மாலு : சுப்ரபாரதிமணியனின் நாவல் – சமகால வாழ்வே சமகால இலக்கியம்

This entry is part 15 of 29 in the series 23 ஜூன் 2013

கலைச்செல்வி

‘ஒரு நாவல் உலகை மாற்றி விடும் என்ற இறுமாப்பு சார்த்தர் காலத்தில் இருந்தது போல இன்று எமக்கில்லை. அரசியல்ரீதியான தமது கையலாகாத்தனத்தைப் பதிவு செய்ய மட்டும் தான் இன்றைய எழுத்தாளர்களால் முடிகிறது. சார்த்தர், காமு, ஸ்ரைன் பெக் போன்றோரை படிக்கும் போது அந்த மகத்தான அர்ப்பணிப்பு மிக்க ஆளுமைகள் யாவரும் மனிதகுலத்தின் எதிர்காலத்திலும் எழுத்தின் வலிமையிலும் எல்லையில்லாத நம்பிக்கை கொண்டிருந்தமையை அறிய இயலும். அந்த எழுத்துகள் யாவும் வழியை துலக்குவனவாக அமைந்தன. இன்றோ சமகால எழுத்தென்பது ஏமாற்றத்தின் இலக்கியமாகவுள்ளது.’ –  ஷ்ஷோன் மாறி குஸ்தாவ்லெ கிளெசியோ (2008ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல்பரிசு பெற்றவர்.
மாலு – மரத்தில் போடப்படும் கோடு என்ற விளக்கத்துடன் நாவல் ஆரம்பிக்கிறது.
நாவல் முழுக்க ஏகப்பட்ட தகவல்கள். புலம் பெயர்ந்த தமிழர்களின் பிழைப்பு நிலையை உணர்த்தியவாறே நாவல் பயணிக்கிறது. விசா காலம் கடந்ததாலோ கஞ்சா விற்றதாலோ பொய் வழக்கோ மெய் வழக்கோ வாழ்வை தொலைக்க போகும் இளைஞனின் அப்பா அப்பாதுரையின் புலம்பல்கள் ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்-ங்கிற முதல் மரியாதை வசனம் போல் கலெக்டரிடம் கதறிவிட வேண்டுமென்கிற மனவேகம், ஆற்றாமைக்கு யாரும் கிடைக்காத இயலாமை, முன்னெழவியலாத அரசியல் என சாமான்;யனாக கடக்கமுடியாமல் திணறி கடைசியில் டீக்கும், பன்னுக்கும் பலியாகி போகிற அப்பாவியின் சோகம் அப்படியே வார்த்தைகளில் வடிக்கப்பட்டிருக்கிறது.
குணசேகரன் கதாபாத்திரம் மூலமாக சொல்லப்படும்;;; மலேசியதமிழர் வரலாறு தகவல் ஆர்வலர்களுக்கு கரும்பு. கதை மட்டுமே விரும்புவோர்க்கு கொஞ்சம் அலுப்பூட்டினாலும் தகவல்களை தாண்டி செல்ல முடியாத அளவுக்கு கதையோடு முடிச்சிட்டு கொண்டு செல்லும் விதம் அருமை.
விக்னேஷ் – அப்போதைக்கு (?) தப்பி விட்ட ‘அக்யூஸ்ட்’. ஆனால் மனசின் பயங்களுக்கு அவனால் தப்பிக்க முடியவில்லை. வயதின் குறுக்கிடல்களுக்கும் சேர்த்து தான். இந்த தருணத்தில் தான்; உயிரின் மதிப்பு பட்டவர்த்தனமாக தெரிகிறது – நமக்கும். நமது வாழ்வியல் சூழ்நிலைகள் எவ்வளவு பத்திரமானவை என உணர வைக்கிறது. ‘எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ என்ற மனநிலையை விவரித்திருந்த விதத்தில் கதாசிரியரின் திறமை மேலோங்கியிருந்தது.
உள்மனதில் கள்ளமே இல்லாம சுற்றி சுற்றி; தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை சட்டென்று இறுக்கக்கட்டி எழுத்துக்குள்N;ள கொண்டு வந்தது கதாசிரியரின் சாமார்த்தியம். ‘வாய்ப்பாடு தெரிந்தால் தான் கலெக்டரை உள்ள விடுவார்கள்’; என்பது போன்ற கதையின் வரிகள் சட்டென மனசில் ஒட்டிக்கொண்டு திரும்ப திரும்ப படிக்க வைக்கிறது. அழகான வார்த்தைகள், துண்டு துண்டான வர்ணிப்புகள் வாசிப்பை எளிதாக்குகிறது. உம் : காவல் துறை வாகனம் வந்துட்டு போனதை இந்தோனேஷியன் எப்படி சைகையில சொல்லுவான்? சிறு சேமிப்பு ‘ஐகான்’னை சின்ன பூச்சியாக்கியது, குச்சிகளை சேகரிச்சு சதைய ஒட்ட வைச்சு செஞ்ச உடம்பு என்பது போன்ற சுவாரஸ்யங்கள் நாவல் பூராவும் கொட்டிக்கிடக்கிறது.
நிச்சயமில்லாத வாழ்க்கையின் புரிதலில் பற்றற்று வாழும் தமிழர்களும் நிதர்சன வாழ்க்கையின் உணர்தலில் எதை வேண்டுமானாலும் பிடித்துக் கொண்டு எழும் சீனனும் எப்படி வேறுபடுகிறார்கள்..? பார்வையின் கோணங்கள் வாழ்க்கையின் போக்கை மாற்றுவது, அது காலங்காலத்துக்கும் தொடர்வது என்பது போன்ற இலக்கிய பதிவுகள் மாலு போன்ற சில நாவல்களில் தான் சாத்தியம்.
புலம் பெயர்ந்த நிலையில் தமிழனுக்கு தமிழன் உதவிக் கொள்வது என்பது சாதாரண நிகழ்வு என்றாலும் கடும்பார்வை பார்த்து விக்னேஷிடமிருந்து பேதப்பட்டு நிற்கும் நீலாவின் அண்ணன் விக்னேஷின் தங்கலுக்கு மௌன அங்கீகாரம் தருவது தமிழன் என்கின்ற உணர்வை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்..? தமிழ்ப்பிள்ளைகள் இல்லாமல் தமிழ்ப்பள்ளிகள் மூடப்படும் சூழல் சில இடங்களில் தமிழினம் தமிழ் பேசாத இனமாகும் சூழல் விரிந்து வருகிறது – வார்த்தைகளின் அர்த்தத்தை மீறி அதிலிருக்கும் தமிழ் மனதை என்னவோ செய்கிறது. ‘கிணத்து மீனுன்னா வாங்குவாரு.. நொய்யல் மீனுன்னா இந்த தொந்தரவே வேணாம்னு நவுந்துடுவாரு.. குவைத்துக்கு வேலைக்கு போன கந்தசாமி திரும்பி வந்து பனியன் கம்பனியில வேலை செய்வது – கதாசிரியர் யாரென்று பார்க்காமலேயே சொல்லி விடலாம்.
கதிரேசனோட கதியை அவன் சொல்லும் போது கூட அவனுக்கு மட்டுமே நடந்திருக்கிற அசம்பாவிதமாக நினைத்துக் கொண்டு ‘பயணப்படற நேரத்துல பார்க்கிற வேண்டாத சகுனமா’ (கதை முழுவதுமே இப்படிப்பட்ட உதாரணங்கள் நிரம்பி வழிகிறது.) மனதிலிருந்து தடடிவிட்டுக் கொண்டு கிளம்புவது அவநம்பிக்கையோட விளிம்பில் பிறக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை தானே.. அதாவது சொந்த பந்தங்களின் இழவுக்கு சென்று விட்டு அதன் கோரத்தை உறவுசனங்கள் மூலமாக நேரில் உணர்ந்து; மனுசன் உடம்பாகி போனதை சுடுகாட்டுல் தெரிந்துக் கொண்டு  தலைக்கு ஒரு முழுக்கு போட்டவுடனேயே ‘பசிக்குது.. சோத்த போடு’ என்று பொண்டாட்டியை ஏவி தட்டுக்கு முன்னாடி உட்காரும் நம்பிக்கைத்தனம்… சொல்லப்பட்ட விதம் அழகு.
மனசை காண்பிக்கிற சில சொற்கள் ‘முகம் கறுத்து இருட்டாகி வேறொருத்தர் முகமாகி விடுகிறது, உட்கார்றதுக்கு அறை மூலைகளை தேடுனான்  – மனசோட ஒடுக்கத்தை சொல்லும் இயல்பான வார்த்தைகள். அலங்கரிப்புகள் இல்லாமலேயே அலங்காரமாகுது அர்த்தங்கள். ஆசாமிக்கு பாக்காத நதிமூலம் சாமிங்களுக்கு பார்க்கப்படுகிறது. எல்லாரும் வெளிநாடு போயி காசு சம்பாதிக்கிற ஆசை ஏர்போர்டை ரயில்வே ஸ்டேசனா மாத்திடுச்சு – வார்த்தைகளில்; மனம் தொத்திக் கொள்வதால் நாலைந்து முறை படிக்க வேண்டியதாக இருக்கும்.
கலெக்டர் ஆபிசுல செய்தி தாளை அப்பாசாமி படிக்கும் போது மகனை பற்றிய நினைவுகள், நினைத்த செய்தி வந்து விடாதா.? என்ற ஆதங்கம், அந்த எண்ணம்; சட்டென்று உண்டாக்கும் சந்தோஷம்,  கதாபாத்திரத்தின் நடவடிக்கைகள் போன்ற விவேரணைகளையே வர்ணனையாக்கி கதாபாத்திரங்கள் அறிவிக்கப்படும் விதம் அழகு. மு..சண்முகசிவாவோட தன்முனைப்பு பேச்சாளனை பற்றிய எழுத்துகளை தேர்ந்தெடுத்து கொடுத்த பெட்டிச் செய்தி மனுதனின் இயலாமையின் வெளிப்பாடாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரப்பர் மரங்களுக்குள் புகுந்துக்கொண்டு கதையோடு ஒன்றி போய் பயணம் செய்தவாறு கடைசி அத்தியாயம் வரை வந்தாகி விட்டது. பார்லிமெண்டில் இறைச்சல் இல்லாம தனிமனித வாழ்வுரிமை காப்பாற்றப்படுகிறது. திருச்செல்வம் தூக்கிலிருந்து தப்பி விட்டான். அப்பாதுரை கண் தானத்துக்கு பெயர் கொடுத்து விடுகிறார். விக்னேஷ{க்கு கனவுகள் நின்று போய் பாரமாக இருந்த உடம்பு தக்கையாக மாறி விடுகிறது. நீலாவை கூட்டிக்கிட்டு தேனிலவுக்கு நிலாவுக்கு போனான். செகடந்;;தாளிக்கு வந்துவிட்ட திருச்செல்வத்திடம் எலக்ட்ரானிக் பொருள்கள் எதிர்பார்க்கப்படவில்லை. குணசேகரனுக்கு சொந்த ஊரே சொர்க்கமாக தெரிகிறது. இப்படிப்பட்ட எதிர்பாராத நிகழ்வுகள் ஏதுமின்றி கோடு போட்ட பாதையில் – போக்கில் பயணிக்காமல்; இயற்கையின் போக்கை எந்த சமரசமுமின்றி எதார்த்தமாக  சொல்லியிருப்பது இயல்பு.
இந்த நாவலின் பயணம் கூட ஒரு விளிம்பு நிலை பயணம் தான். கொஞ்சம் தப்பியிருந்தாலும் பயணக்கட்டுரையாக மாறியிருக்கும் அபாயப்பயணம். ஆனால் கதையின் ஆழம் கதையின் போக்கை கூர்ந்து கவனிக்க வைக்கிறது. தவிர, மனசோட ஆழ்நிலையிலைக்கு உண்மைகளோட தரிசனத்தை தருகிறது. கதை செறிவானது. ஆழமானது. சின்ன சின்ன வார்த்தைகள் வாசிப்பை அலுப்பாக்கவில்லை. ரப்பர் தோட்ட வர்ணனைகள் விஸா இல்லாமல் மலேசியாவுக்கு அழைத்துச் சென்றது. டூரிஸ்ட் விசாவா இருந்தாலும் காலாவதியாகாத விசா.
ஆங்காங்கே அங்கீகாரம் இன்றி முகமழிந்து நிற்கும் புலம் பெயர்ந்த தமிழர்களைப்; பற்றிய ஒட்டு மொத்த இலக்கிய பதிவு நேரும் போது இந்த நாவல் தவிர்க்க முடியாததாகிறது.  உடனுக்குடன் பகிர்ந்துக் கொள்ளும் நோக்கில் சொல்லப்படும் தகவல்கள் கதையை இரண்டொரு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்தாலும் கதையின் ஆழமும், கதை சொல்லும் விதமும் கதைக்குள் மீண்டும் இழுத்துக் கொள்கிறது.
ஆக மொத்தத்தில்; மாலு என்பது ரப்பர் மரத்தில் போடப்படும் கோடு என கற்பிக்கப்பட்டாலும் நாவல் மாலு மனதில் போடப்பட்ட கோடாக நின்று விடுகிறது. திருச்செல்வம் என்ற கதாபாத்திரம் நாவலுக்குள் எதிர்ப்படாமலேயே சிறைப்பட்ட மனிதனா(மா)க கோட்டோவியமாக மனதில் பதிந்து தங்கி விடுகிறது.
ஷ்ஷொன் மாறி குஸ்தாவ்லெ கிளெசியோ-வின் ஆரம்பக் குறிப்பு ஞாபகம் வருது. சுமகால எழுத்தென்பது சமகால வாழ்க்கை பற்றியது என்பதை சுப்ரபாரதிமணியனின் ‘சாய்த்திரை’ முதற்கொண்டு சமீபத்திய ‘நீர்த்துளி’ நாவல் வரைக்கும் அடையாளம் காட்டுபவை. இந்த ‘மாலு’விலும் தான்.
விமர்சனம் : கலைச்செல்வி, திருச்சி.

Series Navigationலிங்கூ-வில் இயங்கும் காலமும் வெளியும் – கவிஞர் என்.லிங்குசாமி கவிதைகளை முன்வைத்துப.மதியழகன் கவிதைகள்
author

கலைச்செல்வி

Similar Posts

Comments

  1. Avatar
    karthik says:

    சங்க இலக்கியங்களின் தொகுப்புகள், சிறுகதைகள், கவிதைகள் ,இலக்கிய நூல்கள், கட்டுரைகள், தமிழ் மொழி சார்ந்த தகவல்கள் – ஆகியவை அனைத்தும் ஒரே தமிழ் இணையத்தில் http://www.valaitamil.com/literature

Leave a Reply to karthik Cancel reply

Your email address will not be published. Required fields are marked *