.com [July 22, 2021] [R-0]

Series Navigationசிறுகதையை எப்படி எழுதாமல் இருக்க வேண்டும்?இறுதிப் படியிலிருந்து- அர்ச்சுனன்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *