ஜன்னல்…

author
2
0 minutes, 0 seconds Read
This entry is part 7 of 9 in the series 10 ஜூலை 2022

 

                                                                                          

ச. சிவபிரகாஷ்

காலை சூரியன்,

தான்…

வந்த  சேதியை,

ஜன்னல்,

வழியே  சொன்னது.

 

என்

போதாகுறைக்கு,

போர்வைக்குள்ளும்,

வெளிச்சம்,

பரப்பி,

துயிலை  தடுத்தது.

 

ஏன்?

ஜன்னலே!

அனுமதி தந்தாய்.

 

இந்த,

ஜன்னலை,

தாங்கியிருந்த,

சுவற்று திட்டில்,

ராத்திரி பொழுதை,

கழித்த,

கருங்காகம்,

காலை உணவுக்கே வந்து

கரைத்தது.

 

ஜன்னல்…

காய்கறி  வாங்க,

நாலு தெரு,

நடந்தால்,

முழங்கால் வலி வருமென,

முடியாது…

என்

வயோதிக தாய்,

வண்டியில்  தள்ளி சென்ற,

காய்கறி க்காரரை,

கத்தி  அழைத்தாள்

கண்டு

ஜன்னலில்.

 

ஜன்னல்…

 

நெருக்கமான,

குடியிருப்புகளில்,

நேரெதிரே,

நேர்த்தியான  பல

ஜன்னல்கள்.

 

அடுத்த வீட்டு மாமியும்,

அடுப்பங்கரையிலிருந்து,

அம்மாவிடம்,

சமையல் குறிப்பை பறிமாரிகொண்டாள்.

சத்தம் போட்டு,

இந்த

ஜன்னல் வழியே.

 

எதிர்வீட்டு  மாமாவும்,

என்றாவது ஒரு நாள்

அப்பாவிடம்.,

அரசியலும்  பேசுவார்,

இந்த…

ஜன்னலில்.

 

ஜன்னல்…

 

பள்ளி  விடுப்பில்,

தம்பியுடன்,

பேருந்து, இரயில்,

பயணத்தில்,

பங்காளி சண்டை தான்,

அந்த…

ஜன்னலோர  இருக்கைக்கு.

 

ஜன்னல்…

 

சாத்திருந்த என்  வீட்டினுள்,

முன்பொரு,

சமயம்,

ஜன்னல் வழியாக

குருவிகள்

இரண்டு,

உட்புகுந்து,

சென்றதுண்டு.

 

ஜன்னலே!

யாரை கேட்டு

அனுமதி தந்தாய்..

 

ஜன்னலில்,

தினம்,

பார்த்தும்,

பாராமலும்  – சென்ற

பாவைக்கு…

எனது

காதலை சொல்ல.

 

கண்மணி  நீ வர காத்திருந்தேன்,

ஜன்னலை பார்த்திருந்தேன்.

பண்பலை ஒலிப்பரப்பிய,

பாட்டை

பாதி தெருவும்,

கேட்கும் படி செய்தேன்.

 

பெருத்த

ஓசையுடன்,

எதிரே,

ஜன்னல்

சாத்தப்பட்டது..

 

ஜன்னலே!

ஏனோ ?

 

இன்று வரை…

தெரியவில்லை,

காரணமும்,

அந்த முகமும்.

 

ஜன்னல்…

வெளிச்சத்தையும்,

காற்றையும்,

வெப்பத்தையும்,

இரைச்சலையும்,

மழைச்சாரலையும்,

ஏ ன்…

குருவிகளையும்,

அனுமதித்த,

நீ!

காதலை மட்டும்,

அனுமதியில்லை.

 

ஜன்னல்…

 

தச்சனும்,

கொல்லனும்,

கரம் கோர்த்து,

கவிதைகளுக்கானது போல்,

செய்ததால்,

இதில்,

கம்மாளர் புகழும் வந்தது.

 

போகிற திசையில்,

ஜன்னல் வழியே,

வம்படியாக வந்த

காற்றே.

 

ஒ…

எந்தன் காற்றே,

நீயாவது கேள்.,

மறுத்த காதலுக்காக,

மண்டியிடாத,

எந்தன்,

தன்மானத்தால்

தமிழ் கவிதை பல எழுதி

“கவிஞன்” – ஆன கதையை.

 

ஜன்னல்…

 

எங்கேயோ

ஒரு

ஜன்னலிலிருந்து,

TMS  பாடிக்கொண்டிருந்தார்

மெதுவாக.,

“காற்று வாங்க போனேன்

ஒரு கவிதை வாங்கி வந்தேன்”-என்று.

 

மணி பல கடந்து…

 

மீண்டும்,

போர்வைக்குள்

முகம்,

புதைக்க,

இருட்டானது,

இந்த நேரமும்,

சாத்தப்படாத

எந்தன்,

ஜன்னல்

வெளியில்.

 

 

 

 

                                                                                                         

 

 

 

Series Navigationபிறந்த நாள்இன்று தனியனாய் …
author

Similar Posts

2 Comments

Leave a Reply to P SRIDHAR Cancel reply

Your email address will not be published. Required fields are marked *