முன்பதிவில்லா தொடா் பயணம்

author
0 minutes, 14 seconds Read
This entry is part 5 of 19 in the series 15 ஏப்ரல் 2018

 

முனைவா் சி. இரகு

 

மனிதனே

உனக்கு

முகவரி

தேடுகின்றாயோ?

 

அப்படியானால்

இரவில்

தொடா்வண்டியில்

நெடுந்தூர

பயணத்தை………

 

முன்பதிவில்லா

பதிவுச்சீட்டில்

பயணத்தை

பயணித்துப்பார்.

 

அளவுகடந்த

பொறுமை

நிதானம்

பிறக்கும்.

புதிய மனவலிமை

உதயமாகும்……..

 

ஆணவத்தோடு

அலைகின்றாயோ

அத்துணையும்

ஓரு நொடியில்

தொலைந்துபோகும்.

 

சாதரண

மனிதன்

சாமானிய

மனிதனாய்

மகத்துவம்

அடைவாய்.

 

இவ்வுலகில்

இமயலாய

பதவிகளில்

மனம் சென்றாலும்……..

 

அதிகாரத்தில்

அகிலத்தை

ஆண்டாலும்……..

 

தலைமேல்

திமிரு

தலையெடுக்கும்

தருணங்களிலும்……

 

 

 

உனக்குள்

முகவரியைத்

தெரிந்துகொள்ள

இருமூன்று திங்களுக்கு

ஓா் முறை

தொடா்வண்டியில்….

முன்பதில்லா

இரவுபயணம்

பயணித்துப்பார்…………

 

உன்னையே

உனக்குள்

அடையாளம்

கண்டுகொள்வாய்.

 

 

கைநாட்டாய்

சுற்றித்திரிகின்ற

அறிவாளியும்……..

 

பட்டம் பெற்றவன்

முட்டாளாய்…….

மாற்றம்

காண்கின்ற

ஓா் இடம்…….

 

உலகத்தை

எதிர்நோக்குகின்ற

எதிர்காலச் சின்னஞ்சிறு

தலைமுறைகளும்…………

 

இவ்வுலக

இன்ப துன்ப

பயணங்களை

நிறைவுசெய்கின்ற

மூதாதையா்களும்….

 

மன்மதகலைகளில்

கற்றுத்தோ்ந்தவா்கள்

அம்புகளை

இளைஞா்கள் மீது

பொழிகின்ற..

காதல் கூட்டங்களும்……….

 

வறுமையில்

வாடாமல்லி

நிறத்தோடு

போராடும்

இளையோர்

கூட்டம்…….

மற்றொருபுறம்………

 

பொதுப்பாலினத்தவரோடு

மூன்றாம் பாலினத்தினவர்

யாசித்தல்

சிந்தனையைத்

தூண்டும்….

 

எல்லாவிதமான

மனிதா்களின்

சங்கமம்

இரவுநேர

இரயில்பயணம்………..

கதம்பமாலையாகும்.

 

தொடா்வண்டி

தொடா்ந்து செல்லும்

நெடுந்தொலைவுக்கு

ஏற்றார்போலவே

வாழ்க்கை பயணமும்………..

 

அவரவா்

நிறுத்தங்களில்

அவரவரே

இறங்கிக்கொள்வதற்குத்

தயராகவேண்டும்.

 

 

இருக்கையில்

இருந்தப்படியே

சற்றுத்தொலைவில்

படிக்கட்டை

கடந்துசெல்லுகின்ற

அவ்வேளையில்……….

 

எதையெல்லாம்

செய்யக்கூடாதோ

அதையெல்லாம்

செய்துகொண்டே……

செல்லுகின்றோம்….

 

தன்கால்கள்

மற்றொருவரின்

உடலின்மேல்

உதைத்துவிட்டும்

வருடிவிட்டும்

தொட்டுவிட்டும்

விளையாடிவிட்டும்

நகா்ந்து செல்வதைக்

காண்கையில்…………

 

மனிதநேயம்

தொலைத்து

காட்டுமிராட்டிக்

கூட்டத்தில்

பிறந்த

மனித குரங்குகளாகவே

மாற்றம்கொள்கிறோம்………

 

முற்றிலும்

மனிதம்

பார்க்கத்தவறியவா்

பிஞ்சுள்ளத்தில்

நஞ்சுகலப்பா்……….

 

சட்டென்ற

கோபத்தில்

தகாதவார்த்தைகள்

உள்ளத்தை

வதம்செய்கின்ற

அரங்கேற்றம்

அந்நொடியில்

நிகழ்த்துக்கலையாகும்……….

 

ஓா் அடிக்குள்

தன்னையே

அடக்கிக்கொள்ளத்

தெரியாதவன்………

 

உலகத்தை

அடக்கி

ஆள்வதற்குத்

தகுதியானவனோ?

 

உள்ளம்

வினவிய வினாவிற்கு

பதிலுரைக்காத

கோமாளியாய்

மாறிபோனனே……….

மனிதன்.

 

படித்தவன்

படிக்காதவன்

உயா்ந்தவன்

தாழ்ந்தவன்

ஆண்டான்

அடிமை

அனைவரும் சமம்

முன்பதிவில்லா

தொடா் பயணத்தில்…

 

முந்திச்செல்பவருக்கே

முன்னுரிமை

இருக்கைக்கு….

 

இல்லையென்றால்

பாதசாரிகள்

செல்லுமிடம்

முண்டாசு கட்டிய

துண்டுகள்………

படுக்கையறையாய்………

பாய்விரிக்கப்படும்.

 

இவ்விடத்தில்

எடைபொருள்கள்

மட்டுமே…..

 

அவ்விடத்தில்

எடைபொருளாய்

மனிதன்.

 

அறிவிப்பு

பலகையில்

புகைப்பிடிக்காதீா்கள்.

எளிதில் தீப்பற்றக்கூடிய

பொருள்களை

எடுத்துச்செல்லாதீா்கள்……..

 

அப்பலகையின்

அருகிலேயே

மேற்கண்ட

ஒவ்வொன்றையும்

செய்துகொண்ட

வீண் விவாதம்

செய்கின்ற

மூடா்களின்

வீம்புக்காரக்கூட்டம்….…..

 

வெளியில்

அந்தமதம் இந்தமதம்

மதச்சண்டைகள்

போடுவா்களெல்லாம்………..

 

முன்பதிவில்லாத

ஒருவார

தொடா் பயணம்

தொடருங்கள்………..

 

வாரத்தின்

இறுதிநாட்களில்

இறங்குகையில்

மனிதனாகவே

மாறிபோவீா்கள்………..

 

உள்ளே

தொலைத்து

விடுவார்கள்

உங்களின்

போதனையையும்…

ஆச்சாரங்களையும்.

 

 

அந்தச்சாதி

இந்தச்சாதி

சாதியச் சண்டைகள்

இல்லாத

ஓா் குடும்ப

பயணமே

நீண்ட

தொடா்பயணம்………

 

மனிதனின்

வாழ்க்கையும்

அவரவா்

நிறுத்தங்களில்

இறங்குவதுபோலவே……..

 

மனிதனோடு

மனிதனாய்

பயணிக்கின்ற

நெடுந்தூர பயணம்.

——————————————–

Series Navigationபின்தொடரும் சுவடுகள்இந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *