பேசும் படங்கள் ::: கோவிந்த் கோச்சா

This entry is part 40 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

அரசு என்னமோ, நம்பர் பிளேட்டிற்கு வரைமுறைகள் சட்டம் வைத்திருக்கு… இதோ இந்த சட்ட வல்லுநர் ( கார் கண்ணாடியின் வலது மேலோரம் வக்கீல் குறியீடு ) நம்பர் பிளேட்…. சொல்வது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கீழிருப்பது, பொது ஆஸ்பத்திரியல்ல… சென்னை அப்போலோ நுழைவுதாண்டி உள்ள காஃபி பார் ஓரம் கிடக்கும் ஒரு நோயாளி…. நிர்வாகத் தலை ரவுண்ட்ஸ் வருவாங்களா என்றே தெரியலை…

கீழ்த்தளத்தில் கேண்டின் அருகே இருக்கும், டாய்லெட் குமட்டிக் கொண்டு வரும் அளவிற்கு அதிக சுகாதரக் கேடுடன்.. ஏன் டாக்டர்கள் ரவுண்ட்ஸ் வரும் போது இந்த லூவை உபயோகிக்கக் கூடாது…

அதன் வாசலிலேயே காய்கறி மூடை வந்திறங்கும்… காய்கறி கொட்டி அள்ளுவார்கள்…

தனியார் ஆஸ்பத்திரி வரலாற்றின் முன்னோடி இதை கவனித்தல் நலம்….

 

 

 

 

 

 

 

 

தி ஹிந்து பத்திரிக்கை, அதன் எதிரில் இருக்கும் கருணாநிதி கட்டிய தலைமைசெயலகம் மாற்ற கட்டிடத்தை எப்படி உபயோகிக்கலாம் என்ற போட்டிக்கு புதன் வரை சுமார் 2500 ஐடியாக்கள் வந்திருப்பதாகச் செய்தி போட்டிருக்கிறது.

தி ஹிந்து –வில் பணி புரிபவர்களுக்கு ஒரு போட்டி:

கீழிருக்கும் படம் காண்பிப்பது, தி ஹிந்து காம்பவண்டிற்கும் ( இடது புறம் ), ரோட்டை கடக்கும் சப்வே நுழைவிற்கும் இடையேயான பாதசாரிகள் நடக்கும் பகுதி இப்படி அடைக்கப்பட்டிருப்பதற்கு காரணம் என்ன..?

  1. வேலை நடப்பதால், பாதுகாப்பிற்கு
  2. பிளாட்பாரத்தில் கடை போடும்போது, மக்கள் ரோட்டில் நடந்தால் தவறென்ன என்று…
  3. சும்மா…… இரண்டு மூட்டைய வைக்கிறதுக்கு
  4. ஹிந்துவிற்கு அண்டார்டிக்கா முதல் ஆப்கானிஸ்தான் வரை நடக்கும் விஷயங்கள் பார்க்கும் தொலை நோக்குபார்வை உண்டு.. கிட்டப் பார்வை கிடையாது என்று நினைத்தற்கு….

க்ளூ: பதில் ஒன்று நிச்சயம் தவறு…

Series Navigationஇந்தியா அதிரும் அன்னா ஹசாரே எழுச்சி….கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -1)
author

கோவிந்த் கோச்சா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *