தனித்துப்போன கிழவி !

This entry is part 7 of 10 in the series 21 ஜனவரி 2018

 

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++

அடடா, தனித்துப் போன மனிதர்
அனை வரையும் நோக்கு !
அடடா, தனித்துப் போன மனிதர்
அனை வரையும் நோக்கு !
திருமணம் நடந்த கிறித்துவக் கோயிலில்
எடுக்கிறாள் அப்பம் ஒன்றை
அப்பாவிக் கிழவி !
கனவுகளுடன் வாழ்பவள் !
காத்துக் கிடப்பாள் முகம் காட்டி
கதவருகே
பாத்திர மொன்றை வைத்து !
யாருக் காக அது ?

எங்கிருந்து வருவாரோ
தனித்துப் போன மனிதர் எல்லாம் ?
எதனைச் சேர்ந்தவர்
தனித்துப் போன அனைவரும் ?
புனிதர் பாதிரியார் போதனை களை
கேட்பார் யாருமில்லை !
நெருங்கி
வருவார் யாருமில்லை !
பாரங்கே அந்த மனிதனை !
கிழிந்த போர்வையை
இருட்டிலே
தைத்துக் கொண்டி ருக்கிறான் !
எவரு மில்லை அருகில் !
கவலைப் படுவது யார் ?

அன்றைய நாளில்
கிழவி செத்துப் போனாள்
கிறித்துவ ஆலயத்தில் !
புதைக்கப் பட்டாள் பெயருடன்;
யாரும் வரவில்லை !
கை மண்ணை துடைத்து பாதிரியார்
புதை பூமியில் நடந்தார் !
யாரையும் காப்பாற்ற வில்லை !
எங்கிருந்து வருகிறார்
தனித்துப் போனவர் மனிதர் ?
எதனைச் சேர்ந்தவர்
தனித்துப் போன மனிதர் ?

++++++++++++++

Series Navigationபடித்தோம் சொல்கின்றோம் கோமகன் தொகுத்திருக்கும் “குரலற்றவரின் குரல்”விவிலியம் உணா்த்தும் வாழ்வியல் தன்மைகள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *