யாதுமாகியவள்……

author
1
0 minutes, 4 seconds Read
This entry is part 15 of 19 in the series 30 மே 2021


சபா.தயாபரன்
மிகுந்த தயக்கமும் ஒரு குற்ற உணர்வுடன் தான் இவன் சாரு முன்னால் நிற்கப் போகின்றான் என்பதை நினைக்க ஏற்பட்டது தாழ்வுச் சிக்கலா அல்லது பயமா என்று பகுத்தறிய முடியாத ஒரு மனநிலையில் நகுலன் இருந்தான்.
சாருவை எப்போதுமே தன்ட சுயநலங்களுக்காகவே தான் பயன்படுத்துவது போன்ற எண்ணம்.அதில் சில வேளை உண்மையாக கூட இருக்கலாம் என்றுகூட எண்ணம் வந்தது.
அந்த நாட்களை நினைத்துப் பார்த்தான்.
வெறுமையாய் வெம்மையுடன் யாருமற்ற அநாதையாய் இவன் அவுஸ்திரேலியாவில் வந்து இறங்கிய காலங்களில் குளிராய் நிழல் தந்து இவனை ஆசுவாசப்படுத்திய் அவள் தந்த உறவுகள் எத்தனை பெறுமதி மிக்கவை .எவ்வளவு ஆளுமை மிக்கவை.
இதை எல்லாம் நிராகரித்து மறந்து தான் இப்படி சுயநலமாகவே சுபா வந்த பிறகு நடந்து கொண்டது சாருவுக்கு மனதளவில் செய்த பெரிய துரோகம் என்பதை நினைக்க மனம் குறுகியது.தன்னிடம் எதையும் எதிர்பார்க்காத அரிய குணம் சாருவுக்குரியது.
இன்றைக்கு கூட சாருவிடம் போக வேண்டும் என்று எண்ணியதே இவனின் சுயநலத்திற்காக என்பதை சாரு நிச்சயம் புரிந்து கொள்ளத்தான் செய்வாள்.; இத்தனை நாளைக்குப் பிறகு தன்னைத் தேடி வரக்ககாரணம் என்ன என்பதை ஊகிக்க கூடிய ஒரு இன்ரெலிஞன்ட் ரைப் அவள்;.
நேற்று தனக்கும் சுபாவுக்கும் நடந்த வாக்குவாதத்தை தீர்க்க சாருவால் மட்டுமே முடியும் என்பது நகுலன் நம்பியபடியாலே சாருவை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.
அது ஒரு சின்ன விடயம் என்றுதான் இவன் நினைத்து அவள் அதை விளங்கிக் கொள்வாள் என்று நினைத்து சொன்னதை அவள் புரியாமல் அதுவே இப்படி விஸ்வரூபம் எடுக்குமென்று இவன் எதிர்பார்க்காத ஒன்று.
சாருவிடம் இருந்து இப்படியொரு வார்த்தை வெளிவரும் என்று நகுலன் எதிர்பார்க்கவில்லை தன்; மேலிருந்த எதிர்பார்ப்புகள் நம்பிக்கைகள் அவன்; மேல் கொண்ட காதல் எல்லாமே ஒரு நொடியில் தகர்ந்து உடைந்து போனது போன்ற ஒரு மனநிலையின் வெளிப்பாடே அவளின் வார்த்தைகளிலிருந்;து தெறித்திருந்தது.
“இப்பதான் உங்களின் சுயரூபம் தெரிகிறது. எதுவும் சந்தர்ப்பம் வரும் போதுதான் ஒவ்வொருவரின் மனநிலையும் உண்மையான இயல்பும் வெளிவருகிறது.” வெடித்தாள் சாரு. விசமாய் வார்த்தைகள் வந்து கவிழ்ந்தன.
தான் நேசித்த புரிந்து கொண்ட உறவெல்லாமே வெறும் நடிப்புத்தான் என்ற நகுலன் பற்றிய தவறான புரிதலே அப்போது அவளிடம் மேலோங்கி நின்றது அவள் வார்த்தையில் வெளிப்பட்டது.
சாருவில் இருந்து வந்த வார்த்தைகள் இவனை தடுமாற வைத்தன. தலைக்குள் விர்ரொன்று ரத்த ஒட்டம் பரவி லேசாக பின் தலை வலியெடுத்தது. கொஞ்ச நாட்களாக இல்லாதிருந்த இரத்த அழுத்தம் கூடிய வலி மீண்டும் உடம்பில் ஊடுருவி பரந்தது..
சாரு அவுஸ்திரேலியா வந்து மூன்று மாதம் கூட ஆகவில்லை அதற்குள் இப்படி ஒரு விடயம் நடக்குமென்பது நகுலனால் நினைத்துக் கூட பார்க்க முடியாமலிருந்தது.
; வேலை முடிஞ்சு வர லேட்டாயிற்று. பிந்தி வந்தால் அவள் முகம் பாவமாக இருக்கும். ஏவ்வளவு நோம்தான் ரிவியையும் பேஸ் புக்கையும் பார்த்துக கொண்டிருப்பது. ஆனால் நகுலன் வந்த போது அவளின் முகம் மகிழ்ச்சியாக இருந்த ஆச்சரிர்யமான விடயம் சாப்பாட்டு மேசையில்தான் வெளிப்பட்டது .
“இஞ்சாருங்கப்பா ராசாண்னன் சொன்ன வேலைக்கு இ;ண்டாவியுக்கு போய் வந்தனானல்லா அதுக்கு வேலைக்கு வரச்சொல்லி வந்திருக்கு”
“ நீ வந்து ஒரு மூன்று மாதம் கூட ஆகல்ல அதுக்குள்ள இப்ப என்னப்பா அவசரம். கொஞ்ச நாள் போகட்டுமே….”
“ வந்த சான்ச விட்டா திருமபக் கிடைக்கிற கஸ்டம் தானே”
நகுலன் பேசாமலிருக்க சாருவே தொடர்ந்தாள்.
“ஆரம்பத்தில ஆறு மாதம் நைற் வேலை பிறகு மாத்திக் கொடுப்பாங்களாம் என்று ராசாண்ன்தான் சொன்னார்.
நைற் வேலை என்றதும்தான் பூகம்பமே வெடித்தது .
“நீ இதுக்குப் போக வேணாம். வேற வேலைக்கு ரை பண்ணலாம்”
சாருவின் முகம் இறுகியது. “வந்த வேலையை விட்டுப்போட்டு இனி எங்க வற வேலை ரை பண்ணி ;;;;;;;;;;…..இதுக்கென்ன
“எனக்கு விருப்பமில்லை”
‘ஏன் என்று சொல்லுங்களன்”
“விருப்பமில்ல எண்டா விருப்பமில்லத்தான்:
“அப்ப நாள் முழுக்க இந்த வீட்டுக்குள்ள இருந்து அடி மாடா கிடக்க வேண்டுமாக்கும்’
“இல்ல சாரு சில விடயங்களப புரிஞ்சு கொள்;;”
ஏன்னத்தப் புரிஞ்சு கொள்ள…………என்றபடி தொடர்ந்து பேசிய வார்தைகள்தான் இ;ப்படி நெருப்பாய் வந்து கொட்டியது.
நகுலன் சாப்பாட்டை இடையில் நிறுத்தி வைத்து எழும்பினான்.
“அதுக்கேன் சாப்பிடாம…..”
“உண்ட வார்த்தையில வயிறு நிறைஞ்சிறு;று.”
அவர்களுக்கிடையே இருந்த கணங்களை திடீரென்று மௌனம் கைப்பற்றிக் கொண்டது. சில விடயங்களை உடனே புரிந்து கொள்ளுமளவிற்கு சாருவின் முன்கோபம்தான’ எப்பேதுமே தடையாக இருந்தது.
இவளுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று நகுலனின் மனம் சங்கடப்பட்டது.
; அவளோடு இப்படி முரண்பட்டது மனசுக்கு கஸ்டமாக இருந்தது. தான் அவசரப்பட்டு கோபப்பட்டு விட்டேனா என்று கூட மனம் சங்கடப்பட்டது.
சாருவைக் கோலில் காணவில்லை.
அறையை விட்டு வெளியே வந்தான். புகலில் அடித்த கடும் சூடு மாறி வெளியே அடித்த குளிர் சாருவின் வெப்பக் காற்றினால் தொலைந்து போயிருந்தது. சிகரெட் ஒன்றை பத்த வைத்துக் கொண்டான்.
சாரு பக்கத்தில் இல்லை இருந்தால்;; கூடவே இருந்து இவன் சிகரெட் பத்தும் விதத்தை ரசித்தபடி இருந்து அரை வாசியிலே சிகரெற்றைப் பறித்து விடுவாள்.
“ போதுமப்பா……இப்படி கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேணும்’
இன்னும் சாரு வெளியில் வரவில்லை. மனசுக்கு சங்கடமாயிருந்தது. பகல் ஒரு சான்விச்; மட்டுமே சாப்பிட்டிருந்தான் நல்ல பசி வயிற்றைக் கிள்ளியது
உள்ளே வந்தபோது சாரு கட்டிலில் படுத்துக் கிடந்தாள். சாரு …சாரு என்று கூப்பிட்டான்.
புதில் இல்லை. கோபம் தணியவில்லை போல என்று ;எண்ணிக் கொண்டான்
கோலிங் பெல்லை அழுத்தி வெகுநேரத்தின் பின்பே கதவு திறந்தது. நீல நிற நைற்றியில் சுபா தெரிந்தாள்.
நகுலனைக் கண்டதும் அவள் முகம் ஆச்சர்யத்தில்…..
“வாங்க தொர எப்படி இருக்கிறீங்க…..உள்ள வா “ உரிமையோடு பழைய சுபாவின் அதே குரல் அழைத்தது. நகுலன் எதிர்பார்த்து வந்த சாரு அங்கில்லை.
நகுலன் உள்ளே நுழைந்தபோது சுபா மூக்கைப் பொத்திக் கொண்டாள்
“என்ன குடிச்pசிருக்கையா”
‘கொஞ்சம் போல …..”
“ஏன் இந்த காலையில…….
ஏதோ பிரச்சினையில் இருக்கிறான் என்று சுபாவிற்குப் புரிந்தது.
நேற்று நடந்த விடயங்களை சுபா கேட்டுவிட்டு சுபா அமைதியான குரலில் பேசினாள்’

“இப்ப என்ன நடந்தது என்று இப்படி யோசிக்கிறாய். இதெல்லாம் பேசித் தீர்க்கவேண்டிய விடயம் உன்ன நினைச்சா பாவமாகவும் அதே நேரத்தில ஆத்திரமாகவும் இருக்கு.
சுபா இவனுக்குப் பக்கத்தில் இருந்தபடி; இவன் கைகளைப்; பிடித்தபடி பேசினாள்.
சுபாவின் நெருக்கம் அவனுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்தது.
தனித்து விடப்பட்ட வெறுமையை கலைத்து தன்னோடு ஒட்டிக் கொண்ட ஒரு உறவு அவளுக்கு மட்டுமே பரிபூரண சொந்தமானது. சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும்தான் சில இயல்பு வாழ்க்கைகளை அடியோடு மாற்றி விடும் என்பதற்;கு சுபாவின் வாழ்க்கையும் ஒரு உதாரணம்
கடைசியாக சாருவுடன் வந்து சாருவை அறிமுகப்படுத்திய பிறகு இப்பதான் வந்திருக்கிறான்.
சாருவுக்கு சுபாவைப் பிடிக்கவில்லை என்பது அவள் கதையில் புரிந்திருந்தது.
நீண்ட நாளைக்குப் பிறகு சுபாவின் நெருக்கம் இவனுக்கு தெம்பைக் கொடுத்தது.
“சுபா உனக்குத் தெரியும் சாருவ எனக்கு எவ்வளவு பிடிக்குமென்று. அத அவள் புரிஞசு கொள்ளாம வாய்க்கு வந்தபபடி கதைச்சிற்றாள்”
“என்னையும்தான் ஒரு காலத்தில ஒனக்குப் பிடிச்சிருந்தது. உலக மயமாக்கல் “
“நான் என்ன சொல்றன் நீ என்ன சொல்கிறாய்”
“அத விடு சும்மா Nஐhக்கடித்தன். ஏன்ட Nஐhக்கை நீ இப்போது ரசிக்க மாட்டாய்……அத விடு … அந்த நிலையில நான் இருந்தா இதையும் விட மோசமாகத்தான் டீல் பண்ணியிருப்பன்”
“என்ன சொல்றாய் நீ ? அப்ப நீங்க எல்லாம் ஒரே ஜாதிதானா?”
“பின்ன என்ன நகுலன் எப்படித்தான் பெண் விடுதலை உரிமைகள் என்று நீங்க வாயளவில் பேசினாலும் சந்தர்ப்பம் வரும் போது உங்கள் அடிமனதிலுள்ள ஆணடிமைத்தனமும் சுயநலமும் மேலோங்கித்தான் விடுகிறது. யதார்த்தத்தில சிலதை சிலராலேயே ஏற்றுக் கொள்ள முடியாமலே இருக்கிறது அதுக்கு நீயே ஒரு உதாரணம்.”
“நீ என்னைக் குத்திக் காட்டுகிறாயா”
“ ஏன் மடையன் மாதிரி பிகேவ் பண்றா …..
“அவள நைற் டியூட்டிக்குப் போக வேணாம் என்று சொன்னது எண்ட ஆணாதிக்க செயலா”
‘அத நீ சொன்ன விதத்திலதான் அந்த உணர்வு வெளிப்படுகிறது. அவள் உனக்கு பொஞ்சாதியா வந்தால் அவளின் உலகங்கள் விருப்புகள் எதிர்பார்ப்புகள் அபிலாசைகள் இவற்றை எல்லாம் ஒரு மூலையில சாத்தி வைச்சிற்று உண்ட விருப்பப்படித்தான் அவள் இருக்க வேண்டும் எண்டு நினைக்கிறாயே. அந்த திணிப்பத்தான் தப்பு”
“நீ எப்படியென்றாலும் எடு. ஆணாதிக்கம் மண்ணாங்கட்டி. ஆனா எண்ட நிலமையையும் யோசி.
சுபா நகுலனை நிமிர்ந்து பார்த்தாள்.
“. அவள வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லல்ல சுபா கொஞ்சம் ரைம் எடுத்துப் போகலாம் என்று.தான் மென்சன் பண்ணினன்”
“ நீ எதை மென்சன் hண்ணி சொன்னாய் எண்டும் உண்ட நிலமையும் விளங்குது. அவளுக்கு ; தான் வேலைக்குப் போகப் போகிறோம் என்கிற தன் கனவுலகத்தை நீ சிதைசிற்றையே எனற அவளின்; தார்மீகக் கோபம் ஒரு வகையில நியாயமாவே படுகிறது ….ஊரில சும்மா இருந்தாலும் பரவாயில்ல அந்த பேங்க் வேலையை விட்டுப் போட்டு வந்தவள். அவள்ர நிலையையும் யோசி…
“எண்ட நிலையை ஆரும் உணர்ர மாதிரித் தெரியல்ல..’
“சும்மா லூசு மாதிரி கதைக்காத அது சரி அதுக்காக தண்ணியடிச்சிற்று கிடக்கிறதா….இதெல்லாம் சும்மா பேய்த்தனம. தண்ணியடிச்சா தங்களுக்கு ஏதோ பெரிய கவலை என்ற மாதிரி ஒரு பேய்க்காட்டல் …….சாப்பிட்டயா…”
“இல்ல பசிக்கல்ல
“உண்ட பசி எனக்குத் தெரியாதாக்கும். எழும்பு”.
நகுலன் எழும்பும் போது தள்ளாடி விழப் போனவனை சுபா தாங்கிப் பிடித்தாள்.
நகுலன் அவளில் சாய்ந்தபடி நடந்தான்.
டைனிங் டேபிளுக்கு எதிரே இருந்த போட்டோவில் சுபாவின் கல்யாணப் போட்டோ.
இப்போது குண்டாக இருக்கும் சுபா சிரித்தபடி சிலிம் ஆக இருந்தாள். பக்கத்தில் சுபாவின் கணவரின் தனிப் போட்டோ சிரித்தபடி.
“ என்ன புதுசாப் பார்க்கிறாய்
“எத்தன வருஸம்
“அவர் போய் ஐந்து வருசம். நீயும் என்னை விட்டு விலகி பல மாதங்கள்;;;;;….. முகம் இறுகி பதில் வந்தது.
புpரிட்சில் இருந்த இடியப்பத்தையும் கோழிக்கறியையும் சூடு காட்டித் தந்தாள்.
“சாருவுக்கு நீ இஞ்ச வாற தெரியுமா..?”
“ இல்ல நான் எழும்பக்குள்ள சாரு எழும்பல்ல இரவு முழுக்க அவள் என்னோட கதைக்கல்ல . அதுதான் ஒவ்வீசுக்கு போற மாதிரி வந்திற்றன்.”
“ ஓ அப்படியா நீங்க உங்களுக்குப் பிரச்சினை என்றா ஒவ்வீசுக்க லீவப் போட்டுட்டு தண்ணி அடிப்பீங்க அப்ப நாங்களும் தண்ணி அடிச்சா…’
நீ என்ன கதைக்கிறா…
“உண்மையைத்தானே சொன்னன்.இந்த பொய் பேசுகிறத கொஞ்சம் குறை
“சிகரெட் இருந்தா குடன்’
சுpகரெட்டையும் லைற்றரையும் கொண்டு வந்தாள் சுபா.
இங்க இருந்து அடிக்காத.வெளியில கார்டனுக்குப போகலாம் வா…
சுpன்னதாய் ஒரு பூந்தோட்டம் . முன்னரை விட அழகாக இருந்தது. நிறைய பூமரங்கள் ரோஜாக்களின் விதம் விதமான நிறங்கள்.சுபாவின் கைவண்ணம் அந்த தோட்டத்தை அமர்க்களப்படுத்தி அழகான சூழ்நிலையுடன கூடிய இடமாக மாற்றியிருந்தது. ஏற சிகரட்டைப் பத்த வைத்து புகையை ஒரு தரம் உள் விட்டபடி சுபாவைப் பார்த்துக் கேட்டான்
“இடம் நல்லா மாறிட்டு
“ இடம் மட்டுமா மனம் காலம் சூழ்நிலை இடையில் வந்த உறவுகள் எல்லாம் தான் சிரித்தாள் சுபா
“இந்த இடம் உனக்கு ஞாபகம் இருக்கா”
“ ஞாபகம் இருக்காதா பின்ன… என் அனுமதி இல்லாமல் நீ என்னைத் தொட்ட இடம்.
“ஆனா அந்த அநுமதி பின்பு அப்புறூவ் ஆகி விட்டதே .
“ அந்த அப்புறூவல் கருணையிலால் வந்தது காதலினால் அல்ல அப்போது .உன்னப் பார்க்கப் பாவமாக இருந்தது.”
“இப்போது மட்டும் அந்த கருணை உங்க போயிற்றாம.”
“லூசுக் கதை கதைக்காம சுபாவைப் போய் சமாளிக்கிறத பாரு”
ஏன்னை என்ன செய்யச் சொல்கிறாய் நீ
முதலில் சுபாவைப் போய் சமாளி என்கிறேன்
சுமாளிக்கிற எண்டால்
“அவள் நினைக்கிற மாதிர் வேலைக்குப் போகச் சொல்லு அந்த இடைவெளிகளில அவளாகவே சில விடயங்களை உணருவாள். சிலதுகளை அவர்களாக உணர்ந்து முடிவெடுக்கும் போதுதான் அவை நிரந்தரமான முடிவுகளாக மாறும்;.; தாங்கள் நினைச்ச அல்லது சாதிக்க முயற்சிக்கின்ற விடயங்கள் முடியாமற் போகும் போது அந்த தோல்வியை மறைத்து மிக லாவகமாக திசை திருப்பி தாங்கள் அதில் தோல்வி அடையவில்லை என்று சமாளிக்கும் திறமை நிறையப் பெண்களிடம் உண்டு. அந்த வகையில சுபாவே வந்து ஒரு நாளைக்கு வந்து உன்னிடம் சொல்வாள் தனக்கு இந்த வேலை பிடிக்கல்ல என்று.அப்போது நீ உன்ட பழைய கதைகளையோ அல்லது உன்ட நியாயங்களையோ அவளிடம் எடுத்துரைக்காம சாதாரணமாகவே எடு.”
அவள நீ மிக சாதாரணமாக எடை போடாத…..நல்ல பெண் அவள். உனக்கு அவள் கிடைத்தது உன்ட அதிஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.அதனால ஒண்டு சொல்றன் கோபிக்காத…..”
இவன் சுபாவை நிமிர்ந்து பார்த்தான். சுபா இவனைப் பார்க்காமல் ரோசாப் பூக்களைப் பார்த்தபடி சொன்னாள்.
“நீ இனி இஞ்ச வராத…..அவர் போன பிறகு அந்த இழப்பின் வலியும் தனிமையும் என் சில உணர்வுகளும் என்னையும் மீறி சில சம்பவங்கள் எண்ட வாழ்க்கையில் நடந்து விட்டன. உன்ன பிழை சொல்லல்ல…..சில இரவுகளில அவருக்கு நான் துரோகம் செய்து விட்டதாக நினைத்து கலங்கி இருக்கன். அதையும் மீறி உன்னோடு நான். நீ நினைக்கிறாயா சாருவுக்கு நம்மட உறவு தெரியாது என்று….சி இஷ் வெரி ஷ்மார்ட். அவளின் அந்த பார்வை அவள் நடந்து கொண்ட விதம் எல்லாத்தையும் வைத்தே சொல்றன் அவளுக்கு என்ன பிடிக்கல்ல என்று. இன்னொரு இளம் குடும்பம் என்னால சிதையக் கூடாது.”
வுpக்கித்துப் போய் நின்றான் இவன் .
சுபா எங்கோ இவனுக்கு எட்ட முடியாத உயரத்தில் நிற்கிறாள். அவள் தன்னை விட்டு இன்னும் வெகு தூரத்தில்……
அவளை நினைத்துப் பார்க்கிறான் . எப்படி ஒரு உன்னதமான நட்பு. சுபா இப்படி ஒரு நாளும் சீரியசாக கதைத்ததில்லை. எப்படி அடைந்து கிடந்தன இந்த வெம்மைகள்.இவளை இவளின் பரிபூரண அன்பை மன உணர்வுகளை உணராமல் இருந்து விட்டேனே என்ற குற்ற உணர்ச்சியுடன் இவன் குறுகினான்.
“ என்ன பேசாமல் இருக்கிறாய்…….சில தவறுகள நாம் செய்யும் போது அதன் தார்ப்பர்யம் புரியாதுடா. நாம ஒரு மெச்சுவேர்ட் நிலையை அடையும் போது நாம் செய்த தவறுகள் எம்மையே சித்ரவதை செய்யும் போது ஏற்படும் வலி மிகக் கொடுமையானமும… தாங்க முடியாததும் ஆகும்.அதன் வலி எனக்கு இப்போது. அதன் பிராயச்சித்தமே இந்த விலகல்.”
நீ சந்தோசமாக இருக்க வேண்டும். நீ இன்னும் வாழ வேண்டியவன்.”
“ சாரு உன்னக் கஸ்டப்படுத்தி விட்டேனா. “
“அப்படி நினைத்தால் என்னை இன்னும் புரியவில்லை என்று அர்;த்தம்”
அமைதியானாள் சுபா. லேசான குளிர் காற்று அந்த மொட்டை மாடியைத் தழுவிச்சென்றது.மேகங்கள் இருண்டு மழை வருமாற் போல இருந்தது.
“வா உள்ள போவம்…”
அவள் தலையைத் தடவி அவளை தோளோடு சேர்த்தணைத்தபடி உள்ளே வந்தான் நகுலன்
சுபா சிரித்தபடி சொன்னாள் “நீண்ட நாளைக்குப் பிறகு சென்றிமென்ரல் ரச்”
அவளுக்கும் அந்த அரவணைப்பின் விருப்பம் அவள் பேச்சில் வெளிப்பட்டது
“ நேரமாயிற்று வீட்ட போ …….சுபா யோசிப்பாள்”
“ சரி சுபாட்ட நான் போய் என்ன சொல்ல……”
‘ இன்னும் புரியாத மண்ணாயிருக்கிறாயே……அவள அந்த வேலைக்குப் போகச் சொல்லு
அத்தோட நீ அவளிடம் மன்னிப்புக் கேளு நாம உண்மையா Nநிசிக்கிற உள்ளங்களிட்ட மன்னிப்பு கேட்பது என்பது நாம தாழ்ந்து போகிறம் என்று அர்த்தமில்லை டா. நம்மட நேசிப்பின் அதிதீக வெளிப்பாடே அது. இத மட்டும் செய் எல்லாம் சரி வரும்.”
சுபா தீர்க்கதரிசியாய் மாறி பதிலளித்தாள.
கோலிங் பெல்லை அழுத்தியவுடன் உடனே கதவை சுபா திறந்தாள்;.
ஆவள் முகம் சாதாரணமாக இருந்தது. ஏன்னவோ எதிர்பார்த்து வந்த நகுலனுக்கு சுபாவின் முகம் இருந்த மாற்றம் புருவத்தை நெருட வைத்தாலும் இவன் தான் மிக சாதாரணமாக இருக்கிறான் என்பதை வெளிக்காட்ட
“ என்ன சாப்பிட்டயா என்று கேட்டான்
:இல்லப்பா உங்களுக்காகத்தான் …..’
சுhப்பாட்டு மேசையில் சுபா செய்திருந்த நூடில்லை கரண்டியால் கிளறிவிட்ட படியே நகுலன் சொன்னான்
“எப்ப இருந்து வேலைக்கு வரச் சொன்னாங்க….”
“அடுத்த திங்கள்……என்றுதான் ராசாண்ணன் சொன்னவர்.
ஓகே என்று சொல்லு
ஓகே என்றா சுபாவின் குரலில் ஆச்சர்யக்குறி
“என்ன திடீரென்று
“யோசித்துப் பார்த்தன் நீயும் தனியாக வீட்டில இருந்து …..உன்ட சுதந்திரத்தையும் நான் அடக்குவதாக உணாந்தன். ஒண்டையும் மனசில வைக்காத
சுபா ஒண்டும் பேசாமல இருந்தாள்
“என்ன பேசாம இருக்கிறாய்……கோபம் போகல்லையாக்கும்”
“இல்லப்பா நீங்கள் வரும் வரைக்கும் நான் வேலைக்குப் போகவேணும் என்ற இறுமாப்பில தான் இருந்தனான் ஆனா நீங்களா இப்படி சொன்ன பிறகு நான் எண்ட முடிவை மாத்திற்றன் .எனக்காக நீங்க விட்டுக் கொடுக்கும் போது என்ன பக்கத்தாலும் சில விட்டுக் கொடுப்புகள் அதை நான் விட்டுக் கொடுக்கத்தானே வேண்டும். நான் வேலைக்குப் போகல்ல …..நான்தான் கொஞசம் அவசரப்பற்றிற்றன் கோபிக்காதங்கப்பா……”
நகுலனின் தலையைத் தடவியவாறு அவன் தோள்களைப் பற்றினாள் சுபா ……
சுபாவின் அரவணைப்பையும் மீறி;; மனதில் வந்து கவிழ்ந்து கொண்டது சாருவின் முகம்


சபா.தயாபரன்
sabathayaparan@gmail.com

Series Navigationசொல்வனம் 246 ஆம் இதழ் வெளியீடு அறிக்கைஊமையின்மனம்
author

Similar Posts

Comments

  1. Avatar
    jananesan says:

    புரிதல்இருந்தால் பிரிதலில் வருந்தலில்லை. வாழ்த்துகள் தயாபாரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *