ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 18) தோழி மீது ஆழ்ந்த நேசம்

This entry is part 18 of 40 in the series 6 மே 2012

++++++++++++++++++++++++++++++
உன்னை யாருக்கு ஒப்பிடலாம் ?
++++++++++++++++++++++++++++++

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.

அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்து கிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Sonnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.

****************

(ஈரேழ் வரிப்பா – 18)

+++++++++++++++++++++++++++++
உன்னை யாருக்கு ஒப்பிடலாம் ?
+++++++++++++++++++++++++++++

வேனிற் கால நாளுடன் நான் ஒப்பிடவா உன்னை ?
மேனி எழில் மேலாய் மினுக்கும் நித்திய வடிவாய்
மூர்க்கக் காற்று வேனிற் காதற் பிஞ்சுகள் அசைக்கும்
கோடைக் கால குத்தகைப் பொழுது மிக்கச் சிறியது
சூடாய் மின்னும் வானில் சூரியக் கண்ணும் சில நேரம்.
பரிதியின் பொன் மேனி மங்கிப் போகும் அடிக்கடி
பொலிவோ டிருப்பவை எழில் இழக்கும் ஒரு பொழுது
துர்வினை யாலோ இல்லை இயற்கை மாற்றத் தாலோ.
உன் நிலைத்த வேனில் இளமை என்றும் மறையாது
வனப்பும் உன் பிடியை விட்டு விலகிச் செல்லாது.
மரணமும் உன்னை விழுங்கித் தன்னிழல் ஆக்காது
ஏனெனில் நீ என்றும் வாழ்வாய் நிரந்தரப் பாக்களில்
மானிட விழிகள் பார்த்துப் புவியில் சுவாசிக்கும் வரை
நிலைத்த பாக்கள் உனக்கு நிரந்தர வாழ்வை அளிக்கும் !

+++++++++

Sonnet : 18

.Shall I compare thee to a summer’s day?
Thou art more lovely and more temperate:
Rough winds do shake the darling buds of May,
And summer’s lease hath all too short a date:
Sometime too hot the eye of heaven shines,
And often is his gold complexion dimm’d;
And every fair from fair sometime declines,
By chance or nature’s changing course untrimm’d;
But thy eternal summer shall not fade
Nor lose possession of that fair thou owest;
Nor shall Death brag thou wander’st in his shade,
When in eternal lines to time thou growest:
So long as men can breathe or eyes can see,
So long lives this, and this gives life to thee.

++++++++++++++

Sonnet Summary : 18

Sonnets 18-25 are often discussed as a group, as they all focus on the poet’s affection for his friend.

Sonnet 18 is the best known and most well-loved of all 154 sonnets. It is also one of the most straightforward in language and intent. The stability of love and its power to immortalize the poetry and the subject of that poetry is the theme

The speaker opens the poem with a question addressed to the beloved: “Shall I compare thee to a summer’s day?” The next eleven lines are devoted to such a comparison. In line 2, the speaker stipulates what mainly differentiates the young man from the summer’s day: he is “more lovely and more temperate.” Summer’s days tend toward extremes: they are shaken by “rough winds”; in them, the sun (“the eye of heaven”) often shines “too hot,” or too dim. And summer is fleeting: its date is too short, and it leads to the withering of autumn, as “every fair from fair sometime declines.” The final quatrain of the sonnet tells how the beloved differs from the summer in that respect: his beauty will last forever (“Thy eternal summer shall not fade…”) and never die. In the couplet, the speaker explains how the beloved’s beauty will accomplish this feat, and not perish because it is preserved in the poem, which will last forever; it will live “as long as men can breathe or eyes can see.”

+++++++++++++++++

SONNET 18 PARAPHRASE

Shall I compare thee to a summer’s day? Shall I compare you to a summer’s day?
Thou art more lovely and more temperate: You are more lovely and more constant:
Rough winds do shake the darling buds of May, Rough winds shake the beloved buds of May
And summer’s lease hath all too short a date: And summer is far too short:
Sometime too hot the eye of heaven shines, At times the sun is too hot,
And often is his gold complexion dimm’d; Or often goes behind the clouds;
And every fair from fair sometime declines, And everything beautiful sometime will lose its beauty,
By chance or nature’s changing course untrimm’d; By misfortune or by nature’s planned out course.
But thy eternal summer shall not fade But your youth shall not fade,
Nor lose possession of that fair thou owest; Nor will you lose the beauty that you possess;
Nor shall Death brag thou wander’st in his shade, Nor will death claim you for his own,
When in eternal lines to time thou growest: Because in my eternal verse you will live forever.
So long as men can breathe or eyes can see, So long as there are people on this earth,
So long lives this and this gives life to thee. So long will this poem live on, making you immortal.

.

++++++++++++++++

Information :

1. Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)
2. http://www.william-shakespeare.info/william-shakespeare-sonnets.htm (Sonnets Text)
3. http://www.sparknotes.com/shakespeare/shakesonnets/section2.rhtml (Spark Notes to Sonnets)
4. http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/ (Sonnets Study Guide)
5. http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/short-summary/ (Sonnets summary)
6. The Sonnets of William Shakesspeare By :Lomboll House (1987)

+++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) May 2, 2012

Series Navigationசித்திரைத் தேரோட்டம்…!கொத்துக்கொத்தாய்….
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *