மலர்மன்னன் – மறைவு 9.2.2013

This entry is part 25 of 31 in the series 10 பெப்ருவரி 2013

MalarMannan

 

ஜோதிர்லதா கிரிஜா

எழுத்துலகத்து விடிவெள்ளி யொன்று அஸ்தமித்ததை அறிவித்து 9.2.2013 விடிந்தது. மலர்மன்னன் மிகச் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்லர். அவர் மிகப் பெரிய மனிதாபிமானியுங்கூட. தெளிந்த சிந்தனையுள்ளவர் என்பதும் மெத்தப்படித்தவர் என்பதும் அவருடைய திண்ணைக் கட்டுரைகளி லிருந்து.புலனாகும்.  எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ஒரு சமுதாய.அமைப்போடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். ஒரு முறை அவர் எனக்கு எழுதினார் – ’அந்நோய் உல்கம் முழுவதும் பரவி இருப்பதற்கு ஆண்மக்களே காரணம்’ என்று.  .’அந்நோயினால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வரும் பெண்கள் என்னை அப்பா என்று அழைக்கும் போது எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கிறது, தெரியுமா?’  என்று உரிய நியாயத்துடன் தாம் எனக்கு எழுதிய கடிதத்தில் பெருமிதப் பட்டுக்கொண்டார். சீரியசிந்தனையும், சமுதாய உணர்வும். மகாகவி பாரதியார் மீது ஆழ்ந்த பக்தியும். தனிச்சிறப்புக் கொண்ட எழுத்துத் திறனும் வாய்க்கப்பெற்றிருந்த மனிதாபிமானி மலர்மன்னனின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றால் அது மிகையன்று. அவரது மறைவு நெஞ்சில் ஒரு பள்ளம் விழுந்த உணர்வை உண்டாக்கியது

         ஜோதிர்லதா கிரிஜா

Series Navigationமலர்மன்னன்பெருங்கதையில் ஒப்பனை
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

16 Comments

  1. Avatar
    சான்றோன் says:

    மிக மிக வருந்தத்தக்க அதிர்ச்சியான செய்தி…..சமீப காலமாக அவருடன் தொலைபேசி தொடர்பில் இருந்தேன்……

    உன்னதமான மனிதர்…..சிறந்த தேசபக்தர்……அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்…….
    Reply

  2. Avatar
    sathyanandhan says:

    இன்று காலை ஹிந்து நாளிதழில் அவரது இளமைப் பருவப் படத்துடன் மறைவுச் செய்தி வந்ததும் மிகவும் வருத்தமாக இருந்தது. வணிக நோக்கில்லாத ஒருவர் தமிழ்ச் சூழலில் நீண்ட காலம் முதுமை வரை இயங்கி வந்தால் அதற்கு ஒரே காரணம் மட்டுமே இருக்க முடியும். தமிழ்ச் சமுதாயம் மாறும் மாறவேண்டும் என்னும் அசைக்கமுடியாத ஆவல். அவரது எழுத்துக்களில் சமுதாய நோக்கு அப்பழுக்கற்றுக் காணப்பட்டது. அவரது மறைவு அவரது குடும்பத்துக்கு மட்டுமானதல்ல. சத்யானந்தன்

  3. Avatar
    Sundararajan says:

    இவரின் எழுத்துகள் பல வெளியில் தெரியாத உண்மைகளை உணர்தியுள்ளது. இனி மலர் மன்னனின் சிந்தனைகளை படிக்க முடியாது ன்று நினைக்கயில் நெஞ்சு கனக்கிறது.

  4. Avatar
    பவள சங்கரி says:

    சக்தி உபாசகர், சிறந்த மனிதாபிமானி, தன்னலமற்ற ஐயா சேவகர், பல்துறை வித்தகர் என பன்முகங்கள் கொண்ட ஐயா உயர்திரு மலர் மன்னன் அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாதது. ஒரு சிலரின் எழுத்துக்களின் மூலமாகவே நாம் மிகவும் நெருங்கிவிட்ட உணர்வை ஏற்படுத்திவிடும். ஐயாவின் பின்னூட்டங்கள் அந்த வகையைச் சார்ந்தவை. அறிவுப்பூர்வமான விவாதங்களை, அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் தன்மையுடன், முன் வைப்பது அனைவரும் பின்பற்றக்கூடியதாகும். தாம் அறிந்த செய்திகளை, தனக்கு நியாயம் என்று படுவதை துணிச்சலுடன் வெளிப்படையாக, வெளியிடுவதில் வல்லவர் இந்த பாரதியின் அபிமானி. ஐயாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல எம் இறையை மனமாரப் பிரார்த்திக்கிறேன்.

    அன்புடன்
    பவள சங்கரி

  5. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அற்றைத் திங்கள் அன்றைய திண்ணையில் காந்திஜிக்கு
    இறுதிப் பின்னூட்டம் தந்தார், எழுதி வந்தார்.
    இற்றைத் திங்கள் இவ்வாரத் திண்ணையில் மன்னனுக்கு
    இரங்கல் மொழிகள், மலரும் இல்லையே.

    சி. ஜெயபாரதன்

  6. Avatar
    sabeer says:

    அவனிடமிருந்தே வந்தோம்; அவனிடமே மீளுவோம்!

    ஆழ்ந்த இரங்கல்! அவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பிரிவுத் துயரை லேசாக்க இறைவன் அருள்வானாக.

  7. Avatar
    kargil_jay says:

    எனக்கு குருவைப் போன்றவர் .. ஆச்சர்யமூட்டும் மேலாண்மையும் அன்பும் கொண்டவர் … எழுதிய முறையில், கொள்கையில் வாழ்ந்த ஆச்சார்யர்…. பாரதம் முழுதும் பயணம் செய்து பல பிரச்னைகளுக்காக ஏழைகள், பழங்குடி மக்களுக்காக, பாதிக்கப் பட்டவர்களுக்காக குரல் கொடுத்தவர், இஸ்லாமிய வெறியர்களின் ஆசிட் வீச்சால் இவர் கால் வெந்த பொது, சற்றும் துவளாமல் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் நலப்பணி செய்ய ஆரம்பித்தவர்.. காமராஜர், அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர். எயிட்ஸ் நோயாளிகளுக்காகவு சேவை செய்தவர்.. இவர் ஊக்குவித்தே நான் முதன் முதலில் எழுதினேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

  8. Avatar
    ஜெயஸ்ரீ says:

    அன்பின் கிரிஜாம்மா,

    இந்த மாதம் “அமுத சுரபியில்” “இப்படியும் ஒரு அப்பா” என்ற தலைப்பில் தங்களது கட்டுரையைப் படித்தேன். பதில் எழுத வேண்டும் என்று எண்ணிய வேளையில். அதற்கு முன் பக்கத்தில் திரு.மலர்மன்னன் அவர்களின் சிறுகதையைப் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

    ஒரு எழுத்தாளர் தனது இறுதி மூச்சு வரைக்கும் எழுத்தாளரார் என்ற அதே அங்கீகாரத்துடன் இருப்பது அனைவருக்கும் கைவல்யம் ஆகாது.

    மனிதர் மலர்மன்னன் அவர்கள் நட்சத்திரமாக உயிர் பெற்ற செய்தி அறிந்ததும் மௌனமாய் வான் நோக்கிய பலரில் நானும் ஒருத்தி.

    ஒரு சீரிய சிந்தனையாளர்…தனது இறுதி நேரம் வரையிலும் தனது சிந்தனைத் துளிகளை அச்சேற்றி அதில் கூட பூடகமாக பல விஷயங்களைப் புரிந்து கொள்ளுமாறு எழுதி வைத்துப் போனது போலிருந்தது.

    ஆத்மீகமாக அவர் எழுதிய “தீர்வு”என்ற சிறுகதை…இந்த மாதம் பிப்ரவரி 2012 – அமுத சுரபி யில் வெளி வந்திருக்கிறது. அதைப் படித்ததும் தான் இறுதியாக உறுதியாக அனைவர்க்கும் எதை “கீதையாக”ச் சொல்ல வேண்டுமோ..அதை அப்படியே எழுதி இருப்பது போலத் தெரிந்தது.

    ஒவ்வொரு வரியிலும்….அவர் நமக்கு சொல்வது போலவே வாழ்வின் தத்துவத்தை எழுதி வைத்தார் கதையில்.
    ////”அப்போ நா வரட்டா..” என்றபடி எழுந்து கொண்டேன்…../////”இந்த வரி இப்போது ஒரு உண்மையைப் பேசுகிறது.
    “எனக்கு மறுபடியும் சிரிப்பு வந்தது..” என்று சிரித்தபடியே கதையில் வாசகர் அனைவரிடமிருந்தும் விடை பெற்றது போலிருந்தது.

    சிலருக்குத் தான் வாய்க்கும் இது போன்ற சந்தர்ப்பம். அது அவருக்குக் கிடைத்திருக்கிறது ஒரு எழுத்தாளராக இருந்ததால் மட்டுமே கிடைத்த வரப்ரசாதம். அவரது இறுதியான “தீர்வு” இது தான் என்று சொல்வது போலிருந்தது கதை.

    அன்புடன்

    ஜெயஸ்ரீ ஷங்கர் .

  9. Avatar
    R Venkatachalam says:

    அவர் என் மீது மிகவும் அக்கரை காட்டினார். ஆனால் நான் என் சோம்பேரித்தனத்தினால் அவரைச் சந்திக்காமலேயே இருந்து விட்ட்டேன். பெங்களூரிலிருந்து சென்னை சென்று சந்திக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் என்ன பயன்? அவர் எழுதி வெளி வந்த புத்தகத்தை வாங்கிப்படித்தேன். அந்த வேளையில் அவர் பெங்க்ளூரில் இருந்திருக்கிறார். எனக்கு ஒரு மெயிலும் அனுப்பி உள்ளார் நான் எப்படியோ அந்த மெயிலைப்பார்க்காமல் இருந்து விட்டேன். டஜன் கணக்கில் அழையா மெயில் அனுப்பவர்களால் எனக்கு ஏற்ப்ட்ட இழப்பு என்னை வருத்துகிறது.

  10. Avatar
    Sivakumar N, New Delhi says:

    ஐயா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்…

  11. Avatar
    புனைப்பெயரில் says:

    அப்படியே.. “அய்யா ஜகனாநாதன் மறைந்தார் … ” அவருக்கும் அஞ்சலி செலுத்துங்கள்… இணையமானாலும் கடைசியில் கொஞ்சம் தெரிந்தவராக இருந்தால் தான் அஞ்சலியா…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *