பிராந்தி

author
0 minutes, 3 seconds Read
This entry is part 4 of 10 in the series 28 ஏப்ரல் 2019

         

கௌசல்யா ரங்கநாதன்

-1-

அந்த மாலைப் பொழுதில், நான் அலுவலகம் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில்தான் அந்த கண்ட்றாவி காட்சியை கண்டு மனம் வெதும்பிப் போனேன்.. காரணம்..அங்கு ஒரு பிசியான தெருவில் அவன்.,, இன்றைக்கெல்லாம் இருந்தால் 20 வயதுக்குள் இருக்கும்,  என் சகா குமா¡¢ன், படித்து பட்டம் பெற்று வேலை தேடிக்கொண்டிருப்பதாக சொல்லப்பட்ட ரகு, முழு போதையில் விழுந்து கிடக்க, சுற்றிலும் சிலர், அவனருகில் செய்வதறியாது நின்று, தவித்து, அழுது கொண்டிருக்கும் அந்த தாய்க்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, வளைத்து, வளைத்து, பல கோணங்களில் தத்தம் செல்போன்களில்…பார்க்க எரிச்சலாய் இருந்தது..சகா குமார் சமீபத்தில்தான் அகால மரணம் அடைந்திருந்தான்..அந்த சோகத்திலிருந்து, அவன் மனைவி மீண்டு வருவதற்குள்ளேயே இப்படி ஒரு அவமானம் வேறு வேண்டுமா அந்த பெண்மணிக்கு என்றே தோன்றியது..

யாரைச் சொல்லி என்ன லாபம்…

விதி..

இதுதான் இப்போது அன்றாட நிகழ்வாகி விட்டதே, அதுவும் நாடு பூரா பள்ளிகள், மருத்துவ மனைகள்,வழிபாட்டு தலங்கள் என்று இருக்கிறதோ, இல்லையோ, சாராயக் கடைகள் நீக்கமற நிறைந்திருக்கும் போது யார்தான் என்ன செய்துவிட முடியும்? நண்பன் எந்தவித கெட்ட பழக்கங்களுக்கும் ஆளாகி இருக்கவில்லை..இவ்வளவு ஏன்? ஒரு பாக்கு பொட்டலம் கூட போட மாட்டான்..மற்ற சகாக்கள், என்னையும் சேர்த்துத்தான், அடிக்கடி காபி/டீ, குடிப்பதுபோல அவன் குடித்து பார்த்ததில்லை..மித உணவு உட்கொள்பவன்தான்..சமையலில் மசாலா கூட சேர்த்துக் கொள்ள மாட்டான்..அடிக்கடி ஹோட்டல்களுக்கும் போனதில்லை..மிக ஒழுக்கமானவன்..அதிர்ந்துகூட பேச மாட்டான்..அவன் பிள்ளையா இப்படி! நெஞ்சம் கனத்துப் போக, மெல்ல கூட்டத்தினுள் நுழைந்து, சிலர் உதவியுடன், அவனையும், அவன் தாயையும் ஒரு ஆட்டோ பிடித்து ஏற்றி விட்டதுடன்  பின்னாலேயே நானும் அவன் வீடுவரை சென்று அவனை மெதுவாய் இறக்கி படுக்க வைத்ததுடன் நண்பனின் மனைவிக்கு ஆறுதலும் சொன்னேன்..

நான் வேறென்ன செய்துவிட முடியும்? ஏன்தான் மது விற்பனையை அரசு மேற்கொண்டு இப்படி புதுப்புது குடிகாரர்களை…..இதற்கு மேல் இது பற்றி ஏதாவது பேசி வம்பில் மாட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை..என்னதான் அவரவர் குடும்பத்தை அவரவர்கள் அதி ஜாக்கிரதையாய் பார்த்துக் கொண்டாலும், இன்றைய அதிவேக உலகில் இளைஞர்களை ..இளைஞர்களை மட்டுமல்ல, குழந்தைகள், நடுத்தர வயதினர், முதியோர்களை எப்படி சதா சர்வ காலமும் கண்காணித்துக் கொண்டே இருக்க முடியும் என்று தெரியவில்லை..மாஸ் மீடியா என்று அறியப்படும் பெரிய திரை/சின்னதிரை நிகழ்ச்சிகளிலும் “குடி, குடியை கெடுக்கும்” என்று ஒரு சின்ன காப்ஷன் போட்டு விட்டு பார்களில்/தெருக்களில் குடிக்கும் காட்சிகளைத்தானே ஒளி பரப்புகிறார்கள்..இது பற்றி ஏதாவது எழுதினாலோ, கருத்து தெரிவித்தாலோ, “¡¢மோட் உங்க கையில்தானே இருக்கு..வேணாம்னா ஆஃப் பண்ணிட்டு போக வேண்டியதுதானே” என்று…நெஞ்சு பொறுக்குதில்லையே என்றுதான் அரற்றத் தோன்றுகிறது.

.ஏன்தான் மதுவிலக்கை அரசு தளர்த்தினார்களோ, தெரியவில்லை.. மதுவிலக்கு அமலில் இருந்த கால கட்டத்தில் மட்டும் குடிப்பவர்கள் குடித்துக் கொண்டிருக்கவில்லையா! கள்ள சாராயம் காய்ச்சுபவர்கள் இல்லையா என்று கேட்கலாம்..அப்போது அப்படி சட்ட விரோதமாய் காய்ச்சுபவர்களை போலீஸ் ரெய்ட் பண்ணி உள்ளே தள்ளி வந்ததுடன் ஒரு தொகையை அபராதமாயும் வசூலித்து வந்தனர்..குடிகாரர்கள் நடுவால் ஒரு வித பய உணர்வும்  இருந்தது..மெல்ல, மெல்ல ஒரு தலைமுறையே மதுவாடையை உணராமல் இருந்தபோது, மதுவிலக்கை தளர்த்தி, இன்றைக்கு வர்ஜா வர்ஜமில்லாமல் யார் வேண்டுமானாலும் குடிக்கலாம்..குடிப்பதென்பது  ஒரு ஸ்டேடஸ் சிம்பல் என்றாகி விட்டிருக்கிறது ..அது மட்டுமா! “வேலை கிடைக்காத வேதனை ..அதனால் குடிக்கிறேன்..”..

வேலை கிடைத்து பார்டி வைக்கச்சொன்னார்கள்..அங்கு கம்பனிசேக் குடிக்க வேண்டிய கட்டாயம்..அதனால் குடிக்கிறேன்.””காதல் கைகூடவில்லை..குடிக்கிறேன்..கடன் தொல்லை குடிக்கிறேன்..நண்பன் கலியாணத்தின் முதல் நாளே குடி பார்டி..இப்படி..இப்படி..காரணமா இல்லை! என் மனம் பின்னோக்கி சென்றது …எனக்கு அப்போது 10 வயதுக்குள் இருக்கலாம் என்று நினைக்கிறேன்..என்  போன்ற சிறுவர்கள் எப்போதாவதொருமுறை வெற்றிலை,பாக்கு போட்டால் கூட அன்று  வீட்டில் மண்டகப்படிதான்..இரண்டு, மூன்று நாட்கள்வரை பேசக்கூட மாட்டார்கள் ஏதோ ஒரு பெரிய குற்றம் செய்துவிட்டார் போல்..ஜாடைமாடையாய் கண்டபடி திட்டித் தீர்ப்பார்கள்..யாராவது ஒரு சக மாணவன், பீடி, சிகரட் குடிப்பது பற்றி தெரிய வந்தால் “அவனுடன் சேராதே, உனக்கும் புகைப் பிடிக்கும் பழக்கம் வந்துடும்” என்பார்கள்.. இப்படியெல்லாம் பொத்தி வளர்க்கப்பட்ட எனக்கே ஒரு சோதனை வந்தது நான் படிப்பு முடித்து வேலை தேடிக் கொண்டிருக்கையில்..

அந்த சம்பவத்தை இன்று நினைத்தலும் ரோமாஞ்சலி ஏற்படுகிறது என்பதே நிசம்..

-2-

ஒருமுறை தலைநகர் டெல்லியில், ராணுவத்தில் வேலையில் இருந்த என் தாய் மாமன்,(அது 1960 களின் தொடக்கம்) வருடாந்திர விடுமுறையில் சென்னையில் இருந்த எங்கள் வீட்டுக்கு வந்த போது, சில உயர்ரக மதுவகைகளை கையோடு  கொண்டு வந்திருந்தார்..”மாமா நீங்க குடிப்பீங்களா?” என்றபோது “என்னைப் பார்த்து என்ன கேள்விடா கேட்டே நீ? இது என் நண்பனோட அப்பா, இங்கே நார்த் மெட்றாஸ் பகுதியில் இருக்கிறவருக்கு கொண்டு வந்த சரக்குடா..எங்க மிலிடா¢ காண்டினில் இது கிடைக்கும் எங்களுக்கெல்லாம் மலிவு விலையில்..பிரண்டோட அப்பா கொஞ்சம் குடிப்பார்..ஸோ, என் கோட்டாவையும், நண்பன் கோட்டாவையும் சேர்த்து கொண்டு வந்திருக்கேன்..இதை நாளைக்கோ, நாளைன்றைக்கோ அவர்கிட்ட ஒப்படைக்கணும்” என்றவருக்கு கிராமத்திலிருந்த மாமியிடமிருந்து அவசர தபால் (Express Delivery) என்றெல்லாம் ஒன்று உண்டு..

தன் அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லை என்றும் மாமாவை உடனே புறப்பட்டு கிராமத்துக்கு வரவேண்டுமென்றும்..மாமா என்னிடம் அந்த மது பாட்டில்கள் அடங்கிய கித்தான் பையை கொடுத்து “இதை பத்திரமாய் வட சென்னையில் உள்ள என் நண்பனின் அப்பா கிட்ட கொடுத்திடறியா..பிளீஸ்” என்ற போது இங்கு தமிழ் நாட்டில் தீவிர மதுவிலக்கு அமலில்  இருந்ததை நினைவு படுத்தி “எப்படி மாமா இது சாத்தியம்? கள்ள சாராயம் காய்ச்சறவங்க, தவிர,  அண்டை மாநிலங்களில் இருந்தும் ரயிலில், பஸ்களில் மதுவை கடத்தி வரதாகவும், திடீர், திடீர்னு போலீஸ் ரெய்ட் நடத்தி, அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கிறதா….” என்ற போது, மாமா சொன்னார் “அப்படி கடத்தல் செய்யறவங்களை போலீசுக்கு தெரியும்..உங்கிட்டலாம் யாரும் வர  மாட்டாங்கடா..அப்படி யாராவது உங்கிட்ட கேட்டா என் பெயரை, நான் மிலிடா¢யில் இருக்கிறதை சொல்லு..பயப்படாதே..நான் அவசரமா ஊருக்குப் போகணும்..இல்லைனா உன்னை அனுப்ப  மாட்டேன்” என்றவா¢டம் அதற்கு மேல் ஆர்கியூ செய்ய நான் தயாராயில்லை..

அதனால், அங்கு போகும் பேருந்தொன்றில்,நிற்கவே இடமில்லாத போதும், சிரமப்பட்டு ஏறி, தள்ளாட்டத்துடன் நின்ற என்னை சக பயணி ஒருவர் “ஏன் தள்ளாடறே? இந்த காலை வேளையிலேயே குடிச்சிட்டு வந்து உசிரை வாங்கறாங்க” என்றார்.. என் பரிதாப நிலை பார்த்த ஒரு பரட்டை தலை, கிழிசல் பான்ட், ஷர்ட் போட்டுக் கொண்டு ஒரு சீட்டில் அமர்ந்திருந்த ஒருவர் “தம்பி..த பாரப்பா..நிக்க முடியலையா, கையில பையை வச்சுகினு..எங்கைல கொடு..வச்சுக்கிறேன்.நீ இறங்கச்சொல்ல பையை வாங்கிக்க” என்ற போது என் சப்த நாடியும் ஒடுங்கினார் போலிருந்தது..எப்படி பையை அவா¢டம் என்று எண்ணிக் கொண்டிருக்கையில், அவர் பக்கத்து சீட்டு ஆள் இறங்கிவிடவே, என்னை அவர் பக்கத்தில் அமர்ந்து கொள்ளச்சொன்னார்..மெல்ல, மெல்ல அவர் “எங்கே போற நயினா நீயி?மெட்றாசுக்கு புச்சா(புதிதா) என்றெல்லாம் கேட்டவருக்கு நான் பதிலே சொல்லாமல் முகத்தில் பய உணர்வை தேக்கி வைத்திருந்ததை பார்த்தவர், “ஏன் தம்பி பயப்படறே..?அன்னைக்கே தலிவர் பாடி வைக்கலை ஒரு படத்தில் “அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடானு”என்று உரக்க பாட, பேருந்தில் பயணித்த அனைவருமே எங்களை நோக்கி தங்கள் பார்வைகளை செலுத்தினார்கள்..

எனக்கே என்னவோ போலாயிற்று..யராவது படு காஷுவலாக “எங்கே தம்பி போற? அது என்ன இவ்வளவு பெரிய கித்தான் பையை தூக்கிகினு வந்திருக்கே? அப்படி என்னதானிருக்கு இந்த பைக்குள்ள” என்று கேட்டுவிட்டால் என்ற அச்ச உணர்வே தோன்றியது..இன்றைக்கு வசமாய் மாட்டிக் கொண்டோம் என்றே தோன்றியது..அப்போது மா¢யாதை நிமித்தமும் நான் இயல்பாய் இருப்பதுபோல காட்டிக் கொள்ளவும் பக்கத்து இருக்கைக் காரா¢டம் “எப்ப ஐயா நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் வரும்?” என்று கேட்க, அவரோ “இன்னம் மூணு ஸ்டாப் கீதுப்பா,”என்று சொல்லிக் கொண்டிருக்கையில், பஸ் சடன் பிரேக் போட்டு அங்கு நிற்க,மள, மளவென சில போலீஸ்காரர்கள் பஸ்ஸின்  ஏறும் வழியிலும், இறங்கும் வழியிலும் நின்று கொண்டதுடன், மேலும் சில காவலர்கள் ஒவ்வொரு பயணியையும், அவர்தம் உடமைகளையும் பரிசோதிக்க ஆரம்பித்திருந்தனர்..”யாரும் நாங்க சொல்றவரை பஸ்ஸை விட்டு இறங்கக் கூடாது” என்ற போது நான் அன்று காலையில் செய்திதாள் ஒன்றில் படித்த செய்தி நினைவுக்கு வந்தது..

அதாவது நேற்று நகா¢ன் பல பகுதிகளிலும் ஓடும் பேருந்துகளில்  கள்ள சாராய வேட்டை நடத்தியதாகவும்,சிலர் மாட்டிக் கொண்டதாகவும், போட்டோவுடன் செய்தி வந்திருந்தது..கூடவே மாமா மீது கோபமும் வந்தது..அவரும் வாடகை கார் பிடித்துக் கொண்டு கிராமத்துக்கு போய் விட்டார்..இப்போதுபோல செல்போன் வசதிகளும் வந்திருக்கவில்லை அப்போது..எனக்கு ஏதாவதொரு பிரச்சினையென்றால் நான் யாரை காண்டாக்ட் பண்ண முடியும் !என்று நினைத்துக் கொண்டிருக்கையில்தான் ஒருவர் சொன்னார்..” தினத்திக்கும், ரயில்ல, பஸ்லல்லாம் பிராந்தி கடத்தறவங்க எண்ணிக்கை அதிகமா போச்சுல்ல..கவுர்மென்ட்தான் என்ன செய்யும் பேமானி பசங்க ரகசிமாய் கண்ட, கண்ட கசமாலங்களை குடிக்கிறப்ப..” என்றவரை பார்த்து ஒருவர் “ஐயா பிராந்தினா இன்னாபா” என்ற போது “கேட்கிறான் பாரு கேள்வி..பிராந்தினா, சரக்குத்தான்பா” என்றார்..போலீசார் கடமையே கண்ணாக, ஒவ்வொரு பயணியின்  உடமைகளையும் துறுவி,துறுவி பார்த்தவண்ணம் இருந்தனர்..அனேகமாய் எல்லோரையும் பரிசோதித்தபின் எங்களருகில் வந்த போது என் சப்த நாடியும் ஒடுங்கிப் போயிற்று..நிச்சயம் இன்றைக்கு மாட்டிக் கொள்ளப் போகிறோம் என்று எண்ணியிருந்தபோதுதான் அந்த அதிசயம் நடந்தது ..

-3-

என் பக்கத்தில் அமர்ந்து எனக்கு அமர இருக்கையும் கொடுத்து, திரைப் பட பாடல்களையும் பாடியவர்(ன்), சரேலென எழுந்து ஓட முயற்சிக்க,போலீசார் அவனை பாய்ந்து கப்பென்று பிடித்துக் கொண்டு “நீ இனிமேல் தப்பிக்க முடியாது..இந்த பஸ்லதான் நீ வருவேனு எங்களுக்கு இன்ஃபர்மேஷன் வந்திச்சு..

உன் கூட்டாளிங்க அத்தினி பேர்களையும் பிடிச்சாச்சு ..வங்கில கொள்ளையடிச்ச கோடிக் கணக்கான பணத்தை எங்கே பதுக்கி வச்சிருக்கேனு மா¢யாதையாய் சொல்லிடு..இல்லைனா போலீஸ் டி¡£ட்மென்ட் எப்படியிருக்கும்னு உனக்கே நல்லா தெரியும்” என்று சொல்லி அவன் கைகளில்  விலங்கு மாட்டி இழுத்துச்சென்ற போது என் நெஞ்சு படபடவென அடித்து கொண்டது.. அப்பாடா ஒரு வழியாய் தப்பித்தோம் இந்த கண்டத்திலிருந்து என்று எண்ணியிருந்த வேளையில் நான் கொண்டுவந்திருத பை மீது ஒரு பயணி கால் பட்டு ஜல், ஜல் என்ற ஓசை கேட்க, ஒரு போலீஸ்காரர் தன்னுடன் வந்திருந்த இன்னொரு காவலா¢டம் “இந்த பையன் ஒருத்தன் மட்டும்தான் பாக்கி.. சோதனை போட..ஆரம்பிக்கலாமா இவன் உடமைகளை” என்ற போது மறுபடி குப்பென்று எனக்கு வியர்த்து ஊற்ற, அந்த இன்னொரு காவலர் “நமக்கு கொடுத்த அசைன்மென்ட் பாங்க் ராபரியில ஈடுபட்ட அதன் தலைவனை பிடிக்கணும்ன்றது மட்டும்தான்..தவிரவும் இவன் சின்ன பையனா தெரியறான்..வீட்டுக்கு மளிகை சாமான்கள் எதனாச்சும் வாங்கிக்கிட்டு போறவனா இருக்கலாம்..என்ன தம்பி நான் சொல்றது கரக்ட்தானே” என்றபோது தலையை ஆட்டி வைத்தேன்..ஒருவழியாய் போலீசார் அனைவரும் பஸ்ஸை விட்டு இறங்கவும் நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் வரவும், மனம் லேசாகி,  இறங்கி, அந்த சரக்கை உ¡¢யவா¢டம் ஒப்படைத்தேன்..

இருந்தாலும் உடல் தடதடவென அப்போதும் ஆடிக் கொண்டிருந்தது வெகு நேரத்துக்கு..######-4- நினைவலைகளிருந்து மீண்ட நான் நண்பனின் மனைவி தன் மகன் செய்கை குறித்து அழுது, அரற்றிக் கொண்டிருப்பது பார்த்து ஆறுதல் தவிர வேறு என்ன சொல்ல முடியும் என்னால்! ஒருகால் நாளையே ஏதாவது (miracle), அதிசயம் நடந்து, பூரண மதுவிலக்கே அமல்படுத்தப்பட்டாலும் கூட, ஒரு தலைமுறைக்கு மேலாக மதுப்பழக்கத்துக்கு அடிமையாய் கிடக்கும் பாமர மக்களை மட்டுமல்ல, படித்த வர்க்கத்தினர், இளைஞர்களையெல்லாம்கூட,  எப்படி மதுப் பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பது என்று புரியவில்லை.

.######  

Series Navigationதுறைமுகம், தேடல் நாவல்களில் நெய்தல் நில மக்களின் வாழ்வியல்சொல்வனம் 200: அம்பை சிறப்பிதழ் வெளியீடு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *