தாகூரின் கீதப் பாமாலை – 72 மீளாத மாலைப் பொழுது .. !

This entry is part 20 of 25 in the series 7 ஜூலை 2013

 


Tagore

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

அந்தி  மங்கியச் செவ்வானில்

கார்முகில் மறைத்து விடும்

தாரகை தன்னை !

உரைத்திட நான்  நினைத்தது

இறுதியாகி விட்டது !

நீ  முழுவதையும் ஒரு வேளை

கேட்டிருக்க முடியாது !

அதனால் தான் சுமுகமாய்

நான் செல்ல நீ

அனுமதித்து விட்டாய் !

அதற்குப் பிறகு

வானத்தில் இடிமழை முழக்கம்

வாய்க்குரல்  ஆனது !

 

நானுன் முகத்தினுள் நோக்கிய போது

காண வில்லை நீ என்னை !

மோனக் கடும்துயரை மறைத்து விடும்

வானக் கருமை !

அந்தி மாலை அன்று போல்

வந்திடுமா மறுபடியும்

என்றாவது ?

எந்தன் ஆயுட் காலம் முழுதும்

அந்த மாலைப் பொழுது

வராமல்  போனது

நிரந்தரமாய் !

 

+++++++++++++++++++++++++++++

பாட்டு : 109   தாகூர்  66 வயதினராய் 1927 இல் இருந்த போது எழுதப் பாட்டு பிரபாசி [Pirabasi] இதழில் வெளியானது.

++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com] July 2, 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 14மருத்துவக் கட்டுரை – தூக்க மூச்சடைப்பு
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *