மன்னிப்பு எனும் மந்திரச்சொல்

author
0 minutes, 6 seconds Read
This entry is part 3 of 11 in the series 18 ஆகஸ்ட் 2019


கௌசல்யா ரங்கநாதன்
         ——
-1-
“நினைக்க, நினைக்க நெஞ்சம்” என்ற புகழ் பெற்ற பாடல்  என் நினைவுக்கு வருகிறது..ஊம்..எல்லாமே ஒருக்கணப் பொழுதில் நடந்து, முடிந்து விட்டது..இப்படியாகி விடும் எங்கள் நிலைமை என நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை..
ஒரு சின்ன மனத்தாங்கல்தான்..எப்படியும் சில நாட்களில் எல்லாம் மறந்து போய் சகஜ நிலைமைக்கு திரும்பிவிடும் என்று நினைத்திருந்தது தவறாகிவிட்டது..சம்பவம் நடந்து இன்றுடன் 20 நாட்களாகி
விட்டது..என் புருஷனிடம் இது பற்றி பகிர்ந்து கொண்டால் அவரோ “நாமதான் முன் ஜாக்கிரதையாய் நடந்துக்கிட்டிருக்கணும்” என்கிறார்.
“என்னங்க முன் ஜாக்கிரதை? எனக்கு விள்ங்கலையே நீங்க சொல்றது?”என்ற போது,
“நான் சொன்னா நீ தப்பா நினைக்க மாட்டியே? தப்பாவே நினைச்சாலும் பரவாயில்லை” என்ற போது என் கணவரை இடைமறித்து “எதுக்குங்க இவ்வளவு பொ¢ய பீடிகையெல்லாம்” நீங்க உங்க மனசில் உள்ளதை எங்கிட்ட
 வெளிப்படையா பேசிட வேண்டியதுதானே? நான் என்ன அப்படி தவறாய் நடந்துக்கிட்டேன்னு  எங்கிட்ட சொல்லுங்களேன்”.
” ஜானு, சில சமயம் நமக்கு கரக்ட்னு படறது, மத்தவங்களுக்கு வேற விதமாய் தோணலாம்.அப்ப அவங்க கோபிக்கலாம்..நான் இந்த அர்தத்தில் சொல்லலைனு சொல்லி அவங்களுக்கு விளங்க வைக்கணும்..அப்பக்கூட
சிலர் “ஐ டோன்ட் வான்ட் யுவர் எஃஸ்பிளனேஷன்னு சொல்வாங்க..அப்ப அதைப்பத்தி மேலும், மேலும் அவங்க கிட்ட நம்ம தரப்பு வாதத்தை எடுத்து வைக்கப் போனா அவங்களுக்கு நம்ம மேல கோபம்தான் அதிகமாகும்..ஸோ..அப்ப அதை அப்படியே விட்டுடணும்..
அப்புறம் இன்னொரு சந்தர்பத்தில் மெதுவாய் அவங்களுக்கு எடுத்து சொல்லி விளங்க வைக்கணும் நம் தரப்பு வாதங்களை..நீ படிச்சவ..நீ
Behavioural science பற்றி கேள்விப்பட்டிருப்பே.. அதாவது, யார், யார்கிட்ட, எப்படி நடந்துக்கணும்னு ஒரு  code of conduct இருக்கு…பெத்தவங்க கிட்ட, உடன்பிறப்புக கிட்ட, டீச்சர்ஸ் கிட்ட,
நண்பர்கள் கிட்ட, பெத்த குழந்தைகள் கிட்ட, கூட வேலை செய்யறவங்க கிட்ட, நம்மை விட வயசில மூத்தவங்க கிட்டலாம்.நான் என்ன தப்பா அவங்க கிட்ட, ஐ மீன் தரக்குறைவா நடந்துக்கிட்டேன்னு நீ கேட்கலாம்..நீயோ,நானோ மட்டும் நடந்துக்கணும்னு சொல்லலை..
நம்ம வீட்டில் உள்ள ஒவ்வொருத்தரும் நடந்துக்கணும்..வர விருந்தாளிகளும் சகஜமாய் நம்மகிட்ட நடந்துக்கணும்..வார்த்தைகளை,
சிக்கனமாய், அளந்து, இதைப் பேசலாமா? இப்படி பேசினால் பின் விளைவுகள் ஏதாச்சும் வருமானுலாம் யோசிக்கணும்..ஒரு பழமொழி உண்டே “பேசாத வார்த்தைக்கு நீ எசமான்னு” “மௌனம்
சர்வார்த்த சாதகம்னு”, ஒரு வடமொழி பழமொழியும் உண்டு…இதை உணர்ந்துதானோ என்னவோ வயசானவங்க யார் கிட்டவும் ஒரு வார்த்தை பேசணும்னால் கூட யோசிச்சு,யோசிச்சுத்தான் தான் பேசுவாங்க..விடு..
எந்த புண்ணும் காலப் போக்கில் ஆறிடும்..இப்பத்திக்கு இது பத்தி எதுவும் பேசாம இருக்கிறதுதான் நல்லதுனு நினைக்கிறேன்” என்றார் என் கணவர்..அப்படியொரு நிகழ்வு அன்றைக்கு நடந்திருக்க வேணாம்தான்..எல்லாம் தலை விதி.. என் மனம் பின்னோக்கி சென்றது..
-2-
எவ்வளவு அன்னியோன்னியமாய் பழகினோம் எங்கள் எதிர் வீட்டு முதியவர்களிடம், நாங்கள் அந்த ஃபிளாட்டை வாங்கி வந்ததிலிருந்து..அப்போதுதான் எங்களுக்கு கலியாணமாகி இருந்தது..தனிக்குடித்தனம் வேறு..கண்ணைக்கட்டி காட்டில் விட்டாற்போலிருந்தது எனக்கு..
என்னவர் ஆபீஸ் போய்விட்டால் கொட்டு, கொட்டென செய்வதறியாமல் அந்த நான்கு சுவர்களுக்குள் அடைந்து
கிடப்பேன்..ஏதாவது வீட்டு வேலைகள் செய்வேன்..டி.வி.பார்ப்பேன்..நானும் டிகி¡£ முடித்து, கலியாணத்துக்கு முன் ஒரு வேலையில் இருந்தவள்தான்..கலியாணத்துக்கு பிறகும்,
என்னவர் என்னை வேலை பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லைதான்..மேலே படி கரஸ்ல..அப்புறமா ஏதாச்சும் வேலை தேடலாம்..அந்த ஸ்டேஜில் முடிஞ்சா..அதாவது,
குழந்தை, குட்டிகள்னு வராம இருந்தா” என்று சொல்லியிருந்தார்..எங்கள் பிளாட்டுக்கு எதிர் ஃபிளாட்டில் அகவை 75 கடந்த ஒரு தம்பதியர் வசித்து வந்தனர்..குடும்பத் தலைவர் அரசுப்பணியிலிருந்து ஓய்வு
பெற்று மாதாந்திர ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருந்தார்..ஒரே பிள்ளை போலும்..ஸ்டேட்சில் செட்டிலாகி இருந்தான் என்று கேள்வி..ஒரு பேரன் மட்டுமே அவர்களுக்கு என்று சொன்னதாக நினைவு..எங்களுக்கென அதிக
 எதிர்பார்ப்புகள் இல்லாததால் நாளின் பெரும்பகுதியை வெட்டியாய் கழிக்க வேண்டியிருந்தது.  ஊரும் புதிது..யாரை நம்புவது என்றும் ஒரு வித அச்ச உணர்வு..அப்போதுதான், என் கணவர் என்னிடம் சொன்னார்..”நீ சிடிக்கு புதுசு..இங்கே, எதிர் போர்ஷனில் உள்ளவங்களைப் பார்த்தா
 வயசானவங்களா தோணுது..கொஞ்சம், கொஞ்சம் டச் வச்சுக்க அவங்களோட..அட் லீஸ்ட் ஒரு பேச்சுத் துணைக்காச்சும், ஒரு அமையம்,
சமையம்னா பரஸ்பரம் உதவிக்க” என்றார்..நானே ஒரு நாள் மதிய ஓய்வு வேளையில் அவர்கள் வீட்டு கதவை தட்டி எங்களை அறிமுகப் படுத்தி கொண்டோம்..அவர்கள் மிக, மிக நல்லவர்களாய் தோன்றியது..
பெற்ற பெண் போல என்னிடம் பழகினார்கள்.. அன்பு காட்டினார்கள்..எனக்கு அவ்வளவாய் சமையல் வராது..இதை வெளிக்காட்டிகொள்ளவும் விரும்பவில்லை..
ஆனால் இதை எப்படியோ உணர்ந்துகொண்டவர்கள் ஒவ்வொரு ரெசிபியாய் எனக்கு சொல்லிக் கொடுத்தர்கள்..இன்று சமையல் கலையில் நான் வல்லுனராய் இருப்பதற்கு அம்மா..ஆம்..ஒரு பெத்த
தாய் போல..இன்னம் சொல்லப் போனால் அதைவிட கூடுதலாகவும் எங்கள் மீது அன்பு செலுத்தி என்னை கவனித்துக் கொண்டார்கள்..எங்கள் நட்பு நாளுக்கு நாள் இறுகக் காரணமே அவர்கள்
இருவருமே எங்களிடம் காட்டிய தன்னலமில்லாத அன்பு..அதை அன்பு என்று கூட சொல்ல முடியாது..பாசம்…அது மட்டுமல்ல..எங்கள் இரு குடும்பங்களுக்குமே வெட்டி அரட்டை, புறம் பேசுதல்,ஒருவரைப்பற்றி மற்றவர்களை பார்க்கையில் கோள் சொல்லுதல், எல்லாம் பிடிக்காது.. அவர்களிடமிருந்து நாங்கள் கற்றுக் கொண்டது ஏராளம்அன்றாட நிகழ்வுகளிலிருந்து வானத்துக்கு கீழே, பூமிக்கு
மேலே என்று அனைத்தையுமே கற்றுக் கொண்டேன்..அங்கிளும் பழங்கதைகள், அதாவது, அந்தக் காலத்தில் நான் இப்படியிருந்தேன், அப்படியிருந்தேன் என்றெல்லாம் பேசி அறுக்க மாட்டார்..தான் சொல்ல வந்ததை
 ரத்தின சுருக்கமாய் சொல்வார்..ஏறக்குறைய அனாதை போலிருந்த எங்களுக்கு வாழ்வியல் முறைகளை கற்று கொடுத்ததே அந்த இருவரும்
தான் என்றால் மிகையாகாது..ஏதோ டிகி¡£ முடித்திருந்தேனேயொழிய, வீட்டு வேலை எதுவும் ஊஹூம்..கலியாணமுமாகி சென்னை வந்தாயிற்று..மாமனார்–மாமியார் என்றும், நெருங்கிய சொந்தமென்றும்
யாரும் இல்லாமல் தனிக்குடித்தனத்தில் தவித்து, தத்தளித்து போனேன்.. என்னவரும் வீட்டுக்கு ஒரே பிள்ளை..செல்லமாய் வளர்க்கப்பட்டவர் என்பதால் அவரும்,  Sorry.. I dont know anything என்பார்..ஒரு வென்னீர் வைக்கவே தடுமாறிப்போவார்..எங்களுக்கு கலியாணமான
ஒரு மாதத்தில், அது என்னவோ விளங்கவில்லை, சொல்லி வைத்தார்போல மாமனார்–மாமியார் இருவரும் ஒரே சமயத்தில் இயற்கை எய்தினர்…எனக்காகட்டும், என்னவருக்காகட்டும் உடன்
பிறப்புக்கள் என்றும் யாரும் இல்லை..அதனால் தனிக்குடித்தனம் அதுவும் சென்னையில், புது ஊர், புது சூழல்..திணறிப் போனோம்..ஒரு ரசம் வைக்கக் கூட ஊஹூம்..அதனாலேயே வெளியாட்களுடன்
அதிகம் பழகாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தேன்..ஆனால் எதிர் வீட்டு அப்பா–அம்மா, ஆமாம்..அப்படிக் கூப்பிடுவதுதான் எனக்கு பிடிக்கிறது..அவர்களும் அப்படியே தங்களை அழைக்க சொல்லியிருந்தார்கள்..
நல்ல பில்டர் காபி போடுவதிலிருந்து, ஒவ்வொரு சமையலாய் செய்ய கற்றுக் கொடுத்தது,வீட்டு பட்ஜெட் போட்டுக் கொடுத்தது..தேவையான மளிகை சாமான்கள், காய்கறிகள்,
மற்றும் அத்தியாவசிய தேவைகள் என்னவென லிஸ்ட் போட்டு கடை, கடையாய் ஏறி, இறங்கி எங்கே விலை மலிவாகவும், தரமானதாகவும் இருக்கிறதோ அங்கே போய் பார்த்து வாங்குவது,
அனாவசியாமாய் ஊர் சுற்றாமலிருப்பது..என் கணவரை மேலே இலாகா பா£ட்க்ஷைக்கு படிக்க சொன்னது…என்னையும் வீட்டிலிருந்தபடியே மேலே படிக்க சொன்னது, ஒரு நொடியையும் வீணடிக்காமல்
ஏதாவது கை வேலைகள், எம்பிராய்டா£, தையல், மற்றும் கிராஃப்ட் வர்க் கற்றுக் கொள்ள வைத்து அதன் மூலம் பணமீட்ட வைத்தது என்று அவர்களால் நான் ஒரு முழு மனுஷியானேன்..எங்கள்
பிறந்த நாள், திருமண தேதியை நினைவு வைத்துக் கொண்டு நாங்களே எதிர்பாராமல், வீடு தேடி வந்து உளபூர்வமாய் வாழ்த்தி,  மகிழ்வதுடன் அவர்கள் வீட்டிலேயே பிரமாதமான விருந்து
படைப்பது என்று ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து, ஒரு கால் எங்கள் இரு பக்க பெற்றோர்களோ, உறவினர்களோ இருந்தால் கூட இப்படி செய்வார்களா  என்று சொல்ல முடியாது..அடுத்த பிறவினு
ஒண்ணு இருக்குமேயானால் நாங்க உங்களுக்கு மகனாய்/மகளாய் பிறந்து இப்ப பட்ட கடனை அடைக்கணும்…”ஏழேழு ஜன்மங்கள் எடுத்தாலும் ” என்ற பாடல்  நினைவுக்கு வந்து, வந்து போயிற்று..
நாங்களும் அவர்களை பெற்றோராகவே நினைத்து எதுவொன்றையும் செய்வோம்.,.அவர்கள் ஒரு தும்மல் போட்டாலும் டாக்டர் கிட்ட அழைத்து போகட்டுமா என்போம்..பழங்கள், இனிப்புகள்
என்றெல்லாம் அவ்வப்போது வாங்கி வந்து ஓரளவுக்காவது பட்ட கடனை அடைக்க நினைப்போம்..”பட்ட கடன் எத்தனையோ” என்ற பாடல்  நினைவுக்கு வரும்.. இப்படி அன்னியோன்னியமாய் போய்க்கொண்டிருந்த எங்கள் நட்பில் ஒரு, misunderstanding,
-3-
 வந்து எங்களை நிலை குலைய வைத்திடும் என்று எண்ணிப் பார்க்கவில்லை நாங்கள்..என் பள்ளி பருவ தோழி ஒருத்தி மும்பையில் செட்டிலாகி இருந்தவள் தன் கணவுடன் ஸ்டேட்ஸ்
போக வேண்டியிருந்ததாலும், அந்த சமயம் காலேஜில் படிக்கும்  அவள் பெண்ணுக்கு ஒரு சில நாட்கள் விடுமுறை என்பதாலும், தனியே அவளை மும்பையில் விட்டுப் போக பயந்துகொண்டு,
என்னிடம் உதவி கேட்டாள்..அதாவது அவர்கள் 3 வாரங்களில் ஸ்டேட்சிலிருந்து திரும்பி வரும்வரையில் அவர்கள் பெண்ணை நான் சென்னையில் வைத்துக் கொள்ள வேண்டும் எங்கள் பாதுகாப்பில்”
 என்ற போது மறுக்க முடியவில்லை நாங்களும் தனியாய் போரடித்துக் கொண்டிருப்பதால்..அந்த பெண் வீட்டையே அதகளம் பண்ணினாள்..எங்களுக்கு
இந்த அனுபவம் புதிது..ஒருகால் எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தால் அல்லது யாராவது உறவினர் வந்து போய்க்கொண்டிருந்தாலாவது இன்றைய சூழல் விளங்கியிருக்குமோ என்னவோ!அன்று காலையில் எதிர்வீட்டு அப்பா,அப்படித்தானே அவரை அழைக்கிறோம்,
 எதேச்சையாய் எங்கள் வீட்டுக்கு  வந்திருக்கிறார் போலும்..அப்போது பார்த்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பழைய பாடல் காட்சி ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது..ஒரு குறிப்பிட்ட பாடல்
 ஒளி பரப்பாகும் போது அந்த பெண்ணும் கூடவே உரத்த குரலில் பாட, அதை அப்பா தன்னைத்தான் கேலி செய்வதாய் நினைத்துக் கொண்டு விருட்டென திரும்பி விட்டார் தன் வீட்டுக்கு என்பதை  பிறகுதான் உணர்ந்தோம்..நாங்கள் அவருக்கு ஏதோ
உடல்நலக் கோளாறு என்றே நினைத்திருந்தோம்.”அப்பா உடம்புக்கு என்ன?” என்று  கேட்கப் போனபோது அவர்  விருட்டென அவ்விடம்
விட்டகன்றார்.பிறகும் பலமுறைகள் அவரையோ, அம்மாவையோ தொடர்பு கொள்ள செய்த முயற்சிகள் எல்லாம் வீணானது..என் கவலையை  பகிர்ந்து கொண்ட என் கணவர்,”விடு..ஏதோவொரு வெளியில்
சொல்ல முடியாத விஷயமாய் இருக்கலாம்..அது அனேகமாய் அவங்க பையன் குறித்தோ, மருமகள் குறித்தோ கூட இருக்கலாம்..இல்லைனா யாராவது அப்பா–அம்மாவை மனம் நோகறாப்பல பேசியும் இருக்கலாம்.
 வயது வித்தியாசம் கூட பார்க்காம..ஒருகால் நம்ம கிட்ட கோபம் இருந்தாக்கூட, நாளடைவில் மறைஞ்சிடும்..எந்த காயத்துக்கும் காலம்தான் அருமருந்து..நமக்கும் ஒரு காலம்
வரும், பொறுத்திரு மகளேனு தான் பாடத்தோணுது எனக்கு..” என்ற போது கூட நான் வெடித்தேன் , “உங்களுக்கென்ன ஈஸியாய் சொல்லிட்டீங்க..ஆரம்பத்திலிருந்தே நாம தனியாய்,
தன்னம்தனியாய்  இருந்திருந்தா இப்ப இவ்வளவு மனக்கிலேசம் வந்திருக்காதுதான்..அம்மா–அப்பா போல அன்னியோன்னியமாய் பழகிகிட்டு இப்ப , அப்படி நானே எதாச்சும் தப்பே பண்ணியிருந்தால்
கூட சொல்லி திருத்தலாம்ல..எனக்கு மனசே ஆறலைங்க” என்ற நான் பொறுத்திருந்தேன்..1,2,3,4,5,6,7,10,15,20 நாட்கள் வரை எந்த முன்னேற்றமும் இல்லை..எங்களை பார்க்கும் போதெல்லாம்
அவர்கள் முகத்தை மூடிக் கொண்டு போவது சகிக்க முடியாமல், ஒரு நாள் காலை துணிந்து அவர்கள் வீட்டு கதவை தட்ட, பால்காரர்தான் வந்திருக்கிறார் போலும் என்றெண்ணி கதவை திறந்து
தூக்க கலக்கத்துடன் எழுந்து வந்த அப்பா என்னை சற்றும் அந்த வேளையில் எதிர்பார்த்திருக்க மாட்டார் போலும்..அசடு வழிந்தார்..”என்னை மன்னிசிருங்கப்பா நான் அறியாமல் என்ன தப்பு
பண்ணியிருந்தாலும்” என்ற போது அப்பா சொன்னார் “நான்தான் அரைவேக்காட்டு தனமாய் உங்ககிட்ட நடந்துக்கிட்டேன்..நீதான் என்னை மன்னிக்கணும்மா தாராள மனசோட “என்றார்.
“அப்பா..இப்பவும் நாங்க என்ன தப்பு பண்ணினோம்னு சொல்லலை நீங்க..சொன்னாதான் நாங்க திருத்திக்க முடியும்” என்ற போது “விடம்மா, அது ஒரு சில்லி மாட்டர்..நான் தான் எதை,எதையோ எண்ணி
உங்க மனசை நோகடிச்சுட்டேன்” என்றவரை வற்புறுத்தி “சொல்லுங்கப்பா அந்த மாட்டர் எவ்வளவு சின்னதாய் இருந்தாலும்..” என்ற போது அவர் சொன்னார் “சொன்னா நீ£ என்னை கேலி பண்ணலாம்..அன்னைக்கு உன்
பிரண்டோட பெண் டி.வில அந்த பாட்டு காட்சி ஒளிபரப்பாயிடிருக்கிறப்ப அவளும் கூடவே சேர்ந்து பாடினதை என்னைத்தான் கேலி பண்றதா நினைச்சிட்டேன்மா நான்..அப்படி என்ன பாட்டு அதுனு
கேட்கிறியா ? நான் தொந்தியும் தொப்பையுமாய் இருக்கேன்ல, இது எனக்கு எப்பவுமே ஒரு தாழ்வு மனப்பான்மையை கொடுத்துக்கிட்டிருந்தது..அன்னைக்குனு பார்த்து “நீ எந்த கடையில அ¡¢சி
வாங்கறேனு” வந்த பாடல் என்னை மேலும் விரக்தியின் உச்சத்துக்கே கொண்டு போயிருச்சு..ஒரு சின்ன காலேஜ் பெண் எதேச்சையாய் பாடிக்கிட்டிருந்ததை நான் ஏன் தப்பா எடுத்துக்கணும்னு அப்பத் தோணலையேம்மா எனக்கு..அரைவேக்காட்டுத்தனமா நடந்துக்கிட்டேனே..
என்னை மன்னிச்சிரும்மா..எதுக்கோ அடி சறுக்கும்னு ஒரு பழமொழி உண்டே அப்படி எனக்கே..சேச்சே ..என்னை நினைச்சா அவமானமாய் இருக்கு” என்ற அப்பாவை பார்த்து “நீங்க ஏம்பா வேதனைப்
படணும்..நானே உங்க இடத்திலிருந்தால் கூட இப்படித்தான் நினைச்சு வேதனைப் பட்டிருப்பேன்..இப்பத்தான்பா எங்க மனபாரம் வெகுவாய்
குறைஞ்சிருக்கு” என்றேன்.
                                                                                                                      ———-

Series Navigation2022 ஆண்டில் இந்தியா அடுத்து முற்படும் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் தயாரிக்க ரஷ்ய நூதனச் சாதனங்கள் பயன்படுத்தும்நூலக அறையில்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *