வலுவற்ற சூப்பர் வல்லரசு

This entry is part 6 of 13 in the series 29 மே 2022
சி. ஜெயபாரதன், கனடா
நாள் தோறும்
வாரந் தோறும், வருடந் தோறும்
நடக்குது
இரங்கல் கூட்டம்.
காரணம் !
சுட்டுக் கொல்லும் ஆயுதக்
கட்டுப்பாடு !
வரலாற்று முதலாக 
இடுகாட்டில்
மரணப் புதைச் சின்னம்
காளான்கள் போல்
முளைக்கும் !
 
 
பாலர் வகுப்பில் படிக்கும்
பிள்ளைகள், 
கல்லூரி மாணவியர்,
கருப்பர்,
இசுலாமியரைக்,
குறி வைத்துச் சுடுவது,
அறிவித்து முன்னே
திட்ட மிட்டுச்
சுட்டுக் கொல்வது !
வெகுண்டு
வெள்ளை மாளிகை 
சூப்பர் தளபதி,
செனட்டரைக் கெஞ்சுவார் ! 
துணைத் தளபதி
கமலா ஹாரிஸ் கண்ணீர்
வடித்தார் !
 
 
ஐம்பதாயிரம்
என்னாரே
துப்பாக்கி ஆரவாரக் கூட்டம்
அதே மாநிலத்தில் !
எதிரே
ஆயிரக் கணக்கில்
தாய்மார் 
அமெரிக்க கொடி பிடித்து
தடை செய்கிறார் !
தனி அரங்கில் தந்தையார்
என்னாரே
துப்பாக்கி கொடி தூக்கி 
டிரம்பை
வரவேற்பார். 
 
 
ஏன், ஏன், ஏன்
பள்ளிக்கூட வாசலில்
கண்காணிப்பு
காமிரா ஒன்றில்லை ?
காவலுக்கு ஏன்
சேவகன் இல்லை ?
செய்த கயவன்
சொல்லிச் செய்தான்.
காவல் துறை
வந்தது காலம் கடந்து !
அமெரிக்க ஆட்சி
என்னாரே
ஆதிக்க மாட்சி !
Series Navigationபிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன, தொல்பொருள் ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள்சிதறல்கள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *