தாகூரின் கீதப் பாமாலை – 82 ஆத்மாவின் அமுதம் .. !

This entry is part 10 of 26 in the series 22 செப்டம்பர் 2013

 

 Tagore

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

 

எனது ஆத்மாவுக்குள் இருப்பது 

இன்னமுதம் ! 

உனக்கது வேண்டுமா சொல்  ?

அந்தோ !

அறிகுறி எதுவும் அதற்குத்

தெரியா திருக்கலாம்  உன்னிடம் !

வானுலத்தின்

வாடா மல்லிகை  நறுமணத்தை

நீ நுகர்வ தில்லையா  ?

ஒரு வேளை  அது

உன் கையிக் கெட்டாத்  தூரத்தில்

உள்ளதா ?

காதலின் மழைப்  பொழிவுகள்

நேர்வதுண்டு இங்கு !

அந்தோ

உனக்கது  தெரிவது மில்லை !

எப்போ தாவது

மழை முகிலுக்கு நடனமிடும் உன்

மனத்தின் மயில்

அப்படிச் செய்திருக்குமா ?

 

முறுக்கப் பட்டுள்ளன 

சீராயென்

வீணையின் நாண்கள்.

வானலகின் இன்னிசை தன்னை

வாசித்துப் பயில்கிறேன்

தாளமொடு,

ஒன்றிய  குரலொடு.

ஆத்மாவும் உள்ளமும்

பிணைந்து  நீ

கானம் பாடுவாயா  ?

அந்தோ !

ஒருவனாய் இல்லை நீ

குழுமி யுள்ள கூட்டத்தில்.

திரும்பத் திரும்ப  உனக்கு

அங்கிருந்து

அழைப்பு வருகிறது.

அதற்குப் பதில் கொடுப்பாயா

குழுவின்

பௌர்ணமிக் கொண்டாட்டம்

துவங்கி விட்டது !

அலை மோதாது இனிமேல்

உன்னிதயம் !

 

++++++++++++++++++++++++++++++

பாட்டு : 110   1937  வேனிற் காலத்தில் தாகூர்  76 வயதினராய்  இருந்த போது எழுதப் பட்டது.

++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com] September  18 , 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34ஆன்மீகக் கனவுகள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *