செல்மா கவிதைகள்—-ஓர் அறிமுகம்

This entry is part 28 of 28 in the series 22 மார்ச் 2015

 

“கவிதை அப்பா” தொகுப்பின் படைப்பாளீ செல்மா, கவிஞர் மீராவின் மகள் என்ற ஒரு வரி அறிமுகமே போதுமானது. கவிதை நூலின் எல்லா பக்கங்களும்

‘அப்பா” என்ற தலைப்பின் கீழ் வருகின்றன. எனவே இதை அப்பா பற்றிய குறுங்காவியம் எனலாம். செல்மாவின் கவிதைகள் எளீயவை; நேர்படப் பேசுபவை.” எனக்குக்/ கவிதை எழுதத் தெரியாது/ உங்களை மாதிரி ” என்று செல்மா சொன்னாலும் இறகின் எடையற்ற எடையாய் ஒரு மெல்லிய உயிர்ப்புள்ளி இருப்பதை யாரும் உணரலாம்.

வல்லினம் என்று தொடங்கும் கவிதை…” வல்லினம் மெல்லினம் / இடையினம் / எல்லாம் பயிற்றுவித்தீர்கள் / இலக்கணத்தை தெளிந்து பருகச் செய்தீர்கள். / என் / தன்னார்வத்தை ரசித்து “நீயும் / என் இனம் ஆனாய் ” / /என்றீர்கள். / இன்று / நானோ / தனி இனம் ஆனதை மட்டும் / சொல்ல மறந்து… கவிதையின் முத்தாய்ப்பாக அமைந்த சொடுக்கு , தந்தையின் பிரிவை வாசகன் மனத்தில் நிறுத்தி விடுகிறது.

“என் குழந்தைகள்” என்று தொடங்குகிறது.ஒரு கவிதை. செல்மாவின் குழந்தைகள் ஓவியப் பயிற்சி மேற்கொள்கிறார்கள். செல்மாவும் ஓவியம் வரைந்து பார்த்திருக்கிறா.

” அழகான பூக்கள் / சிரிக்கும் பொம்மைகள் / கண்களை ஈர்க்கும் / விலங்கினங்கள் / பறவைகள் / எல்லாம் / கண்முன் நின்றன. ஆனாலும் செல்மா சொல் ஓவியங்கள்

தரும் திருப்தியால் வேறு ஓவியங்கள் தீட்ட முடியவில்லை. அப்பாதான் ஊயிரோவியமாய் நிற்கிறார்.   எல்லா இடங்களிலும் / தேடிப் பார்த்தாகிவிட்டது / எல்லா மனிதரு

ள்ளும் / வலை வீசியாயிற்று / உங்களைப்போல் ஒருவர் / என் கண்ணில் / படவே இல்லை; என்பதில் பாசத்தின் துடிப்பை உணர முடிகிறது. அப்பா மிதிவண்டி ஓட்ட,

பின்னால் அமர்ந்து செல்வது பலருக்குமான அனுபவந்தான். அங்கேயும் ஒரு கவிதையைக் காண்கிறார் செல்மா.

உங்களது மிதிவண்டியின் / பின்புற இருக்கையில் / என்னையும் வைத்து / அழுத்தின பொழுதுகளில் / என்றாவது ஒரு நாள் / என் இதயத்தை / அழுத்தப் போகிற பிரிவின் / சோகச்சுவடின் முன்னோட்டம் / என்று எனக்கு அப்போது / தெரியாமல் போனதே அப்பா ” … இன்று நடக்கும் செயலில் நாளய சம்பவத்தை இணைத்துப் பார்க்க

மனம் துணுக்குறத்தான் செய்யும். கிள்ளை என்று தொடங்குகிறது ஒரு கவிதை. கிள்ளை மொழி பேசி / கிள்ளி விளையாடிய கணங்களில் / புலப்படவில்லை எனக்கு /

உங்களது நட்பின் தெள்ளமுதத் திரவியங்கள் / வடிந்த சுனைநீர் பருக / நான் பயணம் மேற்கொள்ளப் போகிறேன் என்பது ‘ இக்கவிதையின் கருப்பொருள் சூழல் புதியது,

பலரும் எழுத மறந்தது. நல்ல படிமமும் அமைந்துள்ளது.

அப்பா பாசம் எங்கெல்லாம் தரிசனம் தருகிறது. “நம் வாசலின் / காவல் / அரணாய் உள்ள / அரச மரத்தின் இலைகளிருந்து / உதிர்ந்த சருகுகள் / எல்லாம்/ பேசுகின்

றன தொய்வில்லாமல் / உங்களைப் பற்றி

அப்பாவைப் ப்ற்றி வேறு யாரும் ஒரு முழுத்தொகுப்பு இதுபோல் எழுதியதாகத் தெரியவில்லை. எவ்வளவுதான் எழுதினாலும் தீராது பெற்றோர் மறைவுத் துயர்.

குழந்தையின் புன்னகை போல இதில் அழகான கவிதைகள் பல உள்ளன. படித்து ரசிக்கலாம் !

 

Series Navigationஉதிராதபூக்கள் – அத்தியாயம் 6
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *