நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்? திரு.மாரிதாஸின் நூல் குறித்த ஒரு சிறு அறிமுகம்

This entry is part 10 of 19 in the series 8 ஏப்ரல் 2018

_ லதா ராமகிருஷ்ணன்

நான் ஏன்
நரேந்திர மோதியை
ஆதரிக்கிறேன்?
திரு.மாரிதாஸின் நூல் – கிழக்கு பதிப்பக வெளியீடு
(பக்கங்கள் : 256 / விலை ரூ.225
– தொடர்புக்கு: 044 4200 9603 / maridasm@gmail.com

நூல் குறித்த ஒரு சிறு அறிமுகம்

கேப்டன், உலகநாயகன், தளபதி, கவிப்பேரரசு போன்ற அடைமொழிகளை வெகு இயல்பாகப் பயன்படுத்தும் அறிவுசாலிகளுக்குக் கூட இந்தியாவின் தற்போதைய பிரதமர் திரு. நரேந்திர மோதி வெறும் மோதி அல்லது வக்கிர வசைகளுக்குரிய மோதியாகவே இருப்பது இன்றைய நிலவரம்.

ஆளுக்கொரு கட்சியைச் சார்ந்திருப்பவர்கள், அவரவருக்கென்ற மத அடையாளங்க ளுடன் இருப்பவர்கள் பொதுவெளியில் திரு. மோதியை எத்தனை ஆக்ரோஷமாக, கொச்சையான வார்த்தைகளால், மிக வன்முறையார்ந்த வார்த்தைகளால் தொடர்ந்து வசைபாடிக்கொண்டி ருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வியப்பாயிருக்கும். அரசியல் மேடைகளிலெல்லாம் அமைதிப் புறாவோ, நியாயத்தராசோ, நிஜம் எழுதும் பேனாவோ தரப்படாமல் வீரவாளே பெரும்பாலும் பரிசாகத் தரப்படுவதைப் பார்க்கும்போது ஒருவேளை நாம் இன்னும் வாரிசுதார மன்னராட்சித் தாக்கத்தி லிருந்து விடுபடவில்லையோ, எளிய வாழ்க்கைப் பின்புலத்திலிருந்து வந்தவர் என்பதுகூட பிரதமர் மோதிக்கான சிலரின் எதிர்ப்புக் உளவியல்ரீதியான காரணமாக இருக்கக்கூடுமோ என்று தோன்றும்.

இனக்கலவரம், மதக்கலவரம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததேயில்லை என்பது போன்று சிலர் பேசிவருவதையும், பா.ஜ.க ஆட்சியில் இனக்கலவரமும் மதக் கலவரமும் தலைவிரித்தாடுவது போலவும், மத அடிப்படைவாதத்துக்கு ஊழலே மேல் என்று சில கட்சிகள் வெளிப்படையாகவே ஊழலை ஆதரித்துப் பேசிவருவதை யும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் சமத்துவம், சமநீதி குறித்த விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் குறைவு, தமிழ்நாட்டில்தான் அவை அதிகம் என்பதாகவும், அச்சு ஊடகங்களிலும் ஒலி-ஒளி ஊடகங்களிலும் நாள் தவறாமல் சிலர் கருத்துரைத்தபடியிருப்பதையும் அவர்களுக்கு ஊடக வெளிச்சம் அதிகம் கிடைப்பதையும் காணமுடிகிறது. மோதி ஆட்சியில் சிறுபான்மை சமூகத்தினருக்குப் பாதுகாப்பில்லை என்பதாய் ஒரு பயம் திட்டமிட்டரீதியில் மக்களிடையே பரப்பப்பட்டுவருவதைப் பார்க்கமுடிகிறது. ஊரில் நடக்கும் அத்தனை அக்கிரமங்களுக்கும் பிரதமர் மோதியே காரணமாகச் சுட்டப்படுகிறார். இது எவ்வளவு தூரம் சரி என்று யாரேனும் கேட்கத் துணிந்தால் அவர்கள் பிற்போக்குவாதிகள், அடிப்படைவாதிகள், அராஜகவாதிகள் என்று பகுப்பதே அறிவுசாலித்தனமாக இருக்கிறது.

முக்கிய தொலைக்காட்சி சேனல்கள் பெரும்பாலும் கட்சிகளால் நடத்தப்படுபவை, கட்சி சார்புடையவை, என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். எனவே இவற்றில் ஒரு விவாதம் நடத்தப்படும்போது எடுத்துக்கொள்ளப்பட்ட கருப்பொருள் குறித்த வல்லுனர்கள் அதிகம் இடம்பெறுவதில்லை என்பதோடு சேனல் ஆதரிக்கும், அல்லது சேனலை நடத்தும் அரசியல்கட்சி எந்தக் கருத்தை பொதுவெளியில் வைக்க, வலியுறுத்த விரும்புகிறதோ அந்தக் கருத்தை ஆதரிக்கும் பேச்சாளர்கள் மூவரும் எதிர்க்கும் பேச்சாளர் ஒருவரும் என்ற விகிதாச்சாரத்திலேயே விவாதத்தின் பங்கேற்பாளர்கள் தேர்வுசெய்யப்படுவது கண்கூடு.

கருத்துச்சுதந்திரம் எல்லோருக்கும் பொது என்ற உண்மையை ஏற்க மறுப்பவர்களாய் இந்துமதம் சார்பாகவும், பா.ஜ.க சார்பாகவும் சில கருத்துகளை வெளியிடுபவர்களை மத அடிப்படைவாதிகள் என்று முத்திரை குத்துவதும், அறிவீலிகளாய், அகங்கார மனிதர்களாய் அவர்களை அடையாளம் காட்டுவதும் மறைமுகமாய் அவர்களை அச்சுறுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாற்றுக் கருத்துடையவர்களை முட்டாள்கள் என்பதும், மனிதநேய விரோதிகள் என்பதும் கருத்துச் சுதந்திரத்திற்காகக் குரல்கொடுப்பவர்களும் கடைப்பிடிக்கும் வழிமுறையாக இருக்கிறது.

இந்தச் சூழலில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும், திரு. மாரிதாஸ் எழுதியுள்ள, ‘நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்’ என்ற நூல் படிக்கக் கிடைத்தது. இந்தியாவை நேசிக்கும் இளைய தலைமுறையினருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும் இந்த நூலில் இடம்பெற்றிருப்பவை மாரிதாஸின் முகநூலில் வெளியாகியவற்றின் செழுமைப் படுத்தப்பட்ட வடிவம் – பலர் அவரிடம் கேட்டிருந்த கேள்விகளுக்கு முகநூலில் பதில் அளித்திருந்தார்’ என்ற விவரம் நூலில் தரப்பட்டிருக்கிறது.

’ஒர் ஏழை இந்துக் குழந்தை முதல் இஸ்லாமிய வீட்டு ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கை வரை அனைத்து இந்தியக் குடும்பங்களின் வாழ்வும் நல்ல முன்னேற்றம் காணவேண்டும் என்பதுதான் என் எண்ணமே ஒழிய வேறு இல்லை. என் அக்கறை என்பது மதவாதம் சார்ந்த விஷயம் அல்ல; இந்த மண்ணின் எதிர்காலம் சார்ந்த விஷயம்’ என்று என்னுரைப் பகுதியில் குறிப்பிடும் நூலாசிரியர் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் எது தவறு, எது சரி என்று கூறுவதைவிட எது உண்மை என்று கூறிவிடவேண்டும் என்பதால் இந்தப் புத்தகத்தை அவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாகக் கூறியுள்ளார் நூலாசிரியர்.

நூலாசிரியர் பற்றிய சிறு அல்லது விரிவான விவரக்குறிப்பு நூலில் தரப்படவில்லை. அவசியம் தரப்பட்டிருக்கவேண்டும். இந்த நூல் என்றில்லை. பொதுவாகவே நம் தமிழ்நூல்களைப் பொறுத்தவரை பல நூல்களில் பரவலாகத் தெரிந்த படைப்பாளி என்ற எண்ணத்தாலோ என்னவோ நூலாசிரியர் குறித்த சிறுகுறிப்பு இடம்பெறுவ தில்லை. இன்று எத்தனை பரவலாகத் தெரிந்தவராயிருந்தாலும் வருங்கால சந்ததி யினரும் இந்த நூல்களைப் படிப்பார்கள் என்ற உண்மையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு அவர்களுக்கு நூலாசிரியர் யார் என்று அறிமுகம் செய்துவைக்கவேண்டிய தேவையிருக்கிறது. எனவே, தமிழில் வரும் புனைவு, அ-புனைவு நூல்களுக்கும், மொழிபெயர்ப்புநூல்களுக்கும் நூலாசிரியர் குறித்த அறிமுகம் விரிவாகவே இடம்பெறவேண்டியது அவசியம். இதை நூலாசிரியர்களும், பதிப்பாளர்களும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

’இந்தப் புத்தகத்தில் பண மதிப்பு நீக்கம், பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள், கறுப்புப் பண விவகாரம், பெட்ரோல் விலையேற்றம், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு சீர்திருத்தம், இணையம், துறைமுகம், மீத்தேன் வாயுத்திட்டம், சாகர்மாலா திட்டம் போன்றவை தொடர்பான அவதூறுகளுக்கான பதில்கள் இடம்பெற்றுள்ளன’ என்று தெரிவிக்கும் பின்னட்டை Blurb ’இந்த நூல் குறித்து எழுதப்பட்டுள்ள மக்களும் இளைய தலைமுறையினரும் வாசிக்கும்போது நரேந்திரமோதியின் மீதும் பி.ஜே.பி அரசின் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையான மனதுடன் படிக்கவும். இந்தப் புத்தகம் பிஜேபி மீதான அக்கறையுடன் அல்ல; உங்களின் மீதான அக்கறையிலேயே எழுதப்பட்டுள்ளது’ என்று தன்னிலைவிளக்கம் தருகிறது.

நூலில் இடம்பெறும் கேள்விகளும் அவற்றிற்குத் தரப்பட்டிருக்கும் அகல்விரிவான பதில்களும் சிந்திக்கத் தூண்டுபவை. சில பதில்கள் குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பவர்களுக்கும் படிக்க சுவாரசியமான நூல். இத்தகைய நிதானமான, தர்க்கரீதியான உரையாடலுக்கான வெளி விரிவடைவது மக்களாட்சிக்கு நல்லதே.

Series Navigationகேள்வி – பதில்மருத்துவக் கட்டுரை பக்க வாதம்
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

11 Comments

  1. Avatar
    BSV says:

    கட்டுரையில் முதல் ஐந்து பத்திகள் (கிட்டத்தட்ட 50 விழுக்காடுக்கும் மேல்) லதா ராமகிருஸ்ணனே ”நான் ஏன் மோடியை ஆதரிக்கிறேன்?” என்று விளக்குவதைப்போல இருக்கிறது. இவரே ஒரு நூலே எழுதியிருக்கலாம். இக்கட்டுரை இன்னொருவரின் நூல் விமர்சனம் அன்று. தானும் மாரிதாசும் ஒன்றுதான் சிந்தனையில் – அதாவது மோடி ஆதரவார்க‌ளே! – என்பதாகத்தான் இக்கட்டுரை.

  2. Avatar
    சுப. சோமசுந்தரம் says:

    தமிழ்ச் சமூகத்திற்கு எதிரான கருத்துக்களே அதிகம் இடம் பெறுவதாய்த் தெரிகிறது.உதாரணமாக மோடி ஆராதனை, அணுசக்தி, ஹைட்ரோ கார்பன் போன்ற அழிவுத் திட்ட ஆதரவுக் கருத்துக்கள் அதிகம் இடம் பெறுகின்றன. திண்ணை வலப்புறம் சாய்கிறதோ?

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      சாயமாட்டோம் என்று எப்போதாவது உத்தரவாதம் கொடுத்திருக்கிறதா திண்ணை ? அல்லது வலப்புறம் என்பது சாயக்கூடாத தீட்டுப்பட்ட புறமா ?

      1. Avatar
        BSV says:

        உத்தரவாதம் கொடுத்துவிட்டால் தொல்லையே இல்லை. வலமோ, இடமோ – அதை நேரடியாகச் செய்தால், கேள்விகள் எழா. ‘சரி அவங்க அப்படித்தான்…! என்று போய்விடுவார்கள்; வலமாக இருந்தால் வலது சாரிகளும், இடமாக என்றால் இடது சாரிகளும் வாசகர்களாகி விடுவார்கள். தமிழில் தற்போது ”வலம்” என்ற பேரிலேயே தமிழக இந்துத்வாவினரால் ஒரு பத்திரிக்கை தொடங்கப்பட்டிருக்கிறது. அங்கு எல்லாமே இந்துத்வா கொள்கை சார்ந்த பதிவுகளே. எழத்தாளர்கள்; மற்றும் நடாத்துவோர் அக்கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்கள். எனவே அக்கொள்கை சார்பினர் மட்டுமே வலம் பத்திரிக்கை வாசிப்பாளர்கள். மற்றவர்கள் நுழைய மாட்டார்கள். இப்படி தங்களை யார் என திறந்து காட்ட வேண்டும். மாறாக, அங்குமில்லை; இங்குமில்லை; தாம் ஒரு அறநிலை எடுப்போர் எனப் பாவ்லா காட்டிக்கொண்டு, வலச் சாய்வாக இருப்பதில் – அறநிலை என்பதையே தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். மற்றபடி, வலமோ, இடமோ – அஃதொரு ஒரு கொள்கை; எவரும் எந்நிலையை எடுத்துக்கொள்ளலாம். அப்படி எடுக்கும்போது பாவம், கொடூரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. த‌ம் கட்சி எது செய்தாலும் அதை கண்மூடித்தனமாக ஆதரிக்கும்போது அறம் செத்துவிடும்.

        1. Avatar
          பொன்.முத்துக்குமார் says:

          அப்படி ஏன் ஒரே முத்திரையை அல்லது முகமூடியை தாங்கி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கவேண்டும் ? ஒவ்வொரு பிரச்சினையைப்பொறுத்தும் ஒருவருக்கே, வலது அல்லது இடது சார்ந்த பார்வை மாறுபடக்கூடாதா ?

          அல்லது இரண்டு தரப்புகளுக்கும் இடமளிக்கும் ஒரு மேடையாக திண்ணை விளங்கக்கூடாதா ? இது என்ன கட்சியின் ஊதுகுழலா ?

  3. Avatar
    சுப. சோமசுந்தரம் says:

    நான் மேற்கூறிய எனது கருத்து பொதுவாக இந்நாள் திண்ணை பற்றியது.இக்கட்டுரையின் பின்னணியில் எழுதினேன்.மற்றபடி அழிவுத் திட்ட ஆதரவுக் கருத்துக்கள் இக் குறிப்பிட்ட கட்டுரையில் இடம் பெறவில்லை.

  4. Avatar
    ஷாலி says:

    நான் ஏன் ராகுல் காந்தியை ஆதரிக்கின்றேன்?…என்று ஒரு காங்கிரஸ்காரர் கூறுவதையும்…” நான் ஏன் செயல் தலைவர் ஸ்டாலினை ஆதரிக்கின்றேன்?”…என்று ஒரு திமுக காரர் கூறுவதைப் போன்று இக்கட்டுரையை புரிந்து கொண்டால்
    விமர்சனத்திற்கு வேலை இருக்காது.

  5. Avatar
    சுப. சோமசுந்தரம் says:

    திண்ணையைப் பற்றிய எனது விமர்சனத்தை திண்ணயே வெளியிட்டது அவர்களது பத்திரிகை தர்மத்திற்கும் நேர்மைக்கும் சான்று. எனது பின்னூட்டத்தைப் பிரசுரித்தமைக்கு திண்ணைக்கு நன்றி.

  6. Avatar
    மாயன் says:

    வலப்புறத் தீட்டோ, இடப்புறம் தீட்டப்பட்டதோ இங்கு விவாதப் பொருளன்று. அறத்தின்பாற் பட்ட நடுநிலையே தீட்டுப்படாத புறம்.

  7. Avatar
    Raju.chennai says:

    Modi is a simple person .but has great qualities. It is expected that his enemies will not like him.but people support him. That’s enough.

    1. Avatar
      BSV says:

      The support of people is always conditional. They wanted Cong to be replaced as it was corrupt. Modi promised development; they trusted him and supported him. In 2019, we don’t know whether the support will continue. So never make a point that people’s support a leader is permanent. If a leader has ‘great qualities’, even his rivals will appreciate them – no doubt at all. Opposition leaders praise Vajpayee for his liberal values when he was PM and even now. About Modi, none of them has any favorable word.

Leave a Reply to BSV Cancel reply

Your email address will not be published. Required fields are marked *