வைரமுத்துவின் எமிலி: ஏன் இந்த முரண்பாடு?

author
5
0 minutes, 39 seconds Read
This entry is part 28 of 42 in the series 25 நவம்பர் 2012

(ஓர் அறிவியல் மாணவன்)

 

வைரமுத்துவின் “மூன்றாம் உலகப் போர்” நாவலில் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்யவரும் எமிலி என்னும் அமெரிக்க மாணவி (நியூ சயண்டிஸ்ட் புகழ்) அமெரிக்காவுக்குத் திரும்பு முன் சின்னப்பாண்டியென்னும் நமது கதாநாயகனுடன் பேசுகிறாள். அந்த உரையாடல் கொஞ்சம் காதல் போல் தொனிக்கிறது. ஆனால் காதல் இல்லை.

 

எமிலி: “இந்தச் சந்தர்ப்பத்தில் என்னை நம்புகிறீர்களா?”

 

சி.பா.: “இப்போது என் வாழ்வின் நம்பிக்கையே நீதான் எமிலி”

 

“நம்பிக்கையின் குரலுக்குச் செவிசாய்ப்பீர்களா?”

 

“நிச்சயமாக”

 

….

 

“சொல்லுங்கள் சின்னப்பாண்டி… என்னோடு அமெரிக்கா வருவீர்களா?”

 

“ஏன் எதற்கு?”

 

“உங்கள் மண் நல்லது; மக்கள் நல்லவர்கள்; உன்னத உழைப்பாளிகள். ஆனால் கற்கால உழைப்பைவிட்டு முற்றிலும் விடுபடாதவர்கள். உங்கள் விவசாயத்தை நவீனப்படுத்த வேண்டும். இந்திய வேளாண்மை மரபும் நவீனத் தொழில் நுட்பமும் இணைந்தே இங்கே விவசாயத் தொழிற்சாலைகள் உருவாக வேண்டும். என்னோடு வாருங்கள். தொழில்நுட்பம் பயிலுங்கள். முதலில் உங்கள் மாதிரி கிராமத்தில் அமல்படுத்துங்கள். உங்களை அழைத்துப் போகிறேன். விரைவில் திருப்பியும் அனுப்புகிறேன். அதற்கான செலவுக்கு நான் பொறுப்பு. இதை மனம்விட்டுப் பேசத்தான் உங்களைத் தனிமையில் சந்திக்க ஆசைப் பட்டேன். சமூகத்துக்குத் தொண்டு செய்வதற்கு சமூக சம்மதம் எதற்கு? எங்கே உங்கள் பாஸ்போர்ட்?”

 

சின்னப்பாண்டி பாஸ்போர்ட் வைத்திருக்கிறானோ என்னவோ தெரியவில்லை. கதையில் அவன் பாஸ்போர்ட் வைத்திருக்கக் காரணம் ஒன்றும் இல்லை.

 

அது நிற்க, சின்னப்பாண்டி சம்மதிக்கிறான். அவனுடைய பெற்றோர்களின் ஆசியுடன் எமிலியுடன் விமானமும் ஏறுகிறான். ஆனால் கிராமத்தில் நடக்கும் கலவரத்தால் அவன் விமானத்திலிருந்து இறங்கி ஊருக்குத் திரும்பிவிடுகிறான்.

 

பயணம் நிறைவேறாவிட்டாலும் எமிலியின் இந்த அழைப்பும் சின்னப்பாண்டியின் சம்மதமும் சில அடிப்படைக் கேள்விகளை எழுப்புகின்றன.

 

முதலில் எமிலியின் நோக்கத்தில் உள்ள குழப்பம். மேற்கண்ட உரையாடலுக்குப் பிறகு ஓரிடத்தில் அட்டணம்பட்டிக் கிராமத்திலிருந்து விடைபெறும் முன்னம் எமிலி கிராமத்தாருக்குக் கூறும் புத்திமதி: “இந்த மண்ணின் பூர்விகமான இயற்கை விவசாயத்தை முடிந்த மட்டும் தொடர முயலுங்கள்.”

 

என்றால் சின்னப்பாண்டி அமெரிக்காவில் போய்க் கற்கும் நவீன விவசாய முறைக்கு அது முரண் ஆகாதா?

 

இன்னொரு முரணும் உள்ளது. சின்னப்பாண்டி பயில்வது காந்தி கிராமம் பல்கலைக் கழகத்தில். இதில் விதை மேலாண்மையில் பட்டயப் படிப்பு படிக்கிறான். இது பாரம்பரிய (காந்தி வழி) மரபு விவசாயத்தைப் போற்றும் பல்கலைக் கழகம். அது உண்மையிலேயே இந்தியாவில் இயங்கும் ஒரு பல்கலை. அதன் வலைத்தளம் இப்படி விளக்குகிறது: (http://www.ruraluniv.ac.in/)

 

With undying faith and deep devotion to Mahatma Gandhi’s revolutionary concept of ‘Nai Talim’ system of education, Gandhigram Rural Institute has developed academic programmes in Rural Development, Rural Economics and Extension Education, Rural Oriented Sciences, Cooperation, Development Administration, Rural Sociology, English and Communicative Studies, and, Tamil and Indian Languages. Students who emerge from its portals tend to meet the personnel needs for rural development under various governmental and non-governmental schemes.

….

Today, it has become a nationally and internationally recognised Institute for its contribution to rural education, so much so that the New Education Policy of the Nation reflects the principles evolved here in developing the rural university concept.

 

இப்போதும் கூட காந்தி கிராமப் பல்கலை விவசாயத் தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுப்பதிலும் பரப்புவதிலும் முனைப்பாக இருப்பதாகத்தான்தெரிகிறது. அது நடத்துகின்ற ஒரு கருத்தரங்கம் பற்றிப் பாருங்கள்:

 

http://www.dailythanthi.com/node/28422

“இந்த கருத்தரங்கில் திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்கள், தொழில் வாய்ப்புகள், கடன்உதவி திட்டங்கள், மத்திய அரசின் குழும தொழில் மானியம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களின் கொள்கையின் மானிய திட்ட உதவிகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர் களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் தொடர்பான தகவல்கள் வழங்கப்படுகின்றன. “

 

எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த நோக்கங்களுக்கு எமிலி பரிந்துரைக்கும் அமெரிக்க முறை தொழில் நுணுக்க விவசாயம் மிகவும் முரணாகவே தெரிகிறது.

 

….முடிந்தது…

Series Navigationமீண்டுமொரு சரித்திரம்மலேசியாவில் தொலைந்த மச்சான்
author

Similar Posts

5 Comments

  1. Avatar
    K A V Y A says:

    வைர முத்து எழுதியது ஒரு கற்பனை. காந்திகிராம பலகலைக்கழகத்தாரின் வழிமுறைகள் உண்மை.

    எப்படி ஒரு கற்பனையோடு ஒரு உண்மையை இணைக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

    அப்படியே கற்பனையைத் தூக்கியெறிந்துவிட்டு, உண்மையை மட்டும் எடுத்துப்பார்த்தால்,
    இப்படிச் சொல்லலாம்.
    விவசாயம் இயற்கை வழியிலே தொடர்ந்து செல்ல இயற்கையும் மாறாதிருக்க வேண்டும். பல நூற்றாண்டுகளுக்கு முன் திண்டுக்கல, மதுரை மாவட்டங்கள் எப்படியிருந்தனவே அப்படியே இன்றும் இருக்கவேண்டும். உணமை நிலவரம் என்ன?

    நீர்நிலைகள் அப்படியே அன்று இருந்தன. ஆறுகளின் குறுக்கே மனிதர்கள் அணை கட்டவில்லை. ஆறுகளில் நீர் ஓடிக்கொண்டிருக்க விவசாயம் ஓடியது. அன்று தொழிற்சாலைகள் இல்லாததனால், நீர் மக்களுக்கு மட்டுமே பயன்பட்டது.

    இன்று ஆறுகளின் நீரை தொழிற்சாலைகளுக்கு உறியப்பட்டு விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் இல்லாமல் போய்விட்டது. (இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவைப்படிக்கவும். குடிநீர்த்தட்டுப்பாட்டுக்கு அவ்வூரில் எழுப்பப்பட்ட ஒரு பெரிய தொழிற்சாலையே காரணமென பொதுமக்கள் கலெகடர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நடந்தது புதியம்புத்தூர் என்ற தூத்துக்குடியருகில் உள்ள ஊரில்).

    இது போக நீர்நிலைகள் வீடுகளாக்க ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பல அழிந்தொழிந்தன. பல ஊர்களில் குளங்கள் குட்டைகள் காணாமல் போய்விட்டன். இருக்கும் சில மாசுபட்டு நகரை துர்நாற்றமாக்கிக்கொண்டிருக்கிறது. தான் கூவம் ஆற்றில் விடியலில் குளித்துவிட்டு கோயிலுக்குச்சென்றதாக ஆனந்தம் ரங்கம் பிள்ளையின் டைரிக்குறிப்பு. ஆயிரககணக்கான குளங்கள் அன்றிருந்தன சென்னையில். இன்று அவையெங்கே? இதேதான் பிற ஊர்களிலும்.

    இவ்வாறு அன்றிருந்த இயற்கை இன்று இல்லாமல் போகும்போது அன்றிருக்க முடிந்த விவசாய முறை இன்றிருக்க வாய்ப்பில்லை. Simple logic.

    எனவே இன்றைய சூழலில் எப்படிப்பட்ட விவசாயம் தேவை என்பதை மற்றவரிடம் தெரிந்து கொள்வதொன்றும் தப்பன்று.

    இப்படி சின்னப்பாண்டி சிந்தித்தானென்று வைரமுத்து எழுதியிருந்தால் அவர் பெரிய எழுத்தாளர்.

  2. Avatar
    Dr.G.Johnson says:

    கவிஞர் வைரமுத்துவின் மூன்றாம் உலகப் போர் ஒரு நவீன நாவல். நாவலில் உள்ளதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்பதில்லை. உண்மையும் கற்பனையும் கொண்டதே நாவல். இதில் சின்னப்பாண்டியும் எமிலியும் கற்பனை கதாபாத்திரங்களே. இன்றைய தமிழகத்தின் கிராமத்து பின்னணியில் எழுதப்பட்டுள்ள இந்த நாவலில் நம்முடைய பூர்வீக இயற்கை விவசாயத்தைப் புகழ்ந்து கூறும் எமிலி அதை முடிந்தமட்டும் தொடர அந்த கிராம வாசிகளிடம் கூறுகிறாள். அதன் பின்பு அங்கு நவீன விவசாய முறை கொண்டு வரும் நோக்கில் சின்னபாண்டியை அமெரிக்காவுக்கு தன்னுடன் வருமாறு அழைக்கிறாள். இதில் பெரிய முரண்பாடு என்ன உள்ளது? விவசாயத்தில் எது நவீனம்? முன்பு பல்லாண்டு காலமாக ஏர் கலப்பைகள் பயன்படுத்தினோம். தற்போது டிராக்டர் பயன்படுத்துகிறோம். முன்பு களத்து மேட்டில் கதிர் அடித்து நெல் எடுத்தோம். இப்போது அதையும் இயந்திரம் மூலமாக விரைவில் செய்ய முடிகின்றது. இவை எல்லாம் நவீனம்தானே? இதுபோன்று விவசாயத்தில் மேலும் நவீன முறைகள் இருப்பின் அவற்றை தெரிந்துகொண்டு நம் கிராமங்களில் பயன்படுத்துவதில் என்ன தவறு?
    உண்மையாகக் கூறவேண்டுமெனில் விளை நிலங்கள் வீடு மனைகளாக விற்கப்படும் இந்த நாட்களில் இதுபோன்று கிராமத்தையும், விளை நிலங்களையும் அதில் உழைக்கும் மக்களையும் நம் கண்முன்னே நிறுத்தி அவர்களின் துன்பத்தையும் கூறி அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கவேண்டும் எனும் நல்ல கற்பனையுடன் ,கவிநயத்துடன் எழுதப்பட்டுள்ள மூன்றாம் உலகப் போர் நாவல் வாசகர்களைக் கவர்ந்ததோடுமட்டுமின்றி நம்மை சிந்திக்கவும் செய்துள்ளது. அதற்கு இந்த விவாதமே சான்று!…டாக்டர்.ஜி.ஜான்சன்.

  3. Avatar
    தேமொழி says:

    வைரமுத்து அவர்கள் வரலாற்றினைப் பதிவு செய்ததாகக் குறிப்பிட்டிருந்தால் அதன் நம்பகத் தன்மையைக் குறித்து விவாதிப்பதில் அர்த்தமிருக்கிறது.

    அவர் புனை கதை என்று குறிப்பிட்டு, தன் கற்பனையில் புனைந்த கதையைத் துருவித் துருவிப் பார்ப்பதனால் நாம் அடையப் போகும் பலன் என்ன?

    இலக்கியம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் அவர் படைப்பை. அது சமுதாய மாறுதல்களை நிகழ்த்தினால் பாராட்ட வேண்டும் கவிஞரை.

    அவர் எழுதியது கதை. அது எப்படி ஆராய்சிக் கட்டுரைகளின் வரிசையில் இடம் பிடித்தது. விளங்கவில்லை.

  4. Avatar
    Dr.G.Johnson says:

    எமிலி தமிழ் நாட்டுக்கு நவீன முறையில் விவசாயம் செய்வதற்கான வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள சின்னபாண்டியை அமெரிக்காவுக்கு அழைக்கிறாள். அவள் ஒரு வேளை செயற்கை மழை பற்றி மேலும் ஆய்வு நடத்தி அதை தமிழகத்தில் செயல்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.
    ” நீரின்றி அமையாது உலகு ” என்றார் வள்ளுவர் . தமிழ்நாட்டுக்கு இன்று அவசரமாகத் தேவை மழை! அதிலும் விவசாயம் நடக்கும் காலங்களில் தேவையான நீர் இன்றியமையாதது. இன்று தமிழக முதல்வர் காவேரியில் தண்ணீர் கேட்டு கர்நாடகம் சென்று தோல்வியைத் தழுவியுள்ளார். இதுபோன்று எப்போதுமே அண்டை மாநிலங்களை நாடியே விவசாயம் செய்ய வேண்டியுள்ளது வேதனைக்குரியது!
    இந்த அவலத்தைப் போக்க நம் ஏன் செயற்கை மழை உற்பத்தி செய்யும் முயற்சியில் தீவிரம் காட்டக்கூடாது? வான் வெளி ஆராய்ச்சிக்கு கோடிக்கணக்கில் செலவிடும் இந்திய அரசும், இலவசங்களை அள்ளித்தரும் தமிழக அரசும் ஏன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டு செயற்கை மழை உண்டாகும் திட்டத்தில் தீவிரம் காட்டக்கூடாது? இதுபற்றி திண்ணையில் அறிவியலும் வானியலும் பற்றி விளக்கமாக எழுதிவரும் விஞ்ஞானி ஜெயபரதன் அவர்கள் விளக்கம் தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்குமே? …டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply to Dr.G.Johnson Cancel reply

Your email address will not be published. Required fields are marked *