மருத்துவக் கட்டுரை காரணம் தெரியாத காய்ச்சல்

This entry is part 9 of 9 in the series 16 செப்டம்பர் 2018

( Pyrexia of unknown origin )

பொதுவாக காய்ச்சல் என்பது என்னவென்பதை நாம் அறிவோம். உடலில் கிருமி அல்லது அல்லது வைரஸ் தொற்று உண்டானால் காய்ச்சல் உண்டாகும் என்பதும் நமக்குத் தெரியும். காய்ச்சலின்போது உடலின் வெப்பம் உயரும்.அதாவது 38 டிகிரி செண்டிகிரேட் வெப்பம் இருந்தால் அது காய்ச்சல். கிருமித் தொற்றை உடல் எதிர்த்து போராடும்போது உடல் வெப்பம் அதிகமாகிறது.இதையே காய்ச்சல் என்கிறோம்.
ஆகவே காய்ச்சல் உண்டாக உடலில் கிருமித் தொற்று உண்டாகவேண்டும். அது எந்த வகையான தொற்று என்பதைக் கண்டறிந்து அதற்கு ஏற்ப கிசிச்சைத் தந்தால் கிருமித் தொற்று குணமாகி காய்ச்சலும் விட்டுவிடும். எந்த விதமானது தொற்று உள்ளது என்பதைக் கண்டறிய உடல் பரிசோதனை, இரத்தம், சிறுநீர், சளி, மலம் போன்றவற்றைப் பரிசோதனை செய்து கண்டு பிடிக்கலாம். அல்லது எக்ஸ்ரே , அல்ட்ராசவுண்டு பரிசோதனை போன்றவையும் தேவைப்படும். இவை தவிர வேறு சில சிறப்பு பரிசோதனைகளும்கூட சமயத்தில் தேவைப்படலாம்.
சில வேளைகளில் எல்லாவிதமான பரிசோதனைகளும் செய்தபின்பும் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாததால் காய்ச்சல் தொடரும். என்ன காய்ச்சல் என்று தெரியாமல் தரும் சிகிச்சையும் பலன் தராது. காய்ச்சல் குணமாகாது. இவ்வாறு தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அதை ” காரணம் தெரியாத காய்ச்சல் ” ( Pyrexia of Unknown origin ) என்று அழைக்கிறோம்.
காய்ச்சலை உண்டுபண்ணும் காரணத்தைக் கண்டறிய முதலில் உடல் பரிசோதனை செய்தாக வேண்டும். அதன்பின்பு பின்வரும் இதர பரிசோதைகளை, தேவைப்பட்டால் திரும்பத் திரும்ப செய்ய வேண்டும். அதன்வழியாக ஏதேனும் புதிய மாற்றங்கள் உள்ளதா என்பதைக் காணலாம். அந்த பரிசோதனைகள் வருமாறு: இத்தகைய பரிசோதனைகளை அப்படியே ஆங்கிலத்தில் தந்துள்ளேன்.

* Full Blood Count and Blood Film
* ESR & CRP
* Serum Urea and electrolytes
* Liver Biochemistry and Blood Sugar
* Blood Cultue
* Microscopy and culture of urine,sputum and faeces
* HIV testing
* Chest X-ray
* Serum Rheumatoid Factor and Antinuclear Antibody
* Abdominal imaging and Ultrasound, CT or MRI
* Echocardiography
* Biopsy of Liver and Bone Marrow

இத்தகைய பரிசோதனைகள் செய்தும்கூட காய்ச்சலுக்கான காரணம் தெரியாதபோதுதான் அதை காரணம் தெரியாத காய்ச்சல் என்று அழைக்கிறோம்.
இப்படி காரணம் தெரியாதபோது அது என்னவாக இருக்கலாம் என்பதை யூகிக்க வேண்டியுள்ளது. உடலில் பல்வேறு பிரச்னைகளால் காய்ச்சல் உண்டாகலாம்.குறிப்பாக கிருமித் தொற்றால் மட்டுமே காய்ச்சல் உண்டாவதில்லை. வேறு காரணங்களாலும் காய்ச்சல் உண்டாகலாம்.ஆகவே அத்தகைய காரணங்களையும் மனதில் கொண்டு ஆராய வேண்டியுள்ளது. அவை பெரிய பட்டியல் போன்றது. அவற்றை கூடுமானவரை தமிழில் தந்துள்ளேன். தவிர்க்க முடியாவற்றை மட்டும் ஆங்கிலத்தில் தந்துள்ளேன்.

* கிருமித் தொற்று நோய்கள்.( 20 முதல் 40 சதவிகிதம் )
சீழ் கட்டிகள் – Abscess
காசநோய்.- Tuberculosis
இருதய தசை அழற்சி – Endocarditis
Toxoplasmosis
Epstein – Barr Virus, Cytomegalovirus
எச்.ஐ.வி. வைரஸ்
Brucellosis
Lyme Disease
Whipple’s Disease

புற்று நோய்கள் ( 10 முதல் 30 சதவிகிதம் )
Lymphoma
Leukemia
Renal cell carcinoma
Hepatocellular Carcinoma

Vasculitides ( 15 முதல் 20 சதவிகிதம் )
Adult Still’s Disease
Rheumatoid Arthritis
Systemic Lupus Erythematosus
Granulomatosis
Giant cell arteritis
Polymyalgia rheumatica

இதர காரணங்கள் ( 10 முதல் 25 சதவிகிதம் )
Drug fevers
thyrotoxicosis
Inflammatory bowel disease
Sarciodosis
Granulomatous Hepatitis
Factitious fever
Familial Mediterranean fever
ஆதலால் இத்தகைய காரணம் தெரியாத காய்ச்சல் உண்டானால் நோயாளியை மருத்துவமனையில் சேர்த்து தொடர்ந்து பரிசோதனைகள் செய்து அதன் காரணத்தைக் கண்டறிய முயலவேண்டும். இதனால் நோயாளி சிரமத்தை எதிர்நோக்கலாம். காய்ச்சல் உள்ளதென்று கண்மூடித்தனமாக எண்டிபையோட்டிக் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். சில நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டால் எண்டிபையோட்டிக் தந்து பார்ப்பதில் தவறில்லை.

( முடிந்தது )

Series Navigationஅம்ம வாழிப் பத்து—1
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *