தேடல் !

This entry is part 6 of 17 in the series 11 அக்டோபர் 2020

கவிதை

     

என் தேடல்

இப்போதும் தொடர்கிறது

என்முன் நிற்கிறதா

என்னைச் சூழ்ந்திருக்கிறதா

அல்லது

என்னுள் இருக்கிறதா என் மொழி

தேடல் பயனென்று

கனிகளெனப் பறித்து வந்தேன்

சில கவிதைகளை …

அவற்றுள்

ஆழ்ந்த இனிப்பெனத்

தங்கியது

கொஞ்சம் தமிழ்

இன்னும் தேடத் தேடப்

பொத்திப் பொத்தி

மறைத்து

வைக்கப்பட்டிருக்கும்

வைரங்களென

புதுமையும் நயங்களும்

படையெடுக்கும்

மொழியின்

இறுகிய மௌனம்

மெல்ல மெல்ல உடைய

கவிதை புன்னகை வழியத்

தலை காட்டும் …

Series Navigationபடித்தோம் சொல்கின்றோம்: நூலகர் நடராஜா செல்வராஜா தொகுத்திருக்கும் ஈழத்தின் தமிழ் நாவலியல் கையேடுகவிதைகள்
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *