போதிதர்மர் தமிழரா…? ஆரியரா…?

This entry is part 10 of 44 in the series 30 அக்டோபர் 2011


நிறைய தமிழ் திரை ரசிகர்கள் போதிதர்மர் யார் என்பது பற்றிய வினவலிலும் அவர் தமிழர் என்ற பெருமிதத்திலும், வந்த செய்திகளால், நான் விக்கி பீடியாவிடம் கேட்க , கிடைத்த பதில்கள் அதிக சுவாரசியமாக இருந்தன…
நம்ம ஊரை , தமிழக கோடுகளுக்குள், ஆண்ட பலர் எப்படி டிஎன்ஏ –மூலக் கூறால் தமிழர் இனம் இல்லையோ அது போலவே, போதிதர்மரும் அக்மார்க் தமிழரா என்பது மிகப் பெரிய கேள்குறியே…
ஆம்,…
பல்லவர்களின் ஆதியாக, துரோணரின் மகன் அஸ்வத்தாமன் வருகிறார்… பரத்வாஜா கோத்திரமாகிறார்…..
அதுதாங்க பல்லவர்கள் மூலம் ஆரியர்கள் என்று போகிறது…. அப்ப, போதிதர்மர் ஆரிய டிஎன்ஏ கொண்டவராகிறார்…

அதனால், இவரை நாம் தமிழர் என்று முன்னிறித்தி பெருமை கொள்ள இயலாது… ஆனால் தமிழ்மன்னர் ( மன்னர் தமிழர் அல்ல.. ) பாரம்பரியத்தில் ஒரு ஷ்த்ரிய வம்சம் சேர்ந்தவர், ஆரியர் என்றே ஆராய்ச்சி கூற்றுகள் சொல்கின்றன…

பல்லவ சாம்ராஜ்யத்தில் இடையில் குழந்தை இல்லா நிலையில், யானைமாலை போட்டு மன்னரானவருக்கு – நந்திவர்மன் …? – நந்திவர்மனுக்கு முன்பே போதி தர்மர் தோன்றியுள்ளதால், போதிதர்மரை தமிழர் டிஎன்ஏ கொண்டவர் என்றும் சொல்ல முடியாது…..

அதுவும் போக, இடையில் அப்படி ஒரு வெற்றிடம் – அதாவது யானை மாலை போட்ட கதை – இருப்பதால் போதி தர்மரின் டி என் ஏ ஒரு இடத்தில் நின்று போயிருக்கும்…

அதே மாதிரி, சிலோன் படையெடுப்பை சிங்கள் மன்னர் ”மானவம்மா” வுடன் சேர்ந்து செய்து அங்கே ஆட்சி மாற்றத்திற்கு காரணமாகியிருக்கிறார், நரசிம்மவர்ம பல்லவர்.
இவரது பெயரால் இருப்பது தான் மாமல்லபுரம். அவருக்கு மாமல்லன் என்ற பெயருண்டு. அந்த சிங்கள மன்னனுக்காக படையெடுத்து அவர்தம் அரசாட்டி இலங்கையில் நிறுவிடவும் நரசிம்ம பல்லவர் உதவியுள்ளார்.

எப்படியோ, ஆனால் தமிழன் ஒருவன் யானையால் மாலைபோட்டு பல்லவ மன்னர் ஆனதால் , நந்திவர்மனை அழிக்க வேண்டும் என்று , பழைய பல்லவ மன்னரின் பங்காளிகளில் ஒருவர் தமிழை ஆழமாக கற்றுணர்ந்து, மூன்றாம் நந்திவர்மன் உலா போகையில் , அவன், “கலம்பகம்” பாட, மன்னன் விசாரித்து அவனை அரச சபைக்கு அழைத்துப் பாடச் சொல்ல… ஒத்துக் கொண்ட கட்டளைப்படி இறுதிப் பாடல் சிதையில் மன்னனை படுக்க வைத்து பாடப்பட்டு நந்திவர்மர் தீ பற்றி எரிந்ததாக வரலாறு. தமிழுக்கு நந்திக்கலம்பகம் கிடைத்தது.

அதனால், தமிழன் என்று உரிமை கொண்டாட நாம் போதிதர்மரிடம் போக முடியாது,–
தான் அழிந்தாலும் தமிழில் அற்புதமான ஒரு கலம்பகம் கிடைக்கும் ( நந்திக்கலம்பகம் கிடைத்தது, ) என்று தன்னுயிர் நீத்த மூன்றாம் நந்திவர்மனிடம் தான் போக வேண்டும்….
பல்லவர் யார்…? http://en.wikipedia.org/wiki/Pallava_dynasty#Origins

Series Navigationஅதுஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 13
author

கோவிந்த் கோச்சா

Similar Posts

5 Comments

  1. Avatar
    Raja says:

    ஏன்ங்க இப்படி ஆர்யன் திராவிடன்னு, தமிழனா? தமிழ் மன்னரா?எதுவா இருந்தா என்ன? நீங்களும் இன்னிக்கு தோன்றிய வீக்கிபிடியாவில் இருந்து தானே அறிந்திருக்கிறீங்க… நல்ல மனித கலாசாரத்தை சொல்பவனெல்லாம் தமிழனே,மனித சிக்கல்களை தீர்த்து மனிதனாக வாழ முயற்சித்த நாகரிகம் தான் தமிழ் நாகரிகம்.அந்த நாகரிகம் யாரால் பின்பற்றப்பட்டாலும் அவர்களும் தமிழர்களே…! இன்னுமா இட்லி எங்களுடைய உணவு மாதிரி பிரச்சினை.வரலாற்றில் 100 சதவீதம் எப்பொழுதும் உண்மையிருக்காது.எனவே தான் தமிழ் இலக்கியங்களாக தங்களுடைய வாழ்க்கைமுறையை சொல்கிறது.இன்று ஒரு சீன குடிமகன் வந்து தமிழ் நாகரிகத்தை தெளிவுற பின்பற்றினாலும் அவனும் தமிழனே. தமிழ் மனிதர்களை உருவாக்கும் மொழி, மனிதர்களை ஒரு குழுவாக சுருக்க அல்ல. போதிதர்மனின் தற்காப்பு கலையையும்,வைத்தியமுறையையும் பின்பற்றுவோம்.அதை விட்டு அவர் தமிழரா? இல்லை ஆரியரா என்று விவாதிப்பது.ஏனெனில் நீங்களும் இன்னொரு தகவலின் அடிப்படையில் தான் சொல்கிறீர்.

  2. Avatar
    Latha says:

    Well said, Raja.
    It is very irritating to see a group(where Govind Gocha surely belongs) that keeps trying to undermine the prides of Tamil. For this group, anything intellectual has to be Aryan. They are not ready to accept any fact that might bring glory and confidence to the Tamil diaspora.

  3. Avatar
    GovindGocha says:

    வரலாற்றை மறைப்பது யார்? – தமிழ்ப் போதிதர்மர் பற்றி, சீனர்கள் தயாரித்த திரைப்படம் http://123tamilcinema.com/2011110610487.html

    “போதி தர்மர் தென்னிந்தியர் என்பதையும், குங்பூ போன்ற கலைகள் இந்தியாவில் இருந்து சென்றன என்பதையும் சீனர்கள் மறைப்பதாக” கூறுகின்றனர். உண்மையில், போதி தருமனையும், அறிவியலையும் தமிழர்கள் மறந்து விட்டாலும், சீனர்கள் நினைவு வைத்திருக்கின்றனர்.
    Film: Master of Zen (1994)

    Country: Hong Kong
    Circuit: Mandarin-Rex
    Genre: Historical Drama
    Rating: II (Hong Kong)
    Theatrical Run: 02/26/1994 – 03/23/1994
    Director : Brandy Yuen Jan-Yeung

    அதற்காக இந்தியர்களுக்கு (அல்லது தமிழர்களுக்கு) நன்றிக் கடன் பட்டிருப்பதையும் அவர்கள் மறைக்கவில்லை. அதற்கு ஆதாரம், 1994 ம் ஆண்டு, சீனர்கள் தயாரித்த போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் திரைப்படம். ஹாங்ஹாங்கில் தயாரிக்கப் பட்ட சீன மொழி பேசும் திரைப்படம்

  4. Avatar
    smitha says:

    Even after it is proved that the Aryan invasion theory is a hoax, gocha is still sticking to the same old point.

    Waste of space in thinnai.

Leave a Reply to smitha Cancel reply

Your email address will not be published. Required fields are marked *