மதநிந்தனையாளர்கள் என்று பெயர் சூட்டி அப்பாவிகளை கொல்லும் பாகிஸ்தான் கலாச்சாரம்

author
109
0 minutes, 4 seconds Read
This entry is part 32 of 32 in the series 15 ஜூலை 2012

நதீம் எஃப் பரச்சா

இறைவன் வெளியே, பைத்தியக்காரத்தனம் உள்ளே

ஜூலை 4 ஆம் தேதி, புதன் கிழமை, பஹவல்பூர் (தெற்கு பஞ்சாப்) நகரத்தில் உள்ள போலீஸ் ஸ்டெஷனின் உள்ளே வெறியேறிய கும்பல் ஒன்று உடைத்து புகுந்தது. அந்த கும்பலின் குறி ஒரு நாடோடி. இப்படிப்பட்ட நாடோடிகளை பாகிஸ்தானில் ஏராளமாக இருக்கும் சூபி துறவிகளின் தர்க்காக்களின் அருகே பார்க்கலாம். இந்த நாடோடிகளை மலாங் malang என்று அழைப்பார்கள்

அந்த பகுதி மக்கள் இந்த நாடோடியை சித்தசுவாதீனம் இல்லாதவர் என்று விவரித்தார்கள். ஒரு சிலர் இந்த நாடோடி, முஸ்லீம்களின் புனித புத்தகமாக குரானை அவமரியாதை செய்துவிட்டார் என்று புகார் கொடுத்ததால், அந்த பகுதி போலீஸ் இந்த நாடோடியை கைது செய்தார்கள்.

ஆகவே, புதன்கிழமை, போலீஸ் லாக்கப்பில் கம்பிகளுக்கு பின்னால் உட்கார்ந்திருந்தபோது, போலீஸ் வழக்கம்போல, அந்த நாடோடியை பார்த்து, பரிதாபப்படும் இளிப்போடு, இந்த நாடோடி சித்தசுவாதீனம் இல்லாமல் இருப்பதையும் கேலி செய்துகொண்டிருந்தபோது, கும்பல் அந்த போலீஸ் ஸ்டேஷனை சுற்றி வளைத்து, அந்த மதநிந்தனையாளரை (blasphemer) தன்னிடம் கொடுக்கும்படி கேட்டது.

போலீஸ்காரர்கள் மறுத்தார்கள். அந்த நபரின் மீதான வழக்கை நீதிமன்றத்தில்தான் முடிவு செய்யவேண்டும் என்றார்கள். போலீஸ் யூனிபார்ம் அணிந்திருக்கும் இந்த போலீஸ் முஸ்லீம்கள் தானாகவே வந்து இந்த நாடோடியை கொளுத்தாமல் இருப்பதற்கு ஆச்சரியமடைந்தது போல, இந்த கும்பல் மேலும் முந்தி போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைய முனைந்தது.

கும்பலில் இருக்கும் நூற்றுக்கணக்கானவர்கள் மீது ஒரு சில போலீஸ்காரர்கள் கைத்தடியுடனும் கண்ணீர்புகையுடனும் மோதி அந்த கும்பலை விரட்டியடிக்க முனைந்தனர். இந்த கும்பலோடு கூட இன்னும் பல நூறு மக்கள் வேடிக்கை பார்ப்பதற்கா வேறு குழுமியிருந்தனர். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளிலெல்லாம் ஈடுபடாமல் ஆனால், உயிரற்ற பிணம்போல அமைதியாக வேடிக்கை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் குழுமுமே அதுபோல.

மேலதிகாரிகளிடம் மேலும் பல போலீஸ்காரர்களை துணைக்கு அனுப்பி வைக்க ஒரு போலீஸ் கெஞ்சினார். அதற்குள் ஏற்கெனவே கும்பல் போலீஸ் லாக்கப்புக்குள் நுழைந்துவிட்டது. மலாங்க் நாடோடி எங்கே வைக்கப்பட்டிருக்கிறாரோ அங்கேயே சென்றது.

செய்திபத்திரிக்கைகள் அந்த சிறையை இரண்டு ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர்கள் பாதுகாத்துவந்தார்கள் என்று அறிவிக்கின்றன. உருது தினசரி பத்திரிக்கை செய்தி நிருபர் என்னிடம் சொன்னதை வைத்து பார்த்தால், அந்த போலீஸ்காரர்கள் கும்பல் மீது சுடுவதற்கு தயாராகத்தான் இருந்தார்கள். ஆனால், அலைமோதி வந்த ஏராளமான மக்களை பார்த்து வழியை தடுக்க மட்டுமே செய்தார்கள் என்று அறிகிறேன்.

வேறென்ன செய்யமுடியும்? அவர்களை உதறிவிட்டு மட்டும் போகவில்லை. இரக்கமில்லாமல் அடித்து துவைத்தது இந்த கும்பல். அறைக்குள் நுழைந்த கும்பல், அங்கே திகிலடைந்து இருந்த நாடோடியை பிடித்து இழுத்து வெளியே வந்து குச்சிகளாலும், தடிகளாலும், இரும்பு கம்பிகளாலும் அடித்து துவைக்க ஆரம்பித்தது.

கும்பலிடம் உயிருக்கு மன்றாடி அந்த நாடோடி கத்தினார் கெஞ்சினார் என்று ஒரு சில சாட்சிகள் ( உயிரற்ற பிரேதங்கள்) பத்திரிக்கை நிருபர்களிடம் கூறினார்கள். ஆனால், வேடிக்கை பார்த்தவர்களும் அப்படியே நின்றார்கள். அமைதி மார்க்கமான” இஸ்லாமை நிந்தித்ததற்காக அந்த மலாங்கை நரகத்துக்கு அனுப்ப அந்த கும்பல் வெட்டிக் கொல்லுவதற்கு முன்னால் அதிகப்படி போலீஸ்காரர்கள் வந்துவிடுவார்கள் என்று பிரார்த்தனை செய்தபடி அடிவாங்கிய போலீஸ்காரர்களும் அப்படியே நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

அதிகப்படி போலீஸ்காரர்கள் வந்தார்கள். ஆனால், அதற்குள் கும்பல் தனது பழிவாங்கி ரத்தம் குடித்து பசியாறியிருந்தது. அந்த மனநலம் சரியில்லாத நாடோடியை அடித்தே கொன்றிருந்தது. தனது ரத்தவெறிக்கு அது போதாது என்று அந்த நொந்து உயிரற்று கிடந்த சடலத்தை நெருப்பை வைத்து கொளுத்தியது.

இஸ்லாமை நிந்தித்த அந்த கொடியவனின் உடலிருந்து எழுந்த தீக்கொழுந்துகளை பார்த்து அந்த கும்பலில் இருந்த இஸ்லாமிய பக்திமான்கள் வானத்தை பார்த்து, தங்களது ரத்தம் பாய்ந்த கண்களால் ஏழாவது வானத்தில் உட்கார்ந்திருக்கும் அல்லாஹ்வை தேடி, அந்த அல்லாஹ் தங்கள் மீது ரோஜா இதழ்களை பொழிவார் என்று எதிர்பார்த்திருப்பார்கள் என்று நான் நிச்சயமாக கருதுகிறேன்.

அது நடக்கவில்லை. கடவுள் அந்த செயலை பார்த்து வெறுப்படைந்திருப்பார் என்று யாரும் சொல்லத்துணியவில்லை.

இன்னொரு முறை, நமது நாடு (பாகிஸ்தான்) தனது மத நம்பிக்கையையும், புனித புத்தகங்களையும் காப்பாற்ற ஆன்மீக பெரியவர்களை அனுப்பவில்லை. மாறாக மன நலம் இல்லாத மிருக குப்பைகளை அனுப்பியிருக்கிறது.

___________________________

ஏறத்தாழ பாகிஸ்தானின் எல்லா பத்திரிக்கைகளும் ஊடகங்களும் இந்த செய்தியை பிரசுரித்தன. பாகிஸ்தானின் அரசாங்க நிறுவனங்களும், நீதித்துறையும், அரசியலும், ஏன் சமூகமுமே வளம் குன்றியதாக ஆகிவிட்டன என்று அதே போல மேற்கத்திய ஊடகங்களும் தலையை சொறிந்து கொண்டிருக்கும்.

இஸ்லாமின் கோட்டை” என்று தனக்குத்தானே பெயர் சூட்டிகொண்ட நாடு, மெல்ல மெல்ல புத்தி சுவாதீனமற்ற, வன்முறை மிகுந்த எந்திரங்களாக, சித்தசுவாதீனமற்ற நாடோடிகளிலிருந்து, நேட்டோ உணவு கொண்டு செல்லும் வண்டிகள் வரை எல்லாவற்றையுமே இஸ்லாமுக்கு எதிரான சதிகளாக பார்க்க ஆரம்பித்திருக்கிறது.

இந்த குரூரமான செய்கைக்கு 24 மணி நேரத்துக்கு பிறகும், கொல்லப்பட்டவரின் பெயர் யாருக்கும் தெரியவில்லை.
அவர் மிகவும் பொதுவாக ஆண்கள் நிந்தித்தல் அவரை குற்றம்சாட்டி பகைவர்களை எதிராக தனிப்பட்ட மற்றும் பொருளாதார மதிப்பெண்களை குடியேற சிறுவன், விரக்தியடைந்த மக்கள் மத்தியில் வெறுப்பை தூண்டி மறைமுகமாக ஆதரிக்க இயக்கக்கூடிய பல காரணங்கள் ஒரு பலியாக?

யார் இவர்? இவர் உண்மையிலேயே குரானை அவமரியாதை செய்தாரா? அல்லது, தனது தனிப்பட்ட அல்லது பொருளாதார காரணங்களுக்காக, ”குரானை நிந்தித்தான்” என்று இளைஞர்களை உசுப்பிவிட்டு பகைவர்களை கொல்வது வாடிக்கையாக இருக்கிறதே அது போன்றதொரு பலியாடா?

அல்லது இதுவும், ஒருவரைமற்றொருவர் காபிர் என்று திட்டிக்கொள்ளும், சுன்னி பரேல்வி பிரிவுக்கும், சுன்னி தேவபந்தி பிரிவுக்கும் இடையே நடக்கும் 200 வருட போரின் இன்னொரு நிகழ்ச்சியா?

ஜியாவுல்ஹக் சர்வாதிகார ஆட்சி, Blasphemy Laws என்ற பெயரில் முகம்மது நபியையும், குரானையும் நிந்திப்பதை தடுக்க கொண்டுவந்த சட்டங்களுக்கு பின்னால், இந்த சட்டங்களின் கீழ் கொண்டுவரப்பட்ட 60 சதவீத வழக்குகள் பரேல்விகளும் தேவபந்திகளும் ஒருவரை மற்றொருவர் கைகாட்ட கொண்டுவந்த வழக்குகள் என்று நம்பப்படுகிறது.

1988இல் ஜியாவின் மரணத்துக்கு பின்னால் வந்த பல அரசாங்கங்கள், முக்கியமாக பாகிஸ்தான் மக்கள் கட்சி(Pakistan Peoples Party (PPP) பெனசீர் புட்டோவின் கட்சி), ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பின் ஆட்சி ஆகியவை இந்த சட்டங்களை நீக்க பலமுறை முயற்சித்தன. இந்த சட்டங்கள் இஸ்லாமிய வரலாற்றில் இதுவரை இருந்ததில்லை என்று பல தாராளவாத முஸ்லீம் அறிஞர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஜாவேத் அஹ்மத் காமிடி என்பவர் பாகிஸ்தானின் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் அறியப்பட்டவர். இவர் பகிரங்கமாகவே இந்த அவமரியாதை சட்டங்கள் இஸ்லாமிய நீதியில் கிடையாது என்று அறிவித்திருக்கிறார். இவை மனிதரால் உருவாக்கப்பட்டவை (கடவுள் உருவாக்கியவை அல்ல) என்று அறிவித்திருக்கிறார். 2009இல், பாகிஸ்தானின் பல்வேறு தீவிரவாத குழுக்களின் அச்சுருத்தலுக்கு பின்னால், காமிடி தலைமறைவாகி, மலேசியாவுக்கு பறந்து சென்றார்.

உதாரணமாக 1988-91/1993-96இல் பெனசீர் புட்டோ ஆட்சியிலிருந்தபோது இந்த அவமரியாதை சட்டங்களை மாற்ற வேண்டுமென்று லேசுபாசாக பேசினார். ஆனால், அவரது முயற்சி மத கட்சிகளால் முறியடிக்கப்பட்டது. அந்த விவாதத்தை பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசக்கூடியமுடியவில்லை.

2000களில் முஷாரப் சர்வாதிகார ஆட்சியின்போது, அவரும் இந்த சட்டங்களை நீக்க முயன்றார். மேற்பூச்சான மாற்றங்களையே அவரால் கொண்டுவரமுடிந்தது.

2010இல் பாகிஸ்தான் மக்கள் கட்சி எம்பியும் இப்போதைய பாகிஸ்தானின் அமெரிக்க தூதருமான ஷெர்ரி ரஹ்மான் சட்ட திருத்தத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவந்தார். . பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவரும் பஞ்சாப் கவர்னருமான சல்மான் தஸீர் குரானை அவமரியாதை செய்தார் என்று நினைத்து அவருடைய பாடிகார்டாலேயே கொல்லப்பட்டபின்னால் அதுவும் நிறைவேறவில்லை.
ஒரு ஏழை கிறிஸ்துவ பெண்ணை இஸ்லாமுக்கு மதம் மாற்ற விரும்பியர்கள், அந்த பெண் மதம் மாறவில்லை என்பதால் அவர் குரானை அவமரியாதை செய்தார் என்று அவர் மீது அவதூறு வழக்கு போட்டபோது, அந்த பெண்ணுக்கு ஆதரவாக பேசியதால், தஸீர் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் சல்மான் டஸீர். இவர் பஞ்சாப் ஆளுனர். இவர் மதநிந்தனை செய்தார் என்று முல்லாக்கள் கூறியதால், மதவெறியனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜமாத்தே இஸ்லாமி, தேவபந்தி ஜாமியத் உலீமா இஸ்லாம், பரேல்வி சுன்னி இத்தேஹாத் கவுன்ஸில், ஆகியவை மதநிந்தனை சட்டங்களை நீக்குவதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கின்றன

மேலும், கடந்த பத்தாண்டுகளில், ஏராளமான ஜிகாத் அமைப்புகள், மதப்பிரிவு அமைப்புகளுடன், முக்கியமான ஊடகத்துறை ஆட்களும் இதில் குதித்திருக்கிறார்கள்.

தஸீர் கொலை செய்யப்பட்ட வருடம், ஷெர்ரி ரஹ்மான் மதநிந்தனை சட்டத்தை மாற்ற முனைந்த போது இந்த மதப்பிரிவு அமைப்புகளும் ஜிகாத் அமைப்புகளும் நாடு முழுவதும் பெரும் ஊர்வலங்கள் நடத்தி இதனை எதிர்த்தன.

இந்த ஊர்வலங்களில் தடை செய்யப்பட்ட மதப்பிரிவு தலைவர்களும் பயங்கரவாத அமைப்பு தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இது போதாது என்று, பெரிய தொலைக்காட்சி ஊடகத்துறையினரான ஆமிர் லியாகத், அன்ஸார் அப்பாஸி போன்றவர்களும், தங்களுக்கு ஊடகங்களில் இருக்கும் முக்கியத்துவத்தை பயன்படுத்திகொண்டு, இந்த மதநிந்தனை சட்டங்களை நீக்கக்கூடாது என்று பேசுவது மட்டுமின்றி, இந்த மத நிந்தனை சட்டங்களால் பாதிக்கப்படும் அப்பாவிகள் மீது வன்முறையைபிரயோகிக்க வேண்டும் என்று இஸ்லாமின் பெயரால் கும்பல்கள் சென்று தாக்குவதை நியாயப்படுத்துகின்றனர்.

சிவில் சமூகத்தின் மற்றொரு முக்கிய பங்கான வழக்குறைஞர்களில், 2006-07 இல் முஷாரப் ஆட்சிக்கு எதிராக உருவான வக்கீல்கள் இயக்கம் இன்று மதரீதியான வன்முறையை நியாயப்படுத்தும் இயக்கமாக ஆகியிருக்கிறது.

தஸீரை கொலை செய்த பாடிகார்ட் மீது ஏராளமான வக்கீல்கள் ரோஜாப்பூக்களை சொறிவதை காமெராவிலெயே வீடியோ எடுத்து புழக்கத்தில் இருக்கிறது. இப்போது சமீபத்தில் லாகூர் பார் கவுன்ஸில் என்ற லாகூர் வழக்குறைஞர்கள் மையம்,ஷெஜான் புட் புராடக்ட்ஸ் என்ற நிறுவனம் பார் கவுன்ஸிலுக்குள் எந்த வியாபாரமும் செய்யக்கூடாது என்று தடை விதித்திருக்கிறது. காரணம், ஷெஜான் அஹ்மதியாக்களால் நடத்தப்படுகிறதாம்.


ஸ்வாத் பள்ளத்தாக்கில் இஸ்லாமிய தீவிரவாதிகளால், ஒரு பெண் சவுக்கால் அடிக்கப்படுவதை திரும்ப திரும்ப தொலைக்காட்சியில் காண்பித்ததற்கு அன்ஸார் அப்பாஸி கோவித்துகொண்டார். முதலில் அப்படி சவுக்கால் அடிப்பது “இஸ்லாமிய ஷாரியா கூறுவதுபடிதான்” என்று கூறினார். பிறகு, அவ்வாறு சவுக்கால் அடிப்பதை காட்டுமிராண்டித்தனம் என்று பலர் கூறுவதோடு தான் முரண்படுவதாக கூறினார்.
___________________________

மதநிந்தனை சட்டத்தின் மூலம் தங்களது சொந்த பொருளாதார ரீதியான எதிரிகளை, அல்லது மத ரீதியான எதிரிகளை தீர்த்துக்கட்டவே பலரால் தவறாக பொய்யாக உபயோகப்படுத்தப்படுகிறது என்பது ஒரு பக்கம். மற்றொரு பக்கத்தில், மக்கள் தடியெடுத்தவன் தண்டல்காரனாக கும்பல் கலாச்சார ரீதியில் சட்டத்தை கையில் எடுத்துகொள்ள ஊக்குவிக்கிறது என்பதும் உண்மை.

பவல்பூரில் மனநிலை சரியில்லாத மலங்கை கொலை செய்தது, பாகிஸ்தானில் முதன்முறையாக இஸ்லாமை காப்பாற்ற அப்படிப்பட்ட ஒரு கொடூரம் நடந்தது என்று சொல்லமுடியாது.

இப்படிப்பட்ட மதநிந்தனைக்காக அப்பாவிகள் கொலை செய்யப்படுவது பெரும்பாலும் மத்திய பஞ்சாபிலும் தெற்கு பஞ்சாபிலுமே அதிகம் நடந்திருக்கிறது என்பது சிந்திக்கத்தகுந்த ஒரு விஷயம். கடந்த இருபதாண்டுகளில், பஞ்சாப் முழுவதுமே ஒரு மதரீதியான பெரும் மாற்றத்தில் இருக்கிறது. இங்கேதான் ஜிகாதி அமைப்புகளும், மதப்பிரிவு தீவிரவாதமும் கொளுந்துவிட்டு எரிகிறது.

இவ்வாறு மதநிந்தனை செய்பவர்களின் சார்பாக தங்களை பார்த்துவிடுவார்களோ என்று பொதுமக்களும், அரசியல்வாதிகளும், அரசாங்க அமைப்புகளும் இந்த ஜிகாதி அமைப்புகளுக்கும், மதப்பிரிவு தீவிரவாதிகளுக்கும் பயப்படுகிறார்கள்.

தஸீர் கொலை, ஷெர்ரி ரஹ்மானும், பாஜியா வாஹெப்பும் அச்சுருத்தப்பட்டது ஆகியவை தவிர்த்து, மத்திய அரசாங்கமும் பஞ்சாபில் நடக்கும் நவாஸ் ஷெரீபின் கட்சி பி.எம்.எல்லும் எவ்வாறு மதரஸாக்களிலும், மசூதிகளிலும் வினியோகிக்கப்படும் பயங்கரவாத ஆதரவு பிரசுரங்களையும், வன்முறைக்கு தூண்டும் பேச்சுக்களையும் நிறுத்துவது என்று தெரியாமல் திருதிருவென்று விழிக்கிறார்கள்.

உண்மையில், மதவாதம் பேசாத, வலதுசாரி கட்சிகளான நவாஸ் ஷெரீபின் பி.எம்.எல் கட்சியும், இம்ரான் கானின் பிடிஐ கட்சியும், மதப்பிரிவு தீவிரவாதிகளுடனும் ஜிகாதி அமைப்புகளுடனும் உறவு பேணுவதை ஜரூராக செய்துவருகின்றன. மேலும், மதநிந்தனை செய்பவர்களை மக்களே தண்டிக்க வேண்டும் என்று பேசி கும்பல் வன்முறையை ஆதரிக்கவும் செய்கிறார்கள்.

இம்ரான் கான் தனது பிடிஐ கட்சி கூட்டத்தில்பேசுகிறார். கூட்டத்தில் ஜமாத்தே இஸ்லாமி கட்சி கொடிகளும், தடை செய்யப்பட்ட சிபாஹி ஷஹாபா பாகிஸ்தான் (சுன்னி பிரிவு பயங்கரவாத அமைப்பு) கொடிகளும் காணப்படுவதை பார்க்கலாம்.

பஞ்சாப் சட்ட அமைச்சர் பி.எம்.எல் தலைவர் ரானா சனாவுல்லாஹ் மேடையில் தடை செய்யப்பட்ட சிபாஹி சஹாபா அமைப்பு தலைவருடன் காணலாம். (இந்த சிபாஹி சஹாபா அமைப்பு ஷியா பிரிவினரையும் அஹ்மதியா பிரிவினரையும் கொல்லுவதை முக்கிய வேலையாக செய்கிறது)

லாஹூர் வக்கீல்கள் சல்மான் தஸீரை கொன்றவனை பாராட்டுவதை பார்க்கலாம். இவன் மீது ரோஜா இதழ்களை தூவி அவனை காவிய நாயகன் என்று புகழ்கிறார்கள். இந்த படத்தில் இருக்கும் பல வக்கீல்கள், முஷாரப் அரசுக்கு எதிராக வக்கீல்கள் இயக்கத்தில் இருந்தவர்கள்.

தொலைக்காட்சியில் இஸ்லாமிய மதபோதனை செய்யும் ஆமிர் லியாகத். தனது தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக அஹ்மதியா பிரிவு மக்கள் மீது வன்முறையை ஏவ மக்களை தூண்டுகிறார். 2007 இல் 4 அஹ்மதியாக்கள் கொலை செய்யப்பட்டார்கள். அஹ்மதியாக்கள் லியாகத் நிகழ்ச்சியை காரணமாக சொன்னார்கள். அவர் மீது எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவர் எம்.க்யூ.எம் என்ற கட்சி பிரமுகர். இவர் mqm கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தொலைக்காட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். ஆனால், இந்த வருடம் ரம்ஜானிலிருந்து மீண்டும் அதே நிகழ்ச்சியை அதே தொலைக்காட்சியில் நடத்த அழைக்கப்பட்டுள்ளார்.
___________________________

ஆக, அந்த நாடோடி சூபி மலாங் யார்? அவருடைய பெயர் என்ன? அவர் என்னதான் செய்தார்? பத்திரிக்கையாளர்களிடமிருந்து இதனைத்தான் என்னால் கண்டுபிடிக்க முடிந்தது.

அவருடைய பெயர் இன்னும் தெரியவில்லை. அவர் ஒருவேளை மிகவும் ஏழ்மையான நிலையிலுள்ளவராக இருந்ததால் இருக்கலாம். அவரை கொல்ல முயன்றவர்களுக்கு தெரிந்தவராக இருக்கலாம்.

அந்த பகுதி மக்களால் மனநலம் குன்றியவராக அறியப்பட்டவராக இருந்தார். இந்த மனநலம் குன்றியவர் இஸ்லாமிய புனித புத்தகத்தை அவமரியாதை செய்தார் என்று யார் கண்டுபிடித்தது என்றும் தெரியவில்லை.

ஈராக்கில் அரசாங்க அதிகாரிகளால் 10 ஆம் நூற்றாண்டில் மத நிந்தனைக்காக கொலை செய்யப்பட்ட சூபி துறவி, அறிஞர், கவிஞரான மன்சூர் அல் ஹல்லாஜ் என்பவரை பின்பற்றியவர் இந்த மலாங்க், மன்சூர் அல் ஹல்லாஜ் பிரிவின் அஷிக் என்று அந்த பகுதி மக்கள் கருதியிருக்கிறார்கள்.

அப்பாஸித் காலிப் அல் முக்டாதிர் என்னும் மன்னரால், 922 வருடத்தில் மன்சூர் அல் ஹல்லாஜ் தூக்கிலிட்டதை காட்டும் ஓவியம்.
இவர் சூபி ஆன்மீகத்தில் தோய்ந்த ஒரு நிலையில், “அனால் ஹக்” (நானே உண்மை) என்று கத்தியதாக கூறப்படுகிறது. இஸ்லாமிய மதகுருக்கள், இவர் தன்னைத்தானே கடவுள் என்று அறிவித்துகொள்கிறார் என்று கருதினார்கள். ஆன்மீகத்தின் உச்ச நிலையை அவர் அடைந்ததால் அவர் அவ்வாறு கூறினார் என்று சூபிக்கள் கருதுகிறார்கள். மன்சூர் அல் ஹ்ல்லாஜின் இஸ்லாம் மக்களிடம் பிரபலமானதால், தன் ஆட்சிக்கு பங்கம் வருமோ என்று அஞ்சிய முக்டாதிர் மன்னர், இஸ்லாமிய மதகுருக்கள் உதவியுடன் இவரை கொலை செய்தார் என்று கருதுகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட இந்த மலாங்குக்கு ஒரு குடும்பம் எங்காவது இருக்கலாம். ஆனால், அவர்கள் வெளியே பேச அஞ்சுவார்கள்.

மதநிந்தனைக்காக கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரும் அச்சுருத்தலுக்கும் கொலைக்கும் பாத்திரமாகிவிடுகின்றார்கள். தீக்கனவிலிருந்து எழுந்திருக்கமுடியாமல், மீண்டும் மீண்டும் உற்சாகத்துடன் கடவுளின் எதிரிகளை கொல்வதும் மதநிந்தனைக்காக கொலை செய்வதும் மிகவும் நிரந்தரமானதாகவும் இன்பமானதாகவும் ஆகிவிட்டிருக்கிறது.

மனத்துயரமடைந்த என் நண்பர் ஒருமுறை என்னிடம் சொன்னார்.”பாகிஸ்தானிடமிருந்து அல்லாஹ் இஸ்லாமை காப்பாற்றட்டும்”

http://dawn.com/2012/07/05/exit-god-enter-madness/

Series Navigationஇழப்பு
author

Similar Posts

109 Comments

  1. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    ஆஹாஆஆஆஆ …. நூறுக்கு மேல பின்னூட்டங்கள் பெற – ஓரிரு வாரங்களுக்கு சூடாக விவாதம் ஓட வாய்ப்புள்ள மற்றொரு தலைப்பு.

    ஆரம்பிச்சிட்டாய்ங்கய்யா ஆரம்பிச்சிட்டாய்ங்கய்ய்ய்யா ! :)

  2. Avatar
    punai peyaril says:

    “அனால் ஹக்” (நானே உண்மை) — நானே கடவுள். இது தான் உண்மை… நாம் தூய்மையாக தூய்மையாக கடவுள் என்று சொல்லப்படுதலின் பகுதியாகிறோம்… தூய்மையற்று, கடத்தல் கொலை கொள்ளை பெண்சுகம் பொன்சுகம் என்று திமிரெடுத்து அலைபவர்கள் தான் கடவுளை தூரத்தே வைத்து அய்யோ நான் பாவி என டிராமா போட்டு செல்வ செழிப்புடனே வாழ மட்டுமே துடிக்கிறார்கள்…

  3. Avatar
    மலர்மன்னன் says:

    அனல் ஹக் என்று சொன்னவர் ஹுசைன் மன்சூர் அல் ஹலாஜ். அவரைத் துண்டு துண்டாக வெட்டி சிறுகச் சிறுகக் கொன்றார்கள். ஒவ்வொரு உறுப்பையும் வெட்டிவிட்டு இப்போதாவது ஒப்புக் கொள்கிறாயா என்று கேட்க, ஒவ்வொருமுறையும் அனல் ஹக் என்றே இறுதிவரை சொன்னார். ஹுசைன் மன்சூர் அல் ஹலாஹ் ஹிந்துஸ்தானம் வந்து திரும்பிச் சென்றவர். அனல் ஹக் என்பது பற்றி நானே எழுதுவதாக இருந்தேன். அவகாசம் இன்மையால் எழுத இயலவில்லை. அவர் தூக்கில் இடப்பட்டார் என்பது தவறான தகவல்.
    -மலர்மன்னன்

  4. Avatar
    வெங்கட் சாமிநாதன் says:

    என்ன ஆயிற்று? இங்கு பக்கம் பக்கமாக எழுதும் அமைதி மார்க்க சீலர்கள் யாரையும் இப்போது காணோமே. இது பற்றி ஆதாரபூர்வமாக, குரான்,ஹதீஸ், ஷரியா மேற்கோள்கள் நிறையப் பெருக்கெடுக்கும் என்று காத்திருந்தேன். ஒன்றையும் காணோமே. நதீம் இபபடி பொய்யும் வதந்தியுமான பத்திரிக்கைச் செய்திகளைப் பரப்புகிறாரே, இவரும், அந்த வதந்திகளையும் பொய்பிரசாரத்தையும் இன்னும் பரந்த அளவில் பரப்பும் திண்ணை ஆசிரியர்களும் என்ன தண்டனைக்குரியவர்கள்? நம்மூர் இஸ்லாமிய அமைதி மார்க்க “கொள்கைப் பரப்புச் செயலாலளர்கள்” ஏன் மௌனமாகிவிட்டார்கள்?

  5. Avatar
    suvanappiriyan says:

    இஸ்லாம் ஒன்று சொல்ல அதற்கு நேர் எதிரான ஒரு கருத்தை இஸ்லாத்தின் பெயரில் சொல்லி மக்களை குழப்பமடையச் செய்வது கொலையை விடக் கொடியது. ‘நான் கடவுள்’ என்ற கொள்கையை ஒருவர் தனது லட்சியமாக கொண்டால் அவர் இஸ்லாத்துக்கு வெளியில் புதிய மதத்தை உருவாக்கிக் கொள்ளட்டும். உள்ளுக்குள்ளேயே இருந்து கொண்டு அமைதியாக சென்று கொண்டிருக்கும் ஒரு வழிபாட்டில் குழப்பத்தை உண்டு பண்ணுவதை யாருமே அனுமதிக்க மாட்டோம்.

    அதற்காக சம்பந்தப்பட்டவர்களை கொலை செய்வது: மற்றும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது என்பது கண்டிக்கத் தக்கது. இதற்கு இஸ்லாமும் தடை விதிக்கிறது.

    1. Avatar
      punai peyaril says:

      கடவுள் என்பது பயமுறுத்தப்படாமல், எதேச்சிகாரம் பண்ணாமல், அடுத்தவர்களின் வாழ்வைச் சிதைக்கும் எண்ணம் வராமல், கடத்தல், கஞ்சா, ஹவாலா , கடற்கொள்ளை, பெண்மோகம், என்ற சிந்தனைகள் வராமல் வாழும் எண்ணம் தர வேண்டும். அதனால் தான் இந்து மதச் சிந்தனைகளை பலரும் , தங்கள் மதம் மாறாமல், ஏற்றுக் கொண்டே இருக்கிறார்கள்…. ”அமைதியாக சென்று கொண்டிருக்கும் ஒரு வழிபாட்டில்..” – அமைதியில்லாத இடங்கள் யாரின் வருகையால் அப்படியென்று புஸ்ஸா போன பலூனுக்கு கூட தெரியும்…

  6. Avatar
    மலர்மன்னன் says:

    இஸ்லாமிய வழிகாட்டலின்படி நடத்துவதாகச் சொன்ன, மவுல்விகளும் குருமார்களும் சொல்லும் விளக்கத்தின்படி நடந்த ஆட்சி அளித்த தண்டனைதான் அது. எவரும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அளித்த தண்டனை அல்ல. எப்படியோ, இஸ்லாத்தில் கருத்துச் சுதந்திரத்திற்கு இடம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டவரை பரவாயில்லை. நானும்தான் குரான், ஹதீஸ், எல்லாம் படித்திருக்கிறேன். அதென்ன எதை எடுத்துக் காட்டினாலும் எதாவது ஒரு சமாதானம் சொல்வது? இம்மாதிரி சமாதானங்களை அந்த மார்க்க அறிஞர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்களே!
    இக்கட்டுரையிலேயே ஒரு பெண்ணைக் குப்புறப் படுக்கவைத்து இருவர் பிடித்துக் கொள்ள ஒருவர் தொடர்ந்து கொம்பால் அடிக்கும் காட்சியும் இடம் பெறுகிறதே, அந்த தண்டனையும் நியாயப் படுத்தப்படுகிறதே, பார்க்கவில்லையா?
    -மலர்மன்னன்
    -மலர்மன்னன்

  7. Avatar
    மலர்மன்னன் says:

    நானே கடவுள் என்று அவர் அகம்பாவத்துடன் ஹிரண்யன்போலச் சொல்லவில்லை. ஆன்மானுபூதியின் உணர்வால் பரவசத்தில் வெளி வந்த வாசகம் அது. இஸ்லாத்தில் இருப்பவர் வெளியே வந்து ஒரு புதிய மதத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம் என்றெல்லாம் வெறும் விவாதத்திற்குத்தான் பெருந்தன்மையுடன் சொல்ல முடியும். நடைமுறையில் லேசில் சாத்தியமில்லை. இஸ்லாமிய சட்டப்படி நடக்கும் நாடுகளில் அஹமதியாக்கள் நிலைமை என்ன? பொதுவாக அத்தகைய நாடுகளில் சூஃபிக்கள் பாடு சங்கடம்தான்.
    அமெரிக்கா, ஐரோப்பாவிலேதான் இஸ்லாத்தைக் கண்டித்து வெளியே வர முடிகிறது. மற்ற நாடுகளில் நிலைமை அவ்வாறு இல்லை.
    -மலர்மன்னன்

  8. Avatar
    Indian says:

    To think that once these fanatic’s forefathers were peace loving Indian Hindus. It shows what Islam can do to you.

  9. Avatar
    punai peyaril says:

    எனக்கு அடிபணி, அடிபணியாதவனை அடி என்று கடவுள் சொல்ல மாட்டார்…. அடிமைகளாக மற்றவர்களை நடத்தும் கும்பலை உருவாக்கிய தேசத்தில் இவர்கள் கடவுளையும் அடிமையாக்குவார்கள்…

  10. Avatar
    suvanappiriyan says:

    திரு புனை பெயரில்!

    //கடவுள் என்பது பயமுறுத்தப்படாமல், எதேச்சிகாரம் பண்ணாமல், அடுத்தவர்களின் வாழ்வைச் சிதைக்கும் எண்ணம் வராமல், கடத்தல், கஞ்சா, ஹவாலா , கடற்கொள்ளை, பெண்மோகம், என்ற சிந்தனைகள் வராமல் வாழும் எண்ணம் தர வேண்டும். அதனால் தான் இந்து மதச் சிந்தனைகளை பலரும் , தங்கள் மதம் மாறாமல், ஏற்றுக் கொண்டே இருக்கிறார்கள்….//

    http://www.youtube.com/watch?v=BAOeO0O8sDs&feature=g-high-rec
    இந்து மதம் என்றால் என்ன என்பதைப் பற்றி சைவ மதத்தின் வழி வந்த கருத்தம்மா புகழ் பெரியார்தாசன் கூறுவதையும் கொஞ்சம் கேளுங்கள்.
    திரு மலர் மன்னன்!
    //அமெரிக்கா, ஐரோப்பாவிலேதான் இஸ்லாத்தைக் கண்டித்து வெளியே வர முடிகிறது. மற்ற நாடுகளில் நிலைமை அவ்வாறு இல்லை.//

    அமெரிக்காவில் இஸ்லாம் எந்த அளவு வீரியமாக வளர்ந்து வருகிறது என்பதை விக்கி தளம் தரும் செய்தியை கொஞ்சம் பார்த்து விடுங்கள். உங்களின் மற்ற கேள்விகளுக்கு வேலையை முடித்து விட்டு வந்து பதில் தருகிறேன்.

    http://en.wikipedia.org/wiki/Islam_in_the_United_States

  11. Avatar
    k.Raghupathy says:

    சுவனப்ப்ரியனுக்கு….
    உங்கள் பதில் நடந்த நிகழ்வை நியாயப்படுத்துவதைப்போல் உள்ளது..அப்படித்தான் நாங்கள் என்று சொல்லமல் சொல்வதுப்ப்போல் உள்ளது. பாவம் முஸ்லீம் மக்கள்..கடவுளை
    உள்ளத்தால் நெருங்க அனுமதி கிடைக்காது போலிருக்கது..சரி
    அப்படி அவர் தனி மதமாக இருக்க விட்டுவிடுவீர்களா?

  12. Avatar
    smitha says:

    Piriyan,

    Islam oru amaidhi maargam. Is it not?

    We are seeing that.

    When a christian teacher asked a question about prophet in an exam in kerala, his fingers were chopped off.

    Islam is an amaidhi maargam.

    When a policeman questioned a muslim youth in kovai over a road offence, he was killed & consdequently there were 13 blasts in a single day in kovai – a world record.

    Islam is an amaidhi maargam.

  13. Avatar
    smitha says:

    Piriyan,

    I am posting the following comment which came in the wake of Osama bin laden’s death.

    ஒசாமா பின் லேடன் அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாக செய்தி வந்துள்ளது. ஒசாமா ஒரு நேர்மையான மனிதராக இருந்தால் அமெரிக்க படையுடன் மோதி போரிட்டிருந்தால் அனைவரும் வரவேற்றிருப்பர். ஆனால் அவர் ஒரு முட்டாள் தனமான மற்றும் மிக கொடூரமான செயலை செய்து, உலக வர்த்தக மையத்தில் மோதி, சுமார் நாலாயிரம் சிவிலியன்கள் ( அமெரிக்கர்கள் மட்டுமல்ல- பல நாடுகளை சேர்ந்த மக்கள் ) சாவுக்கு காரணம் ஆனவர்.

    அவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி , பிரார்த்தனை கூட்டம் ஒன்று அண்ணாசாலை அருகே ஒரு மசூதியில் நடைபெற்ற செய்தி அனைத்து பத்திரிக்கைகளிலும் வந்துள்ளது. உலக வர்த்தக மைய கட்டிடம் தாக்கப்பட்டதில் பல இந்தியர்களும் இறந்துள்ளனர். பல இந்தியர்களை படுகொலை செய்த ஒசாமா பின் லேடன் மறைவுக்கு அஞ்சலி செலுத்துபவன் யாரும் ஒரு உண்மையான இந்தியனாக இருக்க முடியாது. அவர்கள் தேச விரோதிகளே.

    இதை விட ஒரு பெரிய ஜோக்கு என்னவென்றால், யாராக இருந்தாலும் இறந்தவுடன் ஓரிரு நாளில் அல்லது ஒரு வாரம், பத்து நாளுக்குள் இரங்கல் தெரிவிப்பதும், அஞ்சலி கூட்டங்கள் நடத்துவதும் வழக்கம். ஆனால் மசூதியில் இரங்கல் கூட்டம் நடத்திய மத குருமார் பேசும்போது, ஒசாமா இறந்து இரண்டு வருடம் ஆகி விட்டது என்றும் அவரை அமெரிக்க படை கொன்றதாக சொல்வது பொய் என்றும் கூறியிருக்கிறார். இந்த புளுகர் சொல்வது உண்மையெனில் இரண்டு வருடங்களுக்கு முன் ஒசாமா இறந்தபோதே , ஏன் அஞ்சலி மற்றும் பிரார்த்தனை கூட்டம் நடத்தவில்லை? இந்த தீவிரவாத ஆதரவு கும்பலின் பொய் நன்றாக தெரிகிறது. அல்லா இந்த பொய்யர்களை நிச்சயம் மீளா நரகத்திற்கு அனுப்புவார். இது உறுதி.

    இறந்தவருக்கு இரண்டு வருடம் கழித்து இரங்கல் கூட்டம் நடத்திய இந்த நபர்களை உலக சாதனைகளை பதிவு செய்யும் லிம்கா உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    Mind you, this was the only mosque in India which conducted the prayer session.

    Islam oru amaidhi maargam. Sure.

  14. Avatar
    punaipeyaril says:

    இறைவன் வெளியே, பைத்தியக்காரத்தனம் உள்ளே — anything else we have to tell about these Arabian Slaves…?

  15. Avatar
    மலர்மன்னன் says:

    ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் முகமதியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இங்கிலாந்திலும் ஏன் ஆஸ்திரேலியாவில் கூட ஹிந்துஸ்தானம்போல் ஓட்டுகளுக்காக அப்பீஸ்மெண்ட் கொள்கை அரசியல்வாதிகளால் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதையெல்லாம் அறிவேன். இது குறித்து அங்கெல்லாம் கவலையும் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பலர் முகமதியராக மதம் மாறுவது ஒரு பக்கம் நடந்தாலும் இன்னொரு பக்கம் அதிலிருந்து வெளியேறுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படி வெளியேறுவது அங்கெல்லாம் எளிதாக இருக்கிறது என்றுதானே சொல்லியிருக்கிறேன். அங்கெல்லாம் எவரும் இஸ்லாமியராக மாறுவதில்லை என்று சொல்லவில்லையே! ஏன் திசை திருப்பு கிறீர்கள்? ஆனால் சில பிரபலங்கள் இஸ்லாமியராக மதம் மாறிவிட்டதாகவும் பொய்த் தகவல்கள் வரத்தான் செய்தன.
    -மலர்மன்னன்

  16. Avatar
    suvanappiriyan says:

    திரு மலர் மன்னன்!

    //அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பலர் முகமதியராக மதம் மாறுவது ஒரு பக்கம் நடந்தாலும் இன்னொரு பக்கம் அதிலிருந்து வெளியேறுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படி வெளியேறுவது அங்கெல்லாம் எளிதாக இருக்கிறது என்றுதானே சொல்லியிருக்கிறேன்.//

    அப்படி உலகம் முழவதும் எத்தனை பேர் இஸ்லாத்தை விட்டு சென்றுள்ளனர் என்ற ஆதாரத்தை கொஞ்சம் தர முடியுமா?

    தஸ்லிமா நஸ்ரின் போன்று கர்ப்பப் பை சுதந்திரத்திற்காக அலையும் ஒரு சில ஈனப் பிறவிகள் இஸ்லாத்தில் அது நடக்காது என்பதால் வெளியேறியலாம். அப்படி வெளியேறினால் முதலில் சந்தோஷப் படுவது நான்தான்.

    1. Avatar
      paandiyan says:

      தஸ்லிமா நஸ்ரின்யை நீங்கள் விமர்சிக்கும் விதம நீங்கள் எப்படிப்பட்ட நாகரீக முஸ்லிம் என்பது இங்கு வெளிபடையாக தெரிகின்றது.

  17. Avatar
    punaipeyaril says:

    ரிப்பளிக்கன் இந்த முறை ஜெயித்தால் நல்லது நடக்கும்..

  18. Avatar
    suvanappiriyan says:

    பாகிஸ்தானில் இந்துக்கள் எந்த அளவு சுதந்திமாகவும் மகிழ்ச்சியுடனும் தங்கள் மத பண்டிகைகளை கொண்டாடுகின்றனர் என்பதை விளக்கும் காணொளி!

    1. Avatar
      paandiyan says:

      இதை போல குஜராத்தில் முஸ்லிம்கள் எப்பப்டி மகிழ்ச்சியில் இருகின்றார்கள் என்பதும் யூடுபேயில் நிறய இருகின்றது . போயியும் புரட்டும் புணையதீர்கள்

  19. Avatar
    தங்கமணி says:

    சுவனப்பிரியன்,
    இஸ்லாமிய பெரும்பான்மை உள்ள நாடுகளில் இஸ்லாமை விட்டு வெளியேறினால் மரண தண்டனை. இஸ்லாமை பிடிக்காதவர்கள் அங்கிருந்து வெளியேறுங்கள் என்கிறீர்கள். எப்படி வெளியேறுவார்கள் என்றால் பதிலில்லை.
    இஸ்லாமிய சிறுபான்மை உள்ள இந்தியா போன்ற நாடுகளிலும் இஸ்லாத்திலிருந்து வெளியேறுபவர்களையும் விமர்சிப்பவர்களையும் வன்முறை கொண்டு தாக்க முயல்கிறீர்கள். இஸ்லாமை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்லுகிறீர்கள். எப்படி?
    இஸ்லாமை விமர்சிப்பவர்களையும் இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்களையும் பெரும்பான்மை முஸ்லீம்கள் எப்போது கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களோ அப்போதுதானே இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்கள் சுதந்திரமாக வெளியேற முடியும்?
    இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்களை கண்டு சந்தோஷமடையும் முஸ்லிம் நீங்கள் ஒருவராக மட்டுமே இருக்கிறீர்கள். முஸ்லீம்கள் அனைவரும் உங்களைப் போல சந்தோஷப்படக்கூடியவர்களாக ஆகும் வரைக்கும் இஸ்லாமிலிருந்து வெளியேற விரும்புபவர்கள் காத்திருக்கத்தானே வேண்டும்?

  20. Avatar
    paandiyan says:

    சுவனப்பிரியன் – முஸ்லிம்களை பற்றி ஒரு கட்டுரை வந்தால வரிந்து கட்டிக்கொண்டு இங்கு வந்து எங்களுக்கு எல்லாம் ஒன்றும் தெரியாது என்று நேனைதுகொண்டு நீங்கள் பின்னூட்டத்தில் ஆகிர்மிபது கூட இஸ்லாம் இதை எல்லாம் விரும்பவில்லை என்று ஒரு வரியில் பதில் சொல்ல முடியும் என்னால் ..

  21. Avatar
    smitha says:

    Piriyan,
    \Just bcos U show a clip of a few hindus celebrating a festival,it means hindus are happy?

    Are U that naive?

  22. Avatar
    smitha says:

    Rinkle Kumari – Plight Of Pakistan Hindus

    This story is not only of Rinkle Kumari from Pakistan.

    This is the story of several hundred Hindus and other minorities living across in Muslim countries across the world.

    While there keep on coming some reports of people torturing them – physically and mentally, the story of Rinkle Kumari serves as a proof that in Pakistan, the plight of minorities (the Hindus and Christians) is bad.

    Read on the story of Rinkle and how some Muslim groups have been targeting minority classes’ women to satisfy their needs.

    Rinkle Kumari – Victim Of Love Jihad?

    Rinkle Kumari, Pakistan
    I thought of writing about Love Jihad earlier but could not due to time constraints. But what happened to Rinkle Kumari in Pakistan is a staged act that I I first thought is somehow related to Love-Jihad.

    There are two sides to the story of Rinkle Kumari. One is the statement she issued, which made me think about the Love Jihad thing.

    Then, there is the story given by Rinkle’s relatives in Pak that makes me think about the forcible conversion (which, is against Islam as far as I know).

    Before talking about Rinkle Kumari and Pakistan’s forced conversions, here is a little detail on love jihad that I think will help you understand what could have been happened, that is, if Rinkle is to be believed.

    Love Jihad is a parallel war being fought by some radical Islamist groups. These groups have directed young Muslims to marry outside their religion. They preach the use of love as a method.

    However, this love is fake. They are trained how to trap women by showing false love tactics. The groups behind the love-jihad go to the extent of sponsoring the love stories.

    After the girl falls and accepts to marry the person who approached her using a fake loving heart, she is converted to Islam.

    Mission achieved? Yes. And the person who helped her convert, gets bonus money. What happens after the conversion is another story.

    You may be wondering what is the logic of Love Jihad. No, it is not conversion. It is aimed at increasing the overall Muslim populations in states where the Muslims are minority.

    The girls are used as child bearing machines. If statistics are to be believed, in 29 years from now, whole of France would be a Muslim country.

    Please read Love Jihad In India for more details on stats and how it works.

    Coming back to Rinkle, if it were a love marriage type of things, Rinkle would have taken her clothes with her but the articles/blogs across the Internet say she not even take her footwear.

    Rinkle Kumari – A Forcible Conversion?

    Rinkle Kumari, in the courts of Pakistan, testified that she chose Islam by choice and the marriage was with her consent.

    If this is true, she might have been the victim of Love-Jihad. I do not know how her husband is treating her.

    There is no news about her condition but if it was a forcible conversion as her relatives say, she must be undergoing tremendous physical and mental torture.

    The underlying story is that Rinkle disappeared one fine day and later in the night, her parents were informed she eloped with a Muslim boy, converted to Muslim and married him.

    Parents refuse to believe and also add that some people confronted them when they wanted the Pakistani authorities to take up the issue.

    As of now, the Indian government and Indian media is silent on Rinkle Kumari, Pakistan.

    However, Pak’s own news media, PakistanToday, carries a story on the confusing case of Rinkle Kumari.

    Washington On Forcible Conversions And On Rinkle Kumari

    I will simply quote an extract from the feature carries out in TOI reporting forcible conversions in Pak are on the US radar.

    “Pakistan’s state-endorsed discrimination, and in some cases extermination, of its minorities has finally caught the eye of Washington lawmakers. Coming on the heels of support in Congress for a Baloch homeland in the face of Islamabad’s depredations in the region, a US Congressman has zeroed in on the abduction and forced religious conversion of Hindus in the country highlighted by the case of Rinkel Kumari.”

    Another extract that might interest you:

    ”Rinkel Kumari’s case is just one case of abduction and forced religious conversion in Pakistan,” Congressman Sherman said in the letter to Zardari, citing the Asian Human Rights commission figure of 20-25 kidnappings and forced conversions of Hindu girls in Sindh every month. ”I urge you to take all necessary steps to bring an end to this practice and other harassment of Hindus in Pakistan.”

    For more details about US concern on Pakistan Hindus, read Forced conversion of Hindus in Pakistan jolts US out of slumber.

    Letter From Dr Raj Kumar, Uncle Of Rinkle Kumari

    The maternal uncle of Rinkle Kumari sent a letter to leading newspapers in and across Pakistan. The letter was published in Awami Aawaz and some other newspapers in Pakistan. There are several instances of the letter across the Internet too.

    Here is an extract:

    “It is very unfortunate that sindhi politicians, journalist and writers are criminally silent on the injustice, abuses inflicted on the Sindhi Hindus. Today when they are silent Rinkle Kumari is still looking for the space and passage that she can come back to her parents. Like daring and bold historic character of Marvi she is not ready to succumb before the tyrants. She is still in struggle against them to get free. Which also is vindicated from the fact that she did not talk even she was forced in one tv program, which fact has also been acknowledged by some newspapers.”

    Please contribute your views and how, the Indians – especially Hindus – can help fellow Hindus suffering in alien lands.

  23. Avatar
    smitha says:

    When Pakistan came into existence in 1947, 24 per cent of the population were Hindus.

    And now look at the percentage of Hindus in Pakistan, just below two per cent. What happened to the rest?

    by Bharati Krishna

    The plight of Hindus living in Pakistan and Bangladesh is not an issue to the world, in particular India. They have been ruthlessly killed or converted to Islam in these religious nations.

    The remaining Hindu population in these countries have no human rights and they are considered as second-class citizens.

    Since the formation of these two Islamic republics, the Hindus living there have been terrorized and subjected to forcible conversions.

    When Pakistan came into existence in 1947, 24 per cent of the population were Hindus. And now look at the percentage of Hindus in Pakistan, just below two per cent.

    What happened to the rest? Majority of them have been mercilessly killed by the Islamic fanatics and the rest forcibly converted to Islam.

    The same happened in the case of Bangladeshi Hindus. The percentage of Hindu population in Bangladesh in 1947 (then East Pakistan) was numbered at 31.

    But with course of time it has been declined and stationed at nine per cent now. Massive religious conversion and ruthless murders of the Hindus were the reasons for this decline.

    When the world asks about the human rights violations of many other groups in various countries, it never asks what happened to those Hindus in Pakistan.

    The so-called secular government of India have not bothered about the serious issue so far.

    During the period 1970-1971 over two million Hindus are reported to have been killed in East Pakistan, now known as Bangladesh.

    Activists point out that numerous Hindu women were kidnapped and raped during this period.

    “Hindus suffer constant threats to their lives, security and property in Pakistan and Bangladesh. Many Hindu temples have been despoiled and wiped out there. There are regular reports of illegal encroachments on Hindu temples and lands, looting of Hindu property, discrimination, persecution, molestation and abduction of Hindu girls,” says a Muslim activist who fights against the atrocities of Hindus in Pakistan.

    Dr Sabyasachi Ghosh-Dastidar in his book, Empire’s Last Casualty: Indian Subcontinent’s vanishing Hindu & other Minorities, points out that over three million Hindus have been killed in the process of Islamisation in the area now known as Bangladesh (formerly East Pakistan) since India was partitioned in 1947. This loss of three million lives remains suppressed from the world.

    The sad thing is that, the so-called secular media which cry for all unwanted things have been silent spectators of this ethnic cleansing.

    And the Indian government also does nothing regarding this even though the country has the moral responsibility to protect the Hindus.

    Actually denying human rights to Hindus infringes UN Universal Declaration of Human Rights, 1948, but what to do when these rights are reserved only for a few.

    Piriyan,

    After all tis, do you still say that hindus are living happily in pakistan?

  24. Avatar
    suvanappiriyan says:

    திரு பாண்டியன்!

    //தஸ்லிமா நஸ்ரின்யை நீங்கள் விமர்சிக்கும் விதம நீங்கள் எப்படிப்பட்ட நாகரீக முஸ்லிம் என்பது இங்கு வெளிபடையாக தெரிகின்றது//.

    அப்படி என்றால் அந்த பெண் கேட்ட கர்ப்பப் பை சுதந்திரம் அதாவது எந்த ஆணுடன் வேண்டுமானாலும் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்வேன் என்ற கருத்தை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? நம் குடும்பத்து பெண்கள் இவ்வாறு கோரிக்கை வைத்தால் நாம் பார்த்துக் கொண்டு சும்மா இருப்போமா?

  25. Avatar
    punaipeyaril says:

    நான் பிறப்பால் தமிழர் இனம். ஆனால் பிடிப்பால், இந்து மதம். எனக்கு இந்துமதம் தந்த சுதந்திரம் நானும் ஒரு விழுதாய் எனது புரிதல் நம்பிக்கை அடிப்படையில் வழிபடுதலை அமைத்துக் கொள்ள் முடிந்ததே. எனக்கு உருவ வழிபாட்டில் ஈடுபாடில்லை. ஆனால், நாம் எதை அடைய விரும்புகிறோமோ அதன் உச்சம் தொட அந்த சக்தியை நம்முள் முழுதாய் ஏற்றிக் கொள்ள நினைப்பால் கைகூடினால் அதுவே ஞானம். அது இல்லாதோர் ஒரு உருவத்தைப் பணத்திற்காக், அறிவிற்காக, வீரத்திற்காக திருப்பதி, சரஸ்வதி, காளி என கொண்டு வழிபடுகிறார்கள். ஆனால், நாளா வட்டத்தில் செம்மறியாடு கூட்டம் போல் அரக்கப்பரக்க, புரியாத பாஷையில் சொல்லப்படுவதற்கு சுவாக என்று ஆகிப்போனது பிடித்தமில்லை. கோவில்கள் என்ற பெயரில் இன்றும் கூட ஜத்குரு வாசுதேவ் போன்றவர்கள் எழுப்பும் “தான்” எனும் அகங்கார நிலை கண்டிக்கப்பட வேண்டியதே.. அந்த தியான லிங்க அறை பற்றி விசாரியுங்கள்… -இப்படியெல்லாம் என்னால் பயமின்றி இந்துமதத்தில் மட்டுமே கேள்வியெழுப்ப முடியும். ஆனால், ஒரு “ரூல் புக்கை” வைத்துக் கொண்டு அடுத்தவர்களை அழிப்பது மட்டுமே ஒரு இயக்கமாக இருக்கலாம்… மதமாக இருக்க முடியாது. உலகில் விலைமாதர்கள் பிரஞ்சு நாட்டில் துபாயில் ,பஹ்ரைனில் அதிகமாக உபயோகிப்படுவது யாரால்…? ஏர்போர்ட்டிலும் சரி உலகின் அத்துனை பகுதியிலும் சரி யாரைப் பார்த்து பயந்து ஓடுகிறார்கள்…? இந்துமதத்தை யாரும் மிரட்டி பரப்பவில்லை… தியானம், யோகா என்று அதன் உன்னதங்கள் அறிந்தே அதன் அற்புதங்களை தங்கள் வாழ்வில் பின்பற்றுகிறார்கள் – கிறிஸ்துவராகவோ பௌத்தராகவோ இருந்து கொண்டே… அதிகமாக இருப்பதால் சாத்தான்கள் ஏஞ்சலாக முடியாது என்று பைபிளில் சொல்லியிருக்கிறது…. முதலில், கடத்தல், ஹவாலா, விபச்சாரவிடுதி செல்லல், பொறுமையாய் அடுத்தவர்க்கு மதகருத்துக்களை விளக்குங்கள். இந்தியாவில் முஸ்லீமாக மாறியவர்க்ள் ஒரு குறிப்பிட்ட சாதி பிரிவினரே…. அவர்களுக்கு அதனால் ஒன்றும் மாறவில்லை… திருமாவளவன் தெளிவாக மேடையில் சொன்னார், “மதம் மாறுவதால் எங்கள் மனக்காயங்கள் மாறாது “என்று. இந்து மதம் தன்னிலிருந்து பல மதங்கள் தோன்ற காரணமாயிருந்தது… தாய் மடி போலானது… முஸ்லீமாக இருங்கள்… மனித இனம் உங்க்ளை பார்த்து பயப்படும் நிலை மாற்றுங்கள்… தீ என்பது தீபத்திலும், சமையல் அறையிலும் இருக்கும்… அழிவித்தீயும் உண்டு… இந்து மதம், தீபத்திலும் சமையலறையிலும் உள்ளது போன்றது… உன்னதமானது…

  26. Avatar
    கடவுளை மற மனிதனை நினை says:

    சுவனப்பிரியன்,

    இங்கே ஒரு தவறான விஷயத்தைப் பற்றிய ஆதங்கத்தை பலரும் வெளிப்படுத்தியுள்ளனர். இப்படி தவறை சுட்டிக்காட்டும்போது இது அமெரிக்காவில் வேகமாக வளர்கிறது ஆப்ரிக்காவில் வேகமாக வளர்கிறது அல்லது நீ மட்டும் யோக்கியமா (பெரியார்தாசன்) அப்துல்லா கேட்கிறார் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

    பாகிஸ்தானில் இந்துக்கள் தீபாவளியை மகிழ்சியோடு கொண்டாடுவதை பார்த்து சிறுபான்மையினர் அங்கே மகிழ்வோடு இருக்கிறார்கள் என்று சொல்லும் நீங்கள் சவுதி அரேபியாவில் இப்படி மகிழ்வோடு சிறுபான்மை தமிழர்கள் பொங்கல் விழாவை கொண்டாட முடியுமா என்பதற்கும் பதில் சொன்னால் நல்லது. ஏனெனில், அங்கு போய்வந்த என் நண்பன் இது போன்ற சிறு விஷயங்கள் கூட அங்கே அனுமதிக்கப்படுவதில்லை என்கிறான்.

  27. Avatar
    மலர்மன்னன் says:

    அந்த யூடியூப் துணுக்கில் இருப்பது கராச்சியில் ஹிந்துக்கள் அதிகம் உள்ள ஒரு வட்டாரத்தில் நடக்கும் ஹோலிப் பண்டிகைதான். மேலும் ஹோலியை வழிபாடு முக்கியத்துவம் உள்ளதென்று சொல்ல முடியாது. அது ஒரு கொண்டாட்டம். ராஸ லீலையை நினவூட்டுதல் போல. மேலும் அந்த யூடியூப் பட்டியலிலேயே பாகிஸ்தானில் ஹிந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பேசுகிற துண்டுகளும் உள்ளனவே அவற்றையும் பார்க்க வேண்டியதுதானே!
    அந்தக் கராசியிலேயேகூட தினப்படி ஹிந்துக்கள் கடத்தப்படுவதுபற்றி ஒரு யூடியூப் உள்ளது!
    -மலர்மன்னன்

    1. Avatar
      Kavya says:

      இந்துக்களுக்காக வருத்தப்படுவதைவிட ஏன் அவர்களை இந்தியா எடுத்துக்கொள்ளும்படி நீங்கள் வற்புறுத்தக்கூடாது?

      1. Avatar
        punaipeyaril says:

        கண்டிப்பாக அங்குள்ள இந்துக்கள் இங்கும், இங்கிருக்கும் முஸ்லீம்கள் அங்கும் போனால் சந்தோஷமே…. தினம் தித்திப்பே…. ஆனா, வாய் கிழிய பேசுபவர்கள் பாகிஸ்தானா என்று அலறுவார்கள்…

        1. Avatar
          Kavya says:

          அதற்கு இந்தியாவை மதச்சார்பற்ற குடியரசு என்ற நிலையிலிருந்து இந்தமதச்சார்புள்ள ஹிந்து ராஷ்டிரம் அல்லது மலர்மன்னன் பாஷையில் சொன்னால், மதச்சார்புள்ள ஹிந்துஸ்தானம் என்று மாற்றிவிடவேண்டும். பின்னர் தாமாகவே ஹிந்துக்கள் தவிர மற்றவர்கள் வெளியேறிவிடுவார்கள்.

  28. Avatar
    suvanappiriyan says:

    கடவுளை மற மனிதனை நினை!

    //பாகிஸ்தானில் இந்துக்கள் தீபாவளியை மகிழ்சியோடு கொண்டாடுவதை பார்த்து சிறுபான்மையினர் அங்கே மகிழ்வோடு இருக்கிறார்கள் என்று சொல்லும் நீங்கள் சவுதி அரேபியாவில் இப்படி மகிழ்வோடு சிறுபான்மை தமிழர்கள் பொங்கல் விழாவை கொண்டாட முடியுமா என்பதற்கும் பதில் சொன்னால் நல்லது. ஏனெனில், அங்கு போய்வந்த என் நண்பன் இது போன்ற சிறு விஷயங்கள் கூட அங்கே அனுமதிக்கப்படுவதில்லை என்கிறான்.//

    சவுதி அரேபியா ஒரு இஸ்லாமிய ஷரியாவை ஆட்சியாவாகவே கொண்டுள்ள நாடு. உங்களுக்கு விஷா தரும்போதே ஒப்பந்த பத்திரத்தில் ‘இந்த நாட்டு சட்டத்துக்கு உட்பட்டே எனது நடவடிக்கை இருக்கும். இஸ்லாம் மார்க்கத்துக்கு எதிராக எந்த வணக்க வழிபாடுகளையும் பகிரங்கமாக செய்ய மாட்டேன்’ என்ற கையெழுத்து இட்டு விட்டுத்தான் இந்த நாட்டுக்கு வருகிறீர்கள். முதலிலேயே சவுதி அரசு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லி விடுகிறது. உங்கள் மத நம்பிக்கைகளை பிரசாரம் செய்வதோ பகிரங்கமாக பொதுவில் செயல்படுவதோ அனுமதிக்கப் படுவதில்லை. பகிரங்கமாக செயல்படக் கூடாது என்று ஒத்துக் கொண்டுதான் வருகிறீர்கள். . இதில் என்ன தவறு கண்டீர்கள். 10 வருடம் 20 வருடம் தனது குழந்தைகளோடும் தாய் தந்தையரோடும் சிறந்த சம்பளத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வரும் பல இந்து நண்பர்களை நான் அறிவேன்.

  29. Avatar
    suvanappiriyan says:

    புனை பெயரில்!

    //நாளா வட்டத்தில் செம்மறியாடு கூட்டம் போல் அரக்கப்பரக்க, புரியாத பாஷையில் சொல்லப்படுவதற்கு சுவாக என்று ஆகிப்போனது பிடித்தமில்லை. கோவில்கள் என்ற பெயரில் இன்றும் கூட ஜத்குரு வாசுதேவ் போன்றவர்கள் எழுப்பும் “தான்” எனும் அகங்கார நிலை கண்டிக்கப்பட வேண்டியதே.. அந்த தியான லிங்க அறை பற்றி விசாரியுங்கள்… -இப்படியெல்லாம் என்னால் பயமின்றி இந்துமதத்தில் மட்டுமே கேள்வியெழுப்ப முடியும். ஆனால், ஒரு “ரூல் புக்கை” வைத்துக் கொண்டு அடுத்தவர்களை அழிப்பது மட்டுமே ஒரு இயக்கமாக இருக்கலாம்… மதமாக இருக்க முடியாது.//

    இஸ்லாம் ஒரு மதமே அல்ல! அது ஒரு மார்க்கம். இந்து மதத்தில் வீரமணியும் வரலாம்: பெரியாரும், கருணாநிதியும் வரலாம். நான் குர்ஆன் இறைவேதம் என்று நம்பவில்லை என்றால் சுவனப்பிரியன் முஸ்லிமாக இருக்க முடியாது. இந்து இஸ்லாம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.
    உலகலாவிய ஒரு மார்க்கத்துக்கு ஒரே சட்டதிட்டம் இருந்தால்தான் சகோதரத்துவம் வளரும். ஆப்ரிக்க முஸ்லிமும் சென்னை மண்ணடி முஸ்லிம் அமெரிக்க முஸ்லிமும் ஒரே முறையில் ஒரே குர்ஆன் வசனத்தை ஓதி தங்களின் இறை வணக்கத்தை செயல்படுத்த முடியும். இந்து மதத்தில் இது சாத்தியமில்லை. சாதிக்கு ஒரு சட்டம்: சாதிக்கு ஒரு நீதி இஸ்லாத்தில் கிடையாது.

    //இந்துமதத்தை யாரும் மிரட்டி பரப்பவில்லை… தியானம், யோகா என்று அதன் உன்னதங்கள் அறிந்தே அதன் அற்புதங்களை தங்கள் வாழ்வில் பின்பற்றுகிறார்கள்//

    நம் காலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு மதம் மாறிய ஏ.ஆர்,ரஹ்மானும், பெரியார் தாசனும் எந்த மிரட்டலுக்கு பயந்து மதம் மாறினார்கள். இன்று அவர்களை தாய் மதம் திரும்புவதை தடுத்தது யார்?

    //முதலில், கடத்தல், ஹவாலா, விபச்சாரவிடுதி செல்லல், பொறுமையாய் அடுத்தவர்க்கு மதகருத்துக்களை விளக்குங்கள்.//

    இந்து மதத்தில் குற்றங்கள் செய்பவர்களே இல்லை என்கிறீர்களா? சரியான தமாஷ்தான் போங்கள். அரசு அறிக்கையை சற்று பார்த்தாலே தெரியும். தமிழகத்தின் பல முஸ்லிம் கிராமங்களுக்கு சுதந்திரம் அடைந்ததிலிருந்து காவல்துறை வந்ததே இல்லை. ஒரு சிலர் தவறு செய்தால் அதற்குரிய தண்டனையை அனுபவித்து விட்டுப் போகிறார்கள்? அதற்கு இஸ்லாம் எப்படி பொறுப்பேற்க முடியும்?

    //இந்தியாவில் முஸ்லீமாக மாறியவர்க்ள் ஒரு குறிப்பிட்ட சாதி பிரிவினரே…. அவர்களுக்கு அதனால் ஒன்றும் மாறவில்லை…//

    காயல்பட்டினம் என்ற ஓர் ஊர் இருக்கிறது. அது முழுக்க பிராமணர்கள் முஸ்லிம்களாக மாறிய தமிழக கிராமம். முடிந்தால் போய் பார்த்து வாருங்கள்.

    //முஸ்லீமாக இருங்கள்… மனித இனம் உங்க்ளை பார்த்து பயப்படும் நிலை மாற்றுங்கள்…//

    அப்படி ஒரு நிலையை ஊடகங்களும் அமெரிக்க இஸ்ரேலிய சதிகளும் ஒரு பரப்புரையை பரப்பி உள்ளது. அது தவறு என்று பலரும் உணர்ந்து வருகின்றனர்.

  30. Avatar
    suvanappiriyan says:

    ஸ்மிதா!

    //When Pakistan came into existence in 1947, 24 per cent of the population were Hindus.
    And now look at the percentage of Hindus in Pakistan, just below two per cent. What happened to the rest?//

    அவர்கள் எங்கும் அகதிகளாக போய் விடவில்லை. இஸ்லாமிய மதத்துக்கு மாறி விட்டார்கள். இந்தியாவிலேயே யாரும் சொல்லாமலேயே பல அன்பர்கள் இஸ்லாத்தை தங்கள் வழ்வியலாக ஏற்றுக் கொள்ளும் போது பாகிஸ்தானில் இந்துக்கள் தங்கள் மார்க்கத்தை மாற்றிக் கொள்வதற்கு சொல்லியா கொடுக்க வேண்டும். முதலில் இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரம பாகுபாடுகளை நீக்கினாலே மத மாற்றங்கள் குறையும். முதலில் அதை செயல்படுத்த பாருங்கள்.

  31. Avatar
    suvanappiriyan says:

    ஸ்மிதா!

    //Piriyan,
    After all tis, do you still say that hindus are living happily in pakistan?//

    சில இடங்களில் பாகிஸ்தானில் இளம் பெண்கள் கடத்தப்படுகிறார்கள் என்பதை மறுக்கவில்லை. அதில் சில முஸ்லிம் இளம் பெண்களும் அடக்கம். இது மலை சார்ந்த கிராமங்களில் அவ்வப்போது நடப்பதுண்டு. இதற்கு மத சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை. நம் நாட்டிலும் மலைகள் காடுகள் அதிகம் நிறைந்த பகுதிகளில் இவ்வாறு தவறுகள் நடப்பதை நாம் அறிவோம்.

    ரிங்கிள் குமாரி போன்று பல இளம் பெண்கள் இஸ்லாத்துக்கு வர முக்கிய காரணமே சிந்த் பகுதியில் நிலவும் சாதி பாகுபாடும் வரதட்சணை கொடுமையும் தான் என்கிறார் பாகிஸ்தானிய பெண் சமூக ஆர்வலர். இந்த லிங்கில் சென்று அங்கு நடக்கும் விவாதத்தையும் பாருங்கள்.
    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=50Ilp6SUJ8U#!

  32. Avatar
    தங்கமணி says:

    சுவனப்பிரியன்,
    /சாதிக்கு ஒரு சட்டம்: சாதிக்கு ஒரு நீதி இஸ்லாத்தில் கிடையாது.//
    இஸ்லாமிய சட்டமே மறுக்கிறதே.
    On the question of parity between husband and wife, Section 117 (3) of the AIMPLB compendium differentiates between Muslims of Arab and non-Arab origin. It provides that “regard shall be had in respect of descent among the Arabs especially Quraysh and those non-Arab families who have preserved their descent. People in the rest of the non-Arab world are mutually equal”.

    ‘Verily Allah has chosen Kinanah from the son of Isma`il, and He has chosen Quraysh from among Kinanah and He has chosen Hashim from among Quraysh”

    குரானில் குரேஷி சாதியை பாராட்டி ஒரு அத்தியாயமே இருக்கிறதே.
    அந்த குரேஷி ஜாதியை பாராட்டி எல்லா முஸ்லீம்களும் கட்டாயமாக அந்த அத்தியாயத்தை ஓதித்தானே ஆகவேண்டும்?

    ஜாதி ஏதடா குலம் ஏதடா என்றால் எதற்கு குரானிலேயே சேர்த்து அதனை ஒவ்வொரு முஸ்லீமும் ஓதவேண்டும் என்று கட்டாயம்?

    அரபுகள் ஆட்சி செய்ய, அதற்கு அடிமைகளை சேர்க்க,
    சமத்துவ பம்மாத்து..

  33. Avatar
    தங்கமணி says:

    //சில இடங்களில் பாகிஸ்தானில் இளம் பெண்கள் கடத்தப்படுகிறார்கள் என்பதை மறுக்கவில்லை. அதில் சில முஸ்லிம் இளம் பெண்களும் அடக்கம். //

    அடப்பாவமே..
    இஸ்லாம் பாகிஸ்தானுக்கு வந்து 1000 வருடங்களுக்கு பின்னாலும் பெண்களின் நிலை சீரடையவில்லையா?

    நீங்கள் இப்படியெல்லாம் பாகிஸ்தானை இழிவாக பேசுவது உங்கள் சக முஸ்லீம்களுக்கு தெரியுமா? பார்த்து பேசவும். உங்களையும் கடையநல்லூர் பண்ணிவிடபோகிறார்கள்.

  34. Avatar
    தங்கமணி says:

    பாகிஸ்தான் சவுதி அரேபியா போன்ற மனிதநேயம் பொங்கித்ததும்பும் நாடுகளில் மரணதண்டனை இருக்கும்போது, இஸ்லாத்திலிருந்து வெளியேற விரும்புவர்கள் எப்படி இஸ்லாத்தை விட்டு வெளியேறுவது என்பதை இன்னமும் விளக்கவில்லையே?

  35. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //குரானில் குரேஷி சாதியை பாராட்டி ஒரு அத்தியாயமே இருக்கிறதே.
    அந்த குரேஷி ஜாதியை பாராட்டி எல்லா முஸ்லீம்களும் கட்டாயமாக அந்த அத்தியாயத்தை ஓதித்தானே ஆகவேண்டும்?//

    ‘குறைஷிகளை மகிழ்வித்ததற்காகவும் குளிர் மற்றும் கோடைக் காலப் பயணங்களில் அவர்களை மகிழ்வித்ததற்காகவும் இந்த ஆலயத்தின் இறைவனை அவர்கள் வணங்கட்டும். பசியின் போது அவர்களுக்கு உணவளித்தான். பயத்திலிருந்து அவர்களுக்கு அபயமளித்தான்.’
    -குர்ஆன் 106:1,2,3,4

    நீங்கள் குறிப்பிடும் வசனம் இதுதான். இதில் குறைஷிகளை சிறப்பித்து எங்கு கூறப்பட்டுள்ளது? பசியின் போது அவர்களுக்கு உணவும் மற்றும் கால நிலைகளை சாதகமாக்கிக் கொடுத்ததற்காக இறைவனை துதிக்க வேண்டும் என்று கட்டளை தானே வந்திருக்கிறது. நீங்களாகவே ஏதாவது கற்பனை செய்து கொள்வதா?

    நயவஞசகர்கள், யானை, குதிரை, அத்திப் பழம் என்ற பெயர்களிலெல்லாம்தான் குர்ஆனில் அத்தியாயங்கள் வருகிறது. இதற்காக அவை எல்லாம் சிறந்ததாகி விடுமா? ஒரு அடையாளத்துக்காக வைக்கப்பட்ட பெயர்கள்தான் அவை. குரைஷ் என்ற அத்தியாயத்தை ஓதித்தான் ஆக வேண்டும் என்று யார் உங்களிடம் சொன்னது. ஏதாவது கூட்டத்தில் அடித்து விட்டுப் போக வேண்டாம். ஆதாரம் கொடுங்கள்.
    குரைஷ், ஹாஸிம், அன்சார், போன்றவைகள் ஒவ்வொரு கூட்டத்துக்கும் வேறொரு நாட்டிலிருந்து வந்தவர்களுக்கும் அடையாளத்துக்காக வைத்துக் கொண்ட பெயர். இங்கு வேதத்தில் எந்த இடத்திலும் ஒரு குலத்தை உயர்த்தியோ மற்றொரு குலத்தை தாழ்த்தியோ எந்த வசனமும் கிடையாது.
    ”இந்தக் குரைஷிக் குலத்தவர் களில் சிலர் மக்களை அழித்து விடுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்களில் சிலர், (அப்படியொரு நிலை வந்தால்) ‘நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று’ கேட்டனர். ”அவர்களிடமிருந்து மக்கள் விலகி வாழ்ந்தால் நன்றாக இருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 3604)
    ‘உண்மையாளரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான நபி (ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தரின் அழிவு குரைஷி இளைஞர்களின் கரங்களில்தான் உள்ளது’ என்று சொல்ல நான் கேட்டேன்” – அபூ ஹூரைரா (ரலி) (புகாரி, 3605, 7058)
    இந்த நபி மொழிகள் குரைஷி குலத்தை சேர்ந்தவர்ளால்தான் குழப்பங்கள் வரும் என்று முன்னறிவிப்பு செய்தார்கள். தனது குலம்தானே என்று உயர்த்தி பிடிக்கவில்லை.
    நபி (ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது ஆற்றிய உரையில், ”அல்லாஹ்வின் வேதப்படி உங்களை வழி நடத்துகின்ற அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக்கப்பட்டாலும் அவரது சொல்லையேற்று அவருக்குக் கீழ்படியுங்கள்” என்று கூறினார்கள். (முஸ்லிம், 3750)

    இந்த நபி மொழிகள் மூலம் அடிமைகள் ஆட்சித் தலைவராக வந்தாலும் இறைவன் விதித்த கட்டளைப்படி ஆட்சி செய்தால் அவருக்கு கட்டப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

    முகமது நபியின் கடைசி உரை:

    பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!”
    மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; உங்களது தந்தையும் ஒருவரே! அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.

    தலமைக்குக் கீழ்ப்படிவீர்!

    ஒ… மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; அவருக்குக் கீழ்ப்படியுங்கள்!”
    (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

    இதற்குப் பிறகும் ஒரு முஸ்லிம் தன்னை உயர்ந்தவனாக எண்ணிக் கொள்வானா?

    மனிதர்களே! நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக பல கிளைகளாகவும் கோத்திரங்களாவும் ஆக்கினோம். உங்களில் இறைவனை அஞ்சுபவர்தான் அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன், நன்கறிபவன். (திருக்குர்ஆன், 049:013)

    இந்த வசனம் மூலம் எவனும் தன்னை உயர்ந்தவன் என்று எண்ண முடியாத அளவு ரத்தின சுருக்கமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்து மதத்தில் வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் நேரிடையாகவே சாதியை போற்றியும், ஏற்ற தாழ்வுகளை ஆதரித்தும் வசனங்கள் உள்ளதை என்னை விட அதிகம் நீங்களே அறிவீர்கள்.

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      “ஆனால் இந்து மதத்தில் வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் நேரிடையாகவே சாதியை போற்றியும், ஏற்ற தாழ்வுகளை ஆதரித்தும் வசனங்கள் உள்ளதை என்னை விட அதிகம் நீங்களே அறிவீர்கள்.”

      வேதங்கள் மட்டுமே இந்து மதமல்ல. வேதங்கள் யாரையும் எல்லாக்காலத்துக்கும் பொருந்தும் என்று சொல்லி கட்டுப்படுத்துவதுமில்லை. வேதங்களை நிராகரித்தும் நான் இந்துவாக இருக்கலாம்.

      ஸ்மிருதிகள் என்பவை ஒவ்வொரு காலகட்டத்துக்குரிய சட்டதிட்டங்கள் / நெறிமுறைகள் என்றுதான் நான் கேள்விப்பட்டது. எனவே அவை மாறிக்கொண்டிருக்கும். எப்போதும் விமர்சனத்துக்குள்ளாகும் மனு ஸ்மிருதி பின்பற்றப்பட்ட காலகட்டத்துக்கு முன் நாராயண ஸ்மிருதி, யாக்ஞவல்கிய ஸ்மிருதி என பல ஸ்மிருதிகள் நடைமுறையில் இருந்ததாகவும் அவற்றின்படி பிறப்பால் உயர்வு தாழ்வெல்லாம் பின்பற்றப்பட்டதில்லை என்றும் வர்ணமாற்றமெல்லாம் சாத்தியம் என்றும் எழுத்தாளர் ஜெயமோகன் கூறுகிறார்.

      மாறாதது மெய்மை / உண்மை / சத்தியம் எனப்படும் ஸ்ருதியே.

      “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”,

      “அங்கம் எல்லாம் குறைந்து அழுகு தொழு நோயராய்
      ஆவுரித்து தின்று உழலும் புலையரேனும்
      கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
      அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே”,

      “வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்கலந்தார் அடியார்தம் அடியார் எம் அடிகளே”

      என்றெல்லாம் இங்கும் பாடங்கள் உண்டு.

      அன்புடன்
      பொன்.முத்துக்குமார்

      1. Avatar
        Kavya says:

        நீங்கள் சுட்டிக்காட்டிய வசனங்கள் அல்லது பாசுரங்கள் அல்லது பதிகங்கள் ஏன் எழுதப்பட்டன? சாதிக்கொடுமையால் தலித்துக்கள் தாக்கப்பட்டதனாலேதானே? அவை எழுதப்பட்ட காலம் 1ம் நூற்றாண்டன்று: பத்துக்கு அப்புறம்தானே? ஆக, ஸ்மிருதிகளோ வேதங்களோ சொன்னவை விமர்சனம் பண்ணப்பட்டதா இல்லையா என்பதன்று கேள்வி. அவை பின்பற்றப்பட்டு தலித்துகள் தீண்டாமைக்கொடுமைக்கு ஆளானவர்கள் என்பதே உண்மை. இல்லாவிட்டால் ஏன் நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடவேண்டிய அவசியம் ஏற்பட்டது?

        இன்றும் தலித்துகள் அர்ச்சகர்கள் ஆகக்கூடாதென்று பிராமணர்கள்தானே கோர்ட்டில் கேசுப்போட்டிருக்கிறார்கள்? வேறெந்த ஜாதியாவது கேசுபோட்டிருக்கிறதா

  36. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //பாகிஸ்தான் சவுதி அரேபியா போன்ற மனிதநேயம் பொங்கித்ததும்பும் நாடுகளில் மரணதண்டனை இருக்கும்போது, இஸ்லாத்திலிருந்து வெளியேற விரும்புவர்கள் எப்படி இஸ்லாத்தை விட்டு வெளியேறுவது என்பதை இன்னமும் விளக்கவில்லையே?//

    இஸ்லாத்தில் உள்ளே நுழைவதற்கோ வெளியே செல்வதற்கோ ஞானஸ்தானம் போன்று எந்த சடங்குகளும் இல்லை. குர்ஆன் இறை வேதம்: முகமது நபி இறைத் தூதர்: இந்த இரண்டு அடிப்படையில் கட்டப்பட்டதுதான் இஸ்லாம். இது பிடித்திருந்தால் இந்த சட்டத்தின் படி வாழலாம். பிடிக்க வில்லையா நான் தொழாமல் நோன்பு வைக்காமல் ஏழை வரி கொடுக்காமல் ஹஜ் செய்யாமல் இருந்து கொள்ளலாம். யாரும் உங்களை வந்து கட்டாயப்படுத்தப் போவதில்லை.

    அடுத்து நான் இஸ்லாத்தில் இருப்பதால் எந்த விதத்தில் குறைந்து விட்டேன். இன்று கூட சவுதி ரியாத்தில் பள்ளியின் தொழுகை நேரம் தவறி 10 நிமிடம் தாமதமாக பள்ளிக்குச் சென்றேன். கூட்டுத் தொழுகை முடிந்து விட்டது. உடனே தாமதமாக வந்த 10 பேர் என்னை தலைவனாக நிற்கச் சொன்னார்கள். தாடியும் இல்லை. வயதிலும் சிறியவன். என்னை விட வயதில் மூத்தவர்கள் இருந்ததால் நான் பின் வாங்கினேன். ஆனால் ஒரு சவுதி என்னை முன்னிறுத்தி தலைவனாக நிற்கச் சொன்னார். பேச்சை தட்ட முடியாமல் தலைவனாக நின்று தொழ வைத்தேன். என்னைப் பின்பற்றி சவுதி, சூடான், எகிப்து, பிலிப்பைன், சிரியா, துருக்கி, பாகிஸ்தான், பங்களாதேஷ், என்று 25 பேருக்கு மேல் தொழுதனர். தஞ்சை மாவட்டத்தில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் பிறந்த சாதாரணமான தமிழனான நான் குனிந்தால் அவர்களும் குனிகிறார்கள்: நான் நிமிர்ந்தால் அவர்களும் நிமிர்கிறார்கள்: நான் தொழுகையை முடித்தால் அவர்களும் தொழுகையை முடிக்கிறார்கள். மத்ரஸா சென்று கூட பாடம் படிக்காத எனக்கு இத்தகைய மதிப்பை கொடுத்தது இஸ்லாம் அல்லவா? தமிழகம் சென்றால் கூட என்னை விட வயதில் மூத்த இந்து அன்பர்கள் என்னை ‘என்ன பாய்? சொளரியமாக இருக்கிறீங்களா?’ என்று அன்பொழுக கேட்க வைத்தது முகமது நபி கொண்டு வந்த மார்க்கம் அல்லவா? வணங்குவதாகட்டும் குடும்பத்தை நடத்துவதிலாகட்டும், கணவன் மனைவி உறவிலாகட்டும், தாய் தந்தை உறவிலாகட்டும், அன்னிய மதத்தவர்களோடு அன்பொழுக பழக வேண்டும் என்று போதிப்பதிலாகட்டும் எந்த துறையை எடுத்தாலும் அதில் மனித நேயத்தோடு உள்ள சட்டங்களை எனக்கு வாரி வாரி வழங்குவது முகமது நபி கொண்டு வந்த இஸ்லாம் மார்க்கம் அல்லவா?

    எதற்காக நான் இந்த மார்க்கத்தை விட வேண்டும். இதை விட சிறந்த மார்க்கம் ஒன்றை எனக்கு காட்டுங்கள் நான் இன்றே வந்து விடுகிறேன் உங்களோடு……

  37. Avatar
    தங்கமணி says:

    ‘குறைஷிகளை மகிழ்வித்ததற்காகவும் குளிர் மற்றும் கோடைக் காலப் பயணங்களில் அவர்களை மகிழ்வித்ததற்காகவும் இந்த ஆலயத்தின் இறைவனை அவர்கள் வணங்கட்டும். பசியின் போது அவர்களுக்கு உணவளித்தான். பயத்திலிருந்து அவர்களுக்கு அபயமளித்தான்.’
    -குர்ஆன் 106:1,2,3,4

    உலகத்தில் குரேஷி மாதிரி எத்தனை எத்தனையோ ஜாதிகள் இருக்கின்றன. அந்த குரேஷிகளுக்கு அல்லாஹ் ஏதோ கொடுத்தான் என்று தமிழ் முஸ்லீம்கள் ஏன் ஓத வேண்டும்?


    ஒரு அரபி அரபியல்லாதவனை விட உயர்ந்தவன் இல்லை என்று எந்த குரான் வசனத்தில் ஹதீஸ் வசனத்தில் இருக்கிறது என்று காட்டலாமே?
    இது எங்கேயும் கிடையாது. எதை கேட்டாலும் இது குரானில் இருக்கிறதா ஹதீஸில் இருக்கிறதா? அப்படியே எதையாவது சஹி ஹதீஸில் காட்டினாலே, இந்துக்கள் யூதர்கள் வேடம் போட்டு வந்து திரித்துவிட்டார்கள் என்று சொல்வீர்கள். இது எங்கே இருக்கிறது?


    சூனான் நஸாயி திர்மிதி எல்லாம் காட்டுகிறீர்களே. அதிலிருந்து நான் எதுவும் ஹதீஸ் எடுத்து காட்டினால் ஒப்புகொள்வீர்களா? அல்லது அதுவும் யூதர்கள் அரபி வேஷம் போட்டு செருகிவிட்டார்கள் என்று சொல்வீர்களா?

    //ஒரு முஸ்லிம் தன்னை உயர்ந்தவனாக எண்ணிக் கொள்வானா?//
    முஸ்லீம் உயர்ந்தவன், திம்மி, காபிர் தாழ்ந்தவன் என்றுதான் குரான் ஹதீஸ் முழுக்க சொல்லுகிறது.

  38. Avatar
    தங்கமணி says:

    //இஸ்லாத்தில் உள்ளே நுழைவதற்கோ வெளியே செல்வதற்கோ ஞானஸ்தானம் போன்று எந்த சடங்குகளும் இல்லை.//

    நான் கேட்பதென்ன? நீங்கள் சொல்வது என்ன? உங்களுக்கு தமிழ் படித்து புரிந்துகொள்ள தெரியுமா?

    ஒருவர் தன்னை இஸ்லாமியர் இல்லை என்று அறிவித்துகொள்ள விரும்புகிறார். அல்லது கிறிஸ்துவத்துக்கு போக விரும்புகிறார். அதற்காக மரண தண்டனை வழங்கப்படுகிறது.

    முஸ்லீமாக பிறந்த ஒருவர் சுயமாக ஆராய்ச்சி செய்து முகம்மது ஒரு போலி தூதர் என்கிறார். இவருக்கு மதநிந்தனை செய்தார் என்று மரணதண்டனை வழங்கப்படுகிறது. அலல்து சொல்லவே இல்லை. சொன்னதாக சொல்லி மதநிந்தனை செய்தார் என்று ஆயிரத்தெட்டு வழக்குகள் பாகிஸ்தான் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்றன.

    அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவர் நான் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகிறேன் என்று சொல்வது எப்படி என்று கேட்டேன். திரும்பவும்
    //இஸ்லாத்தில் உள்ளே நுழைவதற்கோ வெளியே செல்வதற்கோ ஞானஸ்தானம் போன்று எந்த சடங்குகளும் இல்லை.//
    என்று சொல்கிறீர்கள்.
    தவறு. இஸ்லாத்தில் உள்ளே நுழைவதற்கு ஒரு சடங்கு இருக்கிறது. அது கலிமா சொல்வது.
    வெளியே செல்வதற்கு அனுமதி இல்லை. வெளியே செல்பவனை கொல் என்று சடட்ங்கள் இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் இருக்கின்றன.
    //பிடிக்க வில்லையா நான் தொழாமல் நோன்பு வைக்காமல் ஏழை வரி கொடுக்காமல் ஹஜ் செய்யாமல் இருந்து கொள்ளலாம்.//
    இல்லை. இதுவும் சில இஸ்லாமிய நாடுகளில் கட்டாயம். சவுதியில் தொழுகைக்குபோகாமல் இருந்தால் காலில் அடிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
    It was narrated from Abu Hurayrah (may Allaah be pleased with him) that the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “By the One in Whose hand is my soul, I was thinking of ordering that wood be gathered, then I would have ordered that the call to prayer be given, then I would have told a man to lead the people in prayer, then I would have gone from behind and burned the houses of men who did not attend the (congregational) prayer down around them. By the One in Whose hand is my soul, if any one of them had known that he would get a bone covered with good meat or two sheep’s feet with meat in them, he would have turned up for the ‘Isha’ prayer.”

    Narrated by al-Bukhaari, 618; Muslim, 651
    மசுதிக்கு தொழுகைக்கு வராதவன் வீட்டை கொளுத்து என்று முகம்மது ஆணையிடுகிறார்.

    ஏன் இப்படி பொய் சொல்லுகிறீர்கள்?

  39. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //ஒரு அரபி அரபியல்லாதவனை விட உயர்ந்தவன் இல்லை என்று எந்த குரான் வசனத்தில் ஹதீஸ் வசனத்தில் இருக்கிறது என்று காட்டலாமே?//

    ஸ்ஸ்ஸ்……முடியல. உங்களுக்கு தமிழ் சரியாக புரியாது என்று நினைக்கிறேன்.

    மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; உங்களது தந்தையும் ஒருவரே! அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
    -(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

    சிறிய குழந்தைக்குக் கூட விளங்கும் வகையில் தெளிவாக ஹதீஸ் எண்கள் முதற்கொண்டு ஆதாரத்தை கொடுத்தும் ‘ஆதாரம் எங்கே?’ என்றால் எங்கே பொவது.

    //உலகத்தில் குரேஷி மாதிரி எத்தனை எத்தனையோ ஜாதிகள் இருக்கின்றன. அந்த குரேஷிகளுக்கு அல்லாஹ் ஏதோ கொடுத்தான் என்று தமிழ் முஸ்லீம்கள் ஏன் ஓத வேண்டும்?//

    அன்று மக்காவில் காஃபிர்கள் ஊர் விலக்கம் செய்த போது இலை தழைகளை சாப்பிட்டுக் கொண்டு உயிர் வாழ்ந்தது குரைஷி குலம். தொழுது கொண்டிருக்கும் போது ஒட்டகத்தின் மலக் குடலை கொண்டு வந்து காஃபிர்கள் கொட்டிய போது அதை சகித்துக் கொண்டது குரைஷிக் குலம். பெரும்பான்மையான குரைஷிகள் பட்ட துன்பத்தினால்தான் இன்று தமிழகத்தில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நான் நடக்கிறேன். பழைய மார்க்கத்திலேயே எனது முன்னோர்கள் இருந்திருந்தால் நானும் திக விலோ அல்லது கம்யூனஸித்திலோ ஐக்கியமாகி ‘ஸ்ரீரங்கம் கோவிலில் எங்களையும் வழிபட அனுமதி தாருங்கள்’ என்று இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பரிதாபமாக போராடிக் கொண்டிருப்பேன். நீங்கள் வழக்கம் போல் மேன்மக்களாகவே இருந்திருப்பீர்கள். ஆனால் இன்று முஸ்லிமாக மாறிய என்னை உங்களின் நான்கு வர்ணத்துக்குள் அடக்க முடியுமா? அப்படி அடக்கினாலும் அதை பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருந்து விடுவோமா? எனவேதான் அவர்களின் தியாகத்தை பெருமைப் படுத்தி ஒரு அத்தியாயத்தையே இறைவன் இறக்கினான். அந்த தியாக சீலர்களை நினைவு கூர்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பெருமையைத் தரும். குர்ஆன் முழுமையும் இறைவன் அருளியதால் அதன் ஒவ்வொரு வரியும் இஸ்லாமியனின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.

    1. Avatar
      punaipeyaril says:

      எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை.—> அப்படியே அந்த அடிமை தேசத்து அரசரிடம் சொல்லி தோல் நிற வேற்றுமையின்றி சம்பளம் தரச் சொல்லுங்கள்….. காமவெறியுடன் அலையும், கடத்தல் வெறியுடன் அலையும் இஸ்லாமியனின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த வரிகளை சொல்லுங்கள்… அல்லது அத்தகையோரை உங்கள் மதம் விட்டு விரட்டி தூய்மை பெறுங்கள்…

  40. Avatar
    தங்கமணி says:

    உங்களுக்குத்தான் தெரியவில்லை.

    இந்த சுனான் நஸாயியும் திர்மிதியும் முகம்மது இறந்து 300 வருடங்களுக்கு பிறகு எழுதப்படுகிறது. அதாவது அவுரங்கசீப் இறந்து 300 வருடங்களுக்கு பிறகு பாண்டே கதை விடுவது போல.

    சரி நீங்கள் சொல்லுவதிலாவது எதாவது இருக்கிறதா?

    இதுதான் சுனான் நஸாயி
    இதில் நடுவில் நீங்கள் சொல்லும் 4192 இருக்கிறது.
    என்ன சொல்கிறது என்று யாரையாவது கேட்டு சொல்லுங்கள்.
    இதில் உள்ளதற்கும் நீங்கள் எழுதியதற்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா?
    http://sunnah.com/nasai/40

  41. Avatar
    punai peyaril says:

    நான் நிமிர்ந்தால் அவர்களும் நிமிர்கிறார்கள்: நான் தொழுகையை முடித்தால் அவர்களும் தொழுகையை முடிக்கிறார்கள். —> ஆனால், நமக்கு அவர்களை வழி நடத்த , வழிபாட்டில் மன ஆழ்ந்து செய்ய பயிற்சி இருக்கா என்று சிந்தித்தீர்களா… மத்ரஸா சென்று கூட பாடம் படிக்காத எனக்கு இத்தகைய மதிப்பை கொடுத்தது இஸ்லாம் அல்லவா? –> இது தான் உங்கள் பிரச்சனையே…. தகுதியை வளர்க்காமல் தகுதி எதிர்பார்ப்பது… அந்த மாதிரி நிச்சயம் இங்கு நடக்காது… அங்கு மட்டும் என்ன… உங்களுக்கு அந்த மாதிரி தகுதிக்கு மீறிய மரியாதை தருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி கவர்கிறார்கள். டமாம், ரியாத் விமான நிலையங்களில் நீங்கள் உள் நுழைகளையில் குத்துக்காலிட்டு மணிக்கணக்கில் , எருமைகளை போல் விரட்டப்பட்டு நடத்தப்படும் போது மரியாதை பற்றி சிந்தித்துள்ளீர்களா…? வெள்ளை தோலுக்கு பல மடங்கு சம்பளம், அதே வேலையை நன்றாக செய்தால் கூட வெள்ளைத் தோல் இல்லாத பிறருக்கு பிரிதொரு சம்பளம் என்பதில் வேறுபாடு தெரியவில்லையா… வியட்டாமியரும், பிறரும் அந்த வெய்யிலில் ரோட்டோர வேலைகளில் உஷ்ணத்தில் சாகும்படி வேலை செய்யும் போது, ஏசி காரில் பெண்,மது தேடி பஹ்ரைன் பாலத்தில் விரைந்து செல்பவர்களிடம் உங்கள் கடவுள் மனிதாபிமானம் பற்றிச் சொல்லவில்லையா..? உங்கள் வீரம் எல்லாம் கிழக்கு ஆசியா மற்றும் ஆசியா நாடுகளின் பிரஜைகளிடம் தான்… ஏன் அந்த வீரத்தை அமெரிக்கரிடமோ, இங்கிலாந்திரிடமோ காண்பிக்க வேண்டியது தானே…. <> இது அண்டப்புளுகு என உலகமே அறியும், <> இந்தக் கதையை அண்ணா ஒரு நாடகத்தில் அன்றே காட்டியுள்ளார். ஆனால், அதற்கு பின் 30ஆண்டுகள் கழித்து இதே வித்தையை திருமாவளவனிடம் முஸ்லீமாக நீங்கள் மாறுங்கள் என்ற போது, அதனால் மரியாதை வராது என்று தெளிவாகப் புறந்தள்ளினர். அவர் தனது இனத்தின் தகுதி உயர்த்த போராடுகிறார். அறிவை வளர்த்து அதனால் மரியாதை கிடைக்கப் போராடுகிறார். அரேபியா போனாலும் , உங்களை விட தகுதி திறமையுள்ளவர்களுக்குத் தானெ அங்கு மரியாதை..? இதில் என்ன வேஷம்.. கேட்டால் கோவில் கோவில் என்கிறீர்கள்… உலகையே படைத்தது ஆண்டவன் என்றால் அவன் எப்படி ஒரே ஒரு ஊருக்கு மட்டும் சொந்தக்காரன்..? அங்கு எல்லோரும் வாழ்வில் ஒரு முறையாவது வர வேண்டும் என்பது அந்த தேசத்தின் வருவாயை கூட்டத் தான் உதவுமே தவிர பிற எதற்கும் பயன்படாது.<> இதே மாதிரி உலகின் ஒவ்வொரு பிற பகுதிய்ன் நம்பிக்கையும் அவரவர் புத்தகம் சார்ந்தது… அதை மதியுங்கள்,, உங்கள் ஊரில் சுத்தமாக இல்லாமல், அறிவை வளர்த்துக்கொள்ளாமல், இருந்து விட்டு மத்தவங்க மதிக்கலை என்று மாறிவிட்டு மரியாதை கிடைக்கிறது என்பது பேத்தல். சுருக்கமாக சொல்லப் போனால் , உங்க சௌதியில் கூட வேலைகளில் திறமையிருப்பவருக்கும் மட்டுமே உயர்வு. நீங்கள் பிரயோஜமில்லை என்று உங்களின் அக்காமையோ இல்லை எக்ஸிட் விசாவோ ஓடு ஓடு ஊருக்கு என உங்களின் மதவேர் கொண்ட அரேபிய கடவுளை கண்டுபிடித்தவர்கள் அடிமைகளாய் உங்களை விரட்டி அடிக்கும் போது நீங்கள் வந்து கால் வைத்து பெருமூச்சு விட்டு நிம்மதியாக இருக்கப் போகும் இடம்… இந்தியா – இந்துக்களின் பூமி… ஓடிப்போய் உல்லாசமாக இருந்த உங்கள் கால்கள் ஓய்வெடுக்க வரும் போது, ”என்ன பாய் களைப்பா..?” என்று கேட்டு உங்களுக்கு ஒரு வாய் தண்ணி கொடுக்கும் = மத பேதமின்றி – கைகளை எங்களுக்கு தந்த இந்துமத சிந்தனைகளுக்கு நன்றி.

  42. Avatar
    வெங்கட் சாமிநாதன் says:

    குரானே எழுதப்பட்டது எப்போது? அது தான் முகம்மது ந்பி சொன்னது என்பதற்கும், இறைவன் இறக்கியதைத் தான் முகம்மது சொன்னார் என்பதற்கும் என்ன ஆதாரம்? ஹதீஸ் எழுதியது யார்? அது எப்படி ஆதாரமாகும். ஷரியா எழுதியது யார்? அதுவும் எப்படி ஆதாரமாகும். கடைசியாக இவையெல்லாம் இன்றைய வாழ்விற்கு எப்படி உதவும்? எந்த நூற்றாண்டுச் சிந்தனைகள் எந்த நூற்றாண்டு வாழ்வுக்குப் பொருந்தும்? இவையெல்லாம் தத்துவார்த்த சிந்தனைகள் அல்ல. அனறாட வாழ்க்கை எப்படி எதிர்க்கொள்ளவேண்டும் என்பதற்கான வழிமுறைகள். ஆயிரம் வருடங்களுக்கும் மேலான ஒரு பாலைவன நாடோடி வாழ்க்கைக்கான வழிமுறைகள் இன்று எப்படி வழிகாட்டும்? கத்தியாலா? வெடி குண்டினாலா, பயமுறுத்தல்களாலா, வன்முறைகளாலா?

    1. Avatar
      punaipeyaril says:

      வெ.சா உங்கள் தாழ் பணிந்து வணங்குகிறேன்… ஆசிர்வதியுங்கள்…

    2. Avatar
      Kavya says:

      கிட்டத்தட்ட – முழுக்கவன்று – இதே கேள்விகளை இந்து மதத்திற்கும் வைக்கலாம்! 3000 ஆயிரமாண்டுகளுக்கு முன் சிந்து சமவெளியில் வாழ்ந்த ஆஃபகானியரின் கருத்துக்களும் சிந்தனைகளும் நமக்கு எப்படி பொருந்தும் ? அவற்றை இன்னார்தான் எழுதினார்? எ கா பகவத் கீதையை கிருஸ்ணர்தான் சொன்னார் என்பதற்கு என்ன ஆதாரம் சாமிநாதன்?

  43. Avatar
    வெங்கட் சாமிநாதன் says:

    மறுபடியும் அதே குரான் வாசகங்களும், ஹதீஸும், ஷரியாவும் தான் நம் முன் கொட்டப்பட இருக்கின்றன. முடிவில்லாது இப்படியே எத்தனை நூற்றாண்டுகள் கழிந்து விட்டன. இனியும் அதேயா?

    1. Avatar
      Kavya says:

      மறுபடியும் அதே கீதைதான்! அதே வருணாஷ்ரதர்மதான்!! மறுபடியும் சாதிகள் அவசிய்மதான்!!! மறுக்கவியலுமா சார்!!!!

  44. Avatar
    paandiyan says:

    \அப்படி என்றால் அந்த பெண் கேட்ட கர்ப்பப் பை சுதந்திரம் அதாவது எந்த ஆணுடன் வேண்டுமானாலும் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்வேன் என்ற கருத்தை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? நம் குடும்பத்து பெண்கள் இவ்வாறு கோரிக்கை வைத்தால் நாம் பார்த்துக் கொண்டு சும்மா இருப்போமா?
    \
    அவர் சொல்லாதது எல்லாம் சொல்லி பொய்யும் புரட்டும் புனைகின்ர்ரீர்கள் . அதுசரி அதைய முஸ்லிம் ஆண்கள் பண்ணும்போது நீங்கள் எல்லாம் என்ன பண்ணுகிறீர்கள் ? குரான்ல் கூட விந்து வயிறில் சுரக்கும் ஒரு திரவம் என்றுதான தப்பும் தவறுமாக இருமின்றது . முடிந்தவரை மாற்றுங்கள்……

  45. Avatar
    punai peyaril says:

    ஔரங்கசிப்பை விட முஸ்லீம என்று சொல்லக்கூடிய தகுதி இங்கு பிதற்றுபவர்களுக்கு கிடையாது, கீழே உள்ளது எஸ்.ரா விகடன் தொடரில்…
    >>>என் தந்தை ஷாஜஹானிடம், எனக்கு மதத் தத்துவங்களை போதிக்கப்போவதாக நீங்கள் சொன்னது எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. அர்த்தமே இல்லாத, இருந்தாலும் புரிந்துகொள்ள முடியாத, புரிந்துகொண்டாலும் மனத்திருப்தி அளிக்காத, திருப்தி அளித்தாலும் இன்றைய சமுதாயத்தில் எந்தப் பயனுமே இல்லாத புதிர்களை எல்லாம் என்னிடம் போட்டுக்கொண்டு இருந்தீர்கள். அவை எல்லாம் புரிந்து கொள்ள மிகக் கடினமானவை. மறப்பதற்கு மிக எளியவை. நீங்கள் போதித்த மதத் தத்துவங்களைப் பற்றி என் நினைவில் மீதம் இருப்பதெல்லாம் காட்டுமிராண்டித்தனமான இருள் அடர்ந்த பெரிய பெரிய வார்த்தைகள்தான். மேதாவிகளையும்கூட குழப்பக்கூடிய பயங்கரமான வார்த்தைகள்!…………

  46. Avatar
    suvanappiriyan says:

    திரு புனை பெயரில்!

    //அதற்கு பின் 30ஆண்டுகள் கழித்து இதே வித்தையை திருமாவளவனிடம் முஸ்லீமாக நீங்கள் மாறுங்கள் என்ற போது, அதனால் மரியாதை வராது என்று தெளிவாகப் புறந்தள்ளினர். அவர் தனது இனத்தின் தகுதி உயர்த்த போராடுகிறார். அறிவை வளர்த்து அதனால் மரியாதை கிடைக்கப் போராடுகிறார்.//

    கேள்வி:இஸ்லாம் மதத்தை தழுவிய பெரியார் தாசனுக்கு நடந்த பாராட்டுவிழாவில் கலந்துகொண்டீர்கள். இதைத் தொடர்ந்து நீங்களும் இஸ்லாம் மதத்துக்கு மாறப்போவதாக செய்திகள் வருகிறதே?

    திருமாவளவன் பதில்:ஒரு பெரியாரியவாதி திடீரென இஸ்லாமிய மதத்தை தழுவினார் என்பது பெரியாரிய தொண்டர்களுக்கு அதிர்ச்சி தந்திருக்கிறது. அப்படி நானும் அதிர்ச்சிக்குள்ளானது உண்மைதான். அவர் எந்த சூழ்நிலையில் அந்த முடிவை எடுத்தார் என்பது முக்கியமல்ல.

    ஆனால் அவர் இந்துத்துவத்தை, இந்து மதத்தை ஏற்கவில்லை என்பது நமக்கு ஆறுதல் அளித்த ஒன்றாகும். பெரியாரும், அம்பேத்கரும் இந்து மதம், இந்ததுத்துவத்தை கடுமையாக விமர்சித்தவர்கள். அந்த வகையில் பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தை தழுவியது இந்துத்துவத்துக்கு எதிரான நடவடிக்கையே. அந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது உண்மைதான். யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை.

    புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்த மதத்தை தழுவியபோது அவர் சார்ந்த ‘மகர்’ பிரிவினரே அவருடன் பௌத்த மதத்தை தழுவினர். வேறு தலித் சமூகப் பிரிவினர் யாரும் அவரைப் பின்பற்றவில்லை என்பது கசப்பான உண்மை. உலகப் புகழ்பெற்ற தலைவருக்கே இந்த நிலை என்றால், நான் மதம் மாறினால் என்னை முற்றாக ஆதரித்து தலித் சமூகம் மதம் மாறும் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. நான் இஸ்லாத்தை தழுவினால் என்னுடன் சில ஆயிரம்பேர் மட்டுமே தழுவலாம்.

    இஸ்லாமியனாக மாறிய பிறகு அடிமைப்பட்டு கிடக்கிற, தலித் மக்களுக்கு என்னால் குரல் கொடுக்க முடியாது. எனவே, தாழ்த்தப்-பட்ட தலித் மக்கள் உள்பட ஏழைகளுக்கு செய்யும் தொண்டுதான் உண்மையான இறைப்பணி. எனவே நான் இஸ்லாத்தை தழுவியே தீரவேண்டும் என்ற தேவை எழவில்லை.
    http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=1066&rid=59

    இஸ்லாத்துக்கு மாறினால் தலித்களுக்காக குரல் கொடுக்க முடியாதே என்ற ஆதங்கத்தில்தான் இன்றும் இஸ்லாத்தை தழுவாமல் இருப்பதாக அவரே சொல்வதை பாருங்கள்.

    1. Avatar
      punaipeyaril says:

      பெரியார் தாசன் ஒரு சாதாரண குழப்பமனநிலை வாதி… அவர் ஒன்றும் கண்ணதாசனோ, ஜெயகாந்தனோ, அசோகமித்ரனோ, அரிஸ்டாட்டிலோ, கணித மேதை ராமனுஜரோ இல்லை… பௌத்தம் புரியாத ஒருவன் மனிதனாகவோ, இறை சம நிலை நோக்கி நகர்பவனோ கிடையாது. அவர் பௌத்தராக போய் பின் தாவி இஸ்லாத்திற்கு வந்தவுடன்…. “ நோ எக்ஸிட்” என்று மாட்டி முழிப்பவர்… தேட்ஸ் ஆல்… வயிற்றுவலி தீந்துச்சு என்று பிளாக் மேஜிக் தந்திரத்தால் மாறியவரும் அல்ல… வயிற்று வலியை குணப்படுத்தினார் என்று நித்தியானந்தாவின் மகுடிக்கு மயங்கி அவர் காலடியில் கிடப்பவர்கள் அதிகம்… ஏ ஆர் ரஹ்மான் காலத்தில் நித்தி இல்லை… தேட்ஸ் ஆல்… மற்றபடி தமாம் ஏர்போட்டில் குத்துக்காலிட்டு உட்காரும் போது, பஹ்ரைன் பாலத்தில் மது மங்கைக்கு விரயும் போது எல்லாம் மனிதாபிமானம் எங்கு போனது..

  47. Avatar
    suvanappiriyan says:

    //மாறாதது மெய்மை / உண்மை / சத்தியம் எனப்படும் ஸ்ருதியே.
    “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”,
    “அங்கம் எல்லாம் குறைந்து அழுகு தொழு நோயராய்
    ஆவுரித்து தின்று உழலும் புலையரேனும்
    கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
    அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே”,
    “வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்கலந்தார் அடியார்தம் அடியார் எம் அடிகளே”
    என்றெல்லாம் இங்கும் பாடங்கள் உண்டு.
    அன்புடன்
    பொன்.முத்துக்குமார்//

    இருந்து என்ன பயன். நீங்கள் சொன்ன கருத்துக்கள் ஏட்டளவிலேயே உள்ளது. இன்றளவும் செயலுக்கு வரவில்லையே! தாழ்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமை இன்று வரை நின்றபாடில்லையே!

    நுண்மான் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
    மண்மாண் புனைபாவை அற்று.

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      “இருந்து என்ன பயன். நீங்கள் சொன்ன கருத்துக்கள் ஏட்டளவிலேயே உள்ளது. இன்றளவும் செயலுக்கு வரவில்லையே!”

      காவிரி அழுக்கென்று கூவம் குற்றம் சாட்டியதாம்.

      1. Avatar
        Kavya says:

        பொன் முத்துக்குமார்! ஒன்றைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் வருணாஷ்ரதர்மம் இலகியிருக்கலாம். இன்றைய சமூக வாழ்க்கைக்கு இடையுறானபடியாலே மட்டும். மற்றபடி, எந்த இந்து சமூக அமைப்பும் சாமியாரும் வருணாஸ்ரதர்மத்தை மறுதலிக்கவில்லை.

        மதுரை ஆதினம் நித்தியின் சாதிச்சர்டிபிகேட்டைத் தூக்கி நிருபர் கூட்டத்தில் காட்டினார். உண்மையா பொய்யா?

        ஆக, உங்களை எப்படி காவிரியுடன் ஒப்பிடுகிறீர்கள். நீங்களும் கூவமே.

        1. Avatar
          punaipeyaril says:

          நித்தியை நாங்களே உதைப்போம்… ஆனால், உங்களால் உங்களில் உள்ள் நட்டு கேசுகளை தைரியமாக எதிர்க்க முடியுமா…? அது தான் இந்து மதம் தந்துள்ள் சுதந்திரம்..

          1. Avatar
            Kavya says:

            ஏன் மடசேனா பார்ப்ப்னர்களை உதைப்போம் என்று சொல்லவில்லை. இன்று சாதிகளின் அவசியம் என்று சொல்பவர்களை என்ன சொல்கிறீர்கள்? காஞ்சி சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரலின் வருணாஸ்ரத்தைப்பற்றி புகழுந்து எழதியிருக்கிறாரே அவரைப்பற்றி? பாரதியார் கட்டுரைகளில் நிறைய அதைபார்க்கலாமே அதைப்பற்றி? இன்னும் எத்தனையோ பேர் சாதிகள் இருக்கவேண்டுமென சொல்லியும் எழுதியும் வருகிறார்களே அவர்களைப்பற்றி?

            ஏன் நித்தி என்றால் மட்டுமே உதைப்போம் என்று எழுதுகிறீர்கள்? மற்றவர்கள் உசத்தி? நித்தி மட்டமா? இந்துமதம் தந்துள்ள சுதந்திரத்தை ஏன் நித்தியைத்தாக்க மட்டும்?

          1. Avatar
            Kavya says:

            மேலே நான் எழுதியுள்ளதையும் பார்த்து உங்கள் கருத்தைப்போடுங்கள். ஏன் ஓர வஞசகம்? ஏன் ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மற்றொரு கண்ணில் வெண்ணெய்? ஏன் ஜாதியாளர்கள் உங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் சாமரம்? வேண்டாதவர் எனில் இந்துமதம் சுதந்திரம் தந்தது விலாச என்று சொல்கிறீர்கள்?

  48. Avatar
    தங்கமணி says:

    சுவனபிரியன்.
    நீங்கள் சொல்வதெல்லாம் பொய். இஸ்லாமை பற்றி எழுதுவதெல்லாம் பொய். அதனை ஏற்கெனவே பலமுறை கூறிவிட்டேன். அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் எங்கெங்கிருந்தோ காப்பி பேஸ்ட் பண்ணுவதை நிறுத்துங்கள்.

    காப்பி பேஸ்ட் பண்னுவதற்கா இந்த இடம்? கேட்டவற்றுக்கு பதில் தாருங்கள். முழுக்க முழுக்க பொய்களை கூறுவதை நிறுத்துங்கள்.

    இதுவரை நான் கேட்டு நீங்கள் பதில் தராத கேள்விகளில் இன்னும் ஒன்று ஏறியிருக்கிறது.

    1) அரபி அரபியல்லாதவனை விட மேலானவனில்லை என்று பொருள் வரும் ஹதீஸ் எங்கே?

  49. Avatar
    மலர்மன்னன் says:

    islam-watch.org என்பதாக ஓர் இணைய தளம் உள்ளது. அங்கு சென்றால் இஸ்லாமிலிருந்து வெளியேறிய விவரம் அறிந்தவர்கள் பலர் தெரிவிக்கும் கருத்துகளையும் காரணங்களையும் தெரிந்துகொள்ளலாம். எத்தனைபேர் இஸ்லாமிலிருந்து வெளியே வந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் கணக்கெடுக்கலாம். அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு இருப்பதால் துணிந்து வெளியேறி தங்களுடைய கருத்தையும் வெளியிடுகிறார்கள்.
    -மலர்மன்னன்

    1. Avatar
      Kavya says:

      இந்தியாவில் இசுலாமிலிருந்து வெளியில் வந்தால் சுட்டுக்கொல்லப்படுகிறார்களா ? விளக்கவும்.

  50. Avatar
    punaipeyaril says:

    மறக்காமல் இந்த குறும்படம் பாருங்கள். http://www.youtube.com/watch?v=aGtQvGGY4S4 இந்த படம் எடுத்தற்கு இயக்குனர் கொலை செய்யப்பட்டார் – வேறு யாரால… நீங்கள் நினைப்பவர்களால் தான். இது தான் இவர்களின் நாகரீகத் தன்மை.

  51. Avatar
    suvanappiriyan says:

    தங்கமணி!

    //இதுவரை நான் கேட்டு நீங்கள் பதில் தராத கேள்விகளில் இன்னும் ஒன்று ஏறியிருக்கிறது.
    1) அரபி அரபியல்லாதவனை விட மேலானவனில்லை என்று பொருள் வரும் ஹதீஸ் எங்கே?//

    யார் பொய் சொல்கிறார்கள் என்பது நடுநிலையாளர்களுக்கு நன்கு தெரியும். அந்த நடுநிலைமையை உங்களிடமோ மலர் மன்னனிடமோ எதிர்பார்க்க முடியாது.

    நான் அனுப்பிய பல பதில்களை சாமர்த்தியமாக திண்ணை நிர்வாகம் எடிட் செய்து தனது நடு நிலையை அழகாக பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. வாழ்க நடு நிலைமை. ஆனால் அவை அனைத்தையும் எனது பதிவில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறேன் என்பதையும் திண்ணை நிர்வாகிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    http://en.wikipedia.org/wiki/The_Farewell_Sermon
    http://www.islamreligion.com/articles/523/
    http://www.readislam.net/lastsermon.htm

    மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.

    ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706

    (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88

    முகமது நபியின் இறுதிப் பேருரையில் இந்த வாசகம் இடம் பெற்றுள்ளது. மிக நீண்ட பேருரையாதலால் பலர் பல தலைப்புகளில் தொகுத்துள்ளனர். முழு உரையும் ஒருவரே தொகுக்கும் அளவுக்கு அன்று எழுதும் வசதிகள் இல்லை என்பதும் நமக்கு தெரியும். எனவே பல நபித் தோழர்கள் சிறு சிறு குறிப்புகளாக அன்றைய தினம் குறித்து வைத்ததை இன்று நாம் ஒரே கோர்வையாக முழு பேருரையையும் தெரிந்து கொள்கிறோம்.

    இப்னுமாஜா 3074, 2712, 3055

    சுனன் நஸயி 4192, 3642

    ஜாமிஉத் திர்மதி 1706, 2120, 2121

    ஸஹீஹ் முஸ்லிம் 2334

    அபு தாவுத் 2870, 3560

    புகாரி 4402

    இவை அனைத்து நபி மொழிகளையும் ஒன்றாக்கினால் முகமது நபியின் கடைசி சொற்பொழிவு நமக்கு கோர்வையாக கிடைக்கும்.

    1. Avatar
      தங்கமணி says:

      இந்த லிஸ்டு நான் கேட்கவில்லை. எந்த இடத்தில் அரபி அரபி அல்லாதவனை விட மேலானவன் அல்ல என்று சொன்ன முகம்ம்மதுவின் ஹதீஸ் இணைப்பு. அது கொடுங்கள் போதும்.

      நான் சுனான் நஸாய் இணைப்பை கொடுத்தேன். அதில் 4192இல் ஒன்றும் இல்லை என்றும் காட்டினேன்.
      அது போல இணைப்பு கொடுங்கள். பார்த்துகொள்கிறேன்.
      திரும்ப திரும்ப அரைத்த மாவையே அரைக்க வேண்டாம்.

  52. Avatar
    admin says:

    விவாதத்துக்கு பொருத்தமில்லாத,பிறதளங்களிலிருந்து எடுக்கப்பட்ட நீண்ட பதிவுகள் யார் எழுதினாலும் தொடர்ந்து நீக்கப்படும்.
    வாசகர்கள் விவாதத்துக்கு பொருத்தமான சிறிய பதில்களை எழுதும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

  53. Avatar
    punaipeyaril says:

    In Egypt, the health ministry banned FGM in 2007 despite pressure from some (though not all) Islamic groups.<> just google it.

  54. Avatar
    Nadoodi says:

    //இஸ்லாத்தில் உள்ளே நுழைவதற்கோ வெளியே செல்வதற்கோ ஞானஸ்தானம் போன்று எந்த சடங்குகளும் இல்லை. குர்ஆன் இறை வேதம்: முகமது நபி இறைத் தூதர்: இந்த இரண்டு அடிப்படையில் கட்டப்பட்டதுதான் இஸ்லாம். இது பிடித்திருந்தால் இந்த சட்டத்தின் படி வாழலாம். பிடிக்க வில்லையா நான் தொழாமல் நோன்பு வைக்காமல் ஏழை வரி கொடுக்காமல் ஹஜ் செய்யாமல் இருந்து கொள்ளலாம். யாரும் உங்களை வந்து கட்டாயப்படுத்தப் போவதில்லை.//
    இஸ்லாத்தை விட்டு வெளியேறுவது அவ்வளவு எளிதா என்ன? இங்கு டிஎன்டிஜே என்றொரு கும்பல் உள்ளது. இவர்களிடம் சென்று நான் காபிர் என எழுதிக்கொடுக்க வேண்டும். நான் காபிராகவும் இருந்துவிட்டு போகிறேன், பாதம் கீராகவும் இருந்துவிட்டு போகிறேன்… அதை ஏன் உங்கள் முன் நின்று எழுதிக்கொடுக்க வேண்டும்?

    1. Avatar
      paandiyan says:

      பாகிஸ்தானில் ஒரு ஹிந்து இறந்த பொழுது கூட காபிர் என்று தனிமை படுத்தி பிணத்தில் கூட மதம் என்ற பெயரில் வெறுப்பை காண்பித்தவர்கள் முஸ்லிம்கள் என்பதை நாம் நினைவில் கொண்டுவர வேண்டிய தருணம் இது

  55. Avatar
    punai peyaril says:

    கருத்துக்கள் என்பது ஒரு உளி. மதம் என்பது அந்த உளியை செயல்படுத்தும் சிற்பி. இன்று வெறும் வெறிக் கூச்சலிடும் அடுத்தவர்களை பயமுறுத்தும் மனிதமனங்களை வடித்த சிற்பியும் சரி அந்த உளியும் சரி தவறானது என்பது உலகத்திற்கு புரிந்து போன நிலை…

  56. Avatar
    suvanappiriyan says:

    //இஸ்லாத்தை விட்டு வெளியேறுவது அவ்வளவு எளிதா என்ன? இங்கு டிஎன்டிஜே என்றொரு கும்பல் உள்ளது. இவர்களிடம் சென்று நான் காபிர் என எழுதிக்கொடுக்க வேண்டும். நான் காபிராகவும் இருந்துவிட்டு போகிறேன், பாதம் கீராகவும் இருந்துவிட்டு போகிறேன்… அதை ஏன் உங்கள் முன் நின்று எழுதிக்கொடுக்க வேண்டும்?//

    இப்படி உங்களிடம் கோரிக்கை வைத்தது யார்? ஆதாரம் தரவும்.

  57. Avatar
    A.K.Chandramouli says:

    வந்துட்டார்யா, வந்துட்டார்யா. காவ்யா வந்து ஹிந்து மதம் கூவம் என்று சொல்லிவிட்டார். நீங்களும் கூவம்தான் என்று சொல்லி இருக்கிறார். அப்போ இஸ்லாமும் கூவம் என்கிறாரா

    1. Avatar
      Kavya says:

      சந்திர மவுளி படித்தவர் நீங்கள். எழுதும் நடையோ அப்படிப்புக்கு இலக்கணமில்லை. தனிநபர் தாக்கல் செய்வது நல்லதன்று.

      இசுலாம் காவிரியா கூவமா என்பது என் பிரச்சினையில்லை. இந்துமதம் எப்படி என்பதுதான் என் பிரச்சினை. அதில் உள்ள குறைகள் நியாயப்படுத்தப்பட்டு நீட்டிக்கப்படுகின்றன. திண்ணையிலும் கட்டுரையாகப்போடப்படுகின்றன. அவை இந்துமதத்தைக் கூவமாக்கின. இன்றும் அகற்றப்படாவிட்டால் கூவமே.

      உங்கள் கருத்தென்ன? இசுலாமிய தீவிரவாதம் இசுலாமைக்கூவமாக்கிறது. அப்படியென்றால் மடசேனா உங்கள் மதத்தைக் கூவமாக்கவில்லையா சந்திர மவுளி?

      1. Avatar
        punaipeyaril says:

        இந்துமதத்தை நாங்கள் சுத்தப்படுத்திக் கொள்கிறோம்.. உங்களால் பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்சிற்கு கைதட்டும் இந்தியர்களை ( நாம் இந்தியர்கள் என்கிறோம்.. அவர்களுக்கோ பற்று வேறு ஒரு காரணத்தினால் ) கண்டிக்க முடியுமா…? தீவிரவாத முஸ்லீம்களை கண்டித்து ஒரு அறிக்கை விட முடியுமா..? டிவியில் பர்தா பற்றி வரவிருந்த ஒரு கலந்துரையாடலை மிரட்டி நிறுத்திய சினிமாக்காரர் அமீரை கேள்வி கேட்க முடியுமா..? இல்லை அவரின் சகோதரர் எங்கு இருக்கிறார் என்று கேட்க முடியுமா…? பசுமாட்டிடம் வந்து பயம் காட்டும் நீங்கள் பரிதாபத்துக்குரியவர்கள்…

        1. Avatar
          Kavya says:

          நாங்கள் என்றால் ஆர்? முதலில் அதைச்சொல்லுங்கள்.

          நித்தியை உதைப்போம் என்றால் உங்களுக்கும் தாலிபானுக்கும் என்ன வேறுபாடு? அவரை உதைக்க உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது ஆர்? அவரை உதைக்க விரும்பும் நீங்கள், அவரைப்போல இந்துமதத்துக்கு இழுக்கு தேடும் மற்றவரைக் காணாமல் விட்டதேன்?

          இசுலாமைப்பற்றி என்னவேண்டுமானால் பேசிக்கொள்ளுங்கள். என் இந்துமதக்கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.

          ஏன் ஒரு ஜாதி மட்டுமே அர்ச்சகர்கள்? அதை சமநிலைப்படுத்தப்பட்ட முயற்சிக்குத் தடை போட்டவர்களை ஏன் உதைபோம் என்று சொல்லவில்லை?

  58. Avatar
    suvanappiriyan says:

    //அப்போ இஸ்லாமும் கூவம் என்கிறாரா//

    இஸ்லாம் வருவதற்கு முன்பு உள்ள அரேபியாவின் நிலையை சொல்லியிருப்பார்.

  59. Avatar
    தங்கமணி says:

    காவ்யா,
    இஸ்லாத்தின் கொள்கை பிடிக்கவில்லை என்றால் வெளியே போகவேண்டியதுதானே என்று சொன்னீர்கள்.
    அப்படி இஸ்லாத்தை பிடிக்க வில்லை என்று சொன்னால் இஸ்லாமிய ஷரியா மரண தண்டனை வழங்கும்போது எப்படி வெளியே செல்வது என்று கேட்டேன்.

    இந்த இஸ்லாமிய ஷரியாவை இந்தியாவில் அமல் படுத்த கேட்டுகொண்டிருக்கிறார்கள். அப்படி அமல்படுத்தாமலேயே இஸ்லாமை விட்டு வெளியே போகக்கூட வேண்டாம், சும்மா விமர்சித்தலோ, அல்லது முல்லாக்களின் கருத்துக்களை மறுத்தாலோ, கொல்லுவது, மிரட்டுவது, அடிதடி, அச்சுருத்தல், சமூக விலக்கம் என்று தூள் பரக்கிறது தமிழ்நாட்டிலேயே.

    இங்கே எச்.ஜி.ரசூல் என்று ஒருவர் தொடர்ந்து எழுதுகொண்டிருக்கிறார். அவரைப் பற்றி படித்து பாருங்கள்.

    1. Avatar
      Kavya says:

      அப்படியெல்லாம் ஷரியத் சட்டம் தமிழ்நாட்டுக்கு வராது. பயப்படாதீர்கள்.

      1. Avatar
        punaipeyaril says:

        இதோ உங்கள் தொனியில் இருக்கும் மிரட்டலே உங்களின் அமைதி மார்க்கத்திற்கு சாட்சி… உலக ரட்சகர்கள் ஜார்ஜ்புஷ், நரேந்திரமோடி அச்சமில்லை அச்சமில்லை என்று தொடங்கி வைத்துள்ளார்கள்… இப்படி மிரட்டிய பாகிஸ்தான் இன்று அமைதி இழந்து….

  60. Avatar
    smitha says:

    Kavya & piriyan,

    Just see what is happening to salman rushdie & tasreen nasreem.

    Islam oru amidhi maargam. Correct

    1. Avatar
      Kavya says:

      Dear Smitha

      I am not bothered abt what is happening w/in Islam world. I am bothered abt why u r showing selective amnesia when it comes to Hindu religion. Not only u, but all of ur ilk writing here.

      Why O Why?:

  61. Avatar
    suvanappiriyan says:

    திரு காவ்யா!

    //உங்கள் கருத்தென்ன? இசுலாமிய தீவிரவாதம் இசுலாமைக்கூவமாக்கிறது.//

    சரியாக சொன்னீர்கள். இஸ்லாத்தில் சில வசனங்கள் தவறாக விளக்கப்பட்டு சில இளைஞர்களை தீவிர வாதத்துக்கு கொண்டு செல்வதே அமெரிக்காவின் அத்து மீறல்கள்தான். இஸ்ரேலின் அடாவடித் தனங்கள்தான். ஈராக்கில் அநியாயமாக ஆட்சியை கவிழ்த்ததுதான் அனைத்து தீவிரவாதத்துக்கும் ஊற்றுக் கண்ணாக இருந்தது.

    //அப்படியென்றால் மடசேனா உங்கள் மதத்தைக் கூவமாக்கவில்லையா சந்திர மவுளி?//

    இதற்கு சாமர்த்தியமாக பதிலளிக்காமல் எஸ்கேப் ஆகி விடுவார். :-)

    1. Avatar
      punaipeyaril says:

      அமெரிக்காவின் இஸ்ரேலின் மோடியின் தாக்குதல்கள் தற்பாப்பு சம்பந்தமானவை…

  62. Avatar
    Nadoodi says:

    //இப்படி உங்களிடம் கோரிக்கை வைத்தது யார்? ஆதாரம் தரவும்.//

    ஆதாரமா? நடந்தது எதுவுமே தெரியாதது போல ஆதாரம் கேட்கிறீர்கள்? இதோ ஆதாரம் இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்…

    http://nallurmuzhakkam.wordpress.com/2012/05/23/kdnl-arguement/

  63. Avatar
    A.K.Chandramouli says:

    காவ்யா அவர்களே சம்பந்தம் இல்லாமல் பதிவுகள் போடுபவர் நீங்கள்தான். இந்த கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாமல் ஹிந்து மதத்தை இழுத்து கூவம் என்று கூறிவிட்டீர்கள்.எந்த விஷயத்தைப் பற்றிய கட்டுரையாக இருந்தாலும் ஹிந்து மதத்தை இழுத்து மென்று துப்புவதை வழக்கமாக கொண்டிருக்கிறீர்கள். இது உங்களுக்கு அசிங்கமாகப் படவில்லையா.

    1. Avatar
      Kavya says:

      தவறான புரிதல். என் ஒரே கருத்தென்னவென்றால், நீங்கள் சுட்டிக்காட்டும் பலவிடயங்கள் இந்துமதத்திலும் நடந்தேறுகின்றன. அதே சமயம், அவை பேசப்படவில்லை. பேசினால், பார்ப்பனத்துவேசம் என்று கதையை மாற்றுகிறீர்கள். எ.கா. சாமிநாதன், 1000 ஆண்டுகளுக்கு முன் அரேபியபாலைவன மக்களின் மதம் நமக்கெதற்கு என்ற தொனியில் எழுதினார். நான் கேட்டது. 3000 ஆண்டுகளுக்கு முன் சிந்துசமவெளியில் வாழ்ந்த ஆஃகானியர்களின் வேதங்கள் நமக்கெதற்கு? அவர்கள் சொல்லித்தந்த மதம் நமக்கெதற்கு? ஆக கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல்லெற்கிறோம்.

      இஃதொரு எகாட்டே. பலபல உள்ளன.

      இந்து மதம் கூண்டோடு தாக்கப்படவில்லை. அதை வைத்து தமக்காக, தன் ஜாதிக்காக பிழைப்பு நடாத்தும் கூட்டத்தின் செயல்களே தட்டிக்கேட்கப்படுகின்றன. நீங்கள் ஏன் அதைச்செய்யவில்லை சந்திர மவுளி? நான் மட்டுமே செய்ய வேண்டுமா?

      புதிய மாதவியின் கட்டுரையில் இந்துமதப்பிரச்சினை பேசப்படுகிறது. அங்கு ஏன் இசுலாமைப்பற்றி இழித்துப்பேசுகிறார்கள் ? அதைச்சொல்லுங்கள்.

      1. Avatar
        Kavya says:

        கருனாநிதி எழுதியது போல: “பூசாரியைத் தாக்கினேன். கோயில் கூடாதென்பதற்காகன்று; கோயில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாதென்பதற்காக”

        பிள்ளையார் சாந்த சொரூபி, முருகன் அவசரப்பட்டுக்கோபப்படுபவன் என்பதுதான் நம் புராணம். அப்படித்தான் பிள்ளையாரை தமிழர்கள் பார்க்கிறார்கள். ஒரு மராட்டியர் (திலக்) தன் சுயலாபத்துக்காக பிள்ளையார் ஊர்வலம் நடாத்தி பிள்ளையாரை அரசியலாக்குகிறார். அதைத்தட்டிகேட்டால், இந்துமதம் தாக்கப்படுகிறதா?

        இந்துமதம் தாக்கப்படவில்லை. இந்துக்கள் போர்வையில் அலையும் அரசியலார்கள் தாக்கப்படுகிறார்கள். இதை தயை செய்து நினைவில வைத்துக்கொள்ளவும்.

  64. Avatar
    suvanappiriyan says:

    நாடோடி!

    //இஸ்லாத்தை விட்டு வெளியேறுவது அவ்வளவு எளிதா என்ன? இங்கு டிஎன்டிஜே என்றொரு கும்பல் உள்ளது. இவர்களிடம் சென்று நான் காபிர் என எழுதிக்கொடுக்க வேண்டும். நான் காபிராகவும் இருந்துவிட்டு போகிறேன், பாதம் கீராகவும் இருந்துவிட்டு போகிறேன்… அதை ஏன் உங்கள் முன் நின்று எழுதிக்கொடுக்க வேண்டும்?//

    http://nallurmuzhakkam.wordpress.com/2012/05/23/kdnl-arguement/

    நீங்கள் முன்பு இட்ட பின்னூட்டத்துக்கும் கொடுத்துள்ள சுட்டிக்கும் என்ன தொடர்பு? :-)

  65. Avatar
    smitha says:

    இது உங்களுக்கு அசிங்கமாகப் படவில்லையா.

    Kavya does not have all that. He will deride hindus, hinduism, brahmins. This is his 3 point agenda.

    That is what EVR did. Thalaivar evvazhiyo thondan avvazhi.

    1. Avatar
      Kavya says:

      There is no such being called Brahmins. No single community of people can has been conferred upon that title either by God (!) or by people. Those who style themselves so, defraud society.

      The correct nomenclature to your community, or that community which dare to style themselves as Brahmins, is Tamil paarppnars only – a nomenclature which has been in vogue since Sangam, in its literature and in present society.

      As long as you call yourself so, so long as there will be tussle between you and others like me. Because, we Hindus, feel you are attempting to usurp the religion, and making it exclusive. We are against such exclusiion.

      If no such exclusive was attempted in the past, the religion wd not have lost humungous section of population to other religion.

      The enemy is not from without, but from within ! The dark skinned and ugly Scavengers are Xians and Muslims. The clean ‘Brahmins’ are Hindus! Intrspect !!

  66. Avatar
    Kalimiku Ganapathi says:

    Kavya,

    //அப்படியெல்லாம் ஷரியத் சட்டம் தமிழ்நாட்டுக்கு வராது. பயப்படாதீர்கள்.//

    When millions of people are getting killed before your very eyes for the sake Sharia, how can you be so sure that this disgusting law will not come into force? Such sense of gullibility is no different from that of those idiopathic adherents of fanatic religions.

    Sharia has already got established in many parts of India including Tamil Nadu.

    At least read this:

    http://puduvaisaravanan.blogspot.in/2007/01/blog-post_685.html

    .

  67. Avatar
    Kalimiku Ganapathi says:

    //இருந்து என்ன பயன். நீங்கள் சொன்ன கருத்துக்கள் ஏட்டளவிலேயே உள்ளது. இன்றளவும் செயலுக்கு வரவில்லையே! தாழ்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமை இன்று வரை நின்றபாடில்லையே!//

    Suvanapriyan,

    Islam created scavengers. How can we give up Islamic influences? Please advise.

  68. Avatar
    Indian says:

    Pavam Mr SP. Please leave him alone.He has been hurt badly. Lo and behold, his friend Kavya is nowhere to be seen.The audacity of it all,imagine absconding a friend who is in dire straits! The nerve! It is time for Mr SP to look for a better “side kick’.

  69. Avatar
    punaipeyaril says:

    இதோ இன்று அஸ்ஸாமில் வந்தேறிகள் மதத்தின் துணையுடன் இந்த தேசத்து பூரிவீக குடிமக்களை கொன்று குவித்துக் கொண்டு…

  70. Avatar
    A.K.Chandramouli says:

    இந்தக் கட்டுரையின் தலைப்பை ஞாபகப் படுத்துகிறேன்.’மத நிந்தனையாளர்கள் என்று பெயர் சூட்டி அப்பாவிகளைக் கொல்லும்பாகிஸ்தான் கலாசாரம்’ இது சரி அல்லதுதவறு எப்படி. ஆராய்ந்தால் பரவாஇல்லை. இங்கு எதற்கு ஹிந்து மதம் பற்றிய சர்ச்சை

  71. Avatar
    Indian says:

    Mr Suvanapriyan THINKS that he had CORNERED our respected Shri Vee Sa on Bhagavt gita. How do you know whether Lord Krishna uttered all those holy verses? Clever by half!
    In GITA, Lord Krishna tells Arjuna that he can REJECT everything he had said and find the truth for himself. It is all up to Arjuna to accept Gita or reject it.
    SEE, WE hINDUS HAVE THIS FREEDOM to reject even our Lord’s teachings and seek truth in our own way. There is no holy book that can bind us.Even our Lord gives us this unrestrained flexible freedom.
    Mr SP, can you do the same in Islam? Can you reject Koran and seek enlightenment by yourself? You might lose a limb or two or worse, your head, in the process though!!!

  72. Avatar
    punaipeyaril says:

    இவர்களுக்கு சற்றும் குறைவில்லாமல் ஒரு குரூப் இந்துமதக் காவலர்களாய் தங்களை தாங்களே கூறிக்கொண்டு மங்களூரில் வெறியாட்டம் ஆடியிருக்கின்றன…

Leave a Reply to suvanappiriyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *