தாகூரின் கீதப் பாமாலை – 55 சொல்லிடும் மௌனமாய் !

This entry is part 14 of 28 in the series 10 மார்ச் 2013

தாகூரின் கீதப் பாமாலை – 55

சொல்லிடும் மௌனமாய்   !

Tagore

 

 

 

 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

கவர்ச்சி ஆற்றல் உள்ள உன்னிரு

கண்களின் புது மலர்ச்சி

திடீரென எனக்கு

விடுவிப்பு  அளிக்கும்

எல்லாப் பிணைப்பி லிருந்தும் !

ஊஞ்சல் ஆடுகிறது  வான் நோக்கி

இதயம் தன்

கதவைத் திறந்து !

வெகு தொலைவுக்கு அப்பாலிருக்கும்

காட்டு மரங்களின்  நறுமணம்

நழுவி வந்து அருகில்

தழுவிடும் என்னை !

 

மறைந்திருக்கும்

மரத்தின் நிழலைத் தொடும்

புல்லிலைகள்

சொல்லிடும் மௌனமாய் என்னிடம் !

எல்லா உடற் பகுதி களுக்கும்

எடுத்துக் காட்டும்

மென்மை என்ன வென்பதை !

மாங்காய் பூத்துக் கனியாய் மலரும் !

நெய்தல் நிலச் செடிவகை

சுருண்டெழும் அலை அலையாய் !

நெருங்கி வரும் அவை யாவும்

எனது

நெஞ்சருகில் !

 

+++++++++++++++++++++++++

பாட்டு : 74   1926 மார்ச்சு  மாதம் 26 ஆம் தேதி  தாகூர்  64 வயதில்  சாந்திநிகேதனத்தில் எழுதிப் பின்னர் பிரபாசியில் [Pirabasi in Badra 1333 BS] வெளியானது.

+++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com]  March 5, 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை -14 என்னைப் பற்றிய பாடல் – 7 (Song of Myself)வெள்ளி வீதி – (அல்ஜீரியா நாட்டுச் சிறுகதை)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *