திண்ணையின் இலக்கியத் தடம் -18

This entry is part 25 of 27 in the series 19 ஜனவரி 2014

ambani

ஜூலை 7, 2002 இதழ்:

சதங்கை ஆசிரியர் வானமாமலை மறைவு: -எம்.வி. குமார்- குமார் தமது அஞ்சலியில் வானமாமலை புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்ததையும், தளராத அவரது இலக்கியப் பணியையும் குறிப்பிடுகிறார்.(என் குறிப்பு: தொண்ணூறுகளில் என் ஆரம்பக் காலத்தில் என் கவிதையை வெளியிட்டு அவர் ஊக்குவித்தார். அது மிகவும் உற்சாகமளித்தது. அவரை நான் என்றும் நினைவு கூறுவேன்).

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20207071&edition_id=20020707&format=html )

(அம்பானி)

அரசியல் -ஜே.கிருஷ்ணமூர்த்தி- தமிழாக்கம்- பி.கே.சிவகுமார்- நாம் அரசியல் உத்வேகங்களுக்கும் மத ரீதியான உணர்வுகளுக்கும் அடிமையாகிப் போயிருக்கிறோம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20207073&edition_id=20020707&format=html )

ஒரு நாடகமும் மூன்று பார்வைகளும்- (கிரீஷ் கர்னாடின் ‘அக்கினியும் மழையும்’ நாடகத்தை முன் வைத்து ஒரு அலசல்- துரோக்மும் கருணையும் – வளவ.துறையன், பெண்மையும் சூட்சியும்- ரகுராம், அன்பும் ஞானமும் -ஜெயஸ்ரீ
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60207071&edition_id=20020707&format=html )

ஜூலை 14, 2002 இதழ்:
இலைக்குணம்- புதுமைப்பித்தன்- கடம்பூர் போளி, அம்பாசமுத்திரம் முறுக்கு, ஆழ்வார் திருநகரி தேங்குழல், நான்கு நேரி நெய்யப்பம் என்று சுவைக்காக அலையும் நாக்குக்கு அடிமையானவர்களை நக்கலடிக்கும் கட்டுரை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20207141&edition_id=20020714&format=html )

விளையாட்டும் விபரீதமும்- பாவண்ணன்- (எனக்குப் பிடித்த கதைகள்-19- சி.சு.செல்லப்பாவின் குருவிக் குஞ்சு) – ஒரு இளைஞன் குருவிக் கூட்டில் உள்ள குஞ்சுகளில் ஒன்றை தன் தங்கையை மகிழ்ச்சிப் படுத்த என எடுத்து வந்து விடுகிறான். அந்தப் பெண் குழந்தை சற்று நேரம் அந்தக் குஞ்சுடன் விளையாடி விட்டு வேறு விளையாட்டுக்குப் போய் விடுகிறாள். அவனுக்கு அந்தக் குருவிக் குஞ்சை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. தான் எடுத்து வந்த கூட்டின் அருகிலேயே விட்டு விடுகிறான். தாய்க்குருவி அதை ஏற்கும் வரை பரிதவிப்போடு பார்க்கிறான்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60207141&edition_id=20020714&format=html )

யுவான் ருல்போவின் பெட் ரோ பராமோ காட்சி பதிவும் கதை வெளியும்-எச். பீர் முகம்மது – மெக்ஸிகோ வரலாற்றில் கிறிஸ்டேரோக்களின் கலகம் முக்கியமானது. அதை மையமாகக் கொண்டது இந்த நாவல்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60207142&edition_id=20020714&format=html )

ஒலிக்கும் சதங்கை-பாவண்ணன்- சதங்கை வானமாமலைக்குப் பாவண்ணனின் அஞ்சலி.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60207143&edition_id=20020714&format=html )

ஜூலை 22,2002 இதழ்: அம்பானியும் தலித்துகளும் – பாரத் ஜுன் ஜுன்வாலா- தலித்துகள் உயர்ந்த பதவிகளை வகிக்கும் கனவுகளைக் காண யாரும் அனுமதிப்பதில்லை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20207223&edition_id=20020722&format=html )

அம்பானியின் கண்கள்- ஓம்கார் கோஸ்வாமி- அம்பானியின் தனித்தன்மையும் பலமும் அவரது பிரம்மாண்டமான கனவுகள் .
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20207224&edition_id=20020722&format=html )

அனுபவித்தல்-ஜே.கிருஷ்ணமூர்த்தி- தமிழாக்கம்- பி.கே.சிவகுமார்- மனதிற்கு தொடர்ச்சி மட்டுமே தெரியும். எனவே அதன் தொடர்ச்சி தொடர்கிற வரை அதனால் புதியதைப் பெற இயலாது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20207225&edition_id=20020722&format=html )

லூயி போர்ஹே- நித்திய கலைஞனின் கதை உலகம்- பீர் முகம்மது- லூயி போர்ஹே தம் வாழ்நாளின் பெரும்பகுதியை எழுத்துக்காகச் செலவிட்டார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60207222&edition_id=20020722&format=html )

கவிதை- புதுமைப்பித்தன்- நகைச்சுவைக் கட்டுரை-
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60207225&edition_id=20020722&format=html )

புதுமைப்பித்தன்- எழுத்துகளும் பதிப்புகளும்- எம்.ஏ.நுஃமான் – பாஸிஸமும் பொது உடமையும் தொழில் யுகத்தின் உற்பத்திகளே என்ற புரிதல் புதுமைப்பித்தனுக்கு இருந்தது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60207226&edition_id=20020722&format=html )

ஜூலை 28,2002 இதழ்:

குஜராத்தும் நமது அறிவு ஜீவிகளும் – நீலகண்டன் அரவிந்தன்- குஜராத்தில் நடந்த மானுட அழிவுகள் மனிதாபமுள்ள அனைவராலும் கண்டிக்கத் தக்கவை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20207281&edition_id=20020728&format=html )

பெரியண்ணா மீது பெருவியப்பு- ராமசந்திர குஹா
வெளிநாட்டு சர்வாதிகாரிகள் மீது இந்திய மார்க்ஸிஸ்டுகள் கொண்டுள்ள பெரும் மதிப்பு விசித்திரமானது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20207282&edition_id=20020728&format=html )

நற்பண்பு-ஜே.கிருஷ்ணமூர்த்தி- தமிழாக்கம் – பி.கே.சிவகுமார்- பயிற்சி எதிர்ப்பு, நிர்ப்பந்தம் ஆகியவற்றின் மூலமாக மனம் தன்னை நிதானப் படுத்திக் கொள்ளலாம். ஆனால் அத்தகைய ஒழுக்கமானது இதயத்தின் நற்பண்பை அழித்து விடுகிறது. இதயத்தின் நற்பண்பு என்பது எதையும் புரிந்து கொள்வது ஆகும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20207284&edition_id=20020728&format=html )

முயல் தடுப்பு வேலி திரைப்படம்- ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் வாழ்வில் ஒரு கொடிய அத்தியாயம்- விக்டோரியா டெயிட்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20207286&edition_id=20020728&format=html )

பரவசமும் துக்கமும் – பாவண்ணன்(எனக்குப் பிடித்த கதைகள்-20- க.நா.சு.வின் ‘கண்ணன் என் தோழன்’ – தாய் மகன் பேரன். பேரன் ஒரு நண்பனுடன் பத்து நாட்கள் வெளியூர் போய்விடுகிறான். எங்கே போகிறேன் என்று சொன்னானோ அங்கே போகவில்லை. அவனது தோழனைப் புரிந்து கொள்ள முயலும் தந்தை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60207281&edition_id=20020728&format=html )

பாரதி தாசன்- புதுமைப்பித்தன்- பாரதியார் நமக்கு வைத்துவிட்டுப் போன சொத்துக்கள் பல. இவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கனக சுப்பு ரத்தினம் என்கிற பாரதிதாசன் என்று தான் சொல்ல வேண்டும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60207282&edition_id=20020728&format=html )

ஆகஸ்ட் 5, 2002 இதழ்:

நெஞ்சு பொறுக்குதில்லையே- ஆ.மணவழகன்-தியாகிகள், நம் பண்பாடு பற்றியெல்லாம் இளைஞர்கள் தெரிந்து கொள்ளும்படி பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20208052&edition_id=20020805&format=html )

இதயத்தின் எளிமை- ஜே.கிருஷ்ணமூர்த்தி- தமிழாக்கம்-பி.கே.சிவக்குமார்
எல்லா வழிகளும் எல்லா முடிவுகளும் பற்றுதலில் ஒரு வடிவமே. உண்மை நிலை பிறக்க அவையாவும் நிறுத்தப் பட வேண்டும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20208053&edition_id=20020805&format=html )

சகிப்புத்தன்மையில்லாத திராவிடர் கழகம்- சின்னக் கருப்பன்- ‘பெரியார் ஆனதென்ன ராஜாஜி’ என்று ஒரு வரி ஒரு பாடலில் ‘பாபா’ திரைப்படத்தில் வாலி எழுதியது. இதற்கு தி.க. மிகவும் எதிர்ப்புத் தெரிவித்ததால் ரஜினிகாந்த அந்த வரியை நீக்க ஒப்புக் கொண்டார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20208055&edition_id=20020805&format=html )

மாதுரி, பிரகாஷை உடனே விடுதலை செய்ய வேண்டும்- மோகன்- விபசார வழக்கில் கைதான மாதுரியும், நீலப்பட விவகாரத்தில் கைதான டாக்டர் பிரகாஷும் விடுதலை செய்யப் பட வேண்டும். அவர்கள் விருப்பமில்லாதவர்களையோ அல்லது குழந்தைகளையோ கட்டாயப் படுத்தவில்லை. அவர்கள் மீது போடப்பட்டுள்ள பழி தேவையற்றது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20208058&edition_id=20020805&format=html )

திலீப் குமாருக்கு விருது- எஸ்.அருண்மொழி நங்கை- பாஷா பாரதி வழங்கும் விருது திலீப் குமாருக்குக் கிடைத்துள்ளது. அவர் அசோகமித்திரனின் நடையில் அதே நகைச்சுவையுடன் எழுதுபவர்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60208051&edition_id=20020805&format=html )

புதிரின் திசையில்- பாவண்ணன் – (வண்ண நிலவனின் ‘அழைக்கிறவர்கள்’- எனக்குப் பிடித்த கதை -21)- கோவலனைப் போல ஒரு குடும்பத் தலைவன் ஆனால் அந்தக் குடும்பமே அவனது நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொள்வதில் உள்ள மனப்பாங்கு நுட்பமானது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60208052&edition_id=20020805&format=html )

திண்ணை என்ன சொல்கிறது?- திண்ணை ஆசிரியர் குழு- மூன்று வருடங்களுக்கு மேல் நடந்து வரும் திண்ணையில் வெளிவரும் விவாதரீதியான மற்றும் படைப்பு ரீதியான பதிவுகளை ஆசிரியர் குழு எப்படி அணுகுகிறது என்பது பற்றிய ஒரு வெளிப்படையான விளக்கம். இப்படி ஒரு விளக்கமும் கருத்துச் சுதந்திரமும் வேறெந்தத் தமிழ் மன்றத்திலும் கிடையாது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60208053&edition_id=20020805&format=html )

ஆகஸ்ட் 12, 2002 இதழ்: தன் படை வெட்டிச் சாதல்- நாஞ்சில் நாடன்- தளயசிங்கம் அமர்வில் பங்கேற்ற நாஞ்சில் நாடன் தம் தரப்பு விளக்கத்தைக் கூறுகிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60208121&edition_id=20020812&format=html )

இந்திய மார்க்ஸீயமும் அம்பேத்கரியமும்- எச்.பீர் முஹம்மது- இந்திய மார்க்ஸூயமானது முதலில் இந்தியமயப்பட்ட மார்க்ஸீயமாக மாற வேண்டும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20208125&edition_id=20020812&format=html )

எளிமையில் உறையும் மேன்மை- பாவண்ணன் (ஸேல்மா லாகர்வாவின் ‘தேவமலர்’ எனக்குப் பிடித்த கதைகள்-22)- திருடனின் (வனப்பகுதித்) தோட்டத்தில் ‘சர்ச்’சில் உள்ளதை விட அழகிய மலர்கள் பூக்கும். மேன்மை எளிமையில் உறையும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60208122&edition_id=20020812&format=html )

திண்ணைக்கு ஒரு குறிப்பு-சுந்தர ராமசாமி- மு.தளயசிங்கம் பற்றிய சு.ரா.வின் பதிவுகளுக்குக் கடுமையான விமர்சனம் தந்த ஜெயமோகனுக்கு தம் தரப்பை விளக்கி சு.ரா. தரும் பதில்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60208124&edition_id=20020812&format=html )

கொள்கை பரப்புதலில் கொங்கை பற்றிய கோட்பாடுகள்- எஸ்.ராமச்சந்திரன்-
கொள்ளும் பயனில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளித் பறித்திட்டவன் மார்பில் எறிந்தென் அழலைத் தீர்வேனே
(நாச்சியார் திருமொழி- 13:8)
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60208125&edition_id=20020812&format=html )

ஆகஸ்ட் 19,2002 இதழ்:

தளயசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்- சுந்தர ராமசாமி- இன்று இவருடைய சிந்தனைகள் ‘உட்டோப்பியா ‘ என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடியவை. தம் காலத்திய உலகு பற்றிய பிரக்ஞையுடன் அறிவுவாதங்களுக்கும் விஞ்ஞானத்தின் முன்னேற்றத்திற்கும் தன்னை ஆட்படுத்திக் கொண்டு இந்த உட்டோப்பியாவை முன் வைத்திருக்கிறார் தளயசிங்கம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20208195&edition_id=20020819&format=html )

மு.த.வின் மரணம்- மு.பொன்னம்பலம்-மு.தளயசிங்கம் போலீஸாரின் தாக்குதலால் நோய்வாய்ப்பட்டுக் காலமானார். அவர் சமூக நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீஸ் அவரை மிக மோசமாகத் தாக்கியது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60208191&edition_id=20020819&format=html )

சுந்தர ராமசாமிக்கு அன்புடன்- ஜெயமோகன்- மு.தளயசிங்கம் பற்றிய தொடர் விவாதத்தில் ஜெயமோகன் சுந்தரராமசாமி பற்றிக் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறார். 1. ஜெயகாந்தனைச் சிறுமைப்படுத்த சு.ரா. மு.தவை மலினப் படுத்தினார். 2.இலக்கிய அரசியலில் ஈடுபட்டார். 3.இலக்கிய வம்புகளில் ஈடுபட்டார். 4. சு.ரா.வுக்கு ஆழ்ந்த ஆய்வு பூர்வமான விமர்சனம் என்றால் என்னவென்றே தெரியாது. எஸ்.ராமகிருஷ்ணனும் இதே கருத்து உள்ளவர் (சு.ரா.பற்றி).5. அவருடைய எழுத்துப்பாணி கட்டவிழும் கற்பனையில் விரியாது. திட்டமிட்ட வார்த்தைக் கட்டமைப்பில் வரும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60208192&edition_id=20020819&format=html )

அன்பும் ஆசையும்- பாண்ணன் (எனக்குப் பிடித்த கதைகள்- 23 – முல்க் ராஜ் ஆனந்தின் ‘குழந்தை மனம்’)- ஒரு ஏழைப் பெற்றோர் சுமார் மூன்று வயதுக் குழந்தையை ஒரு சந்தைக்கு அழைத்துச் செல்கிறர்கள். அங்கே மிட்டாய்க் கடை, ராட்டினம் என செலவு பிடிக்கும் எதையும் நெருங்க விடாமல் அனதக் குழந்தையை நகர்த்திச் செல்லும் போது குழந்தை தாய் தந்தையரைப் பிரிந்து விடுகிறது. நல்ல மனிதர் ஒருவர் அந்தக் குழந்தையைக் கையில் தூக்கி விசாரிக்க முயல்கிறார். ஆனால் குழந்தை அழுகையை நிறுத்தவே இல்லை. அப்போது அவர் ‘மிட்டாய் வாங்கித் தரவா?’ ‘ராட்டினம் சுற்றுகிறாயா?’ என்றெல்லாம் கேட்கிறார். குழந்தைக்கு அவை எவற்றிலும் ஆர்வமில்லை. ‘அப்பா அம்மா’ என்று அழுதபடியே இருக்கிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60208196&edition_id=20020819&format=html )

ஆகஸ்ட் 25, 2002 இதழ்: நற்செய்தி பரப்பும் கருவியாக இனவாதம்- அரவிந்தன் நீலகண்டன்- பழங்குடியினரைத் தாழ்த்தியும், ஐரோப்பிய இனத்தை மேம்படுத்தியும் கிறித்துவ மிஷனரிக்களும், மேக்காலே முல்லர் போன்றோரும் செய்த பிரசாரம் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் மக்களுக்கு எதிரானது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20208251&edition_id=20020825&format=html )

ஆசையின் ஊற்று- பாவண்ணன் (எனக்குப் பிடித்த கதைகள்-24- காண்டேகரின் ‘மறைந்த அன்பு’)- இரண்டு சகோதரிகள். இளையவள் விதவையாகி விட அவளது தமக்கையின் கணவன் அவள் மீது ஆசையும் அன்பும் காட்ட அவளும் இணங்கி விடுகிறாள். சகோதரன் சகோதரிக்குப் பரிசு தரும் நாளில் அவள் தன் அத்தானையே தன் அக்காளுக்குத் திரும்பத் தரும் பரிசாக ஒரு கடிதம் எழுதுகிறாள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60208251&edition_id=20020825&format=html )

மொழிபெயர்ப்புச் சூழலும் சரஸ்வதி ராம்நாத்தும்- பாவண்ணன்- இளம் எழுத்தாளர் – மூத்த எழுத்தாளர் என்னும் பேதமின்றி பல தமிழ் படைப்புகளை ஹிந்தியிலும், ஹிந்தியிலிருந்து தமிழுக்கும் அவர் மொழிபெயர்த்துள்ளார். அஞ்சலியாக பாவண்ணனின் கட்டுரை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60208253&edition_id=20020825&format=html )

கோடுகள் வளைந்து செல்கின்றன: -எச்.பீர் முகம்மது – (ரமேஷ் பிரேமின் சொல் என்ற சொல்லை முன் வைத்து) – வளைந்து செல்லும் கோடுகளாக தொடர்ச்சியற்ற சம்பவங்களாக நாவலழிப்பு செய்யப் படுகிறது. அதற்குள் கரைத்தழித்தல் செய்யப் படுகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60208255&edition_id=20020825&format=html)

Series Navigation
author

சத்யானந்தன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    T R Natarajan says:

    சதங்கை ஆசிரியரின் பெயர் வானமாமலை அல்ல. வனமாலிகை

    ஸிந்துஜா

  2. Avatar
    sathyanandhan says:

    சுட்டிக் காட்டியதற்கு நன்றி. கவனக் குறைவுக்கு மிகவும் வருந்துகிறேன். அன்பு சத்யானந்தன்

Leave a Reply to sathyanandhan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *