மிகுதி

This entry is part 5 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

தன் எண்ணங்களில்
பிழைத்திருக்கும்
வார்த்தைகளை
வடிவமைக்கும்
நேரங்களில்
நிறைவு பெறுகிறது
என் மிகுதியான
ஆசைகள் .

அதன்
தொடர்ச்சியில்
எதனினும்
விலகிடாத
ஒன்றிணைப்பு
காலங்களினால்
தீர்மானிப்பதில்லை
என் அன்பின்
மிகுதியாலே
அறியப்படுகிறது .

இன்னுமும்
எஞ்சி இருக்கின்ற
காரணங்களை
கரைந்து விட கூடிய
மித மிஞ்சிய
நினைவாகும்
காத்திருப்பை
அதனதன்
காலம்
மிகுதியாக
ரசித்து கொண்டிருக்கிறது .

இதன் விளைவாக
மாற்றியமைத்த
என் இறந்த கால
நிமிடங்கள்
நிறைவு தன்மையற்றவையாக
மிகுதியாகிறது.

இறுதியில்
இயலாமை கொண்டு
எடுத்தாளப்பட்ட
நிர்பந்தங்களை
காலத்தை பழிக்க
செய்யும்
மிகுதியான
வாய்ப்பு
வழங்கியிருக்கிறது .

-வளத்தூர் தி.ராஜேஷ் .

Series Navigationநான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சியம் – வாசிப்பனுபவம்குரூரம்
author

வளத்தூர் தி .ராஜேஷ்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *