நானும் ஜெயகாந்தனும்

This entry is part 10 of 39 in the series 4 டிசம்பர் 2011

‘ அவன் அந்த ஊருக்குள் நுழைந்த போது அந்த ஊரே நாற்றமடித்தது ‘
ஜெயகாந்தனின் இந்த முதல் வரிகள் கதை நாயகனைப் பற்றிய முழுமையான ஒரு உருவத்தை வாசகர்களின் மனதில் தோற்றுவித்துவிடும். அதுதான் ஜெ கேயின் மொழி ஆளுமை, கதை சொல்லும் திறன்.
இப்படி எத்தனையோ வரிகள் வாசகனைக் கட்டிப் போட்டிருக்கின்றன.
‘ கிளாஸ்கோ மல்லுல ரவிக்கை.. அதிலயும் கலரு.. அப்பா செத்தவுடனே செறச்சா கொட்டிண்டே.. ‘ { சில நேரங்களில் சில மனிதர்கள் }
ஜெயகாந்தனை எனக்கு கல்லூரிப் பருவக் காலங்களிலிருந்தே தெரியும்.. அதாவது ஒரு நூறு இருநூறு அடி இடைவெளியில். அப்போதெல்லாம் ஜெ கே பொதுக் கூட்டங்களில் பேசிக் கொண்டிருந்தார். சிவாஜி கணேசனின் பரம ரசிகனான எனக்கு மாம்பலம் கண்ணம்மாப்பேட்டை முக்கில் நடைபெறும் கூட்டங்களின் ஒலிபெருக்கி என் வீட்டு வாசல் வரை நீளூம். ஒலி, அனுமதி இல்லாமல் என் காதுகளில் நுழையும். அப்படி நுழைந்தது தான் ஜெ கேயின் குரல். துல்லியமான உச்சரிப்பு, சரியான ஏற்ற இறக்கம், குரலில் இருந்த கம்பீரம்.. தமிழுக்காக அதைக் கேட்க ஆரம்பித்தவன் நான்.
திராவிட கட்சியின் ஓட்டு வங்கி நடிகரை ‘ அராபிய அலி ‘ என்று சொன்ன தைரியம், காங்கிஸ் வேட்பாளரை ஆதரிக்க வந்து விட்டு கூட்டத்தில் பல்செட்டை தவறவிட்ட அவரை மேடையிலேயே ‘ இந்த பல்லில்லாக் கிழவர்கள் என்ன பாடு படுத்துகிறார்கள்’ என்ற எள்ளல், சுயேச்சையாக நின்ற போது மரங்களில் எல்லாம் பாரதியின் வரிகளை {அக்னிக் குஞ்சொன்று கண்டேன்.. } சிறு தகடுகளில் எழுதி வைத்த பாணி, வென்றால் தனியொருவனாக சட்டசபையில் என்ன செய்ய முடியும் என்ற நிருபரின் கேள்விக்கு ‘ சிறுநரிகள் கூட்டத்தில் சிம்மம் கர்ஜித்தால் எப்படி இருக்கும் ‘ என்று சொன்ன மன உறுதி என ஏகப்பட்ட நினைவுகள்.
ஆனால் அதே ஜெ கே எழுதுவதை எல்லாம் விட்டுவிட்டு கலைஞரின் பக்கத்தில் ஒடுங்கி நின்றபோது { ஏற்கனவே ஆள் குள்ளம்.. இன்னமும் ஒடுங்கினால் } பார்க்கச் சகிக்கவில்லை.
மேடைப்பேச்சுகளைத் தாண்டி ஜெ கேயின் கதைகளின் பால் என்னை இழுத்து வந்ததற்கு என் சகோதரன் ஒரு காரணம். அப்போதெல்லாம் கீழே இருக்கும் நாயர் கடையில் தினத்தந்தியும் குமுதமும் வாங்கி வாசித்துவிடும் பழக்கம் எனக்கு இருந்தது. ஆனந்த விகடன் ரெண்டாம் பட்சம் தான். அதிலும் கதைகளை வாசிக்கும் பழக்கமே இல்லை. அக்னிப்பிரவேசம் கதை வந்தபோது ‘ பொண்ணு கெட்டுப்போவாளாம்.. தலையில கொடம் தண்ணி கொட்டினா சரியாப் போயிடுமாம்.. என்ன அநியாயம் ‘ என்று என் உறவினர்கள் என்னைச் சுற்றி உச் கொட்டினபோது எனக்கு சுவாரஸ்யம் ஒரு பங்கு கூடியது. கற்பழிக்கப்படும் பெண்ணுக்கு வாழ்க்கையே சூன்யம் என்கிற ஒரு கட்டுப்பெட்டி சமூகத்தில் ஏற்பட்ட முதல் அதிர்வு அது. தவறு பெண்ணுடையது அல்ல அதனால் அவள் வாழ்வு முற்றுப்பெறவில்லை என்று ஒரு தாயே முயற்சி எடுப்பது அந்தண சமுகத்திற்கு ரொம்பவே புதுமை. இது வெறும் காலிங் ·பார் அடென்ஷன் ரகமா என்று ஒரு ஐயம் எழுந்தது. தேடி அவரது பல கதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். புதுமையான கருத்துக்கள்.
பாதி எரிந்த மனிதன் சிதையிலிருந்து உயிர் பெற்று ஊருக்குள் போகமுடியாமல் ஊர் எல்லையில் மரத்தின் பின்னால் நின்று ஊரைப் பார்த்தபடி இருக்கும் காட்சி இன்னமும் சித்திரம் போல் என் மனதில்.
சூதாட்டம் கூடாது என்பதில் வைராக்கியமாக இருக்கும் சாஸ்திரிகள், அவருக்கு தெரியாமல் லாட்டரிச் சீட்டு வாங்கும் அவரது மனைவி, அதற்கு ஒரு லட்சம் பரிசு விழுவது, கடைசியில் சாஸ்திரிகள் சீட்டைக் கிழித்துப் போடுவது.
சினிமாவுக்குப் போன சித்தாளு கதையில் ‘ அவன் பொட்டம்மே நா சீமாம்மே ‘ என்கிற வரிகள் சினிமா எப்படி எல்லோரையும் சீரழிக்கிறது என்பதற்கான வெளிப்பாடு.
ஆனாலும் ஜெயகாந்தன் என்கிற ஆளுமையை நெருங்கிப் பேசவேண்டும் என்கிற ஆவல் ஏனோ எனக்குள் வரவில்லை. அவரைப் பற்றிய செய்திகள் தான் அதற்குக் காரணம்.
ஒரு முறை பேருந்தில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார் ஜே கே. அருகில் நிற்கும் ஒருவன் மேல் கம்பியைப் பிடித்துக் கொண்டிருக்கிறான். அவன் அக்குள் வியர்வை தாங்கவில்லை. திரும்பி ஒரு அறை விடுகிறார். ‘ கையைக் கீழே வை ‘
பாண்டி பஜாரில் ஜே கே சைக்கிள் ரிக்ஷாவில் பயணப்படுகிறார். பிராந்திக் கடையில் சரக்கு வாங்கி அடித்து விட்டு மீதத்தை ரிக்ஷா ஓட்டிக்கும் கொடுத்து குடிக்க வைத்து விட்டு வாகனத்தை தானே ஓட்டுகிறார். ஓட்டி ஒய்யாரமாக சீட்டில் அமர்ந்திருக்கிறான். மணியன் இதழுக்கு கட்டுரை எழுதும்போது இந்துமதியோ, உஷா சுப்பிரமணியனோ ‘மடத்துக்கு’ வந்து ஜே கே சொல்ல சொல்ல சுருக்கெழுத்தில் எழுதிக் கொண்டு போவார்கள். ஒரு நாள் முன்புதான் வரவேண்டும். நடந்து கொண்டே சொல்வார். இடையில் நண்பர்களோடு பேச்சு, கஞ்சா இழுப்பு.. மறுவாரம் விட்ட இடத்திலிருந்து தொடருவார். எடுத்துக் கொடுக்க வேண்டாம். முடித்தவுடன் ‘ போதும் போ ‘ அவ்வளவுதான்.. கெட் லாஸ்ட்!
விகடன் ஆசிரியர் திருவல்லிக்கேணி சேரிக்குள் போய் ஜே கே யிடம் கதை வாங்கிக் கொண்டு வந்தது. ‘ என்னை நம்பி ஏன் வந்தே.. உன்னை நம்பு ‘ என்று இளைய ராஜாவை விரட்டியடித்தது போன்ற செய்திகள்.
இத்தனைக்கும் பெரிய ஆகிருதி இல்லை.. பெரிய தலை, முறுக்கி விடப்பட்ட நீண்ட மீசை, கிட்டத்தட்ட உதடு வரை நீளும் கிருதா, { இவையில்லையென்றால் ஜே கே அவ்வளவு பயங்கரம் இல்லை }, அகன்றதோள்கள், குறுகிய இடை, அதைவிட மெலிசான கால்கள், ஐந்தடி உயரம்.
‘ ஒரு முன்னுரையில் ஜெ கே எழுதுகிறார்: ‘ என் வண்ணங்கள் தீர்ந்து போகாது.. என் உயரத்தை யாரும் எட்டிப் பிடிக்க முடியாது. ‘ ஜெ கே யின் முன்னுரைகளும் சுவையானவை. அவர் புத்தகங்களுக்கு யாரும் அணிந்துரை எழுதுவது கிடையாது.
ஒரு நான்கைந்து வருடங்களுக்கு முன் ஜே கே மைலாப்பூர் ரானடே நூலகத்தின் மாடியில் ஒரு கூட்டத்திற்கு வருகிறார். பழைய காலமாக இருந்தால் இப்படி எழுதி இருக்கலாம். ‘ அவர் அங்கு நுழைந்தபோது அந்த அரங்குக்கு ஷாக் அடித்தது..’ அப்படியெல்லாம் ஒன்றுமில்லை இப்போது.. முன் வரிசையில் நான் டிஸ்க்ரிப்ட்டாக உட்கார்ந்திருக்கிறார். கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரிடம் போய் சிறகு இதழ் ஒன்றைத் தருகிறேன். தூக்கி வீசி விடுவாரோ என்கிற பயம். வாங்கிக் கொள்கிறார். புரட்டுகிறார்.
இரண்டாவது பக்கத்தில் இப்படி எழுதியிருக்கிறேன்: ஜே கே இப்போதெல்லாம் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்.. ஹீ ஸீம்ஸ் டு ஹேவ் மெல்லோவ்ட்..’
ஜே கே பேசுகிறார். சிற்றிதழ் காலத்து அனுபவங்கள், மணிக்கொடி, வானம்பாடிக் கால நினைவுகள். இடையில் ஒரு வரி: ‘ வயதாகிவிட்டது அதனால் மெல்லோவ்ட் என்கிறார்கள்.. கிட்டே வாருங்கள் தோழரே தெரியும் ‘
என் வரிகள் ஜே கேயை பாதித்ததில் எனக்குச் சந்தோஷம். மேடையில் வீசீ எறிந்து விட்டுப் போன சிறகு இதழை கே எஸ்ஸிடம் சேர்ப்பிக்கிறேன். அதற்கப்புறம் அது எங்கே வீசி எறியப்பட்டதோ.

Series Navigationகு.ப.ரா. சிறுகதைகள் – ஒரு பார்வைபழமொழிகளில் தொழிற்சொற்கள்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

4 Comments

  1. Avatar
    காவ்யா says:

    “இது வெறும் காலிங் •பார் அடென்ஷன் ரகமா என்று ஒரு ஐயம் எழுந்தது -”

    இந்த வரி ‘ஜெயகாந்தனை எனக்கு கல்லூரிப் பருவக் காலங்களிலிருந்தே…”…என்று தொடங்கும் பத்தியில் சொல்லப்பட்டவைகளுக்குப் பொருந்தும்.

    ஜெ.கா வைப்போன்று எழுத்துலகத்தில் பலரை வெகு சாதாராணமாகப் பார்க்கலாம். தமிழிலும் ஆங்கிலத்திலும். எல்லாரும் நம்மைப்போன்ற சாதாரணமானவர்கள்தான்; ஆனால் எழுத்துகளால் அவர்கள் பிரபலமாகும்போது அவர்கள் தங்களைப் பிறரிடமிருந்து வேறாகக் கணித்துக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் எழுத்துக்களைப் பலர் பொழுதுபோக்காகத்தான் படிக்கிறார்கள்; சிலர் அதை வேறுமாதிரியாக எடுத்தாலும், அதுவும் ஒரு பொழுதுபோகா வேளைகளில் பிறரிடம் உரையாட மட்டுமே. Leisurely literary talk. I indulge in such talks with my friends who are otherwise well occupied in their respective professions; but we gather together sometimes in the evenings over tea to talk about Tamil, Malayalam and English writers.

    We need a life of literary leisure. But the stupid writer deludes himself to think we need him as we need oxygen.

    இதைத்தெரிந்து கொண்டாலும், எழுத்தாளன் மனம் கேட்காது. என்னவோ தன் எழுத்துகளால்தான் உலகமே நகல்கிறது என்ற Delusion. அஃது அவர்களை தங்களுக்கென ஒரு செயற்கையான பிம்பத்தைக் கட்டமைக்க ஆரம்பித்து அப்பிம்பத்திற்கு ஜோடனைகள் பண்ண ஆரம்பிக்கிறார்கள்; ஏற்கனவே அவர்களின் படைப்புக்களால் ஈர்க்கப்பட்ட வாசகர்கள், அவர்களின் அபிமான எழுத்தாளர்களின் சுய ஆளுமை ஜோடனைகளைக்கண்டு விட்டில் பூச்சிகளைப்போல விழுகிறார்கள்; எழுத்தாளர் தும்மினாலும் வியப்பாகப் பார்க்கிறார்கள். இதைக்கவனித்த எழுத்தாளன், அச்செயற்கை விளையாட்டுக்களை (gimmicks) மேலும்மேலும் செய்து தன்னை ஒரு போதை உலகில் சஞ்சரிக்க வைத்து இன்பம் காண்கிறான். இன்று நாம் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளரின் புரட்சிகரமான சேட்டைகளைக்கண்டு இரசித்து வருகிறோம். ஆனால் அவரின் வாசகர்களோ அவற்றைப் பூஜிக்கிறார்கள். . Such writers have delusion of grandeur. They need not be so; for, their books will give them grandeur. Alas, they are ordinary moratals and cant help falling victims to such mental aberrations. (I don’t want to call it mental disorder; but psychologists call it so)

    The writers are a kind of patients. Psychologists have analysed the personalities of many writers. Recent book on Dickents on his 200th anniversary are some examples. All bizarre acts that are attributed to Jeyakanthan in this essay fall under the category of desparate attempt to give a false picture to society. Another fine and tragic example is Ernest Hemmingway, the American novelist. He oscillated between two selves: macho and ordinary. Unable to bear the false self, he committed suicide.

    As the author of this article has correctly described: attention getting devices. Not all writers fall under the category. Majority of them are prone to fall.

    நான் மேலே கூறியவை அவர்களின் படைப்பிலக்கியத்துக்குப் பொருந்தா. ஏனெனின், அது அவர்களின் குருதியிலிருந்து வெளிப்பட்டவை. எழுத்துக்கப்பாற்பட்டு அவர்கள் செய்யும் சேட்டைகள் வேறு; எழுத்துக்கள் வேறு. In his writing, a writer reveals his real self. Out of it, he lives a false life. The grandeur and awesome attraction of the writings of Earnest Hemmingway or Charles Dickens will endure for a long, long time; and all generations, past, present and future, will be in thrall of their written words. Take their novels, you will know what I mean. So also, Jeyakanthan and his written words, barring a few nonsense! His gimmicks do not add anything to his already established niche in modern Tamil literature. Perhaps, it may add an important essay to Thinnai as we see hear! Ha..ha…!

    இது பொது வாழ்க்கையில், குறிப்பாக எழுத்து, நாடகம், சினிமா போன்ற துறைகளில் உள்ள நட்சத்திரங்களுக்குப் பொருந்தும்.

  2. Avatar
    sathyanandhan says:

    Kaavya,A writer is judged from his contribution when compared with his contemporaries. It is not too late. You can atleast now read the works of Jayakanthan without making repeated remarks arbitrarily. Sathyanandhan

    1. Avatar
      காவ்யா says:

      //A writer is judged from his contribution when compared with his contemporaries//

      அதைத்தானே நானும் சொல்கிறேன். அவரின் படைப்புக்களை நோக்குங்கள். படியுங்கள்; அலசுங்கள். வாதிடுங்கள். தீசிஸ் எழுது எ.ஃபில் வாங்குங்கள்.
      மாறாக, அவர் எங்கே எப்படித் தும்மினார்? எவனை எங்கே கன்னத்தில் எதற்காக அறைந்தார்? என்று பார்த்து, ஏன் “ஆஹா!..ஒஹோ!!” என்று புகழ வேண்டும்?
      நாலந்தர சினிமா இரசிகன், திரைப்பட நடிகனுக்கு பாலாபிசேகம் பண்ணுகிறான் அவன் நடிப்பு எப்படியிருந்தாலும் அவனுக்குத் தேவையில்லை. இந்த இரசிகனுக்கும் எழுத்தாளன் எதைத்தூக்கி எங்கே வீசியெறிந்தான் என்று சிலாகிப்பவருக்கும் ஏதாகினும் வேறுபாடு இருக்கிறதா ?
      இருக்கிறது: இவர்கள் படித்தவர்கள். நடிகனுக்குப் பாலாபிசேகம் பண்ணுபவர்கள் விடலைப்பையனகள். அவர்களுக்கு வாழ்க்கையில் இம்மாதிரி கேளிக்கைகள் தேவை. உளவியலாளர்கள் அவை தேவை என்கிறார்கள்.
      யாருடைய நடத்தை விமர்சிக்கப்படவேண்டும்? கல்லூரி இரண்டாமாண்டு படிக்கும் மாணவன் முதலாண்டு மாணவிக்குக் காதல் கடிதம் கொடுக்கும் செயலையா? அல்லது, 60 வயதுக்கிழவன் 20 வயதுப் பெண்ணைப்பார்த்து அழைக்கும் செயலையா?

  3. Avatar
    Dr.G.Johnson says:

    Siragu Ravichandran has painted a picture of the other side of Jayakanthan with various episodes that he has seen and heard.
    Kaavya has gone to the extent of pointing Dickens and Hemmingway to say these gimmicks and odd behavior of writers are due to delusions of grandeur or mental aberration.
    Writers nowadays are strange people with strange ideas. They revel in fantasy and fail to be part and parcel in society. They are segregated and not united among themselves. Writers are not good social leaders. They are unable to lead society.
    During Anna’s period writers of the Dravidian movement were all leders in society with followers. They can write and also lead society. Kalaignar,Kannadasan, C.P.Citrarasu, A.V.P. Asaithambi, S.S.Thennarasu and many more were writers as well as leaders in society.
    But it is sad that the present day writers cannot be leaders in society. They are most often selfish and self-centred.They revel in name and fame.
    Their contribution to society is only their writing and nothing else.They are admired by a handful of readers and not by society as a whole.
    The writings of Jayakanthan are marvellous and a treasure for Tamil literature. But Jayakanthan has failed to be a good leader.
    Writers should not be strange people with strange ideas. They should be good role models for society…Dr.G.Johnson. Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *