நான் புதிதாக எழுதிய அன்பே அகல்யா என்ற குற்ற புலனாய்வு புதினம் அமேசானில் கிடைக்கும். 

author
0 minutes, 16 seconds Read
This entry is part 2 of 21 in the series 8 ஆகஸ்ட் 2021

 

Dear Reader,  
 
My New Crime Novel 
 
ANBE AKALYA
 
is available in Amazon
 

Please follow the Link
 
 
 


அன்புக்கும் பாசத்துக்க்கும் உரிய எனது வாசக எஜமானர்களே,
 
நான் புதிதாக எழுதிய அன்பே அகல்யா என்ற குற்ற புலனாய்வு புதினம் அமேசானில் கிடைக்கும்.  
 
தயவு செய்து கீழ்கண்ட லிங்கை சொடுக்கவும். உங்கள் முன் குற்றபுலனாய்வு புதினம் விரியும்.
 
உங்களை என்றும் மறவாத உங்களின் நலனை என்றும் என்னும் உங்களின் தோழன்
 
டாக்டர் எல். கைலாசம்
 
லிங்க்
 
 
 
Inline image



அன்பே அகல்யா

 

அறிமுகம்


எனது உயிரினும் உயிரான வாசகர்களே,

குற்றவியல் சட்டங்களில் நித்தம் நித்தம் புதுப்புது விளக்கங்களையும், வழிகளையும் நமது நீதிமன்றங்கள் சொல்கின்றன. ‘பாதிக்கப்பட்டவரே புலனாய்வு செய்ய முடியாது’ என்று முன்பு சொல்லப்பட்டத் தீர்ப்பில் சில மாற்றங்களை, தற்பொழுது உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. சிக்கலான அந்தப் புதியமாற்றங்களை மிகமிக எளிமையாக அனைவருக்கும் புரியும்படி கதை வடிவில் எனது மூன்றாவது குற்றப் புலனாய்வு புதினமான ‘அன்பே அகல்யா’ வில் சொல்லியுள்ளேன்.

குற்றம் புரிந்தவன் அதை உணர்ந்து திருந்தும் பொழுது காவல்துறை அதிகாரிகள் அவர்களுக்கு எவ்விதம் துணைநிற்கவேண்டும் என்பதையும் குற்றப் புலனாய்வு செய்யும் பொழுது ஏற்படும் சோதனைகளையும் எவ்விதம் சாமர்த்தியமாக எதிர்கொள்வது என்பதையும் விருவிருப்பான நடையில் இந்தப் புதினம் சொல்கிறது.

ஆலயங்களில் தங்கம் புதைக்கப்பட்டிருப்பதும் அவற்றை எடுக்க முயற்சி செய்பவர்களுக்கு ஏற்படும் அபாயங்களும், தெய்வம் அவர்களுக்கு கொடுக்கும் தண்டனைகளும் புதிதல்ல. ஆனால் அவ்விதம் கிடைக்கும் மதிப்பிடு செய்யமுடியாத பொதுச்சொத்தானப் புதையல்களை எவ்விதம் பாதுகாக்க வேண்டும் என்பது இந்தப் புதினத்தில் சொல்லப்பட்டுள்ளது. குற்றவியல் புதினத்துக்கு என்று சொல்லப்படாத இலக்கணமான குறைந்த வர்ணனை, திடுக்கிடும் திருப்பங்கள் போன்றவைகள் இந்தப் புதினத்தில் மாற்றப்படவில்லை. 

தனது மணாளனைக் காக்கவேண்டும் என்ற வேகத்தில், தான் அறியாமலே, தன்னை இழந்த பெண்ணுக்கு ஏற்படும் சோகங்களும், மனவேதனைகளும், அவளின் துணைவரின் அணுசரனையான விதமும் இந்தப் புதினத்தில் மிக வித்தியாசமாகக் கையாளப்பட்டிருக்கிறது.

இந்தக் குற்றப் புலனாய்வு புதினத்தை எழுதத் தூண்டிய கருப்பண்ணசாமியின் மறு உருவமாக இருக்கும் மரியாதைக்குரிய வாசகி திருமதி சாராதா இராமசாமி அவர்களுக்கும், ஆர். சுந்தரம் அவர்களுக்கும், தங்கவேலு அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் குறிப்பிட்ட சம்பவங்கள், பெயர்கள் எல்லாம் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.

எனது அன்புக்கினிய வாசகர்கள் எப்பொழுதும் போல எனக்கு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையில்

டாக்டர் எல். கைலாசம்

வாரணாசி, உத்திரபிரதேசம்

16.5.2021

Series Navigationகவிதையும் ரசனையும் – 20 – சுகந்தி சுப்ரமணியன்ஆவணப்பட விமர்சனப் போட்டி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *