நிகழ்வுகள் மூன்று

author
0 minutes, 14 seconds Read
This entry is part 4 of 33 in the series 12 ஜூன் 2011

பதிவு – சு.குணேஸ்வரன்

1.         சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா

 

யாழ் இலக்கிய வட்டம் – இலங்கை இலங்கைப் பேரவை நடாத்தும் 2008-2009 இல் வெளிவந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் 12.06.2011 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு நல்லை ஞானசம்பர் ஆதீன மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் வாழ்த்துரையையும் கவிஞர் ஐயாத்துரை விருது உரையினை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.

மூதறிஞர் கவிஞர் கே.வி ஐயாத்துரை ஞாபகார்த்த கவிதைக்கான (2008) விருது பெண்ணியாவின் ‘ஒரு நதியின் நாள்’ நூலுக்கும்; துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைநூலுக்கும் கிடைக்கவிருக்கிறது.

இலங்கை இலக்கியப்பேரவை விருதுபெறும் ஏனைய நூல்கள்

2008 ஆம் வருடத்துக்கான பரிசும் பாராட்டும் பெறும் நூல்கள்:
நாவல் – லோமியா – எஸ்.ஏ.உதயன்
சிறுகதை – நினைவுகள் மடிவதில்லை – சிற்பி சரவணபவன்
கவிதை-இதுநதியின் நாள்   – பெண்ணியா
சிறுவர் இலக்கியம் -வைரப்பனைமரம் -திருமதி சந்திரா தனபாலசிங்கம்
நாடகம் -ஒரு கலைஞரின் கதை- கலைஞர் கலைச்செல்வன்
சமயம் -சிவபோதச் சிற்றுரை -மட்டுவில் அ.நடராசா
இறைவிழுமியம்- அருட்தந்தை அ.ஸ்ரிபன் (இருவருக்கு பரிசுகள்)
பல்துறை-மனமெனும் தோணி-கோகிலா மகேந்திரன்
மொழிபெயர்ப்பு- 1.சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு -செங்கை ஆழியன்
2. சிறுவர் நீதிப் போதனைக் கதைகள்-வைரமுத்து சுந்தரேசன்       (இருவருக்கான பரிசுகள்)

2009 ஆம் ஆண்டு பரிசு பெறும் நூல்கள்:
நாவல் -துயரம் சுமப்பவர்கள் -நீ.பி.அருளானந்தம்
ஆய்வு -இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன் -கலாநிதி எஸ்.ஜெபநேசன்
சிறுகதை -ஒருவருக்காக அல்ல-அமரர் து.வைத்திலிங்கம்
கவிதை-குரல்வழிக் கவிதை-அல்.அஹுமத்
சிறுவர் இலக்கிய – தீந்தேன்- பண்டிதர் ம.ந.கடம்பேஸ்வரன்
நாடகம் -கங்கையின் மைந்தன்-அகளங்கன்
சமயம்-ஞானதீபம்- சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம்
பல்துறை-பண்டைத் தமிழர் பண்பாட்டுத் தடங்கள்-பேராசிரியர் கலாநிதி ம.இரகுநாதன் மொழி பெயர்ப்பு -திறந்த கதவு-திக்குவல்லை கமால்

2009 சான்றிதழ் பெறும் நூல்கள்

கவிதை – 1. ‘விற்பனைக்கு ஒரு கற்பனை’ – ஆரையூர் தாமரை

2. ‘இக்பால் கவிதைகள்’ –ஏ. இக்பால்

சிறுவர் இலக்கியம் – 1.‘தாமரையின் ஆட்டம்’ கே.எம். எம் இக்பால்

2.‘குறும்புக்கார ஆமையார்’ ஓ.கே குணநாதன்

சிறுகதை – 1.‘தொலையும் பொக்கிசங்கள்’ இராஜேஸ்கண்ணன்

2.‘பாட்டுத் திறத்தாலே’ கலாநிதி த. கலாமணி

பல்துறை –  1.‘இலங்கையின் கல்வியும் இன உறவும்’ கெளரி சண்முகலிங்கன்

2.‘சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை’ – சிறீபிரசாந்தன்

நாடகம் -‘கூத்துக்கள் ஐந்து’ கலையார்வன்

 

 

 

2.         அகில இலங்கை கலை இலக்கியப் பெருவிழா

அகில இலங்கை கலை இலக்கிய சங்கம் நடாத்தும் கலை இலக்கியப் பெருவிழா 2011 எதிர்வரும் 12.06.2011 ஞாயிறு காலை 8.00 மணிக்கு துன்னாலை வடிவேலர் மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கலை இலக்கியப் பணிக்காக சிறப்பாகச் சேவையாற்றி வரும் திருமறைக் கலாமன்றத்திற்கு 2010 ற்கான விருதிவழங்கிக் கெளரவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

பிரதம அதிதிகளாக பேராசிரியர் அ.சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், விகடகவி மு.திருநாவுக்கரசு, செங்கை ஆழியான், பிரதேச செயலர் சி.சத்தியசீலன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கலை இலக்கிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

 

3.         வதிரி சி. ரவீந்திரனின் ‘மீண்டு வந்த நாட்கள்’ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா

 

வதிரி சி. ரவீந்திரனின் ‘மீண்டு வந்த நாட்கள்’ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா 18.06.2011 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் மூத்த எழுத்தாளர் தெணியான் அவர்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.

சிறீநிதி நந்தசேகரன், உபாலி லீலாரட்ண அதிதிகளாகக் கலந்து கெள்கிறார்கள். ராஜ சிறீதரன், செ. சதானந்தன், கலாநிதி த. கலாமணி, திக்குவல்லை கமால், இ. இராஜேஸ்கண்ணன்,கவிஞர் மேமன்கவி ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

 

வதிரி சி.ரவீந்திரன் அவர்கள் கலை இலக்கியத்தின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். படைப்பாளிகளுடன் நல்லுறவினைப் பேணுபவர்களில் முதன்மையானவர். கலை இலக்கியத்தோடு விளையாட்டு, மெல்லிசைப்பாடல், நாடகம், ஆகிய துறைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரது படைப்புக்களில் ‘மீண்டு வந்த நாட்கள்’ கவிதைத் தொகுதியே நூலுருப் பெறும் முதலாவது தொகுதியாகும்.

 

 

Series Navigationகாட்சி மயக்கம்ஊரில் மழையாமே?!
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *