ஜெயாவின் விஸ்வரூபம்…

author
8
0 minutes, 2 seconds Read
This entry is part 14 of 32 in the series 3 பிப்ரவரி 2013

அக்னிப்புத்திரன்

தமிழ்நாட்டில் கமலின் விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் அரசியல் விளையாடிவிட்டதாகவே தெரிகிறது. முஸ்லீம் தோழர்கள் அதிகம் வாழும் மலேசியாவில் படம் ரிலீஸ் செய்யப்பட்டு படம் ஓடியதும் பின் தாய்நாட்டு முஸ்லீம் தோழர்களின் அறிவுத்தலால் அங்கும் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. அதுபோல கேரளா, ஆந்திரா போன்ற இடங்களில் அதிகமாக வாழும் முஸ்லீம் சகோதரர்கள் இருந்தும் படம் ரீலிஸ் செய்யப்பட்டதை கணக்கில் எடுத்துக்கொண்டால் இது அப்பட்டமாக ஜெயா டிவிக்காக முதல்வர் ஜெயாவால் அரங்கேற்றப்பட்ட திருவிளையாடல் என்பதில் சற்றும் ஐயமில்லை. அப்பாவி முஸ்லீம் மக்களைப் பகடைக்காயகப் பயன்படுத்தி உருட்டி விளையாடுகிறார்கள். அரசு நினைத்திருந்தால் எவ்விதமான தடங்கல்களும் இல்லாமல் படத்தைத் திரையிட்டு இருக்க முடியும்.  துப்பாக்கி திரைப்படத்திற்குப் பிரச்சினை வந்தபோது எவ்வளவு விரைவாகப் பிரச்சனை சுமூகமாக முடிக்கப்பட்டது. ஏன் அந்தச் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் விஸ்வரூபத்தில் இல்லை. காரணம் துப்பாக்கி திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமை ஜெயா டிவி வசம்!

இந்து மற்றும் இஸ்லாம் போன்ற மதங்களின் நம்பிக்கை சடங்குகளைக் கேலி செய்யும் எண்ணற்ற படங்கள் வெளிவந்துவிட்டன. அப்போது எல்லாம் இல்லாத அளவு இப்போது இந்தப் படத்திற்கு மட்டும் ஏன்  இவ்வளவு பெரிய சலசலப்பு? என்ன காரணம்?  சிந்திக்க வேண்டிய விஷயம்.

இந்து முஸ்லீம் சகோரர்களின் ஒற்றுமையை ஒரு திரைப்படமா பிரித்துவிடும்? அவ்வளவு பலவீனமாகவா உள்ளது இந்து முஸ்லீம் ஒற்றுமை? இல்லவே இல்லை.  வலுவான நல்ல ஒற்றுமை இருப்பதால்தான் மொழி, இனம், மதம் என்று பல வேறுபாடுகள் இருப்பினும் ‘இந்தியன்’ என்று நாம் பெருமைப்பட்டுக்கொள்கிறோம். அண்டை மாநிலங்களில் இதே திரைப்படம் ஓடும்போது  தமிழ்நாட்டில் மட்டும் ஏன் திரையிட்டிருக்க முடியாது? சட்டம் ஒழுங்கு அவ்வளவு மோசமாகவா உள்ளது தமிழகத்தில்? கமலின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு மட்டும் ஏன் தடைக்கு மேல் தடை?

பரவலாக பலரும் வெளிப்படுத்தும் கருத்துகள் இவை.

 

  1. ஜெயா டிவிக்கு சேட்டிலைட் உரிமை தருவதாக முதலில் கூறிய கமல், ஜெயா டிவி நிர்வாகம் அடிமாட்டு விலைக்குப் பேரம் பேசியதும் அதன் காரணமாக விஜய் டிவிக்கு நல்ல விலைக்கு அத்திரைப்படத்தை விற்பனை செய்துவிட்டதை அறிந்த மேலிடத்தின் கடுங்கோபமே முக்கியக் காரணம்!

 

  1. வேட்டி கட்டிய தமிழரைப் பிரதமராகப் பார்க்க விரும்புகிறேன் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைப் புகழ்ந்து ஒரு விழாவில் கமல் பேசியது, பிரதமர் கனவில் மிதக்கும் சக்திக்கு ஏற்படுத்திய  ஆத்திரத்தின் வெளிப்பாடே இது.

 

  1. இஸ்லாம் மதத்தினரைப் புண்படுத்தும் வகையில் பல காட்சிகள் உள்ளன என்று கூறி, சில இஸ்லாம் அமைப்புகளின்  எதிர்ப்பே தடைக்குக் காரணம்.

 

  1. இப்படத்தை திரையிட்டால் மத ஒற்றுமை குலைந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற அரசாங்கத்தின் நல்லெண்ணத்தின் வெளிப்பாடே இந்தத் தடைக்குக் காரணம்!

 

இந்த நான்கு காரணங்கள் தாம் பிரதானமாக ஊடக வாயிலாக வெளியிடப்பட்டு வருகின்றன.

 

சர்ச்சைக்குரிய எந்தப் படங்கள் வந்தாலும் நாலு பேர் எதிர்ப்பது என்பது இந்தியத் திரைப்படத்துறையினர் காலங்காலமாகச் சந்தித்து வரும் ஒரு பிரச்சனையாகும். அதை வளரவிடாமல் சம்பந்தபட்ட அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாகப் படங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு அண்மைய துப்பாக்கித் திரைப்படமும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

 

ஆனால், தணிக்கை முடிந்து திரையிடப்பட்ட விஸ்வரூபம் திரைபடத்திற்கு மட்டும்  தமிழக அரசாங்கமே முன் வந்து தடை விதித்தும் அத்தடையை நீதிமன்றம் நீக்கிய பின்பும் ஆக்ரோஷத்துடன் இரவோடு இரவாக மீண்டும் நீதிமன்றத்தை அணுகி மீண்டும் தடை வாங்கியதோடு மட்டுமில்லாமல் ஆங்கங்கே படத்தை வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்களையும் கமல் ரசிகர்கள் மற்றும் படத்தைக் காண வந்த பொது மக்களையும் காவல்துறையினரைக் கொண்டு மிகுந்த கெடுபிடிக்கு ஆளாக்கியதோடு அராஜகத்திலும் ஈடுபட்டது ஏன்?

 

ஜெயா டிவிக்குக் கிடைக்காத சினிமாவை ஒருசில முஸ்லீம் அமைப்புகள் எதிர்க்க…சறுக்கியவனுக்கு இதுவே சாக்கு என்பது போல தமிழக முதல்வர் ஜெயா இதைக் கையில் எடுத்துக்கொண்டு சொந்த விருப்பு வெறுப்புகளை கருத்தில் கொண்டு பழிவாங்கி, பிரச்சனையைப் பெரிதுபடுத்திப் பெரிய அளவில் பேச வைத்துவிட்டார் என்றே படுகிறது.  அதிகாரம் கையில் உள்ளது என்பதற்காக முதல்வர் ஜெயாவின் இந்த விஸ்வரூபத்தால், ஒரு நல்ல கலைஞரை அநியாயமாகக் கண்கலங்க வைத்த நிகழ்வு தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. அனைவருக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்திய இந்நிகழ்வு தனி ஒரு கலைஞனுக்கு மட்டும் ஏற்பட்ட அவமரியாதை இல்லை. ஒட்டுமொத்த  தமிழகத்திற்கே ஏற்பட்ட அவமரியாதையாகும்.

யாரை எங்கே எப்படி வைக்கனும் என்று யாருக்கும் புரியலை. அட அண்டங்காக்காவுக்கும் குயிலுக்கும் பேதம் தெரியலை!

                                          – அக்னிப்புத்திரன்

Series Navigation‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………15. ஜஸ்டிஸ் எஸ்.மகராஜன் – ‘டி.கே.சியின் கடிதங்கள்’.கைரேகையும் குற்றவாளியும்
author

Similar Posts

8 Comments

  1. Avatar
    punaipeyaril says:

    முஸ்லீம் தீவிரவாதிகளின் மிரட்டுலுக்கு ஜெ பணிந்தது அவருக்கே அவமானம். ஹவாலா தொழில் செய்பவன் ஜெ முன்பு காலாட்டி கொண்டு உட்கார்ந்ததை விட ஜெ க்கு என்ன அவமானம் வேண்டும். கமல் அதையும் தாண்டி வெல்வார். இணையத்தில் இவர்களால் படங்களை தடை செய்ய முடியுமா..? இல்லை தாலிபான்களிடம் போய் , குரான் படித்து விட்டு கொலை செய்தாரீகள் என்று சொல்லத்தான் தீரம் உண்டா…? இஸ்லாமை இவர்களிடத்திலிருந்து நல்ல முஸ்லீம்கள் காப்பாற்ற வேண்டும்.

  2. Avatar
    paandiyan says:

    மனம் போன போக்கில் எழுதப்பட்ட ஒன்று இது . இதையும் படியுங்கள்;
    http://www.techsatish.net/2013/02/blog-post_82.html
    http://www.techsatish.net/2013/02/blog-post_1109.html
    அப்படியானால் மேல உள்ள கட்டுரையில் உண்மை ஒன்று கூட இல்லையா ? முஸ்லிம் பயத்தை கமல் வியாபார வெறியை ஜெயா vs கமல் என்று ஆக்குவதற்கு என்ன விலை கொடுத்தார்களோ , நன்றகா கூவுகின்றார்கள்

  3. Avatar
    paandiyan says:

    லாட்டரி அதிபர் தீடிர் என்று படம் எடுக்கவில்லையா ? பின்புலம் சாராய ஆலையை கொடுத்து , படம் எடுக்க வைத்து , அதில் பணம் கறக்க வில்லையா . இவர்கள் தான் இன்று யோக்கிய சிகாமணிகள் போல பேசுகின்றார்கள்

  4. Avatar
    ஷாலி says:

    //அனைவருக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்திய இந்நிகழ்வு தனி ஒரு கலைஞனுக்கு மட்டும் ஏற்பட்ட அவமரியாதை இல்லை. ஒட்டுமொத்த தமிழகத்திற்கே ஏற்பட்ட அவமரியாதையாகும்.//

    அக்கினிபுத்திரன் சொன்னது சரிதான்.ஏனெனில் நாம் பள்ளியில் கரும் பலகையில் கற்றுக்கொண்டதை விட வெள்ளித்திரையில் நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்டதுதான் அதிகம்.ஆகவேதான் கோடம்பாக்கம் பல்கலைகழகத்திலிருந்து வருசையாக முதல்வர்கள்.கோலிவுட்டி லிருந்து கோட்டை வரும் கலைஞனுக்கு ஏற்ப்படும் அவமரியாதை ஒட்டுமொத்த தமிழகத்திற்க்கே! கூத்தாடிகளை கொண்டாடும் புதல்வர்கள் அக்கினியில் இறங்கினாலும் திருந்த மாட்டார்கள்.

  5. Avatar
    punaipeyaril says:

    சினிமாக்காரன் படமெடுத்தான் அது ஒரு வியாபாரம். இங்கு ரோட்டுக்காய் பிடுங்கப்படும் விவசாயநிலங்கள், எரிசாராய ஆலை அதிபர்கள் ஏழைகளிடம் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் கொள்ளையடித்த நிலங்கள், மருத்துவமனைகள் அடிக்கும் கொள்ளை, வாட்ச்மேன்கள் என்ற பெயரில் வாட்டி எடுக்கப்படும் ஏழை தொழிலாளிகள் இவர்கள் நிலைக்கு ஒட்டு மொத்த தமிழகமும் மனவருத்தம் கொள்ளாதாம்… ஒரு நிழல் பெண்மணியின் பேச்சைக் கேட்டு ஆடும் கமல் ஆடும் நாடகம் ஃபிளாப்பானதே உண்மை. இதில் முஸ்லீம் கட்டப்பஞ்சாயத்தாருடன் “டே நான் நண்பேண்டா” என்று கட்டிப்பிடி வைத்தியம் வேறு..

  6. Avatar
    paandiyan says:

    //அனைவருக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்திய இந்நிகழ்வு தனி ஒரு கலைஞனுக்கு மட்டும் ஏற்பட்ட அவமரியாதை இல்லை. ஒட்டுமொத்த தமிழகத்திற்கே ஏற்பட்ட அவமரியாதையாகும்.//

    கமல் பேசும் பொது — பேச ரெடி முதல்வருக்கு நன்றி – நான் அப்பீல் பண்ண போவது இல்லை — என்று இரண்டு முறை சொல்லி அந்த சொல்லை அதை செயல்படுத்தி solve பண்ணிகொண்ட பின்பும் அன்னகைலகுக்கு வேர்த்து வியர்கிறது பாருங்கள் . ஆகா என்ன பிரமாதம்…7 இடங்கள் கட் பண்ண ரெடி என்றால் என்ன அர்த்தம். இதை கருணாநிதி இருந்து சமரசம் பண்ண வேண்டியதான ???

  7. Avatar
    smitha says:

    I think JJ cannot be blamed totally for this. Yes, she has appeased the muslims. But the question is why did kamal not release the film on 11th Jan as scheduled?

    At that time, muslims’ response was muted. It was kamal who wanted to release in DTH & so it got postponed.

    Why blame JJ for this?

    After that, why did kamal show the movie to the muslim groups? He should have gone ahead with the release.

    Thuppaakki’s case was different. The film was released, after a few days of viewing, muslim groups protested & represented to govt & the matter was settled.

    U cannot compare the 2 cases.

    Assuming VR was released on 25th. Muslims would have indulged in rioting & as a result there would have been a lathi charge, gas shelling etc., Then, the same media would have cried hue & cry that JJ is supressing the minorities.

    We saw what happened on the 30th when the ban was lifted. a few theatres which screened VR were damaged. Devi & AGS cinemas in chennai were in that list.

    Kamal first said that it is cultural terrorism, then why did he backtrack & agree to edit the scenes? He could have done that after the first meeting itself.

    JJ is to blame, yes, but not totally.

    She is eyeing the muslim vote for the parliament elections. So is mu.ka & all other parties.

    Also, the truth that has been reinforced is that TN muslims who were supposedly seen to be “soft” as compared to their counterparts in other states, proved that they are as bad if not worse.

    Recently we all saw what happened to the US ewmbassy in the protest of muslims for a movie ‘Innocence of muslims” which was never even released here.

    After all, when in the entire country, only 1 mosque that too in chennai, conducts a prayer meeting for Osama Bin Laden, we know what to expect.

    JJ did not want to take chances.

  8. Avatar
    Needhidevan says:

    Thank GOD, another BENGAZI was not repeated on USConsul general at chennai. There are foreign hands active in TamilNadu. Instead of uplifting poor Muslims who live in abysmal conditions in Tamilnadu wallowing in abject poverty, poor health living conditions, lack of education, they are diverted on trivial non issues which does not affect their day to day life. Viswaroopam is a mediocre film best left ignored and a bad stry at that.. Refer margandaya gadju we Indians, Pakistanis are ace fools. Toys in the hands of western, Chinese governments

Leave a Reply to punaipeyaril Cancel reply

Your email address will not be published. Required fields are marked *