பீட்டில்ஸ் இசைப் பாடல்கள் உலகத்தின் ஊடே செல்வோர் !

This entry is part 10 of 10 in the series 29 ஜூலை 2018

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

முடிவில்லாப் பேய் மழை போல்

வார்த்தைகள் பறக்கும்

காகிதக் குவளைக் குள்ளே !

தாறுமாறாய் நடப்பர், கடப்பர் அவரெலாம்

உலகத்தின் ஊடே நழுவி !

துயர்க் கடல் ! இன்ப அலைகள்

தடுமாறிச் செல்லும்,

என்னைக் கட்டித் தழுவி,

வெளிப்படை யான என் மனத்தின் ஊடே !

ஜெய் குருதேவா ! ஜெய் ஓம் !

எதுவும் மாற்றா தென் உலகை !

எதுவும் மாற்றா தென் உலகை !

கிழிந்த ஒளிக்காட்சி கோடி

விழிகளாய்

துள்ளும் என்கண் முன்னால் !

அவை விளிக்கும் என்னை

மீண்டும்

மீண்டும் உலகத்தின் ஊடே !

நினைவுகள் தாறு மாறாய்த் திரியும்,

நிலையிலாக் காற்று போல்,

ஒரு கடிதப் பெட்டிக் குள்ளே !

தடுமாறுவார் கண்ணிலாதது போல்

உலகத்தின் ஊடே அவர்கள்

செல்லும் போது.

ஜெய், குருதேவா ! ஜெய் ஓம் !

எதுவும் மாற்றா தென் உலகை !

எதுவும் மாற்றா தென் உலகை !

நகைப்பொலிகள், புவிக்கரு நிழல்கள்

எதிரொலிக்கும்

வெளிப்படை யான என் சொல்லைக்

கடக்கும் போது !

என்னையும் விளிக்கும் !

முடிவிலாக் காதல், மடிந்திடாக் காதல்

எதிரொலிக்கும்

என் வெளிப்படைக் கருத்தின் ஊடே

எனை விளிக்கும் !

கோடிக் கணக்கில் பரிதிகள் சுற்றி

ஒளிகாட்டும் எனக்கு !

எனை விளிக்கும் மீண்டும்,

மீண்டும்,

மேதினியில் நடமாட !

ஜெய், குருதேவா ! ஜெய் ஓம் !

எதுவும் மாற்றா தென் உலகை !

எதுவும் மாற்றா தென் உலகை !

+++++++++++++++++

Series Navigationசெவ்வாய்க் கோளின் தென்துருவத்தில் முதன் முதல் அடித்தள திரவநீர் ஏரியை ஈசா எக்ஸ்பிரஸ் விண்ணுளவி கண்டுபிடித்தது
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *