வழி தவறிய கவிதையொன்று

This entry is part 31 of 31 in the series 16 செப்டம்பர் 2012

நடுச்சாமத்தில்

உறக்கத்துக்கும் விழிப்புக்குமிடையே

மனம் ஓடும் எல்லா இடங்களுக்கும்

அறியா வெளிகளுக்கும்.

 

‘டொக் டொக் டொக்’

யாரது? உள்ளம் கேட்கும்

 

‘யார் நீ?’

உரத்த குரலில் வினவுகிறேன் நான்.

 

‘நான். வந்து… வந்து…

வழி தவறிய கவிதையொன்று.

கதவைக் கொஞ்சம் திறக்க இயலுமா?’

 

கவிதையொன்றாம்.

வழி தவறி விட்டதாம்.

திறப்பதா கதவை?

எனது கதவைத் திறக்காது விடின்

வழி தவறிப் போகும் கவிதை.

கதவைத் திறப்பின்….

வழி தவறிப் போவேன் நான்.

 

பரவாயில்லை வருவது வரட்டும்.

மெதுவாகக் கதவைத் திறந்து

கவிதை உள்ளே வர விடுகிறேன்.

எப்படியும் எந்நாளும்

எனதிதயம் வழிதவறிக் கொண்டுதானே இருக்கிறது

 

டீ.திலக பியதாஸ

தமிழில்எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

 

Series Navigationஇந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Comments

  1. Avatar
    K A V Y A says:

    உள்ளத்துள்ளது கவிதை
    இன்பம் உருவெடுப்பது கவிதை
    தெள்ளத்தெளிந்த தமிழில்
    தெரிந்துரைப்பது கவிதை

    என்பார் கவிமணி.
    உள்ள்த்தக்கு வெளியே காட்சிகள்தான் இருப்பன. அவ்ற்றின் அனுபவங்கள் உள்ளத்துள்சென்று கவிதையாக வளர்ந்து வெளியே வருவன, உள்ளத்துள்ளே உருவாகும்போது ஒரு கவிஞர் ஒரு பெண்ணின் பிள்ளைப்பேறு வேதனயடைந்து, பின்னர் குழந்தை பிறந்தவுடன் அவள் பெரும் பேரானந்தம் அவன் கவிதை வெளியே குதிக்கும்போது அவனடைவது. படைப்பின் துன்பமும் பின்வரும் இன்பமும்.

    இக்கவிதை இந்த இயற்கை நிகழ்வை நிராகரித்து புதிதாக ஒன்றைச்சொல்கிறது.

    கவிதை வெளியே உருவாகி இவனுள் வர அனுமதி கேட்கிறது. எப்படியாம்? அதற்கு போக்கிடமே தெரியாமல் இவனிடம் வந்ததாம். இவனும் வேறு வழிதெரியாமல், அல்லது வேண்டா விருப்பாக உள்ளே ஏற்றுக்கொண்டானாம். அல்லது அது வழி தவறி எங்காவது போய்ச்சிரமத்தில் மாட்டிக்கொள்ளக்கூடாதே என்ற கழிவிரக்கத்தில் உள்ளே நுழைய விட்டானாம். மேலும், தானும் அக்கவிதையும் ஒரேயினம். இருவரும் வழிதவறிப்போய்க்கொண்டிருப்பவர்கள் என்கிறான்.

    இக்கவிதையை எப்படி எடுப்பது? கவிதை உள்ளே வருகிறதென்றால், அதை எழுதியவர் ஆர்? இவன் ஆர்? இருவரும் வெவ்வேறு என்னும்போது ஆருக்கு நம்பட்சாபிதம்? இடமில்லாமல் வெளியே அலைபவனா? இடமிருந்தும் (இவனுக்கு உள்ளமிருக்கு!) இல்லையென நினைத்து கற்ப்னையாக வாடும் இவனுக்கா?

    வெரிகுட் அப்ஸ்டராக்ட் பொயட்ரி. வெல்டன் பியதாஸ் !

    Thinnai’s poetry page is improving ! Congrats !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *