மொழி வெறி

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

மனிதனை பிடித்து ஆட்டும் வெறிகள் பல.மத வெறி,இன வெறி,சாதி வெறி,மொழி வெறி என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.

மனிதன் என்றால் ஏதாவது ஒரு வெறி இருந்தே ஆக வேண்டும் என்றால் இதில் குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் மொழி வெறியை எடுத்து கொள்ள பரிந்துரைக்கலாம்.குறைவான பாதிப்புகளை ஏற்படுத்தும் வெறி என்றாலும் அதனிடம் இருந்தும் மனிதன் விடுபட்டால் மனிதகுலத்திற்கு நல்லது தான்.

அதன் பாதிப்புகள் அதிகம் அலசப்படாத புனிதபசுக்களில் மொழி வெறி முக்கியமானது.சாதி வெறி,மதவெறியை எதிர்ப்பவர்கள் மொழிவெறியோடு இருப்பதை விட பெரிய முரண் கிடையாது.இவை அனைத்தும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை

தாய் மொழி தான் நல்லது என்பதற்கும் தாய்மதம் தான் நல்லது/தந்தை தொழில் என்ற குல தொழில் தான் நல்லது என்ற வெறிக்கும்வித்தியாசம் கிடையாது.தந்தை தொழிலை கட்டாயம் கற்க வேண்டும் என்பதற்கும் தாய் மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என்பதற்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா.

இந்தியாவில் மட்டும் சில ஆயிரம் மொழிகள்
அதில் பெரும்பான்மை மொழிகள் வெறும்பேச்சு மொழிகள் தான் எழுத்துக்கள் கிடையாது

எழுத்து இருக்கும் மொழிகளும் வேறு மொழியின் லிபியை கடன்வாங்கியவை தான்
அதிகம் பேசப்படும் மொழிகள் பல மொழிகளை அழித்து,உள்வாங்கியதால் தான் அதிக மக்களால் பேசப்படுகின்றன

ரோமன் எழுத்துக்களை கொண்டு தமிழை சொல்லி தரலாம் என்று பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னதற்கு வந்த எதிர்வினைகளில் தமிழை கட்டாயமாக்கினால் தமிழ வளரும் என்ற குரல் அதிகமாக ஒலித்தது. தந்தையின்.தொழில்,சாதி,மதம் போன்றவற்றை கட்டாயம் ஆக்குவதை எதிர்த்தவர்கள் பிறப்பின் அடிப்படையில் இல்லாமல் தான் விரும்பும் தொழில்,துணை,கடவுளை தேர்ந்தெடுக்கும் உரிமை தனிமனிதனுக்கு உண்டு என்ற எண்ணம் கொண்ட பலர் இந்த கூற்றை முன்வைத்ததை விட வேதனையான நிகழ்வு வேறு இருக்க முடியாது

ஒருவர் தமிழை எப்படி படிக்க வேண்டும்,எழுத வேண்டும்,கற்பிக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அதன் படி நடந்து கொள்வதை யாரும் தடுக்க முடியாது.அது அவரவர் விருப்பம்.

ஆனால் அனைவரும் தமிழ் எழுத்துக்களை விட்டு விட்டு ஆங்கில எழுத்துக்களை வைத்து தமிழ் படித்தால் என்ன என்ற கேள்வி சரியானது தானா.இப்படி ஒரு கூட்டம் படிக்கட்டும்.அப்படி ஒரு கூட்டம் உருவாகட்டும்,குறிப்பாக வெளிநாட்டில்,வெளி மாநிலங்களில் வாழும்,தமிழ் படிக்க வசதியில்லாத அல்லது வாய்ப்பில்லாதவர்கள்.

எழுத்துருவில் நாடு முழுவதற்கும் ஒரே எழுத்துரு வேண்டும் என்பதில் நேரதிர் துருவங்களான காந்தியும் சாவர்க்கரும் ஒரே கருத்தை கொண்டிருந்தார்கள்.அனைவரும் ஒரே கடவுளுக்கு,ஒரே மதத்திற்கு தாவி விட்டால் பல பிரட்சினைகள் ஒழியும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் ஒரே மதத்திற்கு மாற வேண்டும் என்று கருத்துரைப்பதர்க்கும் ,அனைவரும் ஒரே எழுத்துருவை பயன்படுத்த வேண்டும் என்பதற்கும் வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

எல்லா மாற்றங்களும் ஏற்க தக்கவையே.தனி நபர் விரும்பும் மாற்றங்களை எந்த நாகரீக சமூகமும் தடுக்காது.பிறப்பை வைத்து வலுக்கட்டாயமாக மதத்தை.மொழியை திணிக்காது. .மதமாற்றமோ,இடமாற்றமோ,மொழிமாற்றமோ தனி நபரின் விருப்பம்.தனி நபரை கவர பிரச்சாரம் செய்ய,சலுகைகள் தர மதங்களுக்கும்.மொழிகளுக்கும் உரிமை உண்டு.ஆனால் முடிவு எடுக்கும் உரிமை தனிநபருக்கு தான்.

தாய்மொழி கல்வி தான் சிறந்தது என்று கூறுவதன் காரணம் அவர்கள் வசிக்கும் பகுதியில் பயன்படுத்தும் வார்த்தைகளை ,வீட்டில்பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்து கற்று கொள்வது எளிது என்பதால் தான்

தமிழை தாய்மொழியாக கொண்ட வெளிநாட்டில்,வெளிமாநிலத்தில் பிறந்த குழந்தை அவளை தவிர மற்ற அனைத்து குழந்தைகளும் ஆங்கில வழியில் படிக்கும் போது இவள் மட்டும் தமிழில் படித்தால் தான் கல்வியில்சிறந்து விளங்குவாள் என்ற வாதம் ஒரு புரட்டு தான்

மலையாளத்தில் எழுதி கொண்டு அற்புதமாக தமிழ் பாடல்களை பாடுவதை யாரவது தடுக்கிறார்களா.தென்னாப்பிரிக்க.மேற்கிந்திய தீவு வம்சாவளி தமிழர்கள் அது போல ரோமன் எழுத்துருவில் தமிழ் புத்தகங்கள்,கவிதைகள்,அவர்களின் வரலாற்றை எழுதினால் பெரும்பாலான தமிழர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

மொழிகளின் ஆயுளும் வெகு குறைவு தான்.பல ஆயிரம் மொழிகள் அழிந்து விட்டன.இப்போது நாம் தாய்மொழி என்று சொல்லி கொள்ளும் மொழிகளும் சில நூறு ஆண்டுகளுக்கு முன் நம் தாய்மொழியாக இல்லாமல் இருந்திருக்கும்.வசிக்கும் இடங்களில் உள்ள பெரும்பான்மை மொழி மற்ற மொழி பேசுபவர்களை சிறிது சிறிதாக உள்வாங்கி விடும்.

மொழிகளை பாதுகாக்க வேண்டும் எனபது சரி.இன்றைய அறிவியல் வளர்ச்சியால் எந்த மொழியின் அழிவையும் தடுத்து விடலாம்.ஆனால் கட்டாயபடுத்தி ஒரு மொழியை வளர்க்க முடியும் என்ற எண்ணம் மிக தவறான ஒன்று

எந்த மதம் வேண்டும்,எந்த மொழியில் படிக்க வேண்டும்,எந்த இடத்தில வேலை செய்ய வேண்டும் எனபது எல்லாம் தனி மனித முடிவுகள்.அவனவனுக்கு பிடித்த மொழி அவனவனுக்கு

பள்ளி கல்வியால் அனைவரையும் அறிவாளியாக .சிறந்த படிப்பாளியாக ,புத்தக விரும்பியாக ஆக்க முடியும் என்ற நம்பிக்கை பலருக்கு இருப்பது ஆச்சரியத்தை தருகிறது.

குறிப்பிட்ட மொழியில்,தாய்மொழியில் கற்றால் அனைவரும் அறிவாளியாகி விடுவர், என்றால் உலகில் உள்ள பல பள்ளிகளில் நூடன்களும் ,போஸ்களும் இப்போது ஓடி விளையாடி கொண்டிருக்க வேண்டும்.நுகர்வுமுறை கலாசாரத்தின் தாக்கத்தால் அறிவியல் வளர்ச்சி உலகெங்கும் தேக்கத்தை அடைந்துள்ள நிலை தாய்மொழியில் கல்விகற்கும் மாணவர்களுக்கும் பொருந்தும்.

வெளிநாடுகளில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள்,வெளிநாட்டினரின் வம்சாவழியினர் அந்த நாட்டை பல தலைமுறைகளாக தாய்நாடாக கொண்டவர்களை விட கல்வியில் சிறந்து விளங்குவதாக வரும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் உண்மை என்ன

பள்ளி கல்வியின் முக்கியமான நோக்கம் சிறுவர்களின்,மாணவர்களின் வாழ்வை ஒழுங்கு படுத்துதல்.நேரத்திற்கு எழுந்திருத்தல்.வகுப்பின் போது காலைகடன்கள் வந்தால் சிரமம் என்பதால் காலைகடன் கழித்தலை எழுந்தவுடன் செய்வதற்கு உடலை பழக்குதல்

பல்வேறு குடும்பங்களை சார்ந்த குழந்தைகளுடன் பழகுதல்,ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுதல்,பகிர்தல்,நட்பு பாராட்டுதல்,நண்பர்களை பெறுதல்.ஆசிரியர் என்பவரை மதித்தல்,பல்வேறு துறைகளை பற்றி அறிதல் ,ஒன்றாக விளையாடுதல்,ஒன்றாக பயணம் செய்தல் போன்றவற்றோடு சில விஷயங்களை புத்தகங்களின் வாயிலாக,ஆசிரியரின் வாயிலாக தெரிந்து கொள்ளுதல்.

பள்ளிகளை கிரிக்கெட்,கால்பந்து அகாடமி போல எண்ணுதல் சரியான ஒன்றா.அகாடேமிகள் தோனியை,ரூணியை,செரெனாவை உருவாக்காது.அவர்கள் அவர்களை செம்மை படுத்தி கொள்ள வழியை அவர்களே தேர்ந்தெடுத்து கொள்வார்கள்.

படிப்பும் அதே தான்.குறிப்பிட்ட பள்ளி,குறிப்பிட்ட வகை பயிற்சிமுறை,தாய்மொழி கல்வி பல அறிவாளிகளை உருவாக்கும் என்ற கூற்றில் உண்மை குறைவு.அனைவருக்கும் அடிப்படை அறிவு தருவது தான் பள்ளியின் கடமை

தமிழில் அனைத்து அறிவியல்,மருத்துவம்,பொறியியல் புத்தகங்கள் மிகுந்தால் சீனாகாரன் கூட தமிழை அவர்கள் ஊரில் பிறந்தவர்கள் படிக்க மிகுந்த முயற்சிகள் எடுப்பான்.அப்படி இல்லாமல் ஒருவன் இங்கு பிறந்ததால்,அதுவும் அரசை நம்பி அது நடத்தும் பள்ளி,கல்லூரியில் படித்தால் அரசு அவன் மேல் பெரும்பான்மை மொழியை திணிக்கும் என்பதில் என்ன ஞாயம் இருக்கிறது.

எந்த மொழியில் படிக்க வேண்டும்,மொழியை எந்த எழுத்துருவில் படிக்க வேண்டும் என்பதும் தனிநபர் விருப்பம்.எதில் படித்தால் அவனுக்கு நல்லது,சலுகைகள் அதிகம் என்பதை வைத்து தனிநபர் தனக்கு வேண்டியதை முடிவு செய்து கொள்ளட்டும்.

Series Navigation
author

பூவண்ணன்

Similar Posts

60 Comments

  1. Avatar
    IIM Ganapathi Raman says:

    வெறி என்றால் ஆங்கிலத்தில் ஃபனாடிசிசம். பொருள்: தான் விரும்பிய நம்பிய ஒன்றைத்தவிர எதையுமே ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று அவற்றை ஆராயாமல் தூக்கியெறிவதுவே வெறி. Fanaticism arises from fear, inferioity complext and prejudices.

    ஒரு மொழியைப்படித்தால் மட்டுமே அம்மொழி நிலைக்கும் இது நுங்கள் தாய்மொழி. நீங்கள் விட்டுவிட்டீர்களாயின் அழிந்துவிடும் என்பது வெறியன்று. உணமையும் கூட..பேசுவோரும் எழுதுவோருமில்லாவிட்டால் ஒரு மொழி அழிந்துவிடும். மொழி அழியும்போது ஒரு மக்களின் அடையாளமும் அழிந்துப‌ட அவர்கள் எங்கே போவார்கள் வேறொரு இனக்கூட்டத்தில் சேர்ந்து அம்மக்களின் மொழியை எடுத்துக்கொண்டு அவர்களாக மாறிப்பொவதைதவிர?. That will be the natural coroollary if you destroy a language. People will have to live even after their idenitity is lost. இதை எப்படி வெறியென்று சொல்ல ? ஒருவேளை அம்மொழிமட்டுமே உலகத்தில் உயர்ந்தது. என்று சொல்லி பிறமொழிகளை படிக்கக்கூடாதென்று தடுத்தால் வெறி எனலாம். எனவே வெறி என்று நிர்ணயிக்கக் காரணம் சரியாக இருக்கவேண்டும்.

    மொழி, மத, இன, சாதி வெறிகளை ஒரே வரிசையில் வைத்துப் பார்க்க முடியாது. படித்தவரிடம் மட்டுமே காணப்படுவது மொழி வெறி. ஒரு படிக்காதவனுக்கு அல்லது ஒரு விடலைப்பையனுக்கு தமிழின் சிறப்பும் அதன் அழகும் அதன் கட்டாயமும் தெரியாது. ஆனால் அவனுக்கு ஒரு பொழுது போக்கு வேண்டும். அதற்காக ஒரு போராட்டம் வேண்டும். தமிழுக்காக போராடுவர்களும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்வோருக்கும் தமிழ் ஒழுங்காகப் படிக்கத்தெரியுமா? அவர்களூக்கு வேண்டியது a brief period of self importance.

    Thiruvaazh Maarban

  2. Avatar
    IIM Ganapathi Raman says:

    மத வெறி, இன வெறி, சாதி வெறி – எல்லோரிடமும் இருக்கும். படிக்காதவனுக்கே சாதி, மதம் மிக அவசியம். By religion, I mean blinldly accepted one. ஏனென்றால் அவன் ஒரு தனி நபர் ஆளுமையாக வளரவில்லை. வளரவும் முடியாது. எனவே அவனுக்கு கூட்டுமனப்பான்மையை அள்ளித்தரும் சாதி, மத உணர்வுகள் அவசியம். When you blossom into an individual, you will think you are the measure of all things i.e you measure things from your perspective. Greek thought flourised because they believed: Man is the measure of all things.

    இன, சாதி, மத வெறிகள் – ஆட்களைக்கொல்லும், சாதி, மத, இன கலவரங்களில் பலர் கொல்லப்படுகிறார்கள். தமிழுக்காகப்போராடுவோரால், தமிழகத்தில் வாழும் பிறமொழி மக்கள் கொல்லப்படவில்லை.

    Thiruvazh Marban

  3. Avatar
    IIM Ganapathi Raman says:

    தாய்மொழிக்கல்வியினால் அறிவாளியாவார்கள் என்று எவரும் சொன்னதாக எனக்கு நினைவில்லை. பூவண்ணந்தான் சொல்லி அதைச்சாடுகிறார். உண்மை -நானறிந்தவரை – என்னவென்றால், தாய்மொழிக்கல்வி பல இடையூர்களை விலக்கி சிந்தனையை சுதந்திரமாக்கும். சிந்தனைச்சுதந்திரம் அறிவாளியாக்கும் பொதுவாக‌.

    பிறதேயங்களில் பிறமக்களுடன் வாழும் தமிழர்கள் தம் குழந்தைகளை தமிழ்ப்பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும் என நிர்ப்பந்தப்படுத்தவில்லை அதிலொன்று பார்க்கவேண்டும். அப்படியே அவர்கள் அங்கு சேர்க்கப்பட்டாலும், அங்கு நிலவும் மொழியை அவர்கள் வெகுசிறப்பாகவே படித்துக்கொள்வர் எனப்தை தில்லித்தமிழ்ப் பள்ளிகளில் படித்து வெளிவந்த மாணாக்கர்களிடம் பேசித்தெரிந்துகொள்ளலாம்.

    Thiruvazh Marban

  4. Avatar
    IIM Ganapathi Raman says:

    தமிழைச்சொல்லித்தர தரமான ஆசிரியர்கள் தாராளமாக தமிழகத்தில் கிடைப்பார்கள். ஆங்கிலம்தான் பிரச்சினை. நான் மதுரையில் வசிக்கிறேன். இங்கு எங்கு பார்த்தாலும் ஆங்கிலப்பள்ளிகள். ஆனால் கற்றுத்தரப்படும் ஆங்கிலம் பரிதாபம். ஆசிரியர்களுக்கே இலக்கணப்பிழையின்றி ஒரு நல்ல ஆங்கிலத்தை எழுத முடியாதபோது மாணாககரின் நிலையென்ன?நல்ல வேளை என் குழந்தைகள் தமிழகத்தில் படிக்கவில்லை. தமிழ்ச்சங்கத்தில் மட்டுமே டிப்ளமா இன் தமிழ். மற்றபடி சிறப்பான ஆங்கிலமும் ஹிந்தியுமே அவர்கள் பள்ளிகளில்.

    வெள்ளைக்காரன் ஆண்ட காலத்தில் தமிழகத்தில் ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலேயர்களே. அவர்களிடம் கற்றத் தமிழர்களின் ஆங்கில அறிவில் பிறர் மலைத்தார்கள். அவர்கள் போய் தலைமுறைகள் கடந்து விட்டன. இன்றைய தமிழகச்ச்சூழலில் தமிழே சாத்தியம். என் பிள்ளைகள் மதுரையில்தான் படிக்கவேண்டுமென என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தால் அவர்களை யான் தமிழ்வழிக்கல்வியில்தான் சேர்த்திருப்பேன். ஏதாவது ஒன்றையாவது ஒழுங்காகக் கற்கலாமே? இடமும் சூழலும் அனைத்தையும் தாமாகவே நிர்ணயிக்கும். Natural corollary :-)

    — திருவாழ் மார்பன்

  5. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    நண்பர் பூவண்ணன்,

    ///தாய் மொழி தான் நல்லது என்பதற்கும் தாய்மதம் தான் நல்லது/தந்தை தொழில் என்ற குல தொழில் தான் நல்லது என்ற வெறிக்கும்வித்தியாசம் கிடையாது.தந்தை தொழிலை கட்டாயம் கற்க வேண்டும் என்பதற்கும் தாய் மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என்பதற்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா.///
    சைனாவிலும், ஜப்பானிலும் பிள்ளைகள் தாய் மொழியில்தான் அனைத்துப் பாடங்களையும் கற்கிறார். இது மொழி வெறி வகுப்பில் சேராது.

    இரண்டு சைனாக்காரர் சந்தித்தால் தம் தாய் மொழியில்தான் உரையாடுவார். இர்ண்டு மலையாளிகள் எதிர்ப்பட்டால் தாய்மொழி மலையாளத்தில்தான் பேசிக் கொள்வார். இது மொழி வெறி வகுப்பில் சேராது.
    தமிழர் இருவர் சந்தித்தால் ஆங்கிலத்தில்தான் பொதுவாக உரையாடுவார். இதுதான் தமிழ் மொழிவெறி.
    தமிழ் நாட்டில் தமிழ் கட்டாய பாடமாக இல்லாது ஹிந்தி மூலம் கற்கும் கேந்திரியா வித்தியாலயங்கள் பல உள்ளன. தமிழ் நாட்டில் தமிழ் கட்டாய பாடமாக வைப்பது மொழி வெறி இல்லை. தமிழ் நாட்டுக் கல்விக் கூடங்களில் தமிழ் கட்டாய பாடமாக வைப்பது ஆங்கிலத்தை வெறுப்பதாவோ, புறக்கணிப்பதாகவோ அர்த்தம் இல்லை.
    தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை தாய் மொழியில் தமிழில் உள்ள இலக்கியங்களும், தமிழ்நாட்டில் கட்டிய கலைக்கோயில் அடையாளங்களும் எடுத்துக் காட்டும்.
    இவற்றைத் தமிழர் தாய்மொழி தமிழில் கற்காது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து படித்து அறிந்து கொள்வது உங்கள் வியப்பான ஆலோசனையா ? தமிழ்க் கலாச்சாரத்தைத் தாய்மொழியில் தமிழர் கற்க வேண்டும் என்பது மொழி வெறியா ?
    வெளி மாநிலத்தில் பணி செய்யும் இராணுவ / மற்ற வேலை அதிகாரிகளின் பிள்ளைகள் தமிழ் படிக்க முடியாமல் போவது நான் அறிந்ததே.

    சி. ஜெயபாரதன்.

    1. Avatar
      வெள்ளைவாரணன் says:

      தங்கள் பதில் சரியாகப் படவில்லை. கேந்த்ரீய வித்யாலயங்கள் ஏதோ தமிழ் நாட்டில் மட்டும் தான் உள்ளது போல எழுதியுள்ளீர்கள். அவை நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் உள்ளன. தமிழனிடம் இந்தியைப்படிக்காதே என்றார்கள் , தமிழன் ஆங்கிலத்தில் படித்து தமிழையே கைவிட்டு விட்டான் . இந்தப்பெருமை மேடையில் அசிங்கமாகப்பேசி தமிழை அழித்த கழக அரசியல் வாதிகளையே சாரும். ஆங்கிலமே தமிழை முற்றிலும் அழித்துக்கொண்டிருக்கிறது. பூவண்ணன் கேட்டுள்ள கேள்விகளுக்கு சரியான பதிலை கொடுத்தால் , நல்லது. கழகங்கள் தமிழ் வளர்ச்சிக்கு 1969-முதல் ஒன்றும் செய்யவில்லை. தமிழுக்கு பதிலாக டாஸ்மாக் மட்டுமே வளர்ந்துள்ளது. 1-9-1972 முதல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழனுக்கு நல்ல சாராயம், நல்ல கள் இரண்டையும் வழங்கி தமிழன் வாழ்வை சிறக்க செய்துள்ளார். ஒரு இனத்தை திட்டமிட்டு அழிக்க வேண்டுமானால், அந்த இனம் உலகில் பிறருடன் தொடர்பு கொள்ளமுடியாதவாறு செய்துவிட்டாலே போதும். அதனைத்தான் தெலுங்கர்கள் தலைமையிலான கழகமும், அதன் சொம்புகளும் செய்தன. தாய்மொழி வழிக்கல்வி உலகிலேயே சிறந்தது என்று மகாத்மா காந்திக்கு தெரிந்திருந்தது. ஆனால் 1969- முதல் நம்மை ஆளுவோர் காந்தி வழி வந்தவர்கள் அல்ல. காந்திக்கு எதிரானவர்கள். எனவேதான் டாஸ்மாக் வளர்கிறது, தமிழ் அழிகிறது. தமிழகத்து கிராமங்களில் தமிழில் படிக்காதே என்று சொல்லி, தமிழில் படித்தால் நம் பிள்ளை உருப்படாது என்று சொல்லி, ஆங்கில மீடியம் பள்ளிகளை தேடி ஏழை மக்கள் அனைவரும் ஓடுகிறார்கள். இந்நிலை ஏன் ஏற்பட்டது ? ” தமிழா, தமிழ் படிக்காதே, தமிழ் படித்தால் நாசமாய்ப் போவாய் என்று சொல்லி உன் வேலைக்காரியுடன் கூட இங்கிலீஷிலேயே பேசு, அவளுக்கு இங்கிலீஷ் தெரியவில்லை என்றால் , அவளுக்கும் இங்கிலீஷ் கற்றுக்கொடு என்ற ஈ வே ரா பெரியாரின் துர்போதனைகள் தான் இந்த சீரழிவுக்கு அடிப்படைக் காரணம். இனி இதனை திருத்த யார் வரப்போகிறார்களோ தெரியவில்லை. கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்..

  6. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    நண்பர் பூவண்ணன்,

    ///ஒருவர் தமிழை எப்படி படிக்க வேண்டும்,எழுத வேண்டும், கற்பிக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அதன் படி நடந்து கொள்வதை யாரும் தடுக்க முடியாது.அது அவரவர் விருப்பம்.

    ஆனால் அனைவரும் தமிழ் எழுத்துக்களை விட்டு விட்டு ஆங்கில எழுத்துக்களை வைத்து தமிழ் படித்தால் என்ன என்ற கேள்வி சரியானது தானா.இப்படி ஒரு கூட்டம் படிக்கட்டும். அப்படி ஒரு கூட்டம் உருவாகட்டும்,குறிப்பாக வெளிநாட்டில், வெளி மாநிலங்களில் வாழும்,தமிழ் படிக்க வசதியில்லாத அல்லது வாய்ப்பில்லாதவர்கள்.///

    “குரங்கு கைகளில் கொடுத்த மலர் மாலை போல்”, யாரும் தமிழைத் தம்தம் விருப்படி எழுதலாம், படிக்கலாம், எப்படியும் மாற்றலாம், ஒதுக்கலாம், உருமாற்றம் செய்யலாம் என்று பூரண உரிமை கொடுப்பது கோமாளித்தனம்.
    தமிழுக்குத் தொல்காப்பியம் போல் ஓர் உன்னத இலக்கண அமைப்பு நூல் உள்ளது.
    ஓரிருவர் முரணாக விரும்பி, பெரும்பான்மையோர் தமிழ் நாட்டில் பின்பற்றும் சீரிய முறைகளைச் சீரழிக்க வேண்டும் என்பது உங்கள் உயர்ந்த ஆலோசனையா ?
    சி. ஜெயபாரதன்

  7. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    நண்பர் பூவண்ணன்,

    ///அனைவரும் ஒரே கடவுளுக்கு,ஒரே மதத்திற்கு தாவி விட்டால் பல பிரட்சினைகள் ஒழியும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் ஒரே மதத்திற்கு மாற வேண்டும் என்று கருத்துரைப்பதர்க்கும் ,அனைவரும் ஒரே எழுத்துருவை பயன்படுத்த வேண்டும் என்பதற்கும் வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.////

    உங்கள் கட்டுரைகள் அனைத்திலும் ஓர் ஒற்றுமையப் பார்க்கிறேன்.
    உங்கள் கண்ணோட்டத்தில் நரி, நாய், ஓநாய் மூன்றும் ஒன்று.
    உங்கள் கண்ணோட்டத்தில் கழுதை, கோவேறு கழுதை, குதிரை, ஒட்டகச் சிவிங்கி அனைத்தும் ஒன்று.

    தூக்குத் தண்டனைக் கொலை, இராணுவக் கொலை, பெண்டிர் கற்பழிப்புக் கொலை, தெரு விபத்துக் கொலைகள் எல்லாம் ஒன்று.
    உங்களை இந்திய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாய் நியமிப்போம்.
    சி. ஜெயபாரதன்.

    1. Avatar
      பூவண்ணன் says:

      ஜெயபாரதன் ஐயா

      நான் சொல்ல விரும்புவதை தெளிவாக சொல்ல தவறுவதால் உங்களின் கோவத்தை அதிகபடுத்தி கொண்டிருக்கிறேன் போல.
      பெற்றோர் தமிழராக இருந்தால் பிள்ளைகளுக்கு தமிழை கட்டாய பாடம் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை ஞாயமா என்று தானே கேட்கிறேன்.இதற்கும் தந்தை/தாய் சிற்பி அல்லது குருக்கள் அல்லது மர தச்சன் /பரத நாட்டியத்தில்/கோலாட்டத்தில்/சிலம்பில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் பிள்ளைகள் கட்டாயம் அவற்றை படிக்க வேண்டும் என்று கட்டயபடுத்தபடுவதர்க்கும் என்ன வித்தியாசம் என்று தானே கேட்கிறேன்.

      எனக்கு கால்பந்து விளையாட்டு மிகவும் பிடிக்கும்.என் குழந்தைகளுக்கு பூபந்து பிடித்திருந்தால் அல்லது அவர்கள் பூபந்து விளையாடினால் அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது என்று எனக்கு தோன்றினால் அவர்கள் பூபந்து விளையாட ஊக்குவிப்பேன்.

      இதே தான் தமிழ்,ஆங்கிலம்,பிரெஞ்சு ,மலையாளம் மொழிகளுக்கும்.இதில் கட்டாயமாக ஹிந்தியையோ அல்லது தமிழையோ படிக்க வேண்டும் என்று பிறப்பின் அடிப்படையில் ,வசிக்கும் இடத்தின் அடிப்படையில் திணிப்பது ஞாயமா என்று கேட்பதில் தவறு எங்கே வருகிறது

      பெற்றோர் பின்பற்றிய மதத்தை/கடவுள்களை விட்டு விட்டு விரும்பும் மதத்திற்கு மாறலாம்,அவர்கள் படித்த படிப்பை படிக்காமல் விரும்பும் படிப்பை படிக்கலாம், அவர்கள் செய்த வேலையை செய்யாமல் விரும்பும் வேலையை செய்யலாம் என்பதை ஆதரிக்கும் பலர் மொழி என்று வரும் போது கண்டிப்பாக தாய் மொழி(இதில் தந்தைக்கு பங்கு கிடையாதா.என் தாய் மொழி தமிழ்.என் மனைவியின் தந்தையின் மொழி தெலுகு.அவர் தாய் மொழி உருது.என் குழந்தைகளுக்கு எது தாய் மொழி)படிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது வெறி இல்லையா.

      பல நூறு ஆண்டுகளாக அத்தை பெண்ணை/மாமன் மகனை தான் மணந்து வந்தனர் நம் முன்னோர்கள்.அது தான் நம் கலாசாரம்.வெளியில் திருமணம் செய்தால் தொடர்புகள் அறுந்து விடும்,கலாசாரம் மாறும்,மறையும்.அதனால் நீயும் அதே போல தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கட்டாயபடுதுவதற்க்கும் ,பிறப்பின் அடிப்படையில் மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என்பதற்கும் என்னை பொறுத்த வரை வித்தியாசம் கிடையாது.

      தமிழை விரும்பி சப்பாநியனும் ,தென் அமெரிக்கனும் படித்தால்,படிக்கும் ஆர்வத்தை தூண்டினால் தமிழ் வளரும்.அது சரியான அணுகுமுறை.அதை விட்டு விட்டு பிறப்பின் அடிப்படையில் மொழியை திணிப்பது சரியான ஒன்றா

      பிறப்பின் அடிப்படையில் இல்லாமல் விருப்பத்தின் அடிப்படையில் செய்யும் தொழில்,வாழும் இடம்,வாழ்க்கை துணை ,படிக்கும் படிப்பு போன்றவற்றை முடிவு செய்யும் உரிமை தனி மனிதனுக்கு வேண்டும் என்று வாதிடும் பலர் மொழி என்று வரும் போது பிறப்பின் அடிப்படையில் பேதம் பிரித்து கட்டாயபடுத்துவது சரியா,நாகரீக சமூகத்திற்கு அழகா

  8. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    நண்பர் பூவண்ணன்,

    ///பள்ளி கல்வியின் முக்கியமான நோக்கம் சிறுவர்களின், மாணவர்களின் வாழ்வை ஒழுங்கு படுத்துதல்.நேரத்திற்கு எழுந்திருத்தல்.வகுப்பின் போது காலைகடன்கள் வந்தால் சிரமம் என்பதால் காலைகடன் கழித்தலை எழுந்தவுடன் செய்வதற்கு உடலை பழக்குதல்///
    இந்தக் குறிக்கோளில் நடத்தப்படும் பள்ளிகள் இந்தியாவில்/ தமிழ் நாட்டில் எங்கு உள்ளன ?

    சி. ஜெயபாரதன்

    1. Avatar
      பூவண்ணன் says:

      அரசு பள்ளியோ,தனியார் பள்ளியோ அனைத்து பள்ளிகளுக்கும் அடிப்படை இது தான். படிக்கும் அனைவரையும் பொறியாளர்களாக,விஞ்ஞானிகளாக ,கால்பந்து வீரர்களாக,தாய் மொழி புத்தகங்களை விரும்பி படிக்கும் இடங்களாக உருவாக்கும் இடம் பள்ளிகள் அல்ல.

  9. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    நண்பர் பூவண்ணன்,

    ///பல்வேறு குடும்பங்களை சார்ந்த குழந்தைகளுடன் பழகுதல்,ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுதல்,பகிர்தல்,நட்பு பாராட்டுதல்,நண்பர்களை பெறுதல்.ஆசிரியர் என்பவரை மதித்தல்,பல்வேறு துறைகளை பற்றி அறிதல் ,ஒன்றாக விளையாடுதல்,ஒன்றாக பயணம் செய்தல் போன்றவற்றோடு சில விஷயங்களை புத்தகங்களின் வாயிலாக,ஆசிரியரின் வாயிலாக தெரிந்து கொள்ளுதல்.////

    இம்முறைகள் எந்த நகரக் கீழ்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் இயங்கி வருகின்றன ?
    சி. ஜெயபாரதன்

  10. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    நண்பர் பூவண்ணன்,

    ///படிப்பும் அதே தான்.குறிப்பிட்ட பள்ளி,குறிப்பிட்ட வகை பயிற்சிமுறை,தாய்மொழி கல்வி பல அறிவாளிகளை உருவாக்கும் என்ற கூற்றில் உண்மை குறைவு.அனைவருக்கும் அடிப்படை அறிவு தருவது தான் பள்ளியின் கடமை///

    உங்கள் அகராதியில் அடிப்படை அறிவு என்பது என்ன ?

    சைனா, ஜப்பான் நாடுகளில் அனைவரும் தம்தம் தாய் மொழியில்தான் கற்று சமூக விஞ்ஞான மேதைகள் ஆகிறார்.
    சி. ஜெயபாரதன்

  11. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ///தமிழில் அனைத்து அறிவியல்,மருத்துவம்,பொறியியல் புத்தகங்கள் மிகுந்தால் சீனாகாரன் கூட தமிழை அவர்கள் ஊரில் பிறந்தவர்கள் படிக்க மிகுந்த முயற்சிகள் எடுப்பான். அப்படி இல்லாமல் ஒருவன் இங்கு பிறந்ததால்,அதுவும் அரசை நம்பி அது நடத்தும் பள்ளி,கல்லூரியில் படித்தால் அரசு அவன் மேல் பெரும்பான்மை மொழியை திணிக்கும் என்பதில் என்ன ஞாயம் இருக்கிறது.///
    தாய் மொழித் தமிழைக் கற்பதை மொழிவெறி, திணிப்பு மொழி என்று எண்ணும் உங்களைப் போன்றோர் உள்ளவரை தமிழில் விஞ்ஞான, மருத்துவ, பொறியல் படைப்புகள் வெளிவர வாய்ப்புக்களே இல்லை.
    சி. ஜெயபாரதன்.

    1. Avatar
      நாக.இளங்கோவன் says:

      செயபாரதன் ஐயா, இக்கட்டுரை பால் நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் அருமையானவை. ஒரு கேள்விக்கேனும் கட்டுரையாளர் அறிவார்ந்து பதில் சொல்வாரா என்பது ஐயமே. அவரின் கட்டுரையில் எங்கும் ஏரணமும் இல்லை. நிறைந்த அறிவும் இல்லை.

  12. Avatar
    புனைப்பெயரில் says:

    ஜெயபாரதன் போன்றவர்களுக்கு ஏன் மொழியின் பெயரால் இந்த கொல வெறி என்று தெரியவில்லை. தான் கனடா வாழ்வில் தம் குடும்பத்தின் அடுத்த தலைமுறையை முன்னெடுத்துச் சென்று கொண்டு, தமிழகத்தில் இருப்பவர்கள் தாய் மொழி கற்றலில் தொலைந்து போகனும் என்ற கொலை வெறி ஏனோ? எல்லாம் இனி சந்தைப் பொருளாதார சூழலில் பணம் ஈட்ட என ஆகி விட்ட போது, எந்த் மொழியில் கறபது என்பதை அவன் அவன் தீர்மானித்துக் கொள்ளட்டம். தூர இருந்து கல்லெறிய வேண்டாம். சீன, சப்பான் என எடுத்துக்காட்டு, அந்தக் காலத்து திராவிட மீட்டிங்குகளில், “சப்பானைப் பார், சீனாவை பார், “ எனும் வகையறா தான். இப்படிப் பட்டவர்களின் குடும்பம் என்ன செய்கிறது என்றும் பார்க்க வேண்டாம்.இப்படித்தான் எல்லோரும் ஊருக்கு உபதேசம் செய்கிறார்கள் – தம் குடும்பத்தைத் தவிர….

    1. Avatar
      நாக.இளங்கோவன் says:

      திரு.செயபாரதன் அவர்களின் அறிவார்ந்த கேள்விகளைப் பொறுக்க முடியாமல், பெயர் போடாமல் அவதூறைச் செய்கிறது உங்கள் எழுத்துகள்.

    2. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      உயர்திரு புனைபெயரார் அவர்களே,

      நாங்கள் 25 வருடம் வட நாட்டிலும், 30 வருடங்கள் கனடாவிலும் வாழ்ந்தவர், வாழ்ந்து வருபவர். என் இரண்டு புதல்வியர் நன்றாகத் தமிழ்ப் பேசவும், ஓரளவு எழுதவும், வாசிக்கவும் திறமை பெற்றவர். வீட்டில் நாங்கள் யாவரும் பேசுவது தமிழ். சேர்ந்து பார்ப்பது தமிழ்த் திரைப்படம். நாங்கள் கேட்பது, இரசிப்பது தமிழ்ப் பாடல்கள். பிள்ளைகளுக்கு நாங்கள் வீட்டில் தமிழ் சொல்லிக் கொடுத்தோம்.
      சி. ஜெயபாரதன்.

    3. Avatar
      IIM Ganapathi Raman says:

      அவரவர் விருப்பத்துக்குத் தக்கவாறு விடப்படுவது ஒரு முழுக்க முழுக்க தனிநபர் விடயத்தில்தான் நடக்க வேண்டும். எடுத்துக்காட்டு: வேலை. மணம் ஒருவன்/ஒருத்தி எந்த வேலையைப்பார்க்கலாம். எவரையும் மணக்கலாம். இதிலும் கூட பிறர் (பெற்றோர்) தலையீடு அதிகம். மணத்தில் சமூஹத்தில் தலையீடு (அ) கவுரக்கொலைகளில் முடிகிறது. ஆனால் அவை எதிர்க்கப்படுகின்றன. சரி.

      மொழி படித்தல் என்பது ஒரு தனிநபர் விடயமட்டுமன்று; சமூஹத்தினதுமாகும். ஏனெனில் ஒரு மொழியை ஒரு சமூஹத்தில் அனைவரும் படிப்பதால். அம் மொழி அச்சமூஹத்தை ஒருமைப்படுத்துகிறது. இல்லையென்றால் அச்சமூஹம் சிதைகிறது. காணாமல் அழிந்து படுகிறது. ஹிந்தி ஆயிரக்கணக்கான சிறுமொழிகளை அழித்துத்தான் தன்னை முன்னேற்றியது என்பது வரலாற்று உண்மை. அதே போல பெருமொழிகள் சிறுமொழிகளை விழுங்கிவிடும்போது சிறுபான்மையினர் பெரும்பான்மையினக்குள் அடைக்கலம் ஆவதைவிட வேறுவழியில்லை. வாழவேண்டுமல்லவா? (I have already emphasised that here) ஆனால் விளைவு? அவர்கள் கலாச்சாரம், தொன்றுதொட்டு வரும் வாழ்க்கை, அவர்களுக்கென்று ஒன்றுமே இல்லாமல் போகிறது.

      தமிழ் ஒரு சிறுமொழியன்று: அஃது உலக மொழிகளில் மிகவும் தொன்மையும் நீண்ட வரலாறும் வளமும் மிக்க இலக்கியமும் உடையது. அது தமிழர்களின் கலாச்சார வாழ்க்கையைப் பண்படுத்திவந்தது. தமிழ் தமிழ்ர்களை என்றுமே கெடுத்ததில்லை. தமிழில் உள்ள Devotional literature எம்மொழியிலும் இல்லையென்று படித்திருக்கிறேன். ஆன்மிகச்சான்றோர்களின் இறைசார்ந்த உணர்வுகளைத் தமிழே வெளிக்கொண்டது. எப்படி என்று திருப்புகழைப்படித்து வாழும் கிருஸ்ணகுமார் சொல்வார். இப்படிப்பட்ட இலக்கியம் தமிழர்களுக்கு இறைசார்ந்த உணர்வை ஊட்டி வளர்த்தபடியால், மலையாளி இந்துக்கள் தேவாரத்தையும் திருவாசகத்தைப்படிப்பதற்காக தமிழ் படிக்கிறார்கள். ஏனென்றால், திருப்புகழையும் கந்தரனுபூதியையும் மொழிபெயர்க்க முடியாது. Its spirituality will be destroyed. கரும்புச்சக்கையை எவரேனும் எடுப்பரோ? குப்பைத்தொட்டிக்குத்தானே?

      சாதிகளும் மதங்களும்தான் கெடுக்கின்றன. தமிழர்களிடையே பலபல வேறுபாடுகள் அவர்களை ஒன்றுபடவிடாமல் கெடுக்கும்போது, அவர்தம் மொழி அவர்களை இணைக்கிறது.

      ஆக, தாய்மொழியைப்படித்தல், அவரவர் விருப்பத்துக்கு விட வேண்டிய வேலை, மணம் போன்ற விடயங்களுக்குச் சமமாகாது. தனிநபர்கள் சேர்ந்தது சமூஹம். தனிநபர்கள் படித்து அச்சமூஹத்தில் தாய்மொழியைக்காப்பாற்றுகிறார்கள்.

      அவரவர் போக்கில் விட்டால், சங்கம் வளர்த்து தமிழரின் வாழ்க்கையையும் அடையாளத்தைக்கொடுத்த மாமதுரை ஆங்கிலம் ஹிந்தி பேசுவோரால் நிறைந்து, எல்லோரும் காணாமல் போய்விடுவோம்.

      அவரவர் போக்கில் விட்டால் சமூஹம் தேவையில்லை. வலிமையுள்ளவள் எளியோரை நாள்தோறும் ஆயிரக்கணக்கில் கொன்று தீர்ப்பான். Law of the Ungle. Might is Right. Survival of the fittest. மொழி விடயத்திலு அதுதான் நடக்கும். பாப்பனர்கள் சமசுகிருத்ததைத்திணிப்பார்கள். பணமபடத்த மார்வாடிகள் அரசையே விலைக்குவாங்கி, குஜராத்தியைத் திணிப்பார்கள். பீஹாரிகளும் மற்ற ஹிந்திகாரர்களும் ஹிந்தியைத் திணிப்பார்கள். மலையாளிகள் தமிழ்ச்சினிமாவை மலையாளமாக்கிவிடுவார்கள். நாயுடுக்கள் தெலுங்கை அரசியலில் திணிப்பார்கள்.

      வலுவிலந்த ஏமாளித்தமிழ் கோமாளியாக வங்காள விருகுடாவில் வீசப்படும். அதோடு வீசப்படுவன : ஆழ்வார்களும் நாயன்மார்களும் சங்கப்புலவர்களும். இளங்கோவும் கமபனும் பாரதியாரும் அப்புறம் இந்தத் திண்ணையிதழும்தான்!!

  13. Avatar
    பூவண்ணன் says:

    ஜெயபாரதன் ஐயா

    தமிழை படிப்பதை நான் எங்கே தவறு என்றேன்,தடுத்தேன்.கட்டாயம் என்பதை தானே தவறு என்கிறேன்.
    தாய் மொழி என்பதால் கட்டாயம் என்பதற்கும் ,தந்தை தொழில் என்பதால் கட்டாயம் என்பதற்கும் வித்தியாசம் உண்டா என்று தானே கேட்கிறேன்
    தமிழை விரும்பி படித்தவர்களை இந்தியா முழுவதும் ,உலகில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் எல்லாம் தமிழ் ஆசிரியர்களாக அதிக ஊதியம் கொடுத்து அரசு,தனியார் தமிழ் ஆர்வலர்கள் அனுப்பினால் தமிழ் வளரும்.அதை யார் தடுத்தார்கள்.குறிப்பிட்ட நிலபரப்பில் வசித்தால்,குறிப்பிட்ட தாய் தந்தைக்கு பிறந்ததால் கட்டாயம் படிக்க வேண்டும் என்று செய்வது நாகரீகமான சமூகத்திற்கு அழகா என்று எண்ணும் உரிமையில் தவறு இருக்கிறதா

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      நண்பர் பூவண்ணன்,

      நாட்டின் பொது விதிகளை மீறித் மொழி வெறித் தலைப்பில் தனி நபர் உரிமையைப் பற்றி எழுதும் நீங்கள் ஓர் இராணுவ அதிகாரி. இராணுவத்தில் எத்தனை சதவீதம் தனி நபர் கோரிக்கைகள், உரிமைகள் வரவேற்கப்படுகின்றன ?
      எந்தத் துறையிலும் ஒழுக்கம், அறநெறி முறைகள் வளர சீரான பொது விதிகள் அவசியமல்லவா ?

      சி. ஜெயபாரதன்

    2. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      அப்படியா ? நம் குழந்தைகள் எல்லாருமே கட்டாயம் இல்லாமல் தாமே தமக்கு உகந்த பள்ளியை தேர்வு செய்து, தமக்கு விருப்பமான படங்களைத்தான் படிக்கின்றனவா ?

      தாய்மொழியை கட்டாய பாடமாக படிக்க சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும் ?

    3. Avatar
      நாக.இளங்கோவன் says:

      பூவண்ணன்,

      செயமோகன் கட்டுரையில் “தமிழ்ப் புத்தகங்கள் அதிகம் விற்பதில்லை” என்ற கருத்தைப் பதிவு செய்திருந்தார். அது ஓர் ஞாயமான கவலைதான். ஆனால், உங்களைப் போன்றே பலரும் ஏரணம்(logic) இல்லாமல், விரலில் வருவதையெல்லாம் எழுத்து என்று எழுதினால் யார் படிப்பார்?
      உங்கள் கட்டுரையில் எந்தக் கருத்தும் இல்லை. திரு.செயபாரதன் அவர்கள் கேட்கும் ஒரு கேள்விக்குக் கூட உங்களால் பதில் சொல்ல முடியவில்லை. யாரோ ஆட்டிவிடும் பம்பரம் போல உங்கள் எழுத்துகள் ஆடுகின்றன.
      இன்னும் நீங்கள் நிறைய படிக்கவேண்டும்.

  14. Avatar
    Dr.G.Johnson says:

    ஆங்கில மோகம் வளர்ந்து வரும் இந்நாட்களில் இந்தியர்கள் , குறிப்பாக புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் பிள்ளைகள் தங்கள் தாய் மொழியையை முறையாகக் கற்க வழியின்றி ஆங்கிலத்திலேயே பேசவும் எழுதவும் பழகிவிட்டனர். இவர்களில் குறிப்பாக தமிழர்கள் ஆங்கிலம் கலந்த தமிழையும் அல்லது முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசும் நிலைக்குள்ளாகியுள்ளனர்.

    தமிழர்கள் தாய்மொழியான தமிழைப் படிக்கவும் எழுதவும் தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்று சொல்வது மொழி வெறி ஆகாது. அது அவர்களின் தலையாய கடமையாகும். ஆங்கிலத்தில் கல்வி கற்பதை யாரும் தடை செய்யவில்லை. அது உலகலாவிய மொழி என்பதை யாரும் மறுக்க இயலாது.

    காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை வேண்டும் என்று சட்ட ரீதியாக நாம் போராடியதற்கு காரணமே காந்தியும், நேருவும், அம்பேத்காரும் கற்ற ஆங்கில சட்டப் படிப்புதான் எனில் அது மிகையான்று. சர் சி, வி.இராமன் நோபல் பரிசு பெற உதவியது இந்த ஆங்கிலக் கல்விதான். தாகூரின் இலக்கியப் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதால்தான் அவரின் புகழ் உலகளாவிய நிலையில் அறியப்பட்டு அவரும் நோபல் பரிசு பெற முடிந்தது. ஆங்கிலக் கல்வியை நாம் வேண்டாம் என்று கூறவில்லை. அதில் புலமை பெற்று சிறந்து விளங்குவது நல்லதுதான். ஆனால் அதே வேளையில் நமது தாய் மொழியின் சிறப்பையும் உணர்ந்தவர்களாக தமிழையும் கற்று அதிலும் புலமை மிக்கவர்களாக இருப்பதே தமிழுக்கும் நமது இனத்துக்கும் நாம் செய்யும் பெருமையாகும். தமிழர்களின் இல்லங்களில் பிள்ளைகள் கட்டாயம் தமிழ் படிக்க எழுத தெரிய நாம் ஆவன செய்யவேண்டும் என்று கூறுவது மொழி வெறி ஆகாது….டாக்டர் ஜி. ஜான்சன்.

  15. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    http://jayabarathan.wordpress.com/தமிழ்-விடுதலை-ஆகட்டும்/

    போலித் தமிழர்கள் ! தாய்மொழி தமிழ் ! வாய்மொழி ஆங்கிலம் !

    தமிழ் நாட்டில் பிறந்து, தாய்மொழி தமிழாக இருந்தும், தமிழ் படிக்க வாய்ப்பிருந்தும், தமிழே படிக்காமல், சமஸ்கிருதத்தையும், ஆங்கிலத்தையும் மட்டும் கல்லுரியில் படித்துப் பட்டம் பெற்று உத்தியோகம் பார்க்கும் நபர்கள், நாரீமணிகள் தமிழ் நாட்டைத் தவிர, வேறு உலகில் எங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்குத் தாய்மொழி தமிழ் ! வாய்மொழி ஆங்கிலம் !

    தமிழ் நாட்டில் சட்டப்படி தாய்மொழி தமிழ் படிக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது! வெளி நாடுகளில் வாழும் தமிழர்க்குத் தமிழை முறையாகக் கற்க அதிக வசதி இல்லை. “எங்க பெண்ணுக்குத் தமிழ் புரியும். ஆனால் எழுதப் படிக்க பேசச் சரியாகத் தெரியாது!” என்று தமிழ்த்தாய் ஒருத்தி சொன்னதாக, கனடாவிலிருந்து சென்ற வருடம் சென்னையில் தன் மகனுக்குப் பெண் பார்க்கப் போன என் நண்பர் ஒருவர் கூறினார். வீட்டில் தமிழ் கற்ற கனடா மாப்பிள்ளை தமிழில் உரையாடிக் கேள்வி கேட்கும் போது, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண் ஆங்கிலத்திலே பதில் கூறி இருக்கிறாள். இது வெட்கப் பட வேண்டிய கூத்து! இப்படி ஆங்கிலத் தோல் போர்த்திய, போலித் தமிழர்கள் பலர் தமிழ் நாட்டில் இன்று இருக்கிறார்கள்! தமிழே பாடத் திட்டத்தில் இல்லாது ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி மட்டும் சொல்லிக் கொடுக்கும் ‘கேந்திரிய வித்தியாலங்கள்’ பல இன்னும் தமிழகத்தில் உள்ளன! இது போன்று வங்காளத்தில் உண்டா ? பஞ்சாப்பில் உண்டா ? மகாராஷ்டிராவில் உண்டா ? தமிழ் நாட்டில் ஹிந்தியை வெறுக்கும் ஒரு சிலரைப் போல், தமிழை ஒதுக்கும் தமிழர்களும் உண்டு! அவர்கள்தான் போலித் தமிழர்கள்!

    ரவீந்திரநாத் தாகூர் ஒரு சமயம் சென்னைக்கு வருகை தந்த போது தமிழர் ஒருவர் அவரை வரவேற்றுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். ஆங்கிலத்தில் ஆரம்பித்ததும், தாகூர் அவரைத் தடுத்து, “தயவு செய்து ஆங்கிலத்தில் வேண்டாம்; உங்கள் தாய்மொழியில் பேசுங்கள்; எனக்காகப் பேசாமல், அதோ ஆங்கு அமர்ந்து கேட்கும் பொது மக்களுக்குப் புரியும்படியாகப் பேசுங்கள்” என்றாராம்.

    சலுகை போனால் போகட்டும்! என்
    அலுவல் போனால் போகட்டும்!
    தலைமுறை ஒருகோடி கண்ட, என்
    தமிழ் விடுதலை ஆகட்டும்!

    என் உயிர் போனால் போகட்டும்!
    என் புகழ் உடல் மட்டும் நிலைக்கட்டும்!
    தேனால் செய்த என் செந்தமிழ்தான்
    திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!

    என்று பாரதிதாசன் திக்கெட்டும் வளரும் தமிழைத் தடுக்காதே என்று ‘தமிழ் விடுதலை ஆகட்டும்‘, என்னும் கவிதையில் தமிழை ஒதுக்கிப் பெட்டிக்குள் மூடும் தமிழ் வெறுப்பு மேதாவிகளுக்குக் கூறுகிறார்.

    ***********
    சி. ஜெயபாரதன்

  16. Avatar
    Yoga.S says:

    இங்கே கருத்துரைத்த பலரும் வெளி நாட்டில் பிறந்த& வாழுகின்ற தமிழர்களின் தமிழ்க் குழந்தைகள் பற்றியே பேசியிருக்கின்றனர்.உண்மையில்,தாயகத்தில் தமிழ் மொழிப் பாவனையை விடவும் வெளி நாடுகளில் பிறந்த& வாழ்ந்து வரும் தமிழ்ப் பெற்றோர்களின் குழந்தைகளே,தமிழ் மொழியில் அதீத பற்றுக் கொண்டு கற்று பேசியும்,எழுதியும்,பரீட்சைகளில் சித்தி எய்தியும் வருகின்றனர்!சில மேலை நாடுகளில்,குறிப்பாக பிரான்ஸ் போன்ற தேசங்களில் பல்கலைத் தேர்வுக்கு “தமிழ்” மொழிப் பாண்டித்தியம் கூடுதல் தகைமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுக் கணிப்பிடுகிறார்கள்!சிலர் கூறுவது போல் அல்ல!வெளி நாடுகளில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கண்ட மேனிக்கு கருத்துரைக்க வேண்டாம்,நண்பர்களே!அன்றைய பிரெஞ்சுக் காலனி பாண்டிச்சேரி.இன்றும் அங்கே பிரெஞ்சு மொழிக் கல்விக் கூடம் உண்டு.ஆனால்,அங்கே பிறந்து வளர்ந்த குழந்தைகள்/பிள்ளைகள் பிரான்சில் தமிழ்ப் பாடசாலைகளில் தமிழ் கற்பது எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கிறது?புலம் பெயர்ந்தோர் அத்தனை ஐரோப்பிய&அமெரிக்க&ஆசிய நாடுகளிலும் தமிழ்ப் பாடசாலைகள் அமைத்து தமிழுக்கு சாகா வரம் கொடுத்திருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?///தமிழ் நாட்டில் இப்போது ஆட்சி செய்பவர் கான்வெட் இல் கற்றவர் ஆயிற்றே?காமராஜர் இல்லையே?///யாரோ “பெரிய” எழுத்தாளராம்.தமிழில் எழுதியே வயிறு வளர்ப்பவராம்.ஆங்கில மூலத்தில் தமிழ் வளர்க்கச் சொன்னாராம்!வரிந்து கட்டிக் கொண்டு வந்து விட்டார்கள்,ஆங்கிலம் என்று கூப்பாடு போட்டுக் கொண்டு!போங்கைய்யா போயி உங்க பொண்ணு,பையன்கள ‘சீன’ மொழியில கத்துக் கொடுக்க வழியைப் பாருங்க!

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      // யாரோ “பெரிய” எழுத்தாளராம்.தமிழில் எழுதியே வயிறு வளர்ப்பவராம்.ஆங்கில மூலத்தில் தமிழ் வளர்க்கச் சொன்னாராம்! //

      யோகா, அவர் சொன்னது இன்றைக்கே எல்லோரும் ஆங்கில மூலத்தில் தமிழில் எழுதவேண்டும் என்றல்ல. அவர் சொன்னதற்கு மேல்விளக்கமும் நீளமாக அளித்துவிட்டார். படியுங்கள்.

  17. Avatar
    பூவண்ணன் says:

    நீ தமிழ்நாட்டில் பிறந்தவன் ,தமிழை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு பிறந்தவன் என்பதால் சித்த மருத்துவம் தான் எடுத்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்த முடியுமா.அப்படி வற்புறுத்தினால் நியாயமா

    சித்த மருத்துவம் அழியாமல் தடுக்க வேண்டுமானால் தமிழர்கள் அனைவருக்கும் சித்த மருத்துவத்தை கட்டாயம் ஆக்க வேண்டும் என்று கூட குரல் எழுப்புவார்கள் போல.அல்லோபதி மருத்துவத்தை விட சித்த மருத்துவம் நல்லது,சிறந்தது என்பதை நிரூபிக்க ஆர்வலர்கள் முயற்சி செய்து வெற்றி பெற்றால் உலகம் முழுதும் சித்த மருத்துவத்திற்கு மாற போகிறது.அதனை யார் தடுத்தார்கள்.ஆனால் பிறப்பின் அடிப்படையில் மொழியையோ ,மருத்துவத்தையோ திணிப்பது,கட்டாயம் ஆக்குவது மக்கள் ஆட்சி அல்ல.நாகரீக சமூகத்தின் செயல் அல்ல

    அல்லோபதியோ சித்தாவோ எது வேண்டும் என்று முடிவு செய்வது தனிமனிதனின் உரிமை.அது மொழிக்கும் பொருந்தும்
    இலவச மிக்ஸ்சி ,லேப்டாப் போல தமிழை படித்தால் அரசு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தரும் என்று திட்டம் கொண்டு வாருங்கள்.தமிழ் ஆசிரியர்களுக்கு பல லட்சம் வேலை வாய்ப்புகளை உலகம் முழுதும் உருவாக்குங்கள்.தமிழ் படித்தால் வேலை கிடைப்பதை எளிதாக்கினால் தமிழை படிக்க கூட்டம் தன்னால் பறந்தோடி வரும்

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      நண்பர் பூவண்ணன்,

      “சித்த மருந்து” தலைப்பு ஓர் ஒவ்வாத வாதம்.

      ////அதனை யார் தடுத்தார்கள்.ஆனால் பிறப்பின் அடிப்படையில் மொழியையோ,மருத்துவத்தையோ திணிப்பது, கட்டாயம் ஆக்குவது மக்கள் ஆட்சி அல்ல. நாகரீக சமூகத்தின் செயல் அல்ல///

      எங்கே, யார் இப்படித் தமிழை வாயில் திணிக்கிறார் ? இதற்கு ஆதாரங்கள் வேண்டும்.

      இல்லாத பூதத்தை இருப்பதாய்க் காட்டித் தமிழரைப் பயமுறுத்துவது ஏன் ஏன் ஏன் ?
      சி. ஜெயபாரதன்

    2. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      அட கடவுளே, என்ன பூவண்ணன் சார் இந்த அளவுக்கு போகிறீர்கள் ?

      சித்த மருத்துவம் அழியாமல் காக்கப்படவேண்டும் என்றால் அது அலோபதியைவிட மேலானது, மிகத்தரமானது, நலம் விளைவிக்கக்கூடியது, அதிக பக்க விளைவுகள் இல்லாதது என்றெல்லாம் நிரூபித்துவிட்டால் போதும். சொல்லப்போனால் சித்த (மட்டுமல்ல, ஆயுர்வேதா போன்ற மாற்று) மருத்துவ முறைகளை அலோபதிக்கிணையாக சிறப்பான பரிசோதனை மற்றும் தரக்கட்டுப்பாடுகளாலும், தொடர்ச்சியான ஆராய்ச்சிகளாலும் போலி சித்த வைத்தியர்களை – குறிப்பாக “வாலிப வயோதிக அன்பர்களே” என்று கூவி கூவி அழைக்கும் – ஒழிப்பதன் மூலமுமே யாருக்கும் கட்டாயப்படுத்த தேவை இல்லாது போகும். அப்போது, சிங்கம் தனது வலிமையாலேயே காட்டரசனாவது போல மாற்று மருத்துவ முறைகள் தங்களது தனிச்சிறப்பாலேயே தமது வலிமையை நிரூபித்து நிலைநிறுத்திக்கொள்ள முடியும்.

      தமிழை எப்படி அப்படி நிரூபிப்பது, சொல்லுங்கள் ? ஜெயமோகன் சொல்வது போல, ஒரு மொழி கல்வியோடு தொடர்பில் இருக்கும்போதுதான் வாழும். அதற்கு அது எல்லாப்படங்களையும் கற்பிக்கும் மொழியாக இருக்க வேண்டும். அப்படி இருக்க வேண்டுமானால், அம்மொழிவழி கற்றவர்கள் கல்வி முடித்து வெளியேறும்போது அவர்களுக்கு தாங்கள் கற்ற வித்தையை கற்ற மொழி வழியே வெளிப்படுத்தவும், பயன்படுத்தி சமூகத்துக்கு பங்காற்றவும், தமது துறையில் படைப்பாளிகளாக உயரவும் வளமான வாய்ப்பு இருக்க வேண்டும். அதே மாதிரி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறையும் அதே மொழிவழியே இருக்கவேண்டும். அப்படி இருந்தால் தமிழை நாம் கட்டாயப்படுத்தவேண்டாம். படிப்பவர்கள் தாமாகவே தமிழையே “medium of instruction” ஆக தேர்வு செய்வர்.

      நமக்கு அப்படி ஏதேனும் ஒரு – ஒரே ஒரு வாய்ப்பாவது இருக்கிறதா ? தமிழ் மொழி வழி கற்றவனுக்கு, கணிதம் சார்ந்த அறிவியல், பொறியியல் துறைகளில், தமிழிலேயே உயர்கல்வி கற்கவோ, ஆராய்ச்சி செய்யவோ சிறப்பான கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா ?

      தமிழ் படித்தால் வேலை (அதுவும் உலகம் முழுக்க ??) என்றெல்லாம் உருவாக்க மாட்டேன் என்கிறார்களே, அதற்கு நடைமுறை சாத்தியமும் பெரிதாக இல்லையே ?

      அப்படி எதுவுமே இல்லாதபோது தமிழ் கொஞ்சமேனும் உயிர்ப்போடு இருக்க, நமக்கிருக்கும் ஒரே வழி கலை இலக்கியத்துறைதான். அது உயிர்ப்போடு இருக்க மக்கள் தமிழ் பேச மட்டும் தெரிந்தால் போதாது, பிழையற சரளமாக படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு பள்ளிகளில் பிள்ளைகள் தமிழையும் (கவனிக்கவும் “யும்”) ஒரு பாடமாக படிக்கவேண்டும்.

      தமிழகத்தில் பிறந்த – தமிழர்களுக்குப்பிறந்த – தமிழ்நாட்டு குழந்தைகள் எதற்கு தமிழை ஒதுக்கிவிட்டு சமஸ்கிருதத்தையோ, பிரெஞ்சு-ஐயோ படிக்க அரசு வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் ? ஆர்வமுள்ளவர்கள் தனியே படித்துக்கொள்ளலாமே ?

  18. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஸ்ரீ ஜெயமோகன் பரிந்துரை செய்திருந்தது தமிழை ஆங்கில எழுத்துருவில் எழுதும் விஷயம் சம்பந்தமாக. உர்தூ பாஷை பொதுவிலே அரபியில் எழுதப்படுகிறது. உர்தூ என்ற வடிவிலும் ஹிந்துஸ்தானி என்ற வடிவிலும் ஹிந்தி பாஷை பேசப்படும் மாகாணங்களில் உர்தூ பாஷையை பலரும் அறிவர். உர்தூ எழுதப்படிக்க அரபி என்ற இன்னொரு வரிவடிவத்தைக் கற்பதற்குப் பதில் தேவநாகர லிபியில் சில புதிய குறியீடுகள் அறிமுகம் செய்து உர்தூவை தேவநாகரத்தில் எழுதி தேவநாகரம் அறிந்தவரும் உர்தூ வாசிக்க வழிவகை செய்ததில் உர்தூ பாஷை வளர்ந்தது.

    முக்யமான உர்தூ தினசரிகள் அரபியில் அச்சிடப்பட்டாலும் உர்தூவை தேவநாகரம் வழியிலும் வாசிக்கிறார்கள். மாற்று எழுத்து வரிவடிவத்தால் ஒரு பாஷை அழியாது என்பதற்கு உர்தூ சாட்சி.

    தமிழ் மொழி எத்தனையெத்தனை வரிவடிவங்களை காலத்தே கொண்டிருந்தது. தமிழை பல நபர்கள் பல வரிவடிவங்களில் வாசித்துப் பயன் பெறுகிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

    நேபாளத்தைச் சார்ந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் பத்ரிநாத்தில் சின்ன ஜீயர் ஸ்வாமிகாரு அவர்களின் அஷ்டாக்ஷரி மடத்தில் கைங்கர்யபரர்களாக உள்ளனர். இவர்களில் பலர் விஜயவாடாவில் அத்யயனம் செய்தவர். நித்யானுசந்தானத்துக்கு வேண்டிய திருப்பல்லாண்டு, திருப்பாவை, பல தனியன் கள் ஆகிய அனைத்தையும் விஜயவாடாவில் அத்யயனம் செய்த படிக்கு இவர்கள் அனைவரும் தெலுகு லிபியில் வாசித்ததைக் கண்டேன். ஆச்சரியப்பட்டேன்.

    இங்கே உத்தர பாரதத்தில் நாலாயிரம் வாசிப்பதில் பல ஹிந்தி பாஷியினரும் ஆர்வமிகுந்து உள்ளனர். இவர்களுக்காக வேண்டி தேவநாகர லிபியில் நித்யானுசந்தானத்துக்கு வேண்டிய அனைத்துப் பாசுரங்களும் தேவநாகரத்தில் அச்சிடப்பட்டு இவர்களுக்கு போதிக்கப்பட்டு வருகிறது.

    தில்லி மலைமந்திரில் கந்தர் அனுபூதியை அருமையாக சொல்லும் இஷ்மிந்தர்ஜித் சிங்க் அவர்களுக்கும் தமிழ் வரிவடிவம் பரிச்சயமில்லை என்றே அறிகிறேன். தகவல் தவறானால் திருத்தலாம்.

    இதிலெல்லாம் தமிழ் மொழியின் வளர்ச்சி தென்படுகிறதே அல்லாது அழிவு ஏதும் இல்லை.

    தமிழ் வரிவடிவத்துக்கு கோஷம் போடுபவர்கள் தமிழ் மொழி அறியாத மாற்று மொழியனருக்கு தமிழ்ப் பாசுரங்கள் பனுவல்கள் கற்பிக்க என்ன முயற்சி எடுத்துள்ளனர் என்றால் பூஜ்யம் என்று சொல்லிவிடலாம்.

    அன்பர் பூவண்ணன் அவர்களிடமிருந்து நான் மாறுபடும் விஷயம் – பெற்றோர் தம் பிள்ளைகளுக்குத் தங்கள் தாய்மொழியையே கற்பிக்க வேண்டும் என்பதில் நான் உறுதி கொண்டமை.

    காஷ்மீரத்திலிருந்து மதவெறி இஸ்லாமிய வாதத்தால் விரட்டப்பட்டு தில்லியில் வாழும் காஷ்மீரக் குடும்பங்களில் அடுத்த தலைமுறையினர் காஷ்மீர பாஷை முற்றிலும் அறியார். ஹரியாணாவில் வசிக்கும் பல பஞ்சாபி ஹிந்துக் குடும்பங்களில் பஞ்சாபி பாஷை பேசப்படுவதே இல்லை. இவை குறைபாடுகளே. ஆனால் இது போன்ற நிலை தமிழ்க்குடும்பங்களில் இல்லை. பின்னும் பல தமிழ்க்குடும்பங்களில் சூழல் காரணமாக ஹிந்தி கலந்த தமிழ் பேசுவது (குறிப்பாக பெயர்ச்சொற்கள் – விதிவிலக்காக சில வினைச்சொற்களும் ஹிந்தியிலிருந்து கடன் வாங்கப்படுகிறது) கிட்டத்தட்ட ஒரு மஜ்பூரியாகி விட்டது என்பதையும் மறுக்க இயலாது.

  19. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    N Deiva Sundaram
    12:13 AM (8 hours ago)
    Reply to all
    to poongundran, Tamilmanram, iraamaki, Elangovan

    அன்புள்ள இராம்கி ஐயா அவர்களுக்கு,

    மொழி, மொழி உணர்வு, மொழியும் சமுதாயமும், மொழியும் நரம்பியல் மண்டலமும், மொழி ஜனநாயகம், மொழிக்கல்வி ….. இவை எதுபற்றியுமே அறிவியல் அடிப்படையிலான உண்மைகளைத் தெரிந்துகொள்ள விருப்பமில்லாமல், தனக்குத் தோன்றியதையெல்லாம் ‘தனிமனித உரிமை’ என்ற பெயரில் கூறுகின்றவர்களைப் பற்றித் தாங்கள் கவலைப்படத் தேவை யில்லை. தனிமனிதனுக்கும் அவன் வாழும் சமுதாயத்திற்கும் இடையிலான இயங்கவியல் உறவுகளைத் தெரிந்து கொள்ளா தவர்கள் இவர்கள். ஒருவர் ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்தவர்களாக, பெரும் பணியாற்றியவர்களாக இருக்கலாம். அந்தத் துறையில் அவர்கள் கருத்து தெரிவிக்கலாம். ஆனால் ஒரு சிலர் அவ்வாறு செய்வதைவிட்டுவிட்டு, பிற அறிவியல் துறைகளில் – குறிப்பாக மொழித் துறையில் – அதனுடைய எவ்வித அடிப்படையையும் தெரிந்துகொள்ளாமல் – தெரிந்து கொள்ள முயற்சிக்காமல் – கருத்து தெரிவிக்கிறார்கள். இதற்குத் தாங்கள் என்ன செய்யமுடியும்? இயற்பியல் அடிப்படை தெரியாமல், ஒருவர் புரோட்டான் என்பது எதிர்மின்னி, எலெக்ட்ரான் என்பது நேர்மின்னி என்று கூறினால், அதற்கு மறுப்பு தெரிவித்து எழுதிக்கொண்டிருக்க முடியுமா? அவ்வாறு அவர் சொல்வதாலேயே அது உண்மை யாக இருந்து விடமுடியுமா? அவர்களது அறிவின்மைதான் வெளிப்படும்.

    தமிழ் ஆய்வாளர் … அறிஞர் … என்று ஒருவர் அழைக்கப் படவேண்டுமென்றால், அதற்குரிய தகுதியை அவர் பெற்றிருக்க வேண்டும். மொழி ஆய்வு வேறு.. இலக்கிய ஆய்வு வேறு … இலக்கியத்திலும் இலக்கியப் படைப்பு வேறு. இலக்கிய ஆய்வு வேறு … இலக்கிய இரசிப்பு வேறு. மொழி ஆய்விலும் பல உட்பிரிவுகள் உள்ளன. பல்கலைக்கழகத்தில்தான் பட்டம் பெற்றிருக்கவேண்டும் என்று அவசியமில்லை. குறிப்பிட்ட துறையில் அறிவைப் பெற முயற்சித்திருக்கவேண்டும். ஒருவர் எந்தத் துறையில் தனது தகுதிகளை வளர்த்துக்கொண்டிருக்கிறாரோ, அத்துறைசார்ந்த செய்திகளில் கருத்துகள் தெரிவிக்கலாம். தனக்குத் தொடர்பில்லாத துறையாக இருந்தால், அத்துறையில் செயல்படுவர்களைக் கலந்து, கருத்துகளை முன்வைப்பது நல்லது.

    உடலுக்கு ஒரு முக்கிய பிரச்சினை என்று வந்துவிட்டால், எம்பிபிஎஸ் மருத்துவரை விட, எம்டி மருத்துவரைவிட, எம்சிகெச் அல்லது டிஎம் மருத்துவரையே பார்க்க வேண்டு மென்று செல்கிறோம். ஆனால் தமிழ்மொழிதொடர்பான பிரச்சினை என்றால், யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். தமிழ் பேசத் தெரிந்தாலே போதும். அல்லது எழுதத் தெரிந்தாலே போதும். தமிழ் அறிஞர் என்று சொல்லிக் கொள்ளலாம். தமிழைக் கற்றுக்கொடுக்கலாம். தமிழ்மொழி பற்றிக் கருத்துகளை அள்ளிவீசலாம். ஒரு இனத்தின் மொழியைப் பாதுகாப்பதில், அதைத் தாய்மொழியாகக்கொண்ட அனைவருக்கும் கடமையும்உண்டு. உரிமையும் உண்டு. இதை யாரும் மறுக்கமுடியாது. இது மொழிக்கொள்கை ( Language Policy) தொடர்பானது. ஆனால் அம்மொழியைத் திட்டமிட்டு வளர்ப்பதற்கான முயிற்சியில் அம்மொழியின் ஆய்வில் தேர்ச்சிபெற்றவர்களே ஈடுபடமுடியும். ஈடுபடவேண்டும். இது மொழிவளர்ச்சித்திட்டம் (Language Planning/ Language Engineering ) தொடர்பானது. இரண்டையும் வேறு படுத்தாமல், பலர் குழம்புகின்றனர். பிறரையும் குழப்புகின்றனர்.

    மேற்கூறிய வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ளாமல், தமிழ் மொழி பற்றிப் பலர் பேசிவருகின்றனர். இது கவலைக் குரியதாகும்.

    மொழிக்கொள்கையின் அடிப்படையில் ஒருவர் தமிழகத்தில் தமிழைக் கற்பது கட்டாயம் என்று கூறினால், அதை ‘மொழி வெறி’ என்று கூறலாமா? இது மொழி ஜனநாயகம் அல்லது இன உணர்வு ஆகும். இதில் எவ்விதத் தவறும் இல்லை.

    தமிழின் கட்டமைப்பைத் தெரிந்துகொள்ளாமல், ஒருவர் ‘தமிழ் எழுத்தை மாற்று, சொல்லை மாற்று’ என்று கூறும்போது, அதைத் தவறு என்று தமிழ் ஆய்வாளர்கள் மொழி வளர்ச்சித் திட்ட அடிப்படையில் கூறினால், அதை ‘மொழி வெறி’ என்று கூறலாமா?

    மடல் நீண்டுவிட்டது. மன்னிக்கவும்.

    அன்புடன்
    ந. தெய்வ சுந்தரம்

    +++++++++++++++
    நன்றி நண்பர் தெய்வசுந்தரம்.
    சி. ஜெயபாரதன்

  20. Avatar
    பூவண்ணன் says:

    தோழர் தெய்வசுந்தரம் அவர்களுக்கு

    இங்கு பிரச்சினை தமிழ் சிறந்ததா மற்ற மொழிகள் சிறந்ததா எனபது அல்ல.தமிழ் சிறந்த அற்புதமான மொழி தான்.
    பிரச்சினை வேறு -நான் யாரை திருமணம் செய்ய வேண்டும் ,என்ன படிக்க வேண்டும்,என்ன தொழில் செய்ய வேண்டும்,எந்த கடவுளை வழிபட வேண்டும் என்பதை பிறப்பு தீர்மானிப்பதை சரி என்கிறீர்களா

    மேற்கூறப்பட்ட அனைத்திலும் தனிமனிதனின் விருப்பம் தான் முக்கியம்,அவன் விரும்பும் கடவுளை அல்லது கடவுள் மறுப்பை,படிப்பை,தொழிலை,வாழ்க்கை துணையை சாதி,மதம்,இனம் பிறப்பு கடந்து அவன் தேர்தெடுக்கலாம் என்று வாதிடும் பலர் மொழி என்று வரும்போது பிறப்பின் அடிப்படையில் தாய்மொழி கட்டாயம் எனும் முரண் தான் கேள்வி கேட்க்க வைக்கிறது.

    தாய் தந்தையின் மதம் தான் முக்கியம்,சாதிசடங்குகள் தான் கலாசாரம்,அவர்கள் பலதலைமுறைகளாக செய்து வந்த குலத்தொழிலை தான் இன்றைய தலைமுறையும் தொடர வேண்டும் என்பவர்கள் தாய்மொழி தான் முக்கியம் என்றால் சரி.அவர்கள் அடிப்படைவாதிகள்.அனைத்திலும் முற்போக்காக இருந்து கொண்டு தனி மனித விருப்பத்திற்கு முதலிடம் கொடுத்து விட்டு மொழி விஷயத்தில் பிறப்பின் அடிப்படையில் கட்டாய தாய்மொழி என்று பிறப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பது உறுத்தவில்லையா

    பல நூறு ஆண்டுகள் வழிபட்ட கடவுளை மறுக்கும் உரிமை உண்டு.அல்லது வேறு கடவுளுக்கு தாவ உரிமை உண்டு ஆனால் மொழியில் அப்படி செய்ய உரிமை கிடையாது என்று வாதிடுவது சரியா

    உலகில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தமிழை விரும்பி படிக்கும் நிலை உருவானால் மிக்க மகிழ்ச்சி தான்.ஆனால் பிறப்பின் அடிப்படையில் வலுக்கட்டாயமாக படிக்க வைத்து தான் தமிழை வாழ வைக்க முடியும் என்ற எண்ணம் சரியானதாக எனக்கு தோன்றவில்லை.

    வேறு மொழியை தாய்மொழியாக கொண்டவர்களை துணையாக கொண்டவர்களுக்கு பிறந்த செல்வங்களுக்கு எது கட்டாய மொழி.வேறு மொழியை பேசுபவர்களை திருமணம் செய்து கொள்ளகூடாது ,அதனால் மொழி அழியும் என்றும் கூட வாதிடலாம்
    பிறப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட மொழி கட்டாயம் என்ற கருத்தை மட்டும் தான் எதிர்க்கிறேன்.தமிழை பல கோடி மக்களிடம் கொண்டு சேர்க்க கட்டாயம் இல்லாமல் செய்யப்படும் அனைத்து முயற்சிகளையும் இரு கை தட்டி வரவேற்கிறேன்.

  21. Avatar
    பூவண்ணன் says:

    அனைவரும் ஆங்கிலத்தை பயன்படுத்தி தமிழை எழுத வேண்டும் என்பதை நான் எங்கே ஆதரித்தேன்.அப்படி எழுதும் உரிமையை யாரும் தடுக்க முடியாது என்று தானே கூறினேன்.

    அனைவரும் அப்படி ரோமன் எழுத்துருவுக்கு மாற வேண்டும்,பள்ளிகளில் ரோமன் எழுத்துரு கொண்டு தமிழ் கற்பிக்க படவேண்டும் எனபது சரியான ஒன்று அல்ல என்று தானே எழுதி உள்ளேன்

    தென்னாப்ரிகா,மேற்கு இந்திய தீவுகள் சென்ற பல லட்சம் தமிழர்களில் 99 சதவீதத்தினருக்கு தமிழ் தெரியாது.பெயரில் மட்டும் தமிழ் இருக்கிறது. மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் வீரசாமி பெர்மால் என்று பெயரும் பெர்மால் ஆகி விட்டது.சில வெளிமாநில தமிழ் சங்கங்களில் இருந்த அனுபவம் எனக்கு உண்டு.
    தோழர் யோகா கூறுவது போல தங்கள் வாரிசுகள் தமிழை எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்று எண்ணி படிக்க வைப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.அவர்கள் மற்றும் அவர்களின் வேறு மொழி உறவினர்கள்/நண்பர்கள் தமிழ் மீது ஆர்வம் கொள்ள அவர்கள் படித்த/அவர்களுக்கு தெரிந்த எழுத்துருவில் பதிப்பிக்கப்பட்ட தமிழ் புத்தகங்கள் உதவினால் நல்லது தானே

  22. Avatar
    suvanappiriyan says:

    சில முஸ்லிம்கள் தாய் மொழியான தமிழை விட அரபுக்கு ஒரு மரியாதையை கொடுப்பர். இஸ்லாமிய பார்வையில் மொழியை எப்படி அனுகுவது என்பதைப் பார்ப்போம்.

    ‘வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.’ – குர்ஆன் 30 :22

    மேற்கண்ட வசனத்தின் மூலம் மொழிகள் வேறுபட்டிருப்பதையும், மனிதனின் நிறங்கள் வேறுபட்டிருப்பதையும் தன்னுடைய அத்தாட்சிகளில் ஒன்றாக இறைவன் கூறுகிறான். இதன் மூலம் நிறங்களை வைத்து மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வை கற்பிப்பதும், மொழிகளை வைத்து ஏற்றத் தாழ்வு கற்ப்பிப்பதும் கூடாது என்பது விளங்குகிறது.

    குர்ஆன் அரபி மொழியில் இருக்கிறது. எனவே அது தேவ பாஷை என்ற அந்தஸ்த்தைப் பெறுமா? கண்டிப்பாக இல்லை. முகமது நபி அரபுகள் மத்தியில் தோன்றுகிறார். அவருக்கு தெரிந்த ஒரே மொழி அரபு மட்டுமே! எனவே குர்ஆன் அரபு மொழியில் இறங்கியது. முகமது நபி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் குர்ஆன் தமிழ் மொழியிலேயே அருளப் பட்டிருக்கும்.உலக மக்களுக்கு இறை செய்தியை சொல்லுவதற்கு உலக வழக்கில் உள்ள ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தாக வேண்டும்.

    உதாரணத்துக்கு நமது தேசிய கீதத்தை எடுத்துக் கொள்வோம். ஜன கன மன என்றவுடன் ஒரு வித மரியாதையில் எழுந்து நின்று நாட்டுப் பற்றை எடுத்துக் காட்ட மரியாதை செய்கிறோம். இதனால் வங்காள மொழி சிறந்தது என்றாகி விடுமா? பல மொழிகள் பேசும் நம் நாட்டில், ஏதோ ஒரு மொழியில் தேசிய கீதம் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறோம். அதே போல் இறைவனின் கட்டளைகளை சொல்வதற்கு கடைசியாக பயன் படுத்தப் பட்டது அரபி மொழி. எனவே தான் குர்ஆன் அரபு மொழியில் இறங்கியது. இதனால் அரபு மோழி மற்ற மொழிகளையெல்லாம் விட சிறந்த மொழி என்று நினைப்தே இஸ்லாத்துக்கு மாற்றமானது.

    அதே போல் தாய் மொழியான தமிழின் மீது பற்று இருக்க வேண்டும். அதே நேரம் மற்ற மொழிகளை கீழாக்கி தாய் மொழியை உயர்த்தும் மொழி வெறியையும் தவிர்க்க வேண்டும்.

  23. Avatar
    ஷாலி says:

    //இவை எதுபற்றியுமே அறிவியல் அடிப்படையிலான உண்மைகளைத் தெரிந்துகொள்ள விருப்பமில்லாமல், தனக்குத் தோன்றியதையெல்லாம் ‘தனிமனித உரிமை’ என்ற பெயரில் கூறுகின்றவர்களைப் பற்றித் தாங்கள் கவலைப்படத் தேவை யில்லை.//

    பேராசிரியப்பெருந்தகை.ஜெயபாரதன் அவர்களே!சரியாகச் சொல்லி விட்டீர்கள்.நண்பர் திரு.பூவண்ணன் அவர்களின் மது விலக்கு கட்டுரையை படித்த பின்பு நான் பின்னூட்டம் போடுவதை நிறுத்திக் கொண்டேன்.காரணம் தாங்கள் மேலே சொன்ன உண்மையை உணர்ந்ததே.

  24. Avatar
    பூவண்ணன் says:

    ஷாலி சார்

    மதுவிலக்கு சாத்தியமா கட்டுரைக்கு பிறகு தான் லட்சக்கணக்கில் பெண் சிசுகொலைகள் நடக்கும் குஜராத் பற்றி எழுதினேன்.அது இனிக்கிறது.நமக்கு வேண்டிய உண்மைகள் இனிப்பாகவும் வேண்டாதவை கசப்பாகவும் இருப்பது சரியா

    தமிழை தாய்மொழியாக கொண்ட பெற்றோருக்கு பிறந்த குழந்தை தமிழில் படித்ததால் தமிழை தாய்மொழியாக கொண்ட எனக்கும் உருதுவை தாய்மொழியாக கொண்ட என் மனைவிக்கும் பிறந்த ஆங்கிலத்தில் படிக்கும் என் குழந்தையை விட கல்வியில்,அறிவில் சிறந்து விளங்கும் என்று எந்த அறிவியல்பூர்வமான ஆராய்ச்சி கூறுகிறது.தனக்கு சாதகமாக அறிவியலின் கருத்துக்களை மாற்றி கொள்வது அறிவியலுக்கு இழைக்கும் மிக பெரிய அநீதி

  25. Avatar
    ஸ்ரீவிஜி says:

    இந்தப்பகுதியில் பூவண்ணன் அவர்களின் கட்டுரையும் கருத்தையும் தவிர்த்து மற்ற அனைத்து விடயங்களும் சலிப்பூட்டும் சங்கதிகளே. ஏற்கனவே பலமுறை கேட்டுக்கேட்டு படித்துப் படித்து புளித்துப்போன கருத்துகள். இன்னமும் விடாமல் பிடித்துத்தொங்கிக்கொண்டிருக்கின்றார்கள். இதுக்கு மட்டும் முடிவே இல்லை. என்ன மாதிரியான கருத்துக்களை முன் வைத்தாலும், சீனன், மலையாளி, தெலுங்கு என்கிற ஓப்பீட்டால் உவமை கூறுவது மட்டும் மாறாது.

    ஜெர்மன் மொழி படித்த ஒருவன் ஜெர்மனியில் வேலைக்குச்சென்று அங்கேயே செட்டல் ஆகலாம். தமிழ் மொழியில் படித்த ஒருவர் தமிழகத்தில் வந்து வேலை செய்ய முடியுமா? வேலைதான் கிடைக்குமா? (இது ஒரு சிறிய உதாரணம் -)

    மொழிப்பற்று என்கிற பெயரில், கருத்துப்பரிமாற்றம் என்கிற பா(போ)ர்வையில் பலரின் மனங்களை ரணமாக்கியதுதான் பல பற்றாளர்கள் செய்த மிக நல்ல காரியம். ம்ம் சர்ச்சையை ஒரு பக்கம் தொடருங்கள், எதையும் பொருட்படுத்தாமல் போய்க்கொண்டிருப்பவர்கள் நல்லபடியே வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் மேலும் சிறப்பாக.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      தாய்மொழியைத் தமிழர்கள் துறந்தார்களென்றால், அம்மொழி அழிய, தமிழர் என்ற அடையாளமே இருக்காது !தமிழன் என்று ஒருவர் இவ்வுலகில் இருக்க மாட்டார். ப்ல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.

      ஜயபாரதன் சொல்வது போல வேலை வாய்ப்புக்களுக்காக எதையும் படித்துக்கொள்ளவும். உங்கள் தமிழர் என்ற அடையாளத்தைக் காக்க செருமன் மொழி உதவுமா? . அடையாளம் இல்லாமல் எப்படி வாழமுடியும்?

      உங்களால் முடிந்தால் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!

  26. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    நண்பர் பூவண்ணன்,

    “சித்த மருந்து” தலைப்பு ஓர் ஒவ்வாத வாதம்.

    ////அதனை யார் தடுத்தார்கள்.ஆனால் பிறப்பின் அடிப்படையில் மொழியையோ,மருத்துவத்தையோ திணிப்பது, கட்டாயம் ஆக்குவது மக்கள் ஆட்சி அல்ல. நாகரீக சமூகத்தின் செயல் அல்ல///

    பிறப்பின் அடிப்படை என்றால் என்ன ? எந்த ஜாதிக்கு இந்த மொழித் திணிப்புக் கட்டுப்பாடு நிகழ்கிறது ?

    தமிழ் நாட்டிலே தமிழ் கட்டாய பாடமாகச் சட்டப்படி இல்லாத போது இந்தியாவின் எந்தப் பகுதியிலே எந்த இனத்து வாயிக்குள் தமிழ் மொழி திணிக்கப் படுகிறது ?

    வேறு எங்கே, யார் இப்படித் தமிழை ஓரினத்தின் மீது வாயில் திணிக்கிறார் ? இதற்கு முழு ஆதாரங்கள் எடுத்துக் காட்ட வேண்டும்.

    இல்லாத பூதத்தை எல்லாம் இருப்பதாய்க் காட்டித் தமிழரைப் பயமுறுத்துவது ஏன் ஏன் ஏன் ?

    சி. ஜெயபாரதன்

  27. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    விஜி அவர்களே,

    //ஜெர்மன் மொழி படித்த ஒருவன் ஜெர்மனியில் வேலைக்குச் சென்று அங்கேயே செட்டல் ஆகலாம். தமிழ் மொழியில் படித்த ஒருவர் தமிழகத்தில் வந்து வேலை செய்ய முடியுமா? வேலைதான் கிடைக்குமா? (இது ஒரு சிறிய உதாரணம் -)///

    தமிழ் மட்டும் படித்தால் போதும் என்று யார் இங்கு தர்க்கம் செய்கிறார் ? வேலை வாய்ப்புகள் அதிகம் தரும் ஆங்கில மொழிக் கல்வியைக் கற்கத் தடை செய்வது யார் இங்கு ?
    சி. ஜெயபாரதன்

  28. Avatar
    பூவண்ணன் says:

    ஜெயபாரதன் சார்

    பிறப்பால் ஒருவன் மேல் திணிக்கப்படும் சாதி,மதம்,கடவுள்,தொழில் அனைத்தையும் அவன் உதறி விட்டு அவனுக்கு என்ன வேண்டும் என்பதை அவன் விருப்பத்தின் பேரில் முடிவு எடுக்கலாம் என்பதை வலியுறுத்தும் முற்போக்காளர்கள் மொழி விஷயத்தில் பிறப்பின் அடிப்படையில் கட்டாயம் தாய்மொழி கல்வி வேண்டும் என்று முரண்படுவது ஏன் என்ற வினா தான் இந்த பதிவு

    தந்தையின் மதம்,சாதி,தொழில் முக்கியம்,மிகவும் புனிதம் மாற்ற முடியாது,கூடாது என்பவர்களை போல பிறப்பால் வரும் தாய்மொழி முக்கியம்,கட்டாயம் என்று முற்போக்காளர்கள் வாதிடுவதை என்னால் விளங்கி கொள்ள முடியவில்லை.

    யாருக்கு கட்டாய தமிழ்,தமிழ் வழி கல்வி வேண்டும் என்று மொழி ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.பிறப்பின் அடிப்படையில் தானே அந்த வற்புறுத்தலை செய்கிறார்கள்.

    கட்டாயபடுத்தி தமிழையோ,சித்த மருத்துவத்தையோ வளர்க்க முடியாது.கட்டாயம் இல்லாமல் பிறப்பால் தமிழராக இல்லாதவர்களையும் தமிழின் பால் ஆர்வம் கொள்ள வைத்தால் தமிழ் வளரும்,தழைக்கும்.
    ஆர்வம் உள்ளவர்கள் ,மொழி மீது காதல்,பற்று கொண்டவர்கள் அதற்காக உழைக்க வேண்டுமே தவிர பிறப்பை வைத்து நீ கட்டாயம் தமிழ் வழி கல்வியில் படிக்க வேண்டும்,தமிழை படிக்க வேண்டும் என்று வெறி கொண்டு திணிக்க கூடாது
    இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை அரசு அறிமுகபடுதியதற்க்கு மக்களிடம் பெரும் ஆதரவு.ஆனால் மொழி வெறியர்களிடம் கடும் எதிர்ப்பு.இந்த முரண் ஏன் என்று மொழி பற்று கொண்டவர்கள் சிந்திக்க வேண்டாமா

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      நண்பர் பூவண்ணன்,

      கோடிக்கணக்கான உலகத் தமிழருக்கு, தாய்மொழி தமிழாக இருக்கையில் கல்வியைத் தமிழ் மூலம் பெற விரும்புவது பெரும்பான்மைத் தமிழரது பிறப்புரிமை. அதை மொழிவெறி என்று முத்திரை இடுவது மூடத்தனமானது.
      அதைத் தடுப்பது அவரது உரிமையைப் பறிப்பது.
      இந்த முறைப்பாடு ஆங்கில வழியில் கல்வி கற்பதைத் தடுக்கவும் இல்லை. நிறுத்தவும் இல்லை. ஒரு சிலர் அதை எதிர்ப்பதும் அவரது பிறப்புரிமை.
      சி. ஜெயபாரதன்.

      1. Avatar
        பூவண்ணன் says:

        ஜெயபாரதன் சார்

        நான் சொல்வதை அப்படியே எதிர்மறையாக புரிந்து கொள்வது ஞாயமா.தமிழ் வழி கல்வியை எங்கே தவறு என்கிறேன்.தமிழனாக பிறந்தவன்,தமிழை தாய்மொழியாக கொண்டவன் கண்டிப்பாக தமிழில் தான் படிக்க வேண்டும்,கட்டாயம் தமிழை படிக்க வேண்டும் என்பதை தானே சரியா என்று கேட்கிறேன்.ஆங்கில வழி கல்வியில் படிக்க விரும்புபவனை கூடாது நீ பிறப்பால் தமிழன் என்பதால் தமிழில் தான் படிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது அநியாயம் இல்லையா
        என்னை பொருத்தவரை இந்த பிறப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட மொழி கட்டாயம் எனபது குலகல்வி போல இனமொழி திட்டம் தான்.
        தமிழை வளர்க்க வேண்டுமானால் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் ஹிந்தி பிரசார சபா போல தமிழ் பயிற்றுவிக்கும் மன்றங்கள் துவங்கி அங்கு வசிக்கும் தமிழர்கள் மற்றும் வேறு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழ் படிக்க உதவலாம். தமிழகத்தில் தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு மாதந்தோறும் ஊக்க தொகை வழங்கலாம்.தமிழ் மொழியில் மேற்படிப்பு,ஆராய்ச்சி செய்பவர்களுக்கு சிறப்பூதியங்களை லட்சக்கணக்கில் வழங்கலாம்.தமிழ் படித்தவர்களுக்கு பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாகும்.தமிழ் தாய் சிலைக்கு ஒதுக்கப்படும் பணத்தில் 200 மாவட்டங்களில் 25 ஆண்டுகளுக்கு தமிழை கற்றும் தரும் வாய்ப்புகளை உருவாக்க முடியும்
        மத்திய அரசு இந்திக்கு பணம் ஒதுக்கி இந்தியா முழுவதும் பரப்ப முயற்சிப்பது போல மாநில அரசும் தமிழ் கற்பிக்கும் மன்றங்களை உருவாக்கலாம்.விருப்பத்தை தூண்ட வேண்டியது,விரும்புகிறவர்கள் எளிதில் படிக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்பது,அப்படி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தான் மொழி ஆர்வலர்களின்,மொழியின் மீது பற்று உள்ள அரசின் கடமையே தவிர பிறப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் கட்டாயம் அந்த மொழியை படிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது அல்ல

        1. Avatar
          சி. ஜெயபாரதன் says:

          நண்பர் பூவண்ணன்,

          தமிழ்மொழியை எப்படிப் பரப்ப வேண்டும் என்பது இங்கே ஏற்ற தர்க்கத் தலைப்பில்லை.

          //தமிழனாக பிறந்தவன்,தமிழை தாய்மொழியாக கொண்டவன் கண்டிப்பாக தமிழில் தான் படிக்க வேண்டும்,கட்டாயம் தமிழை படிக்க வேண்டும் என்பதை தானே சரியா என்று கேட்கிறேன்.ஆங்கில வழி கல்வியில் படிக்க விரும்புபவனை கூடாது நீ பிறப்பால் தமிழன் என்பதால் தமிழில் தான் படிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது அநியாயம் இல்லையா
          என்னை பொருத்தவரை இந்த பிறப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட மொழி கட்டாயம் எனபது குலகல்வி போல இனமொழி திட்டம் தான் ///

          இப்படித் தமிழ்நாட்டிலே எங்கே கல்வெட்டில் எழுதப் பட்டுள்ளது? இப்படி ஒரு சட்டம் எங்கே இருக்கிறது ?
          இது முழுக்க முழுக்க உங்கள் வாய்மொழி. இது உங்கள் கற்பனைக் கருத்து. இல்லாத ஒரு கோட்பாடு.
          முந்தைய பதிலில் இதற்கு நான் ஆதாரங்கள் கூறச் சொன்னேன். எங்கே அந்த ஆதரங்கள் ????
          சி. ஜெயபாரதன்

          1. Avatar
            பூவண்ணன் says:

            http://dinamani.com/latest_news/2013/06/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95/article1639413.ece

            தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் சார்பில் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் காந்திசாலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் காஞ்சி அமுதன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அரசு பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் தொடங்கும் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழி வகுப்புகளைத் தமிழ் வழி வகுப்புகளாக மாற்ற வேண்டும்

            பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழி மெட்ரிக்குலேசன் உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் சேர்ப்பதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிற அவலத்தை போக்க வேண்டும். இந்த அவலத்தைப் போக்க தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் தமிழைக் கட்டாயப் மொழிப்பாடமாகவும், கட்டாய பயிற்று மொழியாகவும் இருக்கும்படித் தமிழக அரசு சட்டமியற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்

            திராவிட இயக்கமும், ஆட்சி செய்த திராவிட கட்சிகளின் அரசுகளும் தமிழ் மொழியை கட்டாயம் ஆக்காமல் ,ஆங்கில வழி கல்வியை தமிழகத்திற்குள் நுழைத்து தமிழை அழித்து விட்டனர் என்ற குற்றசாட்டு இப்போது தமிழ் தேசியர்களால் தினந்தோறும் வைக்கபடுகிறது.

            கட்டாய தமிழ்,தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் வழி கல்வி எனபது அவர்களின் முக்கிய கோரிக்கையாகும்.அவர்களில் பலர் உள்ளுக்குள்@ உண்மையில் எப்படியோ ஆனால் வெளியில் சாதி,மத எதிர்ப்பாளர்கள்.பிறப்பின் அடிப்படையில் பிறந்த சாதி,மதத்தை திணிப்பது தவறு என்ற எண்ணம் கொண்டவர்கள் பிறப்பின் அடிப்படையில் மொழியை திணிக்கலாம் என்று கூறும் முரண் தான் கேள்வி கேட்கபடுகிறது.

            மொழி வெறி,சாதி,மதவெறி,இன வெறி எல்லாம் ஒன்றோடொன்று இணைந்து பிணைந்தவை.ஒன்று இன்னொன்றிற்கு தான் அழைத்துசெல்லும்

  29. Avatar
    பூவண்ணன் says:

    மரபணுவை வைத்து ஒருவரின் தாய்மொழி எது என்று கண்டுபிடிக்க முடியுமா

    http://hms.harvard.edu/news/genetics-proves-indian-population-mixture-8-8-13

    In 2009, Reich and colleagues published a paper based on an analysis of 25 different Indian population groups. The paper described how all populations in India show evidence of a genetic mixture of two ancestral groups: Ancestral North Indians (ANI), who are related to Central Asians, Middle Easterners, Caucasians, and Europeans; and Ancestral South Indians (ASI), who are primarily from the subcontinent.
    தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கும்,மலையாளத்தை,தெலுங்கை ,துளுவை,கன்னடத்தை தாய்மொழியாக கொண்டவர்களுக்கும் மரபணு ரீதியாக வித்தியாசங்கள் உண்டு என்று அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றனவா அல்லது அனைவரும் ASI என்ற ஒரே மரபணு கூட்டத்தின் கீழ் வருகிறார்கள் என்பதை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றதா

    மணிப்பூரில்,நாகாலாந்தில் சில ஆண்டு காலம் வசித்து உள்ளேன்.ஒவ்வொரு 25 மைல் தூரத்திற்கும் ஒவ்வொரு மொழி உண்டு.99 சதவீத மொழிகளுக்கு எழுத்துரு கிடையாது.இப்போது ரோமன் எழுத்துருக்களை கொண்டு அவர்கள் மொழியில் பத்திரிக்கை நடத்துகிறார்கள்.அவர்கள் யாரும் அறிவாளி ஆக முடியாதா.புது எழுத்துரு உருவாக்கும் முயற்சிகளும் நடக்கின்றன.

    எழுத்துரு இருக்கும் மொழி பேசுபவர்கள் சாதியினால் உயர்நிலையில் வைக்கப்பட்டுள்ள உயர்சாதியினருக்கு இருக்கும் திமிர் ,கர்வம் போல மொழியை வைத்து கர்வம் கொள்வது வேதனையான ஒன்று.
    குறிப்பிட்ட மொழியில் படித்தால் அவர்கள் பெரும் அறிவாளிகளாக ஆவார்கள் என்று சுயதம்பட்டம் வேறு.subjective அறிவியல் ஆய்வுகளை அசைக்க முடியாத ஆதாரங்களாக எண்ணும் மனநிலை சரியான ஒன்றா சுயமுயற்சியால்,சொந்த தேடலால் வராமல் பிறப்பால் வரும் எதனை கொண்டும் கர்வம் கொள்வது வெறி நிலைக்கு தான் ஒருவனை அழைத்து செல்லும்

  30. Avatar
    பூவண்ணன் says:

    இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசின் பள்ளிகளில் தமிழக அரசு தன் செலவில் தமிழ் ஆசிரியரை நியமிக்கலாம்.இதை பார்த்து மற்ற மாநில அரசுகளும் பின்பற்றும்.மத்திய அரசு பள்ளிகளில் ஆங்கிலம்,ஹிந்தி,வட மொழி,ஜேர்மன் தவிர மற்ற மொழிகளை படிக்க இயலாத நிலை இருப்பதும் மாறும்.
    பிறப்பின் அடிப்படையில் அவரவர் அவர் தாய்மொழி தான் படிக்க வேண்டும் என்ற மொழி வெறி மனநிலையில் இருந்து மாறினால் தமிழுக்கு தான் நல்லது.கிருத்துவ மிச்சினரிகள் உலகெங்கும் கிருத்துவத்தை எடுத்து கொண்டு போல தமிழ் மிச்சினரிகள் உருவாகி தமிழை கொண்டு செல்லுங்கள்.
    அதை விட்டு விட்டு பார்சிகள் போல (வேறு மதத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொண்ட பெண்களை அவர்களின் மதத்தில் இருந்து ஒதுக்கி விடுவார்கள்.பிறப்பின் அடிப்படையினால் மட்டுமே ஒருவர் பார்சியாக முடியுமே தவிர மனதுக்கு பிடித்திருப்பதால் மாற முடியாது )பிறப்பை பிடித்து கொண்டு தொங்கி கொண்டிருந்தால் பார்சிகளின் நிலை தான் ஏற்படும்.விருப்பமுள்ள தென் அமெரிக்கரும் ,சப்பாநியரும் ,கொரியரும் தமிழ் படிக்கும் நிலை வந்தால் தான் அது தமிழின் வளர்ச்சி

  31. Avatar
    pandiang says:

    இந்திய அரசியல் சட்டத்திற்கேற்ப தமிழ் பேசும் மக்களுக்காக வடிவமைக்கப்பெற்றது தமிழ் மாநிலம். இந்த நாட்டின் அங்கீகரிக்கப்பெற்ற அத்தனை மொழிகளும் ஒன்றுக்கொன்று சமமானவையே.தேசத்தின் மொத்த வருமானத்தில் ஒரு மொழியை மட்டும் பிரச்சாரம் செய்து ஊட்டி வளற்கமுடியாது. வரலாற்றஅந்த மொழியை கற்பதில் பயனேதுமில்லை என்பது இந்திய கதவுகள் உலகளாவிய வணிகத்துக்காக திறக்கப்பட்டபோது உண்மையாயிற்று. அந்த மொழியை கற்றவர்கள் அன்றாட பணிகளுக்கு இப்போது கீழே இறங்கி வந்திருப்பது சாட்சி. தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் ஒற்றை எண் விழுக்காட்டில் வெளிப்பயணம் செல்பவர்களுக்காகவும்வேற்று மாநிலங்களில் இருந்து தற்காலிக குடியேறியவர்களுக்காவும் அவர்கள் விருப்பப்படி இந்த அரசு ஆட முடியாது. வெவ்வேறு மாநிலங்கள் இதை விட கறாறாக இருப்பதை காணமுடியும்..
    எந்த மொழியையும் எவர்விருப்படியும் கற்பதற்கு இங்கே எவரும் குறுக்கே நிற்கவில்லை.அதற்கான வழிகளை தெரிவு செய்துஅவரவர் விருப்பப்படி பயிலலாம். அவரவர் விருப்பப்படி பணியில் சேரலாம்
    அரசு இதற்கெல்லாம் துணை நிற்க முடியாது. ஒருசில தந்திரர்களின் தற்காலிக செல்வாக்கால் சூது கவ்வலாம் .தருமம்தான் வெல்லும்.
    குறைந்தபட்சம் மலர் மன்னன் , பூவண்ணன் என்ற பெயர்களுக்காவது மதிப்பளித்து சிந்திக்கவேண்டும்.
    67 க்குபிறகே தமிழ் மணம் பரவிற்று என்பதை நாசி அடைத்தவர்களுக்கு உணர்த்தமுடியாது.
    வில்லவன் கோதை

  32. Avatar
    பூவண்ணன் says:

    வில்லவன் சார்

    கட்டாய ஹிந்தியை எதிர்த்து விட்டு கட்டாயமாக தாய்மொழியாக இருந்தாலும் திணிப்பது தவறு என்பதால் தானே திராவிட கட்சிகளின் அரசுகள் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆங்கில வழி கல்வியோ,தமிழ் வழி கல்வியோ படிக்கலாம் என்பதை நடைமுறை படுத்தினார்கள்.இரண்டாம் மொழியாக அவர்களின் விருப்பமான மொழியை தேர்ந்த்தெடுத்து கொள்ளலாம் என்ற நிலையையும் ஏற்படுத்தினார்கள்.மற்ற மாநிலங்களை விட நாம் பெரும்பாலான அளவுகோல்களில் முன்னிலையில் இருக்க முக்கிய காரணம் – பிறப்பின் அடிப்படையில் எதையும் கட்டயபடுத்த முடியாது என்ற நிலையை எடுத்தது தான்

    ராமதாஸ் ,முத்துராமலிங்கம் என்று பெயர் வைத்து கொண்டு வேறு சாதியில் துணை தேடுகிராயே எனபது போல இருக்கிறது உங்களின் பூவண்ணன் என்று பெயர் வைத்து கொண்டு பிறப்பால் தாய்மொழியாக உள்ள மொழியை விட விருப்பம் இருக்கும் மொழியை படிப்பேன் என்று வாதிடுகிராயே என்ற வினா.என் தந்தைக்கு தமிழ் மொழி பிடித்ததால் பூவண்ணன் என்று பெயர் வைத்தார். பிறப்பின் அடிப்படையில் வந்த சாதி,மதத்தை உதறும் உரிமை இருப்பது போல மொழிக்கு கிடையாதா.

    அரசு தமிழ் படித்தவர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்குவதை விட குறிப்பிட்ட நிலபகுதியில் வசிப்பவர்கள்,குறிப்பிட்ட மொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு பிறந்தவர்கள் கட்டாயம் தமிழ் படிப்பதால் தமிழ் வளரும் என்ற கூற்றில் நியாயமோ,உண்மையோ இருக்கிறதா.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      நண்பர் பூவண்ணன்,

      ////அரசு தமிழ் படித்தவர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்குவதை விட குறிப்பிட்ட நிலபகுதியில் வசிப்பவர்கள்,குறிப்பிட்ட மொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு பிறந்தவர்கள் கட்டாயம் தமிழ் படிப்பதால் தமிழ் வளரும் என்ற கூற்றில் நியாயமோ,உண்மையோ இருக்கிறதா.////

      இப்படி யார் சொல்லி இருக்கிறார் உங்களைத் தவிர ? இது முழுக்க முழுக்க உங்கள் கற்பனை வாசகம்.

      சி. ஜெயபாரதன்

  33. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    நண்பர் பூவண்ணன்,

    ///பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழி மெட்ரிக்குலேசன் உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் சேர்ப்பதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிற அவலத்தை போக்க வேண்டும். இந்த அவலத்தைப் போக்க தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் தமிழைக் கட்டாயப் மொழிப் பாடமாகவும், கட்டாய பயிற்று மொழியாகவும் இருக்கும்படித் தமிழக அரசு சட்டமியற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
    திராவிட இயக்கமும், ஆட்சி செய்த திராவிட கட்சிகளின் அரசுகளும் தமிழ் மொழியை கட்டாயம் ஆக்காமல் ,ஆங்கில வழி கல்வியை தமிழகத்திற்குள் நுழைத்து தமிழை அழித்து விட்டனர் என்ற குற்றசாட்டு இப்போது தமிழ் தேசியர்களால் தினந்தோறும் வைக்கபடுகிறது.
    கட்டாய தமிழ்,தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் வழி கல்வி எனபது அவர்களின் முக்கிய கோரிக்கையாகும் ///

    உங்கள் ஆதாரத்தில் நமக்குத் தெரிவது என்ன ?
    1. தமிழ் மொழி தமிழ் நாட்டிலே 21 ஆம் நூற்றாண்டிலும் சட்டப்படிக் கட்டாயக் கல்வி மொழியில்லை.
    2. இதுவரை தமிழ் நாட்டில் தமிழர் யார் வாயுக்குள்ளும் தமிழ் மொழிக் கல்விக் கட்டாய பாடமாகத் திணிக்கப் பட வில்லை.
    3. ஆங்கில வழிக் கல்வி, இப்போது தமிழகக் கல்விக் கூடங்களில் கட்டாயமாகத் திணிக்கப் படுகிறது.
    4. மேற் கூறியவாறு தமிழரில் சிலர் போராடுவது வெறும் கோரிக்கைகளே தவிர அவை இன்னும் நிறைவேற வில்லை.
    5. கோரிக்கைகள் தமிழ் மொழித் தேவையைத் தமிழ் நாட்டில் வலியுறுத்தும். அவை மொழி வெறியால் எழுபவை அல்ல. அவை தமிழரின் பிறப்புரிமை.
    மூவாயிரம் ஆண்டுகளாக நீடித்து, முச்சங்கம் வைத்துச் செழித்த, தமிழ்க் கலாச்சார வளர்ச்சிக்கு, தமிழரின் தனித்துவ அடையாளத்துக்கு தமிழ்மொழி வழிக் கல்வி மிகமிக அவசியம்.
    சி. ஜெயபாரதன்

    1. Avatar
      பூவண்ணன் says:

      ஜெயபாரதன் சார்

      தமிழ் வழி கல்வி தமிழ்நாட்டில் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.பெரும்பாலான இடங்களில் அரசு பள்ளிகளில் முழுக்க முழுக்க தமிழ் வழி தான் இருந்தது.வறுமையில் வாடும் ஏழைகள் கூட ஆங்கில வழி கல்வி வேண்டும்,அது தான் வேலைவாய்ப்புக்கு,குழந்தைகளின் வளமான வருங்காலத்திற்கு நன்மை என கருதி வரும் குறைந்த வருமானத்தில் பெரும்பகுதியை தனியார் பள்ளிகளுக்கு செலவழிக்கும் நிலை தமிழகத்தில் உருவானது.
      இதை மாற்ற அரசு, அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை தமிழ் வழி கல்வியோடு அறிமுகபடுத்தியது

      http://maalan.co.in/?p=1230

      அரசு ஆங்கில வழி கல்வியை அறிமுகப்படுத்தியதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏறத்தாழ 25 சதவீதம் அளவிற்கு அதிகமாகி இருப்பது எதை காட்டுகிறது.

      தமிழ் ஆர்வலர்கள் தமிழில் படிப்பவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்க தொகை தந்தால் யார் தடுப்பார்கள்.மாறாக இரு கைதட்டி மனமார வரவேற்பார்கள்.அதற்கு மாறாக பிறப்பின் அடிப்படையில் மொழியை,மொழி வழி கல்வியை கட்டாயமாக்க நினைப்பது சரியான ஒன்றா

  34. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    அன்புள்ள பூவண்ணன்,

    யாரும் தமிழில் மட்டும்தான் பேசவேண்டும், படிக்கவேண்டும் என்றெல்லாம் அபத்தமாக பேசவில்லை. தமிழையும் கொஞ்சம் படியுங்கள் – ஒரே ஒரு பாடமாக, பிழையற பேசவும், படிக்கவும், எழுதவும் ஏதுவாய் – என்றுதான் சொல்கிறோம். இதில் என்ன திணிப்பு, மொழி வெறி என்று புரியவில்லை.

    ஒரு மொழி அழிந்துவிடாமல் பாதுகாக்கப்படவேண்டுமென்றால் அம்மொழி பேசுவோர் அதை தொடர்ச்சியாக முன்னெடுத்துக்கொண்டிருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் பிழை என்று சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.

    தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழில் பேசுவதையோ எழுதுவதையோ படிப்பதையோ கௌரவக்குறைவாக எண்ணாமல், தாழ்வுணர்ச்சி கொள்ளாமல் தமிழும் படித்தால் தமிழ் வளரும் என்பதில் என்ன பொய் உள்ளது என்று நினைக்கிறீர்கள் ?

    தமிழை தாய்மொழியாய் கொண்டவர்கள் தமிழ் பேசாமல் / படிக்காமல் பின்னர் ருவாண்டாக்காரர்கள் வந்தா படித்து தமிழ் வளர்ப்பார்கள் ?

    ஒரு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் அந்த மொழியை தொடர்ச்சியாக படிப்பதன் மூலம் அது அழிந்துபடாமல் காக்கவேண்டிய தார்மீக பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன்.

    உலகெங்கும் மிஷனரிகள் போல தமிழை எடுத்துச்செல்வதோ, இந்தியா முழுதும் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் தமிழக அரசு தமிழாசிரியரை நியமிப்பது அப்புறம் இருக்கட்டும், முதலில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழாசிரியரை நியமிக்க ஏற்பாடு செய்வோம், அப்புறம் போகலாம் மத்திய அரசு நோக்கி அல்லது உலகத்தை நோக்கி.

    தமிழிலும் உலகத்தரத்தில் பேரறிஞர்கள் உருவானால்தான் நாம் உலகை நோக்கி செல்லமுடியும். அதற்கு தமிழ் மொழி”யும்” படிப்பவர்கள் இருக்கவேண்டும். ‘மொழி வெறி’, ‘மொழியை உதறும் உரிமை’ என்று சொல்லிக்கொண்டு தமிழை படிக்காமல் விட்டுவிட்டால் அப்புறம் நாம் எப்படி தமிழை உலகுக்கு கொண்டு செல்ல ?

    நாம் நம்மை மதித்தால்தான் அடுத்தவன் மதிக்கும்படி நம்மால் வாழ முடியும். இல்லாவிட்டால் ‘உன் மானிலத்து பள்ளிகளிலேயே தமிழை உன்னால் பயிற்றுவிக்க முடியாமல் எதற்கு மத்திய அரசு பள்ளிக்கு வருகிறாய் ?’ என்று கேட்டால் முகத்தை எங்கு கொண்டு வைத்துக்கொள்ள ?

    முதலில் கூறை ஏறி கோழி பிடிப்போம், அப்புறம் ஆசைப்படலாம் வானமேறி வைகுந்தம் போக.

    1. Avatar
      பூவண்ணன் says:

      முத்துகுமார் சார்

      அப்ப என் மனைவி,குழந்தைகளை மிரட்டி,கட்டாயமாக தமிழை படிக்க வேண்டும் என்று நான் முடிவு எடுப்பது சரி என்கிறீர்கள்.
      இதே முடிவு சாதி வழக்கங்கள்,குலதெய்வம் என அனைத்துக்கும் பொருந்துகிறதே.அங்கு எல்லாம் அவை வேண்டாம்,தனி மனித விருப்பம்,உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா -மிக்க மகிழ்ச்சி ,அப்பா வழி பாட்டியின் சாமி கும்பிட விருப்பமா-உன் விருப்பம் ,அம்மா வழி பாட்டியின் கடவுளை பிடித்திருக்கிறதா -உன் விருப்பம்.இந்த கடவுள்கள் அல்லாத வேறு கடவுள் வழிபாடு தான் பிடித்திருக்கிறதா-உன் விருப்பம் என்று கூறி விட்டு கட்டாயம் குறிப்பிட்ட மொழியை படிக்க வேண்டும் என்று கூற மனதில் ஏதோ இடிக்கிறதே

      1. Avatar
        பொன்.முத்துக்குமார் says:

        அன்புள்ள பூவண்ணன்,

        ஆத்திகம், நாத்திகம் இரண்டுமே மரபுத்தொடர்ச்சி உள்ள சித்தாந்தங்கள். அவை நிச்சயமாக தொடரும். அவை இரண்டுமே நாணயத்தின் இருபக்கங்கள் போல. (ஜெயமோகன் வார்த்தைகளில் ‘முரணியக்கத்தின் இரண்டு கூறுகள்’) அழிந்துபோகும் அளவுக்கு பின்பற்றுவோர் குறையப்போவதே இல்லை. அதே போல குலதெய்வ வழிபாடு என்பது பெருந்தெய்வ வழிபாடு என்று வேறு வடிவில் நீடிக்கும்.

        ஆனால் மொழி அப்படி அல்ல. தொடர்ச்சியாக பயன்பாட்டில் இருந்துகொண்டே இருக்கவேண்டிய தேவை இருக்கிறது. இல்லையெனில் அழிந்துபோகும் அபாயம் ’கண்ணுக்கு எதிரேயே பல மொழிகள் அழிந்துபோனது’ என்ற அபாயத்துடன் உதாரணமாக நிற்கிறது.

        சொல்லப்போனால் தமிழ் மொழி பள்ளிக்கல்வி வரை, கூடவே ஒரே ஒரு பாடமாக மட்டுமே பயில வற்புறுத்த வேண்டுகிறோம். பள்ளிக்கல்வி முடிந்தபிறகு அதை மறந்துபோகும் சுதந்தரம் மாணாக்கருக்கு இருக்கிறது. அதை பிழை என்று சொல்லவில்லை. (இங்கே அமெரிக்காவில் என் நண்பரின் மனைவி சிலசமயம் புலம்புவார். பள்ளி இறுதித்தேர்வில் தமிழில் பள்ளி முதல் மாணவி, இப்போது தமிழில் எழுத முயலும்போது நிறைய பிழைகள் வருகிறது என்று. அவருக்கே அந்த கதி என்றால் ஒரு தலைமுறை முழுமுற்றாக தமிழை படிக்கவே இல்லாது போனால் ?)

        நான் சொல்வது இதுதான் :

        காக்கும் முயற்சியே செய்யாமல் மொழி அழிவது ஒரு துயர நிகழ்வே. அது தமிழுக்கு நிகழாமல் இருக்க அரசு கொஞ்சமேனும் ஏதும் செய்யவேண்டும். கண்ணுக்குத்தெரியும் ஒரு உடனடி நடவடிக்கை, ’பள்ளி இறுதி வகுப்பு வரை கட்டாய தமிழ் பாடம்’ என்பது.

        மொழியை அழியாமல் முடிந்தவரை காக்க அரசு தன்னாலான முயற்சிகளை எடுக்கவேண்டும். அதற்கும் பிறகும் அந்த மொழி அழிந்தால் அதை அம்மொழியின் விதி – தகுதியுள்ளது பிழைக்கும் என்ற – என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்.

  35. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    நண்பர் பூவண்ணன்,

    ///தமிழ் ஆர்வலர்கள் தமிழில் படிப்பவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்க தொகை தந்தால் யார் தடுப்பார்கள்.மாறாக இரு கைதட்டி மனமார வரவேற்பார்கள்.அதற்கு மாறாக பிறப்பின் அடிப்படையில் மொழியை,மொழி வழி கல்வியை கட்டாயமாக்க நினைப்பது சரியான ஒன்றா ///

    தமிழ்நாட்டு மொழிப்பிரச்சனைக்கு நீங்கள் கூறும் ஆலோசனை ஒரு கை ஓசை. அது தமிழர் காதிலும், அரசியலார் காதிலும் விழாது. உங்கள் காதில் மட்டும் ஒலிக்கும் ஒரு கை ஓசை.

    சி. ஜெயபாரதன்.

  36. Avatar
    pandiang says:

    அன்பார்ந்த பூவண்ணனுக்கு
    உங்களுக்கு பூவண்ணன் என்று பெயரிட்ட உங்கள் தந்தையின் தமிழார்வம் எனக்கு மகிழ்வளிக்கிறது.யாதும் ஊரே யாவரும் கேளிரென்ற (மொழியில் பரந்த சிந்தனையை குறிப்பிடுகிறேன் ) உங்கள் சிந்தனை உங்கள் உரிமை.ஆங்கிலத்துக்கு எப்போதுமே இரண்டாவது இடம்தான் இங்கு எவரையும் எதையும் படிக்கச்சொல்லி எவரும் கட்டாயப்படுத்தவில்லை. இப்போது பலசரக்கு கடையாக இருந்தாலும் மிகப் பெரும்பான்மை தமிழர்கள் வாழும் மாநிலம் இது .இந்த அரசின் செயல்பாடுகள் தமிழர் மண்ணையும் மொழியையும் நோக்கியே பயணிக்கவேண்டும் ஒருசில ஓட்டுநர்கள் வேண்டுமானால் திசைமாறி அழைத்து செல்லலாம் அதுவும் தற்காலிகமானதே.வேலைவாய்ப்பும் பொருளாதாரமும் அவ்வப்போது மாறத்தக்கதே.அதையொட்டி மொழி மாற்றம் பேசினால் இனம் இல்லாமற் போகும். அறுபதுகளில் வெளிவந்த நல்ல புத்தகங்களை தேடிபடித்துப் பாருங்கள்.உங்கள் மொழியின் வலிமை உங்களுக்கு உணரக்கூடும்.
    வில்லவன்கோதை

    1. Avatar
      புனைப்பெயரில் says:

      இனம் டி என் ஏ யில் இருக்கிறது. அதனால் தான் முஸ்லீமாக, ,கிறிஸ்துவராக மாறினாலும் சந்தனக்கூடு , சப்பரம் , தேர் என்று தொடர்வது. மொழி கருத்தியல் பதிவும், வரலாறு பதிவும். பதிவு கல்லிலும், கணணியிலும் என சித்திரமாகவோ இல்லை எழுத்தாகவோ இல்லை. மொழி வெறி முட்டாள்தனமானது.

  37. Avatar
    pandiang says:

    நீங்கள் வளற்சியுற வேண்டுமென நினைப்பதற்கும் அடுத்தவன் அழிந்து போக வேண்டுமெ அகங்காரம் கொள்வதற்கும் உள்ள இடைவெளியே மொழிப்பற்றுக்கும் மொழி வெறிக்கும் உள்ள தூரம்.அடுத்த மொழியை அழிப்பதற்கு இங்கே எவரும் முயலவில்லை .நம்மொழி அழிவதைத்தான் பேசுகிறோம்.
    – வில்லவன்கோதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *