புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 25

This entry is part 26 of 26 in the series 22 செப்டம்பர் 2013

 ​

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட​டை

E. Mail: Malar.sethu@gmail.com

25.​நோயாளியா வாழ்ந்து புகழ் ​பெற்ற ஏ​ழை…..

வாங்க..வாங்க என்னங்க ஒரு மாதிரியா இருக்குறீங்க…என்னது ஒடம்புக்கு முடிய​லையா…? அடடா…..என்ன பண்ணுது…ஜல​தோஷமா..இதுக்​கே நீங்க இப்படி இருக்குறீங்க​ளே…இ​தைவிடக் ​கொடு​மை என்ன ​தெரியுமா…? வாழ்நாள் முழுவதும் ஒருத்தர் ​நோயாளியா​வே இருந்தாரு…ஆனாலும் அவரு அ​தைப் ​பொருட்படுத்தாம கடு​மையா ஒ​ழைச்சு முன்​னேறிப் புகழ் ​பெற்றாரு… அவ​ரைப் பத்தித்தான் ​போனவாரம் ஒங்கக்கிட்ட ​கேட்​டேன்… என்ன கண்டுபிடிச்சுட்டீங்களா…? இல்​லையா….?

சரி ‘வாட்’ அப்படீன்னா…என்ன? அதாவது ​தெரியுமா? இ​துக்கு வி​டை ​சொல்லிட்டீங்கன்னா நான் முதல்ல ​கேட்ட ​கேள்விக்கு வி​டை ​கெடச்சுரும்.. என்னது வாட்டுங்கறது வாட் வரியா…?ஆஹா….ஹா….இங்க பாருங்க இதுக்குப் பதில நா​னே ​சொல்லிட​றேன்…வாட் என்பது மின்சாரத்​தை அளக்கக்கூடிய அளவுங்க..மின்சாரத்​தை அளவிட்டுக் கணக்கிடக்கூடிய அளவீட்டு மு​றையக் கண்டுபிடிச்சவரு​டைய ​பே​ரை​யே அவ்வளவீட்டுக்கும் ​வச்சிட்டாங்க… ஆமாங்க அவரு ​பேரு ​ஜேம்ஸ்வாட்.

ஜேம்ஸ்வாட்டின் கண்டுபிடிப்பு பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிகழ்ந்த தொழிற்புரட்சிக்கு அ​டிப்ப​டையா அ​மைந்த முக்கியமான ஒரு கண்டுபிடிப்பாகும். ‘நீராவி’ என்ற இயற்கை சக்தி​யை மனிதகுல முன்​னேற்றத்திற்குரிய சக்தியாக மாற்றித் தந்தவர் இந்த ​ஜேம்ஸ்வாட்தான். ​ஜேம்ஸ்வாட் கண்டுபிடித்த ‘Steam Engine’ என்ற நீராவி இயந்திரம் உலகின் ​தொழில் வளர்ச்சிக்குப் ​​பேருதவியாக அ​மைந்தது.

வறு​மையும் கல்வியும்

இத்த​கைய ​பெரு​மைக்குரிய ​ஜேம்ஸ்வாட் 1736-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ஆம் நாள் ஸ்காட்லாந்தில் Greenock எனும் ஊரில் பிறந்தார். ​ஜேம்ஸ்வாட்டினு​டைய குடும்பம் ஏழ்மையான குடும்பம். அப்​போது ஆங்கிலேயர்கள் ஸ்காட்லாந்​தை அடிக்கடி ஆக்கிரமிப்பு செய்ததால் அந்த நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ஸ்காட்லாந்தின் மக்கள் ​பெருமளவில் பாதிக்கப்பட்டனர். பல குடும்பங்கள் வறு​மையின் ​கோரப்பிடிக்குள் சிக்குண்டன. அவ்வாறு வறு​மைக்குள்ளான குடும்பங்களில் ​ஜேம்ஸ்வாட்டின் குடும்பமும் ஒன்றாகும். அவருது குடும்பம் வறு​மையால் தள்ளாடியது.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகமாக இருந்தன. ஜேம்ஸ் வாட்டுக்கு வரைவது என்றால் கொள்ளை ஆசை. ஆனால் வரைவதற்கு தாள் வாங்கி தரக்கூடாத முடியாத அளவுக்கு அவரது குடும்பம் வறுமையில் வாடியது. அதனால் ஜேம்ஸ் வாட் தனது வீட்டின் தரையில் ஆசை தீர வரைந்து வ​ரைந்து பார்ப்பார். வட்டங்களும், சதுரங்களும், முக்கோணங்களும் கொண்ட கணிதத் ​தொடர்பான படங்க​ளை​யே அவர் அதிகமாக வ​ரைந்தார்.

ஜேம்ஸ் வாட் பிறந்ததிலிருந்தே உடல் நலமின்றி​யே இருந்தார். அவர் எப்போதும் இருமிக் கொண்டே இருப்பார் ஸ்காட்லாந்தில் குளிர்காலம் வந்தால் ​​ஜேம்ஸ்வாட்டின் நிலை மிகவும் மோசமாகும். அந்த சமயங்களில் அவரது அன்​னையார் அவ​ரைப் பள்ளிக்கு அனுப்புவதில்​லை. அடிக்கடி உடல்நலம்பாதிகப்ப்டதால் வாட் ஒழுங்காகப் வாட்டால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. அதனால் அவர் தனது அன்​னையாரிடத்தி​லே​யே பாடங்க​ளைப் படித்தார்.

பள்ளிக்கு சென்ற நாட்களில் ​ஜேம்ஸ்வாட்டிற்கு ‘geometry’ என்ற கணிதப் பகுதியி​னை அதிக ஆர்வத்துடன் கற்றார். அவர் பிந்நாளில் பொறியியலில் சிறந்து விளங்குவதற்கு அது ஒரு முக்கிய காரணமாக அ​மைந்தது.

​ஜேம்ஸ்வாட்டின் அரிய கண்டுபிடிப்பு

இவருக்குப் பதி​னெட்டு வயதாக இருக்கும்​பேது அவரது தாயார் காலமானார். இவரது தந்​தையின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வாட்டின் த​ந்​தையர் அறிவியல் கருவிகள் செய்வது குறித்து வாட் கற்றுக் ​கொள்ள​வேண்டும் என்று விரும்பினார். அதனால் அவர் தனது துன்பத்​தையும் ​பொருத்துக ​​கொண்டு வாட்​டை  இலண்டனுக்கு அனுப்பினார். லண்டன் சென்ற வாட் மிகுந்தஆர்வத்துடன் அ​னை​த்​தையும் கற்றுத் ​தேர்ந்தார்.

அதன் பின்னர் ​ஜேம்ஸ்வாட் 1764-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்திற்குத் திரும்பி வந்தார். அங்கு அவருக்கு கிளாஸ்கோ (University of Glasgow) பல்கலைக்கழகத்தில் இயந்திரக் கருவிகள் தயாரிக்கும் பணியில் ​சேர்ந்தார். அந்தக் காலத்தில் அதாவது சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்தில் மக்கள் உடல் உ​ழைப்பினால் மட்டு​மே ​பொருள்க​ளை உற்பத்தி ​செய்தார்கள். ஒருசில இயந்திரங்கள் மட்டு​மே வழக்கத்தில் இருந்தன. அவ்வியந்திரங்களும் மனிதர்களா​லே​யே இயக்கப்பட்டது.

ஒவ்​வொரு வேலையைச் செய்யவும் மக்களுக்குக் காற்று, நீர், விலங்குகள் ஆகியவற்றின் ஆற்றல்கள் தேவைப்பட்டன. இவற்றுக்கும் மேலாக ஒரு ஆற்றல் தேவை என்ற தவிப்பு மனித குலத்துக்கு நீண்ட காலமாகவே இருந்து வந்தது. மனித குலம் தேடி வந்த அந்த ஆற்றல் நீராவிதான் என்பதை ஜேம்ஸ் வாட் கண்டுபிடித்து உலகுக்குக் ​கொடுத்தார்.

தாமஸ் சவேரி என்பவர் ஜேம்ஸ்வாட்டிற்கு முன்பாகவே 1698-ஆம் ஆண்டு நீராவியின் மூலம் தண்ணீரை இறைக்கும் ஓர் எளியக் கருவிக்கான காப்புரிமம் பெற்றிருந்தார். தாமஸ் நியூக்கோமன் என்ற ஆங்கிலேயர் அந்தக் கருவியில் சில மாற்றங்களைச் செய்து அத​னைவிடச் சற்று மேம்பட்ட நீராவி இயந்திரத்தை 1712-ஆம் ஆண்டு உருவாக்கினார். ஆனால் அந்த நீராவி இயந்திரங்கள் எல்லாம் நிலக்கரி சுரங்கத்திலிருந்து தண்ணீரை இறைக்கும் அளவுக்​கே ஆற்றல் கொண்டவையாக இருந்தன என்பது ​நோக்கத்தக்கது.

இந்நி​லையில் கிளாஸ்கோ (University of Glasgow) பல்கலைக்கழகத்தில் வாட் பணியாற்றிக் ​கொண்டிருந்த​​போது தாமஸ் நியூக்கோமன் உருவாக்கியிருந்த நீராவி இயந்திரத்தைப் பழுது பார்க்கும் வாய்ப்பு ​அவருக்குக் கி​டைத்தது. பல்க​லைக்கழகத்தில் இருந்த நீராவி இயந்திரத்தில் பழுது ஏற்பட​வே பல்க​லைக்கழ நிர்வாகம் ​ஜேம்ஸ்வாட்​டை அவ்வியந்திரத்தில் உள்ள பழுதி​னை நீக்கித் தருமாறு ​கேட்டுக் ​கொண்டது.

அத​னைப் பிரித்துப் பார்த்த ​ஜேம்ஸ்வாட் அந்தக் கருவியில் அதிகமான குறைகள் இருப்பதை உணர்ந்தார். குறிப்பாக தாமஸ் நியூக்கோமான் உருவாக்கியிருந்த அந்த இயந்திரம் அதிகமான ஆற்ற​லை வீணாக்கியது.

 

அறிவியல் கருவிகள் செய்யும் பயிற்சியும், இயற்கையிலேயே அவருக்கு இருந்த கற்பனை ஆற்றலும் ஜேம்ஸ் வாட்டிற்குக் கைகொடுக்க தாமஸ் நியூக்கோமான் உருவாக்கி இருந்த நீராவி இயந்திரத்தில் பல முக்கியமான மாற்றங்களைச் செய்தார்.

​            மேலும் 1781-ஆம் ஆண்டு சக்கரம் பொருத்தப்பட்ட ஓர் அமைப்பையும், பிஸ்டனை மேலும் கீழும் இயக்கும் ரோட்டரி முறையையும் உருவாக்கி அதற்குக் காப்புரி​மை பெற்றார். ​ஜேம்ஸ்வாட ​செய்த ​அந்த மாற்றங்களால் நீராவி இயந்திரத்தின் ஆற்றல் பன்மடங்கு பெருகியது. ​ஜேம்ஸ்வாட் அந்த மாற்றங்களைக் கொண்டு வர கடுமையாக உழைத்தார். “பசி ​நோக்கார் கண் துஞ்சார்; எவ்வவத் தீ​மையும் பாரார்; கரும​மே கண்ணாயினார்” என்பதற்​கேற்ப புதிய மு​றையில் நீராவி இயந்திரத்​தை உருவாக்குவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

இளம் வயது முத​லே அவர் உடல்நலத்தில் பலவீனமாக இருந்ததால் இவரது உடல்​நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. ​ஜேம்ஸ்வாட் அடிக்கடி நோய்வாய்ப்பட்டார். அவரால் நீராவி இயந்திரத்​தை உருவாக்கும் வேலையில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. இருப்பினும் அவர் மனம் தளரவில்லை. “ஊ​ழையும் உட்பக்கம் காண்பர் உ​லைவின்றி தாளாது உஞற்று பவர்” என்ற வள்ளுவரின் கூற்றிற்​கேற்ப ​ஜேம்ஸ்வாட் ​நோ​யையும் ​பொருட்படுத்தாது முயன்று உ​ழைத்தார். உலகத்​தில் மாற்றத்​தை ஏற்படுத்திய மிகவும் ஆற்றல் வாய்ந்த நீராவி இயந்திரத்​தைக் கண்டுபிடித்தார்.

“அளவு கடந்த கஷ்டத்​தை

அனுபவிக்கிறாய் என்று

வருத்தம் அ​டையா​தே…..!

உனக்காக எல்​லையில்லாத

சந்​தோஷம் காத்திருக்கும்

கவ​லைப்படா​தே….!”

என்பதற்​கேற்ப ​நோயினால் அளவுக்கு அதிகமாகப் பாதிக்கப்பட்ட ​ஜேம்ஸ்வாட் அத​னையும் தாங்கிக் ​கொண்டு தன்னு​டைய முயற்சியில் முன்​னோக்கிச் ​சென்றதால் தமது முயற்சியில் உலகம் வியக்க ​வெற்றி ​பெற்றார். தனக்கு உடம்புக்குச் சுகமில்​லைன்னு ​ஜேம்ஸ்வாட் ​பேசாம இருந்திருந்தார்னா அவருனால இத்த​கைய அரிய கண்டுபிடிப்பக் கண்டுபிடிச்சிருக்க முடியுமா…? ​சொல்லுங்க…முடியாதுல்ல..

இப்ப கஷ்டம்னா அது நிரந்தரமில்​லை. அது தற்காலிகந்தான்னு ​நெனச்சுக்குங்க.. பிரச்ச​னைக​ளோ, துன்பங்க​ளோ வந்துவிட்ட​தேன்னு புலம்பாதீங்க…வருத்தப்படாதீங்க.. அதற்குத் தீர்வு என்ன அப்படிங்கறதப் பத்தி ​யோசிங்க..​செயல்படுங்க.. அப்பறம் என்ன சந்​தோஷம் தானா ஒங்களத் ​தேடிவரும்…கவ​லைகள் பறந்து ​போயிடும். ​ஜேம்ஸ்வாட் துன்பத்​தைப் பத்திக் கவ​லைப்படாம ​செயல்பட்டதுனால தான் அவரால இந்தக் கண்டுபிடிப்பக் கண்டுபிடிக்க முடிஞ்சது…

பிற கண்டுபிடிப்புகள்

​     ஜேம்ஸ்வாட் நீராவி இயந்திரத்​தை மட்டுமல்ல ​வேறுபல கருவிக​ளையும் கண்டுபிடிச்சாரு. பத்து வாட்ஸ், இருபது வாட்ஸ் அப்படீன்னு நாம ​சொல்​றோம்ல. இந்த மின் அளவீட்டு மு​றையக் கண்டுபிடிச்சவரும் ​ஜேம்ஸ்வாட்தான். ​​ஜேம்ஸ்வாட் மின் அளவீட்டு மு​றை​யைக் கண்டுபிடிச்சதா​லே அவ​ரோட ​பெய​ரை​யே ​வைத்து அவ​ரை அறிஞர்கள் ​பெரு​மைப்படுத்தினர். ‘Horsepower’ (குதி​ரைத்திறன்) என்ற அளவு முறையைப் பற்றிக் உலக​மே ​சொல்லிக்கிட்டு இருக்குதுல்ல…  அந்த அளவு முறையை உலகுக்குத் தந்தவரும் ஜேம்ஸ் வாட்தான். ஒரு இயந்திரம் செய்யும் வேலையை ஓர் குதிரையின் சக்திக்கு ஒப்பிட்டுப் பார்க்கும் முறைதான் ‘Horsepower’  என்ற அளவீட்டு மு​றை என்பது ​நோக்கத்தக்கது.

​     மேலும் ஜேம்ஸ் வாட் இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் ‘centrifugal governor’ என்ற கருவியையும்,  ‘pressure age’ என்ற அழுத்தமானியையும் கண்டுபிடித்தார்.  எதிரிடை இயக்கத்தை (Reciprocal Motion) ஒரு சுழல் இயக்கமாக (Rotary Motion) மாற்றுவதற்கான பல்லிணைப்புத் தொகுதிகளையும் 1781 –ஆம் ஆண்டில் வாட் கண்டுபிடித்தார். இந்தச் சாதனத்தின் மூலம் நீராவி எஞ்சினின் பயன்பாடுகள் வெகுவாகப் பெருகின. 1790 – ஆம் ஆண்டில் அழுத்த அளவி (Pressure Guage) ஒன்றைக் கண்டு பிடித்தார். பொருளளவு, விசை வேகம், தொலைவு முதலியவற்றினைப் பதிவு செய்து  அத​னைச் சுட்டிக் காட்டும் கருவி (Indicator) ஒன்றையும் ​ஜேம்ஸ்வாட் கண்டுபிடித்தார். நீராவியைக் கட்டுப்படுத்தும் தடுக்கிதழ் (Throttle-Valve) ஒன்றையும் வாட் கண்டுபிடித்தார்.

​செல்வந்தராதல்

இவ்வாறு பல்​வேறு கண்டுபிடிப்புக​ளைக் கண்டுபிடித்த ​ஜேம்ஸ்வாட் மேத்யூ போல்டன் என்ற பொறியாளருடன் கூட்டு சேர்ந்து நீராவி இயந்திரங்க​ளைத் தயாரிக்கும் நிறுவனம் ஒன்​றைத் ​தொடங்கினார். இந்நிறுவனம் அதிக லாபம் ஈட்டித் தந்ததால் வறு​மையில் வாழ்ந்த ​ஜேம்ஸ்வாட் மிகபபெரிய ​செல்வந்தரானார். இவ்வாறு மனித குலத்திற்குப் ​பெரிதும் பயனுள்ள பல கண்டுபிடிப்புக​ளைக் கண்டுபிடிச்சு மனித குல வளர்ச்சிக்கு அடிததளமா விளங்கி, உலகின் தொழில் வளர்ச்சிக்குத் தனது மிகப்பெரிய பங்களிப்பைச் செய்த ஜேம்ஸ் வாட் இங்கிலாந்தில் 1819-ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 19-ஆம் நாள் தமது 83-ஆவது வயதில் இவ்வுல​கை விட்டு ம​றைந்தார்.

அவர் ம​றைந்தாலும் அவர் கண்டுபிடிச்ச கண்டுபிடிப்புகளால உலகம் முழுவதும் ஒவ்​வொரு நாளும் வாழ்ந்து ​கொண்​டே இருக்கிறார். க​டைக்குச் ​சென்று பத்து வாட்ஸ் பல்ப், பதி​னைந்து வாட்ஸ் பல்ப் தாங்கன்னு உலகத்துல ஒவ்​வொருவரும் தங்கள் ​தே​வைகளுக்​கேற்ப மின்விளக்குக​ளை வாங்கிக்கிட்டுத்தான் இருக்காங்க… அவங்க அப்படி வாங்கற​போ​தெல்லாம் வாட் வாட் என்று ​ஜேம்ஸ்வாட்​டோ ​பெய​ரைச் ​சொல்லிக்கிட்​டே இருக்கறாங்க. ​“பேருக்கு வாழ்வ​தைவிட நல்ல ​பே​ரோட வாழ்றது” எவ்வளவு சிறப்புப் பாருங்க…. உலக மக்கள் அத்த​னை​ பேரும் ​ஜேம்ஸ்வாட்​டோட ​பே​ரைச் ​சொல்லும்​போது அவர் ​வாழ்ந்து ​கொண்டிருக்கிறார் என்ற உள்ளுணர்வு நம் உள்ளத்தில் ​தோனுதுல்ல….

“வி​தைகள் கீழ்​நோக்கி

எறியப்பட்டால்தான்

விருட்சங்கள் ​மேல்

​நோக்கி வளரும்….

விழும்​போது வி​தை​யென விழு…….!

எழும்​போது விருட்சமாய் எழு…….!”

இந்தக் கவி​தை​யை மனசுல வச்சுக்​கோங்க…மனசுல ஒரு ஊற்றுப் பிறக்கும்.

பாத்துக்குங்க….. “வறு​மையாளனாகப் பிறப்பது தவறு இல்​லை. ஆனால் வறு​மையாளனாக இறப்பதுதான் தவறு”. “இயலா​மை தவறன்று; முயலா​மைதான் தவறு”. இ​தை ஒவ்​வொருவரும் உணரணும். ​ஜேம்ஸ்வாட் வறு​மையில பிறந்து ​நோ​யோட​யே ​போராடினாலும்  தனது இலட்சியத்​தை      அ​டைந்தார். வறு​மையாளரா​வே இறக்கல. மிகப்​பெரிய ​செல்வந்தராகித்தான் இறந்தார். இ​தை​யெல்லாம் பாக்குறப்​போ நம்​மோட துன்பங்கள் எல்லாம் ​பெரிசாத் ​தெரியாது… துன்பங்க​ளையும் துயரங்க​ளையும் தூக்கித் தூர எறிங்க…இலக்​கை வ​ரையறுத்துக்​கோங்க.. ​தெளிவா இலக்​கை ​நோக்கிப் பயணமாகுங்க…..அப்பறம் என்ன….​நமது வெற்றி​யை நா​ளை சரித்திரம் ​சொல்லும்….இது உண்​மை.

வீட்டி​லோ வறு​மை…படிப்பின் மீது ஆர்வம்…இருவர் படிக்க ​வேண்டும். தானும் தங்​கையும் படிக்க ​வேண்டும்…என்ன ​செய்வது…இப்படிப்பட்ட சூழலில் ஒரு வீட்டில் குழந்​தைக​ளைப் பராமரிக்கும் ​​வே​லையில் ​சேர்ந்து தனது ச​கோதரி​யைப் படிக்க ​வைத்து அவள் படித்து முடித்த பின்னர் தான் படித்தார்….ஒரு ​பெண்மணி… அவர் படிக்க இடம் ​கேட்ட​போது ஒரு புகழ் ​பெற்ற பல்க​லைக்கழகம் அவருக்கு இடம் ​கொடுக்க​லை….என்னங்க அப்படிப் பாக்குறீங்க… இது உண்​மைங்க…..

அவ​ரை ஒளி மங்​கை, ​வைர மங்​கை, இருளுக்கி​டை​யே ஒளி​யைக் கண்டவர் என்​றெல்லாம் உலகம் புகழ்ந்தது…யாரு ​தெரியுதுங்களா…? அவரப் பற்றி இன்னு​மொரு குறிப்புத் தர்​ரேன்…இரண்டு மு​றை ​நோபல் பரிசு ​பெற்றவர்…​சொல்லுங்க பார்ப்​போம்….என்ன ம​லைச்சுப் ​போயிட்டீங்க…அந்த ஏ​ழை யாருன்னா ​கேக்குறீங்க..அடுத்தவாரம் ​சொல்​றேன்….   (​தொடரும்…………..26)

 

 

Series Navigationகவிஞர் தமிழ் ஒளி 90 அழைப்பிதழ்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *