பாலின பேத வன்முறை ( Gender Based Violence )

This entry is part 8 of 9 in the series 7 ஜூன் 2020

ஜனவரி 16.. 2020 .டாக்கா நகரம்

பொங்கல் தினம் , தமிழர்களின் திருவிழா. தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாடுவது குறித்து நினைத்துக்கொண்டிருந்தேன். ஊரிலிருந்தால் பொங்கலை விரும்பி சாப்பிட்டு இருக்கலாம் என்று நினைத்தேன் , நேற்று தொழிற்சங்க வாதியும்  பின்னலாடை துறை சார்ந்த போராளியுமான கல்பனோ அத்தர் அவர்களுடனானச் சந்திப்பில் அவர் அளித்த ஐந்து வகை இனிப்பு பண்டங்களை சாப்பிடாமலே பார்த்துக்கொண்டிருந்தேன். பெயர் எதுவும் தெரியவில்லை. நமக்குத் தெரிந்த ரசகுல்லா அதிலில்லை. பக்கமிருந்த சமூக செயல்பாட்டாளர் வியாகுல மேரி சாப்பிடுங்கள் வங்கதேச இனிப்பு பதார்த்தங்கள் தனித்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன என்றார், ஆனால் தொடர்ந்து இனிப்புப் பதார்த்தங்களை உட்கொள்ளுவதை கவனமாக தவிர்த்தும், இயலாத போது  குறைந்த அளவில் எடுத்துக் கொண்டு இருந்து வந்திருக்கிறேன் அவர் வேண்டுகோள் விடுத்த பின்னால் ஐந்து வகை இனிப்பு பதார்த்தங்களிலிருந்து சிறு துண்டை  ஒவ்வொன்றிலும் எடுத்து சுவைத்தேன். ஒவ்வொன்றும் இனிப்பின் ஒவ்வொரு தரத்தையும் வகையையும் காட்டியது.மிதமான இனிப்பு என்பது ஆறுதல்

ஊரில் இருந்தால் இப்படித்தான் இனிப்புப் பொங்கலை தொலைக்காட்சியுடன்  ரசித்திருக்கலாம் என்று நினைத்தேன் .அப்போது என் எதிரில் இருந்த டாக்காவின் முக்கிய ஆங்கில தினசரியான நியூஏஜில் வந்திருந்த ஒரு செய்தி அதிர்ச்சியும் சங்கடமும் தந்தது .அந்த நிகழ்ச்சி முதல்நாள் நடந்திருக்கிறது. அன்றைக்கு நாங்கள் அந்த பகுதிக்கு தான் சென்றிருந்தோம். அங்கு பின்னலாடைத் துறையில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுடைய நிலையை அறிந்து கொள்வதற்கும் பாலின வேறுபாடு சார்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சார்ந்த கலந்துரையாடலுக்கும் சென்றிருந்தோம். பாலின வேறுபாடு சார்ந்த வன்முறை சார்ந்த ஒரு நிகழ்ச்சிக்காக வங்கதேசம் டாக்கா நகருக்கு வந்திருந்தோம். எங்கள் குழுவில் பெங்களூரைச் சேர்ந்த சமூக சேவைகி கீதா மேனன், திருச்சியைச் சார்ந்த தொழிற்சங்க தலைவர் மாதேஸ்வரன்(, அமைப்பு சாரா தொழிலாளர்கள் ,நடைபாதை வியாபாரிகள் சார்ந்த பிரச்சினைகளில் அக்கறை கொண்டு நெடுங்காலமாய் இயங்கி வருபவர் ) திருப்பூர் சமூக செயல்பாட்டாளர்கள் திருப்பூர் சேவை அமைப்பின் பணியாளர்களும் சமூகசேவை அக்கறை கொண்டவருமான முனைவர் ராஜேஸ்வரி கலாமோணி மற்றும் அழகர் பாலாஜி ஆகியோரைக் கொண்ட்து எங்கள் குழு அந்த

பத்திரிக்கையில் தென்பட்ட செய்தி இதுதான் :  பின்னலாடை துறை சார்ந்த ஒரு பெண் ஊழியர் தொழிலாளி நான்கு பேரால் ஜம்காரா பகுதி -அசிலியா நகர் -டாக்கா நகரத்தின் வெளிப்புற பகுதியில் உள்ள இடம் நான்கு பேர்களால் பாலியல் பலாத்காரம் வன்முறை செய்யப்பட்டு இருக்கிறார். அந்த பின்னலாடை தொழிலாளிக்கு வயது 20 .இரவு 12 மணிக்கு அந்தப் பெண் குடியிருக்கும்  வீட்டு சொந்தக்காரர் அபுல்கலாம் ( நாற்பது வயது ) மற்றும் நான்கு பேருடன் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து  இருக்கிறார்கள். 2000 டாக்கா பணம் வாடகையாக  அவள் தரவேண்டியிருக்கிறது. அதை கேட்டிருக்கிறார்கள் அவர் கணவர் ஒரு பேருந்து  ஓட்டுனர். அவளும் அவளின் கணவனும் இப்போதைக்கு வாடகை தர முடியவில்லை சம்பளம் கிடைத்த பின்னால் தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள் .அவளின் கணவனை பக்கம் இருந்த ஒரு அறைக்கு இழுத்துச் சென்று அங்கு வைத்து உள்ளே போட்டிருக்கிறார்கள் .அதன்பின் அதி காலைவரை ஒவ்வொருவராக மாறிமாறி அந்தப் பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் வீட்டில் வைத்திருந்த தங்க நெக்லஸ் காது கம்மல்  போன்றவற்றை எடுத்துக்கொண்டு அவர்கள் விடிகாலை நான்கு  மணிக்கு கிளம்பி போய் விட்டார்கள் அந்த பின்னலாடை தொழிலாளி பக்கத்து அறையில் இருந்த தன் கணவனை அங்கிருந்து விடுவித்து காவல்நிலையத்திற்கு கூட்டி சென்று புகார் அளித்திருக்கிறார் .பாலின பலாத்காரம்  வன்முறையின் உச்சம்  இந்த வகையான பாலியல் சம்பவம்.

பாலியல் சார்ந்த வன்முறை என்று வந்தால் பலருக்கு பாலியல்  உணர்வு சார்ந்த வன்முறை  என்பது தான் ஞாபகம் வரும் .ஆனால் இது உச்சபட்சமான வன்முறை. அந்த வகை வன்முறை எப்படியெல்லாம் தொழிற்சாலைகளில் குறிப்பாக பின்னலாடை துறையிலும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளிலும்-  வங்கதேசத்திலும் இந்தியாவிலும் இருந்து வருகிறது என்பதற்கான ஒரு நிகழ்ச்சி அடுத்த நாள் நடக்கவிருந்தது.

நியூஸ் ஏஜ் பத்திரிகையில் வந்த சம்பவம் எங்கள் குழு குழுவினரை வெகுவாக பாதித்தது. என்னே முரண். இதுபோல் தினமும் பாலியல் வன்முறைகள் உலகமெங்கும் தொடர்ந்து நடக்கின்றன என்பதே அடுத்த நாள் நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக வெளிப்படும் என நினைத்தேன். மற்றவர்களிடம் பரிமாறியும் கொண்டேன்.

பாலின பேத வன்முறை

* ராஜாமணி நான்கு வருடமாக பின்னலாடை தொழிற்சாலையில் அதிக நேரம் வேலை பார்த்து உழைக்கிறாள் அவள் குடும்பத்திற்கு அந்த வருமானம் தேவையாக இருக்கிறது பிரசவத்துக்கு பிறகு வேலைக்கு திரும்புகிறாள். இப்போது அதிக நேரம் தற்போது தர இயலாது என்கிறார்கள். அதனால் பதவி இறக்கம் செய்து சம்பளம் குறைவாக கொடுக்கப்படுகிறது அதே நேரத்தில் உடன் வேலை செய்யும் சக ஆண் தொழிலாளிக்கு அவர் கேட்டுக்கொண்டர் கூடுதல் நேரம் தரப்படுகிறது பதவியிலும் சம்பளத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பெண் என்ற வகையில் ராஜா மணிக்கு பாதகம் உள்ளது * * * ராஜேஸ்வரிக்கு பாலின வேறுபாட்டால் கீழே நகர்த்தப்படும் என்பதை மெல்ல யோசித்த போதுதான் தெரிந்தது அவருடைய மருத்துவ பாலிசியில் அவருடைய கணவர் குழந்தைகள் இடம்பெறவில்லை. கேட்டால் கணவருடைய பாலிசியில் அதெல்லாம் இணைக்கப்பட்டு இருக்கும் என்று சொல்கிறார்கள்

* மேரிக்கு அவள் வேலை செய்யும் பெண்கள் ஆடை தொழிற்சாலையில் சம வேலைக்கு சம கூலி என்கிற அடிப்படையில் சம்பளம் தருவதில்லை. ஆண்களை விட குறைவாகவே தரப்படுகிறது. பெண்களை குறைந்த கூலிக்கு நியமிப்பதை மேரியும் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறாள் .

*மல்லிகா நல்ல திறமையான பெண்தான் .அவளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி செல்ல வாய்ப்பு அளிக்கப்படவில்லை கேட்டால் கர்ப்பிணியாக இருக்கிறாள் .இந்த முறை பதவி உயர்வு கிடையாது .மருத்துவ விடுப்பு வேறு .அதிக விடுப்புகள் செல்லுவார் அதனால் பதவி உயர்வு  கிடையாது .திருமணமானால் வேலையை விட்டு கணவன் வீட்டுக்கு சென்று விடுவாள். அவளுக்கு எதற்கு பதவி உயர்வு என்று முன்பு கூட அவரிடம் கேட்கப்பட்டது வீட்டிற்கு செல்ல வேண்டும் சமைக்கவேண்டும் .வயதான அப்பா அம்மாவை பார்க்க வேண்டும் மாமியார் அத்தையை கவனிக்க வேண்டும் .கல்யாணம் கருமாதி என்று போய்விடுவார் என்பதாக நினைத்துக் கொண்டு கூடுதல் நேரம்  தரப்படுவதில்லை .கூடுதல் நேரத்தை செலவிட்டு வேலையை முடிக்க மாட்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது  ஒன்று

* பாத்திமா வேலையில் சேரும்போது பாலின பாகுபாடு இருப்பதை அறிந்து கொள்ள அவருக்கு அந்த பிரிவில் எல்லா அனுபவங்களும் இருந்தும் பலவிதங்களில் நிலை குறைக்கப்பட்டார். புறக்கணிக்கப்பட்டார். மாதவிடாய் கால பராமரிப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை. அவரின் கூட வேலை செய்யும் பெண்களுக்கு மகப்பேறு கால சட்ட சலுகைகள் வழங்கப்படவில்லை. தேர்வின்போது விசித்திரமாய் கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு நேர்முக தேர்வு நடத்தப்பட்டது கர்ப்பம் தரித்து உள்ளாயா என்று கேட்டார்கள் .கர்ப்பமாக இல்லை என்று சான்றிதழ் தரச் சொன்னார்கள் .

* ஜோதி வேலை நீக்கத்தில் பாலின பாகுபாடு காட்டப்பட்டது .குறைந்த உற்பத்தியின் போது வேலையில்லை வேலை இல்லை என்று சொல்லி வேலைக்கு வரவேண்டாம் என்று சொன்னார்கள் .மாதவிடாய் காலங்களில் விடுமுறை கேட்பாள் என்பதற்காக தவிர்க்கப்பட்டாள். மாதவிடாய் காலங்களில் அவள் எதிர்பார்க்கும் உற்பத்தியை தரமாட்டார் என்று அவள் காதுபடவே பேசப்பட்டது. ,திருமணமான, குழந்தைகள் உள்ள பெண்கள் வேண்டாம் ,குழந்தைகளுக்கு அடிக்கடி பாலூட்ட செல்வதால் சிரமம் குழந்தைகள் பராமரிப்பு வயதில் இருப்பதால் அவளை வைத்துக் கொண்டிருப்பதில் சிலம்பு ஆட்டம் என்று சொன்னார்கள் .

* கனகத்திற்கு  பதவியில் பாலின பாகுபாடு காட்டப்பட்டுள்ளது.வெளி பணியிடங்களுக்கு தொழில் சம்பந்தமாக செல்லமுடியவில்லை .குடும்ப பொறுப்பு இருப்பதால் கூடுதல் நேரம் வேலை யில் கவனம் செலுத்த இயலவில்லை குடும்பத்தலைவனை பெண்ணுக்கே பதவியேற்பு தேவையில்லை என்று தட்டிக் கழிக்கிறார் .ஒரே துறையில் பெண்ணை  உதவி செய்வதற்காக மாற்றுவதும் ஆணுக்கு வேலை. உதவித்தொகை உயர்வு தருவதும் சாதாரணமாகிவிட்டது இந்த வகையில் பெண்களுக்கு இழைக்கப்படும் இவையெல்லாம் பாலியல் பாகுபாடு வன்முறைதான்

உடலியல் கூறுகள், மாற்றங்கள் சமூகத்தால் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படும் குணங்கள் இவை ஒவ்வொரு சமூகத்திற்கு மாறுபடும் .இவற்றை வைத்துக்கொண்டு பாலின பாகுபாடு என்பது பாலியல் உறுப்புகள் சார்ந்த பாலின பார்வையினால் அளவு இரண்டும் கலந்தோ காட்டப்படுவது குற்றம்தான் என்பது வருத்தப்பட வேண்டியிருக்கிறது. சட்டமானது தனியார் மாநில மற்றும் மத்திய அரசில் உள்ள பத்து அல்லது மேற்பட்ட தொழிலாளர்கள் ஒரு வருடத்திற்கு தொடர்ந்து வேலை செய்யும் இடத்தில் சட்டத்திற்கு உட்பட்டு  பாலின பாகுபாடு காட்டப்படாத முறை  இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. சட்டம் இருக்கிறது. உடல் சூழல் தட்பவெட்பம் தீப்பொறிகள் மற்றும் காற்றோட்டம் போன்ற வேலைக்கு ஊழல் தீங்கு விளைவிப்பதாக பெண்களுக்கும் இருக்கின்றன பெண் பாதுகாப்பு நிலை குறித்து சட்டப்படி வேலை நேரம் வேலைகளை சூழல் பெண்களுக்கான தொழில் தொழிற்சாலை சட்டத்தில் இருப்பதற்கு மாறாக நடப்பதும் பாலின பாகுபாடு ஆகிறது.

பாலியல் தொந்தரவு என்பது அதில் ஒரு வடிவம் பாலியல் சார்ந்து வெவ்வேறு விதங்களில் வேலைக்கு நியமிப்பது நீக்குவது பதவி சலுகைகள் சம்பள பாகுபாடு பாலின தொடரும் அடக்குமுறை பயன்பாடு போன்றவைகளால் பாகுபாடு நிகழ்கிறது . சில சமயங்களில் அவை நேரடியாக இருக்காது. உதாரணத்திற்கு சூப்பர்வைசர் ஒருவர் பெண் தொழிலாளர்களை சிறுமிகள் விபச்சாரிகள் என்று கூறுவது .வேலையிடத்தில் பாலியல் பாலின பாகுபாடு அல்லது உடல் மன பாலியல் ரீதியான வன்முறையோடு நிகழ்த்தப்படுவது ஆகும் .இந்த வகையில் பாலின வன்முறையில் இருந்து வெளியேறும் முன் தொழிற்சாலையில் இருக்கும் குறைதீர்க்கும் குழுவிற்கு புகார் அளிக்கலாம் . மாநில பெண்கள் ஆணையத்தில் புகார் அளிக்கலாம் .தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயலாற்ற.லாம். சட்ட வல்லுனர் துணையோடு இவற்றை எதிர்கொள்ளலாம் .இவற்றை எதிர்கொள்ள பல சட்ட முறைகள் உள்ளன.

சம ஊதிய  சட்டம், மகப்பேறு சலுகை திட்டம் ,வேலை இடத்தில் பெண்கள் பாலியல் தொந்தரவு சட்டம், பாலியல் வன்முறையிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் போக்சோ, தொழிற்சாலை சட்டம் போன்றவை பெண்களுக்கு இந்த வகையில் உதவும்

2.. திக்குத் தெரியாத உலகில்– சுப்ரபாரதிமணியன்

*பாலின பேத வன்முறை ( Gender Based Violence  )-

சுப்ரபாரதிமணியன்

ரேணுகா சமையல் தவிர பிற வீடு பராமரிப்பு வேலைக்காக அமர்த்தப்பட்டு இருக்கிறாள் பெரும்பான்மையான நாட்களில் அந்த வீட்டுப் பெண் சீக்கிரமே கிளம்பி விடுவாள் .ரேணுகா தனியாக அந்த வீட்டில் வேலை பார்க்கிறாள் .அந்த வீட்டு ஆண் இருப்பார் .அவர் நோட்டம் விடுவதை கணித்திருக்கிறார். இடுப்பில் மேலாடையின்றி துண்டை கட்டிக் கொண்டு நடமாடிக் கொண்டிருப்பது அவனுக்கு ஆச்சரியமாக பட்டது ஒரு நாள் அவள் வீட்டை கூட்டி சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது அவருடைய பின் கீழ்ப்பகுதியை கில்லி இருக்கிறார். அதை அவள் கண்டித்த போது அவன் அந்த வீட்டுப் பெண்ணிடம் அவள் திருடுகிறாய் என்று சொல்லிக் கொடுத்து வேலையை விட்டு நீக்கி விடுகிறேன் என்கிறாள் அவள் வேலையில் நிலைக்க வேண்டுமானால் விரும்பாத உடல் தொடர்பு தொடர்பு கண்டிக்கக் கூடாது இங்கு அவன் வீடு என்ற அதிகாரத்தால் அவள் விரும்பாத செயலை செய்கிறான்

வேலையிடத்தில் வன்முறைக்கான உதாரணம்  இது பல விதங்களில் உண்மை வாழ்க்கை அனுபவங்களிலிருந்து சில சூழல்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஒன்று

கால் சென்டரில் இளமையான திறமையான குழுத் தலைவர் அவர் .வேலையில்  அவர் கடின உழைப்பாளி அர்ப்பணிப்பான அவர் அவ்வப்போது வேலையை சரியாக முடிப்பவர். ஒரு நாள் மாலை அவளுடைய சக தொழிலாளர்களுடன் அமர்ந்து முக்கியமான வேலையை முடிக்கிறார். அது நீண்ட நாள் ..வேலை.. இரவு உணவு உண்டு அவளுடன் தங்க முன்மொழிகிறார் .காமினி நாகரீகமாக தீர்க்கமாக மறுத்து விட்டு வீடு செல்கிறாள். ஆனால் மாலை ரவி மறுபடியும் அவள் மறுத்து மீண்டும் கேட்கிறான் மிரட்டுகிறான். நீ என்னை அனுமதிக்காவிட்டால் நீ என்னோடு இருந்தாய் என எல்லோரிடமும் சொல்வேன் என்கிறார் .வேலை இடத்தில் பாலியல் துன்புறுத்தல் இதற்காக அது என்றால் என்ன ஒரு நபர் தன்னுடைய பாலியல் தேவைக்கு சாதகமாக இல்லை என்பதற்காக அவனுக்கு இனி விளைவிக்கும் செயல்களை தவிர்த்து செயல்களை செய்வது ..உடனான நடத்தை விரும்பப்படாத பாலியல் மற்றும் காமினி வாழ்க்கையில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தியது

இரண்டு:

ரேணுகா சமையல் தவிர பிற வீடு பராமரிப்பு வேலைக்காக அமர்த்தப்பட்டு இருக்கிறாள் பெரும்பான்மையான நாட்களில் அந்த வீட்டுப் பெண் சீக்கிரமே கிளம்பி விடுவாள் .ரேணுகா தனியாக அந்த வீட்டில் வேலை பார்க்கிறாள் .அந்த வீட்டு ஆண் இருப்பார் .அவர் நோட்டம் விடுவதை கணித்திருக்கிறார். இடுப்பில் மேலாடையின்றி துண்டை கட்டிக் கொண்டு நடமாடிக் கொண்டிருப்பது அவனுக்கு ஆச்சரியமாக பட்டது ஒரு நாள் அவள் வீட்டை கூட்டி சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது அவருடைய பின் கீழ்ப்பகுதியை கில்லி இருக்கிறார். அதை அவள் கண்டித்த போது அவன் அந்த வீட்டுப் பெண்ணிடம் அவள் திருடுகிறாய் என்று சொல்லிக் கொடுத்து வேலையை விட்டு நீக்கி விடுகிறேன் என்கிறாள் அவள் வேலையில் நிலைக்க வேண்டுமானால் விரும்பாத உடல் தொடர்பு தொடர்பு கண்டிக்கக் கூடாது இங்கு அவன் வீடு என்ற அதிகாரத்தால் அவள் விரும்பாத செயலை செய்கிறான்

மூன்று:

சமீமா ஒரு வக்கீல் 2013ஆம் ஆண்டிலிருந்து ஒரு அரசு சாரா நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக வேலை பார்க்கிறாள் டாக்டர் பவன் அந்த நிறுவனத்தின் இயக்குனர். மனித உரிமைக்காக வாதாடும் அவர் அலுவலக களப்பணி பார்வைக்காக இரண்டு நாள் சிம்லா செல்லும் பொழுது சமயம் சமீமாவின் தனிமையை பயன்படுத்தி உடலுறவுக்கு அழைக்கிறார் அவளுடைய விருப்பமின்றி அவளை வலுக்கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்துகிறார் .அவருடைய பிற பெண்களுடனான தற்போதைய முந்தைய உறவு பற்றி பேசுகிறார் .அவள் அவனைக் கடிந்து கொண்டு அதற்கு அவன் நடத்தையை பொதுவில் சொல்வேன் என்பதற்கு அவருடைய வேலை வாழ்க்கையை ஒழித்து கட்டுகிறேன் பார் என்கிறார் .இவை அதிகாரத்தால் நடைபெற்றவை

நான்கு:

ஜெயந்தி பெங்களூரு கார்பன் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார் வர்க்கீஸ் ஜெயந்தி னுடைய சூப்பர்வைசர் ஏதாவது ஒரு சமயத்தில் அடிக்கடி அவளை தொட முயற்சிக்கிறார் உதாரணத்திற்கு அவள் தைத்துக் கொண்டிருக்கும் போது அவருடைய துப்பட்டாவை கொண்டு பின்பகுதியை மறைக்கிறார் .ஜெயந்தி விரும்பப்படாத நடத்தை அவரை சக தொழிலாளி சூப்பர்வைசர் அவனை சிறப்பாக கவனிக்கிறார் என கேலி பேசுகிறார் அவர்கள் அனைவரையும் வர்கீஸ் பற்றியும் அடிக்கடி கிசுகிசுக்கின்றனர். இது ஜெயந்திக்கு விரோதமான வேலைச் சூழல்

ஐந்து

சுகி கட்டட வேலை அருகில் இருப்பவர் ஒவ்வொரு நாளும் மதிய உணவு இடைவேளையில் சுகி மரத்து நிழலில் அமர்ந்து 16 மாத குழந்தைக்கு பாலூட்டுவது வழக்கம். அவன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் அவன் சௌந்தர் சுகி அசௌகரியமாக உணர்கிறாள்  அவள் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது தூரப்போ என்கிறார் இருப்பினும் அவன் அவளுக்கு அருகாமையிலேயே இருப்பதை தொடர்கிறான் .பிற சக கட்டிட தொழிலாளர்கள் சிமெண்ட் நிரப்பப் போகும் போதும் மோட்டார் போடப் போகும் போதும் பூனை போன்று கத்துவது விசில் அடிப்பது போன்றவற்றை செய்கிறார். அவர் கேள்வி கேட்கும்போது அவர்களின் அலைபேசியில் நகைத்துக் கொண்டு இருப்பதாக சொல்கின்றனர் . இவையும் ஒருவிதமான பாலியல் துன்புறுத்தல்

ஆறு

ஸ்வேதா இந்தியப் படையின் தலைவர் .அவள் சீனியர் ஆபிசரின் உறவு கோரிக்கையை மறுப்பு தெரிவித்து விட்டால் ஸ்வேதா இந்த அனுபவத்தோடு அவள் அமைதியாகி விட்டாள். ஆனால் அந்த சீனியர் ஆபீஸர் நல்லொழுக்கம் அற்றவர் என வதந்தி பரப்பி கொண்டிருந்தார். தற்போது அவள் அவளுடைய சக சீனியர் ஆபீஸ் காரர்களால் தொடர் உறவுக்காக அடைக்கப்பட்டு இருக்கிறாள் ஆர்ப்பாட்டம் செய்த உடன் கூடுதலான உடற்பயிற்சி வாய்ப்பில் இருந்து விலக்கப்பட்டார் இவையெல்லாம் வேலையிடத்தில் விரோதப் போக்கை பாலியல் பாலியல் துன்புறுத்தலை உருவாக்குகின்றன.

ஏழு

மீடியா ஆராய்ச்சியாளர் டாக்டர் புருஷோத்தமன் அந்த மீடியா ஏஜென்சியை நடத்துகிறார் அவர் புகழ் பெற்ற ஜெனரலிஸ்ட் வேலைக்கு சேர்ந்த முதல் சில மாதங்களில் டாக்டர் புருஷோத்தமன் அவளுடைய வேலையை பற்றி பயங்கரமாக பாராட்டுகிறார் புருஷோத்தமன் அடிக்கடி  ஆஷாவை வேலைக்காக அலுவலகத்திற்கு வரவழைப்பார் பாலியல் உறவுகளை பற்றி பேசியிருக்கிறார். பாலியில் ரீதியான படங்களை காட்டி இருக்கிறார். அவருடைய பக்கவாட்டில் உரசி இருக்கிறார் .அவள் எதிர்ப்பு தெரிவிக்க அதற்கு அவர் அருகாமையில் சென்று ஒரு குழுவாக வேலை செய்யும்போது இதுபோன்ற தொடர்பு இல்லாவிட்டால் வேலை செய்ய முடியாது. இருவரும் ஒருவருக்கொருவர் அறிந்து விருப்பத்தோடு உறவு கொண்டனர். இருப்பினும் ஒரு தடவை அவள் பாலியல் உறவுக்கு மறுத்து விட்டாள் அவன் நிறுத்திவிட்டால் தற்போது அவன் அவள் வேலை கேள்விக்குறி .இதனால் அவளை உடன் பணிபுரிவோர் மற்றும் பிற பணியாளர் முன்பு அவமானப்படுத்துவது அவளுக்கு வேலை அளிக்காது ஒதுக்காமல் தனிமைப் படுத்தினார். தானாகவே அவள் வேலையை விட்டு விலகினார்  இவற்றில் பாலியல் உணர்வு விரும்பாதவை பாதிப்பு மற்றும் அதிகாரம் போன்றவை வெளிப்படுகின்றன .இது சட்டத்தின் அடிப்படையில் தடுப்பு தடை மற்றும் நிவர்த்தி நடவடிக்கைக்கு காரணிகளாகிறது(  நன்றி : சேவ் உள்ளூர் புகார்கள் கமிட்டி கையேடு )

Series Navigationஇரு கவிதைகள்அடியாழம்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *