வால்ட் விட்மன் வசனக் கவிதை – 51 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) அடிமைச் சந்தைகள்

author
0 minutes, 13 seconds Read
This entry is part 4 of 29 in the series 1 டிசம்பர் 2013

 

 

walwhit

 

 (1819-1892)

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

 

 

 

எல்லாமே ஓர் ஊர்வலம் தான்,

இந்தப் பிரபஞ்சமே

நெடுந்தூரப் பயணம் தான் !

அளக்கக் கூடியது;

ஒழுக்க விதிகளைப்

பின்பற்றும்

முழுமை நகர்ச்சி !

உன்னைப் பற்றி பூராவும்

உனக்குத் தெரியுமா ?

அற்ப மனிதரை

அறிவிலி என்று விளிப்பீரா ?

நற்பார்வை பெற

உமக்குத்தான்

உரிமை உள்ள தென உரைப்பீரா ?

பிறர்க் குரிமை இல்லையென

வாதாடு வீரா ?

உமக்கு மட்டும் தானா

நீரும், நிலமும், தானியமும் ?

பிறர்க்கில்லையா

அந்த உரிமைகள் எல்லாம் ?

 

 

ஏலத்தில் விற்கப் படுகிறது

ஒரு மானிடன் உடம்பு !

போருக்கு முன்பு நான்

போவேன் அடிமைச் சந்தைக்கு !

அடிமைகள் விற்கப் படுவதை

அதிசய மாய்ப் பார்ப்பேன் !

ஏலமிடும் வர்த்தகனுக்கு

என்னுதவியும் தந்தேன்:

அவனுக்கு பாதி அறிவுதான்

உள்ளது

அடிமை வாணிபத்தில் !

கருணை உற்றோர் இச்சந்தையைக்

காண்பர் வியப்புடனே !

 

 

ஏலத்தில் விளிப்போர்

ஈந்திடும்

எத்தொகையும் அடிமைக்கு

ஈடாகாது !

விற்றாலும் பிறப்பு சுழற்சி

நிற்காமல் நீடிப்பது.

மெய்யாய்

படைப்பு இயக்கம் ஓர்

நிரந்தரச் சுற்று !

இந்தச் சிரத்திலே

எல்லாம் ஆள்வது மூளை தான் !

திணறச் செய்வது !

தீரர் பலரை ஆக்குவது !

 

+++++++++++++++++

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 28, 2012]

 

 

****************

Series Navigationசீதாயணம் நாடகம் -9 படக்கதை -9ஆனாவும் ஆவன்னாவும் !-திரு பி ஏ கிருஷ்ணன் எழுதிய அறிவியலும்தொழில் நுட்பமும் ஒன்றா என்ற கட்டுரையின் எதிர்வினை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *