லெப்டோஸ்பைரோஸிஸ் ( LEPTOSPIROSIS )

This entry is part 7 of 10 in the series 4 நவம்பர் 2018

டாக்டர் ஜி. ஜான்சன்

லெப்டோஸ்பைரோஸிஸ் என்பது பேக்டீரியா கிருமிகளால் உண்டாகும் காய்ச்சல். இந்த பேக்டீரியாவின் பெயர் லெப்டோஸ்பைரா இண்ட்டரோகான்ஸ் ( Lepyospira Interogans ) என்பதாகும். இது மிருகங்களின் சிறுநீரில் வெளிவரும். இது தோலில் உள்ள கீறல் வழியாக மனிதரின் உடலினுள் புகும்.மிருகங்களின் பராமரிப்பு தொழிலில் ஈடுபடுவோருக்கும், சாக்கடைகளில் பணிபுரிவோருக்கும் அதிகம் உண்டாகும் வாய்ப்புள்ளது. பொதுவாக இந்த நோய் சாதாரணமாகவே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு இது கடுமையாக மாறி உயிருக்கு ஆபத்தையும் உண்டாக்கலாம்.

நோய் அறிகுறிகள்

இந்த நோய்க் கிருமிகள் உடலினுள் புகுந்த பின்பு 10 நாட்கள் அறிகுறிகள் ஏதும் தோன்றாமல் அடைக் காலத்தைக் கழிக்கும். அதன் பின்பு தோன்றும் அறிகுறிகள் வருமாறு:
^ காய்ச்சல்
” தலைவலி
* பலவீனம்
* உடல் வலி
* கண்வலி
* கல்லீரல் செயலிழப்பு
* சிறுநீரகச் செயலிழப்பு
* இரத்த்ச் சோகை
* இரத்த ஓட்டச் செயலிழப்பு
* சுவாசச் செயலிழப்பு
பரிசோதனைகள்

நோயுற்ற முதல் வாரத்தில் இரத்தத்தையும் மூளைத் தண்டுவட திரவத்தையும் நுண்ணுயிர் வளர்ப்புப் பரிசோதனையின் மூலமாக இந்த பேக்டீரியா கிருமியை கன்டுபிடிக்கலாம்.

சிகிச்சை

டாக்சிசைக்ளின் ( DOXYCYCLINE ), பெனிசிலின் ( PENICILLIN ), செஃப்ட்ரியேக்சோன் ( CEFTRIAXONE ) போன்ற நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் மூலம் இந்த நோயைக் குணமாக்கலாம். சிறுநீரகச் செயலிழப்புக்கும் சுவாசச் செயலிழப்புக்கு தீவிர சிகிச்சைகள் தேவைப்படும்.

( முடிந்தது )

Series Navigationகடல் அலையடிப்புகளில் தொடர்ந்தெழும் ஆற்றல் மூலம் மின்சக்தி ஆக்கும் பொறியியல் நுணுக்கம் விருத்தி அடைகிறதுஅம்மாவின் முடிவு
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *