மரங்கள்

This entry is part 9 of 18 in the series 29 ஆகஸ்ட் 2021

 

 

 
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
 
இரவு பகல் பாராமல்
நின்று கொண்டிருக்கும்
உங்களுக்குக் கால் வலி
வேரில் தெரியும்தானே 
 
உங்கள்
இலைக் குழந்தைகளின்
எண்ணிக்கையை
எப்போது
உணரப் போகிறீர்கள்
 
மனிதர்களுக்கு
உங்கள்
மௌனமொழி
விளக்கம் என்ன ?
 
எங்களுக்கு
நிழல் தரும் பெருமையை
நினைத்துப் பார்ப்பதுண்டா ? 
 
ஆக்சிஜன் தருவதற்கு
வசூல் ஏதும் செய்யாத
அதிசய  
மருத்துவர்கள் நீங்கள்
 
உங்களுக்குத் தண்ணீர்
தேவைப்படும்
தருணத்தில் கூட
மௌனம் தானா ? 
 
வானத்தில் மன்றாடி
உங்களுக்குக் கோடையிலாவது
ஒரு குடை தரச்சொல்லட்டுமா ?
 
நீங்கள் வெயில் குடித்துச்
பலிக்கவில்லை
மழையில் நனைந்தும்
காய்ச்சல் வரவில்லை
எப்படி ? எப்படி ? 
 
நீங்கள்
வானம் பார்க்கிறீர்களா
அல்லது
தரையைப் பார்க்கிறீர்களா ? 
தெரியவில்லையே …
 
எத்தனையோ 
கிளைக் கரங்கள் உங்களுக்கு …
ஒருமுறையாவது 
என்னோடு
கைக் குலுக்குங்களேன்  !
 
             +++++++
Series Navigationகுடை   சொன்ன   கதை   !!!!!குருட்ஷேத்திரம் 7 (அர்ச்சுனனின் ஆன்மாவாக கிருஷ்ணன் இருந்தான்)
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *