நூறு இந்தியத் திரைப்படங்கள் திரையிடல் – பகுதி 3

author
3 minutes, 50 seconds Read
This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013
தமிழ் ஸ்டுடியோவின் இந்திய சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டம்.
நண்பர்களே இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து நூறு இந்திய திரைப்படங்களை திரையிட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 30 இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டது. அடுத்தக் கட்டமாக திரையிடப்படும் படங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமாக நடக்கும் இந்த திரையிடலுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. அதுப் பற்றிய விபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாம் நாட்களும் திரையிடல் மாலை 6 மணிக்கு தொடங்கும்.
இந்திய சினிமா நூற்றாண்டை தமிழ்நாட்டில் கொண்டாடுவதால், தமிழ் திரைப்படங்கள் அதிகளவில் திரையிடபடுகிறது. தவிர இந்த எல்லா தமிழ் திரைப்படங்களும் வெவ்வேறு வகையில் முக்கியமான ஒரு பதிவை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி சென்றவை.
———————————————————————————–
தொடங்கும் நாள்: 30-11-2013, சனிக்கிழமை.
இடம்: தியேட்டர் லேப், முனுசாமி சாலை, புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், மேற்கு கே.கே. நகர், சென்னை.
தினசரி நேரம்: மாலை 6 மணிக்கு.
———————————————————————————–
படங்களின் பட்டியல்:
——————————
31. வானம்பாடி – ஜி.ஆர். நாதன்
ஷீஷ்பரிஷ் என்கிற வங்கக் கதையை தழுவி எடுக்கப்பட்டது. இந்த படத்தில் ஜி.ஆர். நாதனின் ஒளிப்பதிவு மிக முக்கியமானது. வெளிநாட்டுத் திரைப்படங்களைத்தான் நாம் பெரும்பாலும் ஒளிப்பதிவிற்காக உதாரணம் காட்டி பேசுவோம். இந்த படத்தை ஒருமுறைப் பாருங்கள். அசந்துப் போவீர்கள். இந்த படத்தின் இயக்கமும் ஜி.ஆர். நாதன்தான். கங்கைக் கரைத் தோட்டம், ஏட்டில் எழுதி வைத்தேன் போன்ற காலத்தால் அழியாத பாடல்களை கொண்ட படம்.
32. அந்த நாள் – எஸ். பாலச்சந்தர் 
பாடல்களை மட்டுமே பிரதானமாக கொண்டு வெளிவந்த தமிழ் படங்களுக்கு மத்தியில், பாடல்களே இல்லாமல் வெளிவந்து, திரைக்கதை அமைப்பில் புதிய உத்தியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியப் படம். ரஷோமானின் தழுவல் என்கிற சர்ச்சைக்குள் நிகழ்காலத்தில் சிக்கினாலும், தமிழில் தவிர்க்க முடியாத திரைப்படம் இது.
33. உத்தமபுத்திரன் – டி.ஆர். சுந்தரம்
1940 வெளியான இந்த திரைப்படம்தான், தமிழில் வெளிவந்த முதல் இரட்டை வேடத் திரைப்படம் என்கிற தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் இதற்கு முன்பே 1935 இல் துருவன் என்கிற படத்தில் இரட்டை வேடம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நிறைய ஆதாரங்களோடு தியடோர் பாஸ்கரன் “மீதி வெள்ளித் திரையில்” புத்தகத்தில் தெளிவாக பதிவு செய்துள்ளார். பி.யு சின்னப்பாவிர்காக இந்த படத்தை அவசியம் ஒருமுறைப் பார்த்துதான் ஆகவேண்டும்.
34. சில நேரங்களில் சில மனிதர்கள் – ஏ.பீம்சிங்
ஜெயகாந்தனின் நாவலை படமாக்கி இருப்பார்கள். ஆனால் ஒரு நாவலை மோசமாக படமாக்கிவிட்டார் பீம்சிங் என்கிற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது.
35. ஹரிதாஸ் – சுந்தர் ராவ் நாட்கர்னி
18 சூப்பர்ஹிட் பாடல்களுடன் மூன்று தீபாவளிகளுக்கு தொடர்ந்து திரையரங்குகளில் ஓடியத் திரைப்படம் என்கிற சாதனை படைத்த திரைப்படம்.
36. மலைக்கள்ளன் – ஸ்ரீ ராமுலு நாயுடு
குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
37. மீரா – எல்லிஸ். ஆர். டங்கன்
எம்.எஸ். சுப்புலட்சுமி நடித்து வெளியானத் திரைப்படம். காற்றினிலே, கோபாலனே போன்ற இனிய பாடல்கள் நிறைந்தத் திரைப்படம்.
38. அம்பிகாபதி – எல்லிஸ். ஆர். டங்கன்
எம்.கே. தியாகராஜபாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் போன்றவர்கள் நடித்து வெளியானத் திரைப்படம். பாகவதரின் பாடல்களுக்காகவே இப்படம் ஒரு ஆண்டு காலம் ஓடியது. அது மட்டுமல்ல, ஆங்கிலப் படங்களுக்கு இணையான முத்தக் காட்சியும் இப்படத்தில் இடம்பெற்றிருந்தது. தமிழ் சினிமாவில் இடம்பெற்ற முதல் முத்தக் காட்சி இதுதான். இயக்கியது டங்கன் என்பதால்தான் தைரியமாக அந்த காட்சியை படமாக்க முடிந்தது.
39. மாயாபஜார் – கே.வி. ரெட்டி 
இந்தத் திரைப்படம் பற்றி சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான இந்தக் கட்டுரை முக்கியமானது.
40. மகாத்மா உதங்கர் – பட்டு ஐயர்
நம்மிடையே இன்று இல்லாத தியாகபூமி (1939) படத்தில் இருந்து சில அறியக் காட்சிகளும், தியாகராஜா பாகவதர் காந்திப் பற்றிய பாடலும் இடம் பெற்றிருக்கும் இந்த படமும் அவசியம் பார்க்க வேண்டியத் திரைப்படம்.
41. நெஞ்சத்தைக் கிள்ளாதே – மகேந்திரன்
மகேந்திரனின் மற்றுமொரு முக்கியமானத் திரைப்படம். சுஹாசினி சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம்.
42. பொண்ணு ஊருக்குப் புதுசு – ஆர். செல்வராஜ்.
இந்த படத்தில் சரிதாவின் நடிப்பு மிக முக்கியமானது. பெரியாரின் கொள்கைகளை தொடரும் பெண்ணாக நடித்திருப்பார் சரிதா.
43. சின்னத்தாயி – எஸ். கனேசராஜ்.
நாட்டார் கலை மிக சிறப்பாக பயன்படுத்தப்பட்ட திரைப்படம்.
மற்றமொழித் திரைப்படங்கள்:
44. Nirbachana – ஒரிய மொழித் திரைப்படம் – Biplab Ray Chaudhuri. 
Nirbachana (aka The Hustings) (Oriya: ନୀର୍ବାଚନ, English Election ) is a 1994 Indian Oriya film directed by Biplab Ray Chaudhuri. The film exposes the manoeuvring and corruption of Indian electioneering. A young man is happy to hear the news that the local candidate would offer money for electing him. This money would help him to marry, but he sacrifices the money for an ailing beggar. The story is told through the struggles of several poor villagers of the Indian state of Orissa, each of whom have one of two choices: either working the soil for a wealthy landowner, or “dynamiting” the hills in one of the new quarries—a portrayal of how low humanity can descend when penury and desperation chip away at the social veneer. The film was selected for the Indian Panorama, International Film Festival of India (IFFI) 1996, Delhi.
45. Percy (குஜராத்தி மொழித் திரைப்படம் ) – Pervez Merwanji 
There is something comical and pathetic about Percy, an awkward young man of 28, living alone with his aged mother in an old house tucked away in the Parsi colony in Bombay–a very middle-class setting. Though Banubai, Percy’s mother, utterly dominates Percy’s life, she does so with love and kindness. Percy holds a clerical position in a small Unani pharmacy, famous for its sexual restoratives. It is only at his place of work, where he wields some power, that Percy displays a measure of authority and self-assurance. One day, Percy discovers a fraud in the office accounts, as a consequence of which one of the junior employees is sacked. This event has far-reaching consequences in the lives of Percy and Banubai. Percy’s peace is soon to be shattered.
46. Shesha Drushti – ஒரிய மொழித் திரைப்படம் – A. K. Bir
Kedar Babu is a freedom fighter since the days of Gandhiji’s call for a Civil Disobedience Movement. Kedar Babu lost his wife at an early stage of his marriage. Since then, he has brought up his only son Sangram with all paternal affection. In town, Sangram stays in the house of a zamindar Bahadur Suryakant Singh, where there is a gradual moral decline. This puts him in a state of dilemma and delusion. In the last encounter with his father, Sangram experiences a new perception of life, illuminated with anxiety.
47. Stri – தெலுகு – K. S. Sethu Madhavan
A chance encounter on the boat! Rangi and Paddalu wheedle their way onto the boat much against the boatman’s wishes. The next morning it is discovered that Paddalu has made away with the cargo on the board. Rangi is still around, probably to delay the police from catching the culprit. When asked Rangi frankly tells her story. Paddalu is really not her husband but “her man” she knows that the booty will not be shared with her, but with Passalu’s beautiful young wife. Why then does she help Paddalu in his nefarious activities? “Because he is my man” is her simple answer which has eons of female subservience hidden within it.
48. Tiladaanam – தெலுகு –  K.N.T. Sastry
Subbaiah is a Brahmin living off Tiladaanam, the meanest form of Brahmin duties. He ekes out his living in Hyderabad, by becoming a corpse-carrier, and earning very little. When the film opens he is told of the birth of a grandson. His daughter-in-law, Padma, is living with him, while his son has become a Naxalite. On the night the child is born, the son Raghuram, makes a clandestine visit home. The anti-Naxalite squad enters Subhaiah’s house, and ransacks the little that he has. Raghuram escapes police firing and kills a policeman in the attack. Raghuram suggests that since he is not able to help the family, and since his father refuses to take any money, he ought to surrender to the police, so that Padma can live off the reward. The shock of his son’s surrender kills Subbaish, Padma waits in vain for the reward. A TARPAN for the departed souls.
குறிப்பு: மேற்கண்ட நான்குப் படங்களும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் தயாரிப்பில் வெளியானத் திரைப்படம். இந்த படங்களை இன்னும் நான் பார்க்கவில்லை. ஆனால் இந்தப் படங்கள் பற்றி பல்வேறு கட்டைகள் வாசித்திருக்கிறேன். எனவே அதன் முக்கியத் துவம் கருதி இந்த திரைப்படங்களை தேசிய திரைப்பட வளர்சிக் கழகத்தில் இருந்து வாங்கி திரையிடுகிறேன்.
49. Uski Rotti – ஹிந்தி மொழித் திரைப்படம் – மணி கவுல்
ட்ரக் ஓட்டுனருக்கும், அவரது மனைவிக்கும் இடையேயான உணர்வுகளை நேர்த்தியாக திரையில் கொண்டு வந்தத் திரைப்படம்.
50. Nagarik – வங்கமொழித் திரைப்படம் – ரித்விக் கட்டக்
ரித்விக் கட்டக்கின் மற்றுமொரு அருமையானத் திரைப்படம்.
Series Navigation‘ என் மோனாலிசா….’கவிஞர் வ. ஈசுவரமூர்த்தியின் கவிதையில் மறுமலர்ச்சி சிந்தனைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *